Jump to content

வெந்தயக் குழம்பு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

kulambu.jpg

[size=2][size=4]தேவையான பொருட்கள் :[/size][/size]

[size=2][size=4]புளி-ஒரு எலுமிச்சையளவு

காய்ந்தமிளகா-நான்கு

தனியா-இரண்டு தேக்கரண்டி

சீரகம்-ஒரு தேக்கரண்டி

வெந்தயம்-ஒன்றைத் தேக்கரண்டி

மஞ்சத்தூள்-அரைத் தேக்கரண்டி

சாம்பார் பொடி-ஒரு தேக்கரண்டி

மிளகாய்த்தூள்-ஒரு தேக்கரண்டி

வெங்காயம்- ஒன்று

முழு பூண்டு-ஒன்று

தக்காளி-ஒன்று

கடுகு உளுந்து -ஒரு தேக்கரண்டி

கறிவேப்பிலை-ஒரு கொத்து

எண்ணெய்-ஒரு குழிக்கரண்டி

உப்பு-தேவைகேற்ப[/size][/size]

[size=2][size=4]செய்முறை :[/size][/size]

[size=2][size=4]புளியை இரண்டு கோப்பை நீரில் ஊறவைத்து உப்பைச் சேர்த்து கரைக்கவும்,[/size]

[size=4]பின்பு மிளகாய் தனியா சீரகம் ஆகியவற்றை வறுத்து பொடித்து புளித்த்ண்ணீரில் போட்டு கலந்து வைக்கவும்[/size]

[size=4]வெங்காயம் பூண்டை தோல் உரித்து வைக்கவும்[/size]

[size=4]கடாயில் எண்ணெயைக் காயவைத்து கடுகு உளூத்தம்பருப்பு வெந்தயம் ஆகியவற்றைப் போட்டு பொரிந்ததும்[/size]

[size=4]வெங்காயம் பூண்டு நறுக்கிய தக்காளி மற்றும் மஞ்சத்தூள் போட்டு வதக்கவும்[/size]

[size=4]பின்பு புளிக் கரைசலை ஊற்றி மிளகாய்த்தூள் மற்றும் சாம்பார் பொடியைப் போட்டு கொதிக்க விடவும்[/size]

[size=4]குழம்பு கொதித்து எண்ணெய் மேலே மிதந்ததும் கறிவேப்பிலையை போட்டு இறக்கி விடவும்.[/size][/size]

[size=2][size=4]குறிப்பு :[/size][/size]

[size=2][size=4]எத்தனை நபர்கள் : 6[/size][/size]

[size=2][size=4]சமைக்க எடுத்துகொள்ளும் நேரம் : 00 hrs 30 mins[/size][/size]

[size=2][size=4]வழங்கியர் : Mrs.manohari[/size][/size]

[size=2][size=4]http://www.manoharim...emid=13&lang=en[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்போதுள்ள வெப்பமான காலநிலைக்கு குளிர்மை சேர்க்கும் வெந்தயம் வாரம் இரண்டு மூன்று நாட்கள் சமைத்து சாப்பிட்டுபாருங்கள் உங்களுக்கே புரியும் அதன் பயன்கள். :D:)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெந்தயக் குழம்பு எனக்கு மிகவும் பிடித்த கறி.குழல் புட்டும் வெந்தயக் குழம்பும் என்றால் சொல்லி வேலையில்லை.

அத்துடன் வெந்தயம் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு மருந்து என்று தான் சொல்லலாம்.

வீட்டில் யாருக்காவது வயிற்றோட்டம் அல்லது வயிற்றுக்குள் ஒரு மாதிரி இருக்குதென்றால் ஒரு சிறங்கை வெந்தயம் அள்ளிப் போட்டால்ச் சரி.

நன்றி தமிழரசு.

Posted

15 வயதிற்கு முதல் எனது தாயார் அடிக்கடி வெந்தயக்குழம்பு [இறாலுடன்] சமைத்து சுவையாக சுகாதாரமாக தருவார் ............ஆனால் இன்றுவரை அப்படி ஒரு உணவை நான் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்.............என் மனைவி உட்பட அந்த வெந்தயக்குழம்பு

முடியாத ஒரு காரியமாகிப்போய்விட்டது............உங்கள் அம்மாக்கள் யாராவது அப்படி சமைத்தால் தயவுசெய்து எனக்கும் எப்படி என்று சொல்லுங்கள் உறவுகளே .........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மை தான் அண்ணா.

அம்மா மண் சட்டியிலை எப்பவும் வெந்தயக்குழம்பு வைப்பா சொல்லி வேலையில்லை, அதுவும் அடுத்தநாள் நல்லா சுடவச்சு தருவா எண்ணை படர்ந்து சட்டியிலை ஓரமா கொஞம் கறுத்துப்போய் இருக்கும். ரோஸ் பாணோடை சாப்பிட அந்தமாதிரி இருக்கும்.

ஜந்து வருசத்துக்கு மேலையாச்சு நான் வெந்தயக்குழம்பு சாப்பிட்டு.. :(

(வெந்தயக்குழம்புக்கு பின்னாடியே ஒரு கதை இருக்குப்பா.. :rolleyes::lol: :lol: :icon_idea: )

Posted

வெந்தயக் குழம்புக்குக் கத்தரிக்காயைப் பொரித்துப் போட்டாலும் ரேஸ்டாய் இருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிழமைக்கு ஒருநாள் எண்டாலும் என்ரை வீட்டை வெந்தயக்குழம்பு கட்டாயம் இருக்கும்....அதை விட வேறை கறியள்ளையும் வெந்தயம் கடிபடும்.உண்மையிலேயே வெந்தயம் உடம்புக்கு நல்ல சாமான்.வெந்தயத்தை ஊற வைச்சு தலைக்கு அரைப்பு ஆகவைச்சு முழுகினால் உடம்புக்கு இன்னும் குளுர்ச்சி.....நன்றி தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

kulambu.jpg

[size=2][size=4]தேவையான பொருட்கள் :[/size][/size]

[size=2][size=4]புளி-ஒரு எலுமிச்சையளவு

காய்ந்தமிளகா-நான்கு

தனியா-இரண்டு தேக்கரண்டி

சீரகம்-ஒரு தேக்கரண்[/size][/size][size=2][size=4]டி

வெந்தயம்-ஒன்றைத் தேக்கரண்டி[/size][/size]

[size=2][size=4]மஞ்சத்தூள்-அரைத் தேக்கரண்டி

சாம்பார் பொடி-ஒரு தேக்கரண்டி

மிளகாய்த்தூள்-ஒரு தேக்கரண்டி

வெங்காயம்- ஒன்று

முழு பூண்டு-ஒன்று

தக்காளி-ஒன்று

கடுகு உளுந்து -ஒரு தேக்கரண்டி

கறிவேப்பிலை-ஒரு கொத்து

எண்ணெய்-ஒரு குழிக்கரண்டி

உப்பு-தேவைகேற்ப[/size][/size]

[size=2][size=4]செய்முறை :[/size][/size]

[size=2][size=4]புளியை இரண்டு கோப்பை நீரில் ஊறவைத்து உப்பைச் சேர்த்து கரைக்கவும்,[/size]

[size=4]பின்பு மிளகாய் தனியா சீரகம் ஆகியவற்றை வறுத்து பொடித்து புளித்த்ண்ணீரில் போட்டு கலந்து வைக்கவும்[/size]

[size=4]வெங்காயம் பூண்டை தோல் உரித்து வைக்கவும்[/size]

[size=4]கடாயில் எண்ணெயைக் காயவைத்து கடுகு உளூத்தம்பருப்பு வெந்தயம் ஆகியவற்றைப் போட்டு பொரிந்ததும்[/size]

[size=4]வெங்காயம் பூண்டு நறுக்கிய தக்காளி மற்றும் மஞ்சத்தூள் போட்டு வதக்கவும்[/size]

[size=4]பின்பு புளிக் கரைசலை ஊற்றி மிளகாய்த்தூள் மற்றும் சாம்பார் பொடியைப் போட்டு கொதிக்க விடவும்[/size]

[size=4]குழம்பு கொதித்து எண்ணெய் மேலே மிதந்ததும் கறிவேப்பிலையை போட்டு இறக்கி விடவும்.[/size][/size]

[size=2][size=4]குறிப்பு :[/size][/size]

[size=2][size=4]எத்தனை நபர்கள் : 6[/size][/size]

[size=2][size=4]சமைக்க எடுத்துகொள்ளும் நேரம் : 00 hrs 30 mins[/size][/size]

[size=2][size=4]வழங்கியர் : Mrs.manohari[/size][/size]

[size=2][size=4]http://www.manoharim...emid=13&lang=en[/size][/size]

இது வெந்தயக் குழம்பா?

Posted

15 வயதிற்கு முதல் எனது தாயார் அடிக்கடி வெந்தயக்குழம்பு [இறாலுடன்] சமைத்து சுவையாக சுகாதாரமாக தருவார் ............ஆனால் இன்றுவரை அப்படி ஒரு உணவை நான் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்.............என் மனைவி உட்பட அந்த வெந்தயக்குழம்பு

முடியாத ஒரு காரியமாகிப்போய்விட்டது............உங்கள் அம்மாக்கள் யாராவது அப்படி சமைத்தால் தயவுசெய்து எனக்கும் எப்படி என்று சொல்லுங்கள் உறவுகளே .........

நான் எழுதிய திரியை நானே குவாட் செய்கிறேன் என்று நீங்கள் யோசிக்கக்கூடும் ...

ஆம் இன்று பல வருடங்களிற்கு பிறகு அதே பாணியில் வெந்தயக்குழம்பு[இறாலுடன்]

சாப்பிட்ட திருப்தி.................உண்மை நான் இந்த யாழில் என்ன செய்கிறேன் என்பதை என் துணைவியாரும் பார்ப்பதுண்டு............அதை நானும் விரும்புபவன்..........அந்த வகையில் இந்த வெந்தயக்குழம்பு சமாச்சாரம் அவளிற்கு பெரிய மன உளைச்சலை கொடுத்ததேன்பதுதான் உண்மை ..............ஆம் எப்படியோ யார் யாரிடம் எல்லாம் சமையல் குறிப்புகளை பகிர்ந்துகொண்டு இன்று என் அந்த குறையை நிவர்த்தி செய்துவிட்டார் ................வயிறு நிறைந்து ,மனம் குளிர்ந்து இதையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.......................எப்படி செய்தார் என்பதையும் உங்களுடன் இன்னொரு முறை பகிர்ந்து கொள்கிறேன்.............. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.