Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழருக்கான தற்கால அரசியல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜா வருகிறாராம். போகலாம் என்பவர்கள் சிலர். புறக்கணிக்க வேண்டும் என்பவர்கள் சிலர். நமக்கேன் வம்பு என்று இருப்பவர்கள் பலர். :D

இதை கொஞ்சம் விரிவாகச் சிந்தித்தபோது மனதில் தோன்றுவதை இங்கே பதிவிடுகிறேன். உங்கள் கருத்துக்களையும் பதிவிடுங்கள். :unsure:

ஆயுத அரசியல் என்பது நெகிழ்வுத்தன்மை அற்றது. காலம்தாழ்த்துதல், சகித்துக்கொள்ளல் பாரிய அழிவில் முடித்துவிடும். வெட்டு ஒன்று துண்டு இரண்டு இருந்த புலிகள் தப்பிப் பிழைத்து வந்தார்கள். சர்வதேசத்தை அனுசரிக்க ஆரம்பித்தபின் மெல்ல மெல்ல அழிவு வந்தது.

இது புலிகளுக்குத் தெரியாதது என்பதல்ல என் கருத்து. அவர்களும் தெரிந்தே ஒரு முடிவுக்கு இட்டுச் சென்றார்கள் என எண்ணுகிறேன். எந்த ஒரு போராட்ட வடிவத்திற்கும் ஒரு கால எல்லை உண்டு. அந்தவகையில் ஆயுதப்போரின் கால எல்லை முடிந்துவிட்டது.

இன்று ஜனநாயக அரசியலுக்கான இரண்டாவது முறை. ஏற்கனவே தந்தை செல்வா காலத்தில் முயன்றதுதான். அன்று யாருமே எட்டிப்பார்க்கவில்லை. அதிகூடியபட்சம் இந்தியாதான். இன்று ஐநா சபைவரையில் பிரச்சினை சென்றிருக்கிறது.

இந்த அரசியல் முறைக்கு ஏற்ப எமது அணுகுமுறைகள் மாற்றமடைந்திருக்கின்றனவா? பெருமளவில் இல்லை என்பதே பதிலாக இருக்கிறது. ஆயுத அரசியலில் இருந்த நெகிழ்வின்மையை ஜனநாயக அரசியலிலும் பின்பற்றுகிறோமா என எண்ணத் தோன்றுகிறது.

ஒரு ஒப்பீட்டுக்கு சிங்களவனின் அரசியலைப் பார்ப்போம். இராணுவ விவகாரங்களில் இன்றுவரையில் நெகிழ்வற்ற தன்மையையே பின்பற்றுகிறான். புலனாய்வுப் பிரிவின் கடத்தல்கள், கொலைகள் மிரட்டல்கள், ஒட்டுக்குழுக்கள் என்று போய்க்கொண்டிருக்கிறார்கள். அதே சமயத்தில் பன்னாட்டு அரசியலில் பலவற்றையும் நெகிழ்வுத்தன்மையுடன் கையாண்டு இன்றுவரையில் தாக்குப்பிடிக்கிறார்கள்.

வீராப்புடன் இலங்கைக்குச் செல்லும் ஐநா அதிகாரிகளையும், இந்திய அரசியல்வாதிகளையும் திரும்பி வரும்பொழுதில் எல்லாம் திருப்தியாக இருக்கிறது என்று சொல்லவைக்கிறார்கள். இதைக்கேட்டு எமது இரத்தக் கொதிப்பு அதிகமாகிறதே தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை.

சிந்தித்துப் பார்த்தால் நினைக்கவே முடியாத சிக்கலான சூழல் சிங்களவனுக்குத்தான் உள்ளது. ஐநாவின் நிபுணர்குழு அறிக்கையே போர்க்குற்றத்திற்கான முகாந்திரம் உள்ளது எனச் சொல்லிவிட்டது. ஆனால் எதற்கும் செல்லுபடியாகாத நல்லிணக்க குழு அறிக்கையை முன்னே தள்ளி அதை முன்னிலைபெற வைத்துவிட்டான். ஆனானப்பட்ட அமெரிக்காவே நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையோடுதான் நிற்கிறது.

ஆனால் நாம் செய்வது என்ன? எமக்கான தற்கால அரசியல் எவ்வாறு இருக்க வேண்டும்? :unsure:

(உறவுகளின் கருத்துக்களின் அடிப்படியில் தேவையான அளவுக்கு விரிவாக்க முயற்சிக்கிறேன். :unsure: )

[size=4]வீராப்புடன் இலங்கைக்குச் செல்லும் ஐநா அதிகாரிகளையும், இந்திய அரசியல்வாதிகளையும் திரும்பி வரும்பொழுதில் எல்லாம் திருப்தியாக இருக்கிறது என்று சொல்லவைக்கிறார்கள். இதைக்கேட்டு எமது இரத்தக் கொதிப்பு அதிகமாகிறதே தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை.
[/size]

[size=4]ஐ.நா. அதிகாரிகள் அங்கு எல்லாம் நன்றாக உள்ளது என்பதால் அவர்களின் அறிக்கை அவ்வாறு இருக்கும் என்றில்லை. ஈராக்கில் கூட அப்படித்தான் செய்தார்கள், ஆனால், இறுதியில் ஆப்பு வைத்தார்கள். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியெல்லாம் கேள்வி கேட்டால்...

[size=4]இளையராஜா வருகிறாராம். போகலாம் என்பவர்கள் சிலர். புறக்கணிக்க வேண்டும் என்பவர்கள் சிலர். நமக்கேன் வம்பு என்று இருப்பவர்கள் பலர். [/size] :D

[size=4]இந்த நிகழ்வு புனித மாவீரர் வாரத்தில் நடக்காத வரைக்கும் எனக்கு அதில் பாரிய தவறுள்ளதாக தெரியவில்லை. காரணம் இந்த நிகழ்விற்கு போகும் மக்கள் மாவீரர் நிகழ்விற்கும் பங்களிப்பவர்கள் இருப்பார்கள்.

எதையும் ஏற்று இலக்கை நோக்கை அனைவரையும் அணைத்து பயணிக்கவேண்டும்.

எம்மை பிரிக்க எண்ணும் சக்திகளுக்கு நாம் இடமளிக்க கூடாது. [/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[/size]

[size=4]ஐ.நா. அதிகாரிகள் அங்கு எல்லாம் நன்றாக உள்ளது என்பதால் அவர்களின் அறிக்கை அவ்வாறு இருக்கும் என்றில்லை. ஈராக்கில் கூட அப்படித்தான் செய்தார்கள், ஆனால், இறுதியில் ஆப்பு வைத்தார்கள். [/size]

தமக்கான அனுகூலங்கள் அமையும்வரையில் செயற்படமாட்டார்கள் எனக் கருதுகிறேன்.. பின்புலத்தில் இருக்கும் சக்திகளுக்கு தமிழருக்கான நாட்டைக் கொண்டுவந்தால் ஒரு வியாபார நன்மை வரும் என்கிற எண்ணம் வரவேண்டும்.. இது என் கருத்துதான்..

[size=4]ஒரு ஒப்பீட்டுக்கு சிங்களவனின் அரசியலைப் பார்ப்போம். இராணுவ விவகாரங்களில் இன்றுவரையில் நெகிழ்வற்ற தன்மையையே பின்பற்றுகிறான். புலனாய்வுப் பிரிவின் கடத்தல்கள், கொலைகள் மிரட்டல்கள், ஒட்டுக்குழுக்கள் என்று போய்க்கொண்டிருக்கிறார்கள். அதே சமயத்தில் பன்னாட்டு அரசியலில் பலவற்றையும் நெகிழ்வுத்தன்மையுடன் கையாண்டு இன்றுவரையில் தாக்குப்பிடிக்கிறார்கள்.
[/size]

[size=4]இந்த நெகிழ்வுத்தன்மையை சிங்களம் சர்வதேசத்தின் பலவீனம் என எண்ணி செயல்படுவதே எமக்கு நல்லது :D[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஒரு நிகழ்வையும் எமக்கு சாதகமாகவும் மாற்றலாம்; பாதகமாகவும் மாற்றலாம். எல்லா நாணயங்களுக்கும் இருபக்கங்கள் உள்ளன. எப்போதும் தலைதான் என்று சொல்லிக்கொண்டிருக்க முடியாது. பிறகு வால் வந்தால் எரிச்சலாகிவிடும்.

உதாரணத்திற்கு பசுமை மின்சார உற்பத்தியை எடுத்துக் கொள்வோம். காற்றாலைகள் அமைக்கப்படுவதைப் பலர் வரவேற்கிறார்கள். ஆனால் அவற்றை எதிர்ப்பவர்களும் நிறையவே உள்ளார்கள். அவற்றின் இரைச்சல் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது என்பது அவர்களது வாதம். விரிவான நன்மை (Greater good) என்ன என்பதை வைத்தே காலச்சக்கரம் சுழன்றுகொண்டுள்ளது.

அதேபோல கூடங்குள அணுமின் நிலையம். இருதரப்பு வாதங்களும் உள்ளன. இன்று தமிழகத்தில் உறவினருடன் உரையாடியபோது நேற்று 20 மணிநேர மின்வெட்டாம். அணுமின் நிலையம் வந்தால் பரவாயில்லை என்று சொல்லக்கூடிய, அதாவது விரிவான நன்மையை நோக்கி (அரசுக்கான நன்மை) மக்களை இட்டுச்செல்ல வைக்கும் திருட்டுத்தனமான ஒரு தந்திரமாகவே இதை நான் பார்க்கிறேன்.

இன்று இளையராஜா நிகழ்வையும் ஏற்பாடு செய்துவிட்டார்கள். இந்த நிகழ்வை எமது நன்மைக்காவவும் சுழற்றலாம். தீமைக்காகவும் சுழற்றலாம். எது நன்மை? எது தீமை? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில் நெளிவு, சுழிவு வேண்டும். நாங்கள்தான் வைரம் ஆச்சே. வளையமாட்டோம்; ஆனால் நொறுங்குவதைப் பெருமையாக நினைப்போம். எந்த விடயத்தையும் நமக்கு எப்படிச் சாதமாக்குவது என்று யோசித்தால் நெகிழ்வுத்தன்மையைக் கடைப்பிடிக்கப் பழகலாம்.

இளையராஜா கச்சேரிக்கான எதிர்ப்பில் வெறும் வரட்டுக் கெளரவமும் திமிரும் பிடித்த அரசியலே தெரிகின்றது. வழமைபோன்று மக்களை உசுப்பேற்ற மாவீரர் தினத்தை வைத்து உணர்ச்சி அரசியலில் இறங்கியுள்ளனர். இவர்களின் முயற்சியைப் பிசுபிசுக்கச் செய்து முகத்தில் கரி பூசினாலும் அவர்கள் தமக்கு ஆதாயம் கிடைக்கும்வரை மாறமாட்டார்கள்..

எதுவுமே சாத்தியமில்லாத ஒரு திருசங்கு நிலையில் தான் இப்போ தமிழர்கள் எதிர்காலம் உள்ளது .யுஎன் அறிக்கை ,போர்குற்றங்கள் ,நல்லிணக்க ஆணைக்குழு இவைகள் எல்லாம் எங்கு போய் முடியும் என்று எவருக்கும் தெரியாது .

எமது அரசியல்வாதிகள் நாட்டிலும் சரி புலம் பெயர்ந்த நாடுகளிலும் சரி உண்மையானவர்களாக இல்லை ஆனால் தமிழர்கள் மத்தியில் தமது அரசியலை அந்த மாதிரி செய்கின்றார்கள் .அவர்களுக்கு எல்லாவற்றையும் விட தமது இருப்பு முக்கியம் .இதை அறியாது அவர்கள் பின் அள்ளுப்பட அவர்களை நம்ப ஒரு கூட்டம் இருக்கு மட்டும் எதுவும் சாத்தியமில்லை .

எனக்கு தெரிந்த தீர்வு இதுதான் -- முதலில் தமிழர்களுக்கு என்ன ஒரு நிரந்தர தீர்வு தரும் என்பதை உறுதியாக்கிவிட்டு அதை நோக்கி நகரவேண்டும் .

1-தமிழிழம் தான் ஒரே தீர்வு -மாற்று கருத்துக்கு இடமில்லை

2-சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஒரு மாகாண சபை -வடக்கு ,கிழக்கு இணைப்பு பொலிஸ் ,காணி அதிகாரம் உட்பட

3-இணக்க அரசியல் -தீர்வு என்பதற்கு காத்திருக்க முதல் மீள் குடியேற்றம் ,போராளிகள் ,சிறை கைதிகள் விடுதலை ,போருக்கு பின் நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதே முக்கியம்.

4.எல்லாவற்றிலும் முதல் இலங்கை அரசை போர் குற்றத்தில் சிக்க வைத்தல்

முக்கியமாக இந்த நான்கு விடயங்களிலும் தான் நாம் இப்போ பிளவு பட்டு அடிபடுகின்றோம் .

இதில் ஒற்றுமையாக ஒரு முடிவை எடுத்து அடுத்த கட்டத்திற்கு நகருவது தான் நல்லது இல்லாவிடில் எங்களுக்குள் அடிபட்டு கொண்டிருக்கையில் சிங்களம் தனது வேலைத்திட்டத்தை கச்சிதமாக நிறைவேற்றிவிடும்.ஒரே நாடு யாரும் எங்கும் இருக்கலாம் .அதைத்தான் இப்போ அவர்கள் விரைவாக செய்துவருகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஒரு நிகழ்வையும் எமக்கு சாதகமாகவும் மாற்றலாம்; பாதகமாகவும் மாற்றலாம். எல்லா நாணயங்களுக்கும் இருபக்கங்கள் உள்ளன. எப்போதும் தலைதான் என்று சொல்லிக்கொண்டிருக்க முடியாது. பிறகு வால் வந்தால் எரிச்சலாகிவிடும்.

உதாரணத்திற்கு பசுமை மின்சார உற்பத்தியை எடுத்துக் கொள்வோம். காற்றாலைகள் அமைக்கப்படுவதைப் பலர் வரவேற்கிறார்கள். ஆனால் அவற்றை எதிர்ப்பவர்களும் நிறையவே உள்ளார்கள். அவற்றின் இரைச்சல் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது என்பது அவர்களது வாதம். விரிவான நன்மை (Greater good) என்ன என்பதை வைத்தே காலச்சக்கரம் சுழன்றுகொண்டுள்ளது.

அதேபோல கூடங்குள அணுமின் நிலையம். இருதரப்பு வாதங்களும் உள்ளன. இன்று தமிழகத்தில் உறவினருடன் உரையாடியபோது நேற்று 20 மணிநேர மின்வெட்டாம். அணுமின் நிலையம் வந்தால் பரவாயில்லை என்று சொல்லக்கூடிய, அதாவது விரிவான நன்மையை நோக்கி (அரசுக்கான நன்மை) மக்களை இட்டுச்செல்ல வைக்கும் திருட்டுத்தனமான ஒரு தந்திரமாகவே இதை நான் பார்க்கிறேன்.

இன்று இளையராஜா நிகழ்வையும் ஏற்பாடு செய்துவிட்டார்கள்.[size=5] இந்த நிகழ்வை எமது நன்மைக்காவவும் சுழற்றலாம். தீமைக்காகவும் சுழற்றலாம். எது நன்மை? எது தீமை? [/size] :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கருத்துக்களுக்கு நன்றிகள் அர்ஜுன் அண்ணா..

  • கருத்துக்கள உறவுகள்

இசை குட்டைத் தலைவாசலுக்கு நுழையத் தெரியாத நெட்டை மனிதர்களைப்பற்றியா பேசுகிறீர்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இசை குட்டைத் தலைவாசலுக்கு நுழையத் தெரியாத நெட்டை மனிதர்களைப்பற்றியா பேசுகிறீர்கள்?

தனிப்பட யாரையும் குறிப்பிடவில்லை.. குழப்புபவர்கள் குழப்பிவிடும்போது அதற்கு எடுபடுபவர்களைத்தான் குறிப்பிடுகிறேன்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

இசை இங்கு யானும் தனிப்பட்ட முறையில் எவரையும் கூறிவில்லை

ஒரு உவமிப்புத்தன்மையுடன் எழுதினேன் அவ்வளவுதான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1-தமிழிழம் தான் ஒரே தீர்வு -மாற்று கருத்துக்கு இடமில்லை

2-சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஒரு மாகாண சபை -வடக்கு ,கிழக்கு இணைப்பு பொலிஸ் ,காணி அதிகாரம் உட்பட

3-இணக்க அரசியல் -தீர்வு என்பதற்கு காத்திருக்க முதல் மீள் குடியேற்றம் ,போராளிகள் ,சிறை கைதிகள் விடுதலை ,போருக்கு பின் நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதே முக்கியம்.

4.எல்லாவற்றிலும் முதல் இலங்கை அரசை போர் குற்றத்தில் சிக்க வைத்தல்

முக்கியமாக இந்த நான்கு விடயங்களிலும் தான் நாம் இப்போ பிளவு பட்டு அடிபடுகின்றோம் .

இதில் ஒற்றுமையாக ஒரு முடிவை எடுத்து அடுத்த கட்டத்திற்கு நகருவது தான் நல்லது இல்லாவிடில் எங்களுக்குள் அடிபட்டு கொண்டிருக்கையில் சிங்களம் தனது வேலைத்திட்டத்தை கச்சிதமாக நிறைவேற்றிவிடும்.ஒரே நாடு யாரும் எங்கும் இருக்கலாம் .அதைத்தான் இப்போ அவர்கள் விரைவாக செய்துவருகின்றார்கள்.

அர்ஜுன்;

நீங்கள் சொன்னது எழுத படிக்க நல்லா இருக்கும், ஆனால் எந்த ஒடேரில் செய்ய போகிறீங்கள்..அதை ஒருக்கா சொன்னால் நல்ல இருக்கும்...அதுதானே 40 வருடமாக நடக்குது..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இசை இங்கு யானும் தனிப்பட்ட முறையில் எவரையும் கூறிவில்லை

ஒரு உவமிப்புத்தன்மையுடன் எழுதினேன் அவ்வளவுதான்

நன்றிகள்..! :D

இன்று எமது போராட்டத்திற்கான திறவுகோல் தமிழகத்தில் உள்ளது என்பதுதான் எனது பரிபூரணமான நம்பிக்கை. புரட்சிகர தமிழ்தேசியன் இதை ஒத்துக்கொள்ளமாட்டார்.. :D ஆனால் இது எனது நம்பிக்கை.. ஈழத்திலிருந்து தமிழகம்.. தமிழகத்திலிருந்து பாரதம்.. பாரதத்திலிருந்து மேற்குலகம்.. இதுதான் ஒரே வழியாக எனக்குப் படுகிறது..

இப்படியான ஒரு நிலையில், தமிழகத்தின் ஆதரவைப் பெருக்க வேண்டியது நம் கடமைகளுள் ஒன்று. குறைந்தபட்சம் இருப்பதைக் கெடுக்காமல் இருக்கவாவது செய்ய வேண்டும்.

திரைப்படத்துறையில் அந்நிய வருமானம் வளர்ந்தபின் ஈழவிடுதலைக்கு திரைத்துறையில் உள்ளவர்களின் ஆதரவு கூடியிருப்பதும் உண்மைதானே.. காரணம் இங்குள்ள வியாபார அனுகூலங்கள் அவர்கள் எங்களுடன் கலப்பதற்கு ஒரு வழியை அமைத்துக் கொடுத்திருக்கிறது.. இதுவும் ஒரு விழிப்பூட்டலே..

ஆக, வியாபார வளர்ச்சி தவிர்க்க முடியாதது. அதை எதிர்த்து புறக்கணிக்காமல் அவர்களையும் எம்பக்கம் இழுப்பது புத்திசாலித்தனமே..

சிங்களப் பொருட்களைப் புறக்கணிக்கக் கோருவது இன்னொரு போராட்ட வகை.. சிலர் புறக்கணிக்கிறார்கள்.. பலர் புறக்கணிப்பதில்லை.. அதற்காக இப்போராட்டத்தைக் கைவிட முடியாது.. இதைக் காரணமாகக் கொண்டு வணிக நிலையங்களை எமக்கான போராட்ட களங்களுக்கு ஆதரவு வழங்கக் கோருவது நடைமுறை சாத்தியமானது.. அதாவது அவர்கள் சிங்களப் பொருட்களை விற்கவே செய்தாலும் எமது போராட்டத்திற்கான ஆதரவை வழங்கக் கோருதல்.. பாதகத்தை சாதகமாக்கும் ஒரு வழிமுறை.. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

சில தமிழ் நாட்டு கலைஞர்களை இலங்கை அரசு தமது அரசியல் லாபத்துக்காக பயன்படுத்த முயல்வதை நாம் அக்கலைஞர்களுக்கு சுட்டிக்காட்டினால் போதுமானது.மற்றும் படி தமிழ் நாட்டுக்கும் எமக்கும் உள்ள தொப்புள் கொடி உறவை கலைத்துறை வளர்க்கிறது என்றால் மிகையாகாது.அந்த வகையில் மாவீரர் வாரத்தில் இளையராஜாவின் நிகழ்ச்சி நடைபெறாததால் இதனை பெரிதாக எடுப்பவர்கள் உண்மையாக தமிழர் மேல் அக்கறை கொண்டவர்களாக தெரியவில்லை.மேலும் இளையராஜா எனும் கலைஞர் நானறிந்த வரையில் எந்த வித அரசியலிலும் ஈடுபடாதவர்.

எம்மவர்களின் அரசியல் காலம் காலமாக "வைத்தால் குடுமி எடுத்தால் மொட்டை" எனும் படி இனியும் இருக்காமல் சில பல அரசியல் நெளிவுகளில் நெகிழ்வு தன்மையை காட்ட தயங்க கூடாது.

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.