Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சூதாட்டமே விளையாட்டிக்கிப் போன கிரிக்கெட்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிரிக்கெட் சூதாட்டம்.. கிரிக்கெட்டின் நன்மதிப்பை இல்லாமல் செய்வது புதிதல்ல. ஆனால் இப்போது இந்தியா ரிவி என்ற ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியால் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு போட்டியாக நடுவர்களும் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கு கிளம்பி இருக்கிறது.

அதுவும் நடந்து முடிந்த T20 சர்வதேச கிரிக்கெட் கிண்ணப் போட்டியை மையமாக வைத்து இந்த கிரிக்கெட் சூதாட்டத்திற்கு திட்டமிடப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. இதில் சிறீலங்கா.. பாகிஸ்தான்.. வங்காளதேசம் நாடுகளைச் சேர்ந்த 6 நடுவர்கள் பங்கெடுத்திருப்பதாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உடனடியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ICC launches inquiry into new match-fixing allegations

The International Cricket Council has launched an "urgent investigation" into match-fixing allegations.

India TV has alleged six umpires were willing to fix World Twenty20 games ahead of the tournament in a programme broadcast on Monday.

Cricket's governing body has called on the broadcaster to hand over evidence that could help its investigation.

It said: "None of the umpires named were involved in any of the official games of the ICC World Twenty20."

India TV has alleged the umpires - whom it says are from Sri Lanka, Pakistan and Bangladesh - were willing to fix matches for money during the tournament, which was won by West Indies on Sunday.

http://www.bbc.co.uk/sport/0/cricket/19876782

[size=4]பரம இரசிகர்களை முட்டாள்கள் ஆக்கப்படுள்ளனர். இது தெரியவந்துள்ளது, தெரிய வராமல் இருப்பது எத்தனை ?[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அநேக கிரிக்கெட் சூதாட்டங்களில் பாகிஸ்தானியர்களும் சிங்களவர்களும் ஈடுபட்டிருப்பதால்.. இவர்கள் சார்ந்த இரண்டு நாடுகளையும் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து நிறுத்தி வைப்பதே... கிரிக்கெட்டில் சூதாட்டத்தை திணிக்க விரும்புகிறவர்களுக்கு ஒரு காட்டமான எச்சரிக்கை மிகுந்த செய்தியைச் சொல்லும்..!

சிறீலங்கா கிரிக்கெட் விளையாட தகுதியே அற்ற ஒரு நாடு..! அதற்கு ஒரு உருப்படியான கிரிக்கெட் சபை கூட இல்லை. எங்கும் அரசியல். பாகிஸ்தானிலும் இந்த நிலை. இந்திய கிரிக்கெட் வீரர்கள் சினிமா நடிகைப் பைத்தியங்கள்..! நடிகை அடின்னா அடிக்குங்கள்.. இல்லைன்னா சுருண்டு கிடக்குங்கள்.

வங்காளதேசத்திற்கு பாகிஸ்தானும் சிறீலங்காவும் ஆசை காட்டி இருக்கின்றன.

மொத்தத்தில் தெற்காசிய நாடுகள்.. விளையாட்டிலும் ஒழுக்கமின்மையை நீதி நேர்மையின்மையை புகுத்தி வருவதால்.. அவற்றை கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக வேணும் விலக்கி வைத்து நல்ல தண்டனை கொடுக்க வேண்டும்.

மேலும்.. அடிக்கடி கிரிக்கெட் சூதாட்ட குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் சிறீலங்கா.. பாகிஸ்தானின் கிரிக்கெட் அந்தஸ்து பறிக்கப்பட்டு அவை நிரந்தரமாக கிரிக்கெட்டில் இருந்து வெளியேற்றப்படுவதே கிரிக்கெட் மீது மக்கள் நம்பிக்கை வைக்க உதவும்..! இன்றேல் கிரிக்கெட் இனி மெல்லச் சாகும்..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உந்த கிரிக்கெட் அம்பியர் மாரை எனக்கு கண்னிலையும் காட்டக் கூடாது...சில வெற்றி வாய்ப்புகளை உந்த அம்பியர் மாட்ட பிழையான தீர்ப்பால் எத்தனையோ விளையாட்டு தோல்விலை முடிஞ்சு இருக்கு....

சூதாட்டத்தில் ஈடுபட்ட அம்பியர் மாரை சட்டத்தின் முன் நிறுத்தனும்...அவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டது உண்மையானா..அவர்களை ஜேயிலில் போடனும் ஆயுல் புள்ளா......

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா, சொறிலங்கா, வங்காளதேசம், பாகிஸ்தான் நாலையும் தடைசெய்தால் பழைய கிரிக்கட் திரும்பவும் கிடைக்கும்..!

எல்லா இடமும் பிரச்சனைக்கு முதல் காரணம் வெள்ளைகள் தான் அதுவும் பிரிட்டிஷ்காரன் மிக கேவலம் .எங்கட ஆட்களுக்கு வெள்ளைகளின் வால் பிடிப்பதில் ஒரு தனி சுகம் .

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தோற்றதினால் இந்தியாத்தொலைக்காட்சியின் கண்டுபிடிப்பு. இந்தியா வென்றிருந்தால் ??

சர்வதேச திறமையான நடுவர்களில் வெங்கட் ராமனுக்குப் பிறகு இன்னும் இந்தியர்கள் வரவில்லை. ஆனால் பாகிஸ்தான், சிறிலங்காவில் இருந்து திறமையான நடுவர்கள் வந்திருக்கிறார்கள்.

[size=5]3 இலங்கையர் உட்பட 6 கிரிக்கெட் நடுவர்கள் சிக்கினர்[/size]

[size=5][size=4]6 கிரிக்கெட் நடுவர்கள் போட்டிகளில் தவறான முடிவுகளை வழங்கவோ அல்லது போட்டியின் விபரங்களைக் கையளிக்கவோ தயாராக இருந்தமையை இந்தியத் தொலைக்காட்சியின் புலனாய்வு ஒன்று கண்டுபிடித்துள்ளது. பணத்தைப் பெற்றுக் கொண்டே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர்கள் தயாராக இருந்திருந்திருந்தார்கள்.

இலங்கையைச் சேர்ந்த 3 நடுவர்கள், பாகிஸ்தானைச் சேர்ந்த 2 நடுவர்கள், பங்களாதேஷைச் சேர்ந்த ஒரு நடுவர் என மொத்தமாக 6 நடுவர்கள் இவ்வாறு அகப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இந்தப் புலனாய்வு நடவடிக்கையில் இலங்கையைச் சேர்ந்தவர்களான காமினி திஸாநாயக்க, மௌரிஸ் வின்ஸ்டன், சாகர கலகே ஆகியோரும், பாகிஸ்தானைச் சேர்ந்த நதீம் கௌரி, அன்னீஸ் சித்திக்கி ஆகியோரும், பங்களாதேஷைச் சேர்ந்த நதீர் ஷா என்ற நடுவரும் அகப்பட்டுள்ளனர்.

இதில் பங்களாஷேின் நதீர் ஷா சர்வதேசப் போட்டிகள், பிராந்தியப் போட்டிகள், வேறு ஏதாவது போட்டிகள் ஆகியவற்றில் தவறான முடிவுகளை வழங்க ஏற்றுக் கொண்டுள்ளார். அவர் ஆட்டமிழப்புக்களை தவறாக வழங்க ஒப்புக் கொண்டதோடு பாகிஸ்தானின் துடுப்பாட்ட வீரர் நசீர் ஜம்ஷெத் - பங்களாதேஷ் பிறீமியர் லீக் தொடரின் போட்டிகளில் தவறுகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.

சாமர கமகே, காமினி திஸாநாயக்க, அன்னீஸ் சித்திக்கி ஆகியோர் பணத்திற்காக ஸ்பொட் ஃபிக்சிங்கில் ஈடுபடத் தயாராக இருப்பாகத் தெரிவித்துள்ளார்.

இதில் சாமரக கமகே அண்மையில் முடிவடைந்த இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான உலக டுவென்டி டுவென்டி பயிற்சிப் போட்டிகளின் நான்காவது நடுவராகக் கடமையாற்றியிருந்தார். அத்தோடு ஶ்ரீலங்கா பிறீமியர் லீக் போட்டிகளிலும் ஸ்பொட் ஃபிக்சிங்கில் ஈடுபடத் தயாரா இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

காமினி திஸாநாயக்க ஒருபடி மேற்சென்று குறித்தளவு பணம் தரப்படுமாயின் இலங்கைக் கிரிக்கெட் சபைக்கு எதிராக கிளர்ச்சி செய்வதற்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். இலங்கைக் கிரிக்கெட் சபையிலுள்ள அதிகாரிகளுக்கு மதுபானத்தையும், சுற்றுலாக்களையும் வழங்கினால் அவர்கள் எந்தவிதமான வேலையையும் முடித்துத் தருவார்கள் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, வெளியிடப்பட்டுள்ள நடுவர்கள் சம்பந்தப்பட்ட போட்டி நிர்ணய, ஸ்பொட் ஃபிக்சிங் மற்றும் தகவல்களை வழங்குவது சம்பந்தமான புலனாய்வு நடவடிக்கையின் முடிவுகளில் நடுவர்கள் சிலர் வீரர்கள் மீதும் குற்றச்சாட்டுக்களை வெளியிட்டுள்ளனர்.

இதில் பங்களாதேஷ் நடுவரான நதீர் ஷா பாகிஸ்தானின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான நசீர் ஜம்ஷெத் - பங்களாதேஷ் பிறீமியர் லீக் தொடரின் போது போட்டிகளை நிர்ணயம் செய்ததாகத் தெரிவித்தார். நசீர் ஜம்ஷெத் - பாகிஸ்தான் சார்பாக உலக டுவென்டி டுவென்டி தொடரில் பங்குபற்றியிருந்தார்.

பங்களாதேஷ் பிறீமியர் லீக் தொடரின் டாக்கா கிளேடியேற்றர்ஸ் அணியின் முகாமையாளரான மின்ஹஷுடின் கான், பாகிஸ்தானின் அதிரடி வீரரான அஷார் மஹமூட் ஶ்ரீலங்கா பிறீமியர் லீக் தொடரின் போது போட்டி நிர்ணயத்தில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.

அத்தோடு அவர் பாகிஸ்தான் வீரர்களான ஷகிட் அப்ரிடி, ரானா நவீட் உல் ஹசன், அஹமட் செஷாத் ஆகியோர் போட்டிகள் நிறைவடைந்ததும் விபசாரப் பெண்களை அழைத்துக் கொண்டு செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தப் புலனாய்வு நடவடிக்கை தொடர்பாகக் கருத்து வெளியிட்டுள்ள சர்வதேசக் கிரிக்கெட் சபை, குறித்த நடுவர்கள் எவரும் உத்தியோகபூர்வ உலக டுவென்டி டுவென்டி தொடர் போட்டிகளில் பங்குபற்றியிருக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.

அத்தோடு இது தொடர்பாக விசாரணைகள் நடாத்தப்படும் எனவும், அதற்காக குறித்த நிகழ்ச்சியின் ஒளிப்பதிவை குறித்த தொலைக்காட்சி நிறுவனத்திடம் கோரியுள்ளதாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது.[/size][/size]

[size=5][size=4]http://www.tamilmirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/50134-3-6-.html[/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.