Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையிடமிருந்து அதிக விடயங்களை கற்க வேண்டியுள்ளது: மாலைதீவு ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=2][size=4]maldivs1.jpg

(றிப்தி அலி)

இலங்கையிடமிருந்து தனது நாடு அதிக விடயங்களைக் கற்க வேண்டியுள்ளது என இலங்கை வந்துள்ள மாலைதீவு ஜனாதிபதி முஹம்மட் வாஹிட் ஹஸன் தெரிவித்தார்.

இந்தியா மற்று சீனா ஆகிய இரு நாடுகளை இராஜதந்திர ரீதியாக சிறந்த முறையில் கையாள்வது உள்ளிட்ட பல விடயங்களை இலங்கையிடமிருந்து கற்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு முதற் தடவையாக இலங்கை வந்துள்ள மாலைதீவு ஜனாதிபதி முஹம்மட் வாஹிட் ஹஸன், கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

"மாலைதீவில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கு இலங்கை உதவ வேண்டும். எவ்வாறாயினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரின் அரசாங்கம் எப்பொழுதும் மாலைதீவிற்கு உதவும் என நம்புகின்றேன்.

எனது விஜயத்தினை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு முன்னரை விட பல மடங்கு அதிகரிக்கும். இதன் ஊடாக பல சிறந்த விடயங்களை இரு நாடுகளுக்குமிடையில் மேற்கொள்ள முடியும்.

இலங்கைக்கான எனது முதலாவது விஜயம் மிகச்சிறந்த முறையில் அமைந்தது. இதன்போது, இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட அரச முக்கியஸ்தர்களுடன் சிறந்த முறையிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையில் உயர்க் கல்வி, வர்த்த முதலீடு மற்றும் குற்றவியல் ஆகிய துறைகளில் இணக்கம் காணப்பட்டுள்ளதுடன் மிக விரைவில் இரு நாடுகளுக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அத்துடன் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு இடையில் தற்போது இடம்பெற்று வருகின்ற விமான சேவை விரைவில் விஸ்தரிப்பு செய்யப்படவுள்ளது.

இந்த வருடத்திற்கு மாலைதீவு ஒரு மில்லியன் உல்லாச பிரயாணிகளின் எண்ணிக்கையை அடையவுள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் மாலைதீவில் ஏற்பட்ட நிலைமைகள் தற்போதில்லை.

அனைத்தும் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நான் பலவந்தமாக ஆட்சியை கைப்பற்றினேன் என்பது முற்றிலும் தவறானதாகும். நாட்டின் சட்டத்திற்கிணங்க ஜனாதிபதி பதவி விலகும் போது பிரதி ஜனாதிபதியாக இருந்தவர் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார்.

இதற்கிணங்க, மக்களினால் பிரதி ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட நான் முன்னாள் ஜனாதிபதி நஷீட்டின் பதவி விலகலை அடுத்து ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டேன்.

மாலைதீவின் அரசியலமைப்பிற்கிணங்க அடுத்த வருடம் ஜுலை மாதத்திலேயே ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். இததற்கினங்க எதிர்வரும் ஜுலை மாதத்திலேயே தேர்தல் நடத்தப்படும்.

இதற்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியப்பாடுகள் குறைவாகவே உள்ளன. எவ்வாறாயினும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவது நானல்ல. தேர்தல் ஆணையாளரே ஆவார்.

இதற்கிணங்க உரிய நேரத்தில் அவர் தேர்தலை நடத்துவார். இதற்கு முன்னர் நாட்டில் சிறந்த ஜனநாயகத்தையும் ஸ்திரதன்மையினையும் ஏற்படுத்த வேண்டும்" என்றார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் மாலைதீவு அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.(படங்கள்: பிரதீப் பத்திரன)

maldivs2.jpg

maldivs3.jpg[/size][/size]

[size=2][size=4]http://www.tamilmirr...4-15-51-33.html[/size][/size]

[size=4]இந்த சனாதிபதி முன்னர் உப சனாதிபதியாக இருந்து சனாதிபதியாக இருந்தவரை சதிப்புரட்சி ஊடாக கலைத்தவர். இவர் இந்தியாவின் ஆள் என்கிறது மேற்குலகம்.[/size]

[size=4]கலைக்கப்பட்டவர் இலங்கையில் தான் புகலிடம் தேடியவர். அவரை சீனாவின் ஆள் என்கிறது மேற்குலகம். [/size]

[size=4]யார் யாரிடம் எதை கற்பது ?[/size]

  • கருத்துக்கள உறவுகள்

முதலில மாலைதீவை கடல் விழுங்காமல் இருக்க ஒரு பாடம் படியுங்கோ. அப்புறம் இலங்கையிடம் இருந்து எப்படி மக்களை அழிக்கிறது என்று பாடம் படிக்கலாம்..! :rolleyes::(

முதலில மாலைதீவை கடல் விழுங்காமல் இருக்க ஒரு பாடம் படியுங்கோ. அப்புறம் இலங்கையிடம் இருந்து எப்படி மக்களை அழிக்கிறது என்று பாடம் படிக்கலாம்..! :rolleyes::(

[size=4]அதற்கு நெதர்லாந்து உதவ முன்வந்துள்ளதாம்.[/size]

[size=5]Floating islands to the rescue in the Maldives:[/size]

[size=5]a0020c9b473ca17277676d9757c1.jpg[/size]

c3e138f6469e84877b3f7666897d.jpg

The project is a joint venture between the Maldivian government and Dutch Docklands, a Holland-based firm that specializes in building everything from floating prisons to floating conference and hotel complexes and homes.

The 5 Lagoons Project — 80 million square feet — will include: a private islands project with $10 million villas; a floating 18-hole golf course with an undersea tunnel; a conference complex and hotel; 185 $1-million waterfront homes connected along a flower-shaped quay as well as a separate floating island with homes for residents of Malé, the country’s capital.

The first phase of the $1-billion project will go on sale later this year with other parts of the development to be started over the next two to five years. Privately financed, the project is a joint venture between the Maldivian government and Dutch Docklands.

http://www.thestar.com/news/world/article/1246405--floating-islands-to-the-rescue-in-the-maldives

[size=4]அதற்கு நெதர்லாந்து உதவ முன்வந்துள்ளதாம்.[/size]

என்ன கொடுமை அகூதா ....நேதேர்லாந்தே தண்ணீருக்குள் ஓர் நாள் மூழ்கும் என்பது நிச்சயம் ................அதுக்க மாலைதீவை காப்பாற்ற ............

இலங்கை இந்தியாவை, சீனாவை மட்டும் அல்ல ராஜதந்திர ரீதியாக கையாளுகிறது. மற்றைய பல நாடுகளையும் தான். உ+ம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மாலைதீவு.... இலங்கை இவருக்கு பாடம் எடுக்கும் நேரத்தில் இவர் "கோலோகிறாம் வாகிட்டையே" சந்திக்கும் சந்தர்ப்பமும் இருக்கிறது. எனவே நெருப்புடன் விளையாடும் பொது கவனமாக இருப்பாராக.

மேலும் அகத்தியர் தொல்காப்பியரையும், ராம்கிருஸ்ணர் விவேகானந்தரையும் தெரிந்தது போல் ராசபக்சாவும் புத்தரின் மகிந்த சித்தாந்தம் படிப்பிக்க சரியான சீடனை தெரிந்திருப்பாராக.

[size=2][size=4]மாலைதீவின் அரசியலமைப்பிற்கிணங்க அடுத்த வருடம் ஜுலை மாதத்திலேயே ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். இததற்கினங்க எதிர்வரும் ஜுலை மாதத்திலேயே தேர்தல் நடத்தப்படும்.

இதற்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியப்பாடுகள் குறைவாகவே உள்ளன. எவ்வாறாயினும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவது நானல்ல. தேர்தல் ஆணையாளரே ஆவார்.

இதற்கிணங்க உரிய நேரத்தில் அவர் தேர்தலை நடத்துவார். இதற்கு முன்னர் நாட்டில் சிறந்த ஜனநாயகத்தையும் ஸ்திரதன்மையினையும் ஏற்படுத்த வேண்டும்" என்றார்.[/size][/size]

அதன் பின்

"கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக"

வாழ்த்துக்கள்!!!

Edited by மல்லையூரான்

[size=4]அதற்கு நெதர்லாந்து உதவ முன்வந்துள்ளதாம்.[/size]

என்ன கொடுமை அகூதா ....நேதேர்லாந்தே தண்ணீருக்குள் ஓர் நாள் மூழ்கும் என்பது நிச்சயம் ................அதுக்க மாலைதீவை காப்பாற்ற ............

[size=4]காரணம் பணம், நிறையப்பணம் சம்பந்தப்பட்டது ![/size]

  • கருத்துக்கள உறவுகள்

இதோடா என்ன கத்துக்க போறாங்க?

எப்பிடி ஆதாரம் இல்லாம கொலை பண்ணுறது

வெள்ளைவான வைச்சு கடத்திறது

கற்பழிக்கிறது

எதிர்கட்சியினரை காசு கொடுத்து வாங்குவது

Arasa பணத்தை கொள்ளை அடிப்பது

அடிச்ச பணத்தை எப்பிடி பிரிக்கிறது

இதையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதாகப்பட்டது........மாசிக்கருவாடு மாலைதீவுக்கு சூடைமீன் ஸ்ரீலங்காதான் வல்லரசு....

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவினால் சிறிலங்காவில் கொள்ளையிடப்பட்ட மக்களின் பணம் மாலைதீவில் தானாம் முதலிடப்பட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.