Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தளபதி ரமணன் இராணுவத்தின் சினைப்பர் தாக்குதலில் வீரச்சாவு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து சில நாட்களாக வவுணதீவில் சிங்கள இராணுவம் தாக்குதல்களை நடத்தி வந்திருக்கின்றது. இப்படியான சந்தர்ப்பத்தில் மூத்த தளபதிகள் யாராவது வருவார்கள் என்று எண்ணி தனது கொலைக் கத்தியை தீட்டி வைத்திருந்திருக்கின்றது. துர்அதிஸ்டவசமாக இத் தளபதி மாட்டுப்பட்டு விட்டார்.

தளபதி ரமணன் அண்ணாவுக்கு எனது வீர அஞ்சலிகள்

தமிழீழ விடுதலைக்கு வித்திட்டு வீரகாவியமாகிப்போன தளபதி இரமணனிற்கு வீர வணக்கங்கள்.

சமாதானம் சமாதானம் என பொறுமை காத்த தமிழருக்கும் புலிகளிற்கும் சிங்களத்தின் சமாதானத்திற்கான உச்ச பரிசு தளபதி ரமணனின் வீரச்சாவு.

சர்வதேசம் இலங்கையில் என்ன நடக்கிறது என்ற யதார்த்தைப் புரிந்து கொள்ளாமல் தொடர்ந்து தமிழர் போராட்டத்தை முடக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள நிலையிலும் எமது தலைமை ஏன்தான் தொடர் பொறுமை காக்கிறதோ தெரியவில்லை.

தளபதி ரமணனின் படுகொலைக்கு நிச்சயம் நாமும் எமது மொழில் பதில் வழங்கியாக வேண்டும். தொடர் படுகொலைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் நாம் பொறுமை காப்பது எமக்கே சினத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகிறது. தலைமை விரைவில் பொறுமையை கலைத்து விரைவில் பதில் நடவடிக்கைளிற்குரிய உத்தரவுகளை வழங்கும். அது சில நாட்களோ அல்லது சில மணித்தியாலங்களோ தெரியாது.

மட்டு -- அம்பாறை துணைத் தளபதி லெப்.கேணல் ஜீவன் என்ற அனுபவம் வாய்ந்த தளபதியின் இழப்புடனேயே சமாதானம் என்ற சதிப் பொறுக்குள் தமிழர்கள் தள்ளப்பட்டனர்.

மட்டு மாவட்ட துணைத் தளபதி ரமணன் என்ற ஆற்றல்மிகு தளபதியின் இழப்புடன் இந்த சமாதானம் என்ற சதிப்பொறியைத் தகர்;த்து, இத் தளபதிகளும் ஆயிரமாயிரம் மாவீரர்கள் நெஞ்சில் சுமந்த இலட்சியக் கனவான தமிழீழத் தனியரசை அடைவதற்கான போரினைத் தொடர்வோம்.

போர் ஆரம்பிக்கப்பட்டு மிகக்குறுகிய காலத்திற்குள்ளேயே எமது இலட்சியக் கனவு ஈடேறும்.

தளபதி ரமணனுக்கு எமது வீரவணக்கம்

தளபதி ரமணனுக்கு எமது வீர அஞ்சலிகள்

கேணல் தர தளபதி நிலை ரமணன் அவர்களிற்கு தேசியத் தலைவர் அவர்களால் இன்று வழங்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

கேணல் ரமணனின் வித்துடலுக்கான அஞ்சலிப் படங்கள்!!

3.jpg

சிறப்புத் தளபதி கேணல் பானு அஞ்சலி செய்கின்றார்!

4.jpg

5.jpg

6.jpg

-மட்டக்களப்பு ஈழநாதம்-

  • கருத்துக்கள உறவுகள்

தளபதி ரமணனுக்கு "கேணல்" நிலை

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இருபது வருடங்களுக்கு மேலாக உறுதியுடன் போராடி எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் சிம்பசொப்பனமாய் விளங்கிய தளபதி ரமணனுக்கு தேசியத் தலைவரால் இன்று கேணல் நிலை வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீரச்சாவுக்குப் பின்னான கேணல் நிலை வழங்கப்பட்டுள்ள முதலாவது தளபதி ரமணன் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் இதுவரை நான்கு கேணல் நிலை தளபதிகள் வீரச்சாவை தழுவியுள்ளனர். அவர்களில் இரண்டு தளபதிகள் தாயக மண்ணிலே வீரச்சாவை தழுவினர்.

இரணடு தளபதிகள் தாயகத்துக்கு வெளியே வீரச்சாவை தழுவினர்.

*முதலாவது கேணல் நிலை தளபதி கிட்டு வங்கக் கடலிலே வீரச்சாவை தழுவினார்.

*இரண்டாவது கேணல் நிலை தளபதி சங்கர் அல்லது முகிலன் முல்லைத்தீவில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியின் தாக்குதலில் வீரச்சாவடைந்தார்.

*கேணல் ராஜூ மூன்றாவது கேணல் நிலை தளபதி.

*நேற்றுமுன்தினம் வீரச்சாவடைந்த கேணல் ரமணன் நான்காவது உயர் நிலை தளபதியாவார்

-மட்டக்களப்பு ஈழநாதம்-

சர்வதேசக் கண்காணிப்புடனான சமாதானம் தமிழர்கள் முதுகிலே மீண்டும் ஒருமுறை ஓங்கிக் குத்தியிருக்கிறது. மட்டக்களப்பு மாவட்டத்தின் துணைத் தளபதி கேணல் ரமணன் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள வவுணதீவில் பாதுகாப்பு அரண்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த வேளை சிறிலங்கா படையினரின் குறிச்சூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார்.

இது நடைமுறையில் இருந்து வரும் போர் நிலையின் தீவிரத்தைப் பறை சாற்றுவதுடன் சிறிலங்கா அரசின் நிலைப்பாட்டையும் எண்ணவோட்டத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பழுகாமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கேணல் ரமணன், எண்பத்தாறில் போராட்டத்தில் இணைந்தவர். அவருடைய மூத்த சகோதரரும் போராளி. சகோதரியும் இளைய சகோதரரும் போராளிகளாக இருந்தவர்கள். இன்னுமொரு சகோதரர் பாதை மாறிய ஒரு அமைப்பிலிருந்து விலகி, விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்தபோது துரோகிகளால் கொல்லப்பட்டவர். "புலிகளின்" வீடு என்பதாலும் புலிகளை ஆதரிக்கும் வீடென்பதாலும் அவரின் தாயாரின் வீடு படையினரால் குண்டு வைத்துத் தரை மட்டமாக்கப்பட்டது.

ஆரம்பத்தில் லெப். கேணல் றீகனின் (முன்னாள் மட்டு மாவட்டத் தளபதி) அணியில் செயற்பட்ட ரமணன், இந்திய ஆக்கிரமிப்புக் காலத்தில் துணிகரமான தாக்குதல்களைச் செய்தவர். பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலத்தில் மறைந்திருந்து இந்தியக் காலாட் படைமீது தாக்குதல் நடத்தி ஆயுதங்களையும் கைப்பற்றியதால் பாராட்டும் பெற்றவர். அதன்பின் தம்பிலுவில் துரோகிகள் முகாம் தாக்குதலுக்கு அணித்தலைவராகச் சென்றிருந்தார். பூநகரி வரலாற்றுச் சமரிலும் பங்கேற்றார்.

மட்டு நகரில் நியூட்டன் அவர்களின் காலத்திலும் அதற்குப் பின்னரும் படைத்துறைப் புலனாய்வுச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த கேணல் ரமணன் குறிப்பிடத்தக்க முறியடிப்புப் புலனாய்வுத் நடவடிக்கைகள் பலவற்றைச் செய்திருந்தார். மதிநுட்பத் திட்டமிடலிலும், உளவியல் போரியலிலும் திறன்கொண்டிருந்த கேணல் ரமணன் மட்டக்களப்பிலுள்ள சிறிலங்கா படைச் சிப்பாய்களின் சிம்மசொப்பனமாக விளங்கியவர்.

துரோகிகளின் செயற்பாடுகளை முடக்குவதில் திறமை காட்டிய அவர், கருணாவின் சதியை முறியடிப்பதில் மிக முக்கியமான பங்கு வகித்தவர்.

கருணா மட்டக்களப்பிலிருந்து விரட்டப்பட்ட பின்பும் தாயகத்திற்கு எதிராகச் செய்யமுனைந்த பல சதித் தாக்குதல்களைத் தடுத்த பெருமையும் ரமணனுக்கு உண்டு.

சுனாமியின் போது குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் நேரடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டபோதே சிறிலங்கா படைகள் ரமணனைப் பின் தொடர்ந்தமை குறித்தற்குரியது. அதன்பின் மாவட்டத்தின் துணைத் தளபதியாக படைத்துறை மற்றும் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்ட அவர், பன்சேனை திலீபன் மருத்துவ நிலையத்தை அமைப்பதற்கு இரவு பகலாக உழைத்தவர்.

தளங்களிலும் மக்களிடையேயும் ஒரு திறன்மிக்க போராளியாகவும், நாவண்மையுடைய பேச்சாளராகவும், விளையாட்டு வீரராகவும், கலைகளில் ஆர்வமுடன் பங்கேற்பவராகவும் தன்னை அடையாளப்படுத்தியுள்ள ரமணன், அண்மைக் காலத்தில் தமது இந்திய ஆக்கிரமிப்புக்கால தலைமறைவுப் போராட்ட வாழ்க்கையை படியுங்கள் அறியுங்கள் என்பதை மட்டக்களப்புப் பதிப்பிற்காக எழுத ஆரம்பித்திருந்தார்.

அனுபவமும், தலைமைத்துவ ஆற்றலும் மண்ணின் இயல்பறிந்த செயற்பாடும் கொண்ட ஒரு தளபதியைக் கொன்றிருப்பதன் மூலம் இனப்பிரச்சனைக்கான சிறிலங்கா தரப்பின் தீர்வுமுறை முன் வைக்கப்பட்டிருப்பதாகவே தமிழர் கருத இடமுண்டு.

மட்டக்களப்பு ஈழநாதம்

  • கருத்துக்கள உறவுகள்

எமது ஆயுதங்களுக்கு அஞ்சியதை விட கேணல் ரமணனுக்கே எதிரி அஞ்சினான்: கேணல் ரமேஸ்

எங்களிடம் இருந்த ஆயுதங்களிற்கு எதிரி கலங்கியதை விட தளபதி ரமணனின் பெயருக்கு அஞ்சுவதே கூடுதலானது. நாங்கள் ஒரு படைத்தளத்தைத் தாக்குகின்ற பொழுது ரமணனும் அதில் பங்கு கொள்கிறார் என்று எதிரிகள் அறிந்துவிட்டால் போதும், அந்தச் சண்டையே முடிந்துவிட்டது மாதிரி அந்தளவிற்கு அவரின் சண்டை வியூகங்கள், உத்திகள் மேலானவை.

கேணல் ரமணனுக்கு புதுக்குடியிருப்பில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வில் உரையாற்றிய தளபதி கேணல் ரமேஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

மட்டக்களப்பு படுவான்கரையில் உள்ள பழுகாமம் கிராமத்தில் தான் ரமணன் பிறந்தார். தளபதி குமரப்பா அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தை நிர்வகித்த காலம் முதல் இவரின் குடும்பம் இன்றுவரை எதிரிகளால் தாக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. இவரது சகோதரர்கள் ஒன்பது பேர் அதில் மூன்று பேர் இப்போதும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இந்தியப் படைகளின் காலத்தில் இவரின் சகோதரன் ஒருவர் மூத்த உறுப்பினராக இருந்து வீரச்சாவடைந்து விட்டார்.

எமது போராட்டம் கட்டம் கட்டமாக வளர்ந்து கொண்டிருந்த காலத்தில் ரமணன் போராட்டத் தேவை உக்கிரமடைந்து கொண்டிருந்தது. இவரின் ஆரம்பகட்டச் செயற்பாடு எமது இயக்கத்திற்கு ஆட்களைச் சேர்ப்பது தான். அதில் ரமணன் அதி தீவிரமாகச் செயற்பட்டார். படைப்பலத்தை வலுவாக்கியவர் ரமணன். மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் தொகையில் எதிரிகள் கொன்று குவிக்கப்பட்டமைக்கு இவரின் செயற்பாடுதான் முக்கிய காரணம்.

இந்தியப் படைகளுக்கு எதிரான போராட்டம் முதல் இன்று வரை ரமணன் உறுதியாக உழைத்தார். எம்மைப் பலவீனப்படுத்துவதற்கு எப்போதெல்லாம் முயன்றார்களோ அப்போதெல்லாம் தீரமுடன் செயற்படுவார் இவர். இந்தியப் படைகள் மீதான தாக்குதலை நேரடியாக நின்று நெறிப்படுத்தி வெற்றிகொண்டார்.

ரமணன் வெறுமனே சிறிலங்காப் படைகளுக்கும் துரோகக் கும்பல்களுக்கும் மாத்திரம் தான் சிம்ம சொப்பனமாக செயற்பட்டவர் அல்ல. இந்தியப் படைகளும் ரமணனை மறந்திருக்க மாட்டார்கள். 1988 ஆம் ஆண்டு 09 மாதம் 10 ஆம் திகதி கொக்கட்டிச்சோலையில் இந்தியப் படையின் முகாம் ஒன்றைத் தாக்கினோம். அந்தத் தாக்குதலில் ஒரு ஆர்.பி.ஜியை வைத்து மிகச் சொற்ப போராளிகளுடன் அதனை தாக்கியழித்தார். இந்தச் சண்டையில் ரமணன் காட்டிய அதிதீவிரத் திறமையும், மதி நுட்பமும் எம்மை வெற்றிகொள்ளச் செய்தது. இச்சம்பவம் ரமணனின் போர்த்திறமைக்கு ஓர் எடுத்துக் காட்டு.

கேணல் ரமணன் மிகவும் அமைதியானவர். பணிவான சுபாவம் கொண்டவர். அவரின் அமைதிக்குப் பின்னால் ஒரு சிறந்த ஆற்றல் இருக்கிறது. ரமணனின் ஒவ்வொரு வசனங்களும் அற்புதமானவை. விடா முயற்சிக்கு எடுத்துக்காட்டானவர் இவர்.

ஒரு கட்டத்தில் இவரின் செயற்பாடு புலனாய்வு ரீதியானதாக இருந்தது. அதில் பெரும் சாதனைகளைப் படைத்தார். மிகவும் இரகசியமான நடவடிக்கைகளை வெற்றிகரமாகச் செயற்படுத்தினார். எங்கள் தளபதிகள், போராளிகள், பொதுமக்கள் பலரின் இழப்புக்களைத் தவிர்த்தவர் இவர். எதிரி போட்டிருந்த புலனாய்வு ரீதியிலான செயற்பாடுகளைத் தாக்குதல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தியிருந்தவர்.

இராணுவ ரீதியிலும் புலனாய்வு ரீதியிலும் இரண்டு வழிகளிலும் செயற்பட்டு விடுதலையின் வாசலை அடைவதற்குப் பெரும் பாடுபட்டவர். ரமணனைக் கொன்றுவிட வேண்டும் என்பதற்காக எதிரிகளின் புலனாய்வாளர்கள் பலர் இவரின் முகாம் வரை ஊடுருவி வந்தார்கள். அவர்களையும் இவர் தான் கைது செய்திருந்தார். புலனாய்வு ரீதியான முக்கியமான தகவல்களைச் சேகரிப்பதில் தனித்திறமை வாய்ந்தவர். மட்டக்களப்பு மாவட்டத்தில் நடத்தப்பட்டதும், அங்கிருந்து ஒழுங்குபடுத்தப்பட்டுப் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டதுமான கரும்புலித் தாக்குதல்களுக்கு எல்லாம் ரமணன் மூலகாரணமாக இருந்துள்ளார்.

ரமணனால் விடுதலைப் போராட்டத்தில் இணைக்கப்பட்ட போராளிகள் வன்னி, யாழ்ப்பாணக் களமுனைகளில் போரிட்டிருக்கின்றார்கள். பல வெற்றிகளையும் பெற்றிருக்கின்றார்கள். துரோகி கருணாவின் செயலுக்கு முடிவு கட்டுவதற்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். தமிழீழத் தேசம் முழுமையிலும் ரமணனின் சிந்தனை இருந்தது. தனது போர் ஆற்றலை அனைத்து இடங்களிலும் பிரயோகிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

பெரும் தளபதி ரமணனின் இறுதி ஆசையை நாங்கள் நிறைவேற்ற அனைவரும் தேசியத் தலைவரின் பாதையில் ஒன்று திரளவேண்டும். ரமணனின் உயிரைப்பறித்த வவுணதீவு முகாமிலுள்ள எதிரிகள் உட்பட எங்கள் தாயகத்தில் ஆக்கிரமித்திருக்கின்ற எதிரிகள் அனைவரையும் விரட்டி சுதந்திர தமிழீழத்தை நாங்கள் அடைய வேண்டும் என்றார் தளபதி கேணல் ரமேஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

கேணல் ரமணன் படைத்துறை புலனாய்வாளாராக தனித்துவமாக செயற்பட்டார்: பொட்டு அம்மான் கேணல் ரமணனின் சிறந்த செயற்பாடுகள் காரணமாக அவரை எமது புலனாய்வுத்துறையிலே இணைத்துப் புலனாய்வுச் செயற்பாட்டாளராக இணைக்க நான் விரும்பினேன். ஆனால் மாவட்ட தேவை கருதி அங்கொரு படைத்துறைப் புலனாய்வுச் செயற்பாட்டாளராகத் தனித்துவமாகச் செயற்பட்டு வந்தார் என்று விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல் ரமணனின் வீரச்சாவு தொடர்பாக தமிழீழத் தேசியத் தொலைக் காட்சிக்கு தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ரமணனை எனக்கு மிக நீண்ட நாட்களாகத் தெரியும். 1987 இன் ஆரம்பத்தில் அல்லது அதற்கு முன்னைய காலப்பகுதியில் என்று நினைக்கின்றேன்.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலைக்கு அண்மையாக உள்ள அம்பிலாந்துறைக் கிராமத்தில் சிறிலங்காப் படையினருடைய நகர்வொன்றைத் தடுத்து நடத்திய சண்டை ஒன்றிலேயே எம்முடன் சேர்ந்து சிறிலங்காப் படையினரின் நகர்வினைத் தடுப்பதிலே இணைந்து செயற்பட்டிருந்தார். அவ் வேளையில் அவர் றீகனின் அணியிலே ஒரு போராளியாகச் செயற்பட்டிருந்தார்.

மட்டக்களப்பு அம்பாறை காடு-மேடுகள், வயல்வெளிகள் எல்லாவற்றிலும் நாம் நீண்ட பயணங்களை நீண்டநாட்கள் ஒன்றாகச் செய்திருந்தோம். பல்வேறு நடவடிக்கைகளிலே அவர் சேர்ந்து செயற்பட்டிருந்தார். அவ்வேளையில் அவர் றீகனின் அணியிலே ஒரு போராளியாக அதன் பின்னர் றீகனின் அணியிலே ஒரு பகுதிப் பொறுப்பாளராகச் செயற்பட்டிருந்தார்.

அவரது குடும்பத்தினரதும் போராட்டப் பங்களிப்புக்கள் பற்றி எல்லோருக்கும் தெரியும். அதைத் தொடர்ந்து அவரது சிறந்த செயற்பாடுகள் காரணமாக அவரை எமது புலனாய்வுத்துறையிலே இணைத்துப் புலனாய்வுச் செயற்பாட்டிலே ஒருவராக இணைக்க நான் விரும்பியிருந்தேன். ஆனாலும் மாவட்டத்தின் தேவை கருதி அங்கே ஒரு படைத்துறைப் புலனாய்வுச் செயற்பாட்டாளராக அவர் தனித்துவமாகச் செயற்பட்டிருந்தார்.

அவர் படைத்துறைப் புலனாய்வுச் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த காலத்திலே வெற்றிகரமான பல நடவடிக்கைகளைச் செய்திருந்தார். அவற்றில் நான் நேரடியாக தொடர்புபட்டிருக்காத போதிலும் கூட அவருடைய நடவடிக்கைகள் எனக்கு வியப்பையும், பெருமையையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தத்தக்க வெற்றிகளை அவர் பெற்றிருந்தார்.

குறிப்பாகச் சொல்வதானால், சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரி சகபந்து என்பவர் மீது ஒரு வெற்றிகரமான கரும்புலி நடவடிக்கையையும், அதனைத் தொடர்ந்து இன்று கருணா போல் அன்று செயற்பட்ட ராசிக் என்ற துரோகி மீதான வெற்றிகரமான கரும்புலித் தாக்குதல் நடவடிக்கைகளையும் அவரது புலனாய்வுச் செயற் திறன் சார்ந்த வெற்றிகளாக மிக முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவையாகின.

கருணாவின் துரோகம் வெளிப்பட்ட வேளையிலே ரமணன் அதிர்ச்சியுற்றிருந்தார். இவ்வாறு துரோகத்திற்கான செயற்பாட்டை மனதிலே வைத்துக் கொண்டு இந்த மனிதரால் எவ்வளவு தூரம் இவ்வாறு நடிக்க முடிந்தது என அவர் ஆச்சரியப்பட்டிருக்கின்றார். அந்தத் துரோகத்தை முறியடிப்பதிலே தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தார். மிக ஆபத்தான பணிகளை பொறுப்பேற்றுக்களத்திலே இறங்கியிருந்தார். அது எல்லோருக்கும் தெரியும்.

தமிழீழத் தேசியத்தின் பால் அவர் கொண்டிருந்த மாறாத பற்றுறுதியும் விடுதலை என்பதில் அவருக்கிருந்த பூரணமான தெளிவும் தான் அவ்வாறான தெளிவான முடிவுகளை எடுப்பதற்கும் ஆபத்தை எதிர்கொள்வதற்கும் அவருக்கு உறுதுணையாக இருந்ததென்றால் மிகையில்லை என்றார் பொட்டு அம்மான்.

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களப்படைகளுக்கு சிம்ம சொர்ப்பனமாக விளங்கிய ரமணன்: நினைவு நிகழ்வில் தளபதி பால்ராஜ் நேரடியாக தாக்க திராணியற்ற எதிரிகள் தளபதி ரமணன் அவர்களை பின்புறமிருந்து தாக்கி வீழ்த்தி விட்டனர் என தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி கேணல் பால்ராஜ் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் இன்று புதன்கிழமை (24.05.2006) மாலை 4.00 மணிக்கு நடைபெற்ற கேணல் ரமணனின் நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

கேணல் ரமணனை நீண்ட நாட்களாக எனக்குத் தெரியாது. ஆனால் அவருடைய பல திறமைகளையும் சாதனைகளையும் கேள்விப்பட்டிருக்கின்றேன். இறுதியாக தளபதி ரமணன் தலைவரைச் சந்திப்பதற்காக வந்திருந்தபோது நான்கு மணிநேரம் அவருடன் கதைப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

அந்த கலந்துரையாடலின் போதே தளபதி ரமணன் பற்றி என்னால் முழுமையாக அறிந்துகொள்ள முடிந்தது.

கருணாவின் துரோகம் நிகழ்ந்த போது மட்டக்களப்பிலிருந்து வன்னிக்கு வந்த போராளிகளில் ரமணனும் ஒருவர். ரமணன் உட்பட்ட போராளிகளை சந்தித்த போது தலைவர் அவர்கள், நீங்கள் தான் கருணாவின் முக்கிய இலக்காக இருப்பீர்கள் என்று ரமணைப் பார்த்து கூறினார். அந்தளவிற்கு தளபதி ரமணன் எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் முக்கிய இலக்காக இருந்தார்.

ரமணனை நேரடியாக வீழ்த்த முடியாத எதிரிகள் பின்னால் இருந்து தாக்கி வீழ்த்தி விட்டார்கள். ரமணன் அவர்களது வீழ்ச்சியின் பின்னர் தமிழினம் ஒன்றை உணர்ந்துள்ளது. அதாவது தமிழினம் ஓரணியில் திரண்டு எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் தக்க பாடம் புகட்ட வேண்டுமென்பதே அது என்றார்.

நிகழ்வில் நினைவுரையாற்றிய கேணல் ரமேஸ்:

யாழ். குடாநாடு மீட்கப்படும் சமரில் பங்குகொள்ள வேண்டுமென்று தளபதி ரமணன் விருப்பு கொண்டிருந்தார். ரமணனின் கனவுகளை நிறைவேற்ற மக்கள் அனைவரும் பாடுபட வேண்டும். மட்டக்களப்பும், யாழ்ப்பாணமும் மீட்கப்படும் போது தான் ரமணனின் கனவு நனவாகும்.

தளபதி ரமணன் அவர்கள் இலங்கை-இந்தியப்படைகளுக்கு எதிரான பல வெற்றிகரத் தாக்குதல்களை நிகழ்த்தியவர். மட்டக்களப்பில் துரோகம் நிகழ்ந்தபோது தமிழ்த் தேசியத்தை காப்பதற்காக தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தவர்.

ரமணனின் இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பாக இருந்தபோதிலும் மக்களும் போராளிகளும் எதிரிகளையும் துரோகிகளையும் எதிர்கொள்ள ஒன்றுபடவேண்டும் என்று தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட தேசிய எழுச்சிப் பேரவையைச் சேர்ந்த எஸ்.சிவபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவு நிகழ்வில் முதன்மைச் சுடரினை தமிழீழ மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் பொன் தியாகம் ஏற்றிவைத்தார்.

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

சங்கதியில் வந்த சிறப்புக்கட்டுரை - தளபதி ரமணனின் வீரச்சாவுக்கு புலிகள் கொடுக்கப்போகும் பதிலடி என்ன?

http://sankathi.com/content/view/3102/28/

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வெக்கம் கெட்ட செய்தி என்னவென்றால் கேணல் ரமணனின் கொலையை கருணாக் கும்பல் உரிமை கோருவது தான். தாங்கள் எப்படி நடந்ததாக புழுகித் தள்ளுகின்றார்கள். ஆனால் கொலை நடந்த அன்று கிளைமோர் தாக்குதலில் தான் ரமணனைக் கொன்றதாக அறிக்கை விட்டவர்கள், இப்போது சினைப்பர் தாக்குதல் என்று கதை விடுவதின் மர்மம் என்ன? கிளைமோர் தாக்குதலில் 15 புலிகள் வரை கொன்றதாக பிதற்றியது குறிப்பிடத்தக்கது!

உண்மையில் இவர்களுக்கு முதலில் எப்படிக் கொல்லப்பட்டது என்று தெரியாது. எனவே வழமை போல புழுகித் தள்ளும் இந்த ஆசாமிகள் சிங்கள இராணுவம் செய்த கொலையை தங்களின் வீரமாகக் காட்ட முனைகின்றார்கள். இப்படி ஒரு வெக்கம் கெட்ட பிழைப்பு வேண்டுமா?

தூயவன்,

அவர்கள் இராணுவத்துடன் இறுக்கமாக ஐக்கியமாகி விட்டார்கள் அதனால்தான் தங்களையும் இராணுவத்தையும் பிரித்துபார்க்க வேண்டாம் என்பதற்காக இப்படி கூறியிருப்பார்கள். அது மட்டும் இல்லாமல் தாங்கள் இராணுவ முகாமுக்குள் இருந்துதான் கொலைகளை செய்வதையும் இதன்மூலம் ஒத்துக்கொண்டிருக்கிறார்கள்.

  • தொடங்கியவர்

தளபதி றமணனுக்கு எமது வீரவணக்கம். :cry:

http://www.seeynilam.tk/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவிசிலிருந்து தாய்மண் விளையாட்டுக்கழத்தின் தளபதி றமணனுக்கு வீரவணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த வாரம் மறைந்த தளபதி கேணல் ரமணனின் நினைவாக வெளியிடப்பட்ட பாடல்!!

உணர்வை உருக்கி உயிரைப் பிழியும் பாடல்!!

பாடலாசிரியர்: கவிஞர் புதுவை இரத்தினதுரை

பாடியவர்: வசீகரன்

இசை: இசைப்பிரியன்

வெளியீடு: தர்மேந்திரா கலையகம்

http://www.battieelanatham.com/audio/ramanan.ram

மீண்டும் ஒரு முறை கேணல் ரமணனுக்கு வீரவணக்கங்கள்!!!

உபயம்: மட்டக்களப்பு ஈழநாதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.