Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரே பார்வையில் வரவு -செலவுத் திட்டம்

Featured Replies

ஒரே பார்வையில் வரவு -செலவுத் திட்டம்

[size=5]ஆடைத் துறையிலிருந்து 5000 மில்லியன் டொலர் வருவாய் எதிர்பார்க்கப்படுகிறது.[/size]

[size=3][size=5]Two years after it was formally removed from the GSP+ scheme that allowed duty-free exports to the EU, Sri Lanka's apparel industry says it is feeling the loss of the preferential tariff system.[/size][/size]

[size=3][size=5]Sri Lanka's removal from the EU's GSP+ scheme in August 2010 came six months after the country was withdrawn from the preferential tariff initiative following allegations of non-compliance with the qualification criteria.[/size][/size]

[size=3][size=5]This was also vindicated by export numbers. Earnings from textile and garment exports increased by 7% year-on-year in 2010 and exports to the EU, which accounted for around 50.7% of the country's total apparel exports, increased by 3.0% to US$1.678 bn.[/size][/size]

[size=3][size=5]In 2011, earnings from textile and garment exports to the EU increased by 25.1%, while overall exports rose 24.9% to US$4.191bn, surpassing the US$4bn target set by the apparel industry.[/size][/size]

[size=3][size=5]But by the end of August 2012, the situation had reversed.[/size][/size]

[size=3][size=5]Official data for 2012 published by industry group JAAF (Joint Apparel Association Forum) shows exports to the EU started to decline from February 2012, in some months hitting double-digit lows.[/size][/size]

[size=3][size=5]Apparel exports to the EU, in terms of value, increased by 1.2% in January 2012 compared to January 2011, but dropped marginally, by 0.6%, in February - and continued to drop at an increasing rate from then onwards, as shown in the table below.[/size][/size]

[size=3]http://www.just-styl...s_id115946.aspx[/size]

Edited by akootha

  • Replies 168
  • Views 8.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சீருடையை அன்று தோய்த்து போட்டு அடுத்த நாள் பாடசாலைக்கு வரும் எத்தனையோ மாணவர்களை நான் பாத்திருக்கின்றேன் சோ யாருக்கு வேணும் சீருடை என்ற கேள்விக்கு நிச்சியமாக வறிய மாணவர்களுக்கு வேண்டும் எல்லோருடைய சொந்தங்களும் வெளிநாட்டில் இல்லை

மற்றது மல்லை அண்ணா ஒன்ற புரிந்து கொள்ளவேண்டும் டட்லி போன்றவர்களின் காலத்தில் உள்நாட்டு யுத்தம் நடை பெறவில்லை மற்றது இலங்கை என்ற நாடு முப்பது வருட யுத்தம் நடை பெற்ற நாடு என்பதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் மனம் சங்கடத்துக்குள்ளானது: ஜனாதிபதி

வெள்ளிக்கிழமை, 09 நவம்பர் 2012 03:36 0 COMMENTS

2013ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம், நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. புல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்களும் இடம்பெற்றன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது ஏழாவது வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை அவர் சம்பிரதாயபூர்வமான வரவு – செலவுத் திட்ட பெட்டகத்தில் கொண்டுவராது முன்மொழிவுகளை கோவையிலேயே கொண்டுவந்தார். அவரது உரை இரண்டு மணித்தியாலங்களும் 36 நிமிடங்களும் நீடித்தன.

நாடாளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 12.52 மணிக்கு கூடியது. பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ அவைக்கு பிரவேசித்தார்.

அவரை, பிரதி நிதி அமைச்சரும் சிரேஷ்ட அமைச்சருமான சரத் அமுனுகம, பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி ஆகியோர் அழைத்துவர, ஆளுங்கட்சியினர் எழுந்துநின்று மேசைகளில் தட்டி வரவேற்றனர். அப்போது எதிரணியிலிருந்த எவரும் எழுந்திருக்கவில்லை.

ஜனாதிபதி தனது முன்மொழிவுகளை வாசித்துக்கொண்டிருந்த போது இடைநடுவில் சபைக்குள் பிரவேசித்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சிறிது நேரம் சபையில் அமர்ந்திருந்துவிட்டு அவையைவிட்டு வெளியேறிவிட்டார்.

தனது முன்மொழிவுகளில் நிவாரணம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பில் ஜனாதிபதி அறிவித்த போது ஆளுந்தரப்பினர் மேசைகளில் தட்டி வரவேற்றனர்.

பாடசாலை மாணவர்களுக்கான நிவாரணங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவிக்கும் போது , 'கஷ்டப் பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் அலரி மாளிகைக்கு வரும் போது கிழிந்த பாதணிகளை அணிந்திருந்தனர். இதனைப் பார்த்த எனது மனம் சங்கடத்துக்குள்ளாகியது' என்றார்.

இதேவேளை, நாட்டில் சக்கரை உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக தென்னங்கன்றுகளை வழங்குவதாக குறிப்பிட்டார்.

இதன்போது எதிர்க்கட்சியினர் நகைச்சுவையாக ஏதோ கூறுவதற்கு முற்பட்டனர். இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, தென்னங்கன்றுகள் சக்கரை உற்பத்திக்கு மாத்திரமே தவிர உள்ளூர் பானங்களைத் தயாரிப்பதற்கல்ல என்றார்.

வரவு செலவுத் திட்ட உரையை அவதானிப்பதற்காக வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்கள் மற்றும் ராஜதந்திரிகள் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் சபாநாயகர் கலரியில் அமர்ந்திருந்தனர்.

அத்துடன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கோப்ரால், நிதி அமைச்சின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர உள்ளிட்ட அமைச்சின் செயலாளர்களும் அதிகாரிகளும் பிரசன்னமாகியிருந்தனர்.

இதேவேளை, புதிய சிஹல உறுமய கட்சியின் தலைவர் சரத் மனமேந்திரா, தேநீர் இடைவேளையின் பிறகு ஜனாதிபதியிடம் ஏதோ ஒரு ஆவணத்தைக் கொடுத்து கையொப்பம் பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/52322-2012-11-08-16-08-06.html

cartoon2(326).jpg

[size=5] [/size][size=5]ஒரே குப்பையை தான் கொட்டுகிறார் :wub:[/size]

ஒரு சீருடையை அன்று தோய்த்து போட்டு அடுத்த நாள் பாடசாலைக்கு வரும் எத்தனையோ மாணவர்களை நான் பாத்திருக்கின்றேன் சோ யாருக்கு வேணும் சீருடை என்ற கேள்விக்கு நிச்சியமாக வறிய மாணவர்களுக்கு வேண்டும் எல்லோருடைய சொந்தங்களும் வெளிநாட்டில் இல்லை

மற்றது மல்லை அண்ணா ஒன்ற புரிந்து கொள்ளவேண்டும் டட்லி போன்றவர்களின் காலத்தில் உள்நாட்டு யுத்தம் நடை பெறவில்லை மற்றது இலங்கை என்ற நாடு முப்பது வருட யுத்தம் நடை பெற்ற நாடு என்பதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்

இதில் எதற்கு மகிந்தாவை புகழ்கிறீர்கள். யாழ்ப்பாணத்தை சேர்க்க வேண்டாம் என்கிறீர்கள். சரி அரசு தானே சொல்கிறது தான் சிங்கள மக்களுக்கு மட்டும்தான் என்று. ஆனால் சிங்கள மக்களுக்கு மட்டும் என்று பார்த்தாலும் எதுவும் முன்னேற்றம் இல்லை. பின்னேற்றம் மட்டும் தான்.

நாங்களும் கிளிஞ்ச சேட்டுகளுடன் போய்த்தான் படித்தனாங்கள். வசதி உள்ள குடும்பங்கள் தான் எங்கள் காலத்தில் பாடப்புத்தகங்கள் வாங்கும். பாடப்புத்தகம் கூட இரவல் வாங்கித்தான் நாங்கள் படித்தநாங்கள். ஆனால் வகுப்பறை இருந்தது. வாத்தியார் வந்தார். படிபித்தார். சோதனை வைத்தார் சான்றிதள் தந்தார். இவையை நாங்கள் இரவல் வாங்கியிருந்திருக்க முடியாது. இவை அரசால் கட்டாயம் தந்திருக்க வேண்டியவை. இன்று வாத்திமார் பகிஸ்கரிப்பில், அல்லது தனிப்பட்ட தேவைகளில். இதன் பின் மாணவர்கள் சீருடை அணிந்து செல்வது என்ன பள்ளியில் புளுதி மண் விளையாடுவதற்கா? இவர்களின் கல்வியை ஏன் மற்றைய நாடுகள் அங்கீகரிக்க மறுக்கின்றன?

அவுசியில் தேர்தல் விவாதங்களை பார்ப்பவராயின் ஏன் அரசாங்கம் மக்களின் அடிப்படை அல்லாத தேவைகளை சேவைகளாக வழங்க முன் வரக்கூடாது என்று விவாதிப்பதை பார்த்திருப்பீர்கள். அமெரிக்காவில் மருத்துவம் கூட தனியார் துறை. அந்த பணத்தை மக்களுக்கு கொடுக்கலாம், அல்லது வரியாக அறவிடாமல் தவிர்க்கலாம் என்பதுதான் அவர்கள் சொல்வது. இலங்கையில் இந்த சீருடை தயாரிக்கும் கம்பனிகள் 25% ... 50% அரச பா.உ களுக்கு கொடுக்க வேண்டும். தொழில் துறை ரீதியில் தாயாரிக்கும் உடைகள் அவை. அரசாங்கம் வாங்கி பிள்ளைகளுக்கு கொடுக்கிறது. அந்த பணத்தை பிள்ளைகளிடம் கொடுத்தால் அவர்கள் சாதரண உடைகள் 4, 5 என்று வாங்கிப் போடமுடியும். பள்ளிச் சீருடக்கும் சாதாரண உடைக்கும் நியூயோரிக்கில் உள்ள வித்தியாசம்: சாதாரண உடை அணியும்அரச பாடசாலை பிள்ளைகள் "வால் மாட், கே மாட்டில்" 10$-15$ வாங்கிவிடுவார்கள். சீருடை அணியும் தனியார் பள்ளி பிள்ளைகள் 40$-50$ தான் வாங்குகிறார்கள். (நியூயோர்க்கில் அரச பள்ளிகள் சீருடையை சட்டமாக முடியாது. பள்ளிச் செலவை இப்படித்தான் குறைக்க வேண்டும்.)

பழைய 5.4 % வீதத்லிருந்து கல்வித்தொகை 4.7 % விதமாக குறைந்து விட்டது. முன்னர் எவ்வளவு கல்வியில் உடைகளுக்கு ஒதுக்க பட்டது; இன்று எவ்வளவு ஒதுக்கப்படுகிறது என்று கேட்டேன். நீங்கள் இன்னமும் பதில் தரவில்லை. ஆனால் மகிந்த அரசாங்கம் இதில் புகழப்பட வேண்டும் என்கிறீர்கள்.

சரி நாங்கள்கள் இது வரையும் கல்வி பட்ஜெட்டில் உடைகள் இருக்கவில்லை என்று வைத்து இந்த முறை கல்வியில் அது சேர்க்கபட்டிருக்கிறது என்றும் வைத்து அது 1% வீதம் என்று வைத்துக்கொள்ளுவோம். இப்போது சீருடை இல்லாத, நேரடி பாடப் புத்தகங்கள், கட்டங்கள், ஆசியர் சேவைக்கு 3.7% (4.7-1)வீதம் மட்டும்தான் ஒதுக்கப்படுகிறது. இந்த ஆடை இல்லாத சேவை 2007ல் 5.4% என்று விக்கிபீடியா சொல்கிறது. 5.4% வீதம் 3.7% வீதமாக குறைக்கப்பட்ட பெருமைதான் மகிந்தாவை சேர்கிறது. இதுதான் புகழ் என்று விளங்கப்படுத்துகிறீர்களா?

மற்றது மல்லை அண்ணா ஒன்ற புரிந்து கொள்ளவேண்டும் டட்லி போன்றவர்களின் காலத்தில் உள்நாட்டு யுத்தம் நடை பெறவில்லை மற்றது இலங்கை என்ற நாடு முப்பது வருட யுத்தம் நடை பெற்ற நாடு என்பதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்

நிறைத்தான் தமிழர் என்ற கொலைகாரக் கூட்டத்தால் அரசு 30 வடுடங்கள் கஸ்டப்பட்டுவிட்டது என்று பரிதாபப் படுகிறீர்கள். இருந்தாலும் அரசு போர் செலவை வெளிநாடுகளில் இருந்து பெற்ற போது அவர்களுக்கு கொடுத்த வாகுறுதி நிறையத்தான் இருக்கு. பட்ஜெட்டில் போர்க்கடன் அடைப்பு சம்பந்தமான பகுதியை பற்றியல்ல நாங்கள் விவாதிப்பது. கூடிக்கொண்டு போகும் பாதுகாப்பு செலவைப் பற்றித்தான். அதில் மகிந்தாவின் பெருமை மூன்று வருடங்களாக 50,000 வீட்டை இந்தியா இனாமாக கட்ட வந்த போது அதை தடுத்து விட்டு, படையினருக்கு வடக்கு, கிழக்கில் சீனாவிடமிருந்து கடன்பட்டு வீடு கட்டுவது. அரசின் எல்லா விடையங்களும் சரியான பரிதாபங்கள்தான் போலிருக்கு.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

தெற்காசிய நாடுகளில் பொதுவா இந்த கமிஷன் முறை எல்லா நாடுகளிலும் உண்டு இலங்கை மட்டும் அல்ல இந்தியாவில் கூட ஒரு சாலை போட காசு ஒதுக்கினால் அதில் அந்த பகுதி mla முதல் கவுன்சிலர் வரை லாபம் பார்ப்பது உண்டு...... அதிகருத்து வரும் பாதுகாப்பு செகவைத்தான் நானும் சுட்டிக்காட்டி அதை அபிவிருத்தி நோக்கி திருப்பலாம் என்று சொன்னேன் :D

  • கருத்துக்கள உறவுகள்
395200185963591972Nov-9-L.jpg

[size=4]இந்த சிரிப்பு சித்திரங்களை வரைபவர்கள் சிங்களவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது :D[/size]

  • கருத்துக்கள உறவுகள்

உலகிலே பல நாடுகள் கல்வியை வைத்து பணம் சம்பாதிக்கும் பொது இலங்கையில் ஆரம்பக்கல்வி முதல் உயர் கல்வி வரை இலவசம் தெற்காசிய நாடுகளின் சுகாதார சேவைகளை விட இலங்கையின் சுகாதரத்துறை பன்மடங்கு சிறந்தது என்பதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்

அவுஸின் சுகாதாரத் துறையை விட சிறந்தது எனக் கூறுவேன். வைத்தியம் மிக விலைகூடிய ஒன்று. இதற்கு அவுஸ் அரசாங்கம் Medicare என்று ஒரு விஷயம் வைத்திருந்தாலும், இலங்கை போல அது முற்றிலும் இலவசம் அல்ல. தனியார் மருத்துவக் காப்புறுதிகள் கூட பல விசயங்களுக்கு காசு தர மாட்டாங்கள். இதில் வருமானம் கூடியவர்களிடம் இருந்து Medicare levy surcharge எண்டு இன்னும் காசு வாங்குவாங்கள். அம்புலன்ஸ் கூட இலவசமில்லை. கல்வி, சுகாதாரத் துறைகளில் இலங்கை அவுஸை விட நல்லது. அனுபவ ரீதியான உண்மை.

தெற்காசிய நாடுகளில் பொதுவா இந்த கமிஷன் முறை எல்லா நாடுகளிலும் உண்டு இலங்கை மட்டும் அல்ல இந்தியாவில் கூட ஒரு சாலை போட காசு ஒதுக்கினால் அதில் அந்த பகுதி mla முதல் கவுன்சிலர் வரை லாபம் பார்ப்பது உண்டு...... அதிகருத்து வரும் பாதுகாப்பு செகவைத்தான் நானும் சுட்டிக்காட்டி அதை அபிவிருத்தி நோக்கி திருப்பலாம் என்று சொன்னேன் :D

இந்த கமிசன் முறை எங்கும் இருக்கலாம். ஆனால் இலங்கையில் இந்த கமிசன் முறை இருக்காதால்தான் 1956ல் முன்னேறிய நாடுகள் இலங்கைக்கு பணம் செலுத்த வேண்டியிருந்தது. உணவு கையிருப்பில் எப்போதும் அதிகளவில் இருந்ததால், இந்தியாவில் 1960களில் ஒருதடவை பஞ்சம் வந்த போது சிறிய இலங்கை கொழும்பு வந்த ஒரு கப்பல் அமெரிக்க கோதுமையை இந்தியாவுக்கு அனுப்பி வைத்து.

இது எங்கும் இருக்கலாம்; ஆனால் களுதை தேய்ந்து கட்டெறும்பானபின்னர், பார்த்தீர்களா களுதையாக இருந்த போது எப்படி சோம்பேறியாக இருந்தது இப்போது கட்டெறும்பான பின்னர் எவ்வளவு சுறு சுறுப்பாகிவிட்டது என்று புகழுமாப்போல் இருக்கிறது. தென்கொறியாவை விட 1956களில் மேலே யிருந்த நாடு மூன்றாம் தர நாடானபின்னரும் அந்த நிலைக்கு இட்டுசென்றவர்களை அந்த அழிவுக்கு அவர்கள் பெருமைப்படலாம் என்றல் இது என்ன ஆச்சரியமான கதை என்றுதான் எனக்கு விளங்கவில்லை.

இன்று இலங்கையில் இருப்பதை முதலில் விளங்க வேண்டும். எங்கும் கடன் இருப்பதாலோ அல்லது எங்கும் ஊழல் இருப்பதாலோ எடுத்த உடனே ஆனையும் பானையும் சரி என்று கூற முடியாது. இலங்கையை நடத்துபவர்களுக்கு உலகத்தில் என்ன மரியாதை இருக்கென்பதை தெரிய வேண்டும். எத்தனை நாடுகள் ஐநாவில் போர்குற்ற அறிக்கை நிலுவையில் கொண்டிருக்கின்றன?. மியன்மார், இராணுவ ஆட்சி நடக்கும் நாடு, அது கூட ஐ.நா அறிக்கை ஒன்றில் போர் குற்றம் சாட்டப்பட்டில்லை. அது தென்கிழக்காசிய நாடுகூட இல்லை. இலங்கையின் நிலையில் எந்த நாடும் இல்லை.

அப்போலோ ஆஸ்பத்திரியையே தன் கைக்கடக்கிய அரச அதிகாரிகள், இன்று அந்த வறிய நாட்டை அடித்து 7-10 பில்லியன் டொலர்கள் சொத்து வைத்திருப்பவர்கள் என்று சந்தேகிக்கப்படப்படுபவர்களை, ஒட்டு மொத்த திருடர்களை, சாதாரண கமிசன் ஊழல் அதிகாரிகள் என்று தட்டி கழித்து அவர்களை நியாயப்படுத்த ஒரு தேவையும் இல்லை.

உலகில் எல்லா நாடுகளிலும் அடிமைத்துவம் நீக்கப்பட்ட பின்னர் இன்னமும் மலையக தமிழர்களை அடிமைகளிலும் குறைவாக வைத்திருந்து கொண்டு அந்த வருமானதில் சிங்கள மக்களுக்கு இலவச கல்வி, இலவச மருத்துவம் கொடுப்பதாக நடிக்கும் இலங்கை, அந்த இனத்துவேசத்தில்தான் பெருமை கணமுடியும். அதே கல்வியை யையும் மருத்துவத்தையும், மலையக தோட்டத்தொழிலாளர்களும் கொடுத்தால் அந்த இலவசத்தின் பெயர் ஒரு நாளில் புஸ்வாணமாகிவிடும்.

இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னர் இன்னர் சிட்டி பிரஸ், அமெரிக்கா ஐ.நா கூறியிருந்த அறிக்கையைப்பற்றி பிரஸ்தாபித்திருந்தது. அதில் அது எத்திரியா, சிரியா, ஈரான், சீனா, ரஸ்சியா ,???, போன்ற மிகக் கடுமையான மனித சித்திரவதை நடக்கும் 6 நாடுகளில் இலங்கையை தவறவிட்டு விட்டுவிட்டதாக புள்ளி விபரங்களினுடன் கூறியிருந்தது. இதற்குதான் இலங்கை பெருமை அடையலாம். ஆனான் இந்த சிங்கள ஆட்சிகள் வராவிட்டல் இலங்கையின் பெரும் தென் கொறியாவை விட உலகில் முன்னேறிய நாடு என்பதாக இருந்திருக்கும்.

170,000 ஆமிகளை, அத்தாவது 3 தமிழருக்கு ஒரு ஆமி என்று வைத்திருக்க பணம் செலவிடும் இலங்கையை பார்த்து, சகஜமாக, பாதுகாப்பை குறைத்து கல்விக்கு செல்விடலாம் என்பதெல்லா எந்தவைகை பகிடி என்றுதான் எனக்கு விளங்கவில்லை. இந்த மனநிலைகளை பார்த்தால் கிட்லர், முலோலினி போன்றோர் தங்கள் இடங்களை அடைய எப்படி மக்கள் தோள் கொடுத்தார்கள் என்பது விளங்குகின்றது.

Edited by மல்லையூரான்

அவுஸின் சுகாதாரத் துறையை விட சிறந்தது எனக் கூறுவேன். வைத்தியம் மிக விலைகூடிய ஒன்று. இதற்கு அவுஸ் அரசாங்கம் Medicare என்று ஒரு விஷயம் வைத்திருந்தாலும், இலங்கை போல அது முற்றிலும் இலவசம் அல்ல. தனியார் மருத்துவக் காப்புறுதிகள் கூட பல விசயங்களுக்கு காசு தர மாட்டாங்கள். இதில் வருமானம் கூடியவர்களிடம் இருந்து Medicare levy surcharge எண்டு இன்னும் காசு வாங்குவாங்கள். அம்புலன்ஸ் கூட இலவசமில்லை. கல்வி, சுகாதாரத் துறைகளில் இலங்கை அவுஸை விட நல்லது. அனுபவ ரீதியான உண்மை.

[size=4]அவுசில் யாராவது மருத்துவ சேவை இன்றி இறப்பதுண்டா? [/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]அவுசில் யாராவது மருத்துவ சேவை இன்றி இறப்பதுண்டா? [/size]

waiting list இலுருக்கும் சிலர் இறந்திருக்கிறார்கள். சாகப் போறம் எண்டால் உடனே ஓடுப்பட்டுத் திரிவாங்கள். சாதாரண வருத்தங்களுக்கு டாக்குத்தரிட்டப் போவது செலவு கூடிய, நேர விரயமான விஷயம். இலவசம் இல்லை என்ற விதத்தில் தான் இலங்கையுடன் ஒப்பிடுகிறேன். இலங்கையில காச்சலோ, காயமோ மந்திகை ஆசுப்பத்திரிக்குப் போனால் கிடைக்கும் சேவை இங்கு இல்லை. Emergency , அதுவும் அம்புலன்சில் போனால் தான் உடனே பார்ப்பார்கள். எனது பொஸ் (வெள்ளை) அண்மையில் நெஞ்சுவலி என்று உடனேயே ஆஸ்பத்திரிக்கு ஓடினார். ஆளை டாக்டர் பார்க்க மூண்டு மணித்தியாலத்துக்கு மேல போச்சுதாம். அவரிடம் நல்ல தனியார் வைத்திய காப்புறுதியும் இருக்கு. இங்கத்தைய கல்வியும் இலங்கை அளவுக்கு இல்லை என்றே சொல்லுவேன். இரட்டைக் குடியுரிமை எடுத்த பின்னர் நல்ல வேலை கிடைத்தால் சிலவருடங்கள் இலங்கையிலே சீவிக்கும் எண்ணம் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடி போடு மச்சி சும்மா எதிர்க்கணும் என்ற்றதிர்க்காக எதிர்கிறது ஆனால் நடைமுறை வேறு

இன்று இங்கு எத்தனை இலங்கை தமிழ் வைத்தியர்கள் அங்கு படித்தவர்கள் மேல்படிப்பிற்காக இலங்கை அரசால் அனுப்பப்பட்டவர்கள் அப்பிடியே இங்கயே கடமையாற்றிகின்றார்கள் இலங்கை medicine க்கு அவளவு மதிப்பு இங்கு வந்து அவர்களின் சோதனை எடுத்து பாஸ் பண்ணா சரி

இங்கே Country side இல் எத்தனை தமிழ் மருத்துவர்கள் வேலை செய்கின்றர்கள் எல்லாம் இலங்கையில் medicine செய்தவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மற்றது எந்த நாட்டில் தான் பணிபகிஷ்கரிப்பு நடப்பதில்லை அது எல்லா நாட்டிலும் உள்ள ஓன்று தானே அரச ஊழியர்கள் சம்பள உயயர்வு வேலை உத்தரவாதம் மற்றும் இதர சலுகைகள் கோரி வேலைநிறுத்தம் செய்வார்கள் :D

  • கருத்துக்கள உறவுகள்

மற்றது மல்லை அண்ணா 1956 களோடு இன்றைய நிலையை ஒப்பிட்டு இருந்திர்கள் நேற்றைய பணக்காரன் இன்றைய ஏழை, இன்றைய பணக்காரன் நாளைய ஏழை இது கால ஓட்டத்தில் நடை பெரும் ஓன்று தானே முந்தி எல்லாம் Japan உலகின் பெரும் பொருளாதார சக்தியாக வளர்ந்து வளரசாக வரக்கூடிய சாத்தியம் அனால் இப்போ அதே இடத்தில் சீனாவை சொல்கின்றார்கள் நாளை அது கூட மாறலாம்

இங்கே இலங்கை அரசு செய்த மனித படுகொலைகளை மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்துவது எமது நோக்கம் அல்ல அதுக்காக எல்லாவற்றையும் எதிர்த்துக்கொண்டு இருக்க முடியாது என்பது தான் எனது வாதம் .......

இனி மகிந்த ஆட்சி தான் இலங்கையை பொறுத்தவரையில் மகிந்த பிறகு அவர் மகன் என்று தொடர போகின்றது சிங்களவர்கள் அவர்களுக்கு தான் தொடர்ந்தும் வாக்களிக்க போகின்றார்கள் இந்தியாவில் காந்தி குடும்பம் Pakistan இல் Bhutto குடும்பம் மாதிரி இலங்கை பொறுத்தவரை இனி இவர்கள் தான் கொஞ்ச நாளைக்கு

இலங்கையில் பலமானி எதிர்க்கட்சியோ இல்லை மக்களை கவரக்கூடிய வகையில் ஒரு எதிர் கட்சித் தலைவரோ இல்லை என்பது கசப்பான ஜதார்த்தம் :(

மற்றது மல்லை அண்ணா 1956 களோடு இன்றைய நிலையை ஒப்பிட்டு இருந்திர்கள் நேற்றைய பணக்காரன் இன்றைய ஏழை, இன்றைய பணக்காரன் நாளைய ஏழை இது கால ஓட்டத்தில் நடை பெரும் ஓன்று தானே முந்தி எல்லாம் Japan உலகின் பெரும் பொருளாதார சக்தியாக வளர்ந்து வளரசாக வரக்கூடிய சாத்தியம் அனால் இப்போ அதே இடத்தில் சீனாவை சொல்கின்றார்கள் நாளை அது கூட மாறலாம்.

பொருளாதார விஞ்ஞானம் என்பது கோயில் வாசப்படியில் இருந்து கொண்டு, உள்ளே பூசைக்கு சென்று பிரசாதம் பெற்றும் திரும்பி வருபவர்களிடம் அதை தண்டுவதற்கு, எதோ சும்மா ஒரு கதை சொல்லும் தண்டல் சாமிகள் சொல்லும் போடி போக்கு கதை அல்ல. அந்த விஞ்ஞானத்தை முன்னேற்ற நோபல் பரிசு வரையும் கொடுக்கிறார்கள். அது இன்றைய அணு விஞ்ஞானம், ராகெட் சயன்ஸ் எல்லாவற்றிலும் பார்க்க மிகுந்த சிக்கல் உள்ளதாக வளர்ந்து விட்டது. :rolleyes::icon_idea:

இன்னொருதடவை முற்றும் திறந்த முனிவர்களின் போதனையான "நேற்றைய பணக்காரன் இன்றைய ஏழை, இன்றைய பணக்காரன் நாளைய ஏழை இது கால ஓட்டத்தில் நடை பெரும் ஓன்று தானே" என்பதை வரசெலவு திட்ட விவாதத்தில் எழுதாதீர்கள். போடி போக்கா பேசும் கதை அது. இதை சொல்ல மகிந்தா தேவை இல்லை.

1956 இல் இருந்து இன்றைய நிலைக்கு இலங்கையை இட்டு சென்ற சிங்கள அரசியல் வாதிகளை "கிளிஞ்சாலும் பட்டு கெட்டலும் செட்டி." என்று நீங்கள் கூறிப்பெருமை படலாம். ஆனால் அவர்கள் பில்லியனர்காளாக வந்திருக்க கூடிய தமிழர்களை தொடர்ந்து கெடுக்கிறார்கள். அது தொடர்ந்து எதிர்க்கபட்டு நிறுத்தப்பட வேண்டும்

பொருளாதார, அரசியல் செய்திகள் வெளிவரும்பொது செய்திகளை முழுமையா கேட்டகாததால் வந்தது இந்த யப்பான், சீனா குழப்பம். யப்பானையும் சீனாவையும் எதில் எதில் ஒத்து காட்டி சொன்னார்கள் என்பதை தெளிவாக நேரம் போட்டு விளங்க முயன்றீர்கள் என்றால்த்தான் வரவுசெலவு திட்டத்தில் இருக்கும் சூட்சுமங்கள் தெரிய வரும். உண்மையில், இந்த சீனா, யப்பான் விடையத்தை பொருளாதார, அரசியல் செய்திகளை, திறந்த மனத்துடன் பார்த்து வந்திருந்தால் இது வரையில் விளங்கியிருக்கும். (இவற்றை பார்க்கும் போது முன் கூட்டிய, எதிர்ப்பதற்கு எதிர்க்காமாலிருக்க போன்ற முன் கூட்டியே முடிவுகளுடன் பார்க்க கூடாது. முழு மனத்துடன் பார்த்தால் மட்டும்தான் தாற்பரிய பேதங்கள் துல்ங்கும்). அப்படித்தான் கிட்டத்தட்ட எல்லோருமே இவற்றை விளங்கி கொள்கிறார்கள். இனிமேல் கவனமாக ஒத்து கேட்டால் யப்பானின் முன்னேற்ற வழிகளை சீனா இன்னும் 50 வருடங்களுக்கும் பிடிக்க மாட்டாது என்பது தெரியும். உண்மையில் நான் அறிய யாரும் இதை சொல்லி இல்லை. நீங்கள் படித்த அந்த செய்தியை சரியாக விளங்கி இருக்கிறீர்கள் என்றால் எனக்கும் ஒரு தவை இணைத்து விடுங்கள். (பிறந்த இடத்திலேயே இரண்டு மூன்று நாள் படுத்து கிடக்கும் யானைக்குட்டி, எழுந்து, எழிலிலும் நளினமும் கொண்ட புள்ளிமான் மாதிரி கவர்சியாக துள்ளித்துள்ளி ஒடுவதிலை. பிறந்த உடனேயே எழுந்து துள்ளியோடும் புள்ளிமான குட்டி விரைவாக வ்ளர்ந்து யானையாக வந்துமில்லை)

இங்கே இலங்கை அரசு செய்த மனித படுகொலைகளை மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்துவது எமது நோக்கம் அல்ல அதுக்காக எல்லாவற்றையும் எதிர்த்துக்கொண்டு இருக்க முடியாது என்பது தான் எனது வாதம் .......நீங்கள் சொல்வது தமிழரை காக்கும் அரசியல் செயல் முறை அல்ல. எல்லவாற்றையும் எதிர்ப்பதற்காக தமிழர்கள், சிங்களவர்கள் தங்களுக்குச் செய்யும் அநியாங்களை எதிர்க்கிறார்கள் என்பது உங்களின் முடிவு. இதற்காக நீங்கள் வரசு செலவு திட்டத்தை புகழ்கிறீர்களாயின் நான் உங்கள் பந்தியில் உங்களுடன் சேர்ந்து சாப்பிடக்கூடிய ரசனை வகைஆள் இல்லை. துணி, உடுப்பு என்பவற்றின் வியாபாரம் மெல்ல மெல்ல நாமலின் கைக்கு வந்து விட்டது. அவர் சிங்கள குடியேற்றங்களை நடத்த வன்னியில் உடுப்பு ஆலைகள் திறக்கிறார். இதற்காக போடும் வரவு செலவு திட்டத்தை, "பொருளாதார அரசியல் நியாயங்கள் என்னிடம் இல்லை ஆனால் நான் சும்மா ஆதரிக்கபோகிறேன்" என்று நீங்கள் கூறி ஆதரித்தால் அது தமிழருக்கு விடிவுதேடித்தரும் செயல்ப்பாட்டு திட்டம் அல்ல.

இனி மகிந்த ஆட்சி தான் இலங்கையை பொறுத்தவரையில் மகிந்த பிறகு அவர் மகன் என்று தொடர போகின்றது சிங்களவர்கள் அவர்களுக்கு தான் தொடர்ந்தும் வாக்களிக்க போகின்றார்கள் இந்தியாவில் காந்தி குடும்பம் Pakistan இல் Bhutto குடும்பம் மாதிரி இலங்கை பொறுத்தவரை இனி இவர்கள் தான் கொஞ்ச நாளைக்கு.

யாழில் விட்டு கொடுக்கத் தயாரில்லை என்று பந்தயம் கட்டி எழுதும் நீங்கள் இவ்வளவு எளிதில் மகிந்தாவிற்கு விட்டுக்கொடுத்துவிட வேண்டும் என்று அதே மாதிரியே பந்தயம் கட்டி நியாயம் காண முயல்வது ஏன் இப்படி செய்ய முன் வருகிறீகள் என பலவற்றை எண்ண தூண்டுகிறது.

இலங்கையில் பலமானி எதிர்க்கட்சியோ இல்லை மக்களை கவரக்கூடிய வகையில் ஒரு எதிர் கட்சித் தலைவரோ இல்லை என்பது கசப்பான ஜதார்த்தம் :(

சிங்கள மக்களுக்கு எதிர்க்கட்சி இல்லை என்பது உங்களின் கவலை.

எதிர்க்கட்சிகளை அழிப்பது இலங்கையின் அரசியல் சரித்திரம். பண்டாரநாயக்கா, டட்லி, சிறிமா, JR, ரணில் வரைக்கும் அரசியலில் முன்னே வர முயன்றவர்களால் அழிக்கபட்ட தலைவர்களே. எதிர்க்கட்சி மீதி நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்து நிறைவேற்றி கோமாளிக்கூத்தாடிய பெருமை உலகிலேயே சிங்கள அரசியல்வாதிகளுக்கு மட்டும்தான் உண்டு.

இந்த கலாச்சாரத்தை தொடர, திட்டமிட்டு, இலங்கை அரசு எதிர்க்கட்சிகளின் வாய்களை மூட வைக்கிறது. எதிர்க்கட்சிகளை இலங்கை அழிக்கும் போது எல்லாவற்றையும் எதிர்க்க கூடாது என்று கூறி அரசை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளை எதிர்த்துவிட்டு எதிர்க்கட்சிகள் போய்ச் சேர்ந்த் பின்னர் கவலைப்பட்டு என்ன பயன்?

அப்படி எதிர்க்கட்சிகளை எதிர்ப்புகள் இன்றி வாய் மூடி வைக்க பட்ட பின்னர் எதிர்க்கட்சியினரை "பாருங்கள் நீங்கள் பலமில்லாதவர்கள்" என்று எள்ளி நகையாடுவது அரசின் செயல். சிங்கள எதிர்க்கட்சிகளின் வாயை மூடுவதிலோ அல்லது அதன் பின்னர் அவர்களை எள்ளி நகையாடுவதிலோ தமிழருக்கு பங்கில்லை.

எல்லாவற்றையும் எதிர்க்காமல் விட்டு விடவேண்டும் என்பதை எதிர்க்கட்சிகளில் பலர் தங்களின் கொள்கையாக வைத்துக்கொள்ளாம். பின்னர் தங்களைத் தாங்கள் உரமான எதிர்க்கட்சிகளாக மாற்ற முடியவில்லை என்று குழம்பலாம்.

ஆனால் அதை எப்படி எமக்கு சாதகமாகி சர்வத தேசத்தில் பிரசாரம் செய்யலாம் என்பது எம் கவலை. அது நமது பிரசார ஆயுதம். எங்களுக்கு எதிராக இலங்கை அரசு தாயாரிக்கும் பாதுகாப்பு பட்ஜெட்டை உலகிற்கிற்கு விளங்க வைக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனதும் கடமை.

1.ராஜபக்சாவை இனி எதிர்க்க முடியாது, எனவே அவருக்கு பணிந்து போ, என்பது ஒரு விவாதம் அல்ல. அதை எற்காதவர்கள் போராட்டங்களை தொடர்வார்கள்.

2.சர்வதேசத்திற்கு விளங்க வைக்க கூடியதான இந்த போர் முன்னெடுப்பு பட்ஜெட்டில். நல்ல அமசங்கள் இருபதாக மயங்கி அதை எதிர்க்க கூடாது என்று சர்வதேசத்தை குழப்புவது ஒரு உபயோகமான விவாதமல்ல.

அப்பிடி போடு மச்சி சும்மா எதிர்க்கணும் என்ற்றதிர்க்காக எதிர்கிறது ஆனால் நடைமுறை வேறு

இன்று இங்கு எத்தனை இலங்கை தமிழ் வைத்தியர்கள் அங்கு படித்தவர்கள் மேல்படிப்பிற்காக இலங்கை அரசால் அனுப்பப்பட்டவர்கள் அப்பிடியே இங்கயே கடமையாற்றிகின்றார்கள் இலங்கை medicine க்கு அவளவு மதிப்பு இங்கு வந்து அவர்களின் சோதனை எடுத்து பாஸ் பண்ணா சரி

இங்கே Country side இல் எத்தனை தமிழ் மருத்துவர்கள் வேலை செய்கின்றர்கள் எல்லாம் இலங்கையில் medicine செய்தவர்கள்

மச்சி அப்பிடியும் போடல்லாம். வேறும் ஒருவிதமாயும் போடலாம். ஆனால் அவுசிப் பூமறாங்காலை போடேக்கெக்கை மட்டும் எப்பிடி போடுறியள் என்றதை ஒரு செக்கன் பார்த்து விட்டு போடுங்கோ. உங்களின்ரை தலையிலை அது வந்து திருப்பி திருப்பி அடிச்சாலும் தலையை தடவி போட்டு இன்னுமொருக்கால் அதே பூமறாங்காளை போடுறியள். :lol: :lol: :lol:

இந்த ஆச்சரியமான தத்துவ விசாரணையை பாருங்கள்.

இலங்கையில், அவுசை விட நல்ல சுகாதரசேவை இருக்கு. ஆனல் அந்த நல்ல, விஞ்ஞான நிலை உயர்ந்த மருத்துவத்தை எங்கே படித்து வரும்படி மருத்துவர்களை இலங்கை அரசு அனுப்பி வைக்கிறதென்றால் அது அவுசுக்குதான். அந்த அவுசுக்கு யாரை அனுப்பலாம் என்றால் இலங்கையில் நல்ல புள்ளிகள் பெற்றவர்களைத்தான். அங்கே மிஞ்சி இருப்பவர்கள் மருத்துவம் தெரியாதவர்கள்( அல்லது அத்தோடு அரசியல்வாதிகளை பந்தம் பிடித்து முன்னு வரத்தெரிந்தவர்கள்). அதன் பின்னர் அவுசுக்கு வந்து படித்துவிட்டு வீசாவை ரத்து செய்து தங்கத்தக்கவர் இன்னும் ஒரு படி மேலே உள்ளவர்கள். ஏதோ மந்திரிகளுக்கு பந்தம் பிடித்து புலமை பரிசில் பெற்றுவந்து பலகலைகழகங்களில் மட்டை அடிப்பவர்கள் நேரம் வர வீடு திரும்பி போய்விடுவார்கள். இதில் ஆச்சரியம் என்ன என்றால், எப்படி இலங்கை மருத்துவர்களுக்கு விஞ்ஞான அறிவு கூடிய நல்ல மருத்துவத்தை படிப்பித்து அதை இலங்கைக்கு அனுப்பி அங்கே அதை ஒளிரச் செய்யும் இந்த அவுசின் விஞ்ஞானிகள் தர மருத்துவர்கள் அதை ஏன் அவுசில் ஒளிரவைக்க கூடாது என்று சிந்திக்காமல் இருக்கிறார்கள் எனபதை நமது மக்கள் சிந்திக்க மறுப்பதுதான்.

நான் அறிய அவுசில் மருத்துவம் தொடங்கிய ஒருவர் தன்னும் இலங்கை படிப்போடு நேராதகத்தொடங்கவில்லை. AMC s சோதனை எடுத்து அதன் பின்னர் அவுஸ்திரேலிய பயிற்சி படிப்பு முடித்து மட்டும்தான் தொழில் எடுக்கிறார்கள். இலங்கையின் பயிற்சி படிப்பு(residency) எந்த மேலை நாட்டிலும் ஏற்கப்படவில்லை. அப்படி இருந்தால் விபரத்தை தரவும்.

(மேலும் AMC சோதனை எடுக்க இப்போது அவிசி தமிழ் மருத்துவர்கள் Jaffna Style Tutories வைத்திருக்கிறார்கள் என்றும் கேள்வி. தேவைப்பட்டல் விசாரித்து விபரங்கள் எடுத்துதர முடியும்)

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் மீண்டும் சர்வதேசத்தையும் ஐக்கிய நாடுகள் சபையையும் தமிழர்களை நம்ப சொல்லுவது தமிழர்களே தமிழர்களை முட்டாளாக்கும் ஒரு ஆலோசனை.......

  • கருத்துக்கள உறவுகள்

அறுபது ஆயிரம் மக்கள் கொல்லப்பட்ட பொழுது இரவும் பகலும் தெருக்களில் நின்று கத்திய தமிழனின் குரலே கேட்கவில்லையாம் ஒரு அவலமே நடந்த பொழுது அடங்கி இருந்த அனைத்துலக சமுதாயாத்தை வரவு செலவு திட்டத்தில பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருக்கு என்று சொன்ன கேட்பார்களாம் என்ன வேடிக்கையான கருத்து......

அனைத்துலக வங்கி கேட்டகவில்லை

சர்வதேச நானைய நிதியம் கேட்கவில்லை

வெளிப்படையாக பாராளுமன்றில் பாதுகாபிர்க்கு இவளவு நிதி என்று அறிவிக்கும் போது யாருமே கேட்க முடியாது என்ற தைரியத்தில் தான் அறிவித்துருகின்றார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியே கேட்டாலும் சொல்லுவார்கள் முப்பது வருடங்கள் நாங்கள் யுத்தத்தால் பாதிகப்படிருந்தோம் இப்போது இனிமேலும் அப்பிடி ஓன்று நடக்காமல் எமது பாதுகாப்பை பலப்படுதுகின்றோம் என்று இப்ப எந்த நாட்டால கேக்க முடியும்? :D

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் இருந்து கூடத்தான் மதுத்துவம் படிப்பவர்கள் இங்கு வந்து பயிற்சி எடுகின்றார்கள் அதற்காக அமெரிக்கா மருத்துவம் சரி இல்லை என்று சொல்ல முடியுமா? மருத்துவ வசதிகள் நடைமுறைகள் பயிற்சிகள் என்று ஒவொரு நாடுகளுக்குளும் இருக்கும் நடை முறை இது இங்கு வந்தவர்கள் வசதிகளுக்காக இங்கயே தங்கி விடுவதற்கு இலங்கை என்ன பண்ண முடியும்?

மற்றும் இங்கு தமிழ் மருத்துவர்களிடம் போனிங்க என்றால் அவர்கள் அறையில் இலங்கையில் பல்கலை கழகத்தில் பெற்ற அந்த certificates கொழுவி வைத்திருகின்றார்கள் நீங்கள் குப்பை என்று சொல்லுகின்ற ஒரு பொருளை என் அவர்கள் வைத்திருக்க வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்

அதே போல் இந்த யாழ் களத்தில் கூட இலங்கையின் இலவசக்கல்வியை பெற்றவர்கள் எல்லாம் வெளிநாடுகளில் சிறந்த உத்தியோகத்தில் இருப்பத்தை உங்களால் மறுக்க முடியுமா?:D

அப்படியே நமோ நமோ தாயே என்ற பாடலையும் பாடினால் ....................எல்லாம் நிறைவேறிற்று . :D :D

அறுபது ஆயிரம் மக்கள் கொல்லப்பட்ட பொழுது இரவும் பகலும் தெருக்களில் நின்று கத்திய தமிழனின் குரலே கேட்கவில்லையாம் ஒரு அவலமே நடந்த பொழுது அடங்கி இருந்த அனைத்துலக சமுதாயாத்தை வரவு செலவு திட்டத்தில பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருக்கு என்று சொன்ன கேட்பார்களாம் என்ன வேடிக்கையான கருத்து......

அனைத்துலக வங்கி கேட்டகவில்லை

சர்வதேச நானைய நிதியம் கேட்கவில்லை

வெளிப்படையாக பாராளுமன்றில் பாதுகாபிர்க்கு இவளவு நிதி என்று அறிவிக்கும் போது யாருமே கேட்க முடியாது என்ற தைரியத்தில் தான் அறிவித்துருகின்றார்கள்

சகோதரமாக சேர்ந்து பிறந்து வளர்ந்து, ஆண்டாண்டாக நம்பி ஒன்றாக உறவாடியவர்களை நம்பிக்கை துரோகமாக 60,000 பேரை கொண்டவர்களிடம் திரும்ப திரும்ப போக சொல்லுகிறார்கள். அதை தெருவில் போனவர்களிடம் முறையிட்ட போது ஒரு சொல்லில் வந்து செய்து தரவில்லை என்பதால் இன்னொருமுறை சொல்ல கூடாது என்று வாதாடுகிறார்கள்.

மீண்டும் மீண்டும் சர்வதேசத்தையும் ஐக்கிய நாடுகள் சபையையும் தமிழர்களை நம்ப சொல்லுவது தமிழர்களே தமிழர்களை முட்டாளாக்கும் ஒரு ஆலோசனை.......

இது "மீண்டும்" அல்ல. இது தொடந்த செய்ல முறை. நாம் இப்போது சொல்வது "விளங்காததை விளங்குவதாக காட்ட வெண்ணை திரண்டுவரும் போது தாழியை உடத்து காட்டுவது செய்லபாடல்ல. அழிவுதொழில்." என்பதாகும்

அதே போல் இந்த யாழ் களத்தில் கூட இலங்கையின் இலவசக்கல்வியை பெற்றவர்கள் எல்லாம் வெளிநாடுகளில் சிறந்த உத்தியோகத்தில் இருப்பத்தை உங்களால் மறுக்க முடியுமா? :D

[size=1]

[size=4]சிறந்த உத்தியோகம்? நன்றாக உழைத்து கொடுக்கின்றார்கள் ![/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.