Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய சுதந்திரதினம்

Featured Replies

[size=4]பசி, வறுமை மற்றும் நோய்களை ஒழிக்க 2வது சுதந்திரப்போராட்டத்திற்கு நாடு தயாராக வேண்டும் என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். [/size]

[size=4]நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக, சுதந்திர தினத்தையொட்டி அவர் ஆற்றிய உரையில், நாட்டின் பணவீக்கம் குறிப்பாக உணவுப்பொருட்கள் விலை கவலை தரக்கூடிய அம்சமாகவே இருப்பதாக தெரிவித்தார். நாட்டின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் விவசாயத்துறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்தும் முயற்சியில் இன்னும் தடங்கல் இருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் உள்கட்டமைப்பை சர்வதேச தரத்திற்கு உயர்த்தவும், பசுமைப்புரட்சியை மீண்டும் கொண்டுவரவும் விரைவான அமைப்பு தேவை என்று கூறினார். [/size]

[size=4]நாட்டில் நோய், பசி மற்றும் வறுமையை ஒழிக்க 2வது சுதந்திர போராட்டத்திற்கு நாம் தயாராக வேண்டும் எனவும் பிரணாப் அழைப்பு விடுத்துள்ளார்.[/size]

http://tamil.yahoo.com/2%E0%AE%B5-%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%8D-%E0%AE%B0-%E0%AE%AA-140600499.html

  • தொடங்கியவர்

[size=5]எம்மை இந்த நிலைக்கு தள்ளிய இந்திய அரசிற்கு எஞ்சியுள்ள நடைப்பிணங்களின் சார்பாகவும் உங்களால் அழிக்கப்பட்ட 170000 தமிழ் மக்களின் பிணங்களின் சார்பாகவும் சுதந்திர தின வாழ்த்துக்கள்..[/size]

387987_438459172873627_856302570_n.jpg

[size=1]முகநூல் ஊடாக [/size]

  • தொடங்கியவர்

[size=5]கள்ளம் கபடம் இல்லா இந்தியக் குழந்தைகளுக்கு மட்டும் தமிழர்களின் சார்பாக நம் சுதந்திர தின வாழ்த்துகள் ..

உங்கள் குழந்தைகள் நன்றாக வாழட்டும் !!![/size]

557448_350969431649858_896040973_n.jpg

[size=1]முகநூல் ஊடாக [/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா எனும் ஒரு தேசத்தின் முடிவே எமது விடுதலையின் திறவுகோல்.

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து இந்திய தமிழ் உறவுகளுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியர்களுக்கு சுதந்திரதின வாழ்த்துக்கள் இல்லை..! :D

[size=4]‎" நாளை காலை எட்டு மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் ' சு ' தந்திர தினத்தை ஒட்டி , இந்திய நாட்டு தேசியக்கொடி எற்றப்படும் ! " = திமுக அறிவிப்பு

##### வாழ்க பெரியார் ! ######

சுதந்திரம்

"""""""""""""''''

1947-2012

எங்கே எப்போ பெற்றாய்

இதன் வாசனை அறிந்தாயா ?

...

வந்து போன வெள்ளையர்

வாழ்த்தினார் போலியாய்

வாயை பிளந்து மகிழ்ந்தாய்

ஆனாலும் தமிழன்"'!!

அகலக்கால் வைத்தவர்கள்

அடக்கி ஒடுக்கி

அனைத்தையும் ஒரு நிழலில்

ஒன்றாய் குவித்து காய வைத்தார் "'!!

கருவாடு போல் தமிழரை

காந்தியும் வந்தார்

நேருவும் வந்தார்

நோதாஜியை காணவில்லை இன்னும்"'!!

இரங்கல் பா எழுதவும்

முடியவில்லை

இவன் தான் பாரதத்தின்

விடியலுக்கு வித்திட்டவன்

சொல்லவும் முடியவில்லை

தடைக் கற்களே என்றும் "'

ஆனாலும் சுதந்திரக் கொடி '

ஏற்றுகிறோம்

ஆண்டாண்டு காலமாய்

அதன் அர்த்தம் அறியாமல் '''

......................................................

இன்னுமா நம் இந்தியன்று நம்புகிரே ? நீ ஏமந்தாது பத்தாது என்று உன் குழந்தையையும் கேடுக்கிரேயே ? ஆந்திரா. கர்நாடகா. கேரளா. தண்னிர் கொடுக்கா மறுப்பாது ஈழதமிழர்களை கொன்று குமிக்கா துனைபோனது. தமிழக மீனாவர்களை சிங்கள ஒ நாய்களாள் சுட்டுக் கொன்ற போதும் வேடிக்கை பார்த்து இந்தியா இப்படிபட்ட இந்தியா நமக்கு தேவைய ? சிந்திக்கவும் தமிழ் இனமே

....................................................................................................................................................................................................

நன்றி முகநூல் நண்பர்கள் [/size]

Edited by யாழ்அன்பு

  • தொடங்கியவர்

[size=5]‘ தவறு செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன் ’- ஜெ., சுதந்திர தின பேச்சு[/size]

அடுத்தவர் சுதந்திரத்தை கெடுக்கும் வகையில் யாரும் செயல்பட்டால் அவர் எந்த ஒரு உயர்ந்த பொறுப்பில் இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஒருவன் தவறு செய்தால் அதுவும் தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன் என சென்னையில் சுதந்திர தின கொடியேற்றி வைத்து முதல்வர் ஜெ., பேசுகையில் குறிப்பிட்டார். தொடர்ந்து அவர் பேசுகையில் ;

[size=3][size=4]முன்னணி மாநிலமாக்கிட முழு முயற்சி: மக்கள் அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். சுதந்திர போராட்ட தியாகிகள் பலரும் தங்கள் உடல் , பொருள், ஆவி அனைத்தையும் இழந்து சுதந்திரம் பெற்று தந்துள்ளனர். இதில் தமிழகத்தின் பங்கு மகத்தானது. நெற்கட்டும் செவல் பூலித்தேவன், தூக்குமேடையை முத்தமிட்ட கட்டப்பொம்மன், திருப்பூர்குமரன், மருது சகோதரர்கள், வேலுநாச்சியார், வாஞ்சிநாதன், வள்ளியம்மை, வ.உ.சி,. பாரதியார், நேதாஜி வழிவந்த முத்துராமலிங்கத்தேவர், பாரதியார், சுப்பரமணிய சிவா, தீரன்சின்னமலை, மாவீரன் அழகுமுத்துக்கோன், இது போன்ற தியாக செம்மல்கள் கொண்டது தமிழகம். ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்ற கொள்கையில் தமிழக மக்களின் மேம்பாட்டுக்கு நானும், எனது தøமையிலான அரசும் அயராது செயல்பட்டு வருகிறது. இதற்கென பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி தமிழகத்தின் வளர்ச்சியே நோக்கமாக பணியாற்றி வருகிறேன். [/size][/size]

[size=3][size=4]மனித வளம் மேம்படுத்திடும் நோக்கில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதற்கென மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை, இலவச சீருடை, காலணிகள், பாடப்புத்தகங்கள், கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குதல், 5 ஆயிரத்து 700 கோடியில் பல்வேறு தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யபட்டு 9 ஆயிரத்து 530 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு, 20 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆட்சி பொறுப்பேற்றது முதல் உணவு தானிய உற்பத்தியை பல லட்சம் டன்னாக உயர்த்தியிருக்கிறேன். இன்னும் உயர்த்தப்படும். எதிர்காலத்தில் நாட்டின் மொத்த வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு 20 சதத்திற்கும் அதிகமாக இருக்கும். இலங்கை தமிழர் வாழ்வு மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். [/size][/size]

[size=3][size=4]இது போல் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்திட அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சுதந்திரம் என்பது வரம்பு மீறக்கூடாது. கட்டுப்பாடு, கன்னியத்துடன் இருக்கக வேண்டும். [/size][/size]

[size=3][size=4]தனக்கு சுதந்திரம் இருக்கிறது என்று அடுத்தவர் உரிமை, சுதந்திரம் தடுக்கும் விதமாக யாராவது செயல்பட்டால், அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன் என்ற புரட்சித்தலைவர் சொன்ன வரியின்படி நான் விட மாட்டேன். மக்களின் நலனுக்காக என்றும் உழைப்பேன் . இவ்வாறு முதல்வர் ஜெ., பேசினார்.[/size][/size]

[size=3][size=4]உரைக்கு முன்னதாக முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்றுக்கொண்டார் முதல்வர். [/size][/size]

[size=3]http://tamil.yahoo.c...-052400581.html[/size]

Edited by akootha

  • தொடங்கியவர்

[size=4][size=5]நான் ஏன் சுதந்திர தினத்தை கொண்டாடவில்லை.....கொண்டாடப் போவதும் இல்லை... [/size]

ஒரு அரசின் அடக்குமுறையிலிருந்து வெளியேற நினைப்பது எந்தவகையிலும் தவறில்லை.. [/size]

[size=4]இங்கிலாந்து ஆட்சியில் இந்தியா இருந்த காலத்தில் இந்தியர்கள் இங்கிலாந்தின் நெப்போலியனுக்கு எதிரான போரில் வென்ற டிராபால்கரை நினைத்து கொண்டாடுங்கள் என்று சொன்னால் எப்படி ஒரு விடுதலை விரும்பி அதைச் செய்வான்.. [/size]

[size=4]அமெரிக்காவின் விடுதலையை கொண்டாடும்னாளில் அந்த அரசால் கொல்லப்படும் பல லட்சம் மக்களை நினைக்காமல் எப்படி இருக்க முடியும். இதையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு சம்பிரதாய விடுதலை தின பாராட்டுகளை பகிர்வது என்பது எப்படி மனித நேயமாகும்... [/size]

[size=4]டில்லியில் விடுதலை கொண்டாட்டங்கள் இருக்கின்றன , தமிழக மீனவன் இன்னும் போராட்டத்தில் இருக்கிறான்.. இதை மறந்து விடுதலையை கொண்டாட முடியுமா?.. [/size]

[size=4]தமிழீழ மக்களை இன்னும் சிங்கள ராணுவம் கொல்வதை இந்தியா ஊக்குவிக்கிறது, இதை மறந்து வ.ஊ.சி யை மனதில் வைப்போம் என்று சொல்ல முடியுமா?...[/size]

[size=5]அவர்கள் போராடியது இத்தகைய நாட்டின் அடக்குமுறை ஆட்சி உருவாகவேண்டும் என்பதற்காக அல்ல. போராட்டம் என்பது அந்த மக்களு[/size][size=3][size=4][size=5]க்கு எதிராக அல்ல.. அந்த அரசிற்கு எதிராகவே... இதற்கு நடுவில் அந்த மக்கள் யார் பக்கம் நியாயம் என்றுணர்ந்து அவர்கள் உடன் நிற்கட்டும்.. [/size][/size][/size]

[size=3][size=4]வெள்ளையனுக்கு எதிரான போராட்டம் என்பது இங்கிலாந்து மக்களுக்கு எதிரானதல்ல, மாறாக அந்த அரசிற்கு எதிரானது.. இங்கிலாந்து கொடியை ஒருவன் எரிக்கும் போது, ஒரு இங்கிலாந்துகாரன் தடுப்பான் எனில், அவன் முதலில் எரிப்பவனுடைய நியாயத்தை புரிந்து கொள்பவனாக மாறவேண்டும்.. அது இல்லையெனில், அமெரிக்காவை காக்கவே ஈராக்கில் இருக்கும் குழந்தைகள் தலையில் குண்டை போடுகிறேன் என்பவனுக்கும், இவனுக்கும் வித்தியாசம் இல்லை என்பதே அர்த்தம்.. [/size][/size]

[size=3][size=4]இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம், விடுதலை போராளிகளை நினைவில் கொள்ளுங்கள் என்பவர்கள், இந்தியர்களை குறை சொல்லாதீர்கள், அரசு செய்யும் தவறுக்கு இந்திய விடுதலையை குறை சொல்லாதீர்கள் என்பவர்கள், இந்த விடுதலை தினத்தில் இந்திய அரசு யாருக்கு எதிராக இந்த விடுதலையை பயன்படுத்துகிறது என்பதை கவனிக்காமல் இருந்து விட்டோம் [/size][/size]

[size=3][size=4]அதற்காக ஆதரவளிப்போம் என்று சொன்னால் அவர்கள் குறைந்த பட்சம் விடுதலையை நேசிப்பவர்களாக இருக்கிறார்கள், மக்களை நேசிப்பவர்களாக இருக்கிறார்கள் என அர்த்தம்.. இல்லையெனில் இந்திய கொடியை ஏற்க மறுக்கும் காசுமீர, நாகாலாந்து, மணிப்பூர், சீக்கிய குழந்தைகளை துப்பாக்கியால் சுடும் ஓரு அரசை ஆதரித்து அதன் அடையாளமாக மாறி இருக்கின்ற இந்திய கொடியை தூக்கி பிடிக்கிறோம் என்பதை மறக்கக் கூடாது. அதன் கொடியில் இருக்கும் அந்த குழந்தைகளின் ரத்தம் நம்மை ஒரு போதும் மன்னிக்காது... ஒரே ஒரு நாள் விடுதலை தினத்தை கொண்டாடிவிட்டு நகர்ந்து விடுபவர்கள் அந்த விடுதலைஅடைந்த நாட்டின் கொடியை நடவேண்டும் என்பதற்காக வருடம் தோரும் அரசு அடக்குமுறையை அனுபவிப்பவர்களை நினைத்து பார்த்தல் நலம்... [/size][/size]

[size=3][size=4]இந்திய அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராகவே இந்த விடுதலை தின எதிர்ப்பு... அதன் உள்ளடக்கத்தை புரிந்து கொள்ளாமல் வெற்று “இந்தியா” கோசம் ஒன்றையும் சாதிக்காது மாறாக ’தேச விரோத’ செயல்களில் ஈடுபடுகிறீர்கள் என கூடன்குளம்’ உதயகுமார்’ , புஷ்பராயன்’ ’முகிலன்’ போன்ற மக்கள் போராளிகளை சிறையில் அடைப்பதற்கு தான் பயன்படும்.. ஒடுக்கும் அரசுக்கு எதிராகவா, ஒடுப்படும் மக்களுக்கு ஆதரவாகவா?... நீங்கள் யார் பக்கம் என்பதை இந்த சுதந்திர தினம் நம்மை நோக்கி வைக்கும் கேள்வியில் , நிலைப்பாட்டை நான் எடுத்துவிட்டேன் இனி நீங்கள் தான் எடுக்கவேண்டும்.[/size][/size]

[size=3][size=6]- [/size][/size][size=6]மே 17 [/size]

Edited by akootha

இந்தியா எனும் ஒரு தேசத்தின் முடிவே எமது விடுதலையின் திறவுகோல்.

உண்மைதான் ஆனா இந்தியா முடிவு எடுக்க மாட்டேங்குதே.. (((தமிழ் மொழியில தான் ஒருவன் கூற வருவதை ஈசியா திசை திருப்ப முடியும்னு நினைக்கிறேன்)))

இந்தியர்களுக்கு சுதந்திரதின வாழ்த்துக்கள் இல்லை..! :D

சுதந்திரம் இல்லை.

[size=2]கூடங்குளம் மற்றும் சுற்றியுள்ள 13 கிராமங்களில் 144 தடை;[/size]

[size=2]அசாமில் 4 மாவட்டங்களில் உள்ள 150க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை.[/size]

[size=2]மணிப்பூரில் 6 மாவட்டங்களில் உள்ள 40 கிராமங்களில் 144 தடை.[/size]

[size=2]

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கணக்கிலடங்கா கிராமங்களில் 144 தடை.

இவ்வளவு ஏன், டெல்லியில் முக்கிய இடங்களின் மீது விமானங்கள் பறக்க தடை....

நம்புங்கப்பா இன்னிக்கு இந்தியாவின் சுதந்திர தினம்...[/size]

[size=1]முகநூல் ஊடாக[/size]

  • தொடங்கியவர்

[size=5]அசோகச் சக்கரத்தின் மீது 'கை' சின்னம் கொடிக்கு அவமதிப்பு[/size]

[size=4]தேனி கூடலூரில், தேசியக்கொடியில், கை சின்னம் வரைந்து, காங்., கட்சியினர், சுதந்திர தினம் கொண்டாடினர்.[/size]

[size=4]கூடலூரில், சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, காங்., கட்சியினர், ஒன்பது இடங்களில் கொடியேற்றினர். புது பஸ் ஸ்டாண்ட் அருகில் மட்டும், தேசிய கொடியை ஏற்றினர். மற்ற இடங்களில், தேசிய கொடி நடுவில் அசோகச் சக்சகரத்தை ஒயிட்னர் மூலம் மறைத்து, கை சின்னத்தை வரைந்து ஏற்றினர். [/size]

[size=4]தேசிய கொடிக்கு, இது அவமதிப்பு என்பது, காங்., கட்சியினருக்கு தெரியாமல் போனது ஏனோ. காங்., கட்சியினர் கூறுகையில், இன்று (நேற்று) மாலை நடக்கும் தெருமுனைக் கூட்டத்திற்காக, கட்சிக் கொடியைத்தான் ஏற்றியுள்ளோம் என, பூசி மெழுகினர். [/size]

[size=4]http://tamil.yahoo.com/அச-கச்-சக்கர-்-ன்-175000832.html[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.