Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிதம்பரத்தில் ஓர் அப்பாவிசாமி!

Featured Replies

இந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அமைந்துவிட்ட சம்பவம் என்பதால் இதை நான் எழுதுகின்றேன்.

இப்பதிவில் நான் சொல்லப்போகும் அனைத்து நிகழ்வுகளும் கலப்படமில்லாத உண்மை.

முழுப்பதிவிற்கும்:

http://kanapraba.blogspot.com/2006/05/blog-post.html

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் அணுபவ பகிர்வு அண்ணா நன்றிகள்...மற்றும் உங்கள் blog இல் இருக்கும் அணைத்து அம்சங்களும் அருமை..வாழ்துக்கள்... :lol::lol:

இந்த நூற்றாண்டிலயே அதுவும் ஒரு வெளி நாட்டு விருந்தினரிடம் இவ்வாறு நடந்து கொள்பவர்கள் , நூற்றான்டுகளாக சாதியத்தைக்கொண்டு, தமது சமய வழியிலான அரசியல் அதிகாரத்தைக்கொண்டு எவ்வாறு தமிழ் நாட்டு மக்களிடம் நடந்திருப்பார்கள் என்று எண்ணிப் பாருங்கள்.பெரியாரும் திராவிடக் கட்சிகளும் இல்லாது இருந்திருந்தால் இன்று தமிழ் நாட்டுத் தமிழர்களின் நிலை என்ன என்று எண்ணிப் பாருங்கள். இவற்றை ஏற்க மறுப்பவர்கள் தமிழ் நாட்டுத்தலங்களுக்குச் சென்று இவர்களின் கொட்டத்தை நேரில் தரிசிப்பது அவசியம்.அப்போது தான் அங்குள்ள நிலமைகள் விளங்கும்.

உந்த சிதம்பரக்கோயிலுக்கும யாழ்ப்பாணத்தாருக்கும்...கனகா

  • தொடங்கியவர்

வணக்கம் சுண்டல், நாரதர், சின்னக்குட்டி

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள்.

சிதம்பரம் கோயிலுக்குக் ஒரு உருவச்சிலை ஒன்றை சேர்.பொன்.இராமநாதன் கொடுக்கமுனைந்தபோது ஏற்பட்ட கசப்பான அனுபவமே அவர் பின்னர் பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலின் மீள் நிர்மாணத்தில் முனைப்பாக இருந்ததன் காரணம் என்று சொல்லக்கேட்டிருக்கிறேன்.

முழு விபரங்களும் எனக்குத்தெரியவில்லை.

சிதம்பரம் கோயில் ரவுடி அர்ச்சகர்களின் ஆதிக்கத்தில் இருக்கிறது.... தமிழக அரசு அந்தக் கோயிலை அறநிலையத்துறையின் கீழ் கையகப்படுத்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.....

நானும் இதுபோலவே ரவுடி அர்ச்சகர்களிடம் மாட்டிக்கொண்டு ஒரு முறை விழித்தேன்...... நல்ல வேளையாக நண்பர் ஒருவர் காப்பாற்றினார்.....

சிதம்பரம் கோயில் ரவுடி அர்ச்சகர்களின் ஆதிக்கத்தில் இருக்கிறது.... தமிழக அரசு அந்தக் கோயிலை அறநிலையத்துறையின் கீழ் கையகப்படுத்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.....

நானும் இதுபோலவே ரவுடி அர்ச்சகர்களிடம் மாட்டிக்கொண்டு ஒரு முறை விழித்தேன்

என்ன லக்கி லுக்

உங்களுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டதா?

என்னால் நம்பவே முடியவில்லை.......... :lol:

லக்கிலுக்கு.....ரவுடி அர்ச்சகர்களா....அர்ச்சகர்கள் ரவுடியா.......

  • கருத்துக்கள உறவுகள்

காசெதான் கடவுளடா .......என்றூ அர்ச்சகர்கள் தான் பாட்டு எழுதினார்க்ளோ தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

சிதம்பர ரகசியம் என்பது இதைத்தானொ.........

என்ன லக்கி லுக்

உங்களுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டதா?

என்னால் நம்பவே முடியவில்லை.......... :lol:

நான் பகுத்தறிவாளன் தான்.... ஆனாலும் நண்பர்களோ, குடும்பத்தினரோ செல்லும்போது கோயிலுக்கு செல்லுவதுண்டு....

சிதம்பரம் கோயிலில் இன்னொரு அநியாயம்.... ஆண்கள் எல்லாரையும் சட்டையைக் கழற்ற சொல்கிறார்கள்.... எதற்கு என்று புரிகிறதா?

கவனிப்பு வேறு வேறு மாதிரி இருக்கிறது.... :cry:

  • கருத்துக்கள உறவுகள்

யானைக்கும் அடிசருக்கும்

இதற்கு தான் இந்தியா தொலைக்காட்சியில் வேறு நாடுகளில் இருந்து வருபவர்கள் எமது நண்பர்கள். அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள் என்று விளம்பரம் கொடுக்கின்றார்களா?

நல்லதொரு அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

எட தங்கர் பச்சானின் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி என்ற படத்தின் விமர்சனம் என்று நினைச்சு பாக்கமால் விட்டேன். கடவுள் பெயரில் செய்யும் கூத்துக்களினைக் கேக்க சகிக்கமுடியவில்லை. சிதம்பரத்துக்குப் போனால் புண்ணியம் என்று படித்திருக்கிறேன். இப்பதான் விளங்குது சிதம்பரத்துக்குப் போனால் அர்ச்சகர்களுக்குத்தான் புண்ணியம்

  • தொடங்கியவர்

கந்தப்புவின்ர ஆச்சிக்கு ஒரே யோசினை,

கடலுக்க போன மனுசன் அப்பிடியே போக்கறந்து போயிருக்கலாம் தானே, ஏன் திரும்பிவந்தது.....

  • தொடங்கியவர்

அனுபவத்தை வாசித்த லக்கி லுக், அஜீவன், புத்தன்,ரமா, கந்தப்பு விற்கு என் நன்றிகள்.

prayers.jpg

கோயில்களுக்கு செல்வதே

மனதில் உள்ள பாரங்களை

ஆண்டவனிடம் இறக்கி வைத்து விட்டு வரவேண்டுமென்ற எண்ணத்தில்தான்...........

ஆனால்

காசேதான் கடவுளடா என

பலர் கோயில்களை நிர்வகிப்பதால்

போனதை விட மனப்பாரத்தோடு

பக்தர்கள் திரும்பி வர வேண்டியுள்ளது..........

இதில்

திருப்பதி வெங்கடாசலபதி

கோயில் பரவாயில்லை........

நாமாக ஏதாவது கொடுத்தாலன்றி

யாரும் பறிப்பதில்லை என்றே கருதுகிறேன்.

நான் இந்தியா போனால்

மன அமைதிக்காக

இரு நாட்கள் திருப்பதியில் தங்குவேன்........

ஒரு நாள் தரிசனம்

அடுத்த நாளில் திருப்பதியை சுற்றியிருக்கும்

கோயில்களை ஒரு வாகனத்தை

வாடைக்கு அமர்த்திக் கொண்டு

தரிசிக்கச் செல்வேன்....

கொஞ்சம் ரம்யமாகவும்

மனதுக்கு நிம்மதியாகவும் இருக்கும்.

அரை நாள் வாகனத்துக்கான வாடகை 500 ரூபாய்வரைதான்..............

அஞ்ச வேண்டியதுமில்லை.

இவர்கள் தெலுங்காக இருப்பினும் தமிழ் பேசுவார்கள்.

தெலுங்கு தேசத்தில் நக்சலைட்டுகளின் பிரச்சனைகள் இருப்பதால்

கீழ் திருப்பதியில் இருந்து

மேல் திருப்பதிக்கு போகும் போதே

பாதுகாப்பு படை போவோரை சோதனையிடுகிறது.

அதில் கூட பெரிதாக கடுமையை பார்க்க முடியாது.

மற்ற இடங்களை விட

இங்கு நிர்வாகம் மட்டுமல்ல

பாதுகாப்பு - சுத்தம் - உணவு .........

இப்படி எத்தனையோ சிறப்புகளைக் காணலாம்.

தெலுங்கு தேசம் நன்றாகவே கோயிலை பராமரிக்கிறது.

திருப்பதி பற்றி அறிந்து கொள்ள:-

http://www.tirumala.org/

கானப்பிரபாவின் ஆக்கத்துக்கு நன்றி.....

உங்கள் பார்வைக்காக திருப்பதியின் சில புகைப்படங்களை இணைக்கிறேன்.

pict02776rv.jpg

திருப்பதி கோவிலின் இரவு நேரத் தோற்றம்.

pict02817vw.jpg

பக்கதர்கள் கோயிலின் வெளிப்பகுதியில் தீபமேற்றி வணங்கும் காட்சி

pict02946mr.jpg

திருப்பதி பற்றி தமிழில்........

pict03433wk.jpg

இலவச திருப்பதி பஸ் ( திருப்பதிக்குள்)

pict03274vm.jpg

pict03267ya.jpg

pict03465qo.jpg

சில நடை முறைகள் பற்றிய தகவல்கள்.....

pict03475sg.jpg

உணவக கட்டுப்பாட்டு விலைப் பட்டியல்........

pict03501lr.jpg

மேல் திருப்பதியில் இருந்து கீழ் திருப்பதி போக கட்டண அறிவித்தல்

pict03480wg.jpg

உதவிக்கான விசாரணை அலுவலகம்

  • தொடங்கியவர்

நல்ல படங்கள், நன்றி அஜீவன்.

-கானா பிரபா-

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்புவின்ர ஆச்சிக்கு ஒரே யோசினை,

கடலுக்க போன மனுசன் அப்பிடியே போக்கறந்து போயிருக்கலாம் தானே, ஏன் திரும்பிவந்தது.....

நீங்களுமா கானாபிரபா?

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல படங்கள், நன்றி அஜீவன்.

இலங்கையில் இருந்து 91ல் தமிழகத்துக்கு இடம் பெயர்ந்த பிறகு நான் 92ம் ஆண்டில் சிதம்பரம் கோவிலுக்கு சென்றிருந்தேன். சிதம்பரம் கோவிலில் சிதம்பர ரகசியம் பாக்க தூவாரத்தினுடாகப் பார்த்தேன். ஒரு ரகசியத்தினையும் காணவில்லை. சிதம்பரம் பேருந்து நிலையத்தில் நிக்கும் போது என்னுடன் வந்த மாமாவின் பொக்கேற்றுக்குள் ஒருவர் கைவிட்டு அவரது பேர்ஸினைத்திருட முயற்சிக்க, மாமா அவரது கையினைப்பிடிக்க, அவர் தன்னுடைய பொக்கேற் என்று நினைத்ததாகச் சொன்னார்.அருகில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கும் சென்றேன். தமிழ் கூட்டமைப்பு பாரளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தனும் எங்களுடன் வேறு ஒரு விசயமாக வந்திருந்தார்.

வட பழனி முருகன் கோவிலுக்கு 91ல் முதன் முதலாகச் சென்ற போது அங்குள்ள அட்சகர்கள் மற்றைய பக்தர்களினக் கவனிக்காது எம்மை நோக்கி ஒடிவந்து தங்கள் மூலமாக அட்சனை செய்யுமாறும் தங்களது தட்டத்தில் காணிக்கை செலுத்துமாறும் கேட்டார்கள். யாழ்ப்பாண அட்சகர்கள் உண்மையில் பாவம் என்று தான் அப்பொழுது நினைவுக்கு வந்தது.

சிதம்பரம்,திருப்பதி,திருக்கா

அரவிந்தன் திருவான்மியுர் கோவில் தற்போது திருப்பணி செய்யபட்டு நல்ல நிலையில் பராமரிக்க பட்டு வருகிறது

அரவிந்தன் திருவான்மியுர் கோவில் தற்போது திருப்பணி செய்யபட்டு நல்ல நிலையில் பராமரிக்க பட்டு வருகிறது

கடைசியாக 2003ல் தான் தமிழகம் சென்றிருந்தேன். அப்பொழுது தான் மருத்திஸ்வரர் ஆலயத்துக்கு சென்றிருந்தேன்.பத்திரிகையில

அந்த கோவில் 2004 ஆண்டு மே மாதம் குடமுழுக்கு நடந்தது, பின் தற்போது அருமையாக பராமரிக்க பட்டு வருகிறது. சென்ற ஆண்டு பெயத மழையில் கோவில் குளம் நிரம்பி தற்போதும் தண்ணிர் வற்றாமல் உள்ளது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.