Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவாவில் சிறிலங்கா மீது அமெரிக்கா போர் தொடுப்பு! - இந்தியா, கனடா, ஜேர்மனும் கடும் குற்றச்சாட்டு!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]ஜெனிவாவில் சிறிலங்கா மீது அமெரிக்கா போர் தொடுப்பு! - இந்தியா, கனடா, ஜேர்மனும் கடும் குற்றச்சாட்டு!![/size]

ஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் பூகோள காலக்கிரம மீளாய்வுக் கூட்டத் தொடர் சிறிலங்கா அரசாங்கத்துக்கு பலத்த நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் மனிதவுரிமை நிலைமைகள் தொடர்பில் அமெரிக்கா, இந்தியா, கனடா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் கூட்டாக கடும் தாக்குதல் நடத்தியதால் இக்கூட்டத் தொடர் சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஒரு பலப்பரீட்சையாக அமைந்திருந்தது.

குறிப்பாக பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை விவகாரம், 13வது திருத்தச் சட்டமூல இரத்துச் செய்வது தொடர்பான விடயம், வடமாகாண சபைத் தேர்தல் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் இந்நாடுகள் சிறிலங்காவிடம் கேள்விகளை எழுப்பியுள்ளன.

இந்நாடுகளின் கேள்விகளைச் சமாளிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கத் தரப்பும் கடும் முயற்சி எடுத்ததால், இக்கூட்டத் தொடர் ஒரு போர்க்களம் போல் காட்சியளித்தது.

பிரதம நீதியரசருக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டுள்ள குற்றப் பிரேரணை குறித்து நேற்று நடைபெற்ற ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் மீளாய்வுக் கூட்டத் தொடரில் அமெரிக்க கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

பிரதம நீதியரசருக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள குற்றப் பிரேரணை மூலம் சிறிலங்கா அரசாங்கம் நீதித்துறையில் தலையிட்டுள்ளதாக ஜெனிவாவுக்கான அமெரிக்கப் பிரதிநிதி Eileen Chamberlain Dohahoe குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கையின் மீள்குடியேற்றம் மற்றும் கட்டமைப்புப் பணிகள் குறித்து அமெரிக்கா கடும் கவலை கொண்டிருப்பதாகவும், அளிக்கப்பட வாக்குறுதிகளையும் பொறுப்புக் கூறும் கடப்பாட்டையும் சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்றும் Eileen Chamberlain Dohahoe மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல், வடக்குக் கிழக்கில் நிலைகொண்டுள்ள படையினரின் எண்ணிக்கையைக் குறைத்தல், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, கருத்துச் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் மற்றும் துணை ஆயுதக்குழுக்களின் ஆயுதக் களைவு ஆகிய விடயங்களை உடனடியாக சிறிலங்கா அரசாங்கம் செய்ய வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்ப்பதாக ஜெனிவாவுக்கான அமெரிக்கப் பிரதிநிதி Eileen Chamberlain Dohahoe தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மனிதவுரிமை நிலைமைகளை மேம்படுத்தும் விடயத்தில் கனடா மிகுந்த கரிசனை கொண்டுள்ளதாகவும், வடமாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தி மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டியது சிறிலங்கா அரசாங்கத்தின் கடமை என்று இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட ஜெனிவாவுக்கான கனடாப் பிரதிநிதி வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, 13வது திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண சிறிலங்கா அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது இந்தியாவின் விருப்பாக உள்ளதாக ஜெனிவாவுக்கான இந்தியப் பிரதிநிதி நபானிற்றா சக்ரவர்த்தி கூறியுள்ளார்.

போரின் போது இடம்பெயர்ந்த மக்களுக்கான மீள்குடியேற்றம், போராளிகளுக்கான புனர்வாழ்வு, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் மற்றும் மனிதவுரிமைகளின் மேம்பாடு குறித்து இந்தியா ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளதாக குறிப்பிட்ட ஜெனிவாவுக்கான இந்தியப் பிரதிநிதி, சிறிலங்கா அரசாங்கம் வடமாகாண சபைத் தேர்தலை 2013ஆம் ஆண்டு இறுதிக்குள் நடத்தும் என்று இந்தியா எதிர்பார்த்துள்ளதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், மனிதவுரிமைகள் மேம்பாடு குறித்து ஏற்கனவே அளித்துள்ள வாக்குறுதிகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றுமென்று இந்தியா நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட பெருமளவு பொதுமக்களின் இழப்புகளுக்கு காரணமான மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் நம்பகமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் துரித நடவடிக்கைகளை எடுக்கும் என்று இந்தியா எதிர்பார்ப்பதாகவும் ஜெனிவாவுக்கான இந்தியப் பிரதிநிதி நபானிற்றா சக்ரவர்த்தி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையில் இக்கூட்டத் தொடரில் கருத்து வெளியிட்ட ஜெனிவாவுக்கான ஜேர்மன் பிரதிநிதி, பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை குறித்து ஜேர்மன் கவலை கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்நிலையில், ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் பூகோள காலகிரம மீளாய்வுக் கூட்டத்தின் நேற்றைய அமர்வு சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஒரு அக்கினிப் பரீட்கையாகவே அமைந்திருந்தது.

இலங்கையின் மனிதவுரிமை நிலைமைகள் தொடர்பிலான மீளாய்வு விவாதத்தின் பின்னர் இந்தியா, ஸ்பெய்ன் மற்றும் பெனின் ஆகிய நாடுகள் இணைந்து தயாரிக்கவுள்ள அறிக்கையின் தீர்மானம் எதிர்வரும் 05ஆம் திகதி ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது.

ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் பொறிமுறைக்கு உட்படுத்தப்படும் பிற உறுப்பு நாடுகளைப் போலவே, இத்தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கமும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=73823fcb-8018-45b0-b8c7-7ee04dc23d7f

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா மீது அமெரிக்கப் பிரதிநிதி சுமத்திய அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் [ வெள்ளிக்கிழமை, 02 நவம்பர் 2012, 03:36 GMT ] [ தா.அருணாசலம் ]

eileen.jpg

ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நேற்று நடைபெற்ற பூகோள கால மீளாய்வில் சிறிலங்கா மீது அமெரிக்கா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய ஜெனிவாவுக்கான அமெரிக்கப் பிரதிநிதி எலீன் சம்பர்லைன் டோனகே,

“ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் சிறிலங்கா அரசு ஏற்கனவே முன்வைத்த வாதங்களைத் தான் இன்றும் முன்வைத்துள்ளது.

புதிய யோசனைகளையோ திட்டங்களையோ முன்வைக்கவில்லை.

சிறிலங்காவில் 18வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நிறைவேற்று அதிகாரங்கள் குவிக்கப்பட்டது குறித்தும், அரசியல் அதிகாரப்பகிர்வு குறித்த இணக்கப்பாடு எதுவும் எட்டப்படாதது குறித்தும் நாம் கவலை கொண்டுள்ளோம்.

முன்பு போர் நடந்த இடங்கள் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளன.

பொதுமக்களின் அன்றாட வாழ்விலும், பொருளாதார விவகாரங்களிலும் இராணுவத் தலையீடுகள் உள்ளன.

2010 தொடக்கம் அரசசார்பற்ற நிறுவனங்கள் பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டில் உள்ளன.

காணாமற்போதல்கள், சித்திரவதை, நீதிக்குப் புறம்பான கொலைகள் போன்ற தீவிரமான மனிதஉரிமை மீறல்கள் தொடர்கின்றன.

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது.

எதிர்கட்சிப் பிரமுகர்கள் துன்புறுத்தப்படுகின்றனர், தடுத்து வைக்கப்படுகின்றனர், தண்டிக்கப்படுகின்றனர்.

ஊடகவியலாளர்கள், ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் குறித்த நம்பகமான விசாரணைகளோ, சட்டநடவடிக்கைகளோ இல்லை.

கடந்த 30 நாட்களுக்குள் நீதித்துறைச் சுதந்திரத்தில் அரசியல் தலையீட்டுக்கு எதிராக கேள்வி எழுப்பிய நீதிபதி ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.

மாகாணசபைகளின் அதிகாரங்களை பலவீனப்படுத்தும் சட்டமூலத்துக்கு சவால் விடுத்த அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் பணிப்பாளர் கொழும்பில் தாக்கப்பட்டுள்ளார். எனினும் எவரும் கைது செய்யப்படவில்லை.

இந்தக் கவலைகளையெல்லாம் கருத்தில் கொண்டு அமெரிக்கா சில பரிந்துரைகளை முன்வைக்கிறது.

1.பொதுமக்களின் நிகழ்வுகளில் இருந்து சிறிலங்கா படையினரை வெளியேற்றுதல், காணாமற்போனோர், தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் குறித்து பதிலளிப்பதற்கான பொறிமுறையை உருவாக்குதல், மரணச்சான்றிதழ் வழங்கல், காணி சீர்திருத்தம், அதிகாரப்பகிர்வு, ஆயுதக்குழுக்களை நிராயுதபாணிகளாக்குதல் உள்ளிட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் ஆக்கபூர்வமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

2.அரசசார்பற்ற நிறுவனங்களை கண்காணிக்கும் பொறுப்பை பொதுமக்களுக்கு அளிக்க வேண்டும், மனிதஉரிமை மீறல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கருத்து சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும்.

3.மனிதஉரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டு வந்து, வெளிப்படைத்தன்மையானதும் சுதந்திரமானதுமான விசாரணைகளின் மூலம் பொறுப்புக்கூற வேண்டும்.

4. தலைமை நீதியரசரை பதவிநீக்கம் செய்ய முயற்சிகள் எடுக்கப்படுவதாக இன்று செய்திகள் வந்துள்ள நிலையில், சிறிலங்கா அரசு நீதித்துறையில் தலையிடுவதை நிறுத்த வேண்டும்." என்று தெரிவித்தார்.

http://www.puthinapp...?20121102107228

  • கருத்துக்கள உறவுகள்

50 வருடமா நாங்களும் இதைதானே சொல்லுறம் ....கேட்டியளே ...இப்ப நீங்கள் எதோ புதுசா கண்டுபிடிச்சமாதிரி கத்துறீயள்.....

நாங்கள் அமைதியாக,ஆயுதமாக போராடி முடியாததை நீங்கள் ஜனநாயகம் எண்டு சொல்லி முயற்சி செய்றீயள் ....பண்ணுங்கோ....

[size=5]ஜெனிவாவில் இலங்கையை கலங்க வைத்த அமெரிக்கா; இந்தியா, கனடா, ஜேர்மன் நாடுகளும் கேள்விக் கணைகள்[/size]

[size=4]உலக நாடுகள் ஒவ்வொன்றும் நேரடியாகவே இராஜதந்திரச் சமரில் ஈடுபடும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பூகோள காலக்கிரம மீளாய்வுக் கூட்டத்தொடரில் இலங்கை மீது அமெரிக்கா, இந்தியா, கனடா, ஜேர்மனி ஆகிய நாடுகள் நான்கு திசைகளிலிருந்தும் கூட்டாக இணைந்து கடும் தாக்குதல் நடத்தியதால் நேற்றைய ஜெனிவா தொடர் அரசுக்கு அக்கினிப்பரீட்சையாக அமைந்தது.[/size]

[size=4]குறிப்பாக பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை விவகாரம், 13 ஆவது அரசமைப்புத் திருத்த விடயம், வடமாகாண சபைத் தேர்தல், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் ஆகிய விடயங்களைக் கையிலெடுத்தே மேற்படி நாடுகள் இலங்கை மீது கேள்விக் கணைகளை ஏவின.[/size]

[size=4]அத்துடன், கடுமையான சொற்போரை சமாளிப்பதற்குஇலங்கை அரசதரப்பும் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டதால் நேற்றைய ஜெனிவாத் தொடர் போர்க்களம்போல் காட்சியளித்தது.[/size]

[size=4]அதேவேளை, பிரதம நீதியரசருக்கு எதிராக இலங்கையில் கொண்டுவரப்பட்டுள்ள குற்றப்பிரேரணை குறித்து நேற்று நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மீளாய்வுக் கூட்டத்தில் அமெரிக்க கடும் கண்டனத்தை வெளியிட்டது.[/size]

[size=4]நேற்றைய மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜெனிவாவுக்கான அமெரிக்கப் தூதுவர் ,பிரதம நீதியரசருக்கெதிராக கொண்டு வந்திருக்கும் குற்றப்பிரேரணை மூலம் ,இலங்கை அரசு நீதித்துறையில் தலையிட்டுள்ளதென்றும் குற்றம்சாட்டியது.[/size]

[size=4]இலங்கையின் மீள்குடியேற்றம் ,கட்டமைப்புப் பணிகள் குறித்து அமெரிக்க கடும் கவலை கொண்டிருப்பதாகவும், அளிக்கப்பட வாக்குறுதிகளையும் பொறுப்புக் கூறும் கடப்பாட்டையும் இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டுமென்றும் அமெரிக்க தூதுவர் மேலும் குறிப்பிட்டார்.[/size]

[size=4]நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளின் அமுலாக்கம்,வடக்கு கிழக்கில் படைக் குறைப்பு,தேசியப் பிரச்சினைக்கான அதிகாரப் பகிர்வு தீர்வு,துணை ஆயுதக்குழுக்களின் ஆயுதக் களைவு ஆகிய விடயங்களை உடனடியாக இலங்கை அரசு செய்ய வேண்டுமென்பது அமெரிக்காவின் எதிர்பார்ப்பு என்று குறிப்பிட்ட அமெரிக்கத் தூதுவர்,கருத்துச் சுதந்திரமும் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்று சுட்டிக்காட்டினார்.[/size]

[size=4]பிரதம நீதியரசருக்கெதிராக கொண்டுவரப்பட்டுள்ள குற்றப்பிரேரணை குறித்து அமெரிக்க கடும் அதிருப்தியை வெளியிடுவதாக குறிப்பிட்ட அமெரிக்கத் தூதுவர்,இது அரசு அப்பட்டமாக நீதித்துறையில் தலையிடுவதையே காட்டுகின்றதென குறிப்பிட்டார்.[/size]

[size=4]இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட கனடாவுக்கான ஜெனீவாத் தூதுவர் ,இலங்கையின் மனித உரிமைகள் மேம்படுத்தல் விடயத்தில் கனடா மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளதாகவும், இலங்கையின் வட மாகாணத்தில் உடனடியாக தேர்தல் ஒன்றை நடத்தி மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டியது இலங்கையின் கடமை என்றும் தெரிவித்தார்.[/size]

[size=4]நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட ஜெனீவாவில் உள்ள இந்தியாவுக்கானத் தூதுவர், பதின்மூன்றாம் திருத்தத்தின் ஊடாக தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை கொண்டு வர இலங்கை அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்பது இந்தியாவின் விருப்பென்று குறிப்பிட்டார்.[/size]

[size=4]மீள்குடியேற்றம், முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வு, நல்லிணக்க ஆணைக்குழுவின் அமுலாக்கம்,மனித உரிமைகளின் மேம்பாடு குறித்து இந்தியா ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளதாக குறிப்பிட்ட இந்திய தூதுவர்,வடமாகாணத் தேர்தலை 2013 ஆம் ஆண்டுக்குள் இலங்கை நடத்துமென்று இந்தியா எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டார்.[/size]

[size=4]மனித உரிமைகள் அமுலாக்கம் தொடர்பில் இலங்கை அரசு ஏற்கனவே அளித்துள்ள உறுதிமொழிகளை நிறைவேற்றுமென்று இந்தியா நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதற்கிடையில் இங்கு கருத்து வெளியிட்ட ஜேர்மன் தூதுவர்,பிரதம நீதியரசருக்கேதிரான குற்றப்பிரேரணை குறித்து ஜேர்மன் அரசு கவலை கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.[/size]

[size=4]மீளாய்வுக் கூட்டத்தின் இடைநடுவே கருத்து வெளியிட்ட அமைச்சர் சமரசிங்க ,பிரதம நீதியரசர் ஒருவருக்கு எதிராக பிரேரணை ஒன்றை கொண்டுவர இலங்கை அரசியலமைப்பில் விசேட ஏற்பாடுகள் இருப்பதாகவும். அதன்படி பல ஆதாரங்களுடன் அவர் தொடர்பில் நடவடிக்கை எடுக்க ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நூற்றி பதினெட்டு பேர் கையொப்பமிட்டு பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.[/size]

http://onlineuthayan.com/News_More.php?id=148971574502652896

மேர்வின் சில்வா இந்து கோவில்களுக்குள் புகுந்து தன் வேள்விகளை செய்கிறார் என்பதை பற்றி யாரும் பிரஸ்த்தாபிக்கவில்லை. மத சுதந்திரம் அடிப்படை மனித உரிமை. இருந்தாலும் பரவாயிலை. சீனா பேசியிருக்கா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(Video) Sri Lanka Review - 14th Session of Universal Periodic Review

http://webtv.un.org/...w/1940915085001

[size=6]கால அவகாசம் தேவை[/size]

[size=4]இலங்கையில் தற்சமயம் நிலவும் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொள்வதற்காக மேலும், கால அவகாசம் தேவை என்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.[/size]

[size=4]ஜெனீவாவில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் உலகளாவிய காலக்கிரம மீளாய்வு அமர்வின் போது நாடுகள் சில இதனை ஏற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.[/size]

[size=4]இந்த மாநாட்டில் 99 நாடுகள் கலந்து கொண்டுள்ளன.[/size]

[size=4]இதன்போது, இலங்கை குழவினர், தற்போதைய இலங்கை நிலபரங்கள் தொடர்பாக தெளிவு படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.[/size]

[size=4]இந்த நிலையில், இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என சில நாடுகள் வலியுறுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.[/size]

[size=4]இதனிடையே, இலங்கையின் வளர்ச்சி தொடர்பாக ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் பாக்கிஸ்தான் போன்ற நாடுகள் மகிழ்ச்சியை வெளியிட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.[/size]

[size=4]எவ்வாறாயினும், அமெரிக்கா, பிருத்தானியா, பிரான்ஸ் மற்றும் கனடா போன்ற நாடுகள் யுத்தத்தின் பொறுப்புக்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தொடர்ந்தும் கேள்வி எழுப்பியதாகவும் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.[/size]

http://www.hirunews.lk/tamil/46684

பாகிஸ்த்தானை திருப்ப எமக்கு கக்கீம் உதவலாம். வங்காளம் இனிமேல் கொஞ்சம் கவனமாக இருக்கும்.

ஜெனிவாவில் இலங்கையை கலங்க வைத்த அமெரிக்கா; இந்தியாஇ கனடாஇ ஜேர்மன் நாடுகளும் கேள்விக் கணைகள் இப்படியான செய்தித் தலைப்புகளைப் போட்டு எங்களைத்தான் கலங்கடிக்கிறார்கள்.

இலங்கை கலங்கிக்கிடப்பதாக எந்த அடையாளமும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவாவில் இலங்கையை கலங்க வைத்த அமெரிக்கா; இந்தியாஇ கனடாஇ ஜேர்மன் நாடுகளும் கேள்விக் கணைகள் இப்படியான செய்தித் தலைப்புகளைப் போட்டு எங்களைத்தான் கலங்கடிக்கிறார்கள்.

இலங்கை கலங்கிக்கிடப்பதாக எந்த அடையாளமும் இல்லை.

உண்மைதான். தலைப்பினைப் பார்த்தால் சிங்களம் பயந்து நடுங்கிவிட்டது போல இருக்குது. எங்களுக்குத் தான் தொடர்ந்து ஏமாற்றம்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.