Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம் மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்: சம்பந்தன்

Featured Replies

[size=4]மக்கள் கொடுத்த ஆணையையும் முஸ்லிம் மக்கள் தொடர்ந்து வலியுறுத்திவந்த விடயத்தினையும் முஸ்லிம் காங்கிரஸ் உதறித் தள்ளியிருக்கிறது. இதன்மூலம் முஸ்லிம் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் கூறினார்.

முஸ்லிம் காங்கிரஸ் இன்று எடுத்த முடிவு தொடர்பாக தமிழ்மிரருக்கு பிரத்தியேகமாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்படி கூறினார். தொடர்ந்தும் அவர் கூறுகையில்...

கிழக்கு மாகாண மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளையும், மக்கள் வழங்கிய ஆணையினையும் முஸ்லிம் காங்கிரஸ் உதாசீனம் செய்து சுயநலமாக செயற்பட்டுள்ளது. தேர்தல் முடிவடைந்த பின்னரும் முஸ்லிம் மக்கள் பல விடயங்களை வலியுறுத்தி வந்தனர். அந்த மக்களின் ஆணைக்கு மாறாக, விருப்பத்திற்கு மாறாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும் கட்சியும் சுயநலமாக நடந்துகொண்டிருக்கிறது.

இவ்விடயத்தில் நாங்கள் ஏமாற்றமடையவில்லை. பல விடயங்களை எதிர்பார்த்துத்தான் நாங்களும் இருந்தோம். ஆனால், முஸ்லிம் காங்கிரஸை நம்பி வாக்களித்த முஸ்லிம் மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் அவரது கட்சியின் ஏனைய வேட்பாளர்களும் அரசாங்கத்தை விமர்சித்து, தனித்து போட்டியிட்டதால்தான் இவ்வளவு ஆசனங்களையேனும் பெறமுடிந்தது. தமது தனித்துவ கட்சியின்மீது கொண்டிருந்த நம்பிக்கையினால்தான் முஸ்லிம் மக்கள் ஈடுபாட்டுடன் வாக்களித்தனர் என்பதை முஸ்லிம் காங்கிரஸ் மறந்துவிடக்கூடாது.

மக்களின் ஆணையை புறந்தள்ளி முடிவெடுத்துவிட்டு, முஸ்லிம் மக்களின் நலன்கருதியே அவ்வாறு செயற்பட்டதாக ஹக்கீம் கூறியிருக்கிறார். இது நலன்கருதிய தீர்மானமல்ல, சுயநலமான தீர்மானமாகவே எங்களுக்குப்படுகிறது. தங்களுடைய சொந்த தேவைகளுக்காகவும் பதவிகளுக்காகவுமே அவர்கள் இப்படி நடந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள்.

பேரம் பேசும் சக்தி பற்றி முஸ்லிம் காங்கிரஸ் அதிகமாக பேசியது. ஆனால் அவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக செயற்பட்டு அவர்களின் நலனுக்காக பாடுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 11 ஆசனங்கள் கிடைத்தன. எங்களை நம்பி வாக்களித்த தமிழ் மக்களின் நலனுக்காகத்தான் இப்பொழுதும் பொறுமைகாத்திருந்தோம். ஆனால், முஸ்லிம் மக்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை பறித்துக்கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் எதனை வைத்து பேரம் பேசுகிறது என்று புரியவில்லை.

தமிழ், முஸ்லிம் மக்கள் என்ற கூட்டான தமிழ் பேசும் மக்களின் அதிகாரங்களுக்காக, தமிழ்பேசும் மக்களின் பிரதேசங்களில் தமிழ்பேசும் தலைமை இருக்க வேண்டும் என்பதற்காக முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுப்பதற்கும் நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால், அதனைக்கூட தட்டிக்யொதுக்கி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒருவருக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்திருக்கிறார் ஹக்கீம். இதுதான் அவரது பேரம் பேசும் திறமையா?

கட்சியை நம்பி வாக்களித்த முஸ்லிம் மக்களை ஏமாற்றி, சுயநலத்துக்காகவும் சுய லாபத்திற்காகவும் செயற்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் இதன் விளைவை வெகு விரைவில் அனுபவிப்பார் என்பதை மட்டும் என்னால் உறுதியாகக் கூற முடியும்.[/size]

http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/48887-2012-09-18-16-22-32.html

[size=4]தமிழ், முஸ்லிம் மக்கள் என்ற கூட்டான தமிழ் பேசும் மக்களின் அதிகாரங்களுக்காக, தமிழ்பேசும் மக்களின் பிரதேசங்களில் தமிழ்பேசும் தலைமை இருக்க வேண்டும் என்பதற்காக முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுப்பதற்கும் நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால், அதனைக்கூட தட்டிக்யொதுக்கி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒருவருக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்திருக்கிறார் ஹக்கீம். இதுதான் அவரது பேரம் பேசும் திறமையா? [/size]

http://tamilmirror.l...8-16-22-32.html

வடை காகத்துக்கும் இல்லை நரிக்கும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எலி கொண்டு போய்டிச்சு....

  • தொடங்கியவர்

[size=4]இதுவரை காலமும் சர்வதேசத்தின் மத்தியிலும், ஐ.நா.வரையும் முஸ்லீம்கள் ஒரு தனித்துவமான இனம், இனப்பிரச்சனையில் அவர்களும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என கேட்கப்பட்டது. [/size]

[size=1]

[size=4]இனியும் அவர்கள் அவ்வாறு கேட்பது பலமிழந்துள்ளது. [/size][/size]

நீதி அமைச்சின் வரைவிலக்கணம் இதுதானா?

நீதி நேர்மையில்லாதவர், மக்களை ஏமாற்றுவதில் கைதேர்ந்தவர், தமிழ் மக்கள் பற்றிய பேச்சு வரும்போது தனி அலகு கேட்கும் ஒருவர் நான் பேசியதெல்லாம் பொய்யே, பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை என மக்களுக்கு கிழக்குமாகாணசபைத் தேர்தல் மூலம் புகட்டியவர் எப்படி நீதி அமைச்சராக இருக்க முடியும். இப்படிப்பட்ட ஒருவரின் காலத்தில் அப்பாவி மக்களுக்கு எப்டி நீதி கிடைக்கும். முஸ்லீம் மக்கள் இப்படியான பஞ்சோத்திகளை தங்கள் சமுதாயத்திலிருந்தே ஒதுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் மக்கள் அவங்க நம்பிற ஆக்களால.. ஏமாற்றப்பட்டதற்கு (அப்படின்னு கூட்டமைப்புத் தான் சொல்லுது.. முஸ்லீம்கள் சொல்லுறதா தெரியல்ல.. அவங்களுக்கு முழு அப்பத்திற்கு பதில்.. பாதி கிடைக்கிறதே பெரிய பேறு.. இது அப்பம் சுடுற தாச்சியே கிடைச்சிருக்குது.. சும்மா இருக்காம.. கத்துவாய்ங்களாக்கும்.) சம்பந்தன் ஏன் கவலைப்படுறார். தமிழ் மக்கள் ஏமாறாமல் நீங்க உங்க நாக்கை.. பாத்துக்குங்கப்பு..! :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஹக்கீம் ஒரு பேரமும் பேச வில்லை சுமடமா கவுண்டமணிமாதிரி உதார் விட்டுக் கொண்டிருந்தது.மகிந்த சிம்பிளா சொல்லியிருப்பார் நீதி அமைச்நை விட்டுப் போறியா?அல்லது நிபந்தனையற்ற அதரவைத் தாறீயாஃ என்று அதுதான் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரசுக்கு முதலமைச்சர் பதவியை விட்டுத் தாறம் எண்டு சொல்லியும் கணக்கில் எடுக்கவில்லை.இதன் மூலம் முஸ்லிம் காங்கிரசின் வேடம் கலைந்து விட்டது. முஸ்லிம் மக்கள் உண்மையை உணர்ந்து தமிழ் மக்களோட சேரப் போகினம் எண்டு யாரும் கனவு காணதையுங்கோ?முஸ்லிம் ஒர போதும் தன் இன அடையாளத்தை விட்டுக் கொடுக்க மாட்டான்.சம்பந்தரும் .சுமத்திரனும் கொஞ்சம் அடக்கி வாசிச்சால் நல்லாய் இருக்கும். அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!!

எங்கே தமிழ்சிறி சூரியன் படத்தில கவுண்டமணி காலில் விழுந்து கையொப்பம் வாங்கும் காட்சியைப் போட்டு விடுங்கோ!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஹக்கீம் ஒரு பேரமும் பேச வில்லை சுமடமா கவுண்டமணிமாதிரி உதார் விட்டுக் கொண்டிருந்தது.மகிந்த சிம்பிளா சொல்லியிருப்பார் நீதி அமைச்நை விட்டுப் போறியா?அல்லது நிபந்தனையற்ற அதரவைத் தாறீயாஃ என்று அதுதான் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரசுக்கு முதலமைச்சர் பதவியை விட்டுத் தாறம் எண்டு சொல்லியும் கணக்கில் எடுக்கவில்லை.இதன் மூலம் முஸ்லிம் காங்கிரசின் வேடம் கலைந்து விட்டது. முஸ்லிம் மக்கள் உண்மையை உணர்ந்து தமிழ் மக்களோட சேரப் போகினம் எண்டு யாரும் கனவு காணதையுங்கோ?முஸ்லிம் ஒர போதும் தன் இன அடையாளத்தை விட்டுக் கொடுக்க மாட்டான்.சம்பந்தரும் .சுமத்திரனும் கொஞ்சம் அடக்கி வாசிச்சால் நல்லாய் இருக்கும். அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!!

எங்கே தமிழ்சிறி சூரியன் படத்தில கவுண்டமணி காலில் விழுந்து கையொப்பம் வாங்கும் காட்சியைப் போட்டு விடுங்கோ!!!!!

http://www.youtube.com/watch?v=vid1BfO2vqQ

தோழர் வாத்தியார் கேட்டு இல்லையென்று சொல்ல முடியாது.. தோழர் ஒரு சின்ன டவுட்டு கவுண்ட மணி கேரக்டர் இப்ப யாரு..? :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.