Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிரிக்கட் போட்டியில் சிறீலங்கா தோல்வி - யாழில் வெடிகள் கொழுத்தி ஆரவாரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

soothanai14.jpg

[size=3][size=4]20 ரி.20 கிரிக்கட் போட்டியில் சிறிலங்கா அணி தேற்றதையடுத்து யாழ்.குடாநாடு முழுவதும் இளைஞர்கள் வெடிகொளுத்தி ஆரவாரம் செய்துள்ளனர்.[/size]

[size=4]இவ்வாறு வெடி கொழுத்தி ஆரவாரம் செய்த இளைஞர்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் காட்டுமிராண்டித் தனமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

ரி.20 உலக கிண்ண பேட்கள் அண்மையில் ஆரம்பமாகி நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டி இன்று இரவு 7 மணிக்கு கொழும்பு பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது.

இப் போட்டிகளின் நேரடி காட்சிகள் யாழ்.குடாநாட்டில் உள்ள பல பொது இடங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதனை ஏராளமான கிரிக்கட் ரசிகர்கள் பார்வையிட்டனர்.

சிறிலங்கா மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சிறிலங்கா அணி படுதேல்வியடைந்துள்ளது.

இதனையடுத்து சிறிலங்கா அணியின் தேல்வியைக் கொண்டாடும் முகமாக இளைஞர்கள் வெடிகொழுத்தியும், சத்தமிட்டும் ஆராவரம் செய்துள்ளனர்.

இதனால் கோபமடைந்த சிறிலங்கா இராணுவத்தினர் குறித்த இளைஞர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இவ்வாறு வெடிகொழுத்தி ஆரவாரம் செய்பவர்களை கட்டுப்படுத்தும் முகமாக சிறிலங்கா இராணுவத்தினர் வீதிகளில் அலைந்து திரிவதையும் காணக்கூடியதாக உள்ளது என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.[/size][/size]

[size=4]http://www.eeladhesa...chten&Itemid=50[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]தாய் நாட்டுக்கு யாழில் ஆதரவு...[/size]

[size=2]

JC01(1).jpg

[size=4](எஸ்.கே.பிரசாத்)

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை பொது மக்கள் பார்ப்பதற்கு ஏற்ற வகையில் யாழ்ப்பாணத்தில் எல்.ஈ.டி வோல்ட் திரை அமைக்கப்பட்டு காண்பிக்கப்பட்டு வருகின்றது.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் இலங்கை அணிக்கு ஆதரவாக தேசியக் கொடியை ஏந்தியவாறு ஆர்ப்பரித்தவண்ணம் தங்களது ஆதரவினை வழங்கி வருகின்றனர்.

கடந்த 27ஆம் திகதி தொடக்கம் யாழ் சுப்பிரமணியம் பூங்காவிற்கு முன்னால் உள்ள மாநகரசபை வளாகத்தில் இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

JC02(1).jpg

JC03(1).jpg

JC04.jpg

JC06.jpg

JC07.jpg

JC08.jpg[/size]

JC09.jpg[/size]

http://www.tamilmirror.lk/--main/50050-2012-10-07-14-30-07.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இந்த இரண்டு செய்திகளுமே ஒன்றுகொன்று முரணாக இருக்கின்றது இரண்டினையும் இணைத்துள்ளேன் இதுபற்றி மேலதிகமாக தெரிந்தவர்கள் எழுதவும். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே கொடிபிடிப்பவர்கள் சிங்களவர்களாகவும் இருக்கலாம்.. வெடி கொளுத்தியவர்களின் துணிச்சலுக்குப் பாராட்டுக்கள்..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி.....விளையாட்டை வைத்து ..காய் நகர்த்தப் பார்த்தது சொறிலங்கா..வெடிகொளுத்துவாங்கள்......என்று தெரி.யும்...இப்படியும் படம் காட்டலாம் ....தயரித்தும் வைத்திருப்பினம்....அங்கை இப்ப ஆள் இருக்கினம் தானே.....கக்கீம் சொந்தக்காரரும்...டங்கன்சும்.....ஓசிலை த்ண்னி கிடைத்தால்

ஆடலாம்....கொடிபிடிக்கலாம்...எங்கடை சம்பந்தர் கூட கொடிபிடித்த்வர் தானே....அது சரி இது எழுதின ரிப்போட்டர் பெயர் ரோ மாமவின்டை ஆட்கள் மாதிரி கிடக்கு....உண்மையோ

புலிக்கொடி பிடித்த அரசு வெடியை கொழுத்தி, யாராவது போன அப்பாவிகளை அடித்துவிட்டு புலிகளை அடித்ததாக கூறும்.

அஸ்வின் தான் செய்த தவறின் தன்மையை உணர்ந்து ”நான் இலங்கையின் ஆதரவாளன் இல்லை. இந்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம். ஆனால் பொருத்திருந்து பாருங்கள் நான் சொன்னது தான் நடக்கும்” என்று மறுபடியும் அதையே கூறியிருக்கிறார்

Edited by மல்லையூரான்

[size=4]சிங்களம் துடுப்பெடுத்தாட்டத்தில் வென்றிருந்தாலும் அடி விழும் தமிழர்களுக்கு :([/size]

அப்படியும் நடக்காதா என கனவு கனவு காண்கின்றார்கள் .

பாவம் இவர்கள் வாழ்வே கனவாகி போனதுதான் பரிதாபம் .

  • கருத்துக்கள உறவுகள்

முன்னரைப் போன்று யாழ்ப்பாணத்துக்கு தொடர்புகள் எடுப்பது சிரமமான விடயம் அல்ல. ஆகவே, அனைத்து உறவுகளும் தொடர்பு கொண்டு அங்கே வெடி கொளுத்தப்பட்டதாக எனக் கேளுங்கள்.

சிறிலங்கா அணி தோல்வியுற்றது அறிந்து யாழில் எங்காவது வெடி கொளுத்தப்பட்டதா என அங்குள்ளவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லையே என தெரிவித்தனர். இவ்வாறு தெரிவித்ததோடு மட்டுமல்லாது அவ்வாறு எல்லாம் நடைபெற வேண்டும் என புலத்தில் உள்ள நீங்கள்தான் விரும்புகின்றீர்கள் போல உள்ளது என எம்மைத் திட்டித் தீர்த்தனர்.

குறிப்பிட்ட சிலரை தொடர்பு கொண்டு கேட்டது மட்டுமல்லாது எனக்குத் தெரிந்த ஊடக நண்பர்களையும் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் கடுமையாக என்னை திட்டித் தீர்த்தனர்.

அங்கே தாம் நிம்மதியாக வாழ்வதில் புலம்பெயர் தமிழர்களுக்கு உடன்பாடே இல்லையா எனக் கேள்வி எழுப்பியதோடு- மேற்படி இணையத்தளச் செய்தி தொடர்பாக தம்மிடம் பலர் தொடர்பு கொண்டு கேட்டதாகவும் தெரிவித்தார். அந்த இணையத்தளத்துக்கு அங்கிருந்து செய்திகள் கொடுப்பதற்கு யாரும் இல்லாத நிலையில் எவ்வாறு இவர்களாக செய்திகளை உருவாக்கி வெளியிடுகின்றனர் என்று திட்டித் தீர்த்தார். (தமது ஆசையை இவ்வாறு செய்தியைப் போட்டு தீர்த்துள்ளனர் போலத்தான் எனக்கு தென்படுகின்றது.)

ஆகவே, கண்மூடித்தனமாக செய்திகளைப் போடுவது தொடர்பில் மேற்படி இணையத்தளங்கள் கவனமாகச் செயற்பட வேண்டும். இவ்வாறான இணையத்தளங்களின் செய்திகளை யாழ் இணையத்தளத்தில் இணைப்பதற்கு தடை விதிக்க வேண்டும். தேவையற்ற விதத்தில் இவ்வாறான செய்திகளால் அங்கே வாழ்ந்து வருகின்ற மக்களுக்கு இடையூறுகளை தெரிந்தோ தெரியாமலோ ஏற்படுத்தி வருகின்றனர்.

அவ்வாறு வெடி கொளுத்தி மகிழ விரும்பின் நீங்கள் எங்கிருந்து சொகுசாக இணையத்தளம் நடத்துகின்றீர்களோ அங்கு வெடியைக் கொளுத்தி பின்னர் செய்தியாக வெளியிடலாமே. இது என்ன சினிமா நடிகைகளின் கிசுகிசுச் செய்திகள் போல எழுதி பின்னர் மறந்துவிடக் கூடிய விடயமா? பூனைக்கு விளையாட்டு; சுண்டெலிக்கு சீவன் போகின்றது என்பது போன்று அல்லவா உங்கள் செய்கைகள் இருக்கின்றன.

மீண்டும், மீண்டும் கேட்டுக்கொள்வது இதுதான், அந்த மக்களின் தலைவிதியை அவர்களே தீர்மானிக்கட்டும். புலத்தில் சொகுசாக இருந்து கொண்டு அவர்களுக்கு அந்தத் தீர்வினைக் கொடுங்கள் இந்தத் தீர்வினைக் கொடுங்கள் என நீங்கள் வலியுறுத்த வேண்டியது இல்லை. அப்படி வலியுறுத்த விரும்பினால் அந்த மண்ணில் மக்களோடு மக்களாக இருந்து வலியுறுத்துங்கள்.

Edited by nirmalan

உங்கள் தொடர்புகளை தமிழ் மிரரிடம் கொடுத்து உண்மையை கண்டறிய சொல்லாமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.