Jump to content

தனித்தமிழ் ஈழம் அமைவதை எவராலும் தடுக்க முடியாது :அப்துல் கலாமின் ஆலோசகர்


Recommended Posts

முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் ஆலோசகர் வி.பொன்ராஜ், இந்தியா- அமெரிக்காவில் உள்ளது போல் ஜனநாயக முறையை இலங்கை கொண்டுவரவில்லை என்றால், தனித்தமிழ் ஈழம் அமைவதை எவராலும் தடுக்க முடியாது. அந்த தனி ஈழ நாடு இந்தியாவின் உண்மையான நட்பு நாடாக திகழும் என்றுகூறியுள்ளார்.

http://thaaitamil.com/?p=33121

Link to comment
Share on other sites

[size=4]உஸ்ஸ்.. இந்தியாவை சுற்றி [/size][size=4]நட்பு [/size]நாடுகளே இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தேன் என்று யாழ்ப்பாணத்தில் சொன்ன அப்துல் கலாமிடம் இதைச்சொல்லுங்கள்

Link to comment
Share on other sites

பாதி உண்மையைச் சொல்லியிருக்கிறார்..

இது சிங்களத்திற்கு விடப்பட்ட மறைமுகமான அரசியல்ரீதியான செய்தியேதவிர வேறொன்றில்லை.. :rolleyes: அதாவது தங்கள் சொல்கேளாவிடில் பிரித்து வைத்துவிடுவார்களாம்.. :D

Link to comment
Share on other sites

பதவியில் இருக்கும் போது கண்ணுக்கு தெரிவது எல்லாம் புகழும் பணமும் அதே அனைத்தும் போனது தெரிவது ஈழத்தமிழரின் அவலம்.

Link to comment
Share on other sites

அப்துல்கலாமின் செயலாளரிடம் யார் கருத்தைக் கேட்டது? கண்டவன் நிண்டவன் எல்லாம் அறிக்கை விடுகிறான்.

ஒருவேளை சரியும் செல்வாக்கை காப்பாற்றும் முயற்சியாக இருக்கலாம்.

எது எப்படியோ அதுவே உண்மை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான கருத்துக்கள் இந்தியாவின் பல மட்டங்களில் இருந்தும் வர வேண்டும்.ஒரு தலைவர் தானாக முடிவெடுப்பதில்லை.அவருடைய ஆலோசகர்கள் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் தலைவர் சொல்லுவார்.இந்தியாவின் வெளியுறவுத்துறைக்குள் இருக்கும் மலையாளிகளின் பிழையான ஆலோசனைகளும் வழிகாட்டலுமே தமிழினத்திற்கு எதிராக இந்தியாவை திருப்பி விட்டிருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Thirumurugan Gandhi

இந்தியா- அமெரிக்காவில் உள்ளது போல் ஜனநாயக முறையை இலங்கை கொண்டுவரவில்லை என்றால், தனித் தமிழ் ஈழம் அமைவதை எவராலும் தடுக்க முடியாது. என்று இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் ஆலோசகர் வி.பொன்ராஜ்

இந்தியாவில்-அமெரிக்காவில் எங்கே சனநாயகம் இருக்கிறது என்கிற கேள்வி ஒருபுறம்.... இந்த தவளைகள் எங்கிருந்து திடீரென தமிழீழ அரசியலில் குதிக்கின்றன என்பது தான் அடிப்படை கேள்வி.... தமிழீழப்படுகொலை நடந்து முடிந்து நான்கு ஆண்டுகளை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் இவ்வாறு பேசுபவர்கள்தான் அதிக ஆபத்தான பேர்வளிகள் எனபதை உணரவேண்டும்.. இவர்கள் திடீரென ஆதரிக்க காரணம் என்ன?.. இவர்கள் தமிழீழத்தினை ஆதரிக்கிறர்களா அல்லது இலங்கையை மிரட்ட தமிழீழத்தினை பயன்படுத்துகிறார்களா? இவர்கள் ஆதரிக்கிறார்கள் என்றால் எந்தவகையான முன்னெடுப்புகளை இவர்கள் செய்யப் போகிறார்கள்>, ஏனெனில் இவர்கள் நம்மைப்போல குப்பனோ, சுப்பனோ கிடையாது, அதிகாரத்தின் மையத்தில் செயல்படுபவர்கள், இவர்களால் அதிகாரத்தில் மாற்றம் கொண்டு வரமுடியும் எனில் ஏன் இந்த வெத்துவேட்டு அறிக்கைகள்?.... இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தத்தினை இலங்கை கையெழுத்திட மறுத்த பின்னர் ஏன் இத்தகைய அறிக்கைகள் வெளியாகிறது ஏன் அதற்கு முன்பாக வெளியாக வில்லை?.. அய்யா.அ.கலாம் யாழ்பாணத்திற்கு சென்று பேசியதற்கு என்ன அர்த்தம்.. ராஜபக்சேவினை சந்தித்தபோது இந்த கருத்தினை பேசினாரா?... கேள்விகள் கேட்காமல் இனிமேலும் தமிழ்ச் சமூகம் ஒருவரது அறிக்கைகளின் அடிப்படையில் அவரை தம்மில் ஒருவராக ஏற்றுக்கொள்ளாது...

thanks-facebook

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.