Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெற்றிலைக்கேணியில் டோரா தாக்கியழிப்பு

Featured Replies

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் சிறிலங்கா கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் சிறிலங்கா கடற்படையின் டோரா தாக்குதல் படகு ஒன்று தாக்கியழிக்கப்பட்டுள்ளது.

இன்று பகல் இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.

இத்தாக்குதல் சம்பவத்தை அடுத்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள நாகர்கோவில் பகுதியை நோக்கி சிறிலங்கா இராணுவத்தினர் தொடர்ச்சியாக ஆட்லறி எறிகணைத் தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்.

நன்றி: புதினம்

தற்போதய தகவலின் படி இரண்டு டோராப் படகுகள் அழிக்கப்பட்டுள்ளன.அத்தோடு துருப்புக்களைக் காவிச் செல்லும் கப்பலொன்று ஐனூறு துருப்புக்களுடன் முடக்கப் பட்டு தாக்குதலுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

யாரங்கே!!

இச் சந்தோசமான செய்தியைப் பகிந்த மோகனுக்கும், நாரதருக்கும் பரிசில்கள் வழங்குங்கள்!

கடலிலே காவியம் படைக்கும் போராளிகளுக்கு வாழ்த்துக்கள்!!

தற்போதய தகவலின் படி இரண்டு டோராப் படகுகள் அழிக்கப்பட்டுள்ளன.அத்தோடு துருப்புக்களைக் காவிச் செல்லும் கப்பலொன்று ஐனூறு துருப்புக்களுடன் முடக்கப் பட்டு தாக்குதலுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறது.

700 துருப்புகளுடன் உள்ள கப்பல் என்று

அறியவருகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

700 துருப்புகளுடன் உள்ள கப்பல் என்று

அறியவருகிறது.

துருப்புகளின் எண்ணிக்கை 350 என்றுதான் சொல்லப்படுகிறது 500 அல்லது 700 என்பதாக செய்தி வந்த இணைப்புகளை வழங்கமுடியுமா? துருப்புக்காவி சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாகவ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

The Tigers were also firing at a ferry transporting some 700 troops from the northeastern port of Trincomalee to the northern peninsula of Jaffna, official sources said.

http://news.yahoo.com/s/afp/20060511/wl_st...ir_060511131245

துருப்புகளின் எண்ணிக்கை 350 என்றுதான் சொல்லப்படுகிறது 500 அல்லது 700 என்பதாக செய்தி வந்த இணைப்புகளை வழங்கமுடியுமா?

TTN தொலைக்காட்சி செய்தி அறிக்கையில் தான் அறிந்தேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதமான செய்தி தந்த மோகனுக்கு நன்றிகள்

இது பதிவிலிருந்து சுட்டது

இரு டோரா மூழ்கடிப்பு: 600 கடற்படையினர் கடற்புலிகளால் சுற்றிவளைப்பு.

வடமராட்சி கிழக்கு குடாரப்பு கடற்பரப்பில் டோரா அதிவேகப் பீரங்கிப் படகுகள் இரண்டு கடற் புலிகளினால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. தமிழீழ நேரம் மாலை 3 மணிக்கும் 4மணிக்கும் இடையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சிறீலங்கா கடற் படையினருக்கம் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிர மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது சிறீலங்கா கடற்படையினரின் இரு டோரா அதிவேக பீரங்கிப் படகு மூழ்கடிக்கபட்டுள்ளதாக வன்னிச் செய்திகள் தெரிவிக்கின்றன.

600 சிறீலங்காப் படையினரை ஏற்றிச் சென்ற கப்பல் விடுதலைப் புலிகளால் சுற்றிவளைக்கப்பட்டு உக்கிரமான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இதன்போதே 600 பேரை ஏற்றிவந்த கடற்படையினருக்கு பாதுகாப்பு வழங்கிய படகுகளே தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.

இரு டோராவில் இருந்து 20 க்கு மேற்பட்ட கடற்படையினரின் நிலை என்னவென்று தெரியாது. இவர்களுடன் பயணித்த கண்காணிப்புக்குழு உறுப்பினர் நிலை என்னவென்று தெரியாது.

இதனை அடுத்து நாகர்கோவில் படைத்தளத்திலிருந்து ஆட்டிலறி தாக்குதல்களை தொடர்ந்து கண்மூடித்தனமாக படையினர் நடத்திவருகின்றனர்.

இதை நான் நம்பமாட்டேன்! நம்பமாட்டேன்! கீழ இருக்கிற செய்தியைதான் நான் நம்புவேன்!

கடற்புலிகளை வெல்லும் பலம் சிறிலங்கா கடற்படைக்கு உள்ளது: கொழும்பு ஊடகம்

[சனிக்கிழமை, 6 மே 2006, 18:45 ஈழம்] [கொழும்பு நிருபர்]

தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை முறியடித்து கடல் பலத்தையும் பாதுகாப்பினையும் தக்கவைத்துக் கொள்ளும் ஆற்றலும் சக்தியும் சிறிலங்கா கடற்படையினரிடம் இருப்பதாக கடற்படை அதிகாரி தெரிவித்துள்ளார் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தி விவரம்:

யுத்த நிறுத்த ஒப்பந்தம் செயற்படுத்தப்பட்ட நாளிலிருந்து விடுதலைப் புலிகளின் இலக்காக சிறிலங்கா கடற்படையே உள்ளது.

ஆயுதப் போக்குவரத்து, கடற்புலிகளின் பயிற்சி, கடற்பயணங்கள் உட்பட கடல் செயற்பாடுகள் தொடர்பாக கடற்படையே அவர்களுக்கு பிரதான தடங்கலாக அச்சுறுத்தலாக மற்றும் சவாலாக உள்ளது.

கடற்படையினர் மீது விடுதலைப் புலிகள் கடலில் மட்டுமின்றி தரையிலும் தொடர்ச்சியாக தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடல் தாக்குதல்களுக்கு வெற்றிகரமாக முகம் கொடுத்து வெல்லக்கூடிய திறமையும் பலமும் சிறிலங்கா கடற்படையினரிடம் இருப்பது குதிரைமலை கடற்பரப்பில் நடைபெற்ற மோதலில் உறுதியாகியிருப்பதாக அந்த கடற்படையதிகாரி தெரிவித்துள்ளதாக அப் பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இதை நான் நம்பமாட்டேன்! நம்பமாட்டேன்! கீழ இருக்கிற செய்தியைதான் நான் நம்புவேன்!

:lol::lol::lol:

இதுவரை ஐம்பது கடற்படையினர் இறந்து விட்டதாக சிறிலங்கா கடற்படை வட்டாரங்கள் கூறியதாக பிபிசி தகவல்.

யாழ். வடமராட்சி கிழக்கில் சிறிலங்கா கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் இடையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற மோதலில் சிறிலங்கா கடற்படையின் இரு டோரா தாக்குதல் படகுகள் தாக்கியழிக்கப்பட்டுள்ளன. கடற்படைக் கப்பலில் இருந்த 350 கடற்படையினர் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலையிலிருந்து 350-க்கும் மேற்பட்ட சிறிலங்கா கடற்படையினரை வேறு பகுதிகளுக்கு கப்பலில் அனுப்பிய போது போது தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்படையின் 20-க்கும் மேற்பட்ட படகுகள் சுற்றிவளைத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடற்படையின் கப்பலுக்குப் பாதுகாப்பாக வந்த இரு படகுகளும் பருத்தித்துறையில் மாலை 5 மணி அளவிலும் அதன் பின்னர் வெற்றிலைக்கேணி பகுதியில் மாலை 5.15 மணியளவிலும் அழிக்கப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதலின் போது கடற்படையின் படகில் கண்காணிப்புக் குழு உறுப்பினர் ஒருவரும் இருந்துள்ளார்.

இத்தாக்குதல் சம்பவத்தை அடுத்து திருமலை, யாழ். மற்றும் கிளிநொச்சிப் பகுதிகளில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிங்கள முப்படைகள் தாக்குதல் நடத்தின.

நன்றி புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடுப்புக்கு நன்றி வாசன்.

அந்தக் கண்காணிப்புக் குழு உறுப்பினரை மட்டும் தப்பிப்போக விடுங்கோ பாவம். திரும்பத்திரும்ப சொல்லியும் யோசிக்காமல் போயிருக்கு.

தொடுப்புக்கு நன்றி வாசன்.

அந்தக் கண்காணிப்புக் குழு உறுப்பினரை மட்டும் தப்பிப்போக விடுங்கோ பாவம். திரும்பத்திரும்ப சொல்லியும் யோசிக்காமல் போயிருக்கு.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/4762105.stm

Dozens dead in Sri Lanka clashes

At least 45 sailors and Tamil Tiger rebels are feared dead after a sea battle in northern Sri Lanka.

........

Two monitors on board the vessel were not harmed.

.........

தொடுப்புக்கு நன்றி வாசன்.

அந்தக் கண்காணிப்புக் குழு உறுப்பினரை மட்டும் தப்பிப்போக விடுங்கோ பாவம். திரும்பத்திரும்ப சொல்லியும் யோசிக்காமல் போயிருக்கு.

தாங்கள் தப்புவதற்காக கண்காணிப்பு குழு உறுப்பினர்

உள்ள இருக்கிறார் என்று ரீல் விடுகினமோ தெரியாது..

:P

  • தொடங்கியவர்

புலிகளால் சுற்றிவளைக்கப்பட்ட 700 படையினர் சர்வதேச கடல்பரப்புக்கு நகர்ந்தனர்!

[வியாழக்கிழமை, 11 மே 2006, 19:24 ஈழம்] [ச.விமலராஜா]

யாழ். வடமராட்சி கிழக்கில் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் இடையில் இன்று வியாழக்கிழமை நடந்த மோதலில் கடற்படைக் கப்பலில் இருந்த 710 கடற்படையினர் சுற்றி வளைக்கப்பட்டனர். அவர்கள் தற்போது சர்வதேச கடற்பரப்பில் நுழைந்திருப்பதாக போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் கொழும்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

திருகோணமலையிலிருந்து 700-க்கும் மேற்பட்ட சிறிலங்கா கடற்படையினரை வேறு பகுதிகளுக்கு கப்பலில் அனுப்பிய போது போது பருத்தித்துறையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்படையினர் 20-க்கும் மேற்பட்ட கடற்படைப் படகுகள் சுற்றி வளைத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடற்படையின் கப்பலுக்குப் பாதுகாப்பாக வந்த இரு படகுகளும் பருத்தித்துறையில் மாலை 5 மணியளவிலும் அதன் பின்னர் வெற்றிலைக்கேணி பகுதியில் மாலை 5.15 மணியளவிலும் அழிக்கப்பட்டுள்ளன.

டோராப் படகு ஒன்றிலிருந்த 15 முதல் 20 வரையிலான கடற்படையினர் கொல்லப்பட்டிருப்பதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு சிறிலங்கா இராணுவத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவத்தை அடுத்து திருமலை, யாழ். மற்றும் வன்னிப்பகுதிகளில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிங்கள முப்படைகள் தாக்குதல் நடத்தின.

இச்சம்பவம் குறித்து சிறிலங்கா இராணுவம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழீழ விடுதலைப் புலிகளின் 15-க்கும் மேற்பட்ட தற்கொலைப் படகுகளால் பெருந்தொகையான கடற்படையினரை ஏற்றி வந்த கப்பல் "பேர்ள்குரூசர்" வெற்றிலைக்கேணி கடற்பிரதேசத்தில் இன்று மாலை 4 மணயளவில் தாக்குதலுக்குள்ளானது. கடற்படையினர் திருப்பித் தாக்கியதில் மூன்று தற்கொலைப் படகுகள் முற்றாக அழிக்கப்பட்டன.

விமானப் படையினரது உதவியுடன் கடற்படை நடத்திய பதில் தாக்குதலில் மேலும் 4 படகுகள் சேதமடைந்தன. இதில் படைத்தரப்பின் 15 பேருடன் இருந்த ஒரு டோரா படகு பாதிக்கப்பட்டது.

விமானப் படையின் உதவியுடன் அப்பகுதியில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இச்சம்பவத்தின் போது படையினரது கப்பலிலும் டோராப் படகிலும் இரு போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரும் இருந்தனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி: புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாங்கள் தப்புவதற்காக கண்காணிப்பு குழு உறுப்பினர்

உள்ள இருக்கிறார் என்று ரீல் விடுகினமோ தெரியாது..

:P

:lol::lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

BBC, தமிழ்நெற் செய்தியைப்பாத்தா உவங்களெல்லாரும் தப்பீற்றாங்கள் போல கிடக்கு

காங்கேசன் துறையிலிருந்து திருகோணமலைக்கு கடற்படைகள் நகர்த்தப்படுகின்றனவா?

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக் கேணிப் பகுதிகளிலிருந்து ஆழ கடலை நோக்கிச் சென்றால் சர்வதேசக் கடல் வருமா இந்தியக்கடல் வருமா?

கெலன் புருடா விடுறாவா?

இந்தி கடற்படையின் வழித்துணையுடன் தான் இனி சிறீலங்கா கடற்படைகள் பயணிக்க வேண்டுமா? :lol:

http://www.bbc.co.uk/sinhala/news/story/20...511_navey.shtml

BBC, தமிழ்நெற் செய்தியைப்பாத்தா உவங்களெல்லாரும் தப்பீற்றாங்கள் போல கிடக்கு

இந்திய கடற்பரப்புக்கு தப்பி ஓடிவிட்டார்களாம்.. :P

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக் கேணிப் பகுதிகளிலிருந்து ஆழ கடலை நோக்கிச் சென்றால் சர்வதேசக் கடல் வருமா இந்தியக்கடல் வருமா?

கெலன் புருடா விடுறாவா?

:lol:

http://www.bbc.co.uk/sinhala/news/story/20...511_navey.shtml

அதுதானே? :P

ஏய் இந்த அடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா :lol::lol::lol::lol::lol::lol::D:D:D:D:D:D:D:lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா...

யான் ஈழ்பதீஸானிடம் நேத்தி வைத்ததுகள் எல்லாம் நடக்கப் போவதுபோல கிடக்குது! உந்த ஆரம்ப திருவிழாவே அகோரம்!

எல்லாம் இழ்ழ்பதீஸான் செயல்!

அரோகரா....

ஏய் இந்த அடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா

அப்ப சண்டை தொடங்கியிட்டுது எண்டு சொல்லுறீயள் .........இனித்தான் இருக்கு..... ... சென்றகிழமை ரவுனுக்கு நண்பனுடன் சென்றேன் இப்பதான் செக்கிங் முழத்துக்கு முழம் இருக்குதே. . .நண்பன் UNø வேலை செய்கிறார் ஒரு கடற்படை சிப்பாய் எங்கள் ID¨Â செக் பண்ணிவிட்டு நண்பனிடம் UN ø வேலை செய்யிற நீங்கள் எல்லாம் யார் எண்டு எங்களுக்கு தெரியும் இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக் கொள்ளுங்கோ என்டான் .......வயித்தை கலக்காத குறைதான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப சண்டை தொடங்கியிட்டுது எண்டு சொல்லுறீயள் .........இனித்தான் இருக்கு..... ... சென்றகிழமை ரவுனுக்கு நண்பனுடன் சென்றேன் இப்பதான் செக்கிங் முழத்துக்கு முழம் இருக்குதே. . .நண்பன் UNø வேலை செய்கிறார் ஒரு கடற்படை சிப்பாய் எங்கள் ID¨Â செக் பண்ணிவிட்டு நண்பனிடம் UN ø வேலை செய்யிற நீங்கள் எல்லாம் யார் எண்டு எங்களுக்கு தெரியும் இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக் கொள்ளுங்கோ என்டான் .......வயித்தை கலக்காத குறைதான்

அதொண்டுமில்லை முகத்தார் மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் அதுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.