Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Breaking News

Featured Replies

  • தொடங்கியவர்

யார் விஜயவை கொன்றது என்பதில் கூட வோட்டுக்காக சண்டை.

cartoonl.gif

நன்றி - டெய்லி மிரர்

  • Replies 2.2k
  • Views 133.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

மட்டுநகரில் கருணாவுக்கெதிராக சுவரொட்டிகள், பிரசுரங்கள்

மட்டக்களப்பு,

மட்டக்களப்பு நகரில் கிழக்கின் முன்னாள் புலிகள் தளபதி கருணா அம்மானுக்கு எதிரான சுவரொட்டிகள் கடந்த சனியன்று இரவோடிரவாக ஒட்டப்பட்டிருந்தது. ஆங்காங்கே பிரசுரங்களும் வீசப்பட்டிருந்தன.

அத்தோடு தபால் மூலமும் பிரசுரங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு நகரில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் ஊடுருவியிருப்பதுடன் தொலைபேசி மூலமும் உண்மை நிலைவரங்களை அறிவித்து வருகின்றனர்.

நன்றி - வீரகேசரி

  • தொடங்கியவர்

150 புலிகளை சம்பூருக்கு அழைத்துவரும் திட்டம் ஏப். 5 வரை ஒத்திவைப்பு

(எஸ்.என்.ஆர்.பிள்ளை)

தேர்தலை முன்னிட்டு ஓமந்தையிலிருந்து 150 புலிகள் இயக்க அங்கத்தவர்களை சம்பூருக்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி வரை பின் போடப்பட்டுள்ளதாக சமாதான செயலகம் தெரிவித்துள்ளது.

ஓமந்தையில் இருந்து 150 புலிகள் இயக்க அங்கத்தவர்களை இன்று 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சம்பூருக்கு அழைத்து வர ஏற்பாடுகளை செய்து தருமாறு தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் சமாதான செயலகத்தை கடிதம் மூலம் கேட்டிருந்தது.

அதேவேளை நாளை 31ஆம் திகதி 150 பெண் போராளிகளை சம்பூரில் இருந்து ஓமந்தைக்கு அழைத்துச் செல்லவும் புலிகள் அனுமதி கோரியிருந்தனர்.

ஆனால் தேர்தல் காலம் என்பதால் அழைத்து வரப்படும் புலிகள் இயக்கத்திற்கு பாதுகாப்பு படையினரால் வழித்துணை பாதுகாப்பு வழங்க முடியாது. அந்த கடமையை 5ஆம் திகதி செய்யத் தயாராக இருக்கின்றோம் என சமாதான செயலகம் புலிகள் இயக்கத்திற்கு அறிவித்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நன்றி - வீரகேசரி

அது சரி இந்த புலிகளின் குரல் வாணொலி மட்டக்கிளப்புக்கு வேலை செய்யுதில்லையா புதியகருவி வாங்கினது எண்டார்கள் ஏன்....வேலை செய்யல்ல...

அது சரி இந்த புலிகளின் குரல் வாணொலி மட்டக்கிளப்புக்கு வேலை செய்யுதில்லையா புதியகருவி வாங்கினது எண்டார்கள் ஏன்....வேலை செய்யல்ல...
பற்றி இல்லையாம்.. அதுதான் கொம்பியூட்டராலை விடுறாங்களாம்..

:lol: :P :D

  • தொடங்கியவர்

பற்றி இல்லையாம்.. அதுதான் கொம்பியூட்டராலை விடுறாங்களாம்..

:D :P :D

உங்க லொள்ளுக்கு குறைச்சலே இல்லை தாத்தா :lol:

  • தொடங்கியவர்

தமிழ்அலை பத்திரிகை நிர்வாகத்திலிருந்து பிளவுபட்ட அணியினர், இன்னுமொரு நிழற்பதிப்பை ஆரம்பித்துள்ளனர்

ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ செவ்வாய்க்கிழமை, 30 மார்ச் 2004, 2:57 ஈழம் ஸ

தமிழ்அலை என்ற பெயரில், நிழற்பதிப்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இன்னுமொரு பத்திரிகை, கருணாவின் பின்னால் உண்மை தெரியாமல் அணிவகுத்திருக்கும் போராளிகளுக்கும் மக்களுக்கும் தற்போதைய உண்மை நிலைமைகளை எடுத்துச் சொல்வதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று அதனது முதற்பதிப்பில் ஆசிரியர் சுட்டிக் காட்டியுள்ளார்.

தங்களது உயிருக்குக் கடும் ஆபத்து இருப்பதைத் தாம் உணர்வதாகக் குறிப்பிட்டுள்ள இப்பத்திரிகையின் ஆசிரியர் குழுவினர், தமது உயிருக்கு அஞ்சாது உண்மையை எடுத்துச் சொல்லவேண்டிய கடப்பாடு தமக்கு இருப்பதாகவும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

கடந்த சில வாரங்களாக தாம் கடுமையான அழுத்தம் காரணமாகவே பத்திரிகைக் காரியாலயத்திலிருந்து செயற்பட்டதாகவும், இனியும் அப்படியான துரோகச் செயலில் ஈடுபட தங்கள் மனம் இடம்கொடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ள, பிரிந்துசென்ற பத்திரிகையாளர்கள், இனிமேல் தாம் அமைதி காக்கப்போவதில்லை என்றும் சூளுரைத்திருக்கிறார்கள்.

கிழக்கிலங்கை மக்களை முற்றாகக் குற்றம் சாட்டும் புலம்பெயர் மக்கள் அதை நிறுத்திக்கொண்டு, கருணா என்ற தனிமனிதனின் குற்றத்தை மட்டுமே சுட்டிக்காட்ட வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ள இப்பத்திரிகை, கிழக்கில் வாழும் மக்கள் உண்மை நிலையை அறிந்து கொண்டுள்ளார்கள் என்றும், அவர்களது ஆதரவு எப்போதும் வன்னித் தலைமைக்கே இருக்கும் என்றும் தெரிவிக்கிறது.

http://www.thamilalai.net

நன்றி - புதினம்

  • தொடங்கியவர்

சிறிலங்காவில் இம்முறை தொங்கு பாராளுமன்றமே அமையுமென ஆய்வாளர்கள் கருத்து

ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ செவ்வாய்க்கிழமை, 30 மார்ச் 2004, 2:58 ஈழம் ஸ

கடந்த நான்கு வருடங்களில் மூன்றாவதாக இடம்பெறும் இத்தேர்தலில், எந்தக் கட்சியும் பெரும்பான்மைப் பலம் பெற்று ஆட்சியமைக்கும் வாய்ப்புக்கள் மிகவும் மந்தமாகவே காணப்படுவதாகவும், ஒரு தொங்கு பாராளுமன்றம் அமையும் வாய்ப்பே அதிகமாக உள்ளதாகவும் பிந்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆகக்குறைந்தது 113 ஆசனங்களையாவது ஒரு கட்சி பெற்றால் மட்டுமே, பெரும்பான்மைப் பலமுள்ள ஒரு ஆட்சியை அமைக்க முடியுமென்பதால், இத்தகைய ஒரு தேர்தல் முடிவு அமைவதற்கு வாய்ப்புக்கள் இல்லை என்று அந்த ஆய்வு மேலும் தெரிவிக்கின்றது.

இந்நிலையில், சிறிலங்காவில் அரசியற் குழப்ப நிலையும், கலவரங்களும் உருவாக நிறைய வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கருத்துக் கூறியுள்ளார்கள்.

நன்றி - புதினம்

Wonder baby

In a conference, three scientists - an American, a German and a Sri Lankan - were talking and bragging about the technological advances their respective countries have achieved in the field of medicine.

Says the American, "In Washington, there was a baby boy born without arms so we attached artificial arms on him. And now that he's grown, he has become an Olympic professional boxer and a gold medallist at that!"

The German replied, "That's nothing to what we have done. Back in Berlin, there was a baby girl born without legs so we attached a pair of artificial legs on her. Now she is a three-time marathon gold medallist in the Olympics!"

The Sri Lankan interjected, "Is that all you have, just gold medallists? In Colombo we had a baby girl born without a HEAD! We attached a COCONUT and she is now head of state!" Just joking ole girl, just joking!

http://www.thesundayleader.lk/20040328/nutshell.htm

  • தொடங்கியவர்

தமிழர் கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு வெளிநாடுகளில் உள்ள தமிழர் இயக்கங்கள் அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்து வருகின்றார்கள், இதேசமயம் ஈ மெயில் மூலமும் அப்படியான ஒரு பிரச்சாரம் நடைபெறுகின்றது, அதனை உங்கள் பார்வைக்காக ...........

இணையத்தளத்தில் ஒரு வேண்டுகோள்

பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்புக்கு வாக்களிக்கும் படி புலம்பெயர்ந்த தமிழர்கள் இணை யத்தளம் ஊடாகவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புலம்பெயர்ந்த உறவுகளுக்கு ஒரு வேண்டுகோள்!| என்ற தலைப் பில் வெளியிடப்பட்டுள்ள அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

இனி எமது ஈழம் ஜப்பானாக மாறப் போகிறதா? இல்லை சுடுகாட்டுச் சாம் பல்மேடாக மாறப்போகிறதா? என்ப தைத் தீர்மானிக்கும் வரலாற்றுக் காலகட்டத்தில் நாம் நிற்கின்றோம்.

அதன் முதற்படியாக நாம் எமது இன உறுதியினையும் நாட்டுப் பற் றையும் காட்டும் அரிய சந்தர்ப்பமாக அமைந்துள்ளது வரும் பொதுத்தேர் தல். சில தேசவிரோத சக்திகள் அந் நிய மற்றும் சிங்களக் கைக்கூலிக ளாக மாறித் தமிழர் ஒற்றுமையைச் சிதைக்க கங்கணம்கட்டி நிற்கின்றன.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றுதான். ஈழத்தில் வாழ் கின்ற எம் உறவுகளைத் தொலைபேசியில் அழைத்து அவர்களைத் தமிழ்த் தேசி யக்கூட்டமைப்புக்கு வாக்களிக்கும் படி கூறுங்கள். நீங்கள் செய்யப் போகும் இந்த அளப்பரிய சேவை இனிவரும் எமது ஈழச்சந்ததிக்கு நீங் கள் அமைக்கப்போகும் ஏணிப்படி யாகும் என்றுள்ளது.

நன்றி - உதயன்

  • தொடங்கியவர்

அதை நானும் கவனித்தேன். உதயன் பத்திரிகை செய்தி யார் காரணம் என்று குறிப்பிடாமல் அதை செய்தது ஈ.பி.டி.பி உறுப்பினர் என்று புலிகள் சொன்னதாகவே கூறுகின்றது.

மாணவி மீது பாலியல் துஷ்பிரயோக முயற்சி

பாடசாலைச் சமூகம் நேற்றுக் கண்டனப் பேரணி

ஊர்காவற்றுறையில் கடந்த சனிக்கிழமை 12 வயதான பாடசாலை மாணவியொருவர் மீது இடம்பெற்ற தாகக் கூறப்படும் பாலியல் து~;பிர யோகச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து சம்பந்தப்பட்ட மாணவி கல்விகற்றுவரும் ஊர்காவற்றுறை சிறிய புஸ்ப மகளிர் வித்தியாலயச் சமூகத்தினர் நேற்று கண்டனப் பேரணி ஒன்றை நடத்தினர்.

இந்தக் கண்டனப் பேரணி நேற் றுக்காலை 11 மணியளவில் சிறிய புஸ்ப மகளிர் வித்தியாலயத்தில் இருந்து ஆரம்பமாகிச் சுருவில் வீதி ஊர்காவற்றுறைச் சந்தியூடாக ஊர் காவற்றுறைப் பிரதேச செயலகத் துக்குச் சென்றடைந்து.

அங்கு மேற்படி பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி செபமாலை தயாநாயகி ஊர்காவற்றுறை உதவி அரசாங்க அதிபர் ஜே.செல்வநாயகத் திடம் மகஜர் ஒன்றை கையளித்தார். அத்துடன் மனித உரிமைகள் ஆணைக்குழு, சிறுவர் பாதுகாப்பு நிதி யம் ஆகியவற்றிற்கான மகஜர்களை உதவி அரச அதிபரிடம் அவர் கைய ளித்தார். இதனையடுத்து உதவி அரச அதிபர் சம்பந்தப்பட்டவர்களி டம் தொடர்புகொண்டு விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று உறுதியளித்தார்.

இந்தக் கண்டனப் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து கரம்பன் சண்மு நாதன் மகா வித்தியாலயம், ஊர்கா வற்றுறை புனித மரியாள் மகளிர் பாடசாலை, ஊர்காவற்றுறை அந் தோனியார் கல்லு}ரி, நாரந்தனை றோ.க.த. கலவன் பாடசாலை ஆகிய வற்றின் மாணவ, மாணவியரும் பேர ணியில் கலந்துகொண்டனர். இவர் களுடன் பல்கலைக்கழக மாணவர் கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என நு}ற்றுக்கணக்கானோரும் பங்குபற்றி னர். பேரணியில் சென்றவர்கள் ஷஷமாணவர்களின் சுதந்திரத்தைப்பறிக் காதே||, ஷஷஅன்று பல்கலைக்கழக மாணவர்களைச் சீண்டினாய், இன்று எம்மைச்சீண்டுகிறாய்,|| வேலியே பயிரை மேயாதே|| அநீதிக்கு எதிரா கக் குரல் கொடுப்போம் என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதா கைகள் தாங்கிச்சென்றனர்.

பேரணியின் இறுதியில் இது தொடர்பாக பாடசாலை அதிபர் செப மாலை தயாநாயகி கருத்துத் தெரி விக்கையில் கூறியதாவது:- இப்பேர ணிக்கு எந்தவித அரசியல் தொடர் பும் கிடையாது. இதைச் சிலர் அர சியலாக்க முயல்கின்றனர். எமது பாடசாலை மாணவிகளின் எதிர் காலப் பாதுகாப்பை வேண்டியும், நடைபெற்ற சம்பவத்திற்கு எதிர்ப்ப் புத் தெரிவித்தே நாங்கள் இப்பேர ணியை நடத்தியுள்ளோம்.

இதன்மூலம் எதிர்காலத்தில் இவ் வாறான சம்பவங்கள் இனிமேலும் நடக்கக்கூடாது என்று எதிர்பார்க்கின் றோம் இதற்குச் சம்பந்தப்பட்ட தரப் பினரிடம் இருந்து உத்தரவாதம் வழங்கப்படவேண்டும். வீட்டிற்கும் பாடசாலைக்கும் இடைப்பட்ட பகுதி யில் மாணவிகளின் பாதுகாப்பு கேள் விக்குறியாகியுள்ளது. இந்தப் பாட சாலைக்கு நீண்ட து}ரத்தில் இருந்து மாணவிகள் வந்து செல்கின்றனர். எனவே ஒட்டுமொத்த சமூகத்தினரி டமிருந்தும் மாணவிகளின் பாது காப்பை வேண்டிநிற்கின்றோம் என் றார்.

ஊர்காவற்றுறைப் பொலீஸ் நிலை யம், தீவக மாணவர் பேரவை, ஈ.பி. டி.பி. கட்சியின் ஊர்காவற்றுறை அலுவலகம், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊர்காவற்றுறை அலு வலகம், மனித முன்னேற்ற நிலை யம் ஆகியவற்றிற்கும் மேற்படி பாட சாலைச் சமூகத்தினர் மகஜர் அனுப்பி யுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை மதியம் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமியை வழிமறித்த நபர், அவரை அருகிலிருந்த பற்றைக் குள் இழுத்துச்சென்று து~;பிரயோ கம் செய்யமுயன்றதுடன் சிறுமியின் காதணிகளையும் அபகரித்தார் என்று ஊர்காவற்றுறைப் பொலீஸாரிடம் முறையிடப்பட்டதும். இந்தச்சம்பவத் தில் சம்பந்தப்பட்ட நபர் ஈ.பி.டி.பி. அமைப்பைச் சேர்ந்தவர் என்று விடு தலைப் புலிகள் குற்றஞ்சாட்டியுள் ளனர் என்பதும் தெரிந்தவையே.

நன்றி - உதயன்

  • தொடங்கியவர்

புலிகளுக்கு எதிராகப் பெற்றோர் முறைப்பாடாம் ஈ.பி.டி.பி கூறுகிறது

விடுதலைப் புலிகளுக்கு எதிராக பாடசாலை மாணவர்களின் பெற் றோர்கள் ஊர்காவற்றுறைப் பெலீஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர் என்று ஈ.பி.டி.பி. தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்தக் கட்சி நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின ருக்குச் சார்பான தேர்தல் பிரசாரப் பணிகளுக்குப் புலிகள் பாடசாலை மாணவர்களைப் பலவந்தமாக அழைத் துச் சென்றமை தொடர்பாக சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட பெற்றோர் ஊர்காவற்றுறைப் பொலீஸாரிடம் நேற்று முறைப்பாடு செய்துள்ளனர். ஊர்காவற்றுறைப் பொலீஸ் நிலையத் தில் செய்யப்பட்ட இம்முறைப்பாட் டில் ஊர்காவற்றுறைப் பிரசேத்தி லுள்ள கரம்பன் சிறிய பு~;பம் மக ளிர் வித்தியாலயம் மற்றும் சென். மேரிஸ் வித்தியாலயம் ஆகியவற்றில் பயிலும் மாணவர் மாணவிகளைத் தேர் தல் பிரசாரப் பணிக்காக புலிகள் பல வந்தமாக அழைத்துச்சென்றனர் என் பதை அறிந்த பெற்றோர் அதிபர், ஆசிரியர்களிடம் தமது விரும்பமின் மையை வெளிப்படுத்தியதோடு பொலீஸ் நிலையத்திற்கும் சென்று முறைப்பாடு செய்துள்ளனர். இது தொடர்பாகப் போர்நிறுத்தக் கண் காணிப்புக் குழு, தேர்தல் வன்முறை களைக் கண்காணிக்கும் அமைப்பு போன்றவைற்றிக்கும் தகவல்கள் வழங்கப்பட்டன. என்றுள்ளது.

நன்றி - உதயன்

  • தொடங்கியவர்

பொலீஸ் விசாரணைகளில் திருப்பம்

மகேஸ்வரனைக் கொலை செய்வதற்கு

முன்கூட்டியே கூட்டங்களில் ஒத்திகை!

சுட்டவர் பற்றி நேரில் கண்டவர்கள் தகவல்

கொழும்பில் மிகக் குறுகிய காலத்தில் மக்களின் பேரபிமானத்தைப் பெற்று தேர்தலில் வெற்றி விளிம்பில் நிற்கும் முன்னாள் அமைச்சர் தி.மகேஸ்வர னைக் கொலை செய்வதற்கு முன்கூட்டியே பல கூட்டங்களில் ஒத்திகை நடைபெற்றிருக்கிறது. தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுவரும் பொலீஸாருக்கு இந்தத் திடுக்கிடும் தகவல் கிடைத்திருக்கிறது.

கொழும்பு ஜிந்துப்பிட்டியில் வைத்து கடந்த சனிக்கிழமை இரவு மகேஸ்வரன் சுடப்பட்டதை நேரில் கண்டவர்கள் பலர் பொலீஸாருக்கு முக்கியமான தகவல்களைத் தெரிவித்திருக்கிறார்கள். சுட்டவர் இனி எந்த நேரத்திலும் கைதுசெய்யப்படலாம் என்று பொலீஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக, சம்பவம் இடம்பெற்றதினத்தன்று அவருடன் இருந்த ஆதர வாளர்களிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருகின்றன. இத்தகவல் களை கொழும்பு வடக்குப் பகுதி குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பதிகாரியான பொலீஸ் அதிபர் எஸ்.பி. லு}கொட கூறினார்.

இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றபோது அதை நேரில் கண்ட சாட்சிகள் எனக் கருதப்படும் இருபதுக்கும் மேற்பட்டவர்களிடம் இது வரை வாக்குமூலங்கள் பெறப்பட்டுள் ளன. துப்பாக்கிதாரியை நேரில் கண்ட நபர்கள் வழங்கியுள்ள தக வல்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் மேலும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. விசாரணைகளில் திருப் பங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் துப் பாக்கிதாரி இனித் தப்பமுடியாது; அவர் விரைவில் கைதுசெய்யப்ப டலாம் என்றும் பொலீஸ் அதிகாரி லு}கொட நம்பிக்கை தெரிவித்தார்.

வேட்பாளர் மகேஸ்வரனைக் கொலைசெய்வதற்கு அவர் பங்குபற்றிய பல கூட்டங்களில் முன்னேற் பாடாக ஒத்திகை பார்க்கப்பட்டதாக வும் பொலீஸாருக்குத் தெரியவந்தி ருக்கிறது. அதையடுத்து வீடியோ பதிவுகள், புகைப்படப் பதிவுகள் போன்றவற்றைக் கொண்டு இரகசிப் பொலீஸார் விசாரணை செய்துவரு கின்றனா

நன்றி - உதயன்

  • தொடங்கியவர்

எமது தென் தமிழீழப் பிரதேசம் தேவநம்பியதீசன் காலத்திற்கு முற்பட்டதாகும். செல்வி க.தங்கேஸ்வரி.

எமது தென்தமிழீழ பிரதே சம் தேவநம்பியதீசன் காலத்திற்கு முன்னதாகவே பாரம்பரிய தமிழர் தாயகப்பிரதேசமாக விளங்கியது என்பதற்கு தகுந்த வரலாற்று ஆ தாரங்கள் உண்டு. இவ்வாறு பாரா ளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் மட் டக்களப்பு மாவட்ட பெண் வேட் பாளர் செல்வி க.தங்கேஸ்வரி தெ ரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரை யாற்றுகையில் இன்று அம்பாறை என அழைக்கப் படும் பிரதேசம் எமது பாரம்பரிய தமிழ்ப் பிரதே சமாகும். இதனை உறுதிப்படுத்தும் தகவல்களைக் கொண்ட வரலாற்று நூல் ஒன்றை நான் எழுதியுள் ளேன்.

மிகவிரைவில் அச்சுவாக னம் ஏறி உங்கள் கரங்களுக்குக் கிடைக்கும். எம தேசியமட்டப் போ ராட்டம் என்பது ஒரு வகையில் வளப்போராட்டம் என்று கூடக் கொ ள்ளமுடியும். எமது பாரம்பரிய பிர தேசங்கள் சுரண்டப்பட்ட, சு10றையா டப்பட்ட காரணத்தால்தான் எமது வளத்தைப் பாதுகாத்துக் கொள்ள நாம் போராடப் புறப்பட்டோம்.

எமது பிரதேசத்தின் அபிவிருத்திகள் தட் டிக்கழிக்கப் பட்டபோதும் தட்டிப்பறி க்கப்பட்டு ஏனைய பிரதேசங்களு க்கு வழங்கப்பட்டபோதும் அதனை த் தட்டிக்கேட்கப் போராடப்புறப்பட் டோம். எனவேதான் எமது போராட் டம் என்பதை வளப் போராட்டம் எனக் குறிப்பிட்டேன். வெறுமனே வாக்குறுதிகளை அள்ளி வீசும் அரசியல் நடாத்த நான் தயாரில் லை. ஆனால் சமுதாயத்திற்காக சேவை செய்து வரும் நான் தொ டர்ந்தும் என்னாலான சேவைகளை எமது பிரதேச மக்களுக்கு வழங்க எனக்கு வாக்களிக்குமாறு கோருகி றேன். ஒரு பெண் வேட்பாளர் என்ற வகையில் என்னையும் ஒரு பாரா ளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்வீர்கள் என எதிர்பார்க்கிறேன். என்றார்.

நன்றி - தமிழ் அலை

  • தொடங்கியவர்

moorthy.gif

நன்றி - தினக்குரல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சார்பான பத்திரிகை என்பதையும் கருத்தில்கொண்டு பார்க்கையில்

போராளிகளை வற்புறுத்தி வைத்திருக்கிறார்.. ஆயுத்தால்அடக்கி ஒடுக்கி வைத்திருக்கிறார் என்ற செய்திகளுக்கு சாட்டையடி கொடுக்கும் விதமாக இன்றைய தினக்குரல் பத்திரிகையில் செய்தி வந்திருக்கிறதே..?

அவர்கள் விட்ட அறிக்கையை ஊர்ஜிதம் செய்யும்வகையில் வெளியேற விருப்பமானவர்களை வெளியேற அனுமதித்ததாயும் செய்தி தெரிவிக்கின்றது..

ஒரு வார காலத்தில் கருணா தரப்பிலிருந்து 1600க்கும் மேற்பட்ட போராளிகள் வெளியேற்றம்

மட்டக்களப்பில் கருணா குழுவின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து கடந்த ஒரு வாரத்திற்குள் 1 600க்கும் மேற்பட்ட போராளிகள் விலகிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரிடத் தயாராகுமாறு கருணா விடுத்த உத்தரவை ஏற்க மறுத்த 800 போராளிகள் அங்கிருந்து விலகிச் சென்றுள்ளனர்.

இதேவேளை, தங்கள் சொந்த பாதுகாப்பு காரணமாக 800க்கும் மேற்பட்ட பெண் போராளிகளும் அங்கிருந்து விலகிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புலிகளுடன் போரிட மறுத்தவர்களில் 800க்கும் மேற்பட்ட போராளிகள் விலகிச் சென்றுள்ளதை கருணா தரப்பும் ஒப்புக் கொண்ட அதேநேரம், புலிகள் தரப்புடன் மோதலொன்று வரும் போது இவர்களது செயற்பாடுகள் தங்களைப் பாதிக்குமென்பதாலேயே அவர்களை விலகிச் செல்ல அனுமதித்ததாகவும் கருணா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

எனினும், இராணுவத்தினருடன் மோதலென்று ஒன்று வரும்போது இவர்களை மீளவும் அழைக்க முடியுமெனவும் கருணா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனாலும், கருணா தரப்பு இராணுவத்துடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தி வருவதால் படையினருடன் மோதலொன்றுக்கு இனிச் சாத்தியமில்லை என்றும், சகோதர மோதலை தங்களால் நினைத்துப் பார்க்க முடியாதெனக் கூறியே இவர்கள் விலகிச் சென்றதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தங்கள் சொந்தப் பாதுகாப்புப்க் காரணங்களுக்காக 800க்கும் மேற்பட்ட பெண் போராளிகள் அங்கிருந்து விலகிச் சென்றுள்ளனர்.

எனினும், போராளிகளை பராமரிப்பதில் பெரும் செலவு ஏற்படுவதாகவும் தற்போது வன்னியிலிருந்து நிதியுதவி முற்றாகவும் நிறுத்தப்பட்டுள்ளதால், உள்@ரில் போதிய பணம் திரட்ட முடியாத நிலையில் இந்த 800 பெண் போராளிகளையும் அங்கிருந்து வெளியேற அனுமதித்ததாகவும் கருணா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.thinakural.com/2004/March/29/ImpNews.htm#5

கருணா குழுவினுள் கருத்து வேறுபாடுகள்

செஞ்சுடரின் வீரச்சாவைத் தொடர்ந்து தமது குழுவினுள் இருந்து விலகிச் செல்ல முற்படுபவர்கள் மீது தாக்குதல் நடாத்துவது சரியா பிழையா என்ற காரசாரமான விவாதம் கருணா அம்மான் குழுவினுள் தலையெடுத்துள்ளது.

தப்பிச் செல்பவர்கள் மீது தாக்குதல் நடாத்துவது பிழை என்ற கருத்தை முன்வைத்தவர்கள் சிலரின் தனிப்பட்ட ஆயுதங்கள் (பிஸ்டல்) களையப்பட்டதாகவும் பின்னர் மீளக் கையளிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.

பிரிந்து சென்ற போராளிகள் குழுக்களாக திக்குத் திக்காகத் தங்கியிருக்கின்றனர். எவரின் கட்டுப்பாட்டிலும் நிலைமைகள் இல்லாததுபோன்ற ஓர் உணர்வே பல இடங்களிலும் நேற்று மாலை தென்பட்டது.

விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினர் அண்மையில் விடுத்த அறிக்கையைத் தொடர்ந்து பெரும்பான்மையான போராளிகள் பிரிந்து செல்வதற்கான அறிகுறிகளே தென்படுகின்றன.

போராளிகளின் தாய் தந்தையர் முகாம்களில் தமது பிள்ளைகளைத் தேடி

ஏக்கத்துடன் சென்று வருவதையும் பரவலாகக் காணக்கூடியதாகவுள்ளது.

நேற்று வியாபார நிறுவனங்களில் கருணா அம்மானின் குழுவைச் சேர்ந்த சிலர் மிரட்டிப் பணம் சேகரிக்கும் முயற்சிகளில்

thamilalai.net

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போடா போ நீயும் உன்ரை பொய்யும்

வாகரைப் பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை தமிழலை நிழற்பதிப்பினரால் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டதுடன் சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் என்ற சந்தேகத்தில் அப்பாவி இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.

|போடா போ நீயும் உன்ரை பொய்யும்| என்ற தலைப்பில் இடம்பெற்ற இக்கவிதைச் சுவரொட்டிகளில் வீட்டிற்கு ஒரு போராளி நாட்டைக்காக்க வேண்டும் என்று பரப்புரை செய்;து இயக்கத்தில இணைக்கப்பட்ட போராளிகளை வெற்று பிரதேச வாத விசம்பரம்பி பிரிக்க நினைக்கும் கருணா குழுவினரை கண்டிக்கும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

வீட்டுக்கு ஒரு வீரர் நாட்டைக்காக்க வேண்டுமென்றாய்

தலைவரின் காலத்தில் தமிழீழம் கிடைக்கு மென்றாய் - இன்று

பதவிக்கும் பணத்திற்கும் மட்டுநகரை விற்பவனே

:D :P :lol:போடா போ நீயும் உன்ரை பொய்யும் :D :P :D

தமிழ்அலை பத்திரிகை இன்னும் வெளிவருகிறது;.. மட்டக்களப்பு அம்பாறை பகுதிகளில் அதுதான் முதலிடத்தில் இருக்கின்றது.. அதைப்பற்றி மூச்சுக்கூட இந்த இலத்திரனியல் ஊடகங்களுக்கு தெரியாமல்ப்போனது ஆச்சரியமாகவில்லை..

:lol: :P :D

கருணாவின் பக்கம் மக்கள் சார்ந்துள்ளார்களா ?

புலிகள் பக்கம் சார்ந்துள்ளார்களா என்பதை தேர்தல் முடிவுகள் வெளிச்சமாக்கும் அதுவரை அமைதியுடன் இருப்போமாக !

வேட்பாளர் ராஐன் சத்தியமூர்த்தி வைத்தியசாலையில் மரணமடைந்ததாகப் பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன

ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ செவ்வாய்க்கிழமை, 30 மார்ச் 2004, 10:02 ஈழம் ஸ

மட்டக்களப்பில் ராஐன் சத்தியமூர்த்தியில் இல்லத்திற்கு வந்த இனந்தெரியாதோர் சுட்டதில் படுகாயமடைந்த இவர் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அவசரமாக எடுத்துச் செல்லப்பட்டார்.

வைத்தியசாலையில் தற்போது அவர் மரணமடைந்ததாக வைத்தியரால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களை வாசகர்கள் விரைவில் புதினம் தளத்தில் பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

வேட்பாளர் இராஜன் சத்தியமூத்தி சுட்டுக்கொலை.

வேட்பாளர் இராஜன் சத்தியமூர்த்தி இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

படுகாயமுற்ற நிலையில் மட்டக்களப்பு மருத்துவமனைக்கு அவசரமாக எடுத்துச்செல்லப்பட்ட போது இவர் மரணமடைந்துள்ளார்.

மேலதிக செய்திகள் விரைவில்.

- புளியம் தீவிலிருந்து முகுந்தன் தமிழ்வெப்றேடியோவுக்காக -

  • தொடங்கியவர்

Cracks appear in Tamil Tigers' power

Tue 30 March, 2004 04:35

By Lindsay Beck

JAFFNA, Sri Lanka (Reuters) - A splash of motor oil on a monument honouring a Tamil Tiger martyr is a rare sign of dissent in northern Sri Lanka, where the rebels have run things for two decades.

The message is clear. Their strong-arm tactics are no longer welcome.

Many residents say they supported the Liberation Tigers of Tamil Eelam (LTTE) in their 20-year war for a separate state, feeling it was the rebels who would look out for the interests of the island's minority Tamil community.

"I never liked the LTTE. We supported them because they were fighting for our cause. But they used the iron fist. We don't need that anymore," said one resident of Jaffna, the heart of the Tigers' struggle, where bombs have turned whole city blocks into empty fields.

The surprise breakaway of a renegade eastern commander has become a powerful example of the changing Tamil expectations of the LTTE two years into a peace process with the government.

"Karuna made a strong break," he said. "I think that is a very good thing. People are afraid of the LTTE here, but I think it will have an impact in their minds the next time something happens they don't like."

Karuna -- the nom de guerre of eastern commander V. Muralitharan -- created an unprecedented rift among fighters known for their loyalty to the Tigers' northern leader Velupillai Prabhakaran when he broke from the group in early March -- along with 6,000 troops.

That shattered the discipline of a movement known to spare no dissenters, prompting the rebel leadership to threaten to kill Karuna, and warning fighters loyal to him they would be "responsible for the consequences".

Although the Tigers still wield unquestioned authority throughout the north -- and such writs make clear they intend to keep it -- cracks have begun to appear in their grip on power.

Besides the motor oil tossed on the hero's statue, another martyr's monument is overgrown with anthills and recently a Tiger cadre was refused entry to a cricket match when he had no ticket.

Small acts of dissent that officials say add up to something significant.

"These aren't big things, but they are in a way a reflection of the morale of the people here. I was surprised to see them," said one official in Jaffna.

CHALLENGE AT THE POLLS

The split has also challenged the Tigers' claim to be the sole voice of the Tamil people -- a view already being put to the test by the island's general election, in which Tamil candidates from parties opposed to the rebel-backed Tamil National Alliance (TNA) are set to win seats.

"People are confused. They (the LTTE) say they are the sole representatives, but how can you see that? Inside the LTTE even that unity is not there," said Douglas Devananda, who heads the Eelam People's Democratic Party.

Whether through the TNA at the April 2 polls, or at peace talks which could give the Tigers a power-sharing agreement for the north and east, the rebels are moving from guerrilla group to governance.

That has people judging them by a different set of standards, and when the Tigers expelled Karuna and called him a traitor to the Tamil people, it set a worrying example of how they deal with what many saw as a legitimate grievance.

"People think, if this happens with their own cadre, they wonder -- if there is an interim administration, will people have any chance at freedom of speech," said a Jaffna priest.

He said many felt Karuna was right in saying Tamils from the north were treated better than those from the east, but that the Tigers refused to accept a legitimate complaint.

"They just refuse and deny," said the priest.

Despite the whispers of discontent, others said that as a minority in the island dominated by the mostly Buddhist Sinhalese it was important for Tamils to present a united front and Karuna had weakened their cause.

"We are a small community. To break apart will weaken us," said a retired teacher from Jaffna who gave his name only as Arumanayagam.

It remains to be seen how long the Tigers will tolerate the split or any quiet challenges to their authority it may have helped inspire.

"The LTTE's nature is basically as a militaristic organisation," said Kethesh Loganathan, of the independent Centre for Policy Alternatives.

"It is certainly not in keeping with the LTTE to ignore a challenge of this nature."

Thanx: Reuters

  • தொடங்கியவர்

Tamil candidate for Sri Lanka's Parliament slain in eastern Sri Lanka

Associated Press , March 30. COLOMBO, Sri Lanka (AP) _ Unidentified gunmen on Tuesday stormed the home of a Tamil parliamentary candidate who was allied to a renegade rebel leader, killing him and one of his relatives, police said.

Another relative was seriously wounded in the attack in the eastern town of Batticaloa, police spokesman Rienzie Perera said.

Rajan Sathiyamoorthy of the Tamil National Alliance was shot at point-blank range and declared dead after he was taken to a hospital, Perera said.

Supporters of the Tamil Tiger rebel movement are running as candidates of the mainstream Tamil National Alliance. Party leaders could become kingmakers after Friday's vote if the results _ as expected _ do not conclusively favor either of the country's two main political blocs.

However, the Tamil alliance has been in crisis since a split in rebel ranks in early March. A powerful Tiger leader broke away from the main guerrilla group with about 40 percent of its fighting force.

A policeman in Batticaloa said on condition of anonymity that Sathiyamoorthy was a staunch supporter of the breakaway leader, Vinayagamoorthy Muralitharan.

Seven of the eight Tamil National Alliance candidates running in Batticaloa are believed to support Muralitharan. Many of them have complained of anonymous telephone threats urging them to withdraw from the election, the policeman said.

The pro-Tiger TamilNet Web site referred to Sathiyamoorthy as a ``close confidante'' of Muralitharan.

The incident took place just four days after the Tamil Tigers warned Muralitharan's cadre and supporters to ``keep away from him.'' Muralitharan has been expelled from the Tiger group and branded a traitor.

The rebel split, which has raised fears of renewed fighting that could draw in the Sri Lankan army, comes on top of a power struggle between the country's president and prime minister that has prompted Friday's election.

Political violence has spiked in recent days in Sri Lanka, though it remains far beneath the country's last election, in 2001, when dozens of people were killed in political attacks.

Tuesday's shooting was the third in three days, and the second in that area. It took place amid heightened police and army presence in Batticaloa, about 220 kilometers (140 miles) east of the capital, Colombo.

``Police have been put on red alert,'' said Co. Sumeda Perera, a military spokesman, with roadblocks and spot checks increased in the region.

The Tigers are suspects in at least one other shooting, of a university professor believed to support the dissident rebel leader.

No arrests had been made so far.

On Monday, Muralitharan's spokesman, Varathan, blamed the Tigers' northern-based leadership for the professor's shooting and one other attempted murder, and predicted more such violence.

The killings took place hours before campaigning for the decisive poll drew to a close.

The April 2 election is being fought mainly on the issue of who can best lead the government's peace negotiations: President Chandrika Kumaratunga or her rival, Prime Minister Ranil Wickremesinghe.

Sri Lanka's civil war _ pitting Tamil rebels against the Sinhalese-dominated government _ has been on hold since a 2002 cease-fire, but peace talks on a comprehensive solution have stalled. Nearly 65,000 people were killed before the truce.

Thanx: Associated Press

  • தொடங்கியவர்

Tigers condemn TNA candidates killing

[TamilNet, March 30, 2004 07:27 GMT]

The Liberation Tigers Tuesday said they strongly condemn the killing of Mr. Rajan Sathiyamoorthy, Tamil National Alliance candidate for Batticaloa. The people of Batticaloa should not to be perturbed by such incidents of violence in the district that create fear. We call on them to vote for the TNA and show the world the national strength of the Tamil people, the LTTE said in statement issued in Tamil from their political headquarters in Kilinochchi Tuesday. Mr. Sathiyamoorthy was shot dead by unidentified gunmen at his residence Tuesday morning.

The LTTE statement says: The increasing incidence of shootings at this juncture when the election is nearing will jeopardise the democratic conduct of the polls and affect the peace process.

The killing of Mr. Rajan Sathiyamoorthy has created confusion in Batticaloa at a time when the people of northeast were preparing to express their political aspirations through the elections.

The peaceful conduct of the election campaign in the Batticaloa-Amparai district was plunged in crisis when the Karuna group began to interfere and disrupt it.

Thanx: Tamil Net

  • கருத்துக்கள உறவுகள்

வேட்பாளர் இராஜன் சத்தியமூத்தி சுட்டுக்கொலை.

வேட்பாளர் இராஜன் சத்தியமூர்த்தி இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

படுகாயமுற்ற நிலையில் மட்டக்களப்பு மருத்துவமனைக்கு அவசரமாக எடுத்துச்செல்லப்பட்ட போது இவர் மரணமடைந்துள்ளார்.

மேலதிக செய்திகள் விரைவில்.

- புளியம் தீவிலிருந்து முகுந்தன் தமிழ்வெப்றேடியோவுக்காக -

சத்தியமூர்த்தி கொலை தொடர்பான விசேடசெய்திகள்.

http://www.worldtamilradio.info/sm.ram

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.