Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரித்தானியாவில் இருந்து சிலரை நாடு கடத்துவது இறுதி நேரத்தில் ரத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் இருந்து சிலரை நாடு கடத்துவது இறுதி நேரத்தில் ரத்து

சிறீலங்கா | ADMIN | OCTOBER 24, 2012 AT 09:36

பிரித்தானியாவில் இருந்து விசேட விமானம் மூலம் இலங்கைக்கு நாடுகடத்தப்படவிருந்த அகதிகளுள் 10 தொடக்கம் 12 பேர் வரையில் விமானத்தில் இருந்து தரையிறக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர்கள் இறுதி நேரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த தடையுத்தரவு கோரல் மனுவின் அடிப்படையில், நீதிமன்றம் அவர்களை நாடு கடத்த வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளது.

அவர்களின் வழக்குகளில் வாதாடிய சட்டத்தரணிகள் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளனர். நாடு கடத்தலுக்கு எதிராக சுமார் 12 சட்ட அமைப்புகள் மேல் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்தன.

இந்த மனு மீதான விசாரணையை அடுத்து, தமது கட்சிக்காரர்கள் பலரை நாடுகடத்த தடையுத்தரவு பெற்றுள்ளதாக குறைந்தது மூன்று சட்ட அமைப்புகள் உறுதி செய்துள்ளன.

இலங்கைக்கு இவர்கள் திருப்பி அனுப்பப்பட்டால், கைது, சித்திரவதை, உயிர் அச்சுறுத்தல் ஆபத்து இருப்பதாக சட்டவாளர்கள் வாதிட்டிருந்தனர்.

தமது கட்சிக்காரர்கள் மூவர் நாடு கடத்தப்படுவதில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளதாக டங்கன் லூவிஸ் சட்டவாளர்கள் அமைப்புத் தெரிவித்துள்ளது.

ஜெய்ன் சட்டவாளர்கள் அமைப்பு, ஒருவரின் நாடுகடத்தலை தடுத்து நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

இதற்கிடையே, இலங்கைக்கு அகதிகள் திருப்பி அனுப்பப்படுவதற்கு எதிராக, ஹீத்ரோ விமான நிலையத்துக்கு அருகேயுள்ள குடிவரவுத் தடுப்பு நிலையத்துக்கு முன்பாக நேற்று போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

http://thaaitamil.com/?p=36455

நல்ல செய்தி .............இறைவனுக்கு நன்றி .....

  • கருத்துக்கள உறவுகள்

இதே ஆக்கள் விசா கிடைச்சதும்.... முதல் வேலையா சிறீலங்கன் எயார் லைனில் சிறீலங்காவுக்கு சுற்றுலாப் போவார்கள்..!

எம்மவர்கள் செய்யும் ஏமாற்று வேலைகளால் தான்.. உண்மையாகவே பாதிக்கப்பட்ட உறவுகள் நீதி இன்றி துன்பப்படுகிறார்கள்..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் இனியாவது, பிரித்தானியாவில் நடக்கும்.... ஈழ ஆதரவுப் போராட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும்.

ஏன் பிருத்தானியா இப்படி செய்கிறதென்பதுதான் விளங்கவில்லை. தீர்வை கொண்டுவர உதவி விட்டு எதையும் செய்யட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களின் முடிவில் மாற்றம் கொண்டுவந்தது மனதுக்கு சந்தோசமாக இருக்கிறது..ஆனால் யாரும் இருக்கும் நாடுகளின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப உண்மையாக நடந்து கொண்டால் நன்று.

28 பேர்கள் கட்டுநாயக்காவில் போய் சேர்ந்துவிட்டார்கள் .அனுப்பிவிட்டார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் இனியாவது, பிரித்தானியாவில் நடக்கும்.... ஈழ ஆதரவுப் போராட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக சிறிலங்காவிற்கு அனுப்பும் நிலையில் உள்ளவர்கள் போராட்டங்களில் கலந்து கொள்வதில்லை, முன்பு பார்த்த முகங்களே தொடர்ந்தும் திரும்ப .... திரும்ப ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்கின்றார்கள் என்பதே கசப்பான உண்மையாகும். :(

28 பேர்கள் கட்டுநாயக்காவில் போய் சேர்ந்துவிட்டார்கள் .அனுப்பிவிட்டார்கள் .

எங்கிருந்து.................. கனடாவில் இருந்து மகேஸ்வரன் கோயில் திருவிழாவிற்கு சென்றவர்களையா ??????தவறான திரி அண்ணாச்சி

:rolleyes: :rolleyes:

28 பேர்கள் கட்டுநாயக்காவில் போய் சேர்ந்துவிட்டார்கள் .அனுப்பிவிட்டார்கள் .

எங்கிருந்து.................. கனடாவில் இருந்து மகேஸ்வரன் கோயில் திருவிழாவிற்கு சென்றவர்களையா ??????தவறான திரி அண்ணாச்சி

:rolleyes: :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் அவர் எத்தனை போய்ச்சேர்ந்திருக்கு என்று பார்ப்பாரே தவிர எங்கிருந்து என்பதெல்லாம் கவனத்திலெடுப்பதில்லை.

அது புலியாக இருந்தால் பெரும் சந்தோசம்.

(2nd Lead) 28 Lankans deported from UK return home: Deportatio​n of 32 individual​s halted [ Wednesday, 24 October 2012, 01:09.49 PM ]

srilanka_asylum_001.jpgDozens of Tamil asylum seekers have lodged emergency appeals in the high court to stop their deportation to Sri Lanka for fear they will be tortured on their return.It is understood that a further 10 to 12 firms have also lodged last-minute appeals on behalf of their clients.28 Lankan aylumseekres deported from UK arrive SriLankan shortwhile

என்ன செய்வது உங்களுக்கு எல்லாமே பிந்தித்தான் தெரிகின்றது .

என்ன செய்வது உங்களுக்கும் 32 பேர் என்றதை 10-12 பேர் என்று எழுதியிருந்தது பிந்தித்தானே தெரிகிரது 28 தானே முதலில் தெரிகிறது. :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.