Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டில்லிக்கு காவடி எடுக்கும் கூட்டமைப்பு, மகிந்தவுக்கு உதவிய சம்பந்தர்!

Featured Replies

கூட்டமைப்பின் டில்லி விஜயம் சாதிக்கப்போவது என்ன?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மீண்டும் அடுத்த மாதம் 10 ஆம் திகதி புதுடில்லிக்கு காவடி எடுக்கவுள்ளது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மக்கள் தமக்கு வாக்களித்து வெற்றியைப் பெற்றுத் தந்தால் ஏதோ அதிசயங்கள் காத்திருக்கின்றன என்பது போல பரப்புரை செய்து வந்த சம்பந்தன் குழுவினர், ராவூப் ஹக்கீமின் ஆதரவுக்காகக் கெஞ்சிக் கூத்தாடி முடிந்திருக்கும் நிலையில், இப்போது இந்தியத் தரப்பைச் சந்திப்பதற்காக புதுடில்லி புறப்படுகின்றார்கள்.

வழமைபோலவே இந்தியா தொடர்பான மாயைகள் கிளப்பப்படுகின்றன. மகிந்த ராஜபக்‌ஷ அரசின் மீது இந்திய அரசு அழுத்தங்களைக் கொடுத்து தீர்வொன்றைப் பெற்றுத் தந்துவிடும் என்பது போல கதைகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இலங்கை தொடர்பான சர்வதேச மீளாய்வுக் கூட்டம் ஜெனீவாவில் நவம்பர் மாதம் நடைபெறவிருப்பதும், அதில் இந்தியாவின் பங்கு முக்கியமானதாக இருப்பதும் உண்மையாக இருந்தாலும், இனநெருக்கடித் தீர்வில் அழுத்தம் கொடுக்கும் நிலையில் இந்தியா உள்ளதா என்பதும், கூட்டமைப்பினரின் இந்திய விஜயம் இந்த விடயத்தில் செல்வாக்கைச் செலுத்துவதாக இருக்குமா என்பதும்தான் இன்று ஆராயப்பட வேண்டியவையாக உள்ளன.

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற வேண்டும் என இந்தியா அக்கறை காட்டியது உண்மைதான். தமக்கு சார்பான ஒரு தரப்பு கிழக்கு மாகாணத்தை நிர்வகிப்பது தமக்கு வசதியானதாக இருக்கம் என டில்லி கருதியிருக்கலாம். சுமர் 6,500 வாக்குகளால் ஆட்சியமைப்பதற்கான சந்தர்ப்பத்தை கூட்டமைப்பு தவறவிட்டடிருந்தாலும்கூட, 11 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டதன் மூலம் தமிழர் தரப்பின் பிரதான பிரதிநிதிகள் தாம்தாம் என்பதை கூட்டமைப்பு மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்திக்கொட்டியிருந்தது.

இருந்த போதிலும், அரசுடனான பேச்சுக்களைப் பொறுத்தவரையில் கூட்டமைப்பின் இந்த வெற்றி எந்த விதமான மாற்றங்களையும் ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கப்போவதில்லை. அரசாங்கம் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு கூட்டமைப்பினரை ஓடிவந்து கட்டியணைக்கப்போவதுமில்லை.

கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் தேர்தலில் பல வாக்குறுதிகள் அவர்களால் வழங்கப்பட்டது. தம்மை வெற்றி பெறச்செய்வதன் மூலமாக அரசுக்கு எதிரான சர்வதேச அழுத்தங்களை அதிகரிக்கலாம் என்பது அவற்றில் ஒன்று. குறிப்பாக போர்க் குற்றச்சாட்டை மேற்குலகம் தூக்கிப் பிடிப்பதற்கு இந்தத் தேர்தல் முடிவுகள் வழிவகுக்கும் என்பது கூட்டமைப்பின் கருத்தாக வெளிப்பட்டது. நவம்பரில் நடைபெறவிருக்கும் ஐ.நா.வின் இலங்கை தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தை இலக்காக வைத்துத்தான் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலை ஒரு வருடம் முன்கூட்டியே நடத்துவது என்ற முடிவை அரசாங்கம் எடுத்திருந்தது என்றாலும் கூட, இத்தேர்தலின் முடிவுகள் அவ்வாறு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கும் என நம்பமுடியாத நிலைதான் உள்ளது.

தமக்கு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முடியாத நிலையில் தற்போது இந்திய விஜயத்தை வைத்து கொஞ்சக்காலத்துக்கு படம் காட்டலாம் என கூட்டமைப்பின் தலைமை நினைக்கின்றது. இந்தியாவைப் பொறுத்தவரையில் இலங்கை விவகாரத்தில் கையாலாகத்தனத்திலேயே அது தொடர்ந்தும் உள்ளது. உள்நாட்டு வெளிநாட்டு அழுத்தங்கள் காரணமாக இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் மார்ச் மாதம் கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது. அதற்குப் பழிவாங்கும் வகையில் மகிந்த அரசு நடத்தும் தாக்குதல்களில் தற்காப்பு நிலையில் மட்டுமே இந்தியாவினால் நிற்க முடிகின்றது.

இந்தியாவின் இந்த கையாலாகத்தனம் கூட்டமைப்பின் தலைவர்களுக்குத் தெரியாததல்ல. இம்மாத முற்பகுதியில் கடுமையான எதிர்ப்புக்களின் மத்தியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ இந்தியாவுக்குச் சென்று வந்திருக்கின்றார். தமிழகத்தில் தீக்குளிப்பு, தூதரகம் முற்றுகை, மத்திய பிரதேசத்தில் வைகோவின் வீதிமறிப்புப் போராட்டம் என்பவற்றுக்கு மத்தியில் மகிந்த ராஜபக்‌ஷவுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இராப்போசன விருந்தளித்துக் கௌரவித்தார். இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் ஜனாதிபதி மகிந்தவை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார். இந்தச் சந்திப்புக்களின் போது இனநெருக்கடி தொடர்பில் எந்தவிதமாகவும் இந்தியத் தரப்பு கேள்வி எழுப்பவில்லை. அழுத்தங்களையும் கொடுக்கவில்லை.

தனது இந்தியப் பயணத்துக்கு முன்னோடியாக ஒரு உபாயத்தை மகிந்த கையாண்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அவசரமாக அலரி மாளிகைக்கு அழைத்த அவர், குறுகிய காலப் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தினார். கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாகவும், இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வைக் காண்பது தொடர்பாகவும் இச்சந்திப்பின்போது முக்கியமாக பேசப்பட்டது.

இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வு காணப்படவேண்டுமாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்குள் வரவேண்டும் என ஜனாதிபதி 'வழமைபோலவே' இந்தச் சந்திப்பின்போதும் அழைப்பு விடுத்தார்.

கூட்டமைப்பின் தலைவரும் இதற்கு வழமையான பதிலையே கொடுத்தார். "நீங்கள் வழங்கிய வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்றுங்கள். பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்குள் வருவதையிட்டு பின்னர் பார்க்கலாம்" என்பதுதான் சம்பந்தனின் பதிலாக இருந்தது.

"இந்தியப் பயணத்தை முடித்துககொண்டு வந்த பின்னர் இது தொடர்பாக ஆராயலாம்" என சந்திப்பை முடித்துக்கொண்டு சம்பந்தனை வழியனுப்பிவைத்தார் மகிந்தர்.

இன நெருக்கடிக்கான தீர்வைப் பொறுத்தவரையில் இந்தச் சந்திப்பில் எந்த முக்கியத்துவமும் இல்லை. ஆனால், மகிந்தரைப் பொறுத்தவரையில் இதில் முக்கியத்துவம் ஒன்றிருந்தது. சமாதானப் பேச்சுக்கள் பற்றி இந்தியாவில் சொல்வதற்கு இந்தச் சந்திப்பு உதவியது. "டில்லி புறப்பட முன்னர் சம்பந்தனை சந்தித்தேன். இனி கொழும்பு திரும்பியவுடன் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்போம்" என மகிந்த இந்தியத் தரப்புக்கு மகிந்தர் சொல்ல, இந்தியத் தரப்பு மௌனமாக்கப்பட்டுவிட்டது.

இந்தியாவை மகிந்தர் மௌனமாக்குவதற்கு சம்பந்தர் தாராளமாக உதவியிருக்கின்றார். மகிந்தவின் இராஜதந்திரத்துக்கு சம்பந்தர் மீண்டும் பலியாகியிருக்கின்றார்.

இதனைச் சொன்ன மகிந்தர் மற்றொரு விடயத்தையும் இந்தியத் தரப்புக்கு நாசூக்காகப்போட்டுவைத்தார். "கூட்டமைப்புடன் பேச்சுக்களை ஆரம்பிக்க நான் தயார். அவர்கள்தான் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வருகின்றார்கள் இல்லை" எனப் புகார் செய்தார் மகிந்தர். இந்தியத் தரப்பு அதனை ஏற்றுக்கொண்டுவிட்டது. கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்குச் செல்வது ஒன்றுதான் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிக்க ஒரே வழி என இந்தியத் தரப்பு இப்போது கருதுவதாகத் தெரிகின்றது.

ஆக, அக்டோபர் 10 ஆம் திகதி கூட்டமைப்பினர் டில்லி செல்லும் போது அங்கு அவர்களுக்குக் காத்திருக்கும் செய்தி என்ன என்பது இப்போது தெளிவானது. "பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்குச் செல்லுங்கள்" என்ற செய்தியே சம்பந்தக் குழுவினருக்குச் சொல்லப்படப்டபோகின்றது. ஆக, மகிந்த தரப்புக்கு அல்ல சம்பந்தன் தரப்புக்கே இந்தியா அழுத்தம் கொடுக்கப்போகின்றது. இதற்கு சம்பந்தன் தரப்பு 'தயங்கினால்', "நீங்கள் போங்கள்..மிகுதியை நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம்" என இந்தியா சொல்லலாம்.

இப்போதுள்ள நிலையில் மகிந்தவைச் சாந்தப்படுத்துவதுதான் இந்தியாவுக்குள்ள தேவை. இலங்கை, பர்மா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளை மையப்படுத்தி இந்தியாவைச் சுற்றிவளைக்கும் வியூகத்தை சீனா வெற்றிகரமாக வகுக்கின்றது. இலங்கையைத் தளமாகக் கொண்டு இந்தியாவை வேவுபார்க்கும் திட்டங்களை பாகிஸ்தான் வகுத்திருக்கின்றது. (இது பற்றி மற்றொரு கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்) இலங்கையுடன் பகைமையை வளர்ப்பதன் மூலம் தமக்கு எதிரானவர்களுடனேயே கொழும்பு இணைந்துகொள்ளும் என்பதுதான் இந்தியாவின் பிந்திய கண்டுபிடிப்பு.

அதனால் கொழும்பைக் குளிர்விப்பதற்கான செயற்பாடுகளை முன்டுக்க வேண்டிய நிலையில் டில்லி உள்ளது. இதன்மூலமகவே தமது எதிரிகளின் பிடியிலிருந்து கொழும்பை விடுவிக்கலாம் என டில்லி கருதுகின்றது. இதனைவிட கொழும்பின் மீது அழுத்தங்களைக் கொடுப்பது தமக்கே பாதகமானதாக அமையும் என டில்லி அஞ்சுகின்றது.

தமது இந்தியப் பயணத்தின்போது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவையும் சந்திக்கப்போவதாக மாவை சேனாதிராஜா தெரிவித்திருக்கின்றார். ஜெயலலிதாவைப் பொறுத்தவரையில் இலங்கைப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட எந்தத் தரப்பையும் சந்திப்பதில்லை என்பதில் அவர் உறுதியாகவுள்ளார். இந்த நிலையில் கூட்டமைப்பை அவர் சந்திப்பார் என்பது எதிர்பார்க்கக்கூடியதல்ல. வெறுமனே மக்களுக்கு படம்காட்டுவதற்காகத்தான் இதனை அவர் சொல்லியிருக்க முடியும்.

அதேவேளையில் வடபகுதியிலுள்ள பாதுகாப்ப வலயங்கள் தொடர்பாக டில்லியிடம் முறையிடப்போவதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியிருக்கின்றார். இது தொடர்பில் கூட்டமைப்பு எத்தனையோ தடவை முறையிட்டுள்ளது. இந்தியாவால் எதுவும் செய்ய முடியவில்லை. இப்போது மட்டும் ஒன்றும் நடந்துவிடப்போவதில்லை என்பதும் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு தெரிந்துதான் இருக்கும். நாம் இந்தியத் தரப்பக்கு சொன்னோம். அவர்கள் அதனையிட்டு கவனமாக செவிமடுத்தார்கள் என்று செய்தி கொடுக்கக்கூடியதாக இருக்குமே தவிர வேறு எதுவும் நடக்கப்போவதில்லை.

ஆக, கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டிருக்கின்றது என்பதற்காக மகிந்த அரசின் மீது இந்தியா அழுத்தங்களை அதிகரிக்கும் என்பது எதிர்பார்க்கக்கூடியதல்ல. டில்லி விஜயத்தின் போது இது கூட்டமைப்புக்கு தெளிவாக உணர்த்தப்படும். இனிமேலாவது இந்தியாவைக் காட்டி அரசியலை நடத்தாமல் தமது சொந்தக் காலில் நின்று அரசியல் செய்வதற்கான உபாயங்களை கூட்டமைப்பின் தலைமை வகத்துக்கொள்ள வேண்டும்.

- கொழும்பிலிருந்து தமிழ்லீடருக்காக பார்த்தீபன்.

http://tamilleader.c...8-08-10-29.html

Edited by ஊர்பூராயம்

கூட்டமைப்பின் டில்லி விஜயம் சாதிக்கப்போவது என்ன?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மீண்டும் அடுத்த மாதம் 10 ஆம் திகதி புதுடில்லிக்கு காவடி எடுக்கவுள்ளது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மக்கள் தமக்கு வாக்களித்து வெற்றியைப் பெற்றுத் தந்தால் ஏதோ அதிசயங்கள் காத்திருக்கின்றன என்பது போல பரப்புரை செய்து வந்த சம்பந்தன் குழுவினர், ராவூப் ஹக்கீமின் ஆதரவுக்காகக் கெஞ்சிக் கூத்தாடி முடிந்திருக்கும் நிலையில், இப்போது இந்தியத் தரப்பைச் சந்திப்பதற்காக புதுடில்லி புறப்படுகின்றார்கள்.

தேர்தல் காலத்தில், தமிழ்லீடர், ஓட்டைச்சட்டிக்குள் தன்னை மூடிக்கொண்டிருந்துவிட்டது போலும். எதை சொல்லியும் கூட்டமைப்பு தனக்கு 17 ஆசங்கள் கிடையாத பட்சத்தில் முஸ்லீம் காங்கிரசுக்குதான் ஆட்சியை விட்டுகொடுப்பதாக கூறியிருந்தது. இதில் என்னென அதிசயங்களை கூட்டமைப்பு காட்ட இருந்தது என்று கூறுவதுதான் தமிழ்லீடருக்கு பொருத்தமான செயல். ஆனல் அந்த அதிசயங்களை மு.கா தான் காட்டியிருந்திருக்கும் என்பதை மறக்க கூடாது.

இருந்த போதிலும், அரசுடனான பேச்சுக்களைப் பொறுத்தவரையில் கூட்டமைப்பின் இந்த வெற்றி எந்த விதமான மாற்றங்களையும் ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கப்போவதில்லை. அரசாங்கம் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு கூட்டமைப்பினரை ஓடிவந்து கட்டியணைக்கப்போவதுமில்லை.

இதுதான் தமிழ்லீடர் தேர்தலின் பின் கூட்டமைப்பு காட்ட இருந்த ஆச்சரியமாக கூறியிருந்தாரா? இது உண்மையென்றால் எப்படி கீழே உள்ள வசனம் தொடர்கிறது? அரசு பழிக்குபழிதான் வாங்குமே தவிர கட்டியணைக்காது என்பது எல்லோரும் அறிந்த விடயமாயிற்றே.

தம்மை வெற்றி பெறச்செய்வதன் மூலமாக அரசுக்கு எதிரான சர்வதேச அழுத்தங்களை அதிகரிக்கலாம் என்பது அவற்றில் ஒன்று.

நவம்பரில் நடைபெறவிருக்கும் ஐ.நா.வின் இலங்கை தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தை இலக்காக வைத்துத்தான் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலை ஒரு வருடம் முன்கூட்டியே நடத்துவது என்ற முடிவை அரசாங்கம் எடுத்திருந்தது என்றாலும் கூட, இத்தேர்தலின் முடிவுகள் அவ்வாறு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கும் என நம்பமுடியாத நிலைதான் உள்ளது.

மு.கா ஆட்சியை அமைத்திருந்தால் திவி நெகும வைத்தன்னும் தடுத்து நிறுத்தியிருக்கலாம் எனபது தமிழ்லீடருக்கு விளங்க மாடேங்கிறது.

தமக்கு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முடியாத நிலையில் தற்போது இந்திய விஜயத்தை வைத்து கொஞ்சக்காலத்துக்கு படம் காட்டலாம் என கூட்டமைப்பின் தலைமை நினைக்கின்றது.

இது கூட்டமைப்பு போட்ட திட்டம் இல்லை. மகிந்தா இந்தியா போனபோது போட்ட திட்டம். எனவே மகிந்தாதான் கூட்டமைப்பால் தனது வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாது என்று "கூட்டமைப்பினரை ஓடுவந்து கட்டியணைத்து காப்பாறுகிறார் போலுள்ளது". இதைதான் தமிழ்லீடர் மகிந்தா செய்யமட்டார் என்று மறுத்தவர்.

தனது இந்தியப் பயணத்துக்கு முன்னோடியாக ஒரு உபாயத்தை மகிந்த கையாண்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அவசரமாக அலரி மாளிகைக்கு அழைத்த அவர், குறுகிய காலப் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தினார்.

என்ன மாதிரியான "அ ஆ" குயக்க அரசியல். அதுவென்ன புதியதொரு குறுகியகால பேச்சுவார்த்தை?

இன நெருக்கடிக்கான தீர்வைப் பொறுத்தவரையில் இந்தச் சந்திப்பில் எந்த முக்கியத்துவமும் இல்லை. ஆனால், மகிந்தரைப் பொறுத்தவரையில் இதில் முக்கியத்துவம் ஒன்றிருந்தது. சமாதானப் பேச்சுக்கள் பற்றி இந்தியாவில் சொல்வதற்கு இந்தச் சந்திப்பு உதவியது. "டில்லி புறப்பட முன்னர் சம்பந்தனை சந்தித்தேன். இனி கொழும்பு திரும்பியவுடன் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்போம்" என மகிந்த இந்தியத் தரப்புக்கு மகிந்தர் சொல்ல, இந்தியத் தரப்பு மௌனமாக்கப்பட்டுவிட்டது.

இந்தியாவை மகிந்தர் மௌனமாக்குவதற்கு சம்பந்தர் தாராளமாக உதவியிருக்கின்றார். மகிந்தவின் இராஜதந்திரத்துக்கு சம்பந்தர் மீண்டும் பலியாகியிருக்கின்றார்.

இந்தியா தமிழர் பிரச்சனையில் மூக்கை நுளைக்க வேண்டுமா இல்லையா என்பதை ஆராயமல் தொடர்ந்து கூட்டமைப்பை குற்றம் சாட்டுகிறார் இந்த தமிழ்லீடர்.

இந்த லீடர் இந்தியாவை பற்றி தெரிந்து கொண்டிருக்காதது பரிதாபத்திற்குரியது. சம்பந்தர் ஒரு தடவை அலரி மாளிகை போய் வந்ததால் இனி இலங்கையில் பிரச்சனை எல்லாம் தீர்ந்துவிட்டதாக இந்தியா நம்பத்தொடங்கி விட்டதாக மணித்தியாலக்கணக்கக வலிந்து நிரூபணம் எழுதியிருக்கிறார்.

சிலவற்றை இவர் தெரிய வர வேண்டும்.

1. இலங்கையை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்று நேரு வரையில் பிருத்தானியாவிடம் பேசியிருக்கிறார்கள்.

2. சாஸ்திரி ஒப்பந்தம் இலங்கையில் சில பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முயன்று முழுமைப்பட்த்தப்படாமல் போனது.

3.இந்திரா காந்தி இ்லங்கை மீது படைஎடுக்க தருணத்தை எதிர் பார்த்திருந்தார்.

4. ரஜீவ் படை எடுத்து 13 ம் திருத்ததை திணித்தார்.

5.சோனியா இராசாயன ஆயுதங்களை கொடுத்து உதவினார்.

6. கடந்த டெசெம்பர், ஜனவரியில் அப்துல் கலாம், கிருஸ்ணா போன்றோர் கூட்டமைப்பை தெரிவுக்கு குழுவுக்கு போயாக வேண்டும் என்று இலங்கையில் வைத்து நிர்ப்பந்தித்திருந்தார்கள்.

இதையும் விட வேறு எத்தனையோ அரசியல் போக்குகளை, வரத்து இலங்கையிடம் வைத்து கொண்டிருக்கும் இந்தியாவானது சம்பந்தர் ஒரு தடவை அலரி மாளிகை போய் வந்தவுடன் தமிழ்லீடர் சொல்லும், இலங்கையில் சீனாவும், பாகீஸ்த்தானும் முன்னெடுத்துவரும் ராணுவ முனைனைப்புகள் சமன் செயப்பட்டுவிட்டதாகக் கருதி இனி இலங்கையில் இந்தியா தலை இடாது என்ற பார்வையில் எழுதுவது தமிழ் லீடரின் அரசியல் அறியாமைத்தான் காட்டுகிறது. இந்தியா தமிழர் பிரச்சனையில் தலையிடவேண்டுமா, கூடாதா என்றதை தமிழ்லீடர், கூட்டமைப்பை இழுக்கமால், தனது அபிப்பிராயமாக முதல் எழுதட்டும். புலம் பெயர் தமிழ் மக்கள் 13ம் திருத்ததை இந்தியா துளைக்கும் என்பதால் அதை இங்கே விரும்பவில்லை. ஆனால் சம்பந்தர் அலரிமாளிகை போனது இந்தியாவின் ஒருபக்க தீர்வுக்கான முன்னெடுப்புகளை தணிக்குமாயின் அதுதான் புலம் பெயர் மக்கள் வேண்டுவது.

இதனைச் சொன்ன மகிந்தர் மற்றொரு விடயத்தையும் இந்தியத் தரப்புக்கு நாசூக்காகப்போட்டுவைத்தார். "கூட்டமைப்புடன் பேச்சுக்களை ஆரம்பிக்க நான் தயார். அவர்கள்தான் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வருகின்றார்கள் இல்லை" எனப் புகார் செய்தார் மகிந்தர். இந்தியத் தரப்பு அதனை ஏற்றுக்கொண்டுவிட்டது. கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்குச் செல்வது ஒன்றுதான் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிக்க ஒரே வழி என இந்தியத் தரப்பு இப்போது கருதுவதாகத் தெரிகின்றது.

தான் அருகில் நின்று பார்த்தமாதிரி எழுதி சரித்திரத்தை மாற்றிப் போடுகிறார் தமிழ்லீடர். அரசுக்கு சம்பந்தர் கொடுத்த பதிலை தெரிந்து கொள்ள இந்தியாவுக்கு ஆர்வமில்லையாயின் அதனால் சம்பந்தருக்கு என்ன? பிரேரணைக்கு முன்னர் பலதடவைகள் இந்தியா சம்பந்தரை தெரிவுக்கு குழுவுக்கு போகும் படி நிர்ப்பந்தித்தது. பிரேரணை வந்து ஆறு மாதமாகியும் அவர் போகததுமட்டுமல்ல, அவர் போக மறுக்கிறார் என்றுதானே தமிழ்லீடர் தெரிவிக்கிறது. தண்ணி முகந்துவர போன சீடனையும், அவன் குருவையும் பற்றி ஒரு கதை சொல்வார்கள். ஆனால் தமிழ்லீடர் அந்த கதையை கொஞ்சம் திரித்து இப்படி கதையாக மாற்றியிருக்கிறார். " சிறுவனை குரு தண்ணி அள்ள அனுப்பி வைத்தார். சீடன் பானையை பத்திரமாக பார்த்து தண்ணீ ர் அள்ளிக்கொண்டு திரும்பி வந்திருந்தான். குரு சீடனின் தலையில் மூன்று முறை குட்டினார். சிறுவன் எதற்கென்று கேட்டத்தற்கு நீ பானையை வழியில் போட்டுடைத்திருந்தால் நான் என்ன செய்திருக்க முடியும்? அதனால்த்தான் இந்த குட்டுகள் என்று கூறினார்". அதாவது சம்பந்தார் தெரிவுக்கு குழுவுக்கு போக மறுத்தபின்னரும் குருவான தமிழ்லீடர் சீடனான சம்பந்தர் தலையில் குட்டத்துடிப்பதை பார்த்தால், தான் குட்டுவதை விட்டுக்கொடுக்கமாடேன் என்று குருவானவர் தமிழ்லீடர் அடம்பிடிக்கிறார். அவ்வளவுதான்.

ஆக, அக்டோபர் 10 ஆம் திகதி கூட்டமைப்பினர் டில்லி செல்லும் போது அங்கு அவர்களுக்குக் காத்திருக்கும் செய்தி என்ன என்பது இப்போது தெளிவானது. "பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்குச் செல்லுங்கள்" என்ற செய்தியே சம்பந்தக் குழுவினருக்குச் சொல்லப்படப்டபோகின்றது. ஆக, மகிந்த தரப்புக்கு அல்ல சம்பந்தன் தரப்புக்கே இந்தியா அழுத்தம் கொடுக்கப்போகின்றது. இதற்கு சம்பந்தன் தரப்பு 'தயங்கினால்', "நீங்கள் போங்கள்..மிகுதியை நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம்" என இந்தியா சொல்லலாம்.

.........................................

(இது பற்றி மற்றொரு கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்) இலங்கையுடன் பகைமையை வளர்ப்பதன் மூலம் தமக்கு எதிரானவர்களுடனேயே கொழும்பு இணைந்துகொள்ளும் என்பதுதான் இந்தியாவின் பிந்திய கண்டுபிடிப்பு.

எதை இந்தியா பார்த்துகொள்ளப் போகுது, இதுவரையில் எதை இந்தியா பார்த்துகொள்ளவில்லை என்பதை தமிழ்லீடர் சொல்லவில்லை. தான் எழுதிய பின்னர் வாசித்திருந்தால் மேல்கண்ட அறுவைப் பகிடியை தமிழ்லீடர் பிரசுரித்திருக்க மாட்டார் என்பது உண்மை.

ஆக, கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டிருக்கின்றது என்பதற்காக மகிந்த அரசின் மீது இந்தியா அழுத்தங்களை அதிகரிக்கும் என்பது எதிர்பார்க்கக்கூடியதல்ல

தெரிவுக்கு குழுவுக்கு போகவேண்டும் என்று கூறும் இந்தியா தேர்தலில் கூட்டமைப்பு நிற்கவேண்டும் என்று நிர்ப்பந்தித்ததாக தமிழ்லீடர் சொல்லுகிறது. பின்னர் கூட்டமைப்பின் தோல்வி இந்தியாவின் பிழை மட்டுமே. கூட்டமைப்பு தேர்தலில் நின்று இந்தியாவின் அழுத்தங்களுக்கு விட்டுகொடுத்தது என்று எழுதும் தமிழ்லீடர் பின்னர் என்ன எதிர்பார்ப்பு பற்றி எழுதுகிறார். மேலும் இதையேன் தமிழ்லீடர் தேர்தலை புறக்கணித்திருந்தால் இந்தியா அழுத்தங்களை அதிகரித்திருந்திருக்கும் என்றது போலக் காட்ட முனைகிறாரோ தெரியவில்லை.

டில்லி விஜயத்தின் போது இது கூட்டமைப்புக்கு தெளிவாக உணர்த்தப்படும். இனிமேலாவது இந்தியாவைக் காட்டி அரசியலை நடத்தாமல் தமது சொந்தக் காலில் நின்று அரசியல் செய்வதற்கான உபாயங்களை கூட்டமைப்பின் தலைமை வகத்துக்கொள்ள வேண்டும்.

தமிழ்லீடர் கூட்டமைப்பை குயக்கத்தனமாக பிழை சாட்டுவதை விட்டுவிட்டு நல்ல செய்திகளை பிரசுரித்தது பத்திரிகை நடத்த முன்வந்தால் எப்படி?

http://tamilleader.c...8-08-10-29.html

கொழும்பு தமிழ்லீடர் பார்த்தீபன்,

தன்னையும் இந்தியாவிற்குக் கூட்டிச்செல்லாததால் கோபத்தில் எழுதியிருக்கிறார்.</p></p>

Edited by Iraivan

எதேச்சதிகாரமாக, ஜனநாயக விரோதமாக செயற்படும் சம்பந்தன், சுமந்திரன் போன்ற பகுத்தறிவற்ற ஜென்மங்களுக்கும் வக்காலத்து வாங்க ஒருசிலர் இருப்பது தமிழினத்தின் பின்னடைவுக்கு முக்கிய காரணம்.

[size=1]சிலருக்கு குறை சொல்லுவதே வேலையாபோட்டுது[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.