Jump to content

விடியுமா


Recommended Posts

பதியப்பட்டது

...............................................................................

இன்னும் விடியவில்லை. அதற்கான ஏற்பாடுகள் தடல் புடலாக நடந்துகொண்டிருக்கின்றன. சூரியனைத் துயிலெழுப்ப வேண்டுமே என்ற அங்கலாய்ப்பில் அடிக்கடி தன் கடமையைச் செய்து கொண்டிருக்கும் பக்கத்து வீட்டுச் சேவல், இருளரக்கன் அகலப் போகிறான் என்ற குதூகலத்தில் பாடிக் களிக்கும் புள்ளினங்கள், சாதகம் பண்ணுவதாகக் கூறிக்கொண்டு அக்கம் பக்கத்தாரின் வசவுகளை வாங்கிக் கட்டிக் கொள்ளும் முன்வீட்டுப் பென்சனியர் .... எல்லாம் வழமை போலத் தானிருக்கின்றன.

"எழும்பித் தேத்தண்ணியைக் குடியுங்கோவன். விடிஞ்செல்லே போச்சுது"

சாந்தியின் அதட்டலுடன் தான் எனக்கும் விடிகிறது.

நான் கைப்பிடித்தவள் தான் சாந்தி. இன்னும் சரியாகச் சொல்வதானால் என் கையில் பிடித்துத் தரப்பட்டவள் தான் சாந்தி.

தாயைப் பார்த்துப் பெண்ணெடு என்று சொல்லுவார்கள். எனக்கு அந்த வேலையை வைக்காமல் அம்மாவே தன்னைப் போல ஒரு பெண்ணைப் பார்த்துக் கட்டி வைத்து விட்டாள்.

சாந்தி! என்ன அருமையான பெயர். உச்சரிக்கும் போதே அமைதியை, உற்சாகத்தை, ஆனந்தத்தை அளிக்கின்ற பெயர். ஆனால் என் சாந்தி…….……

ஆளைப் பரிசோதித்து, நேர்முகப் பரிட்சை வைத்து தகுதி பார்த்துத் தான் பெயர் வைக்க வேண்டும் என்று சட்டமா போட்டிருக்கிறது? என் சாந்தி சாந்தமாகப் பேசியதையோ செயற்பட்டதையோ இந்த இருபது வருட கால தாம்பத்ய வாழ்க்கையிலே நான் கண்டதேயில்லை.

"உங்களுக்கென்ன ராசா மாதிரி நித்திரை கொள்ளுறியள். இஞ்சை நான் தான் உதுகளோடை கிடந்து மல்லுக் கட்ட வேண்டியிருக்குது. "அறுந்த குடும்பம்" எப்ப தான் துலையப் போகுதுகளோ தெரியாது...!"

"திருப்பள்ளியேழுச்சி" தொடர்கிறது. "அறுந்த குடும்பம்" என்ற சொல்லைக் கேட்டதும் எனக்குக் கொஞ்சம் நிம்மதி. தாக்குதலின் இலக்கு நானல்ல. பின் பக்க சுகுமார் குடும்பத்தின் மீது தான் எறிகணைகள் பறக்கின்றன.

காலை விடிவது, முகம் கழுவுவது, சாப்பிடுவது, வேலைக்குப் போவது, நித்திரை கொள்ளுவது . …… இவை போல இதுவும் இங்கே ஒரு வழமையான நிகழ்வு தான். இந்தச் சடங்கை ஆரம்பத்திலே அம்மாதான் அரங்கேற்றிக் கொண்டிருந்தார். மாமியார் கண்ணை மூடியதும் அந்தப் பொறுப்பை யாரும் கொடுக்காமல் தானாகவே ஏற்று என் தர்மபத்தினி நடாத்திக் கொண்டிருக்கிறாள்.எனக்குத் தலையிடிப்பது போலிருந்தது. தேநீரைக் குடித்துவிட்டு மேலே போர்த்திருந்த சாரத்தினால் தலையையும் இழுத்து மூடிக் கொண்டு திரும்பிப் படுத்து விட்டேன்.நான் செய்த பெரிய தவறு அதுதான். கதையைக் கவனிக்காவிட்டாலும் பறவாயில்லை. கவனிப்பது போல நடித்திருக்கலாம். அல்லது சும்மாவாவது கிடந்திருக்கலாம். தனது கதையை அலட்சியப்படுத்திய எனது செயல் சாந்தியைச் சன்னதங் கொள்ள வைக்கிறது.

"நானொருத்தி தொண்டை கிழியக் கத்துறன். நீங்களென்னண்டால் எருமை மாட்டிலை மழை பெஞ்ச மாதிரிக் கிடக்கிறியள். போயும் போயும் உங்களிட்டைச் சொன்னன். உங்களுக்கென்ன? வேலைக்குப் போவியள் .. வருவியள் .. தின்னுவியள் .. கிடப்பியள்.. இஞ்சை என்ன நடக்குதெண்டு கோஞ்சமெண்டாலும் எண்ணமிருக்குதே? நானும் கொஞ்சம் கண்ணை மூடினனெண்டால் எளியதுகள் தலையிலை தான் ஏறி நிக்குங்கள் ...."

கச்சேரி உச்சஸ்தாயியில் போய்க் கொண்டிருக்கிறது

.

எங்களது நாய்க்கு அந்த நேரத்தில் தானா ஒரு "குட்டிப் புளுகம்" வர வேண்டும்? ஓடிச் சென்று தன் முன்னங்கால்கள் இரண்டையும் தூக்கி சாந்தியின் மேலே போட்டுக் கொண்டு ஊஞ்சலாட முயற்சிக்கிறது.

"சீ .. போ அங்காலை… நீ இதுக்குள்ளை "

றொனாலடீனோ ஸ்டைலில் குடுக்கப்பட்ட உதையை வாங்கிக் கொண்டு "வள்" என்ற சத்தத்துடன் ஓடி விட்டது.நாய் என் சார்பில் தண்டனையைப் பெற்றிருக்கிறது. ஆனாலும் எனக்குக் கோபம் வரவில்லை. மனிதனுக்கு சுடு, சொறணை, தன்மானம் …. இவை இருந்தால் தானே கோபம் வரும். அவற்றைத் தான் இருபது வருடங்களுக்கு முன்பு பத்து லட்சம் ரூபாய்க்கு என்னவளிடம் விற்று அதற்குச் சாட்சியாக தாலி என்ற பத்திரத்தையும் அவள் கழுத்தில் கட்டி விட்டேனே. தப்பித் தவறி எனக்குக் கோபம் வந்தாலும் அவள் கழுத்திலே கிடந்தாடும் அந்தப் பத்திரம் என் வாயை மூடி மௌனியாக்கிவிடும்.இப்போது என்ன செய்வது? முருங்கை மரத்தின் உச்சியிலிருக்கும் வேதாளத்தைக் கீழேயிறக்கியாக வேண்டும். ஏதோ எனக்குத் தெரிந்த சிறிய அ(ஐ)ஸ்திரத்தைப் பிரயோகிக்கிறேன்.

"இதுக்கு ஏனப்பா கோவிக்கிறீர்? எனக்குத் தெரியுந் தானே எல்லாத்தையும் நீர் பாத்துக் கொள்ளுவீர் எண்டு. அந்த நம்பிக்கையிலை தானே நான் ஒண்டையும் பெரிசுபடுத்தாமல் என்ரை பாட்டிலை இருக்கிறன். என்ன நடந்ததெண்டு சொல்லுமன்"?

மருந்து வேலை செய்கிறது. சுருதி இறங்கியவளாய் வந்து என் தலைமாட்டில் அமர்ந்தவள் குற்றப் பத்திரிகையை ஒப்புவிக்கிறாள்

.

"ராவு ரெண்டு மணி மட்டும் லைற்றைப் போட்டிட்டுச் சதிராடினா மனிசர் நித்திரை கொள்ளுறதில்லையே? பெரிய படிப்புப் படிக்கிறாவாம். படிக்கிறாவோ அல்லது தமக்கையை மாதிரி ஆரையாவது டாக்குத்தரை வளைச்சுப் போடுறதுக்குக் கடிதம் எழுதுறாவோ ஆருக்குத் தெரியும்?"

இரண்டு மணி வரை லைற் எரிந்ததால் ஏற்பட்ட வெறுப்பை விட மூத்தவளை ஒரு வைத்தியர் திருமணஞ் செய்யப் போகிறார் என்ற எரிச்சல் தான் கொழுவலுக்கு மூலகாரணம் என்பது தெரிகிறது.நாங்களும் கிழமையில் இரண்டு நாள் டெக்கிலை ராவு ராவாப் படம் போடுறனாங்கள் தானே" என்று உள்ளதைச் சொல்லி இன்னும் வாங்கிக் கட்டிக் கொள்ள நான் என்ன முட்டாளா?

"சரி சரி நான் இண்டைக்கு இதைப் பற்றி சுகுமாரோடை கதைக்கிறன்"

மனச்சாட்சியை அடகு வைத்து விட்டு அவளை சமாதானப் படுத்த வேண்டியிருக்கிறது.அந்த மழுப்பலில் தாழமுக்கம் பலவீனமடைந்து கரையைக் கடந்து விட்டது. ஆனால் அடுத்த "சுனாமி" எங்கே எப்போது எந்த வடிவத்தில் தொடங்குமோ என்ற பயம் என்னை விட்டபாடாயில்லை."ஆண்டவனே இந்த வீட்டிற்கு அமைதி என்பது கிடைக்கப் போவதில்லையா?"ஏக்கம் பெருமூச்சாக வெளிக்கிளம்ப எனது எண்ண அலைகளோ காலப் பாதையிலே பின்நோக்கி நகர்ந்து இந்த வீட்டையே சுற்றி வருகிறது.எத்தனை அழகான வீடு இது? முன் பக்கம் மல்லிகை,முல்லை, சுரிய காந்தி, செவ்வந்தி றோஜா, குறோட்டன்கள் எனப் பெரும் பூஞ்சோலை. பின்னால் மா, பலா, வாழை எனக் கனிதரும் பழமரச் சோலை. இத்தனைக்கும் நடுவே அழகாயிருக்கிறது இந்த வீடு. இதனை வீடு என்று சொல்வதை விட குட்டி மாளிகை என்று சொல்வது தான் பொருந்தும். பல ஆண்டுகளுக்கு முன்னர் தேயிலைத் தோட்டமொன்றிற்கச் சொந்தக்காரராயிருந்த, பணத்திலே மிதந்த வெள்ளைக்காரத் துரையொருவரால் கட்டப்பட்டதென்றால் சும்மாவா? அவா கலையுணர்ச்சி நிரம்பியவராயிருக்க வேண்டும். ஒரு வீட்டிற்கு அமைய வேண்டிய அத்தனை அம்சங்களையும் எத்தனை அழகாகச் செதுக்கி வைத்திருக்கிறார்.

பாவம்! அந்த மனிசனுக்குத் தான் இதை அனுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லை. அவருக்கு நாடு திரும்ப வெண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது நண்பர்களாயிருந்த அப்பாவும் பக்கத்து வீட்டுச் சுகுமாரின் தகப்பன் பரமசிவம் மாமாவும் கூட்டாக வீட்டை வாங்கிக் கொண்டனர். வீட்டின் முன் வரவேற்பறையை இரு குடும்பமும் பொதுவாகப் பயன்படுத்திக் கொள்வது என்பதும் எட்டு அறைகளையும் நான்கு நான்காகப் பகிர்ந்து கொள்வது என்பதும் எழுதப்படாத ஒப்பந்தமாக இருந்து வந்தது. ஆரம்பத்தில் எல்லாமே சுமுகமாகத் தான் போய்க் கொண்டிருந்தன. நானும் சுகுமாரும் ஒரே சைக்கிளில் பள்ளிக்கூடம் போய் ஒன்றாகக் கிட்டி அடித்து, குளத்தில் குளித்து … அப்பப்பா! எத்தனை இனிமையான நினைவுகள்…அம்மாவுக்கும் அப்படித்தான். தானறிந்த விடுப்புகளைப் பகிர்ந்து கொள்ள சுகுமாரின் தாய் தான் கதி. மணிக்கணக்காகப் பேசிக் கொள்வார்கள்.இப்படி ஒன்றிற்குள் ஒன்றாக இருந்த இந்த இரண்டு குடும்பங்களுக்கும் என்ன நடந்தது? எப்படிப் பிரச்சினை தொடங்கியது? யார் தொடக்கியது?என் பள்ளிப் பருவத்தின் பெரும் பகுதி விடுதியிலேயே கழிந்ததால் இவையெல்லாம் பலகாலமாக எனக்கப் புரியாத புதிர்களாகவே இருந்து வந்தது. அந்தப் புதிர்களும் ஒருநாள் விடுபட்டது.

ஓய்வாக சாய்மணைக் கதிரையில் அப்பா படுத்திருந்ததைக் கண்டதும் எனக்குள் ஒரு உந்துதல். என்னைச் சதா அரித்துக் கொண்டிருந்த கேள்விகளை அவரிடமே கேட்டுவிட்டேன்.திடீரென்று இந்தக் கேள்விகளை அப்பா எதிர்பார்க்கவில்லை. சாய்மணைக் கதிரையில் நன்றாகச் சாய்ந்து படுத்துக் கொண்டவர் கண்களை மூடிக் கொள்கிறார். எதையோ யோசிப்பது போலிருந்தது. ஆழ்ந்த பெருமூச்சொன்று வெளிப்பட்டது. மெல்லத் தொடங்குகிறார்.

"எல்லாம் என்ரை பிழை தான் தம்பி. நான் தப்பிறதுக்காகச் செய்த வேலை இந்த ரெண்டு குடும்பத்தின்ரை நிம்மதியையும் கெடுத்துப் போட்டுது. இப்ப எல்லாமே கையை மீறிப் பொயிட்டுது. இனி நான் நினைச்சாலும் உதைச் சீர்படுத்த ஏலாது போலக் கிடக்குது. உந்தத் துரோகத்துக்கு எனக்கு என்ன தண்டனை கிடைக்கப் போகுதோ தெரியேல்லை. …"

அப்பாவின் கண்கள் கலங்கியிருந்தது. அனால் அதனை என்னிடங் காட்டிக் கொள்ள விரும்பவில்லை. வியர்வையைத் துடைப்பது போலத் தன் சால்வையால் முகத்தை அழுத்தித் துடைத்துக் கொள்கிறார்.

"என்ன நடந்ததெண்டு சொல்லுங்கோவன் அப்பா"

எனக்கோ விசயத்தை அறிந்து விடும் அவசரம்.

"ஓம் தம்பி…சொல்லுறன். நீ இதைக் கட்டாயம் அறியத்தான் வேணும். உன்ரை காலத்திலையாவது நான் செய்த பாவத்திற்குப் பிராயசித்தம் செய்து போடடா…"

இன்னும் விசயத்திற்கு வந்த பாடாயில்லை. என்னுடைய முகத்தில் தெரிந்த ஆர்வம் அப்பாவுக்குப் புரிந்திருக்க வேண்டும்.

எழுந்து குசினிக்குள் பார்வையைச் செலுத்திவிட்டு வந்தமர்ந்தவர் எனக்கு மட்டுமே கேட்கக் கூடியதாக மெல்லிய குரலில் ஆரம்பிக்கிறார்.

"தம்பி, உனக்கத் தெரியுந்தானே உன்ரை அம்மாவைப் பற்றி. கலியாணம் முடிச்சதுக்கு நானும் அவளும் சண்டையில்லாமல் இருந்த நாட்களை விரல் விட்டு எண்ணலாம். எதிலையும் சந்தேகம். எதுக்கெடுத்தாலும் சண்டை. எனக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேல்லை. வாழ்க்கையே வெறுத்துப் போச்சுது. இந்த நேரத்திலை தான் நான் படிச்ச உளவியல் பயன்பட்டுது. என்னையே எதிரியாப் பாத்துக் கொண்டிருக்கிறவளுக்கு ஒரு புது எதிரியை உருவாக்கினா என்ன? அவளின்ரை கவனத்தை அந்தப் பக்கமாத் திருப்பினா என்ன எண்டு யோசிச்சன். அப்ப தான் பக்கத்து வீட்டுச் சனத்தின்ரை ஞாபகம் வந்தது. அதுகளின்ரை அழகும் கெட்டித்தனமும் எனக்கு வசதியாப் போச்சுது.. பத்திரமாக் காய்களை நகர்த்தினன். மனிசரிட்டை இயல்பா இருக்கிற பொறாமைக் குணத்தை பாவிச்சன். பக்கத்து வீட்டுப் பிள்ளைகளைப் பற்றி வாத்திமாரும் அயலட்டையும் ஓகோ எண்டு புளுகிறதைச் சொல்லிச் சொல்லியே இவளுக்கு எதிரியாக்கினன். .."

தொலைக்காட்சித் தொடர்களில் வரும் விளம்பர இடைவேளையைப் போல மீண்டும் ஒரு இடைவெளி. அப்பாவை நிமிர்ந்து பார்க்கிறேன். முகத்திலே துயரத்தின் ரேகைகள் பளிச்சென்று தெரிந்தன. அந்த முகத்தைப் பார்த்ததும் ஏனோ என் மனம் விம்முகிறது. அது அப்பாவுக்காகவா அல்லது கிட்டத்தட்ட அதே நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் எனக்காகவா என்று சரியாகத் தெரியவில்லை.

"உங்கடை திட்டத்துக்குப் பலன் கிடைச்சுதா?

சொற்ப நேர நிசப்தத்தைக் கலைக்கிறேன். "ம்.. கிடைச்சுது. நான் நினைச்ச மாதிரியே அவளின்ரை கவனம் அடுத்த வீட்டுக் காரர் மேலை திரும்பிச்சுது. அதுகளை அதட்டி அதட்டி காரியம் பாக்கத் தொடங்கினாள். சாப்பாட்டு மேசையையும் கட்டிலையும் கொண்டு வந்து முன் அறைக்குள்ளை போட்டு மெல்ல அதை அபகரிச்சாள். இப்படி ஒவ்வொண்டா அதுகளிட்டை இருந்து அபகரிக்கிறதே அவளின்ரை வேலையாப் போச்சுது.

"பாவம்! பரமசிவமும் மனிசியும் அப்பாவிகள். அதுகள் ஒதுங்கி ஒதுங்கிப் போச்சுதுகள். இவளும் விட்டபாடாயில்லை. என்ரை மனச் சாட்சி என்னை உறுத்தத் தொடங்கிச்சுது. ஏதமறியா அப்பாவிகளின்ரை சந்தோசத்தைக் கெடுத்துப் போட்டேனே எண்டு சதா அழுது கொண்டிருக்கிறன்.. ."

சோகத்தை என்னிடம் மறைக்கும் முயற்சியில் அப்பா தோற்றுப் போனார். அவர் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் பெருகிற்று. தன்னை அசுவாசப் படுத்திக் கொண்டு தொடர்கிறார்.

"தம்பி ராசா, எனக்க உன்ரை நிலமையும் நல்லா விளங்குது. ஆனால் நீ எப்படியும் உன்ரை மனிசியைச் சம்மதிக்க வைச்சு அதுகளோடை சமாதானமாப் போகப் பார். நாங்கள் ஏமாத்திப் பறிச்ச முன்னறையையும் பின்னறையையும் அதுகளிட்டையே குடுத்துடு. அப்பதான் நீங்களும் சந்தோசமா இருக்கலாம் . என்ரை ஆத்மாவும் சாந்தியடையும். செய்வியா தம்பி…."

பேசிக் கொண்டிருந்தவர் சட்டென்று என் கைகளைப் பற்றிக் கொள்கிறார்.

"நீங்கள் ஒண்டுக்கும் பயப்படாதேங்கோ. உங்கடை விருப்பத்தை நான் கட்டாயம் நிறைவேற்றி வைப்பன்."

அப்பாவைச் சமாதானப்படுத்துகிறேன். இந்த வார்த்தைகளைக் கேட்ட அப்பாவின் முகத்திலே நிம்மதி.மனத்திலே ஏதாவது பாரங்கள் இருந்தால் உயிர் லேசாகப் பிரியாதாம். அந்தப் பாரம் இறங்கினால் தான் பிரியுமாம். தமிழ்ப் படங்களிலே வரும் வழமையான காட்சிதான். எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை. ஆனால் என் அப்பாவின் விடயத்தில் இது உண்மையாயிற்று. தன பாரத்தை இறக்கிவைத்த சில நாட்களிலே அப்பா கண்ணை மூடிவிட்டார்.கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு என் தலையை அழுத்தத் தொடங்கியது. உறுமீன் வரும்வரை காத்திருக்கும் கொக்காக நானும் காலம் கனியும் வரை காத்திருந்தேன்.

ஒருநாள் அதிசயப்படும்படியாக சாந்தி நல்ல மூடில் இருந்தாள். காத்திருந்த மீன் கிடைத்துவிட்டது. மெல்ல விசயத்தைத் தொடங்குகிறேன்.

"இஞ்சேருமப்பா, அங்காலை சுகுமார் குடும்பம் இடமில்லாமல் கஸ்ரப்படுகுதுகள். நாங்கள் பின்னறையைச் சும்மா பூட்டித் தானே வைச்சிருக்கிறம். அதை அதுகளிட்டைக் குடுப்ப...." நான் முடிக்கவில்லை. அதற்குள் பிரளயம் தொடங்கிவிட்டது.

"நல்ல கதை கதைக்கிறியள். இப்ப அறையைக் குடுப்பம் எண்டு சொல்லுவியள். பிறகு கோலைக் குடுப்பம் எண்ணுவியள். இப்படியே முழு வீடும் அதுகளிட்டை தான் போகும். அதுகளுக்காவது அக்கம் பக்கத்திலை சொந்தக்காரர் இருக்கினம். எங்களுக்கு ஒருத்தரும் இல்லை. நாங்கள் நடுத்தெருவிலை தான் நிக்க வேணும்."

சம்பந்தா சம்பந்தமில்லாமல் பொரிந்தவளை மறித்து விளக்குகிறேன்.

"அதுகளேனப்பா முழு வீட்டையும் கேக்கப் போகுதுகள். அதுகள் அப்படிப்பட்ட சனமில்லை. மற்றது ...."

என்னை கதைக்க விட்டால் தானே....

"அற்த இந்தக் கதை இஞ்சை வேண்டாம். நான் சொன்னாச் சொன்னது தான். சொட்டு இடமும் குடுக்க ஏலாது. இருக்கிறதெண்டால் இருக்கட்டும் . இல்லாட்டிப் போகட்டும். இது என்ரை முடிவு மட்டுமில்லை. பிள்ளைகளின்ரை முடிவும் இதுதான்."

துணைக்குப் பிள்ளைகளையும் சேர்த்துக் கொள்கிறாள். அதில் பிழையிருப்பதாகவும் தெரியவில்லை. பிள்ளைகளும் அம்மா பக்கம் தான். நான் கூப்பிட்டு வைச்சு நியாயங்களைச் சொல்லும் போது தஞ்சாவூர் பொம்மைகளைப் போலத் தலையாட்டுவார்கள். என்ன மாயம் போடுவாளோ தெரியாது. தாய் போய்க் குசுகுசுத்ததும் கட்சி மாறி விடுவார்கள்.

"என்ன மலைச்சுப் போய் நிக்கிறீங்கள்… போய் ஆகவேண்டியதைப் பாருங்கோ…"

பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு உள்ளே போய்விட்டாள்.

நானும் மீண்டும் மீண்டும் எத்தனையோ முறை முயன்றுவிட்டேன். நயமாக, தர்க்கரீதியாக, வேடிக்கையாக, கோபமாக…… அவள் மசிவதாக இல்லை. புதிது புதிதாகப் தலையிடிகளைத் தான் தருகிறாள். நான் தனியொருவனாக என்ன செய்வேன். அப்பா உங்களுக்குத் தந்த வாக்கைக் காப்பாற்ற முடியாது போலிருக்கிறதே. என்னை மன்னித்து விடுங்களப்பா.."

என் மனம் குமுறுகிறது.

"நீங்கள் இன்னும் எழும்பேல்லையே? நேரம் எட்டு மணியாகப் போகுது. என்ன கப்பல் கவிண்டு போச்சுதே?

என் சிந்தனைக் கப்பலைக் கவிட்டது வேறு யார்? சாந்தி யேதான்.

"இஞ்சேருங்கோ, அங்காலை அந்தாள் விறாந்தையிலை பேப்பர் படிச்சுக் கொண்டிருக்குது. போய்க் கதையுங்கோ."

காலையிலேயே உளவறிந்து விட்டாள். இனி என்ன செய்வது? எய்யப்பட்டு விட்டேன். அம்பின் வேலையைச் செய்துதானே ஆக வேண்டும். சாவி கொடுத்த பொம்மையைப் போல எழுந்து செல்கிறேன்.

"என்ன சுகுமார்? பேப்பரிலை என்ன புதினம்?"

ஆரம்பக் கட்டப் பேச்சுவார்த்தைக்குரிய சம்பிரதாய வார்த்தைகள்.

"ஆர் மோகனே . வா .. வா.. என்ன இந்தப் பக்கம்?"

மெல்ல லைற் விசயத்தைத் தொடங்குகிறேன்.

"ராவு சுணங்கும் மட்டும் லைற் எரியுதாம். நித்திரை கொள்ள ஏலாமல் கிடக்குது எண்டு மனிசி சத்தம் போடுறா."

வழமை போலவே சுகுமாரின் முகத்தில் மாற்றம் இல்லை. அவர் பச்சை விளக்குக் காட்டுவார் போலத் தான் தெரிந்தது. அதற்குள் வீட்டிற்குள் குசுகுசுப்புகள் தொடங்கி விட்டன. சற்றுச் சத்தமாகவே பேசிக் கொண்டார்கள். எனக்கும் கேட்கட்டும் என்று நினைத்திருக்கலாம்.

"நல்லா இருக்குது. நாங்கள் படிக்கிறதில்லையே. அவையள் மட்டும் ராவு ராவாப் படம் பாப்பினம். … பாட்டுக் கேப்பினம். நாங்களும் தொட்டதுக்கும் ஆலவட்டம் பிடிச்சுக் கொண்டு போறமே. .. . துள்ளியவளைத் தாயார் சமாதானப்படுத்துவதும் கேட்டது.

"பிள்ளை நீ சத்தம் போடாதை. அப்பா கதைப்பார் தானே." தாயாரின் சமாதானம் மகன் பிரபுவைச் சமாதானப்படுத்தவில்லை.

"ஓ.. அப்பா கதைப்பார். .. இவ்வளவு காலமும் அவர் கதைச்சுக் கொண்டு தானே இருக்கிறார். எல்லாம் நீங்கள் குடுத்த இடம். அப்பப்பாவும் சமபங்கு குடுத்துத்தானே வாங்கினதெண்டு சொல்லுறியள். பிறகு ஏனம்மா அடிமைகள் மாதிரி அவையள் சொல்லறதுக்கெல்லாம் தலையாட்டிக் கொண்டு இருக்க வேணும். அக்கா! நான் சொல்லுறன். அப்பா என்ன சொன்னாலும் பறவாயில்லை. நீ உனக்கு விருப்பமான நேரம் மட்டும் இருந்து படி. வாறதைப் பாக்கிறதுக்கு நான் இருக்கிறன்."

"நான்" என்ற சொல் கொஞ்சம் அளுத்தமாகவே வருகிறது.

விருட்டென்று வெளியே வந்த பிரபு தகப்பனிடம்

"அப்பா நான் கராட்டிக் கிளாசிற்குப் பொயிட்டு வாறன்.."

என்ற சொல்லியபடியே என்னை ஒரு பார்வை பார்த்தான். ஒரு புளுவைப் பார்ப்பது போல இருந்தது. கோபமும் எரிச்சலும் மண்டியிருந்த அந்தப் பார்வையை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தலையைக் குனிந்த கொள்கிறேன்.

எனக்கு உல்லிலே உட்கார்ந்திருப்பதைப் பொலிருக்கிறது. ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு மணித்தியாலயமாகக் கடந்து கொண்டிருந்தது. சுகுமார் தான் மெல்லப் பேச்சைத் தொடங்குகிறார்.

"மோகன்.. எனக்கு ஒருத்தரோடையும் பிரச்சினைப்பட விருப்பமில்லை. ஏலக் கூடிய மட்டும் சாஞ்சு சரிஞ்சுதான் போகப் பாப்பன். ஆனால் இப்ப காலம் மாறிப் போயிட்டுது. பிள்ளைகளும் வளந்திட்டுதுகள். அதுகளுக்கும் சரிபிழை விளங்கத் தொடங்கிட்டுது. உனக்குக் கேட்டிது தானே.அந்தப் பேச்சிலும் நியாயம் இருக்கத்தான் செய்தது. அத்தோடு விபரீதம் நடந்துவிடுமோ என்ற அச்சமும் தொனித்தது.

விடைபெற்றுக் கொண்டு வந்த நான் நடந்த விசயங்களை ஒப்புவிக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. கதவிடுக்கால் ஒட்டுக் கேட்பதற்கு சாந்திக்குச் சொல்லியா கொடுக்க வேண்டும்.இத்தனை நாளும் மறுபேச்சில்லாமல் தலையை ஆட்டிக் கொண்டிருந்தவர்கள் இன்று எதிர்த்துப் பேசிவிட்டார்களே என்ற ஆத்திரம் கண்களில் தெறிக்க வாhத்தைகளைச் சிதற விடுகிறாள்.

"உங்கை பார் அவையளின்ரை கொளுப்பை. பெரிய நியாயம் கதைக்க வெளிக்கிட்டிட்டினம். உவையளை என்னண்டு பதப்பண்ணுறதெண்டு எனக்குத் தெரியும்."

ஏதோ அவர்கள் தவறு செய்தது போலவும் தான் நீதிக்காகப் போராடுவது போலவும் அவள் பேசிய பேச்சைக் கேட்ட எனக்குச் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.அவள் பேச்சோடு நிற்பாட்டப் போவதில்லை என்பதும் எனக்குப் புரிகிறது. இது எங்கே போய் முடியப் போகிறதோ என்ற கவலை என்னை ஆட்கொள்ளத் தொடங்குகிறது.நான் பயந்தது போலவே காரியங்கள் நடக்கத் தொடங்கி விட்டது. சுகுமாரின் பிள்ளைகள் படிப்பில் காட்டிய கெட்டித் தனத்தால் அவள் மனதில் படிந்திருந்த பொறாமைக் கறை தன் தாக்குதலையும் அதன் மீதே செலுத்தத் தூண்டியிருக்க வேண்டும். அன்று சுகுமார் வீட்டில் யாருமில்லாத நேரமாகப் பார்த்து மகனை அனுப்பி அவர்களின் புத்தக அலுமாரியை தீயிட்டு விடுகிறாள். நல்ல நேரமாக வீடு முழுதாக எரியவில்லை. ஆனால் படிப்பையே முழுதாக நம்பியிருந்த அந்தப் பிள்ளைகள் கொதித்துப் போய் விட்டார்கள்.

பிரபுவிற்கு எங்கிருந்து தான் அந்தத் துணிச்சல் வந்ததோ தெரியாது. நேரே எங்கள் வீட்டிற்குள் வந்து கையைக் காலை நீட்டி விட்டான்.

அன்றிலிருந்து இந்த வீடு போர்க்களமாக மாறி விட்டது. தினமும் ஏதாவது ஒரு காரணத்திற்காக அடிபிடி. உண்மையைச் சொன்னால் எனது பையன் தான் வலிய எதாவது சண்டையைக் கிளறுவான். பின்னர் வாங்கிக் கட்டிக் கொண்டு வருவதும் அவன்தான்.

சாந்தியும் அவனுக்கு எண்ணையைக் கிண்ணையைப் போட்டு தேற்றி விடுவாள். பிறகு அவனுக்குக் கொம்பு சீவி விடுவதும் அவள்தான். இப்படியே என்னுடைய உழைப்பில் பெரும் பகுதி நோவெண்ணைக்கே சரியாகிவிடுகிறது.

இப்படியே அஞ்சி அஞ்சி அடுத்து என்ன நடக்குமோ என்று தெரியாத இந்த வாழ்க்கை எனக்கு அலுத்துப் போய்விட்டது. இந்த நிலமையிலிருந்து மீள்வதற்கு என்ன செய்வது? இப்போது இருக்கின்ற ஒரே வழி தலைக்கு மேலே தொங்குகின்ற அவலத்தை சாந்திக்கும் பிள்ளைகளுக்கும் விளக்கி அவர்களோடு சமாதானமாகப் போவதுதான். அல்லாவிட்டால் இப்படியே அழிந்து போக வேண்டியதுதானென்ற உண்மை சாந்தியுடன் பேசி எப்படியாவது அவளைச் சம்மதிக்க வைத்து விட வேண்டுமென்ற துணிவைத் தருகிறது.

மனத்திலே உறுதியுடன் எழுந்து குசினியை நோக்கி நடக்கிறேன். சாந்தியின் முகத்தைப் பார்த்த பின்னரும் இந்தத் துணிவு நிலைக்குமா? யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளும் பக்குவம் அவளுக்கு இருக்குமா? எனது முயற்சி பலிக்குமா? இந்த வீட்டிற்கு அமைதி திரும்புமா? எனக்கே தெரியவில்லை.

Posted

விடியுமா கதை நல்லா இருக்கு மணிவாசகன்.

உங்கள் உண்மைச் சம்பவமா? இல்லை இங்கு கதை எழுதும் பலர் உண்மைச் சம்பவங்களை தான் எழுதுவார்கள் அதனால்தான் இப்படி கேட்டேன்.

என் சாந்தி சாந்தமாகப் பேசியதையோ செயற்பட்டதையோ இந்த இருபது வருட கால தாம்பத்ய வாழ்க்கையிலே நான் கண்டதேயில்லை.

சாந்தி. பெயரிலே சாந்தம் இருக்கும் என நினைத்தேன். ஆனால்........ :cry: :twisted:

நல்ல கதை கதைக்கிறியள். இப்ப அறையைக் குடுப்பம் எண்டு சொல்லுவியள். பிறகு கோலைக் குடுப்பம் எண்ணுவியள். இப்படியே முழு வீடும் அதுகளிட்டை தான் போகும்

:P :P :P :P :P :P

Posted

ஐஐயோ! நான் சின்னப் பையன்.

வெண்ணிலா இந்தக் கதையை இலங்கைப் பிரச்சினையோடை ஒப்பிட்டுப் பாருங்கோ விளங்கும்.இது ஒரு உருவகக் கதை.

மணிவாசகன்

Posted

ஐஐயோ! நான் சின்னப் பையன்.

வெண்ணிலா இந்தக் கதையை இலங்கைப் பிரச்சினையோடை ஒப்பிட்டுப் பாருங்கோ விளங்கும்.இது ஒரு உருவகக் கதை.

மணிவாசகன்

ஒ சின்ன பையனா? சரி சரி

ம்ம்ம் ஒப்பிட்டு பார்த்தேன் அதுதான் இலங்கையில் உங்களுக்கு நடந்த கதையோ என்றுதான் அப்படி கேட்டேன். :lol::lol:

Posted

அழகான கதை. ஊரில் இருக்கும் சில பெண்களின் குணதியங்களை வெளிப்படுத்துகின்றது இந்த கதை.

வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

Posted

கதை நன்றாக இருக்கிறது. பட் வாசிக்க கஷ்டமாக இருக்கிறது இடைவெளி விட்டு டைப் பண்ணுங்க :lol: தொடர்ந்து எழுதுங்க

Posted

நன்றி

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி

மணிவாசகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

"விடியுமா" கதையைப் போல் இன்னும் எழுதுங்கள், ஆனால் கொஞ்சம் இடைவெளி விட்டெழுதினால் வாசிக்க இலகுவாக இருக்கும்.

Posted

மணிவாசகன் அண்ணா.

கதை நல்லா இருந்தது. ஆரம்பத்திலை நீங்கள் பொம்பிளைகளைப் பற்றிக் குறைவா எழுதுறிங்கள் எண்டு கோவமா இருந்தது. பிறகு உருவகக் கதை எண்டாப் பிறகு திருப்பி வாசிச்சன். அப்பதான் அந்தப் பொம்பிளைப் பாத்திரம் புத்த மதத் துறவிகளையும் ஆம்பிளைப் பாத்திரம் சிங்கள மக்களையும் பக்கத்தக் குடும்பம் தமிழரையும் குறிக்குதெண்டு தெரிஞ்சது.

சும்மா பின்னிட்டீங்கள்

அடுத்த கதை எப்ப

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இந்த மணிவாசனின் கதையைப் படித்தபோது அந்த மணிவாசகப்பொருமான் திருவாதவுூரராகி திருப்பெருந்துறையில் குருந்தை மரநிழலில் குருவாக வந்த சிவபெருமானிடம் அருள்மொழி பெற்று சிவஞானி ஆனதும், குதிரைகள் வாங்கக் கொடுத்த பணத்தை கோவில் கட்டுவதில் செலவுசெய்ததும், இறைவன் நரிகளைப் பரியாக்கி கொண்டுவந்ததும், அன்றிரவே பரிகளெல்லாம் நரியாக மாறிய கதையை பல வருடங்களுக்கு முன்னர் யாரோ ஒரு நகைச்சுவை வானொலி நாடகமாக மாற்றி எழுதி நடிக்கக் கேட்டது நினைவுக்கு வருகிறது.

அதாவது மறவன்புலவுக்கு மாடுகள் வாங்கி வரச்சொல்லிக் கொடுத்த பணத்தைக் கொண்டு செல்கையில் ஒரு கள்ளுக்கொட்டிலைக்கண்டுவிட்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் மணிவாசகன்,

உங்களுடைய கதையை அனைவரும் வாசிப்பதற்க்கு இலகுவாக,திருத்தி இணைத்துள்ளேன்!

கதை நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.! :)

Posted

திருத்தி களத்தில் இணைத்ததற்கு மிகவும் நன்றி யாழ்பிரியா (அக்கா??).

அதுபோல கருத்தச் சொன்ன அன்பு உறவுகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

அன்புடன்

மணிவாசகன்

  • 2 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

விடியுமா கதை றொம்ப நல்லா இருக்கிறது. நிலமை விடியுமாற்போல் தெரியவில்லை.மீண்டும் இருண்டுவிடுமோ????

Posted

சிறுகதை மிகவும் நன்றாக உள்ளது. வாசிக்கும் போது விறுவிறுப்பாகவும் எதுவித தடங்கல் இன்றியும் உள்ளது. பாராட்டுக்கள் மணிவாசன் அண்ணா. என் கண்ணுக்குத் தெரியவைத்த மாயாவிக்கும் நன்றி.

Posted

உருவகக்கதை நல்லா எழதியிருக்கிறீங்கள்.ஒரு சந்தேகம் இதில வாற மோகன்ர அப்பா செய்தமாதிரி யாற்றயும் கவனத்தை திருப்புவதற்காக ஆரம்ப ஈழப்போராட்டத்திலும் ஏதும் சம்பவம் நடந்ததா?

Posted

உருவகக்கதை நல்லா எழதியிருக்கிறீங்கள்.ஒரு சந்தேகம் இதில வாற மோகன்ர அப்பா செய்தமாதிரி யாற்றயும் கவனத்தை திருப்புவதற்காக ஆரம்ப ஈழப்போராட்டத்திலும் ஏதும் சம்பவம் நடந்ததா?

வணக்கம் சிநேகிதி,

தான் ஆட்சிக்கு வருவதற்காக சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டுவந்து சாதாரண சிங்கள் மக்கள் மத்தியில் இனவாத விதையை 1958இல் பண்டாரநாயக்கா விதைத்தார். அதைத்தான் அப்படிக் குறிப்பிட்டேன்.

ஆறுதலாய் வாசித்துக் கருத்தெழுதியதற்கு மிகவும் நன்றி

Posted

வணக்கம் மாயாவி, சுஜிந்தன்,

தங்களுடைய கருத்துக்களுக்கு மிகவும் நன்றி.

என்னுடைய இடைவெளி என்ற கதை தொடர்பாய் (கரு, முடிவு) விரிவான விமர்சனத்தை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்

மணிவாசகன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொடர்ந்து நீங்கள் எழுதும் கதைகளினை வாசித்து வருகிறேன். நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள்

Posted

வணக்கம் கந்தப்பு,

உங்கள் கருத்துக்கு நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.