Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இடத்துக்கு இடம் நிறம் மாறும் மனிதம்: கொடுமை காணீர்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Mull_skeletons_2012_04.jpg

[An assault rifle and fragments of skull coming out at a scratch of the earth in a mass burial area. Mu'l'livaaykkaal bunker area.]

ஐரோப்பாவில்..

ஒற்றைச் சிறுமியின்

கடத்தல்...

ஒரு தேசமே

கண்ணீர் வடிக்கிறது..!

இந்து சமுத்திரத்தில்

ஒரு தேசமே

கூட்டழிப்பு

யார் கண்ணிலும்

தண்ணீர் படாத

துயரமங்கு..!

மண்ணோடு மண்ணான

மண்டை ஓடுகளும்

விடுதலைக்காய்

முழங்கித் தள்ளிய

துப்பாக்கிகளும்

பயங்கரவாதக் கூக்குரலில்

அடிபட்டு..

கூடவே உக்கி

உரமாகின்றன..!

தூரத்தே இருந்து

கூச்சலடித்த கூட்டமும்

மனிதப் பிணங்களின்

"ஸ்கோர்" எண்ணி

செய்தி போட்ட

ரொய்டர்களும் ஏ எவ் பிகளும்

ஏ பிகளும்

இன்னும் இன்னும்

பிழைப்பை ஓட்டிய தீரர்களும்

இன்று

எதிரிகளின்

சட்டைப்பைக்குள்

கை விட்டபடி

மெளனிகளாக..!

எல்லோரும்

மனிதர் தாம்

இருந்தும்...

ஒருவருக்கு

சொந்த தேசமாம்

அவர் தொலைவில்

மொத்த

தேசமே அழுகிறது..!

மற்றவருக்கோ

அவர் சாவிலும்

அழ

யாருமற்ற

நாதி நிலை..!

அவரெல்லாம்

அடுத்தவர் தேசத்து

அடிமைகளாம்...!!!!

மனிதரில்

வலிமை

எழுதும் தீர்ப்பதில்

மனிதாபிமானம்

தூக்கிலிடப்படும்

தருணங்கள் மட்டும்

கண்கட்டு வித்தைகளாய்

கண்ணிரண்டிருந்து

மறைக்கப்படும் அவலம்..!

இவையும்

சனநாயகமோ..

மனிதாபிமானமோ..??!

சாவுக்கு முன்

லிங்கனும்

காந்தியும் புத்தனும்

இவை காணின்

தத்துவமல்ல

தரித்திரம்

என்றே

தம்மை மாய்த்திருப்பர்..!

இருந்தும்

இயற்கையின் விதிப்படி

சுழலுது

உலகம்...!

நொந்து அழும்

என் மனதும்

கூடவே சுழல்கிறது

செய்யக்

கேட்க

செயலற்ற

"ரோபோ"வாக

என் வாழ்க்கை....!

மனிதம்

இடத்துக்கு

இடம்

நிறம் மாறும்

கோலம்

அவலம்..!

இருந்தும்

அலட்டிக் கொள்வதில்லை..!

மெளனித்த

வாய் திறப்பின்

நாளை

என்

மனிதமும்

நிறம் மாறலாம்

கேள்விக்குறி ஆகலாம்..!

படம்: ஆனந்தபுரம் மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் இருந்து தமிழ்நெட்..!

மேலும் ஆனந்தபுரம் முள்ளிவாய்க்கால் பேரவலங்கள்.. பற்றிய தற்போதைய சுவடுகளுடன்.. கண்ணீர் சொட்டச் செய்யும் செய்தி.. இங்கே கீழுள்ள இணைப்பில்..

http://www.tamilnet....=79&artid=35617

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நிஜம் கவிதையாய் வந்தது அழகு.

[size=4]நொந்து அழும்[/size]

[size=4]என் மனதும்[/size]

[size=4]கூடவே சுழல்கிறது[/size]

[size=4]செய்யக்[/size]

[size=4]கேட்க[/size]

[size=4]செயலற்ற[/size]

[size=4]"ரோபோ"வாக[/size]

[size=4]என் வாழ்க்கை....![/size]

பலரது வாழ்க்கையும் இப்படித்தான்.

மனிதம்

இடத்துக்கு

இடம்

நிறம் மாறும்

கோலம்

அவலம்..!

இருந்தும்

அலட்டிக் கொள்வதில்லை..!

மெளனித்த

வாய் திறப்பின்

என்

மனிதமும்

நாளை

கேள்விக்குறி ஆகலாம்..!

சிந்திக்க வைக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் கருத்துக்கு நன்றி. தமிழ்நெட்டின் இந்தச் செய்தியை வேறிடங்களிலும் பரப்பிவிடுங்கள்..! இது உலகறிய வேண்டிய மனித அவலம்..!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்கு

கவிதைக்கும் நேரத்திற்கும்

எங்கே ஆளைக்காணக்கிடைக்குதில்லை.

நன்றி நெடுக்ஸ் கவிதைக்கு ..........

பலநாட்களாய் நானும் காணவில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை எப்போதும் சீராக இருப்பதில்லை இல்லையா.. கொஞ்சம் அலுவல் ஜாஸ்தி.. அதுதான்...! கடந்த இரண்டு மூன்று நாட்களா வாறேனே..! :)

உங்கள் இருவரினதும் (விசுகு அண்ணா மற்றும் தமிழ்சூரியன்) அன்புக்கு நன்றி..! :)

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு

நாயொடுக்கி வைத்தாலும் இங்கு சட்டத்தின் முன் குற்றவாளிகள்.

எல்லோருமே சுயநலவாதிகள். உலகம் முழுவதும் ஆதிக்க வர்க்கமே ஆட்சி அதிகாரங்களில் இருக்கின்றன. ஒரு விடுதலைப் போராட்டம் ஆதிக்க சக்திகளுக்குச் சவால் விட்டு உலக அளவில் வியப்பிற்குரியதாக வருவதை மொத்த உலகமும் விரும்பவில்லை. அதுதான் ஆயிரக்கணக்கான மக்கள் நாளாந்தம் கொன்று குவிக்கப்படும்போதும் சரி இன்றுவரை நீண்ட காலமாக சித்ரவதைகளும் அடக்குமுறைகளுக்குள்ளும் உழலுவதையும் சரி காணாதவர்கள்போல் தவிர்க்க சந்தர்ப்பங்கள் தேடுகிறார்கள். இப்போதுகூட அடக்குமுறைக்கு உள்ளாகும் மக்களுக்கான சுபீட்சமான வாழ்நிலையைத் தோற்றுவிக்க எவராலும் முடியவில்லை காரணம் எல்லோருமே ஒரு விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாத முத்திரையைக் குத்தி அழிப்பதற்கு முழுமையான ஆதரவை வழங்கித் தொலைத்துவிட்டார்களே இப்போது அந்த மக்களுக்கு ஆவன செய்வதென்றால் முதலில் அழிப்பிற்கு ஆதரவு கொடுத்த நாடுகளையெல்லாம் சிங்களம் நிற்க வைத்துக் காட்டிக் கொடுக்குமே... மனிதாபிமானத்தைக் காட்டிலும் அதிகாரமையங்கள்தானே உலக ஆட்சியில் இருக்கின்றன. எல்லோரும் ஒட்டு மொத்தமாக குற்றவாளிகள் இதில் யாரை யார் இனி குற்றவாளிகள் என்று காட்டிக் கொடுப்பது? இல்லாத மனிதாபிமானத்தை பேச்சுப்பல்லக்கில் சுமக்க உலகம் முழுக்க தயாராக இருக்கிறது.

நல்லதோர் கவிதை தம்பி. பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இன்று[/size]

[size=4]எதிரிகளின்[/size]

[size=4]சட்டைப்பைக்குள்[/size]

[size=4]கை விட்டபடி[/size]

[size=4]மெளனிகளாக..![/size]

நெடுக்கர், ஒரு சில வார்த்தைகளுக்குள், எமது பிறப்புரிமைகளை, விற்றவர்களை, இனம் காட்டியுள்ளீர்கள்!

நன்றாக இருக்கின்றது, உங்கள் கவிதை! :D

எனக்குப் படம் தெரியுதில்லை!

முள்ளிவாய்க்கால், ஆனந்தபுரம் என்றால், தெரியாமல் விட்டாலும் பரவாயில்லை!

என்ன அதில் இருக்கும், எனபது வெள்ளிடை மலை தானே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி வல்வை அக்கா மற்றும் புங்கையூரன்..! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.