Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்டுவின் பார்த்தது,கேட்டது,ரசித்தது,வாசித்தது......

Featured Replies

197215_511229952234671_1334640757_n.jpg

சொல்வதற்கும் சொல்லப்படுவதட்கும் என்னிடம் எதுவும் இல்லை ..

இருப்பினும் நேரத்தின் வேகம் கூடிக்கொண்டே போகின்றது ....

நாளை பொழுது புலரும் போது....

கண்டுகொள்ளவே முடியாத பேரமைதியில்

என் ஆன்மா அமைதியுறக்கூடும்.......!

அதன் பிறகு பேசப்படுவதற்கான வார்த்தைகளை காற்றில் கலந்துவிடு .....

காலம் என்னிடம் சேர்த்துவிடும் .......!

305529_511229615568038_230600208_n.jpg

அழுகை

வந்தால்.......

அழகாய் அழு.........

காற்றில் கலந்து........

கண்ணீர் காற்றாய் மாறி.....

சுவாசம்... அவன் சுவாசத்தில்...

கலந்திடும் உன் கண்ணீர்..............

68419_510835058940827_2082196758_n.jpg

305590_510736495617350_1937548476_n.jpg

579006_510731065617893_845701279_n.jpg

65369_510309048993428_137442279_n.jpg

ஆயிரம் நிலவுகள்

வாழ்வில்

வந்து மறைந்தாலும்

ஒற்றை சூரியனாய்

என்று பிரசாகம் வீசம்

அம்மா உன் அன்பு ..........

522188_510307508993582_1590876986_n.jpg

நினைவுகள் எப்போதும்

மரிப்பதில்லை - அது

இதயங்களோடு

வாழும் பொக்கிஷம்

தொலைவுகள் அதிகரிக்க

அதன் மறுதாக்கம்

நினைவுகளின் திசைகாட்டி

உயிரானவர்களை என்றும்

நினைப்பதில்லை

ஏனெனில்

அவர்களே

எண்ணமாய் இருப்பதால்....

554221_510075612350105_998849295_n.jpg

Edited by வண்டுமுருகன்

  • தொடங்கியவர்

544929_510068215684178_947184266_n.jpg

வாழ்கையில் பல பேர்

நம்மை கவிழ்த்து விட்டும் வேடிக்கை பார்ப்பார்கள்...

நாமாக கவிழ்ந்து விட்டாலும் வேடிக்கை பார்ப்பார்கள்.

"அனுதாபம்" என்ற பெயரில்

ஆர்வத்துடன் வேடிக்கை பார்ப்பார்கள்....

அடுத்தவர் கவலையில் எல்லையற்ற ஆனந்தம்...

இது தான் உலகம்.....

394085_509894175701582_1118747961_n.jpg

599729_509397159084617_476859575_n.jpg

கிரேக்கர்கள் உலகத்தின் மையம் என நம்பிய அப்போலோ கோவிலின் நுழைவாயிலில் எழுதப்பட்டிருந்த வாசகம் 'உன்னை அறி'. தன்னையறிதலுக்கு அவர்கள் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்ததில் வியப்பேதுமில்லை. #தன்னையறிதல்

"தன்னை அறிந்திடில் தனக்கொரு கேடில்லை

தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்

தன்னை அறியும் அறிவை அறிந்த பின்

தன்னை அர்ச்சிக்க தான் இருந்தானே

317162_508503739173959_460487858_n.jpg

603942_508494785841521_153420354_n.jpg

292871_508308252526841_1035539972_n.jpg

  • தொடங்கியவர்

534750_508301502527516_49212988_n.jpg

522808_506760429348290_1131907391_n.jpg

சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..!

"ஆற்றுநீர் வாதம் போக்கும்

அருவிநீர் பித்தம் போக்கும்

சோற்றுநீர் இரண்டையும் போக்கும்"

கிராம மக்களின் தினசரி உணவாகவும், காலைநேர பானமாகவும் தொன்று தொட்டு காலை பழக்கத்தில் இன்றுவரை தொடரும் அன்றாட ஆரோக்கிய பானம் நீராகாரம். முதல்நாள் இரவில் 2 பிடி சோற்றினை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 குவளை சுத்தமான தண்­ணீர் விட்டு மூடி வைக்க வேண்டும். காலையில் எழுந்ததும் அதில் தேவையான அளவு கல்லுப்பு சேர்த்து சிறிய வெங்காயம் 3 நறுக்கிப் போட்டுக் கரைத்து அப்போதே சாப்பிட வேண்டும். உச்சிப் பொழுதில் பச்சைநிற வயல் வெளியில் புங்கமர நிழலில் இதே நீராகாரத்தை மாங்காய் ஊறுகாயுடன் அல்லது பூண்டு + வெங்காயம் சேர்ந்த வத்தக்குழம்புடன் தொட்டுத் தொட்டு சுவைத்துப் பருகினால் ஆஹா...! எழுதும்போதே நாவில் உமிழ்நீர் அருவியாக சுரக்கின்றதே....

இப்படி கோடைக்காலம் முழுதும் தினசரி ஒரு வேளையாவது சோற்றுநீரை (நீராகாரத்தை) 2 குவளை பருகினால் என்ன நிகழும்? ஒரு பழமொழி பதில் சொல்கிறது.

ஆற்றுநீர் வாதம் போக்கும்

அருவிநீர் பித்தம் போக்கும்

சோற்றுநீர் இரண்டையும் போக்கும்

ஆமாங்க! ஆறும், அருவியும் இல்லாத ஊரில் உள்ள மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்ததுதான் சோற்றுநீர். இதனால் வாத நோய்களான பக்கவாதம் கைகால் அசதி, முடக்குவாதம் மற்றும் பித்த நோய்களான வயிற்றுப்புண், இரத்த மூலம், சரும நோய்கள் வராது தடுக்கும். அத்துடன் கோடைக்கால பாதிப்புகளான வயிற்றுவலி, சருமத்தில் தோன்றும் வேனல் கட்டி, வேர்க்குரு, தேக அனல் ஆகியன வராது காக்கும். சோற்றுநீர் அருமையை உணர்ந்த மேல்நாட்டு விஞ்ஞானி ஒருவர் அதனை சோதனைச் சாலையில் ஆராய்ந்து பிஎச்.டி. பட்டம் பெற்றுள்ளார் என்பது சோற்றுநீரின் அருமைக்குக் கிடைத்த அண்மைக்கால பெருமை!

  • தொடங்கியவர்

404730_506298906061109_631382666_n.jpg

29411_506055559418777_1585143810_n.jpg

இளமையில்

அனைவரையும், அனைத்தையும் நம்பி

ஏமாற்றம் அடைந்த பின்......

உண்மையை,

உண்மை என்று நம்பும் சூழலிலும்

நிதானிக்கும் முதுமை.....

10458_500954383262228_1839013385_n.jpg

வாழ்க்கை என்பது

என்னவென்று தெரியாத வரை...

வாழ்க்கை சந்தோசமாக செல்கிறது....

வாழ்க்கை என்பது இது தான்

என்று புரியும் போது....

வாழ்வின் கஷ்டம் புரிகிறது......

தமிழ்மரம்.

ஆணிவேரையே கறையான்

அரித்துத் தின்றது தெரியாமல்-வெறும்

நுனியில் மட்டும்

பூப்பூக்க நினைக்கிறது கிளை.....

  • கருத்துக்கள உறவுகள்

10458_500954383262228_1839013385_n.jpg

வாழ்க்கை என்பது

என்னவென்று தெரியாத வரை...

வாழ்க்கை சந்தோசமாக செல்கிறது....

வாழ்க்கை என்பது இது தான்

என்று புரியும் போது....

வாழ்வின் கஷ்டம் புரிகிறது......

"வண்டுவின்.. பார்த்தது, கேட்டது, ரசித்தது..." வாசித்ததில், மிகவும் பிடித்தது மேலேயுள்ளது.

  • தொடங்கியவர்

இதைவிட சிறந்தகவிதை எழுதமுடியுமா?

552168_372985259451344_271339862_n.jpg

  • தொடங்கியவர்

Even a dog can feel it , when it left alone . . ! !

486651_348424868581607_1212523285_n.jpg

"வண்டுவின்.. பார்த்தது, கேட்டது, ரசித்தது..." வாசித்ததில், மிகவும் பிடித்தது மேலேயுள்ளது.

நன்றி சிறியர்

Edited by வண்டுமுருகன்

  • கருத்துக்கள உறவுகள்

வண்டு வில் பிடித்தது

534750_508301502527516_49212988_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

317162_508503739173959_460487858_n.jpg

"வண்டுவின்.. பார்த்தது, கேட்டது, ரசித்தது..." வாசித்ததில், மிகவும் பிடித்தது மேலேயுள்ளது.

காரணம்

அந்த உரம்

எமக்கும் வேண்டும்.

தொடருங்கள்........

  • கருத்துக்கள உறவுகள்

வண்டு முருகன் அழகான கோலங்கள். நன்றாக இருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

வண்டு மிகவும் நல்லதொரு தொகுப்பு..தொடர்ந்து செய்யுங்கள்..நீங்கள் எழுதிப் பதியும் எழுத்துகளில் அரைகுறை தமிழில் எழுதாமல் சுத்தமாக எழுதினால் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து..உதாரணத்திற்கு ......மாறும் என்பதற்கு பதிலாக மாரும்,நடபேனே என்று நிறைய,நிறைய சொற்பிழைகள் விட்டால் புரிந்து கொள்வது கடினம் இல்லையா...இனிவரும் காலங்களிலாவது தமிழை சரியாக எழுதுவீர்கள் என்று நம்பிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐஃபோனில் எழுதும்போது எழுத்துப்பிழையைக் கண்டறிவது கடினம்.. :D

  • தொடங்கியவர்

நன்றி கறுப்பி,விசுகு,வல்வைசகாறா,யாயினி,இசை

426196_506056342752032_1687314124_n.jpg

நீ ஒரு நேர்மையான மனிதனென்றால்...

நீ முன்னேற....

உனக்கு உதவக்கூடிய ஒரே நண்பன்

உனது தன்னபிக்கையும், தைரியமும் மட்டுமே.

72175_511995748824758_127742082_n.jpg

உங்களின் உண்மையான முகம்

உங்களின் எண்ணங்களுக்கு பின்னால் தான் உள்ளது.

♥♥♥♥♥♥♥

Cute style of Proposing !!!

.

Boy: can i take a Photo ?

.

Girl: why?

.

.

.

.

.

.

Boy: just wanted 2 show my Children

how their Mom looked when she

was younger :P♥

68380_505936442764022_644686274_n.jpg

549151_504204712937195_1299076188_n.jpg

267674_503709162986750_318618965_n.jpg

554029_498953766795623_1379905213_n.jpg

320381_498617313495935_1124542802_n.jpg

காதல், நெருக்கம் ஏற்பட வேண்டுமென்றால்...

ஒருவருக்கு அதற்கேற்ற

மன முதிர்ச்சியும், நேர்மையும் வேண்டும்....

அப்போது தான் காதல் அழகுடன் மிளிரும்...

அதில் நீங்கள் உயர்வீர்கள்.....

இல்லையெனில், காதல் உங்களை முடக்கி

முழுவதும் நாசமாக்கிவிடும்........

Edited by வண்டுமுருகன்

  • தொடங்கியவர்

அந்நிய மண்ணில்..!

317630_494776677213332_1899528938_n.jpg

ஏரிக் கரையுலவும் இங்கிலீசுக் காற்றினிலே

ஏபீசீப் பாட்டுக் கேட்குது

வேரில் நிமிர்ந்தமரம் வெள்ளை நிறப் பஞ்சுகளை

வீசிவருங் காற்றில் தள்ளுது

மாரிமழை உறைந்து மல்லிகைப்பூ போற்பனியை

மண்,மரத்தில் கொட்டக்காணுது

வாரி இறைத்தபனி வந்ததோ பாலாறு வென

வழிமுழுதும் வெண்மை கொள்ளுது

நீரில்மிதந்த கயல் நீலவிழி போற்துடித்து

நீந்தும் பனிக் குள்நடுங்குது

சேரில் சிறந்ததெனச் சின்னஞ்சிறு புள்ளினங்கள்

செல்லமாகக் கொஞ்சிப்பேசுது

ஊரிமணற் கரையில் ஓங்கியெழும் ஆழியலை

ஓவென் றெழுந் துள்ளிவீழுது

பாரில் வளங்கொழித்த பாடெனவே வாழ்விருந்தும்

பறிகொடுத்த துயரெடுக்குது

ஊரில்சிரிக்கும் நிலா ஓடும்முகில் பின்னிருந்தே

எட்டிப்பார்த்து நாணங் கொண்டது

நேரில்தெரியுதொன்று நின்றவளின் தங்கையிதோ

நாணம்விட்டு வானில்காயுது

மேரி, சோ சாரி யென மாரிகால ஈசல்களாய்

மனிதஇனம் முணுமுணுக்குது

தூரில்ஒர் பாம்பிருந்து சீறியதாய் செல்லுமிடம்

தஸ்ப்புஷ் சென்ற பேச்சுகேட்குது

வாரியடித்த கொடும் வெய்யில் பட்ட தால்வயலில்

வைக்கோல் சுட்டுப் பியர்மணக்குது

கூரில் உயர்ந்த பெருஞ் சிலுவையினை சுமந்ததிருக்

கோவில்மணிஒசை கேட்குது

தேரின் அசைவுமிலைத் தென்றலிலைத் திங்களிலைத்

தேவதைகள் ஆடிச் செல்லுது

ஊரின் வயற்கரையில் ஓடிநடை கொண்டவளை

உள்ளமெண்ணி ஒத்துப்பார்க்குது

தோலைஉரித்ததெனத் தோன்றுவரின் முன்னிலையில்

தேகம்சற்றுக் கூனிநிற்குது

ஆலை பெருந்தோட்ட வேலைஉழைத் துண்டிருந்தும்

அவமான உணர்வெடுக்குது

சாலை தெருக்களிலும் பந்தடிக்கும்,பிள்ளைகளும்

சரளமாயிங் லீசுபேசுது

நாலை நடந்துமிந்த நானிலத்தில் கற்றுவந்தும்

நாமொழியைக் விட்டுத்தள்ளுது

காலை விடிந்தவுடன் கண்நிறைந்த கதிரெழுந்தும்

காணுமிந்த வாழ்விருண்டது

சோலைமலர் பொலிந்தும் சுந்தரமென் வாசமில்லை

செண்டின் மணம் முந்தி வீசுது

காலை மிதித்து நடை ,கன்னித்தமிழ் சொல்லுரைத்துக்

கர்வத்தோடு நின்றமண்ணது

மூலை மடங்கியொரு மூச்சுவிட இன்னலுற்றே

மேதினியில் வாழும்வாழ்விது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

267674_503709162986750_318618965_n.jpg

இனியாவது திருந்துங்கோ தம்பிமாரே!

  • தொடங்கியவர்

வாடகை தேசம்...

375901_498959326795067_2135803099_n.jpg

உண்மைதான்...இது என் தேசமல்ல.

வரவேற்பில்லாத

விருந்தாளியாக நான் இங்கு.

ஆறாயிரம் மொழிகளுக்குள்

ஆறே மொழியாம் ஆதி மொழி.

அதில் தமிழும் ஒன்றாம்.

புரியாத பெருமிதம்.

அந்தத் தமிழ் சீர்குலைந்து

எச்சில் இலையாய் கிடக்கிறது உலகம் எங்கும்.

உச்சரிக்கும் வேற்றுமொழி

வயிற்றுப் பிழைப்புக்காக மட்டுமே.

பிச்சைக்காரராய்...

தீண்டத்தகாத நச்சுப் புளுவாய்

அருவருப்பாய் பார்க்கின்றான் வெள்ளையன்.

ஏன் வந்தோம்...எதற்கு வந்தோம்

எங்கள் மொழியறிவு,பண்பாட்டின் வழியறிவு

பாரம்பரியத்தின் பகுத்தறிவு

அறிவானா அவன்.

என் ஊரில் பனையும்,தென்னையும்

முற்றத்துக் கோலத்தோடு...ஓலைக் குடிசையும்

முந்தலில் மல்லிகைப் பந்தலின் அழகையும்

அறிவானா அவன்.

கொல்லைப் புறத்தில் அழகாய் கிணற்றடி.

அதைச்சுற்றி மா,பலா,வாழை.

கிடுகு வேலிக்குள் எங்கள் உலகமே தனி.

ஆறடிக்குள் வாழபவன் அவன்.

நாளைய வாழ்வை நாளைக்கேதான் தேடுபவன்.

நெஞ்சில் பாசம் சுமந்தால்

பாரம் என்று

பாசம் நாக்கில் சுமப்பவன் அவன்.

என் ஊர் அழகு...என்வீடு அழகு...

என் கோவில் அழகு...என் மாடுகள் அழகு...

என் தெரு அழகு...என் பூக்கள் அழகு...

என் குழந்தை அழகு...என் தாய் அழகு...

என் தாய் தேசம் மட்டுமே அழகு...

இங்கு எது...என்ன...அழகு.

நாய் தின்னாப்

பணத்தைத் தவிர.

ம்ம்ம்...போடா...போ !!!

  • தொடங்கியவர்

150261_512762455414754_970666874_n.jpg

ஒரு விளக்கிலிருந்து

மற்றொரு விளக்கை ஏற்றுவதன் மூலம்

எதையும் இழந்து விடப்போவதில்லை...

மாறாக ஒளி பல மடங்காகும்...

நாம் வரும் போதும் எதையும் எடுத்து வரவில்லை..

போகும் போதும் எதையும் செல்ல முடிவதில்லை...

ஆகையால்.....

நம்மால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவுவோம்..

அதனால் இழப்பு என்பது நமக்கு எதுவுமில்லை......

378512_512593248765008_2082762960_n.jpg

604033_512875395403460_1027364856_n.jpg

Edited by வண்டுமுருகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.