Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Breaking News

Featured Replies

  • தொடங்கியவர்

33t.jpg

கர்னல் கருணா. இன்று உலகம் முழுவதும் உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கும் தமிழர். காரணம், சர்வாதிகாரம் மிகுந்த விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை எதிர்ப்பது.

பிரபாகரனை எதிர்க்கும் துணிச்சல் கருணாவுக்கு எப்படி வந்தது... யார் இந்த கருணா என்பது பலரின் கேள்வி.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிரான் என்கிற ஊரைச் சேர்ந்தவர் கருணா. உண்மையான பெயர் முரளிதரன். இவர் வயது என்ன? என்ன படித்திருக்கிறார்? திருமணமாகிவிட்டதா? எந்த ஜாதியைச் சேர்ந்தவர் என்கிற தகவல்களெல்லாம் யாருக்குமே தெரியாத ரகசியங்கள்.

ஆனால், பிரபாகரனுக்கு எதிராக இவர் நிச்சயம் ஒருநாள் வெகுண்டு எழுவார் என்று எங்களுக்கு ஆறு, ஏழு ஆண்டுகளுக்கு முன்பே தெரியும் என்கிறார்கள் புலிகள் இயக்கத்தினரை உன்னிப்பாகக் கவனித்து வரும் வேறு இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள்.

காரணம், கருணா ஒரு சாதாரண தமிழ்ப் போராளி அல்ல. அவரது போர்த் திறமையைக் கண்டு பிரபாகரனேகூட அதிசயப்பட்டது உண்டு. கருணா மாதிரி ஒரு கெரில்லா கமாண்டரை எதிர்த்து, இலங்கை ராணுவம் எப்படி வெற்றிபெற முடியும்? என்று சிங்கள ராணுவத் தளபதி ஒருவர் ஒருமுறை நொந்துபோய் பேசினாராம். யானையிறவு முகாம் மீது திடீர்த் தாக்குதல் நடத்தி அறுநூறு இலங்கை படையினரை நிர்மூலமாக்கியது கருணாதான். ஓயாத அலைகள் என்கிற பெயரில் இலங்கை ராணுவம் மீது சரமாரித் தாக்குதல் நடந்தபோதும் அதில் முன்னிலையில் நின்று போர் செய்தவர் கருணா. இவையெல்லாம் கருணாவின் போர்த் திறமைக்குப் புகழ் சேர்த்தன. இலங்கையின் கிழக்குப் பகுதியில் கருணாவுக்குத் தெரியாமல் ஒரு எறும்புகூட நகர முடியாதாம்.

புலிகளிடமிருந்து யாழ்ப்பாணத்தை இலங்கை படையினர் கைப்பற்றியபோது, புலிகள் அமைப்புக்கு நிறைய இளைஞர்கள் தேவைப்பட்டனர். வடக்குப் பகுதியான யாழ்ப்பாணத்திலிருந்து அதிக இளைஞர்களைத் தேடிச் சேர்க்க முடியாது என்பதால், கிழக்குப் பகுதியிலிருந்து பெருமளவில் இளைஞர்களைக் கொண்டுவந்து சேர்த்தார் கருணா. அதன்மூலம் வடக்குப் பகுதி புலிகளுக்கு பலம் சேர்த்தார்.

இருந்தாலும் அவருக்கு ஆரம்பத்திலிருந்தே ஒரு வருத்தம்... கிழக்குப் பகுதியிலிருந்து வரும் வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று. கிழக்குப் பகுதியில் தமிழ்ப் போராளிகள் உயிரைப் பணயம் வைத்துப் போராடிக் கொண்டிருக்கும்போது, வடக்குப் பகுதித் தலைவர்கள் படகு கார்களில் பவனி வந்து கொண்டிருப்பது நியாயமா? விறகு பொறுக்குவதற்கும், தண்ணீர் எடுப்பதற்கும், உயிர் விடுவதற்கும் கிழக்குப் பகுதி தமிழன் வேண்டும். அதன் பலனை அனுபவிப்பவர்கள் வடக்குப் பகுதித் தலைவர்களா? என்கிற ரீதியில் தலைமைக்கு எதிராக இப்போது குரல் எழுப்பியிருக்கிறார் கருணா.

கருணா சொல்வதில் கொஞ்சம் நியாயமும் இருக்கிறது என்கிறார்கள் சில இலங்கைத் தமிழர்கள். அரசியலிலும் சரி, கலாசாரத் துறையிலும் சரி... யாழ்ப்பாணத்து தமிழர்களின் ஆதிக்கம்தான் அதிகம். புலிகள் அமைப்புக்கு 32 நிர்வாகப் பிரிவுகள் உண்டு. கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஒருவர்கூட இந்த அமைப்புகளில் தலைவராக இல்லை. ஆனால், கிழக்குப் பகுதியிலிருந்து தனி ஈழத்துக்காக உயிர் துறந்த போராளிகள் பல ஆயிரக்கணக்கானவர்கள். கிழக்குப் பகுதியில் இப்போது பதினேழாயிரம் விதவைகள் இருக்கிறார்களாம். கிழக்குப் பகுதி மக்களின் சந்தோஷமான எதிர்காலத்திற்கு புலிகளின் தலைமை என்ன உத்தரவாதம் கொடுக்கப்போகிறது என்பதுதான் கருணாவின் கேள்வி.

கருணாவின் மனதில் இப்படிப்பட்ட ஒரு எண்ணம் வந்துவிட்டது என்பது தெரிந்தவுடனே அவரை சமாதானம் செய்யும் வேலையில் புலித் தலைமை இறங்கியதாகவும் சொல்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிளிநொச்சியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, தனது இடது பக்கத்தில் கருணாவை உட்கார வைத்தார் பிரபாகரன். இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, கருணாவையும் அனுப்பி வைத்தார்.

இந்த நடவடிக்கைகள் கருணாவை திருப்திப்படுத்தவில்லை. ஈழத் தமிழர்களுக்கென சுயாட்சி உரிமை வழங்கப்படும்போது, கிழக்குப் பகுதி தனித்து செயல்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேலும், நார்வே நாட்டினர் மேற்கொண்டு வரும் அமைதிப் பேச்சுவார்த்தையில் கிழக்குப் பகுதியின் சார்பில் தன்னையும் அழைக்க வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார். இந்த இரண்டு கோரிக்கைகளையும் புலித் தலைமை நிராகரித்ததைத் தொடர்ந்து, பிரபாகரனுக்கு எதிராக இப்போது போர்க்குரல் எழுப்பியிருக்கிறார் கருணா.

போர்க்குரல் எழுப்பியது பெரிய துணிச்சல் என்பதைவிட, இனி பிரபாகரனின் கோபத்தை எப்படி கருணா சமாளிக்கப் போகிறார் என்பது கேள்விக்குறி.

அவரை மன்னிக்கிறோம் என்று பிரபாகரன் சொன்னபோதும் அவர் மன்னிப்பு தேவையில்லை என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

ஆனால் கண்டிப்பாய், பிரபாகரனை சார்ந்துள்ள விடுதலைப்புலிகள் கருணாவைக் கொன்று விடுவார்கள் என்றே யாழ்ப்பாணத்து மக்கள் சொல்கிறார்கள்.

மாத்தையா, கிட்டு போன்ற விடுதலைப்புலி தளபதிகளுக்கு ஏற்பட்ட கதிதான் கருணாவுக்கும் என்கிறார்கள்.

பிரச்னை துவங்கியதிலிருந்து பத்திரிகையாளர்களிடம் பேசாமலிருந்த கருணா, முதன்முறையாக பி.பி.சி. நிருபருக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில், பிரபாகரன் போருக்கு ஆயத்தம் செய்கிறார்.

அதற்காக கிழக்குப் பகுதி தமிழ் இளைஞர்களைப் பயன்படுத்த நினைக்கிறார். அமைதிக் காலத்திலும் போர் செய்ய கிழக்குப் பகுதி இளைஞர்கள்தான் கிடைத்தார்களா? என்று ஆவேசமாய் கூறியிருக்கிறார்.

இதெல்லாம் ஒருபுறமிருக்க, புலிகள் அமைப்பில் பிளவு ஏற்படுத்தி இனப்போரை பலவீனமாக்க சில சிங்களத் தலைவர்கள் முயற்சி செய்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. கருணாவுக்கு பதவி ஆசை காட்டிவிட்டார்கள். அந்த ஆசை நிறைவேறாது என்பதைப் போகப் போகத் தெரிந்துகொள்வார் என்று புலிகள் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.

விடுதலைப் புலிகள் மேற்கொண்டு வரும் ஒரு ரகசிய திட்டம் பற்றியும் சிங்களர் மத்தியில் வேறுவிதமாக கிசுகிசுக்கப்படுகிறது. இனப் பிரச்னை தொடர்பாக ஒரு அமைதித் தீர்வு ஏற்படுவதற்கு மிகப்பெரிய தடையாக இருக்கும் ஒரு முக்கிய சிங்களத் தலைவரின் கதையை எப்படியாவது முடித்துவிட வேண்டும். யார் அதைச் செய்வது? புலிகள் அமைப்பில் இரண்டு கோஷ்டிகள் இருப்பதுபோல ஒரு நாடகம் நடத்த வேண்டும். சிங்களத் தலைவரின் கதையை முடித்த பிறகு, பிரபாகரன்தான் அதைச் செய்தார் என்று கருணாவும், கருணாதான் அதைச் செய்தார் என்று பிரபாகரனும் சொல்லி குற்றச்சாட்டிலிருந்து தப்பித்துவிடலாம் என்பதுதான் அந்த ரகசிய திட்டமாம்!

எது எப்படியிருந்தாலும் தமிழர்கள் ஒன்றுபட்டு இருந்தால்தான் அவர்களுக்கு வாழ்வு என்பதை இருதரப்பினரும் புரிந்துகொண்டால் சரி

நன்றி - குமுதம்

  • Replies 2.2k
  • Views 133.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

Karuna faction hits out at CBK

The LTTE's breakaway Eastern leader Karuna yesterday accused President Kumaratunga of making untrue and irresponsible statements in an interview with BBC. In the interview the President reportedly said she would talk peace only with the Wanni leadership and refused to reciprocate attempts by Karuna to contact her.

Karuna's spokesman Varthan said yesterday it was an irresponsible statement made by the leader of the country. "We can't understand why responsible people make statements like this. We made no attempt to contact her", he claimed.

Varthan said time would make the South realize the importance of the East. The President told the BBC the government of Sri Lanka would have to deal with the accepted LTTE leader LTTE Velupillai Prabhakaran after the April 2 polls.

In what was seen as a hard-hitting interview that had angered the renegade leader, the President had rejected Karuna's leadership and claimed that she refused his attempts to contact her, because she "did not normally like underhand dealings".

Karuna's spokesman also expressed concern over her statement that she would find ways and means of dealing with Karuna. Varthan called on the Southern parties to weigh the difference in size between the North held by Prabhakaran and the East under Karuna.

He conceded that the South could not ignore the bargaining power commanded by Prabhakaran, but said that Karuna's support at any future peace process would be vital. "No decision on peace can come through without the consent of the people in the East", Varthan stressed.

The Karuna group also denied TNA candidate Joseph Pararajasingham's reported statement that Karuna had told the TNA how to conduct the election campaign. He said no such directions were given.

நன்றி - டெய்லி மிரர்

பெரும்பாலும் பிழையான தரவுகளையே குழுதம் வழங்கியுள்ளது. :P :P

தொடக்கமே பிழையே முழு உலகமும் உற்றுப் பாத்துக் கொண்டிருக்கும் தமிழர் கருணா எண்டது பிழையே...அமெரிக்கத் தூதுவர் கேட்டாராம்...அது யாரப்பா கருணா...ஏன் அப்படி ஒரு ஜீவனைப் பற்றி நம்மட்டக் கேக்கிறியள் எண்டு....அது போக முழு உலகத் தமிழரும் வெறுக்கும் பிறவியாய் போனதுதான் கருணாவின் தற்போதைய நிலை.....!

உந்தக் குமுதம் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் அட்டூழியங்கள் ஈழத்தில் நடக்கும் போது கண்டும் காணாமலும் இருந்த கேடுகெட்ட சஞ்சிகைகளில் ஒன்று....கள்ள வியாபாரிகள்...அவையும் அவையின்ர அட்டைப்படங்களும் நாவல்களும் ஊத்தவாளிப் புத்தகம்...முந்தி ஸ்கூலில லைபிறரியில உந்தக் குமுதத்தைப் போட்டது பிறகு தரம் கெட்டிட்டுது எண்டு ஸ்கூலில போடுறதை நிப்பாட்டினவை....! அப்படிப்பட்ட முகுதம் என்ன சொன்னாத்தான் நமக்கென்ன...!

சும்மா விடுங்கோ ஆளவந்தான்... காகம் கத்தி மாடு சாகுமா என்ன....???! கத்திப் போட்டு அலுத்தாப் பிறகு தன்பாடில பறந்து போயிடுங்கள்...உதுகளக் கணக்கில எடுத்தால்தான் பிரச்சனையே....!

:P :twisted: :roll:

சும்மா விடுங்கோ ஆளவந்தான்... காகம் கத்தி மாடு சாகுமா என்ன....???!

கா.. கீச்.. கா.. கீச்.. கா.. கீச்... கா..

:) :P :D

photo_tige41.JPG

கர்..உர்....உர்...கர்ர்ர்ர்ர்.....!

:twisted: :P :)

cartoon_1a.jpgபிள்ளைகளே.. பிள்ளைகளே..

பார்த்தீர்களா.. சீறினாலென்ன உறுமினாலென்ன.. நாங்கள்தான் பாலம்..

:) :P :D

photo_tige39.JPG

அடப் பாவிகளா என்னோடையுமா விளையாடுறீங்க.... பொறுங்க பொறுங்க...அதிகம் பதுங்கினதுதான் பிழை போலக் கிடக்கு....

:twisted: :P :)

animated_tige02.gif

Don't Play with Us

yes

animated_tige02.gif

peace.gif+ animated_tige02.gif= flaming_logo11.gif
  • தொடங்கியவர்

பிரபாகரனுடன் இணைந்து செயல்பட கருணா முடிவு?

கொழும்பு:

தனித் தமிழ் ஈழம் போன்ற பிரச்சனைகளில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடன் இணைந்து போராட, அந்த இயக்கத்திலிருந்து நீக்கப்பட்ட கிழக்கு பகுதி தளபதி கருணா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

மட்டக்களப்பு பகுதியில் கருணா தலைமையிலான விடுதலைப் புலிகள் பங்கேற்ற பேரணி நடந்தது. இலங்கையிலிருந்து இந்திய அமைதிப் படையை வெளியேறக் கூறி 1988ம் ஆண்டு உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த பூபதி என்ற வீரரின் நினைவாக இந்த பேரணி நடைபெற்றது. இதில் 5,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பேரணியில் கருணா தலைமையிலான படையின் அரசியல் பிரிவு தலைவர் விசு பேசியதாவது:

தனித் தமிழ் ஈழம் போன்ற பிரச்சனைகளில் பிரபாகரனுடன் இணைந்து செயலாற்ற கருணா முடிவெடுத்துள்ளார். இதற்கான புதிய ஒப்பந்தம் விரைவில் போடப்படும். மட்டக்களப்பு அம்பாரை பகுதி மக்களுக்கான பிரச்சனையில் கருணா தலைமையில் தனித்துப் போராடுவோம். கருணாவை இயக்கத்தில் இருந்து நீக்கியதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.

நன்றி - தட்ஸ் தமிழ்

இந்த செய்தியை பத்தி என்ன சொல்ல :)

ஒராளே தலையாட்டி பதில் சொன்னா தவறாச்சே. அது தானோ இது தெரியேலை. (சிங்களத்துக்கை மட்டும் இரண்டு மூன்று பிரி பிரிஞ்சு நிண்டு சமாதானத்துக்கு தடை சொல்லலாம். நாங்கள் மட்டும் எதிலை குறைந்தோம் எண்டோ. அப்ப தானே பேச்சுவாற்தையில் இடக்கு முடக்காவரேக்கை சமாளிக்க வசதியா இருக்கும். சனத்தை எல்லாம் ஒரு கலக்கு கலக:;கிபோட்டினமோ என்னவோ? பத்திரிகை யாளரையும் தான். :)

அம்மான் இழுக்கிறார் என பிரபா அண்ணையும் பிரபா அண்ணை இழுக்கிறார் என அம்மானும் சொல்ல வசதியாக இருக்கும்.( இடக்கு மிடக்கான நேரங்களில் மட்டும்) :idea:

என்னவோ நடக்குது நடக்கட்டுமே!

தன்னாலை வெளிவரும தயங்காதே !

ஒரு தலைவன்தான் எதற்கும் மயங்காதே!

இடக்கு மிடக்கு என்றால் என்ன ?

ஒராளே தலையாட்டி பதில் சொன்னா தவறாச்சே. அது தானோ இது தெரியேலை. (சிங்களத்துக்கை மட்டும் இரண்டு மூன்று பிரி பிரிஞ்சு நிண்டு சமாதானத்துக்கு தடை சொல்லலாம். நாங்கள் மட்டும் எதிலை குறைந்தோம் எண்டோ. அப்ப தானே பேச்சுவாற்தையில் இடக்கு முடக்காவரேக்கை சமாளிக்க வசதியா இருக்கும். சனத்தை எல்லாம் ஒரு கலக்கு கலக:;கிபோட்டினமோ என்னவோ? பத்திரிகை யாளரையும் தான். :)

அம்மான் இழுக்கிறார் என பிரபா அண்ணையும் பிரபா அண்ணை இழுக்கிறார் என அம்மானும் சொல்ல வசதியாக இருக்கும்.( இடக்கு மிடக்கான நேரங்களில் மட்டும்) :idea:

இடக்கு மிடக்கு என்றால் என்ன ?

நீங்கள் இப்ப இந்த இடக்கு மிடக்கை புரிஞ்சு கொள்ளாமல் இடக்கு மிடக்கெண்டா என்ன எண்டு கேக்கிறீங்களெல்லோ அது கூட இடக்கு மிடக்குத்தான். :)

மதுரையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஜனதாக் கட்சி தலைவர் சுப்புரமணியம் சுவாமி கூறியதாவது: இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ள கருணாவை ஆதரிக்க அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா ஆகிய நாடுகள் முடிவு செய்துள்ளன. எனவே பிரபாகரனும், பொட்டு அம்மானும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் சரணடைவது நல்லது.

நன்றி: தற்ஸ்தமிழ்

http://www.thatstamil.com/news/2004/03/21/swamy.html

சுவாமிங்களா இல்லை சுவ் ஆமிங்களா ????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் இப்ப இந்த இடக்கு மிடக்கை புரிஞ்சு கொள்ளாமல் இடக்கு மிடக்கெண்டா என்ன எண்டு கேக்கிறீங்களெல்லோ அது கூட இடக்கு மிடக்குத்தான். :)

குண்டக்க மண்டக்கவுக்கே இன்னும் விளக்கம் கிட்டவில்லை அதற்குள் இது வேறை

ம் இவரும் இடைக்கிடை வந்து போறார் நான் இருக்கிறன் என்று காட்ட

மதுரையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஜனதாக் கட்சி தலைவர் சுப்புரமணியம் சுவாமி கூறியதாவது: இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ள கருணாவை ஆதரிக்க அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா ஆகிய நாடுகள் முடிவு செய்துள்ளன. எனவே பிரபாகரனும், பொட்டு அம்மானும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் சரணடைவது நல்லது.

நன்றி: தற்ஸ்தமிழ்

http://www.thatstamil.com/news/2004/03/21/swamy.html

சுவாமிங்களா இல்லை சுவ் ஆமிங்களா ????????

ம் இவரும் இடைக்கிடை வந்து போறார் நான் இருக்கிறன் என்று காட்ட

சாமி.....

சுவாமிய சொன்னிங்களா.......இல்லை.....என்னைச

ம்கூம் :)

இது ஒற்றை அர்த்தமுஙகோ அந்த சாமியை சொன்னேனுங்கோ சாமியோவ் ! :D:D:lol:

சாமி.....

சுவாமிய சொன்னிங்களா.......இல்லை.....என்னைச

Tamil newspaper staff held hostage by Karuna faction

A key activist of the Karuna group has reportedly decamped and fled to India while Karuna loyalists are alleged to be holding a newspaper editor and journalists hostage to force them to publish pro-Karuna news, reports from Batticaloa said.

The Ampara-Batticaloa deputy political wing leader, Kirisan, reportedly fled to India on Friday after selling his motorcycle and obtaining a passport in Colombo on Thursday. Kirisan was the deputy to Kaushalyan, who is in the Wanni and is backing the LTTE leadership there in the current power struggle against the eastern Karuna faction.

Meanwhile, P. Venugopal, editor of the pro-LTTE newspaper 'Thamil Alai' published from Kokkadicholai, was allegedly being held hostage with nine other journalists who have been forced to carry pro-Karuna news in the paper. Reports said the editor and his staff were not being allowed to leave their office while no visitors were permitted entry.

Earlier, Karuna loyalists are alleged to have set fire to thousands of copies of the 'Thinakural' newspaper published from Colombo. They claimed Thinakural was backing the LTTE's Wanni leadership.

Thinakural News Editor Siva Ganeshan told The Sunday Times that they had been warned not to distribute their paper in the Batticaloa area including the town. He denied charges that they were backing the LTTE's Wanni leadership.

SundayTimes

மதுரையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஜனதாக் கட்சி தலைவர் சுப்புரமணியம் சுவாமி கூறியதாவது: இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ள கருணாவை ஆதரிக்க அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா ஆகிய நாடுகள் முடிவு செய்துள்ளன. எனவே பிரபாகரனும், பொட்டு அம்மானும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் சரணடைவது நல்லது.

நன்றி: தற்ஸ்தமிழ்

http://www.thatstamil.com/news/2004/03/21/swamy.html

தானும் இருக்கிறேன் என்பதை இப்படிச் சரடுகள் விட்டுத்தான் நீண்டகாலமாக சுவாமி அரசியல் நடாத்துகிறது...இதை அங்கேயே யாரும் பொருட்படுத்துவதில்லை. நாம் ஏன் அலட்டிக்கொள்ளவேண்டும்

2003020201320901.jpg

35 சிறுவர்களை விடுதலைப் புலிகளின் திருகோணமலை பகுதியினர் யுனிசெப் வசம் ஒப்படைத்தனர்.

தகவல்:BBC

2003020201320901.jpg

35 சிறுவர்களை விடுதலைப் புலிகளின் திருகோணமலை பகுதியினர் யுனிசெப் வசம் ஒப்படைத்தனர்.

தகவல்:BBC

இந்த அரை ரிக்கெற்றுகளை கிழக்கிலதான் சேத்திருப்பினம்

கண்டியலோ இதெல்லாம் கருணா அம்மான்றை பிழை

இப்ப இதை சோட்டவுட் பண்ணி இருப்பினம்.......அப்பிடிதான் நான் நினைக்கிறன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.