Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கோப்பை கால்பந்து 2006

Featured Replies

இது நான் எழுதினது எல்லோ எனக்கு அதை திருப்பி சொல்றீங்களா ப்ரியசகி :roll:

இங்கிலாந்து தோற்றவுடன இளக்காரமா போயிட்டுது போல :cry:

அடடா மதண் நீங்களும் அழுகுறீங்களா? சரி சரி அழாதீங்க .... பிரேசில் தான் கப் கொண்டு போகும் எண்டு தெரியும் தானே(ஆகா இங்கால டொச்லாந்த் காரகள் நிக்கினம் நான் எஸ்கேப்.....!) இருந்தாலும் ஒரு ஆசை நாம இருக்குற நாடு இந்த முறை விளையாண்டு வெற்றி பெறாதா எண்டு ... சரி சரி அழாதீங்க.... :(:D

  • Replies 618
  • Views 55.3k
  • Created
  • Last Reply

அடடா மதண் நீங்களும் அழுகுறீங்களா? சரி சரி அழாதீங்க .... பிரேசில் தான் கப் கொண்டு போகும் எண்டு தெரியும் தானே(ஆகா இங்கால டொச்லாந்த் காரகள் நிக்கினம் நான் எஸ்கேப்.....!) இருந்தாலும் ஒரு ஆசை நாம இருக்குற நாடு இந்த முறை விளையாண்டு வெற்றி பெறாதா எண்டு ... சரி சரி அழாதீங்க.... :(:D

சென்றமுறை(2002) இறுதிவரை சென்ற ஜேர்மனி கடைசியில் தோற்று திரும்பிவிட்டது. அதுதான் இந்தமுறை பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

18_10_36.gif

நேற்று ஜேர்மனி ஆர்ஜென்டீனாவை வென்ற உடனே ஜேர்மனியர்களின் மகிழ்ச்சியை பார்க்க வேண்டும். எல்லோரும் காரை எடுத்துக்கொண்டு கோர்ன் அடித்துக்கொண்டு திரிந்தார்கள். பலரும் றோட்டுக்கரைகளில் நின்று ஜேர்மன் நாட்டு கொடியை காட்டினார்கள். அதனால் காரில் சென்றவர்கள் இன்னமும் உற்சாகமாக கோர்ன் அடித்துச் சென்றார்கள்.

(நல்லவேளை இம்முறை துருக்கி வரவில்லை. துருக்கியின் விளையாட்டு வீரர்கள் மட்டுமல்ல ரசிகர்களும் முரட்டுத்தனமானவர்கள். ஜேர்மன்காவல்துறை ரொம்ப கஸ்டப்பட்டிருப்பார்கள்.)

FRA 1 : O BRA (56min)

ஆட்டம் விறுவிறுப்படைந்துள்ளது.

பிரேசில் தான் கப் கொண்டு போகும் எண்டு தெரியும் தானே(ஆகா இங்கால டொச்லாந்த் காரகள் நிக்கினம் நான் எஸ்கேப்.....!) இருந்தாலும் ஒரு ஆசை நாம இருக்குற நாடு இந்த முறை விளையாண்டு வெற்றி பெறாதா எண்டு ... சரி சரி அழாதீங்க.... :lol::lol:

இனி அழுது என்ன செய்ய அதுதான் தோத்து போயிட்டாங்களே, ஹும் இனி வேல்ட் கப் பார்க்கிற சுவாரசியம் குறைஞ்சு போச்சு. இந்த கிழமை நல்ல வெயில் இங்க அதை அனுபவிக்க ஏலாம செய்து போட்டாங்கள்.

பிரேசில் - பிரான்ஸ் போட்டி நல்ல விறுவிறுப்பா போகுது. 1 கோல் போட்டு பிரான்ஸ் முன்னணியில் இருக்கு. போகிற போக்கை பார்த்தா பிரான்ஸ் வெல்லும் போல இருக்கு. அப்படி பிரேசில் இந்த போட்டியில் தோற்றால் ஜெர்மனிக்கு கப் கிடைக்கிற சான்ஸ் அதிகரிக்கும்.

பிரான்ஸ் வெற்றிபெற்றுள்ளது.

பிரான்ஸ் 1 : பிரேசில் 0

பிரேசில் தோற்றுவிட்டது. இந்த உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டியின் இறுதி போட்டிகளில் ஐரோப்பிய அணிகள் மட்டுமே எஞ்சியுள்ளன.

அடடா மதண் நீங்களும் அழுகுறீங்களா? சரி சரி அழாதீங்க .... பிரேசில் தான் கப் கொண்டு போகும் எண்டு தெரியும் தானே(ஆகா இங்கால டொச்லாந்த் காரகள் நிக்கினம் நான் எஸ்கேப்.....!) இருந்தாலும் ஒரு ஆசை நாம இருக்குற நாடு இந்த முறை விளையாண்டு வெற்றி பெறாதா எண்டு ... சரி சரி அழாதீங்க.... :lol::lol:

உங்கள் வாய் மூகூர்த்தம் எப்படி வேலைசெய்து விட்டது. பிரேசில் வெளியே. பிரேசில் ரசிகர்கள் ஸ்ரேடியத்தில இருந்து உங்களைத்தேடி சுவிசுக்குத்தான் வருகிறார்கள். எஸ்கேப் ஆயிடுங்க.

இனி அழுது என்ன செய்ய அதுதான் தோத்து போயிட்டாங்களே, ஹும் இனி வேல்ட் கப் பார்க்கிற சுவாரசியம் குறைஞ்சு போச்சு. இந்த கிழமை நல்ல வெயில் இங்க அதை அனுபவிக்க ஏலாம செய்து போட்டாங்கள்.

பிரேசில் - பிரான்ஸ் போட்டி நல்ல விறுவிறுப்பா போகுது. 1 கோல் போட்டு பிரான்ஸ் முன்னணியில் இருக்கு. போகிற போக்கை பார்த்தா பிரான்ஸ் வெல்லும் போல இருக்கு. அப்படி பிரேசில் இந்த போட்டியில் தோற்றால் ஜெர்மனிக்கு கப் கிடைக்கிற சான்ஸ் அதிகரிக்கும்.

ம்ம்ம் சுவிஸ் தோற்றவுடன் நாங்களும் இப்படித்தான் நினைத்தம்.... பிறகு பிரேசில் விளையாடும் போது போய் பார்ப்பன்.... இண்டைக்கு பிரேசிலும் தோற்றுவிட்டது... நினைத்தும் பார்க்கல பிரேசில் போகும் எண்டு ....

ஆனால் இண்டைக்கு பிராண்ஸ் நல்லா விளையாடினவர்கள்... பாவம் ரொனோல்டோ இண்டைக்கு நிறைய தரம் விழுந்துட்டார் :lol::lol:

சரி சரி அடுத்தது பக்கத்து நாடு ஜேர்மனி வெண்டால் நமக்கும் பெருமைதான் வெல்லட்டும்.... :wink:

இருந்தாலும் சொல்ல ஏலாதும் பிராண்ஸ் நல்லா விளையாடினம் வெண்டாலும் வென்றுவிடுவினம் :wink: :wink: :wink: :P :P

உங்கள் வாய் மூகூர்த்தம் எப்படி வேலைசெய்து விட்டது. பிரேசில் வெளியே. பிரேசில் ரசிகர்கள் ஸ்ரேடியத்தில இருந்து உங்களைத்தேடி சுவிசுக்குத்தான் வருகிறார்கள். எஸ்கேப் ஆயிடுங்க.

ம்ம்ம் என்ன ஒரு நம்பிக்கையில் சொன்னன் இப்படி பிராண்ஸ் கிட்ட தோற்ப்பார்கள் எண்டு நினைக்கவில்லை அதுதான்........ :oops: :oops: நீங்களே அற்றஸ் குடுத்து வீட்ட அனுப்பி விடுவீர்க்ள் போல இருக்கே..... :roll: :roll:

பிறேசிலு -இப்பிடி- அநியாயத்துக்கு பூட்டுகிச்சே...... :lol:

பிரேசில் தோல்வியடைந்தற்கு காரணம் என்ன? மாபியா சொல்லித்தான் விளையாடிக்கிறார்கள் போல! அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! உலகின் முன்னனி வீரர்களை உள்ளடக்கிய இவ் அணி தோல்வியை மிகவும் இலவுவாக தழுவியது என்றால் இவர்கள் வேண்டும் என்றே விளையாடவில்லை. இங்கிலாந்து பத்து பேருடன் தன் முழு பலத்தையும் காட்டியது. ஏன் யுக்கிரேன் கூட அற்புதம்மாக விளையாடியது. பிரேசில் இவ் ஆட்டம் துடங்குவதற்கு முன்பே தனது முடிவை தெரிந்து கொண்டது.

அடிதடி எழுதியது:

உலகின் முன்னனி வீரர்களை உள்ளடக்கிய இவ் அணி தோல்வியை மிகவும் இலவுவாக தழுவியது என்றால் இவர்கள் வேண்டும் என்றே விளையாடவில்லை.

இதைதானே 1998 இலும் பிரான்சிடம் - தோல்வியுற்றபோது - சொன்னாங்க - அட்டகாசம்தான்....

பட் புரியல.....இல்லியா........

என்ன நான் சொல்லுறது :?: 8)

1035228671.jpg

பிரேசிலை பிரான்ஸ் வெற்றி கொள்ளும் என்பதை

எவராலும் எதிர்பார்க்க முடியவில்லை.

இருந்தாலும் தமக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை

பிரான்ஸ் அருமையாக பயன்படுத்திக் கொண்டது.

பிரான்ஸுக்கு கிடைத்த பிரீ கிக்கை நேரடியாக அடிப்பதற்கு

பயன்படுத்துவார்கள் என்று எண்ணிய பிரேசில்

உதைக்கும் Zidane முன்னால்

அதிக வீரர்களை பயன் படுத்தி தடுப்பு சுவர்களை அமைத்து நின்றார்கள்.

இருந்த போதும் தடுப்பாளர் பகுதியில் நின்ற 5 பிரான்ஸ் வீரர்களை

தடுப்பதற்கு பிரேசில் வீரர்கள் மூவரே நின்றனர்.

Zidane உதைத்த பந்து முதலாவது பிரான்ஸ் வீரரின் கால்களில் படாமல்

வெளியே செல்லும் என்று கருதிய நேரத்தில்

வெளிப்பக்கமிருந்து கென்றி (Henry) ஓடி வந்து கால் வைத்த போது

இலாவகமாகவும் வேகமாகவும்

பிரேசில் தடுப்பாளர் சற்றும் எதிர்பாராதவிதத்தில்

வேகமாய் ஆட்டத்தின் 56வது நிமிடத்தில் கோல்லாகியது.

அது சுப்பர் கோல்தான்.

240240818.jpg

3870184666.jpg

2312427394.jpg

வெற்றிபெற்ற பிரான்சுக்கு வாழ்த்துகள்.................

HBO14gyO_Pxgen_r_450xA.jpg

அதிபர் ஜக்கி சிராப்பின் வருகை கூட வீரர்களுக்கு

தெம்பைத் தந்திருக்க வேண்டும்.

பிரேசிலின் வெற்றியை கொண்டாட இருந்த

அந்நாட்டு மக்கள்

வெற்றிக்கான இசையை சோகமாக இசைப்பதை

சுவிஸ் தொலைக் காட்சி ஒளிபரப்பு செய்த போது

மனது வேதனையால் சோர்ந்தே போனது...............

56843_37260_0.jpg

ரோம் தீப்பற்றி எரிந்த போது

நீரோ வாசித்த அந்த பிடிலின் ஒலி இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் :oops:

HBvk0kRq_Pxgen_r_373xA.jpg

வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம்.

இருந்தும்

என் மனதைக் கொள்ளை கொண்டதில்

ஜெர்மனியம் எனும்

இனவாதம் உருக் கொண்ட ஒரு நாட்டில்

உலகமே இணைந்து கலந்து கொள்ளும் போது

வீரர்கள்

Akxnj3gM.jpg

"Say No to Racism"

எனும் பதாகையை ஏந்தி நின்றது

என் மனதைக் கொள்ளை கொண்டது.

HBNEU2NO_Pxgen_r_294xA.jpg

Say%20no%20to%20racism%20banner.jpg

_41837482_becks_closeup220.jpg

Beckham இங்கிலாந்து அணியின் கப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார். அணியின் கோச் Sven-Goran Eriksson ம் பதவி விலகுவது குறிப்பிடத்தக்கது.

  • தொடங்கியவர்

இத்தாலி கிண்ணத்தை கைப்பற்ற வேண்டும் அதனை வடிவமைத்தவர் விரும்புகிறார்

இந்த ஆண்டு உலகக் கிண்ணத்தை இத்தாலி வென்று வர வேண்டும் என்று, தான் பெரிதும் ஆசைப்படுவதாக சிற்பி சில்வியோ கஸ்ஸானிகா ( வயது 75) கூறியுள்ளார்.

இத்தாலியைச் சேர்ந்த கஸ்ஸானிகா, மிலானில் பிறந்தவர். தற்போது பல நாடுகளில் ஒரே குறிக்கோளாக இருக்கும் பிபா உலகக் கிண்ணத்தை வடிவமைத்தவர் இவரே.

பிபாவின் அதிகார பூர்வ இணையத் தளத்தில் ஒரு பேட்டியில் கஸ்ஸானிகா இவ்வாறு கூறியுள்ளார்.

"நான் வடிவமைத்த கிண்ணம் எனது சொந்த பூமிக்கே திரும்பி வர வேண்டும் என்பதில் பேராவலுடன் உள்ளேன்" என்றார் கஸ்ஸானிகா.

http://www.thinakkural.com/news/2006/7/1/s...ws_page5470.htm

யாழ்களப்போட்டியாளர்களுக்கு இடையே நடைபெறும் உதைப்பந்தாட்ட உலகக்கிண்ணப்போட்டியில் அரைஇறுதிக்கு தெரிவான 4 நாடுகளில் 7 போட்டியாளர்கள் அதிக பட்சமாக 2 நாடுகளினைச் சரியாகத் தெரிவித்திருந்தார்கள். இதன் அடிப்படையில் முதலாம் இடத்தில் சுபத்திரன் நிற்கின்றார். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=199740#199740

நான் ரென்னிஸூக்கு கட்சி மாறிட்டன் :cry: :cry: :cry: :cry:

ஜெர்மன் வெல்லும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.... இருந்தாலும் இத்தாலிக்கும் கிட்டத்தட்ட அதே பங்கு வாய்ப்பு இருக்கிறது....

நான் ரென்னிஸூக்கு கட்சி மாறிட்டன் :cry: :cry: :cry: :cry:

யாரை Murray ஐ நம்பியா? :? :shock:

ஒரு முறை நம்பி ஏமாந்தது போதும் :D

இப்போதைக்கு முரேக்கு சப்போட் பண்ணுவம் பிறகு பாப்பம் :wink: :P

அது சரி சனிக்கிழமை இங்கிலாந்துக்கு காலம் கூடாது போல கிரிக்கட்டில பயங்கர அடி வாங்கிச்சினம் புட்போல் புட்டுக்கிச்சு :D

நான் ரொம்ப அப்செட்டுப்பா ஒரே ஆறுதல் அன்றைய விம்பிள்டன் மட்ச் தான் :D:lol:

நீங்கள் டென்னிசுக்கு மாறிட்டீங்களா?

நாங்கல்லாம் எப்பவோ கிரிக்கெட்டுக்கு மாறிட்டோம்.... இந்திய அணி 35 வருடம் கழித்து மேற்கிந்திய தீவுகளுக்கு சென்று டெஸ்ட் சீரியஸ் வெற்றி பெற்றிருக்கிறது....

லக்கி உங்களுக்கு ஒரு நாடு இருக்கு அதுக்கு ஒரு டீம் இருக்கு சப்போட் பண்ணுறீங்க

நாங்க எங்களுக்கு என்று ஒரு நாடு கிடைக்கும் வரை :wink: வாழும் நாட்டுக்கு சப்போட் பண்ணுறம் :wink: :P

ஆனா பாருங்க

இந்தியால போய் கூட ஒழுங்கா விளையாடின கிரிக்கட் டீம் இப்படி இங்கிலாந்திலேயே இலங்கையிட்ட வாங்கிக் கட்டுறது வெரி பாட் :D

அதுதான் போகட்டும் புட்பாலில இப்படி சொதப்பிட்டாங்களே :D :cry: அதான் இப்ப ரென்னிஸ் :wink:

அதுதான் போகட்டும் புட்பாலில இப்படி சொதப்பிட்டாங்களே :D :cry: அதான் இப்ப ரென்னிஸ் :wink:

உங்களுக்காவது போட்டிக்கு போய் சொதப்பிட்டாங்க.... எங்க ஆளுங்க புட்பால் போட்டிக்கே போக மாட்டாங்க.... அதனால தான் கிரிக்கெட் (கொஞ்ச நஞ்சம் உருப்படியா அது மட்டும் தான் வெளையாடுறாங்க)

இங்கிலாந்துப் பத்திரிகைகள் விளையாட்டுக் காரரைத் தூக்கித் தலையிலை வைக்கிறதை நிப்பாட்டினாத் தான் இஞ்சை விளையாட்டுத் துறை உருப்படும்.

Ashes ஐ வெண்டுபோட்டுப் பட்டுவிட்ட பாடு என்ரை சிவனே.

அதுமாதிரித் தான் இளம் பெடியள் வந்த சாடையாத் திஙமை காட்டின உடனை அவையளைப் பப்பாவிலை ஏத்துவினம்.

விளையாட்டை விட்டுப் பொட்டு அவையளின்ரை அந்தரங்கங்களைத் தேடுறதும் அவன்ரை காதலியின்ரை படத்தை மதல் பக்கத்திலை போடுறதும்.. சீயெண்டு போயிடும்.

அவையளுக்கும் தலைப் பாரம் கூடிப் பறகு அரோகரா தான்.

லக்கி கடந்த வாரம் ஆனந்த விகடனில பிரபலங்களிடம் கால்பந்து போட்டி பற்றி கேடடு எழுதியிருந்தார்கள் அதில கிரேசி மோகன் சொன்னார்

இந்திய கிரிக்கட் டீம் நல்லா காலால பந்து தடுக்கினம் அதை விளங்காமல் அம்பயர்ஸ் எல்பி டபிள்யு குடுக்கினம் அதால இந்திய டீமை அப்பிடியே புடபால் டீமா மாத்தினா நல்லாருக்கும் என்று சொல்லியிருந்தார் வாசிச்சீங்களா

:wink: :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.