Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்தரை தொட்டு முத்தமிட்டால் பெண்களே......... பெரும் பிரச்சனை வரும் இலங்கையில்!

Featured Replies

புத்தரை முத்தமிட்ட மூவர் கைது

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 21 ஆகஸ்ட், 2012 - 13:59 ஜிஎம்டி

110616121039_buddha_304x171_bbc_nocredit.jpg

புத்தர் சிலை

புத்தர் சிலையை இழிவுபடுத்தும் விதமான புகைப்படங்களை எடுத்ததன் மூலம் பௌத்தர்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாகக் குற்றம்சாட்டி பிரஞ்சு சுற்றுலாப் பயணிகள் மூன்று பேருக்கு இலங்கை நீதிமன்றம் ஒன்று நிறுத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனைகளை விதித்துள்ளது.

இந்த சுற்றுலாப் பயணிகள் தாங்கள் எடுத்த படங்களை ஒரு கடையில் அச்சிடக் கொடுக்கப்போனபோது அக்கடைக்காரர் முறையிட்டதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புத்த மதம் சம்பந்தப்பட்ட வணக்கத்துக்குரிய விஷயங்களை தவறாகக் கையாள்வதற்கு பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் இலங்கையில் கடுமையான தடைகள் உண்டு.

புகைப்பட அச்சீட்டுக் கடைக்காரர் பொலிஸில் தகவல் தந்ததை அடுத்து பிரான்சிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த பெண்கள் இருவரும் ஆண் ஒருவரும் தென்னிலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். மத்திய மாகாணத்தில் உள்ள பௌத்த விகாரை ஒன்றில் புத்தர் சிலைகளோடு இவர்கள் எடுத்த படங்களில் ஒன்றில் புத்தர் சிலைக்கு இவர்கள் முத்தம் கொடுப்பதுபோல அமைந்திருக்கும் படமும் இருந்தது.

செவ்வாயன்று இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்றும் இவர்களுக்கு கடூழியத்துடன் கூடிய ஆறுமாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்றாலும் நீதவான் அத்தண்டனையை ஐந்து வருடங்களுக்கு நிறுத்தி வைத்துள்ளார் என்றும் காவல்துறை பேச்சாளர் கூறினார். நிறுத்திவைக்கப்பட்ட தண்டனை என்றால் இந்த ஆறு மாத காலத்தை அவர்கள் சிறையில் கழிக்கும் நிலை ஏற்படாது என்று சொல்லலாம்.

புனிதப் பொருட்கள் பாதுகாப்பு சட்டத்தில் எந்தப் பிரிவினரின் மத உணர்வையும் புண்படுத்தவோ இழிவுபடுத்தவோ கூடாது என்ற பிரிவின் அடிப்படையில் குற்றவியல் சட்டத்தின் கீழ் இவர்களுக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பெரும்பான்மை மதமான பௌத்த மதத்தை இழிவுபடுத்தியதாக குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் மீது அரசாங்கம் கடுமையாக இருந்துவருகிறது என்று சொல்லாம்.

கடந்த மாதம் இலங்கைக்கு வந்திருந்த அரபிகள் ஐந்து பேர் புத்த மதத்தை இழிவுபடுத்தும் விதமான பிரசுரங்களை விநியோகித்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டிருந்தனர். 2010ஆம் ஆண்டில் புத்தர் உருவப்படம் அடங்கிய சாவிக்கொத்து வளையத்தை விற்ற காரணத்துக்காக இலங்கையின் முஸ்லிம் வியாபாரிகள் இரண்டு பேருக்கு நிறுத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனைகள் விதிக்கப்பட்டிருந்தது

http://www.bbc.co.uk/tamil/india/2012/08/120821_lankaarrest.shtml

  • கருத்துக்கள உறவுகள்

அது என்னது அண்ணா நிறுத்தி வைக்க பட்ட சிறைத்தண்டனை?

சிறைக்குள்ள நின்னுட்டே இருக்கனுமா? உக்காரவே முடியாதா?

[size=4]

செவ்வாயன்று இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்றும் இவர்களுக்கு கடூழியத்துடன் கூடிய ஆறுமாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்றாலும் நீதவான் அத்தண்டனையை ஐந்து வருடங்களுக்கு நிறுத்தி வைத்துள்ளார் என்றும் காவல்துறை பேச்சாளர் கூறினார். நிறுத்திவைக்கப்பட்ட தண்டனை என்றால் இந்த ஆறு மாத காலத்தை அவர்கள் சிறையில் கழிக்கும் நிலை ஏற்படாது என்று சொல்லலாம்.
[/size]

[size=4]இவர்கள் மூலம் சிங்கள நாட்டில் 'தலிபான் ஆட்சி' நடக்கின்றது என கூற வைக்கவேண்டும். இவர்களின் பெயரை அறிந்தால் முகநூலில் தேடிப்பார்க்கலாம்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

புத்தரை தொட்டு முத்தமிட்டால் பெண்களே......... பெரும் பிரச்சனை வரும் இலங்கையில்!

ஆண்களுக்கு தடையில்லைத்தானே!

  • கருத்துக்கள உறவுகள்

புத்தரை தொட்டு முத்தமிட்டால் பெண்களே......... பெரும் பிரச்சனை வரும் இலங்கையில்!

ஆண்களுக்கு தடையில்லைத்தானே!

  • தொடங்கியவர்

அது என்னது அண்ணா நிறுத்தி வைக்க பட்ட சிறைத்தண்டனை?

சிறைக்குள்ள நின்னுட்டே இருக்கனுமா? உக்காரவே முடியாதா?

ஆமாம் சுண்டல். "சிறை இருக்காமல்" தப்பிக்க வேண்டுமாயின் இந்த மாதிரி நிறுத்தி வைக்க பட்ட சிறைத்தண்டனையில் "நின்னுட்டே இருக்கலாம்" ஆனால் அங்கேயே யாழின் திண்ணையில் உட்கார்ந்து கடலைபோடுவதுபோல நினைத்து சுண்டல் (க்)கடலைபோட உட்கார்ந்து விடக்கூடாது. "உட்காருவதும்" "இருப்பதும்" ஒன்றாகையால் சிறையில் உட்காருவது விரும்பப்படாதது. ஆகையால் சிறை இருக்க விரும்பாதோர் சிறை உட்காரக்கூடாது. :)

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

ஆண்களுக்கு தடையில்லைத்தானே!

அதை சரியாகத்தெரியாது.

இருந்தாலும் கறுப்பி அக்கா/அண்ணா இலங்கை அரசு உங்களை தங்களுக்கு தேவையானபடி எடுக்கப்பார்க்கும். இருந்தும் புத்தரை அவசரமாக முத்தமிட்டாகத்தான் வேண்டுமாயின் கவனமாய் போங்கோ. நீங்கள் மட்டும் கொஞ்சம் கூடக்கவனம் எடுத்தால் நல்லது. :lol:

Edited by மல்லையூரான்

சாதரணமாய் சிங்களவர்கள் ஆண்களை அதிகமா முத்தமிடலாம்

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் சுண்டல். "சிறை இருக்காமல்" தப்பிக்க வேண்டுமாயின் இந்த மாதிரி நிறுத்தி வைக்க பட்ட சிறைத்தண்டனையில் "நின்னுட்டே இருக்கலாம்" ஆனால் அங்கேயே யாழின் திண்ணையில் உட்கார்ந்து கடலைபோடுவதுபோல நினைத்து சுண்டல் (க்)கடலைபோட உட்கார்ந்து விடக்கூடாது. "உட்காருவதும்" "இருப்பதும்" ஒன்றாகையால் சிறையில் உட்காருவது விரும்பப்படாதது. ஆகையால் சிறை இருக்க விரும்பாதோர் சிறை உட்காரக்கூடாது. :)

:D

  • தொடங்கியவர்

சாதரணமாய் சிங்களவர்கள் ஆண்களை அதிகமா முத்தமிடலாம்

இருந்தாலும் (புத்தரை முத்தமிடமுன்) புத்தர் ஆணா பெண்ணா என்று டெஸ்ட் செய்து பார்க்க ஆமதுறுக்கள் பழைய அனுபவத்தால் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களாம்.

பழைய அனுபவத்தை தெரியாதவர்களுக்கு: கிராமப்புறம் ஒன்றிலிருந்து வந்து சிலகாலமாக தண்சலையில் வசித்துவந்த இளைஞனான ஆமதுறு ஒருவர் வருத்தமாக இருந்ததால் நண்பரொருவர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அழகிய சிறுக்கி ஒருவர் வளைந்து நெளிந்து கொண்டு வந்து ஆமதுறுவிடம் ஒரு போத்தலை நீட்டி சலம் எடுத்து தரும் படி கூறிவிட்டு போய்விட்டார். இந்த கிலேசமில்லாத ஆட்டத்தால் சங்கடப்பட்டுபோய்விட்ட ஆமதுறு நண்பரிடம் தான் தண்சலவிற்கு திரும்ப வேண்டும் என்றார். நண்பரோ ஆமதுறு சுகமில்லாமல் இருப்பதால் சலம் கட்டாயம் அந்த பெண்ணுக்கு கொடுக்க வேண்டும் என்றும், அது ஆஸ்பத்திரியில் எல்லோரும் செய்வதுதான் என்றும் பிடிவாதம் பிடித்தார். ஆமதுறு காவியை நன்கு இழுத்து போர்த்துகொண்டு ஒருவரும் பார்க்காத நேரத்தில் நசூக்காக பாத்றூமில் நுளைந்து திரும்பி வந்து போத்தலை நண்பரிடம் கொடுத்தார். நண்பர் சில விநாடிகள் அங்கே காத்திருந்த பின் அதே பெண் அதே நளினங்களுடன் வந்து நண்பரிடம் இருந்த போத்தலை பெற்று சென்று விட்டார். ஆமதுறு தப்பினேன் பிளைத்தேன் என்று அவசரமாக ஓடிச்சென்று ஓட்டோவில் எறி நண்பருடன் தண்சல வந்து சேர்ந்தார்.

அந்த ஆட்டக்கார பெண் வழியில் போத்தலை தவறி விழ விட்டுவிட்டதால், சுற்றும் முற்றும் பார்த்தார்; ஒருவரும் இல்லை. பாத்றூமில் சென்று இன்னொரு போத்தலை நிரப்பி ஆமதுறுவின் பெயரை போட்டுவைத்துவிட்டு சென்றுவிட்டார்.

மறுநாள் நேரத்திற்கே காலையில் எழுந்து விட்ட ஆமதுறு நண்பர் எப்போ வருவார் என்று வழிமேல் விழி வைத்து பார்த்திருந்தார். நண்பர் வந்ததும் சும்மா நடிப்பிற்கு தனக்கு சுகம் என்றும் ஆஸ்பத்திரிக்கு போகத்தேவை இல்லை என்றும் பிகு பண்ணினார். நண்பர் திரும்பவும் விடாப்பிடியாக இருக்க தண்சலையில் இருந்த அத்தர், பன்னீர் எல்லாவற்றையும் தனது காவியில் தெளித்துவிட்டு வேண்டா வேறுப்பாக அமர்வது போல நடித்துக்கொண்டு ஓட்டோவில்ஏறி அமந்தார்.

எதற்கும் ஆஸ்பதிரியை நெருங்கும் போது ஆமதுறு கொஞ்சம் படபடப்பாக இருக்க நண்பர் " என்னை நம்புங்கள்; இது மிகவும் திறமையான ஆஸ்பத்திரி. எந்த வருத்தமாக இருந்தாலும் மாற்றிவிடுவார்கள், பயப்பட ஒன்றும் இல்லை" என்று சமாதனம் சொன்னார். சிறுது நேரத்தில் முரட்டு சுவாபமான ஒருவர் labலிருந்து வெளியே வந்து ஆமதுறுவின் பெயரை சொல்லி அழைத்தார். ஆமதுறுவுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தாலும் எழுந்து சென்றார். அவர் ஆமதுறுவை விலைகேட்டு வாங்க பார்க்கும் ஆட்டுக்குட்டியை பார்ப்பது போல் மேலும் கீழும் ஏற இறங்க கவனமாக பார்த்துவிட்டு "மூன்று மாதம் ஆகிறது" என்று கூறிவிட்டு உள்ளே சென்று கதவை மூடிவிட்டார்.

வெக்கமும் கோபமும் ஒன்றாக சேர ஆமதுறு, மற்றவர்களுக்கு முன்னல் நிற்கமுடியாமல் சங்கடப்படுக்கொண்டு சட சடவென்று படி இறங்கி சென்று ஓட்டோவில் ஏறி அமர்ந்து ஓட்டோவை எடுக்கும்படி சாரதிமீது சீறினார். பின்னால் ஓடிவந்த நணபர் ஓட்டோவில் ஏற முயன்று கொண்டு என்ன நடந்தது என்று கேட்க ஆமதுறு அவரை ஓட்டோவில் ஏறவிடாமல் தடுத்துக்கொண்டு "ஓக்கத்தமாய் மங் கீவ ஏக்க எப்பாலு" என்று கத்திவிட்டு தண்சலை போய்சேர்ந்து ஒருவரிடமும் பேசாமல் காவியை இழுத்து இறுக்கி மூடிக்கொண்டு படுத்துவிட்டார்.

புத்தருக்கும் மூன்று மாதம் என்று டெஸ்ட் ரிசல்ட் வந்துவிட்டால் யாரும் அவரை முத்தமிடமுடியாத படி பிரச்சனையாகிவிடும் என்பது ஆமதுறுக்களின் பின்னடிப்புக்கு காரணமாகலாம்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

kiss-budda.jpg

Capture4.jpg

முத்தப் படம் இல்லாமல்... செய்தியா? என்று, இணையத்தில்... தேடிய போது கிடைத்தவை. :D

படம் போடும் தமிழ் சிறீ. (படம் இல்லாமல்...தமிழ் சிறீயா?)

[size=6]French tourists get Sri Lanka jail term over Buddha kiss[/size]

[size=5]Three French tourists were given suspended six-month prison sentences in Sri Lanka on Tuesday after their holiday pictures appeared to show one of them -- a woman -- kissing a Buddha statue on the lips.[/size]

[size=5]All three -- two women and a man -- pleaded guilty to desecrating a Buddhist shrine in the central town of Kandy and were also fined 1,500 rupees ($11) each, police told AFP.[/size]

[size=5]As well as the woman's apparent kiss, the man tried to imitate the pose of the Buddha and their actions hurt the feelings of Buddhists in the country, police told a magistrate in Galle.[/size]

[size=5]Officers were alerted to the incident after the visitors tried to get their holiday pictures printed.[/size]

[size=5]"The studio employee saw the images and alerted the Galle police who arrested the tourists on Monday and the case was concluded today because they pleaded guilty," said police spokesman Ajith Rohana.[/size]

[size=5]The tourists were free to go as their jail sentences were suspended for five years and the magistrate did not make any order to expel them from the country, he added.[/size]

[size=5]Sri Lanka is majority Buddhist and is sensitive to foreigners showing disrespect to Buddha images. Shrines and temples have banned tourists visiting unless they are conservatively dressed.[/size]

[size=5]Sri Lanka banned US rap star Akon in March 2010 arguing that he had produced a music video involving scantily clad women in front of a Buddha statue.[/size]

[size=5]Eight years ago, Sri Lanka's supreme court ordered police and customs to seize Buddha Bar music and bikinis with Buddha images after monks complained they hurt local religious feelings.[/size]

[size=5]http://news.yahoo.com/french-tourists-sri-lanka-jail-term-over-buddha-171146665.html?_esi=1[/size]

  • தொடங்கியவர்

உதவிக்கு நன்றி தமிழ் சிறி. இவ்வளவு நேரமும் தனித்து விடப்பட்டு அல்லல் பட்டுப்போனேன். :D

11 பிருத்தானியசுற்றூலா பயணிகள் மட்டும் அண்மை காலத்தில் தாக்கப்பட்டுவிட்டதாக எங்கோ படித்த ஞாபகம். குறைந்தது 3 கொலைகளை இந்த வருடம் பார்த்துவிட்டோம். போருக்கு பின்னர் இலங்கை அரசு இராணுவத்தால் தமிழரை அடக்கிக்கொண்டு தீவில் அமைதி நிலவுவதாக அறிவித்திருக்கிறது, ஆனால் பிரித்தானிய சுற்றுலா அதிகாரிகள் இலங்கைக்கு போவது சம்பந்தமாக அறிவுரை வழங்கியிருக்கிறார்கள்.

இந்த இலங்கை அநீதி மன்றங்களில் இதுவரையில் எத்தனை பேர் இந்த (பிருத்தானியா அறிவுரை வழங்க வேண்டிய அளவுக்கு) பாரதூர குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் தண்டிக்க பட்டுவிட்டார்கள்? ஆனால் மனத்தால் எந்த குற்றமும் இழைக்காத இந்த பயணிகள் இலங்கை அநீதி மன்றங்களால் தண்டப்பணத்துடன் சிறை வாசமும் வழங்கப்பட்டிருக்கிறார்கள்.

அக்குதா எழுதியிருப்பது போல் இவர்களின் பெயர்களை தேடிப்பிடித்தால் இ்லங்கையின் அநீதிமன்றங்கள் தமக்கு ஒரு நீதியும் மற்றவர்களுக்கு இன்னொரு நீதியும் வழங்குவதை புட்டுவைக்க இவர்களிடமிருந்து உதவி பெற்றுக்கொள்ள முடியும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

kiss-budda.jpg

Capture4.jpg

முத்தப் படம் இல்லாமல்... செய்தியா? என்று, இணையத்தில்... தேடிய போது கிடைத்தவை. :D

இப்பிடி போய் புத்தாக்கு லிப் to லிப் kiss அடிச்சா அத பாத்திட்டு நிண்ட பிக்குக்கு கடுபாகம என்ன செய்யும்? அதான் போலீஸ் ல போட்டு கொடுதிடான்

:D

  • தொடங்கியவர்

புத்தர் சிலைக்கு முத்தம்! - சுற்றுலாப் பயணிகளுக்கு சிறைத்தண்டனை: பள்ளிவாசல் இடிப்பிற்கு என்ன தண்டனை?

[Wednesday, 2012-08-22 13:10:03]

புத்தர் சிலைக்கு முத்தம் கொடுத்ததாக பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மூவருக்கு சிறிலங்காவில் ஆறுமாத ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. புத்தர் சிலையை இழிவுபடுத்தும் வகையில் நடந்ததாகவும் , ஒளிப்படங்களை எடுத்து பௌத்தர்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும் இவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.

மேற்படி சுற்றுலாப் பயணிகள் தாம் எடுத்த ஒளிப்படங்களை அச்சிடக் கொடுக்கச் சென்ற போது, அதைப் பார்த்த வணிக நிலைய உரிமையாளர் சிறிலங்கா காவல்துறைக்கு தகவல் கொடுத்திருந்தார்.

இதையடுத்து பிரான்சில் இருந்து சிறிலங்காவுக்கு சுற்றுலா வந்திருந்த பெண்கள் இருவரும் ஆண் ஒருவரும் காலியில் வைத்து நேற்றுமுன்தினம் கைதுசெய்யப்பட்டு காலி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். கண்டியில் உள்ள பௌத்த விகாரை ஒன்றில் புத்தர் சிலைகளோடு இவர்கள் எடுத்த படங்களில் ஒன்றில் கைது செய்யப்பட்ட பிரெஞ்சுப் பெண்களில் ஒருவர் புத்தர் சிலைக்கு முத்தம் கொடுக்கும் படமும் இருந்தது.

இவர்களுக்கு ஆறுமாத கடூழியச் சிறைத்தண்டனையை நீதிமன்றம் விதித்தது, ஆனாலும் நீதிவான் அந்தத் தண்டனையை ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைத்துள்ளார். புனிதப்பொருட்கள் பாதுகாப்பு சட்டத்தின் எந்தமதப் பிரிவினரின் மத உணர்வையும் புண்படுத்தவோ இழிவுபடுத்தவோ கூடாது என்ற பிரிவின் அடிப்படையில் குற்றவியல் சட்டத்தின் கீழ் இவர்களுக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் சி்றிலங்கா வந்திருந்த அரபிகள் ஐந்து பேர் பௌத்தமதத்தை இழிவுபடுத்தும் வகையில் பிரசுரங்களை விநியோகித்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்துக்களது பிள்ளையாரையும் - முஸ்லீம்களது பள்ளிவாசல்களையும் அபகரித்தும் இடித்தும் அடாவடி செய்யும் பௌத்த துறவிகளுக்கு சட்டத்தின் எந்தப் பரிவிலும் தண்டனையில்லை என்பது குறிப்பிடத்தக்கது!

http://www.seithy.com/breifNews.php?newsID=65589&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்

Tuesday, August 21, 2012 3:14 PM EDT

Sri Lanka Punishes French Tourists For ‘Insulting’ Buddhism

By Palash R. Ghosh

While Western media is currently focused on the case of a Christian girl in Pakistan facing punishment for allegedly committing “blasphemy” against Islam, 3,000 miles to the south, Buddhists are exerting their rage over what they perceive to be an ”insult” to their faith.

Three French tourists -- a man and two women -- have received suspended jail sentences and fined after they were caught taking photographs in which they pretended to kiss a statue of the Buddha in a temple in Sri Lanka.

They could have received six months in prison with hard labor.

The European foreigners, detained in the southern town of Galle, were apprehended after a photographic developer alerted the police.

"The [photography studio] employee saw the images and alerted the Galle police, who arrested the tourists on Monday, and the case was concluded today because they pleaded guilty," said police spokesman Ajith Rohana, according to Agence France Presse.

Sri Lanka, which is 70 percent Buddhist, is extremely sensitive to any act deemed vulgar with regard to religion, especially the desecration or mistreatment of images of the Buddha.

Tourists are banned entry at shrines and temples if they are not dressed conservatively.

In recent years, other such incidents have occurred on the island nation.

BBC reported that last year five Arabs were detained after distributing "literature insulting to Buddhism." In 2010, two Sri Lankan Muslims were arrested and given suspended prison terms for selling key rings that featured an image of the Buddha.

The American rap star Akon was refused a visa to visit Sri Lanka after it was revealed that a music video he appeared in depicted bikini-clad women dancing in front of a Buddha statue.

Buddhism was introduced to Sri Lanka in the fourth century B.C. by Buddhist monk Mahinda, son of Indian emperor Ashoka.

"சர்வதேச வாணிப பயணிகள்" என்ற இந்த பத்திரிகையின் தலைப்பு இ்லங்கையின் சுற்றுலாவில் தாக்கத்தை தரும். பல ஆங்கில நாளேடுகள் இந்த செய்தியை பிரசுரித்திருக்கின்றன.

http://www.ibtimes.com/articles/375969/20120821/sri-lanka-french-tourists-buddhism-kissing-temple.htm

ஊறவுகளே காணப்படும் ஆங்கில செய்திகளின் comment பகுதிகளில் பகிஸ்கரி இலங்கையையும் இணைக்க பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

kiss-budda.jpg

Capture4.jpg

முத்தப் படம் இல்லாமல்... செய்தியா? என்று, இணையத்தில்... தேடிய போது கிடைத்தவை. :D

யாரப்பா புத்தற்றை காதைக் கடித்தது ? :D

யாரப்பா புத்தற்றை காதைக் கடித்தது ? :D

மேலே படத்தைப் பார்த்திட்டு எனக்கும் இந்தக் கேள்விதான் வந்தது.

புத்தற்ற காதைக் கடிச்சவன் பிடிபட்டால் மரணதண்டனைதான் குடுப்பாங்கள் போலகிடக்கு.

என்னவோ ஒன்று கேட்கவேண்டுமென்று படுத்து.

நாங்கள் வத்திக்கான் போனால் அங்கே இருக்கும் இயேசு சிலைக்கு இப்படிச்செய்தால் என்ன வெய்வார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

French tourists guilty in Sri Lanka over Buddha photos

France-+tharunyalk-1-2.jpg

A Sri Lankan court has given suspended jail terms to three French tourists for wounding the religious feelings of Buddhists by taking pictures deemed insulting.Two women and one man were detained in the southern town of Galle after a photographic laboratory alerted police.The pictures show the travellers posing with Buddha statues and pretending to kiss one of them.Most of Sri Lanka’s majority ethnic Sinhalese are Theravada Buddhist.Mistreatment of Buddhist images and artefacts is strictly taboo in the country. The incident is alleged to have taken place at a temple in central Sri Lanka.Police spokesman, Ajith Rohana, told media the French party had visited the laboratory to get pictures printed.The images were impounded after the owner of the photographic laboratory alerted police, but they were later posted on a Sri Lankan website.On Tuesday a magistrate sentenced the trio to six months in prison with hard labour, suspended for five years – which means they will not actually serve any time in jail. The court also levied a small fine on them.They were convicted under a section of the Penal Code which outlaws deeds intended to wound or insult “the religious feelings of any class of persons” through acts committed in, upon or near sacred objects or places of worship.Last month there were reports that five Arabs visiting the island were arrested for distributing “literature insulting to Buddhism”.In 2010 two Sri Lankan Muslim traders were given suspended jail sentences for selling keyrings containing an image of Buddha.That same year Sri Lanka denied a visa to the R&B star Akon, who had been due to perform a concert. It happened after public protests over one of his music videos which briefly showed scantily-clad women dancing in front of a Buddha statue.There is currently widespread excitement in Sri Lanka as the Kapilvastu Relics – believed to be bones of Lord Buddha – have been brought to the island from India for a two-week tour of temples.

Short URL: http://www.ahwaal.com/main/?p=1159

[size=6]இது அனுமதிக்கப்படும் [/size]

Buddha.jpg

  • கருத்துக்கள உறவுகள்

[size=6]இது அனுமதிக்கப்படும் [/size]

Buddha.jpg

புத்த விகாரைகளுக்குள் செல்லும் போது....

ஆண்கள் அரைக்கால் சட்டையுடன் செல்லப் படாது, என்பது விதி.

என் தலை விதி, விகாரை எப்படி.. இருக்கும், என்று.. பார்க்கப் போன போது...

வழியில் நின்ற, காவலர்.. அரைக்கால்சட்டைக்கு மேல்... நீல சாரம் ஒன்றை அணியத்தந்த பின் தான்... உள்ளே அனுமதித்தார்.

இந்த, விடயங்களில்... முசுலீமும், பௌத்தனும் ஒன்று.

சைவ சமயத்தவர் எப்பவும் இளிச்ச வாயர்.

இந்தியா மாதிரி. :D:lol::icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.