Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேசக்கரம் கணணிப் பயிற்சிநெறி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரம் கணணிப் பயிற்சிநெறி

நேசம் கல்வித்திட்டத்தில் மாணவர்களுக்கான கணணி அறிவினை வளப்படுத்தும் நோக்கில் கணணிப்பயிற்சிகளை வழங்கவுள்ளோம். இன்று உலகம் கணணிக்குள் இயங்குகிறது எனினும் கணணி அறிவு தாயகத்தில் உள்ள எமது தமிழ் மாணவர்களுக்கு சரியாக கிடைக்கவில்லை.

தனியார் கணணிப்பயிற்சி வகுப்புகளை நடாத்தும் நிறுவனங்களில் ஏழைமாணவர்களால் கணணிப்பயிற்சியை பெற்றுக் கொள்ள முடிவதில்லை. அடிப்படை கணணிக்கற்கையை முடிக்க 20ஆயிரம் ரூபா வரையில் தேவைப்படுகிறது.

திறன் மிக்க பிள்ளைகளால் இக்கணணியை தொட்டும் பார்க்க வசதியிருப்பதில்லை. இந்நிலமையை கருத்திற் கொண்டு கணணிக்கற்கை நெறி வகுப்புகளை வசதியற்ற மாணவர்களுக்கு வழங்க முயற்சியை மேற்கொள்கிறோம்.

முதல்கட்டம் கிழக்குமாகாணம் மட்டக்களப்பில் கணணிப்பயிற்சியை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்துள்ளோம். அடுத்ததா வடமராட்சி கிழக்கிலும் கணணிபயிற்சி நிலையமொன்றினை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்துள்ளோம். இத்திட்டத்தை எதிர்வரும் காலங்களில் இதர மாவட்டங்களுக்கும் விரிவாக்கம் செய்யவுள்ளோம்.

எமது முதற்கட்ட முயற்சிக்கு 3கணணிகளும் பிறிண்டர் மற்றும் ஸ்கானரும் தேவைப்படுகிறது. எங்கள் பிள்ளைகளின் கணணி அறிவை மேம்படுத்த கருணையாளர்களிடமிருந்து உதவிகளை வேண்டி நிற்கிறோம்.

முதல்கட்டம் 131000,00ரூபா (ஒருலட்சத்து முப்பத்து ஓராயிரம் ரூபா அண்ணளவாக 850€தேவைப்படுகிறது)

எமது திட்ட வரைபின் முழுமையான வடிவம் :-

DSCF3259.jpg

உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய விபரம் :-

முகவரி:

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany

Shanthy Germany – 0049 6781 70723

Skype ID – Shanthyramesh

Mobile – 0049 1628037418

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

நேசக்கரம் கணணிப் பயிற்சிநெறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரம் கணணிப்பயிற்சிநெறியினை நடாத்துவதற்கான கணணிகளுக்கான மொத்த உதவியையும் அமெரிக்காவிலிருந்து மதிப்புக்குரிய தவேந்திரராஜா ஐயா அவர்கள் முன்வந்து வழங்கியுள்ளார். முகமறியாத அந்த உறவுக்கு நேசக்கரமும் கணணிப்பயிற்சியை பெறவுள்ள அனைத்து உறவுகளும் நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

மிக்க நன்றிகள் ஐயா உங்கள் ஆதரவுக்கு.

10992636-sagen-quot-danke-quot-auf-dem-hintergrund-der-schonen-blumen.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் ஐயா

  • கருத்துக்கள உறவுகள்

கடினமான காலமதில்

களமறிந்து

தேவையறிந்து

காரியமாற்றும்

நேசக்கரத்தின் ஒவ்வொரு நெறிப்படுத்தலும் இன்றைய தேவைகளாக உள்ளன.

தலை வணங்குகின்றேன்

உங்களுக்கும் உதவிய ஐயாவுக்கும்.

தவேந்திரறாஜா ஐயா அவர்களே !!!!!!!!! முன்பின் தெரியாத , முகம் காட்ட மறுத்த உங்கள் செயல் கண்டு பெரிமிதம் அடைகின்றேன் . உங்களிற்காக எனது மொழியில் ஒரு சிறு காணிக்கை ஐயா .

ஊருணி நீர்நிறைந்து அதற்றே உலகுஅவாம்

பேரறி வாளன் திரு. 215

உலக நன்மையை விரும்பிச் செய்கின்ற பேரறிவாளன் பெற்ற செல்வம் ஊரார் நீருண்ணும் குளம் நீர் நிறைந்தாற்ப் போன்று பலருக்கும் பயன்படும்.

எனது கருத்து :

இறைக்க இறைக்கிற கிணறுதான் ஊறும் எண்டு எங்கடை பெரிசுகள் சொல்லியிருக்கினம். நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு குடுக்கிறியளோ அவ்வளவுக்கு உங்கடை செல்வமும் , நீங்கள் செய்ததாலை வாற பயனும் கூடும் . அள்ள அள்ள குறையாத குளத்து தண்ணி மாதிரி நீங்கள் செய்யிற உதவியள் எல்லாரையும் தூக்கிவிடும்.

The wealth of men who love the 'fitting way,' the truly wise,Is as when water fills the lake that village needs supplies.

La richesse du grand Sage qui désire se conformer et se conforme aux us et coutumes du monde, ressemble à la pièce d’eau du village qui est rempli jusqu’aux bords.

Edited by கோமகன்

நேசக்கரத்தின் சேவை விரிவடைந்து செல்கின்றது, பாராட்டுக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரத்தின் சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்.மதிப்புக்குரிய தவேந்திரராஜா அவர்களின் உதவி அளப்பரியது.தலை வணங்குகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.