Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நேசக்கரத்தை முடக்கும் கருணாகுழு(TMVP) உறுப்பினரும் அருண்தம்பிமுத்துவின் காரியதரசியுமான ராயேந்திர பிரசாத்தின் அடாவடித்தனம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரத்தை முடக்கும் கருணாகுழு(TMVP) உறுப்பினரும் அருண்தம்பிமுத்துவின் காரியதரசியுமான ராயேந்திர பிரசாத்தின் அடாவடித்தனம்.

Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Saturday, October 27, 2012

"எனது ஆயுதத்தை தீர்மானிக்கப்போவது யார் ?"

நேசக்கரம் தற்போது கிழக்கு மாகாணத்தில் போரால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மாணவர்களுக்கான வேலைத்திட்டங்களையே அதிகம் செய்து வருகிறது. புலம்பெயர்ந்து வாழ்கிற தமிழர்களிடமிருந்து பெறப்படுகிற உதவிகளை நேரடியாகவே உரியவர்களுக்கு எம்மால் வழங்கப்பட்டு வருகிறது.

எமது மக்களுக்கான இந்த மனிதநேயப்பணியை கடந்த 2மாதங்களுக்கு மேலாக கருணாகுழுவுடன் இயங்கி வந்தவரும் கருணாவின் தேன்FM வானொலியில் பணியாற்றியவரும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மட்டக்களப்பு இணைப்பாளர் அருண் தம்பிமுத்து அவர்களின் காரியதரசியாகவும் செயற்பட்டு வரும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான ராயேந்திரபிரசாத் (கலிங்கன்) அவர்களால் நேசக்கரம் பணியாளர்கள் தொடர்ந்து மிரட்டப்பட்டு வருகின்றனர்.

397938_110082815781711_1029508793_n.jpg

நேசக்கரம் பணியாளர்கள் சிலரது வீடுகளுக்கு நேரில் சென்று கொலை அச்சுறுத்தலையும் விடுத்துள்ள ராயேந்திர பிரசாத்திற்கு பயந்து தொடர்ந்து பணியாற்ற முடியாத நிலமையில் எமது 4உறுப்பினர்களும் இலங்கைக்கான நேசக்கரம் இணைப்பாளரும் இன்று தமது பொறுப்புகளிலிருந்து விலகியுள்ளனர்.

இன்னும் ஒருமாத காலத்தில் நேசக்கரத்தின் முழுமையான செயற்பாட்டை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நிறுத்திவிடுவதாகவும் ராயேந்திரபிரசாத் (கலிங்கன்) இன்று எமது இணைப்பாளரை மிரட்டியுள்ளார்.

603737_244666322323359_859216729_n.jpg

நாம் எவ்வித அரசியல் வேலைகளையும் செய்யவில்லை. எங்களது மக்களுக்கான உதவிகளை எங்கள் இளம் சந்ததிக்கான கல்வியையுமே கொடுக்க இதுவரையில் எவ்வளவோ சிரமங்களை எதிர் கொண்டு இயங்கி வருகிறோம். ஏந்த அரசியல்வாதியுடனோ அதிகாரமுள்ளவர்களுடனோ நாம் எவ்வித மோதலிலும் ஈடுபடாமல் முழுமையாக மக்களுடனேயே நிற்கிறோம்.

ராயேந்திரபிரசாத் (கலிங்கன்) அவர்களுடன் இன்று காலையில் தொடர்பு கொண்டு இவரது தொடர்ந்த அச்சுறுதல்கள் மொட்டைக்கடிதங்கள் பற்றி விசாரித்ததும் என்னை மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டியும் கடும் தூசண வார்த்தைகளால் பேசினாரே தவிர எனது கேள்விகளுக்கான பதிலைத் தரவேயில்லை. பொறுப்பும் அதிகாரமும் மிக்க அரச அதிகாரியான இவர் பேசிய அநாகரிகமற்ற பேச்சுக்களின் ஒலிப்பதிவிலிருந்து ஒருபகுதியை இங்கே தருகிறேன். நாகரீகம் கருதி அவரது தூசணவார்த்தைகளை தணிக்கை செய்கிறேன்.

http://youtu.be/j4ETwYVqEoU

ராயேந்திரபிரசாத்திற்கு நேசக்கரத்துடன் முரண்பாடு ஏன் ?

நேசக்கரம் மூலம் தாயகத்திற்கு அனுப்பப்படுகிற உதவியில் 10சதவீதத்தை தனக்குத்தர வேண்டுமென்றும் தன்னால் இனங்காட்டப்படுகிற வேலைத்திட்டங்களையே நாம் மேற்கொள்ள வேண்டுமென்றும் பலமுறை தொல்லைத் தந்து வந்திருந்தார். அனுப்பப்படுகிற உதவியில் 10சதவிகிதம் தனக்குத் தரப்பட்டால் எம்மை சுதந்திரமாக இயங்க விடமுடியும் எனவும் கேட்டிருந்தார்.

484399_222257961230862_1620201226_n.jpg

எனினும் இவரது அடாவடித்தனங்களை மீறிய எமது பணியாளர்களின் மீது அவதூறுகளைப் பரப்பியும் அவர்களது மனைவிமாரை தன்னுடன் உறவுக்கு வறுமாறு அழைத்தும் மிகவும் மோசமான முறையில் நடந்து கொண்டிருந்தார்.

எமது பணியாளர்களின் நோக்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளைக் கொண்டு செல்தல் ஆகையால் இவரது எல்லாவகையான அட்டகாசங்களுக்கும் பொறுமை காத்து தமது பணிகளை மேற்கொண்டு வந்தனர். தற்போது நிரந்தரமாக இயங்க முடியாத அபாய நிலமையில் தனது அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டுள்ள ராயேந்திரபிரசாத்தின் கொலை மிரட்டல் நேரடித்தாக்குதலினால் பணிகளைத் தொடர்ந்து செய்ய முடியாத இடைஞ்சலும் எமது பணியாளர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் குழந்தைகளின் உயிர்களுக்கும் அச்சுறுத்தலாகவும் அமைந்திருக்கிறது.

மக்களுக்கான பணிகளை முடக்கும் ராயேந்திரபிரசாத் (கலிங்கன்) அவர்களை மக்கள் முன் இனங்காட்ட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். எமது பணியாளர்கள் யாவரும் ஊதியம் பெறாது தங்களது சமூகத்திற்கான கடமையாகவே இதுவரை எம்மோடு இயங்கி வருகின்றனர்.

எமது உறவுகளாகிய புலம்பெயர் தமிழர்களிடமிருந்து பெறப்படுகிற உதவிகளிலிருந்து ஒரு துளியும் எமது பணியாளர்களுக்கோ அல்லது நிருவாகச் செலவுகளுக்கோ எடுக்கப்படுவதில்லை. கிடைக்கிற முழு உதவியும் எங்கள் மக்களையே சென்றடைய வைத்துள்ளோம். உதவிகளை வழங்கியவர்களின் விபரங்கள் உதவியின் பயன் போன்றவற்றையும் மாதம் மாதம் எமது கணக்கறிக்கையில் வெளிப்படையாகவே நேசக்கரம் இணைத்தில் இணைத்து வருகிறோம். இதனை எமது பங்களிப்பாளர்களும் பார்வையாளர்களும் நன்கறிவர்.

406269_221952714594720_288375853_n.jpg

ஆனால் அரசிடமிருந்தும் மக்களிடமிருந்தும் கொள்ளையடித்து கொழுத்திருக்கிற பணமுதலை ராயேந்திரபிரசாத் (கலிங்கன்) இன்னும் பணத்தைப் பெருக்க ஏன் நாம் 10சதவிகிதத்தை கொடுக்க வேண்டும் ? உடல் நோகாமல் கொள்ளையடித்தே வாழ்கிற இவருக்கு குளிரிலும் நெருப்பிலும் நாங்கள் கடின வேலைகள் செய்தும் எங்கள் மக்களுக்கு கொடுக்கிற உதவிகளில் பங்கு கேட்க ராயேந்திரபிரசாத் (கலிங்கன்) யார் ?

மட்டு மக்களே சிந்தியுங்கள்!

உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்கு கல்வியைத் தரவும் ஓயாது பணியாற்றிய எமது பணியாளர்களின் உயிர்களைக் காக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்குமானது கவனிப்பீர்களா? உங்கள் குழந்தைகளின் கல்வியை முடக்கவும் எமது பணிகளைத் தடுக்கவும் தனது அதிகாரத்தை பயன்படுத்தும் இந்த ராயேந்திரபிரசாத் (கலிங்கன்) என்ற கொள்ளையனை இனியும் மட்டு மாநகரசபையில் உறுப்பினராக வைத்திருக்கப் போகிறீர்கள் ?

ராயேந்திரபிரசாத் (கலிங்கன்) அவரது கொள்(கை)ளைகளும் :-

ராயேந்திரபிரசாத் (கலிங்கன்) கருணா குழுவின் பொறுப்பொன்றில் அங்கம் வகித்தவர். கருணாவின் வானொலியான தேன் FM வானொலியில் வேலைசெய்து கருணாவின் வருமானத்தில் பலகோடிகளைச் சுருட்டியதால் கருணாவால் வானொலியை விட்டு வெளியேற்றப்பட்டவர். அதிகாரத்தை பயன்படுத்தி பல பெண்களின் வாழ்வை அழித்தது மக்களுக்கு பணி செய்த நல்லிதயங்களை ஒதுங்க வைத்தலென தனது பணியாகச் செய்து வருகிறார்.

432033_134658819990777_560002685_n.jpg

தற்போது இலங்கையில் இலாபம் கொடுக்கக்கூடிய தொழில்களில் வானொலி தொலைக்காட்சி ஆரம்பித்தல் வருமானத்தை ஈட்டும் தொழிலாக இருக்கிறது. மொழி FM என்ற பெயரில் வானொலியொன்றை ஆரம்பிக்க அருண் தம்பிமுத்துவின் ஆதரவில் மொழி FM வானொலி ஆரம்பிப்பதற்கான வேலைகளை ஆரம்பித்திருக்கிறார். மொழி FM வானொலிக்கான முதலீட்டை மட்டக்களப்பு மகிந்த ராஜபக்சவின் இணைப்பாளரான அருண் தம்பிமுத்து செய்யவுள்ளார். வரவிருக்கிற மொழிFM வானொலியிலிருந்து கிடைக்கிற இலாபம் தவிர மாதாந்தம் தனக்கு 3லட்சரூபாய்களை கொள்ளையடிக்க அதற்கான திட்ட வரைபும் கணக்காளர் ஒருவர் மூலம் செய்து கொண்டுள்ளார்.

379851_102430376546955_1647594217_n.jpg

வீதிபோடும் ஒப்பந்தக்களுக்கான ஒப்பந்தகாரர்களை இவரே தெரிவு செய்வார். வீதி போட வழங்கப்படும் நிதியொதுக்கீட்டிலிருந்து ஒப்பந்தகாரரிடமிருந்து 10சதவிகிதத்தை கொள்ளையாக பெற்றுக்கொண்டே வேலையை ஆரம்பிக்க அனுமதிப்பார். ஒரு வீதிக்காக அரசு ஒதுக்குவது 10லட்சமாயின் அதிலிருந்து ஒரு லட்சத்தை தனக்கு வாங்கிவிடுவார். 4லட்சம் ஒப்பந்தகாரருக்கு போக மீதி 5லட்சத்தில் தான் வீதி போடப்படும். வீதியின் விதி ராயேந்திரபிரசாத்தின் (கலிங்கன்) பணப்பையையே நிறைக்கும். இது மட்டுமன்றி ஊரில் நடக்கும் இதர பொது விடயங்களிலும் தனக்கான பங்கினை சுருட்டிய பின்னரேயே ஒரு பங்கு ஊருக்கு வழங்கப்படும்.

149711_195507403905918_140392815_n.jpg

மட்டக்களப்பில் பதிவு செய்யப்பட்டு இயங்கும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பொறுப்பாளர்களும் இவரது கையில் அகப்பட்டு பாகப்பிரிப்பில் தம்மையும் பங்காளிகள் ஆக்கியுள்ளனர். அத்தோடு புலம் பெயர்நாடுகளில் இயங்கும் தமிழ்த்தேசிய ஆதரவு இலத்திரனியல் ஊடகங்களில் தனது உண்மை முகத்தை மறைத்து தொடர்புகளைப் பேணி வருகிறார்.

இப்படி கொள்ளையடித்து மக்களின் வருமானத்தையும் மக்களுக்கான வளமேம்பாட்டுக்கான அரச ஒதுக்கீடுகளிலிருந்து கொள்ளையடித்து கலராக வலம் வருகிற கலிங்கனின் (ராயேந்திரபிரசாத்தின் அட்டகாசங்களை மட்டு மக்களே நீங்கள் தான் முடிவு கட்ட வேண்டும்.

உங்கள் பிள்ளைகளது எதிர்காலம் வளம்பெற கிடைக்க வேண்டிய கல்வியையே முடக்குகிற இந்தக் கொள்ளையனை அகற்ற வேண்டியதும் முகமூடியை கிழிக்க வேண்டியதும் உங்கள் பொறுப்பே.

எதிர்காலத்தில் கிழக்குமாகாணத்திற்கான நேசக்கரம் பணிகள் தொடர்ந்து முடக்கப்படுகிற அபாயத்தை இவரது செயற்பாடுகள் கொண்டு வந்துள்ளது. எனினும் எம்மீதானதும் எமது பணியாளர்கள் மீதானதுமான அடாவடித்தனங்களை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய நிலமையில் இவ்விடயத்தை வெளிக்கொண்டு வருகிறோம்.

[size=5]http://mullaimann.blogspot.de/2012/10/tmvp.html[/size]

Edited by shanthy

இவர் அவரோ :rolleyes: :rolleyes: ?????????????

  • கருத்துக்கள உறவுகள்

அவர் தான் இவர் :(

இது ஒரு வருந்தத்தக்க விடயம்.

ஆனால் இலங்கைத்தீவில் எங்கே ஓடினால் இப்படியானவர்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும். இதை நீங்கள் எப்படிச் சமாளிக்கப் போகிறீர்கள் என்று தெரியவில்லை.

ஊடகங்களில் இது பற்றிய செய்தியை வரச் செய்வதன் ஊடாக ஒரு அழுத்தத்தை கொடுக்கலாம்.

ஆனால் இன்னும் ஒரு "கலிங்கனிடம்" ஓடுவதைத் தவிர வேறு வழி இல்லாமலும் போகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது செய்தாலே இவங்களுக்கு பிடிக்காது

இலங்கையில் இருக்கும் வெளிநாட்டு தூதரங்களுக்கு இதில் ஒரு பிரதி ஆங்கிலத்தில் அனுப்பி வைக்க வேண்டும். உங்களுக்கு உதவாவிட்டாலும் வரும் காலங்களில் மற்றைய தன்னார்வதொண்டு நிறுவனங்களுக்கு உதவும்.

பணியாளர்கள் இனம் காட்டுபவர்களுக்கு நேரடியாக உதவிகளைச் செய்யலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொறுப்பும் அதிகாரமும் மிக்க அரச அதிகாரியான இவர் பேசிய அநாகரிகமற்ற பேச்சுக்களின் ஒலிப்பதிவிலிருந்து ஒருபகுதியை இங்கே:-

http://youtu.be/j4ETwYVqEoU

இவர்களது நடவடிக்கைகளை விமர்சித்து எதுவித பிரயோசனமும் இல்லை. மாற்று வழிகளை நாம் உண்டாக்க வேண்டும். நான் இணைந்து செயற்படும் உதவி நிறுவனம் நேரடியான உதவிகளைத்தான் செய்து வருகின்றது. சரியாக இனங்காணப்பட்டு உதவிகள் வழங்கப்படுகிறது. எமது நோக்கம் உதவுவதுதான். இவர்களை விமர்சிப்போமானால் பணியாளர்களுக்கு அச்சுறுத்தல்களே அதிகரிக்கும்.

இந்தக் கயவனுக்கு பயப்பட வேண்டிய தேவை இல்லை.

ஜேர்மன் தூதரகம் மூலம் சில செய்திகளை சிங்கள அரச பயங்கரவாதிகளுக்கு வழங்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.