Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் சீனா நிலைகொள்வதற்கு உதவும் இந்திய அரசு – செண்பகத்தார்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sep 7, 2012

இலங்கையில் சீனா நிலைகொள்வதற்கு உதவும் இந்திய அரசு – செண்பகத்தார்..!

முன்னாள் இந்திய வெளியுறவுச் செயலர் முச்குந்த் டுபே (Muchkund Dubey) மிக விரைவில் வெளியிடவிருக்கும் ஆய்வு நூல் பற்றிய செய்தியை மூன்று நாட்களுக்கு முன்பு (03.09.2012) இந்து ஒன்லைன் (Hindu Online) வெளியிட்டது. இந்த நூலின் தலைப்பு: இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மாறிவரும் உலகத்திற்கு ஈடுகொடுத்தல் (India’s Foreign Policy Coping with the Changing World) என்பதாகும்.

senpagathaar2.jpg

கிட்டத்தட்ட எல்லா அயல் நாடுகளில் இருந்தும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக முச்குந்த் டுபே சொல்கிறார். (India Faces Threats From Almost All Its Neighbours). இவர் இந்திய வெளியுறவுச் செயலர் பதவியில் இருந்து 1991ல் இளைப்பாறியவர். இந்தப் பதவிக்குரியவர் இந்திய வெளியுறவுகளுக்கான முதன்மை இராசதந்திரி ஆவார்.

இந்திய வெளிவிகார அமைச்சக அலுவலகத்தில் (Ministry of External Affairs office) வெளியுறவுச் செயலர்கள் (Foreign Secretary) நியமனம் பெறுகிறார்கள். இவர்கள் இந்திய வெளியுறவுச் சேவையில் (Indian Foreign Service – IFS) பணியாற்றும் அனுபவசாலிகள். இந்தப் பதவியை முதன் முதலாக வகித்தவர் கே.பி.எஸ்.மேனன் சீனியர் (K.P.S. Menon Snr)

இந்தப் பதவியை இப்போது வகிப்பவர் றஞ்சன் மத்தாயி (Ranjan Mathai). ஒரு சிலர் தவிர்ந்த இந்திய வெளியுறவுச் செயலர்கள் அனைவரும் கேரள மாநிலத்தோடு தொடர்புடையவர்கள். தமிழரான ஏ.பி.வெங்கடேஸ்வரன் பிரதமர் ராஜீவ் காந்தியால் பகிரங்கமாக அவமதிக்கப்பட்டுப் பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டார். அவருடைய பதவிக் காலம் 01.04.1986 – 20.01.1987.

வெளியிடப் போகும் நூலில் முச்குந்த் டுபே கூறும் செய்தி பின்வருமாறு. இந்தியாவின் ஸ்திரத்தன்மையைக் குலைப்பதற்கு சீனாவும் பாக்கிஸ்தானும் கங்கணம் கட்டி நிற்கின்றன. இந்தியாவின் வடகிழக்கை சீர்குலைப்பதற்கு வங்கதேசம் துணைபோகிறது.

அண்மைக் காலமாக வெளிவரும் இந்திய எதிர்காலம் பற்றிய ஆய்வு நூல்கள் தவறாமல் அபாயச் சங்கு ஊதுகின்றன.

எனது நண்பன் ராஜீவ் சிக்ரி (Rajiv Sikri) 2009k; Mz;L vOjpa E}ypy; (Challenge and Strategy; Rethinking India’s Foreign Policy. Rajiv Sikri. New Delhi. Sage 2009 Pages 317) இரண்டு முக்கிய விடயங்களை வலியுறுத்தினார்.

1) பாக்கிஸ்தானுடன் மிரட்டல் இராசதந்திர (Coercive Diplomacy) நடவடிக்கை எடுப்பதற்கு இந்தியாவுக்கு வலிமை இல்லை.

2) இந்தியாவும் சீனாவும் விரோதமான உறவைக் (Adversarial Relationship) கொண்டிருக்கின்றன. இதை ஒரு அளவுக்கு மேல் திருத்த முடியாது. (Cannot Be Rectified Beyond A Certain Point).

இந்தத் தொடர்பில் வெளியுறவுத் துறை பற்றி வெளிவந்த இன்னொரு முக்கிய ஆய்வு நூலைக் கருத்தில் எடுப்பது பயனுள்ளதாக அமையும். (India’s Foreign Policy. Old Problems and New Challenges. D.Suba Chandran and Jabin T. Jacob. Macmillan India. 2011) இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை பழைய பிரச்சனைகளும் புதிய சவால்களும் என்ற இந்நூல் மிகப் பரந்தளவு ஆய்வுப் புலத்தைக் கொண்டிருக்கிறது.

பனிப் போர் முடிந்த காலப் பகுதியில் இந்தியக் குடிமக்கள் அனைவரின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதற்கு இந்திய அரசு வெகு தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. அயல் நாடுகளுடனான வெளியுறவை அனைத்து இந்திய குடிமக்களும் ஏற்றுக் கொள்ளச் செய்யும் முயற்சியில் இந்தியா தோல்வி கண்டுள்ளது.

ஒவ்வொரு அயல் நாடுடனான இந்திய நாட்டின் உறவை ஆய்வு செய்யும் இந்த நூல் இலங்கை – இந்தியா உறவின் மையப் பொருளாக இனப் பிரச்சினை இருப்பதை உணர்த்துகிறது. இதையொத்த கருத்து என்.ஜெயபாலன் என்பார் எழுதிய ஆய்வு நூலிலும் காணப்படுகிறது. (Foreign Policy of India N. Jayapalan. Atlantic Books. New Delhi. 2001).

வெளியுறவுக் கொள்கை என்பது ஒரு நாட்டின் தேசிய நலனை முன்னெடுக்கும் கருவியாகக் கருதப்படுகிறது. உள்நாட்டுத் தேவைகளின் நீட்சியாக வெளியுறவுக் கொள்கை இடம் பெறுகிறது. வெளியுறவுக் கொள்கை உருவாக்கத்தில் நாட்டு மக்களின் கருத்துக்கள் கவனத்தில் எடுக்கப்படுகின்றன. நாட்டு மக்களின் ஒரு சாராருக்கு அதிருப்தியை ஏற்படுத்தும். வெளியுறவுக் கொள்கை தீய விளைவுகளை ஏற்படுத்தும். இவ்வாறு வெளியுறவுக் கொள்கை பற்றிப் பொதுவாகச் சொல்லப்படுகிறது.

2011ல் வெளிவந்த இந்திய வெளியுறவுக் கொள்கை சந்திக்கும் பழைய பிரச்சினைகளும் புதிய சவால்களும் என்ற நூலில் அயல் நாடுகளுடனான வெளியுறவை அனைத்து இந்திய மக்களும் ஏற்றுக் கொள்ளச் செய்வதில் இந்திய அரசு தோல்வி கண்டுள்ளது என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இது மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டு.

இந்தியா பல்லின, பன்மத, பன்மொழி நாடு. மத்திய அரசானது சமநிலை காக்கும் பொறுப்பை வகிக்க வேண்டும். இதில் இந்திய மத்திய அரசு தோல்வி கண்டுள்ளது. இந்தியாவின் 28 மாநிலங்களில் நிலப்பரப்பிலும் மக்கள் தொகையிலும் மிகச் சிறியதான கேரள மாநிலத்தவர்கள் இந்திய உள்நாட்டு வெளிநாட்டு கொள்கை வகுப்பில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

மத்திய அரச நிர்வாகத்தில் மொத்தம் 38 பிரதம செயலாளர்கள் கேரளாக்காரர்களாக இருக்கின்றனர். இந்திய நாடாளுமன்றத்திற்கு மொத்தம் 20 உறுப்பினர்களை மாத்திரம் அனுப்பும் கேரள மாநிலத்தவர்களில் 5பேர் நடுவன் அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளனர். அது மாத்திரமல்ல ஆளும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி வீட்டுச் சமையற்காரர்கள் தொடக்கம் பாதுகாவலர்கள் வரை அதே மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.

பாராளுமன்றத்திற்கு அப்பாற்பட்ட வலுவான சக்தியாகவும் வெளியுறவுக் கொள்கையை உருவாக்கி முன்னெடுப்பவர்களாகவும் இந்த மலையாளிகள் இடம்பெறுகின்றனர். இவர்கள் முன்னெடுக்கும் இலங்கை தொடர்பான கொள்கை இந்திய தேசிய நலனுக்குப் பொருத்தமாக அமையவில்லை. அதே சமயத்தில் இவர்கள் வகுத்து முன்னெடுக்கும் இலங்கை தொடர்பான கொள்கை ஆறுகோடி தமிழர்கள் வாழும் தமிழ் நாட்டை அந்நியப் படுத்தியுள்ளது.

உள்நாட்டுப் பாதிப்பு அவ்வாறு இருக்கும் போது இலங்கை தொடர்பாக இந்தியா இதுவரை முன்னெடுக்கும் வெளியுறவுக் கொள்கை முழு இந்தியாவின் பாதுகாப்பிற்கு நிரந்தரமான கேடு விளைவித்துள்ளது. தனது கணவனின் உயிரிழப்பிற்காக வஞ்சம் தீர்க்கும் நோக்கில் விடுதலைப் புலிகளின் தலைமையை அழிக்க உதவிய காங்கிரஸ் கட்சித் தலைவியும் அவருடைய மலையாளி ஆலோசகர்களும் அதன் பின்விளைவை உணராமல் இலங்கைத் தீவில் சீனா வலுவாகக் காலூன்ற வகை செய்துள்ளனர்.

இலங்கை அரசு போரில் வெற்றி அடைவதற்கும் விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்படுவதற்கும் பின்னால் இருந்து செயற்பட்டது இந்தியா தான். தமிழீழ நடைமுறை அரசை அழிக்க உதவியதன் மூலம் இலங்கையில் நிலவிய வலுச் சமநிலையை இந்தியா ஒழித்துக் கட்டித் தனக்குத் தானே ஆபத்தைத் தேடிக் கொண்டது.

விடுதலைப் புலிகளின் தலைமையில் தமிழீழ மக்கள் தனி அரசாகச் செயற்படும் வரை இலங்கை அரசிற்கு இந்தியாவை அனுசரித்துப் போக வேண்டிய தேவை இருந்தது. அந்தத் தேவையை இல்லாமற் செய்த இந்தியா, இலங்கை அரசுக்கு இஷ்டம் போல் செயற்படும் வாய்ப்பை அளித்துள்ளது.

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்பது வரலாற்று யதார்த்தம். இலங்கை இந்தியாவை எதிர்க்கும் அளவுக்கு அதே இந்தியாவின் உதவியுடன் வலுப்பெற்றுள்ளது. 2007, 2008 ஆண்டுகளில் விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தில் இருந்து புதுடில்லி வெளிவிவகாரச் செயலகத்திற்கு இரண்டிற்கும் மேற்பட்ட இராசதந்திரக் கடிதங்கள் வந்து சேர்ந்தன.இலங்கையில் நிலவும் வலுச் சமநிலையை அழிக்க உதவாதீர்கள், அது உங்களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் என்று அந்தக் கடிதங்கள் கூறின. தனிப்பட்ட உணர்ச்சிகளுக்கு இடமளிக்காமல் தேசிய நலன் நோக்கில் அணுகுங்கள் என்ற கோரிக்கை அவற்றில் விடப்பட்டன.

தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன், வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனன் ஆகிய இருவரும் இந்தக் கடிதங்களை நிராகரித்தனர். அவர்கள் ஈழத் தமிழர் விரோதப் போக்கைக் கடைப்பிடித்ததோடு ஏற்கனவே குருதிக் கறை படிந்த இந்தியாவின் கரங்களை மேலும் கறைபடியச் செய்தனர். இலங்கை தொடர்பாக மிரட்டல் இராசதந்திரத்தை முன்னெடுக்க இந்தியாவால் முடியாது. இந்தியா கையறு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவின் தயவு இலங்கைக்கு இனித் தேவையில்லை. இலங்கையின் கடிவாளம் சீனாவின் கைகளுக்குள் அடக்கமாகி விட்டது வேறு விடயம். இலங்கையின் குரல் இனிமேல் சீனாவின் குரலாகவே ஒலிக்கும்.

அண்மையில் நடந்த சென்னைக் கருத்தரங்கில் அமெரிக்காவுக்கு இஸ்ரேயில் போல் இந்தியாவுக்குத் தமிழீழம் பக்கபலமாக இருக்கும் என்ற கருத்தை ஒரு பேச்சாளர் முன்வைத்தார். இந்தியா முயற்சி செய்தால் காலங்கடந்தாலும் துணிந்து களமிறங்கி இலங்கைத் தீவில் தனக்குத் தோள் கொடுக்கும் தமிழீழத்தை உருவாக்க முடியும்.

நன்றி - பதிவு

2007, 2008 ஆண்டுகளில் விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தில் இருந்து புதுடில்லி வெளிவிவகாரச் செயலகத்திற்கு இரண்டிற்கும் மேற்பட்ட இராசதந்திரக் கடிதங்கள் வந்து சேர்ந்தன.இலங்கையில் நிலவும் வலுச் சமநிலையை அழிக்க உதவாதீர்கள், அது உங்களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் என்று அந்தக் கடிதங்கள் கூறின. தனிப்பட்ட உணர்ச்சிகளுக்கு இடமளிக்காமல் தேசிய நலன் நோக்கில் அணுகுங்கள் என்ற கோரிக்கை அவற்றில் விடப்பட்டன.

தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன், வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனன் ஆகிய இருவரும் இந்தக் கடிதங்களை நிராகரித்தனர். அவர்கள் ஈழத் தமிழர் விரோதப் போக்கைக் கடைப்பிடித்ததோடு ஏற்கனவே குருதிக் கறை படிந்த இந்தியாவின் கரங்களை மேலும் கறைபடியச் செய்தனர்.

[size=4]இந்தியாவின் பாதுகாப்பை தமிழர் அழிவால் மேலும் பலவீனமாக்கிய சரித்திர பதிவு இது.[/size]

இலங்கை அரசு போரில் வெற்றி அடைவதற்கும் விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்படுவதற்கும் பின்னால் இருந்து செயற்பட்டது இந்தியா தான். தமிழீழ நடைமுறை அரசை அழிக்க உதவியதன் மூலம் இலங்கையில் நிலவிய வலுச் சமநிலையை இந்தியா ஒழித்துக் கட்டித் தனக்குத் தானே ஆபத்தைத் தேடிக் கொண்டது.
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய காங்கிரஸ் சோனியாவின் குடும்பத்தின் கையிலிருந்து

ஒரு உண்மையான இந்தியனின் கைகளுக்கு மாறவேண்டும்.

அதுவரை ஈழத் தமிழருக்கு மட்டுமல்ல அது இந்தியாவிற்கே ஆபத்தானது

இணைப்பிற்கு நன்றி நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்

இது நடைபெற வேண்டுமென்றால் காங்கிரஸ் கும்பல் அடியோடு துரத்தப்பட வேண்டும்..!!

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு விசர்.

யாழ் சர்வதேச அரசியல் ஆய்வாளர் எய்யும் அம்புகள் இந்தியா இனிதான் நல்லை வளரும் அதுதான் புலிகளை அளித்தார்கள் என்று சொல்கிறார்.

சீனா வந்துவிடுவான் என்றுதானே புலிகளை அழிக்கத் துணைபோனார்கள். இப்போ கையைப் பிசைந்துகொண்டிருக்கிறார்கள். ஐயோ எந்தத் தமிழனாவது ஒரு துவக்கைத் தூக்க மாட்டானா? இப்படியெல்லாம் அவர்களுக்கு நினைக்கத் தோன்றும் .ஆனால் என்ன செய்வது. சீனா வருவதுதான் நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.