Jump to content

அரிசிமாக் கூழ் -யாப்பாணம் முறை


Recommended Posts

பதியப்பட்டது

[size=5]அரிசிமாக் கூழ் - யாழ்ப்பாணம் முறை

தேவையான பொருட்கள்:[/size]

[size=5]பச்சரிசி மா – பச்சைசியை ஊற வைத்து கிறைண்டரில் அரைத்து அல்லது இடித்து மாவாக்கியது 250 கிராம்[/size]

[size=5]சுத்தம் செய்த இறால் - 100 கிராம்[/size]

[size=5]சுத்தம் செய்த நண்டுத் துண்டுகள் -10[/size]

[size=5]மீன்தலை – (சீலா, கலவாய், கொடுவா அல்லது முள்ளு சப்பக்கூடிய மீன்) சுத்தம் செய்யப் பெற்று சிறு துண்டுகளாக வெட்டப் பெற்றவை[/size]

[size=5]கீரை மீன் அல்லது சூடைமீன் - 10[/size]

[size=5]புழுங்கல் அரிசி - ஒரு கைப்பிடி[/size]

[size=5]பயிற்றங்காய் – 10 சிறு துண்டுகளாக வெட்டி எடுத்தவை[/size]

[size=5]புளி - ஒரு சின்ன உருண்டை[/size]

[size=5]பாலாக்கொட்டை - 100 கிராம் சுத்தம் செய்து இரண்டாக வெட்டியவை[/size]

[size=5]வறுத்த கடலை - கொஞ்சம்[/size]

[size=5]சிறிதாக வெட்டிய மரவள்ளிக்கிழங்கு - 250 கிராம்[/size]

[size=5]கறி முருக்கம் இலை - 250 கிராம்[/size]

[size=5]தண்ணீர் - தேவையான அளவு[/size]

[size=5]உப்பு - தேவையான அளவு[/size]

[size=5]மஞ்சள் - சிறிதளவு[/size]

[size=5]பச்சை மிளகாய் – 3-5[/size]

[size=5]மிளகு - சிறிதளவு[/size]

[size=5]நற்சீரகம் - சிறிதளவு[/size]

[size=1][size=5]செத்தல் மிளகாய் - சிறிதளவு[/size][/size]

[size=1][size=5]செய்முறை:[/size][/size]

[size=5]1. கீரை மீன் அல்லது சூடை மீனை உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து பொரித்து வைக்கவும்.[/size]

[size=5]2. மஞ்சள், மிளகு, நற்சீரகம் ,செத்தல் மிளகாய் ஆகியவற்றில் சிறிதளவு எடுத்து அம்மியில் அல்லது கிறைண்டரில் நன்றாக அரைத்து உருண்டையாக்கி எடுங்கள்.[/size]

[size=5]3. அந்த உருண்டையோடு புளியையும் சேர்த்து கரைத்து வைக்கவும்.[/size]

[size=5]4. பின்னர் கழுவிய அரிசியுடன், பலாக்கொட்டை, கடலை, மரவள்ளிக் கிழங்கு, ஆகியவற்றை ஒரு பானையில் இட்டு அவிய விடவும். அத்துடன்;[/size]

[size=5]5. மீன்தலைத் துண்டுகள், நண்டு, இறால் ஆகியவற்றையும் பானைக்குள் போட்டு அவிய விடவும்.[/size]

[size=5]6. அரிசி பாதி அவிந்த நிலையில் பயிற்றங்காய், முருக்கம் இலை எம்பனவற்றையும் பானைக்குள் போட்டு அவிய விடவும்.[/size]

[size=5]7. கடைசியாக கரைத்த புளிக் கரைசலையும் உப்பையும் சேர்த்து பாணையில் இட்டு கூழ் தடிப்பானவுடன் இறக்கவும்.[/size]

[size=5]8. சூடாக சுவையான யாழ்ப்பாணத்துக்கூழ் தயார்.

கூளோடு பொரித்து வைத்த மீன் பொரியலையும் கடித்துச் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.[/size]

[size=5] [/size]

[size=5]http://www.panippulam.com/index.php?option=com_content&view=article&id=1006:2010-12-24-04-22-35&catid=90:games&Itemid=455[/size]

Posted

[size=5]கூளோடு பொரித்து வைத்த மீன் பொரியலையும் கடித்துச் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.[/size]

மெய்யாலும் பிள்ளை உண்மையோ :lol: :lol: :D :D .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நவராத்திரி நடக்குது இந்த நேரத்தில உங்களுக்கு கூழ் தேவையாயிருக்குதோ <_<

Posted

நவராத்திரி நடக்குது இந்த நேரத்தில உங்களுக்கு கூழ் தேவையாயிருக்குதோ <_<

நவராத்திரி முடியக் குடிக்க அக்கா!! கருத்துக்கு நன்றி அக்கா!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பேர்தான் அரிசிமாக்கூழ் :D ......ஆனால் இது ஒடியல்மா கூழின்ரை கொப்பி :lol: .......அரிசிமாகூழ் எண்டால் கிட்டத்தட்ட.......ஆடிப்பிறப்புக்கு காய்ச்சிற கூழ் மாதிரியிருக்கும். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றிகள், அலை!

அதுவும் அந்தப் பொரிச்ச சூடை மீனின்ர தலையைக் கண்ணோடு சேர்த்துக் கடிக்கேக்க வருகிற சுவை இருக்கே!

அதுவும் தேங்காய் எண்ணையில் பொரித்ததாக இருந்தால், ஆளை இருத்தி எழுப்பும்!

அந்தளவுக்கு, மீன் பொரியலுக்கு அடிமை! :D

Posted

பேர்தான் அரிசிமாக்கூழ் :D ......ஆனால் இது ஒடியல்மா கூழின்ரை கொப்பி :lol: .......அரிசிமாகூழ் எண்டால் கிட்டத்தட்ட.......ஆடிப்பிறப்புக்கு காய்ச்சிற கூழ் மாதிரியிருக்கும். :icon_idea:

ஓ.... அப்படியா குசா, எல்லாம் ஈ அடிச்சான் கொப்பி தான்!! :D

நன்றிகள், அலை!

அதுவும் அந்தப் பொரிச்ச சூடை மீனின்ர தலையைக் கண்ணோடு சேர்த்துக் கடிக்கேக்க வருகிற சுவை இருக்கே!

அதுவும் தேங்காய் எண்ணையில் பொரித்ததாக இருந்தால், ஆளை இருத்தி எழுப்பும்!

அந்தளவுக்கு, மீன் பொரியலுக்கு அடிமை! :D

நன்றி புங்கை! :)

புங்கை நல்லாய் தான் இரசித்து மீன் பொரியல் சாப்பிடுறார் :lol:

Posted

நவராத்திரி நடக்குது இந்த நேரத்தில உங்களுக்கு கூழ் தேவையாயிருக்குதோ <_<

அக்கோய் நான் கேள்விப்பட்டனான் ஊரிலை திருவிழா விரதங்கள் தொடங்க முன்னமே ஆடு பிடிச்சந்து கட்டுவினமாம். இவை விரதமிருக்கேக்கை ஆட்டுக்கு நல்ல இலை ஆட்டுக்கு குழையெல்லாம் போட்டு வளப்பினமாம்.அப்பத்தான் விரதம் முடிய ஆடு கொழுத்திருக்குமாம் வேள்விக்கு தயாரா. அதுமாதிரித்தான் இதுவும் இப்ப செய்முறையை பாத்து தேவையான சாமான்களை வாங்கி தயாரா பிரிஜ்சிலை வைச்சா நவராத்திரி முடிய காச்ச வேண்டியதுதானே.

Posted

அலை, இது ஒடியல் கூழின் செய்முறை தான். அரிசிமாவில் செய்வது பற்றி தெரியாது.

அதுசரி - அரிசிமாவை என்ன செய்வது? சொல்லவே இல்லை? :D

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.