Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடவுளுக்கோர் கடிதம்

Featured Replies

கடவுளுக்கோர் கடிதம்

எல்லாம் வல்லவராம்

எல்லாம் தெரிந்தவராம்

எல்லாம் செய்பவராம்

எங்கும் இருப்பவராம்

அகிலத்தில் வாழ்பவர்கள்

அப்படித்தான் சொல்லுகின்றார்

ஆனாலும் என்னிடத்தில்

அடுக்கடுக்காய் பலகேள்வி

மனச்சிறையில் இதைப்போட்டு

மறுவிக் கொள்ளாமல்

மனந்திறந்து கேட்டுவிட

மடலிதனை வரைகின்றேன்

அண்டத்தை ஆள்கின்ற

ஆண்டவன்உன் செயல்களுக்கு

காரணத்தை அறியாத

காரணத்தால் ஒருகடிதம்

அடுக்காத செயல்செய்த

அநியாயக் காரனைப்போல்

தலைமறைவாய்ப் போயிருக்கும்

தங்களுக்கே இக்கடிதம்

முறையாக அனுப்பிவைக்க

முகவரியும் தெரியாது

இரகசியமாய் அனுப்பிவைக்க

இருக்குமிடம் தெரியாது

திருமுகத்தை அனுப்பிவைக்க

திசைதெரியாக் காரணத்தால்

திறந்த மடலாகத்

திறக்கின்றேன் என்வழக்கை

தலைவனாக நானுன்னை

தரணியிலே பார்த்ததில்லை

இறைவனாக நானுன்னை

இன்றுவரை பாhத்ததில்லை

ஆனாலும் உன்னிடத்தில்

அளவறியாப் பிரியமுண்டு

அன்பான நண்பனைப்போல்

அருகில்வர விருப்பமுண்டு

உலகத்தைப் பார்த்ததிலே

உன்னிடத்தில் குறைகண்டேன்

உண்மைநண்பன் நானென்றால்

உனக்கிதனைச் சொல்லவேண்டும்

இக்கடிதம் தவறென்றால்

இயம்பிவிடு உன்பதிலை

இதில்நியாயம் உளதென்றால்

இலதாக்கு உன்தவறை

மனிதரினைப் படைப்பதிலே

மகத்துவத்தைக் காட்டிவிட்டார்

மாநிலத்தோர் பேசுவது

மனதினிலே படியவில்லை

நன்றாக யோசித்து

நானிலத்தைப் பார்த்ததிலே

நடுநிலமை தவறியதாய்

நான்மனதில் உணர்கின்றேன்

வீரங் கொண்டவனாய்

விதைத்திட்டாய் ஆண்மகனை

மென்மைக் குணத்துடனே

பெண்ணைப் படைத்திட்டாய்

ஆண்மைக் குணங்கொண்ட

ஆண்துன்பம் தாங்கிடுவான்

ஆனாலும் துன்பத்தை

அளவாய்நீ பகிரவில்லை

மாத விலக்கென்று

மாதமொரு துன்பம்

மகவொன்றைப் பெறுவதிலும்

மாபெரும் துன்பம்

ஆதிக்க குணங்கொண்ட

ஆணிடத்தில் துன்பம்

பாசகுணம் மிகுதியினால்

பாரினிலே துன்பம்

அடுக்கடுக்காய் துன்பத்தை

அளித்ததேனோ பெண்களுக்கு

அடுக்குமோ இதுவென்று

ஆண்மகன்நான் கேட்கின்றேன்

அநியாயம் செய்வோரும்

அடித்துப் பிழைப்போரும்

அடுக்கு மாளிகையில்

அழகாக வாழ்கின்றார்

ஓயாமல் உழைப்போர்க்கு

ஒருநேர உணவில்லை

உழைக்காமல் வாழ்வோர்க்கு

உணவிருந்தும் பசியில்லை

அடுத்தவரை வதைத்தல்

அடுக்காத பாவமென்றால்

அதைநிதமும் செய்துநிற்கும்

ஆண்டவன்நீ பாவிதானே

இளவரசனாய் வளர்க்க

இல்லையென்று ஏங்கிநிற்க

இல்லாத வீட்டினிலே

இலையான்களாய் குழந்தை

எல்லார்க்கும் கொடுக்கின்ற

எண்ணம் கொண்டோர்க்கு

எதையும் கொடுக்காமல்

எதற்காக நீபடைத்தாய்?

ஒருபாவம் அறியாத

ஒருவயதுக் குழந்தைகூட

உயிர்கொல்லும் புற்றுநோயால்

உழல்கின்ற அவலமேனோ?

நல்லவர்கள் நானிலத்தில்

நாள்முழுதும் மாய்வரென்றால்

நல்லவராய் வாழ்வதனால்

நமக்கென்ன லாபமிங்கே?

பணம்பத்தும் செய்யுமென்றால்

குணம்உள்ளோர் கதியென்ன?

மணச்சடங்குகூட இங்கே

பணச்சடங்காய் போனதேனோ?

கோபந் தணிப்பதற்கு

கோயிலுக்குப் போயிருந்தேன்

கோரக் குண்டுவீச்சில்

கோபுரத்தைக் காணவில்லை

அடுத்தவரைக் காக்காமல்

அமைதியாய் இருந்தவனே

அடியுனக்கு விழுந்தபின்னும்

அசையாமல் இருப்பதேனோ?

கீழ்சாதி நீயென்று

கிறங்காமல் பேசுகின்ற

ஊனக் காரர்களை

உதைக்காமல் விட்டதேனோ?

படித்த மனிதர்பலர்

பணக்காரன் சொல்கேட்டு

பணிசெய்து கிடக்கின்ற

பரிதாபம் பார்க்காயோ?

கோயிலுக்குப் போனாலும்

கோபந்தான் வருகிறது

தர்மகாத்தா என்றபேரில்

தறுதலைகள் அட்டகாசம்

ஆண்டவனே உன்னிடத்தில்

அளவளாவத் தரகர்வைத்தார்

அர்ச்சகரின் துணையின்றி

அருகில்வர முடியாதாம்

அநியாயம் அதிகரித்தால்

அவதாரம் எடுப்பதாக

அன்றொருநாள் சொன்னபேச்சு

அடிமனதில் பதிந்திருக்கு

அவதாரம் எடுக்கின்ற

அளவிற்கு அதர்மங்கள்

அகிலத்தில் இல்லையென்று

ஆண்டவன்நீ நினைத்தாயோ?

குண்டு வீச்சாலே

குலைநடுங்கிப் போனதனால்

பதுங்கு குளிக்குள்ளே

பதுங்கிக் கொண்டாயோ?

நாத்திகம் பேசுவோர்

நாக்கூசத் தூற்றுகின்றார்

ஆண்டவன்தான் எங்கேயென்று

அலட்சியமாய் பேசுகின்றார்

ஆண்டவன்நீ உள்ளாயோ

ஆத்திரமாய்க் கேட்கின்றேன்

மௌனம் கலைத்துநீயும்

கௌரவத்தைக் காத்திடுவாய்

உள்ளக் குமுறலினை

உளறிக் கொட்டிவிட்டேன்

உண்மை நண்பன்நான்

உரிமையோடு கேட்டுவிட்டேன்

உனைத் துற்றுமாசை

உண்மையிலே எனக்கில்லை

உனைவையும் எண்ணம்

உதட்டினிலும் எனக்கில்லை

நீசக் காரர்கள்

நிலைகுலைந்து போவதற்கு

நீமீண்டும் பிறப்பெடுத்து

நிச்சயமாய் வரவேண்டும்

அந்தநாள் வெகுவிரைவில்

அமைந்துவிட வேண்டுமென்று

அடியேன்நான் உன்னிடத்தில்

அன்பாகக் கேட்கின்றேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமை, அருமை "கடவுளுக்கோர் கடிதம்" அருமை.

உவமான உவமேயங்களுடன் அழகாகப் பிரவசமாகியுள்ளது, குறுகத் தரித்த குறள் என்பார்களே, அதேபோல் குறுக இருப்பின் இன்னும் சிறப்பாகும், கவிதை நீண்டு விட்டால் வாசகர் இடை நடுவில் நிறுத்தவும் கூடும், இது படைப்பாளிக்குத் தோல்வியல்லவா.

அருமையான கவிதை,

பலரது மனதையும் குடையும் கேள்விகளைக் கடிதத்தில் எழுதியிருக்கிறீர்கள். கடவுள் பதிலனுப்பினால் எங்களுக்கும் அறியத்தாருங்கள்.

காவியா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதைக்கு நன்றி. புலமைக்கு பாராட்டு.

தேவேந்தி கூறியதுபோல் செய்யவும்.

கடவுளிடம் என்றபடியால் பல கேள்விகளைக் கேட்கவேண்டி ஏற்பட்டிருக்கலாம்.

எழுதிவிட்டு இரு தடவைகளாவது திரும்பவும் வாசித்துவிட்டு களத்தில் போடவும்.

உங்கள் உள்ளக் குமறல்களை அழகாக தொடுத்து ஆண்டவனுக்கு எழுதிய கவிதை அருமை. வாழ்த்துக்கள்

அருமையான கவிதை! வாழ்த்துக்கள்

அடடடடா

ஆண்டவனுக்கு அனுப்பிய மடல் சூப்பர். ஆமா ஆண்டவன் பதில் போடுவாரா? :twisted: அவர் பதில் போடக்கூடியவாறா கடிதம் இருக்குது? ஹாஹா பாவம் கடவுளையே தலை குனிய வைச்சிட்டியளே. அருமை அருமை.

அடுக்கடுக்காய் துன்பத்தை

அளித்ததேனோ பெண்களுக்கு

அடுக்குமோ இதுவென்று

ஆண்மகன்நான் கேட்கின்றேன்

மாதரணிக்காகவும் கேள்வியை கடவுளிடம் கடித மூலம் தொடுத்த உங்களுக்கு என் நன்றிகள்.

நல்லதோர் கவிதை பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்

அன்பான சகோதரர்களே,

என்னுடைய மேற்படி கவிதைக்கும் அதுபோல மற்றைய படைப்புகளுக்கும் கருத்துச் சொல்லும் அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி உடையவனாயிருக்கிறேன்.

வாழ்த்துக்கள் என்று சொல்லி குறுகலாய் முடிக்காமல் குறைகளைச் சுட்டினால் என் எழுத்துக்களை மெருகூட்ட உதவியாய் இருக்கும் .

எனக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைக்கும் போது (அடேயப்பா!) உங்கள் எல்லாருக்கும் கொத்து றொட்டி (கஞ்சத்தனத்தின் உச்சம்) வாங்கித் தாறன்.

மணிவாசகன்.

உங்களின் கவிதைகள் நன்றாக இருக்கின்றன. வாழ்த்துக்கள்

வீரங் கொண்டவனாய்

விதைத்திட்டாய் ஆண்மகனை

மென்மைக் குணத்துடனே

பெண்ணைப் படைத்திட்டாய்

இந்திராகாாந்தி, சந்திரிகா போன்றவர்களும் மென்மையானவர்கள் என்று கூறுகின்றீர்களா :roll: :wink:

கடவுளையே கேள்வி கேட்டு ஒரு அழகான கவிதை..கடவுள் கவிதையின் அழகை பார்த்தாவது பதில் தர வேண்டும்..அவ்ளோ அழகா எழுதி இருக்கிறீர்கள்.. மணிவாசகன் அண்ணா.

உங்களின் கவிதைகள் நன்றாக இருக்கின்றன. வாழ்த்துக்கள்

இந்திராகாாந்தி, சந்திரிகா போன்றவர்களும் மென்மையானவர்கள் என்று கூறுகின்றீர்களா :roll: :wink:

பெண்களை தானே மென்மை என்று கூறினார் அருவி.. :P :wink:

  • தொடங்கியவர்

அருவிக்கு,

நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் எதில் தான் புறநடைகள் இல்லை. சாதாரணமாக பெண்மையின் இயல்பு மென்மை தானே. அதனைத் தான் குறிப்பிட்டேன்.

எற்றுக்கொள்வீhகள் என்று நினைக்கிறேன்

அன்புடன்

மணிவாசகன்

அழகான கவிதை. உங்கள் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்ல கடவுள் சங்கடப்படுவார் என்பது நிச்சயம். மிகவும் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.

அருமையான கேள்விகள் தான்.... கடவுள் வந்து பதில் சொல்லுவாரோ தெரியா சில நேரம் பாத்துக்கொண்டு இருப்பார் நாங்க எழுதுறதை.... :wink:

அருமையான கவிதை மணிவாசகன்.... தேவேந்தி சொல்வது போல கவிதை நீண்டு விட்டால் சில நேரம் வாசகர்கள் இடையில் நிறுத்தக் கூடும் என்பதைதான் நானும் சொல்கிறேன்....

இருந்தாலும் எல்லாம் கடவுளிடம் கேக்க வேண்டிய கேள்வி தான்... கவிதைக்கு வாழ்த்துக்கள் ...! :P

ஒருபாவம் அறியாத

ஒருவயதுக் குழந்தைகூட

உயிர்கொல்லும் புற்றுநோயால்

உழல்கின்ற அவலமேனோ?

இதற்க்கு சொல்லுறவர்கள் குற ஆயுளில் சாகிறவர்கள் தானாம், இப்படி பிறந்து, கொஞ்ச நாள், வருடங்களில் சாகுறவர்களாம்! இப்படி யாரோ சொல்லி கேள்வி பட்டிருக்கன் உண்மையா பொய்யோ எல்லாம் அந்த கடவுளுக்குதான் தெரியும்...! :roll: :roll:

ஹும் விடை தெரியாத நியாயமான கேள்விகளை தான் கேட்டிருக்கின்றீர்கள். ஏன் இப்படி என்று அதிகம் சிந்திக்க வாழ்க்கையே சலிப்புறவும் வாய்ப்பிருக்கின்றது. உலகத்தை குறை நிறைகளோடு ஏற்றுக்கொண்டு முடிந்தவரையில் மகிழ்ச்சியாக வாழ்வோம்.

ஒவ்வொரு கேள்வியையும் சிந்தித்து கோர்த்த உங்கள் கவிதைக்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பான சகோதரர்களே,

என்னுடைய மேற்படி கவிதைக்கும் அதுபோல மற்றைய படைப்புகளுக்கும் கருத்துச் சொல்லும் அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி உடையவனாயிருக்கிறேன்.

வாழ்த்துக்கள் என்று சொல்லி குறுகலாய் முடிக்காமல் குறைகளைச் சுட்டினால் என் எழுத்துக்களை மெருகூட்ட உதவியாய் இருக்கும் .

எனக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைக்கும் போது (அடேயப்பா!) உங்கள் எல்லாருக்கும் கொத்து றொட்டி (கஞ்சத்தனத்தின் உச்சம்) வாங்கித் தாறன்.

மணிவாசகன்.

என்ன, எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான பதில்தானா? கொத்துரொட்டி போல!

பொறுங்கோ வாறன் ஒரு தேத்தண்ணி குடிச்சிட்டு...கருத்தெழுத.... வாசிச்சு களைச்சுப் போனன் ....

4121015kn6fk.gif

அருமையான கவிதை வாழ்த்துக்கள்...கொஞ்சம் சுருக்கமாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் அடியேனது அபிப்பிராயம் சண்டைக்கு வரவேண்டாம்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை சூப்பரா இருக்கு..ம்ம்ம்...கடவுள் பதில் போட்டாரா????

உங்கள் கவிதையில் குறைகள் கண்டுபிடிக்கின்றா அளவுக்கு கவிதை ஞானம் நமக்கு இல்லை. பாலன் சொன்னது போல் கொஞ்சம் குறுக்கி எழுதினால் வாசிக்க சுகமாகவும் சுவையாகவும் இருக்கும்.

வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

உனைத் துற்றுமாசை  

உண்மையிலே எனக்கில்லை  

உனைவையும் எண்ணம்  

உதட்டினிலும் எனக்கில்லை

தயவுசெய்து இவ்வரிகளை எனக்கு கொஞ்சம் விளங்கப்படுத்தி சொல்ல முடியுமா? என்னால் விளங்க முடியவில்லை.

  • தொடங்கியவர்

கருத்துச் சொன்ன எல்லாருக்கும் மனமார்ந்த நன்றிகள் :D:lol::D

வெண்ணிலா.

கடவுளைத் தூற்றவேண்டும் என்ற எண்ணமோ அல்லது ஏச (வைய) வேண்டும் என்ற எண்ணமோ என்னிடத்தில் இல்லை. ஆனால் மனதில் தோன்றிய ஆதங்கத்தில் எழுதுகிறேன் என்று சொல்லலாம். சரியா?

அன்புடன்

மணிவாசகன்

வெண்ணிலா.

கடவுளைத் தூற்றவேண்டும் என்ற எண்ணமோ அல்லது ஏச (வைய) வேண்டும் என்ற எண்ணமோ என்னிடத்தில் இல்லை. ஆனால் மனதில் தோன்றிய ஆதங்கத்தில் எழுதுகிறேன் என்று சொல்லலாம். சரியா?

அன்புடன்

மணிவாசகன்

உனைத் துற்றுமாசை  

உண்மையிலே எனக்கில்லை  

உனைவையும் எண்ணம்  

உதட்டினிலும் எனக்கில்லை

ஓ தூற்றும் ஆசை. ஓகே ஓகே

உனைவையும் என்பதை பிரித்தெழுதி இருக்கலாமே. ஓகே ஓகே இப்பதான் புரிந்தேன். :cry: :cry: நன்றிங்கோ விளக்கத்துக்கு

  • 1 month later...

அடுத்தவரை வதைத்தல்

அடுக்காத பாவமென்றால்

அதைநிதமும் செய்துநிற்கும்

ஆண்டவன்நீ பாவிதானே

நல்லவர்கள் நானிலத்தில்

நாள்முழுதும் மாய்வரென்றால்

நல்லவராய் வாழ்வதனால்

நமக்கென்ன லாபமிங்கே?

கோபந் தணிப்பதற்கு

கோயிலுக்குப் போயிருந்தேன்

கோரக் குண்டுவீச்சில்

கோபுரத்தைக் காணவில்லை

அடுத்தவரைக் காக்காமல்

அமைதியாய் இருந்தவனே

அடியுனக்கு விழுந்தபின்னும்

அசையாமல் இருப்பதேனோ?

கடவுள் ஒரு புரியாத புதிர்தான். உங்களுடைய கேள்விகள் நியாயமானவை. எங்கள் எல்லோருடைய மனங்களையும் குடைபவை.

  • தொடங்கியவர்

வணக்கம் அபி,

உங்கள் கருத்துக்கு நன்றி

அன்புடன்

மணிவாசகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.