Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தமிழர்கள் மீது மனோவியல் போர் - நாடுகடந்த அரசின் சபாநாயகர் திரு.பொன்பாலராஜன் இலங்கையுடன் பேசினாராம்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

TGTE-ponbalrajha-150.jpg

நேற்றையதினம் சில ஊடகங்கள் நாடுகடந்த அரசின் சபாநாயகர் திரு.பொன்பாலராஜன் அவர்கள் மீது அவதூறு பூசும் வண்ணம் செய்திகளை வெளியிட்டிருந்தன. அவரது ஆதரவாளர்களும் நண்பர்களும் அபிமானிகளூம் இதற்கு எதிராக வேதனையையும் விசனத்தையும் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த விஷம பிரச்சாரம் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் வினாவியபோது அவர் தெரிவித்திருப்பதாவது:

எதிர்வரும் நவம்பர் மாதம் 1ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் UPR தொடர்பான பல விடயங்கள் குறிப்பாக இலங்கை அரசின் மனித உரிமை மீறல், போர்க்குற்றம், இன அழிப்பு போன்ற விடயங்களுக்கு இலங்கை அரசு பதில் சொல்ல வேண்டிய நிலையில் உள்ளது. புலம் பெயர் அமைப்புக்கள் இந்த UPR தொடர்பான பல விடயங்களை மனித உரிமை அவைக்கு ஏற்கனவே சமர்ப்பித்துள்ளனர்.அவை மனித உரிமை அவையில் ஏற்றுக்கொள்ளப் பட்டிருப்பதை (UNHRC) UPR Stakeholders Report மூலம் அறியக் கூடியதாகவும் உள்ளது.

நடைபெறவிருக்கும் UPR தொடர்பான ஐ. நா. அமர்வில் இலங்கைக்கு எதிராகப் பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்களாக TGTE, BTF, CTC, USTPAC, GTF போன்ற தமிழ் அமைப்புக்கள் ஜெனிவா நோக்கி இந்த வாரம் பயணமாகின்றார்கள். அப்படியான சூழ்நிலையில் புலம் பெயர் அமைப்புக்களுக்கும் அதை ஆதரிக்கும் மக்களுக்கும் ஒரு சிக்கலை உருவாக்கி விடுவது இலங்கை அரசினது (கெகலிய றம்புக்வெல) போன்றவர்களின் வேலைத் திட்டமாகும்.

சில மாதங்களுக்கு முன்னர் புலம் பெயர் அமைப்புக்களை வலுவிழக்கச் செய்வது அல்லது தம்வசப்படுத்துவது என்ற இரண்டு வேலைத் திட்டங்கள் தொடர்பாக இலங்கை அரசின் ஆட்கள் பலர் வெளிநாடுகளுக்கு வந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளதை அறிவோம்.நாடுகடந்த அரசாங்கத்தினையும் GTF போன்ற கட்டமைபுகளை வலுவிழக்கச் செய்கின்ற முயற்சியாகத்தான் இந்தப் போலிப் பேச்சுவார்த்தை நாடகம். அதில் என் போன்றவர்களின் பெயர்களையு இழுத்து விடவும். சிங்களம் தயாராக இருக்கின்றது.

புலம்பெயர் தமிழர் மீது ஒரு மனோவியல் போரை (psychological warfare) சிங்களம் முடிக்கிவிட்ட நிலையில் ஒருசில ஊடகங்களும் சில மனிதர்களும் தங்களுக்குள்ள கருத்து மோதல் கட்கு ஆதரவு தேடுமுகமாக சிங்களத்திற்கு துணை போதல், கழம் அமைத்துக் கொடுத்தல், தூபமிடல் போன்ற செயல்களில் ஈடுபடுவதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டாவதாக நவம்பர் இரண்டாவது வாரம் பிரித்தானியா பாராளுமன்ற சர்வகட்சி கூட்டணி மற்றும் BTF இணைந்து மிக முக்கியமான மாநாடு ஒன்றினைப் போர்க்குற்றம் தொடர்பாக நடாத்தவுள்ளது.

இதன் விளவு 2013ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள மனித உரிமை அவை ஒரு மிகப் பெரிய நெருக்கடியை சிங்கள அரசிற்குக் கொடுக்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது. இவற்றிலெல்லாம் இருந்து சிங்களம் தப்பிக் கொள்ளவும் புலம் பெயர் அமைப்புக்களை சின்னா பின்னமாக்கவும் சிங்கள அரசும் அதன் அடிவருடிகளும் செய்கின்ற சூழ்ச்சி வலையில் நம்மவர்களும் தெரிந்ததோ தெரியாமலோ பலியாகி விடுவதுடன் சிங்களம் இலகுவாக தனது இலக்கினை அடைய வழி செய்து விடுகின்றனர் என்றார் அவர்.

http://www.seithy.co...&language=tamil

அப்படிப் பேசினால்தான் என்ன? ஊடகங்கள் இதை ஏன் பெரிது படுத்துகின்றன. திரைமறைவுப் பேச்சுவார்த்தைகள் எப்பொழுதுமே இருந்த ஒன்றுதானே.

தமிழ் ஊடகங்கள் பொறுப்போடு நடக்க வேண்டும்.

தமிழ் ஊடகங்கள் பொறுப்போடு நடக்க வேண்டும்.

செவிடன் காதில் ஊதிய சங்கு.

செவிடன் காதில் ஊதிய சங்கு.

சங்கூதிய அனுபவக்குறைவு.

அதி மதியூகமாக நினைத்து தங்களை தாங்கள் பப்பா கொப்பில் ஏற்றி, தாமே விழ்ந்த பின்னர் மக்களிடம் தங்கள் பாச்ச பலியாமல் படும் மனவேதனை. களத்துக்கு வருமுதலிலேயே தனக்குத்தான் மண் அள்ளிபோட்டுவிட்ட யானை?

கொட்டிய தேள் ஒரு கூட்டம், கூடவந்த மட்டிகள் மறுபுறமாய்,

எட்டியமட்டும் பாய்ந்த முழு மூட மந்தி எட்டாத மரக்கிளைதப்பி

தட்டென தரைமீது விழுந்து தன் நெஞ்சு கலங்கி துயருறுகிறதே

கட்டளை இட்டானின் கைதடியை நினத்து கண்கலங்குகிறதே!

வாழ்க பல்லாண்டு. வெல்க வந்திருக்கும் பயணம்

சுறனை உள்ள மாட்டுக்கு ஒரு சூடு போதும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

சிவன்: கேள்விகளை நீ கேட்கிறாயா, அல்லது நான் கேட்கட்டுமா?

தருமி: நானே கேட்கிறேன். எனக்குக் கேட்கத் தான் தெரியும்!

தருமி: பிரிக்க முடியாதது எது?

சிவன்: வறுமையும், புலமையும்!

தருமி: இழக்கக் கூடாதது?

சிவன்: மானமும் , உணர்வும்! :D

நீங்கள் உங்கள் கடமைகளை தெளிவாக, உறுதியாக செய்தால் - இந்த மாதிரியான சேறு வீசல் பாதிக்காது. இல்லை என்றால் இந்தமாதிரி ஒப்பாரி வைத்துகொண்டு அலைய வேண்டியது தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில வேளைகளில் சில ஊடகங்கள் கோடாரிகாம்புகளாகவே செயற்படுகின்றன.

மிகவும் வேதனைக்குரிய விடயங்களாக நான் பாட்பதுகளில் சில:

1 . தேசியத்தலைவர் அல்லது மாவீரர்களின் செய்திகளை பிரசுரிக்கும் அதே பக்கங்களில், பச்சை பச்சையாக அநாகரீகமான செய்திகளை பிரசுரிப்பது. (i am looking you அதிர்வு)

2 . கோஷ்டி மோதல் செய்து மொத்த இனத்திட்குமே குழி பறிப்பது.

3 . செய்தி என்னும் பெயரில் கொல்லப்பட்ட போராளிகளின் (ஆண், பெண்) வித்துடல்களை நிர்வாணமாக , காட்சிபடுத்துதல். (முதல் முறை செய்திகளாக வந்த பின் மீண்டும் மீண்டும் அதே படங்களை பயன்படுத்துவது ??????)

4 . எமது இனம் இதுவரை காணாத, ஈடு இணையற்ற மாபெரும் தலைவரை சாதரணமாக பெயர் சொல்லி குறிப்பிடல். ( பெருமைபெற்ற ஒருவரை மதிக்க தவறுவது உங்களின் ஈன தனத்தையே காட்டுகிறதே ஒழிய அவரின் பெருமை குறைவதில்லை)

எழுதினால் இது இன்னும் நீண்டுகொண்டே இருக்கும் அதனால் முடித்துக்கொள்கிறேன் .

(இவை எனது தாழ்மையான் கருத்துக்கள்)

திரைமறைவு பேச்சு வார்த்தைகள் நடப்பது வழமை. ஆனால் யார் செய்கிறார்கள் என்பதில் இருக்கு. புலத்தில் அரசியல் செய்யவே மக்கள் ஆணை. இலங்கை அரசாங்கத்துடன் அல்ல. அது தமிழ் கூட்டமைப்பு செய்யும். இவர்கள் தமிழ் ஈழம் அமைய உழைத்தால் போதும். இலங்கையுடன் இவர்களுக்கு என்ன ரகசிய பேச்சு இப்பிடி தான் கருணாவுடனும் பேசினார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.