Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க் குற்றவாளிகள் மீது நடவடிக்கை- ஐ.நா. மூலம் தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு – டெசோ மாநாட்டில் தீர்மானம்.

Featured Replies

இலங்கையில் தமிழருக்கு எதிராக போர்க்குற்றத்தில் ஈடுபட்ட போர்க் குற்றவாளிகள் மீது ஐக்கிய நாடுகள் சபை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐநா. மூலம் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள்:

- இலங்கை போர்க் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

- தமிழர் பகுதிகளில் இருந்து இலங்கை ராணுவத்தை வெளியேற்ற வேண்டும்

- இலங்கையில் நடைபெறும் அநீதிகளை இந்திய அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? ஈழத் தமிழர் தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வை தாங்களே தீர்மானித்துக் கொள்ள வகை செய்யும் தீர்மானத்தை ஐ.நா. மன்றத்தில் இந்தியா கொண்டுவர வேண்டும்

- இலங்கையில் தமிழ் மொழி அடையாளங்கள் அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும்

- இன்றைய இலங்கையில் ராணுவத்தின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. ராணுவ முகாமாக காட்சியளிக்கிறது இன்றைய தமிழீழம் தமிழர் பகுதிகளில் வலிந்து குடியமர்த்தப்பட்டுள்ள சிங்களர்களை உடனே வெளியேற்ற வேண்டும்

- தமிழர் பகுதியில் இயல்பு நிலை திரும்ப இலங்கை அரசை ஐ.நா. அவை வலியுறுத்த வேண்டும்

- அகதிகளாக வெளிநாடுகளுக்கு சென்று சிறைகளில் வாடும் தமிழர்களை விடுதலை செய்வதில் ஐ.நா. அகதிகள் சபை தலையிட வேண்டும்

- இந்தியாவில் உள்ள அனைத்து இலங்கை அகதிகளுக்கும் இந்திய குடியுரிமை அல்லது அவர்கள் இந்தியாவில் நிரந்தரமாக வாழ வழிவகை செய்ய வேண்டும்

- அகதிகள் தொடர்பான ஐ.நா. வின் ஒப்பந்தத்தை இந்தியாவும் பின்பற்ற வேண்டும்

- ஐ.நா. மூலம் தமிழ் மக்களிடத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் .ஈழத் தமிழர் பிரச்சனை தெற்காசிய பிரச்சனையாக அறிவிக்கப்பட வேண்டும்

- தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் இலங்கை சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட வேண்டும்

- தமிழக மீனவர் படுகொலைக்கு முடிவுகட்ட கச்சத்தீவை மீட்க வேண்டும்

- தமிழகத்தின் மண்டபம் அல்லது தனுஷ் ோடியில் இந்திய கடற்படை முகாம் அமைக்க வேண்டும்

- தமிழர் பகுதிகளில் மறுவாழ்வு பணிகளை கண்காணிக்க பன்னாட்டுக் குழு ஆமைக்க வெண்டும்.

- இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இலங்கை படையினருக்கு பயிற்சி கொடுக்கக் கூடாது

- டெசோ மாநாட்டில் பங்கேற்போரை கண்காணிப்போம் என்ற இலங்கை அரசின் மிரட்டலுக்கு கண்டனம்

- டெசோ மாநாட்டுக்கு தடை விதித்து இடையூறு செய்த அதிமுக அரசுக்கு கண்டனம் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

http://thaaitamil.com/?p=28652

இதை வாசிக்கும் போது மனதிற்கு சற்று ஆறுதலாக இருந்தது.(இடையில் ஒரு கற்பனை) சரி வாசித்து முடிந்ததும் கருணாய் நிதிக்கு ஒரு வாழ்த்து கூற வேண்டும் என்று.. வாசித்து முடிந்ததும் இதெல்லாம் எங்க நடக்கப் போகுது என்ற ஒரு ஆதங்கத்தில் சரி ஒரேடியாய் அவரது மரணத்திற்கே எனது வாழ்த்தை தெரிவிப்பம் என்று முடிவை மாத்திட்டன்.

[size=4]தீர்மானங்கள் நன்றாக உள்ளன, ஆனால் இவற்றை நடைமுறைப்படுத்தும் திட்டங்கள் இல்லாவிட்டால் ... இவை வெறும் காகித தீர்மானங்களே.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

...சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள்:

- இலங்கையில் நடைபெறும் அநீதிகளை இந்திய அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? ஈழத் தமிழர் தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வை தாங்களே தீர்மானித்துக் கொள்ள வகை செய்யும் தீர்மானத்தை ஐ.நா. மன்றத்தில் இந்தியா கொண்டுவர வேண்டும்.

achgeh.gif

நா கூசாமல், வாய் கூசாமல் பாசாங்கு மொழியில், காரணகர்த்தாக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றி இப்படியும் திரித்துச் சொல்ல, கபோதிகளாலேயே முடியும்.

- டெசோ மாநாட்டுக்கு தடை விதித்து இடையூறு செய்த அதிமுக அரசுக்கு கண்டனம் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன

காங்கிரஸ்தானே மகாநாட்டுக்கு அனுமதி கொடுத்தது. இந்தியாவுடன் என்ன அடிப்படையில் இலங்கை ஒப்பந்தம் செய்யவேண்டி வந்தது. 13ம் திருத்ததை இலங்கை நடைமுறைப்படுத்தாவிட்டால் அதில் இந்தியாவின் கணக்கென்ன? காங்கிரஸ் நினைத்தால் அதன் பின் எதற்கு ஐ.நா. இடையில்.என்ன புருடா விடுகிறார்கள்.

இப்ப என்னத்திற்கு மண்டபத்தடியில் கடல்ப்படைதளம். அது இல்லாத்தால் தான் தமிழக மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள் என்பதாலா அல்லது ஈழத்தமிழர் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக போகிறார்கள் என்பதாலா?

Edited by மல்லையூரான்

[size=4]ஆம் மல்லையூரான். இங்கே மத்திய நடுவண் அரசும் கருணாநிதியும் சேர்த்து ஆடும் ஒரு அரசியல் நாடகமாக, அதாவது தமிழகத்தில் மீண்டும் பலம்பெற, அவதானத்துடன் பார்க்கவேண்டும். [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.