Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இதோடோ தலைவுரு பெரிய உண்மையைச் சொல்லிட்டாரு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசுதான் எமக்கு ஆயுதம் வழங்கியது: அமைச்சர் டக்ளஸ்

dakk.jpg1986ஆம் ஆண்டு சென்னையில் கலகம் விளைவித்ததாகவும் ஆயுதம் வைத்திருந்ததாகவும் மட்டுமே என்மீது தேவையில்லாமல் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த ஆயுதங்களை எங்களுக்கு இந்திய அரசுதான் வழங்கியிருந்தது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார்.

1986ஆம் ஆண்டு சூளைமேடு கொலைச் சம்பவத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தேடப்படும் குற்றவாளியாக சென்னை நீதிமன்றம் அறிவித்துள்ளமை தொடர்பில் அமைச்சரிடம் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் மேற்படி கூறினார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்தும் தமிழ்மிரருக்கு கூறுகையில்...

'என்மீது கொலைக் குற்றச்சாட்டுகள் இல்லை. கலகம் விளைவித்ததாகவும் ஆயுதம் வைத்திருந்ததாகவுமே குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அதாவது இந்திய சட்டப் பிரிவில் ஈபிகோ 148ஆம் பிரிவின் கீழேயே என்மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. கொலைக் குற்றம் என்பது ஈபிகோ 302. அரசியல் காரணங்களை வைத்துக்கொண்டு என்மீது தேவையில்லாமல் வீண் பழி சுமத்தப் பார்க்கிறார்கள்.

ஆயுதம் வைத்திருந்ததாக கூறுகிறார்கள். உண்மை என்னவெனில் அந்த ஆயுதங்களை எங்களுக்கு வழங்கியதே இந்திய அரசுதான். எங்களுக்கு மட்டுமல்ல அனைத்து இயக்கங்களுக்கும் ஆயுதங்களை வழங்கியது இந்திய அரசுதான். எங்களிடம் ஆயுத பலம் அந்நேரத்தில் இருக்கவில்லை. இந்நிலையில் எங்களுக்கு ஆயுதங்களை வழங்கி எம்மை ஊக்குவித்தது இந்திய அரசுதான்.

நிலைமை இப்படி இருக்கையில்தான் என்மீது அரசியல் காரணங்களுக்கான தேவையில்லாமல் கொலை குற்றச்சாட்டினை சுமத்தியிருக்கிறார்கள். இதற்கு ஆட்சேபம் தெரிவித்து நாங்கள் மேன்முறையீடு செய்துள்ளோம்.

இந்த சூளைமேடு விவகாரம் தொடர்பாக பலமுறை விளக்கம் அளித்துவிட்டோம். குற்றப் பத்திரிகையில்கூட, கொலையுண்ட இளைஞனை வாகனத்தில் கொண்டு செல்லும்போதே நான் அவ்விடத்திற்கு வந்ததாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்படியிருக்கையில் என்னை கொலைகாரனாக சித்திரிப்பது எவ்வகையில் நியாயமானது? நான் அறிந்தமட்டில் அக்கொலை நடைபெற்ற இடத்தில் இருந்தவர்கள் - இன்று இங்கு அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை விட்டுவிட்டு என்மீது மட்டும் குற்றம் சாட்டுவது ஏனென தெரியவில்லை.

இந்திய நீதிமன்றிற்கு தேவைப்படின் சட்டர்லைட் வீடியோ தொடர்பாடல் முறையில் என்னுடைய கருத்துக்களை பகிர்ந்துகொள்ள நான் எப்பொழுதும் தயாராகவே இருக்கிறேன். அரசியல் ஆதாயம் தேடுவதற்காக மீண்டும் மீண்டும் என்மீது பழிபோடுவதை இவர்கள் நிறுத்த வேண்டும் என்றும் கோருகிறேன்' என்று கூறினார்.

http://www.tamilmirr...1-11-28-55.html

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அதற்காக நீங்கள் சூளைமேட்டில் உள்ள அப்பாவி இளைஞனை சுடலாமா ?

அல்லது ஈழத்தில் அப்பாவிகளை கொல்லலாமா ?

[size=4]துப்பாக்கியை / ஆயுதத்தை தந்தவர்களையும் வழக்கில் சேர்த்துவிடுவது தான் நியாயம் :) [/size]

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சரியாகத்தானே சொல்கிறார்

ஒன்றும் தெரியாதவனிடம ஆயுதத்தை கொடுத்தது யார் தப்பு?

அதன்பின் சுட்டு சுட்டுவிட்டாய் என்று குற்றம் சொன்னால் அவருக்கு கோபம் வராதா?

அவரும் மனிதன் தானே...........???? :lol:

குத்தியனுக்கு எப்பவும் தமாஸ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலி இருந்த போது குத்தியனை கொண்டாக இரண்டு வீடு இருந்தது. இப்போது குத்தியனின் தேவை இல்லாமல் போனதும் புதிதான இந்திய எதிர்ப்பு விசுவாசம் காட்டி சிங்களவனை கொண்டாடி பிழைக்கின்றதே ஒரே வழி ஆகின்றது!

கடத்தல், கப்பம், கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு ரவுடி டக்ளசின் கனவில் கிழக்கு மாகாண முடிவுகள் மண்ணைத் தூவியிருக்கும்! அத்துடன் தமிழக வழக்கில் இந்தியப் பயங்கரவாதிகளின் மெத்தனத்தால் நொந்து போயிருப்பார்! அதுதான் பிதற்ற தொடங்கியுள்ளார்!

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் வழக்குப் போடுவதும் நீங்கள் எதிர்ப்பு அறிக்கை விடுவதும் காலம்

காலமாக நடக்கின்ற விடயம் தானே.

இரண்டு தரப்பும் மக்களுக்குப் பூச்சாண்டி காட்டுகின்றனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனாலும் ஆள் சுழியன். நிலமட்டத்திற்கு மேலே தான் படுக்கின்றவன் .

மனநோய் என்பது ஒரு இயல்பான வாழ்கைக்கு தேவையான அடிப்படை நிம்மதி இல்லாமல் போன போது ஒரு மனிதனில் இடம்பிடிக்கின்ற ஒரு நோயாகின்றது!

பணம் தொலைத்தவன் இந்நோய்க்கு ஆளாகும் போது எவர் பிரசினையிலும் வலியத் தலையீடு செய்து பணம் தொலைந்துவிடும் கவனம், கவனம் என்பான்!

அதாவது அவன் கதைக்கின்ற வரிகள் அந்த இடத்திற்கு துளியேனும் பயனபாடு அற்றதாயினும் அவன் நோயின் வலியின் சாட்சியாகவாவது அவை இருக்கும்!

இவ்வாறே அர்யுனனுக்கும், வீடு-நிம்மதி-மனைவி-படுக்கை என்ற சொற்கோவையில் பிரச்சினை உள்ளதன் சாட்சியாக இதை நாம் ஏற்கவேண்டும்!

இந்த அறிவு சிரஞ்சீவி அளப்பது அனைத்தும் இப்படி உள்காயங்களின் அர்த்தம்தான் தோய்ந்து விளங்கும்!

முதலில் தேவானந்தா தான் சொல்ல விரும்புவதை சொல்ல இலனகை அரசு, இந்திய மத்திய, மாநில அரசுகள் எல்ல வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும். இது கொலை வழக்கு. அவர் தன்னை பாதுகாக்க மேற்கு நாடுகளில் பல பாதுகாப்புகளை எடுக்க முடியும். எனவே அவர் சொல்வதை சென்னை கோடுகள் கேட்க வேண்டும். அந்த தொலைகாட்சியை பொதுமக்கள் பார்க்க அனுமதிக்க வேண்டும். வழக்கு முறையாக நடந்தால் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களும் முறையாக சாட்சியம் அளிக்க முடியும்.

[size=6]Tamil Nadu government adopts tough stand against Sri Lankan minister[/size]

[size=5]Adopting a tough stand against Douglas Devananda, a Sri Lankans minister facing a murder case in Chennai since 1986, the Tamil Nadu government has said he must come to court and face trial. Responding to the Lankans minister's offer to face trial through video-conferencing, the state represented by the Aminjikarai and Choolaimedu police station accused Douglas of attempting to win a favourable order in court by misrepresentation and deceit.

Doubting Douglas' claim that he was Anandan alias Douglas Devananda, the police counter filed by additional city public prosecutor M Prabhavathy, said: "The accused Anandan was arrested in the year 1986, now Douglas Devananda claims that he is the said Anandan who is holding a constitutional seat now."[/size]

http://timesofindia....ow/16368387.cms

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அக்கூதா.

மேலும்....

பிராந்திய ரீதியில் செய்த ஒரு கொலையையே மூடி மறைக்க பொய் சொல்லுறவர் எல்லாம் தமிழ் மக்களின் தலைவர். அவருக்கு வக்காளத்து வாங்கவும் நம்ம யாழில ஆக்கள்..! அப்ப நம்ம யாழில உள்ள சிலர் எப்படிப்பட்ட ஆக்கள் என்பதையும் நாங்கள் சரியா தெரிஞ்சு வைச்சிருக்கிறது நல்லம்..! மேலும் இவரோட தொடர்பு வைத்துள்ள... எம் ஜி ஆரோட ஒப்பிட்ட காங்கிரஸ்.. தி மு க காரர்களையும் பிடிச்சு உள்ள போடனும்..!

Unless he presents himself before the court and is properly identified, there is every possibility of miscarriage of justice, the police said, adding that Douglas had not stated any valid reason as to what prevented him from appearing before the court all these years, Prabhavathy said.

[size=5]Pointing out that Douglas had not mentioned the fact that he was facing murder charges as well, the counter said it was an attempt to make the court to believe that he faced only trivial charges[/size], and thereby obtain anticipatory bail. It also pointed out that on December 8, 2010 the Madras high court had confirmed the order of a sessions court declaring him as a proclaimed offender on June 30, 1994. He last appeared in the court in March 1990 and since then absconding, it said. The judge has posted the matter to September 20 for further hearing.

http://timesofindia....ow/16368387.cms

Edited by nedukkalapoovan

தமிழ்நாட்டு அரசு, இலங்கை- இந்திய மத்திய அரசின் முறுகல் நிலையை வைத்து தேவானந்தாவை சுதந்திரமாக கதைக்க வைக்க வேண்டும். மத்திய அரசை அழுத்தி இண்டர்போல் மூலமாக தேவானந்தாவை சென்னை வரவழைக்க வைத்தால் இலங்கை-மத்திய அரசு கூடி வழக்கை சோடித்த வழக்காக மாற்றம் செய்து விடுவார்கள். இதில் தேவானந்தா முழுதாக தப்பி திரும்பி வருவார். அப்படி இல்லாவிட்டாலும் அவர் ஒரு தனிமனிதன், அவர் மட்டும் சிறையை சந்திக்கலாம்.

இப்போது அதிகாரம் குறைந்து வரும் அவரின் முடிவுகள் அந்தரத்தில் இருக்கிறது. இந்த நிலையில் தேவனந்தா இந்திய அரசுக்கு எதிராக வாக்கு மூலம் கொடுக்க தயாராக இருக்கிறார். இதை தமிழ் நாட்டு கோடுகள் முதலில் அதை பொதுமக்கள் கேட்க இடமளிக்க வேண்டும். இதில் வழக்கை திரிக்க தமிழ்நாடு அழுதப்படும் சந்தர்ப்பம் குறைவு. தேவானந்தா கோடுகளை அவமதித்ததிற்கு தன்னும் சிலநாட்கள் தணடணை அனுபவிப்பார். ஆனாலும் இதில் தேவானந்தாவை ஓடவிட்டுவிட்டு இந்திய அரசு மீது போர்குற்றங்கள் சுமத்த தேவானந்த முன்வந்தால் அதை தமிழ்நாட்டு கோடுகள் பதிவுசெய்து ஐ,நவுக்கு கொட்டுக்க முன்வரவேண்டும். அது இறால் போட்டு சுறாப்பிடிப்பது போன்றது.

அடுத்த தவணையில் கோடு முதலில் அவரிடம் தொலைக்காட்சி வாக்கு மூலம் பெறவேண்டும். இதை பகிரங்கமாக செய்வது உலகம் முழுக்க ஒரு பிரசாரமாக அமையும்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.