Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது ஒரு புதிய முயற்சி

Featured Replies

வாழ்த்துக்கள் கௌரிபாலன், கவிதை மிகவும் அருமையாக இருந்தது.

அன்புடன்

மணிவாசகன்

  • Replies 105
  • Views 37.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதற் சுற்றில் முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதை ஒரு பேப்பர் மற்றும் எரிமலை சஞ்சிகைக்கும்; அனுப்பி வைக்கபட்டுள்ளது.விரைவில் அடுத்த தலைப்பிற்கான் படம் இணைக்கப் படும் முதலாவது போட்டியில் அதிகம் பேர் பங்கு பற்றவில்லை அயினும் பங்கு பற்றியவர்களிற்கு பாராட்டுகளை தெரிவிப்பதோடு இனி வரும் காலங்களில் யாழ்; உறவுகளின் பங்கு இந்த கவிதை போட்டிக்கு எவ்வளவு தூரம் இருக்கிறதென்பதை பொறுத்தே இந்த போட்டி தொடருமா இல்லையா? என்று முடிவு செய்யலாம். எனவே இளையவரை ஊக்குவிக்கும் இந்த போட்டியை தொடருவது உங்கள் கைகளிலேயே இருக்கிறது என்று கூறி அடுத்த போட்டியில் சந்திக்கும் வரை சாத்திரி

மேற்கோள்:

இனி வரும் காலங்களில் யாழ்; உறவுகளின் பங்கு இந்த கவிதை போட்டிக்கு எவ்வளவு தூரம் இருக்கிறதென்பதை பொறுத்தே இந்த போட்டி தொடருமா இல்லையா? என்று முடிவு செய்யலாம்.

தெரியல - ஏன் இப்பிடிலாம் என்று-!

மத்தும்படி - நிறைய இடைவெளி - உணரபடலாமோ - ஏதோ வகையில்!

அது - உணர்வுபூர்வமான விடயங்களில் பங்களிப்பது - நிறைய - கவி எழுதுறவங்களுக்கு - நேர விரயமாய் படுதோ என்னமோ- தெரியல!

பட்- எப்போதும் கலந்து கொள்ளுறன் - இந்த தலைப்பில்! 8)

முதலாவது போட்டியில் அதிகம் பேர் பங்கு பற்றவில்லை அயினும் பங்கு பற்றியவர்களிற்கு பாராட்டுகளை தெரிவிப்பதோடு இனி வரும் காலங்களில் யாழ்; உறவுகளின் பங்கு இந்த கவிதை போட்டிக்கு எவ்வளவு தூரம் இருக்கிறதென்பதை பொறுத்தே இந்த போட்டி தொடருமா இல்லையா? என்று முடிவு செய்யலாம்.

நேரமின்மை காரணமாக கடந்த போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை. இனிவரும் போட்டிகளில் கலந்து என்னால் முடிந்தளவு எனது பங்களிப்பைச் செய்யலாம் என்று எண்ணியுள்ளேன். இவ்வாறான வாய்ப்பை அளித்த சாத்திரி அவர்களுக்கு எனது நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கௌரிபாலன்.

வாழ்த்துச் சொன்ன அனைவரிற்கும் நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போட்டி இலக்கம் 2க்கான படம் இதோ எங்கே உங்கள் கற்பனையை தட்டி விடுங்கள்

photo3817lm.jpg

என் முயற்சி!.......

நேரம் வந்தாச்சு!

------------------

ஊர்கூடி மண்மீட்க ...

உறுதி மொழி எடுக்குது பார்

இனி போர் என்று நீ வந்தால்

புதைகுழி உனக்கு தயார்!

வாளெடுத்த சிங்கம் வெல்ல

வரிபுலி விடுமா?

வந்து வந்து நீ கொன்று போக - தேசம்

சிந்திய கண்ணீரை துடைத்து துடைத்து

உன்னிடம் செருப்படி வாங்குமா?

நீயழுதாய் -நான் அழுதேன்

நாம் அழுதோம் ஏனடா?

கூட இருந்துவிட்டே - உன்

கூட்டின்மீது குண்டு எறிந்தவன் யாரடா?

களை ஒழித்து பயிர் செய்யும்

காலம் வந்தாச்சு!

இனி கவலைக்கு விடை கொடு

கரிகாலன் பூமி எமை

ஆளும் நேரம் வந்தாச்சு!

முதற் சுற்றில் முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதை ஒரு பேப்பர் மற்றும் எரிமலை சஞ்சிகைக்கும்; அனுப்பி வைக்கபட்டுள்ளது.விரைவில் அடுத்த தலைப்பிற்கான் படம் இணைக்கப் படும் முதலாவது போட்டியில் அதிகம் பேர் பங்கு பற்றவில்லை அயினும் பங்கு பற்றியவர்களிற்கு பாராட்டுகளை தெரிவிப்பதோடு இனி வரும் காலங்களில் யாழ்; உறவுகளின் பங்கு இந்த கவிதை போட்டிக்கு எவ்வளவு தூரம் இருக்கிறதென்பதை பொறுத்தே இந்த போட்டி தொடருமா இல்லையா? என்று முடிவு செய்யலாம். எனவே இளையவரை ஊக்குவிக்கும் இந்த போட்டியை தொடருவது உங்கள் கைகளிலேயே இருக்கிறது என்று கூறி அடுத்த போட்டியில் சந்திக்கும் வரை சாத்திரி

ஒரு பேப்பர் பார்த்தேன். வந்த மாதிரி காணலையே... சாத்திரி...என்னா றீலா...? :roll: :lol::lol::lol::lol:

-எல்லாள மஹாராஜா-

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பேப்பர் பார்த்தேன். வந்த மாதிரி காணலையே... சாத்திரி...என்னா றீலா...? :roll: :lol::lol::lol::lol:

-எல்லாள மஹாராஜா-

விளக்கம் குறைந்த -எல்லாள மகாராஜாவிற்கு- :wink:

சாத்திரி சொன்னதன் அர்த்தம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதே என்பதே தவிர, பிரசுரிக்கப்பட்டுள்ளதே என்று அல்லவே! அப்படியிருக்க மகாராஜாவிற்கு என்ன குழப்பம்?? :wink: :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது மனைவியின்தங்கை திடீரென இறந்துவிட்ட காரணத்தால் பத்திரிகை காரர்களுடன் சரியாக கதைத்து இந்த வேலைகளை என்னால் செய்ய முடியாமல் போய் விட்டது அதன் காரணமாகவே எனது புஸ்பராசாவின் புத்தகம் பற்றிய தொடரும் இந்த வாரம் ஒரு பேப்பரில் வெளிவரவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன் நன்றி

விளக்கம் குறைந்த -எல்லாள மகாராஜாவிற்கு- :wink:

சாத்திரி சொன்னதன் அர்த்தம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதே என்பதே தவிர, பிரசுரிக்கப்பட்டுள்ளதே என்று அல்லவே! அப்படியிருக்க மகாராஜாவிற்கு என்ன குழப்பம்?? :wink: :P

அதிகப் பிரசங்கி தூயவனுக்கு ! அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றால் ....பரிசு பெற்றதனால் பத்திரிகையில் பிரசுரிக்கப் படுகின்றது என்பது தான் பொருள்.

சும்மா அனுப்பி வைப்பது என்பது நீர் தினமும் அனுப்பிக் கொண்டிருப்பதும் ...பிரசுரிக்காது திரும்பி வருவதும்.... இதைத் தான் சாத்திரி செய்திருப்பார் என்று நான் எண்ணாத காரணத்தாலேயே .......அவ்வாறு கேட்டிருந்தேன்........

ஒரு பேப்பரில் எனது கட்டுரைகளும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.... என்பதால் இதைப் பற்றிக் கதைப்பதற்கு எனக்குக் குறைந்த பட்ச தகுதி உண்டென நம்பிகின்றேன்...

மற்றும் படி சிலரைப் போல வெத்து வேட்டு விடுவதல்ல...... :oops: :oops:

சாத்திரியின் நிலமை புரிகின்றது. மற்றும் சாத்திரி இது நகைச்சுவையாகவே கேட்கப் பட்டது என்ற புரிதல் கொண்டிருப்பார் என்றும் நம்புகின்றேன்.

எரிச்சலுடன் -எல்லாள மஹாராஜா- :evil: :twisted:

  • கருத்துக்கள உறவுகள்

நான் அதிகப்பிரசங்கி என்பதாகவே இருக்கட்டும்.அது என் பிரச்சனை!

ஆனால் ஒவ்வொரு சொல்லுக்கும் புதுசுபுதுசாக அர்த்தம் கண்டுபிடிக்கும் உங்களோடு, நான் போட்டி போடவரவில்லை. ஆனர்ல அனுப்பி வைக்கப்பட்டது என்பதற்கும் பிரசுரிக்கப்படும் என்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு என்று மட்டுமே என்னால் சொல்லமுடியும்.

சாத்திரிக்கு அவ் ஊடகங்களோடு நெருக்கம் இருப்பதால் அவர் இங்கே தெரிவு செய்பவை பிரசுரிக்கப்படும் என்பது நிதர்சனம். ஆனால் அவற்றை உடனே பிரசுரிக்கவேண்டும் என்ற கணக்கில் சாத்திரியை றீல் என்ற கணக்கில் கேட்டதற்குத் தான் நான் பதில் எழுதினேனே தவிர யார் முகத்தையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை.

நீர் நகைச்சுவையாக எழுதியிருப்பின் அதற்கு வருத்தங்கள்!

அதிகப் பிரசங்கி தூயவனுக்கு ! அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றால் ....பரிசு பெற்றதனால் பத்திரிகையில் பிரசுரிக்கப் படுகின்றது என்பது தான் பொருள்.

அப்பிடியா எல்லாள மகராஜா

நான்கு நாள் முதல் பரிசு பெற்றது என்று ஒரு கவிதை அறிவிக்கப்பட்டால் - ஐந்தாவது நாளே அது பிரசுரமாகுமா?

அப்போ - ஏற்கனவே அச்சில் ஏற்றப்பட இருந்த விடயங்கள் என்று அதுக்கு - எதுவும் கிடையாதா?

சும்மா அனுப்பி வைப்பது என்பது நீர் தினமும் அனுப்பிக் கொண்டிருப்பதும் ...பிரசுரிக்காது திரும்பி வருவதும்.... இதைத் தான் சாத்திரி செய்திருப்பார் என்று நான் எண்ணாத காரணத்தாலேயே .......அவ்வாறு கேட்டிருந்தேன்........

ஒரு பேப்பரில் எனது கட்டுரைகளும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன....

ஓ இதுவா - உங்க நெருப்பு கோவத்துக்கு காரணம்-?

அதை முதலில சொன்னா என்னவாம்?

என்பதால் இதைப் பற்றிக் கதைப்பதற்கு எனக்குக் குறைந்த பட்ச தகுதி உண்டென நம்பிகின்றேன்...

மற்றும் படி சிலரைப் போல வெத்து வேட்டு விடுவதல்ல......

அப்பிடியா - அப்போ - நீங்க என்னவகையான வேட்டு விடுவீங்க?

சாத்திரியின் நிலமை புரிகின்றது. மற்றும் சாத்திரி இது நகைச்சுவையாகவே கேட்கப் பட்டது என்ற புரிதல் கொண்டிருப்பார் என்றும் நம்புகின்றேன்.

இவ்ளோ ஆவேசபட்டுடு - கடைசியில நகைசுவைன்னு முடிக்கிறீங்க - நல்லாதான் இருக்கு!

ஏன் - பொறுமை உங்களிடம் - கம்மியா?

எரிச்சலுடன் -எல்லாள மஹாராஜா

சரி - இப்போ விளங்கிட்டுது! 8)

என்ன சொல்ல வாறீர் .... விளக்கமாகச் சொன்னால் உமக்கு விளக்கம் தருகின்றேன்....

-எல்லாள மஹாராஜா-

தயவு செய்து இதில் அரட்டை அடிக்காமல் ஒரு தொடர் கவிதை நிகழ்ச்சியாக நடக்க விடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி உங்கள் ஒத்துழைப்புக்கு.

வணக்கம் :lol:

அகப்பை

பிடித

பெண்ணே

நீயும்

ஆயுதம்

தூக்கிறாய்

நீயும்

அங்கே

அடுப்பு

ஊதிய

பெண்ணே

நீயும்

சங்கு

எடுத்து ஊதி

முழங்குகிறாய்

அங்கே

பறை

எடுத்து

பெண்ணே

நீயும்

போர்

முரசு

கொட்டுகின்றாய்

அங்கே

பெண்

அடிமை

விலங்கை

நீயும்

உடைத்து

எறிகிறாய்

நீயும்

அங்கே

தானைத்

தலைவர்

வழியில்

நீயும்

சுகந்திரம்

காண

துடிக்கின்றாய்

அங்கே

தியாகி

திலிபனின்

கனவை

நீயும்

நினைவு

ஆக்குகின்றாய்

நீயும்

அங்கே

புறநானுற்று

காலத்து

பெண்ணைவிட

நீயும்

பகை

முடிக்கப் நீயே

புறப்படுவிட்டாய்

அங்கே

தமிழ்

பெண்கள்

மானம்

காக்க நீயும்

புதுமை

பெண்ணாக

புறப்பட்டு

விட்டாய் அங்கே

இந்தகவிதை போட்டிக்காக எழுதவில்லை. இங்கு நல்ல பல கவி வித்துவான்கள் இருகிறார்கள். நான் இந்ததளத்தில் ஒரு சிறிய கொசு :lol: . சிறிய முயற்சி :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போட்டி இலக்கம் 2க்கான படம் இதோ எங்கே உங்கள் கற்பனையை தட்டி விடுங்கள்

photo3817lm.jpg

பெண்ணே!!!

பெண்ணே

அடுப்படியில் ஊது குழலோடு அன்று

தாய் மண்ணை மீட்க சுடு குழலோடு இன்று.

மங்கையவள்

மறைந்து வெட்கித்தலை

குனிந்த காலம் அன்று

நேருக்கு நேர் நிமிர்ந்த தலை இன்று

தையலாள்

பகைவனை புறமுதுகு காட்டி

ஓட வைக்கும் காலம் இன்று

இது தலைவனின் காலம்

பூக்களிற்கும் வீரம்

அரும்பாகி ஆலமரமாகி விட்டது.

***********************

ஸ்ருதி

முடிந்துவிடும் மூடர்களின் ஆட்டம்

குழல்களின் முனைகள் சொல்கின்றன

விடிந்துவிடும் தமிழீழ தேசம்

குழலியரின் விழிகள் சொல்கின்றன

விலகிவிடும் எமைச்சூழ்ந்த சோகம்

மனதிலுள்ள தாகம் சொல்கின்றது

கருகிவிடும் எதிரியின் தேகம்

உடலிலுள்ள வேகம் சொல்கின்றது

ஒடுங்கிடும் துரோகிகளின் கொட்டம்

உமதணி நீட்டம் சொல்கிறது

நடுங்கிடும் விரோதிகள் கூட்டம்

நும்விடுதலை நாட்டம் சொல்கின்றது

பூவென்று பாடிய பாவலர்களின்று

புயலென்று கண்டு கொள்வார்கள்

நிலவென்று நிறுவிய கவிஞர்களின்று

அது சுடும் என்று வந்து சொல்வார்கள்

சேயைப் பெற்று சிறப்பெய்தியவர்கள்

தீயை ஏந்திச் செல்கின்றார் - எம்

நோயைத் தீர்த்து தனித்தமிழீழத்

தாயை ஏந்தி வருவார்கள்.

photo3817lm.jpg

கொட்டட்டும் - போர்

முரசு கொட்டட்டும்

எட்டும் திசை யெட்டும்

விடுதலை உணர்வு பொங்கட்டும்!

போடட்டும் - குண்டு

போடட்டும்...- பின்

தமிழ் பெண்ணோடு

வீரம் கண்டு - எதிரி

மண்ணோடு சாயட்டும்!

போடும் வரையும்- யாரும்

தடையும் போடட்டும்...

தமிழ் மானம் கண்டு-பின்

தம் வாயை மூடட்டும் !

எட்டும் வரை எட்டி

வெற்றிப் புலிக் கொடி

வானை முட்டட்டும் !

இந்தத் தாயினம் செய்திடும்

சத்தியம் - நாளை

சரித்திரம் சொல்லிடும்

தமிழீழம்!

(என்று)

கொட்டட்டும் - போர்

முரசு கொட்டட்டும்

எட்டுத் திசை யெங்கும்

எதிரி சிதறி ஓடட்டும்

இல்லை- சாகட்டும்!

இந்தத் தாயினம் செய்திடும்

சத்தியம் - நாளை

சரித்திரம் சொல்லிடும்

தமிழீழம் !

எழுந்தது பகைபுலம் பொடிபட

ஏந்திழை கைகள்

வீழ்ந்தது கொடுமுடி அரசின்

தீயிழை செயல்கள்

துடைத்திரு கண்ணீர் துயரறு

புதுயுகப் பெண்ணே

உயர்த்திடு திண்தோள் பகையொறு

பாரதி கண்ணே

விரித்திடு சிறகுறு எண்ணம்

விந்தைப் பெண்ணே

வீழ்த்திடு எதிர்படு தடைகள்

விலகும் நன்றே

நன்றே செய்வாய்

இன்றே செய்வாய்

நாளை என்பது என்றும் இல்லை

தாய்மை செய்யும் அன்பை அறிவாய்

தரணி சுமக்கும் பொறுமை அறிவாய்

காக்கும் தெய்வம் நீ அறிவாய் -உனை

காலம் வாழ்த்தும் இதை நீயறிக.

-எல்லாள மஹாராஜா-

காப்புக் கரங்களின் காப்பெடுப்பு.

ஏரிதழல் சொரியும் எதிரிகள் நோக்கி

கரிகுழல் காரிகை கனலும் காலம்.

வெறியொடு அலையும் வீணரைச் சரிக்க

சத்தியம் எடுக்கும் சரித்திரச் சடங்கு.

இத்தரை காத்து எத்தரைச் சாய்க்க

முத்திரை பதிக்கும் முதல் ஏந்தல்.

செத்திடும் வேதனை நித்தமும் ஆனதால்

சீறியே எழுந்த செம்புயல்கள். - இனிக்

கத்திடும் ஓலம் ஈழத்தில் கேட்காது - எழும்

கனலின் வெப்பத்தில் ஒப்பாரி கலையும்.

அய்யா சாத்திரி, அம்மா இரசிகை நாள் நேரம் பார்த்துப்

போட்டியில் குதிச்சிருக்கிறன் பரிசு எனக்குத்தான்.....

அது சரி என்ன பரிசு?

பேக்காட்டக்கூடாது.... எதென்றாலும் காசா வெட்டுங்கோ....

விடுதலையைப்பேசிப் பேசி நிறையப்பேர் நல்லா வந்திருக்கினம்

பாருங்கோ... வெற்றி பெறுகிற எனக்கு அப்பிடியே ஒருமேடை

ஒரு பட்டம் சேச்சே......

இதெல்லாம் நான் கேட்க மாட்டன் நீங்க தருவீங்கதானே!

பட்டம் பதவிக்காக ஆர்வமுடன் ஆதிவாசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இறுதி நாள் வெள்ளிக்கிழமை (30/06/06) ஆதலால் கவிதைப் போட்டிக்கு கவிதை எழுத விரும்புபவர்கள் வெள்ளிக்கிழமைக்கு முன்பாக உங்கள் கவிதைகளை பிரசுரிக்கவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டாவது கவிதைப் போட்டி முடிவு

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இது இரண்டாவது கவிதைப் போட்டிக்கு தீர்ப்புச் செல்லும் நேரம். முதலாவதை விட இம்முறை கலந்துகொண்டோர் கிட்டத்தட்ட இரண்டு மடங்காக இருப்பினும் இன்னும் அதிகமானோர் பங்குபெறவேண்டும் என்பதே எல்லோரதும் ஆவல்.

அங்கே உறவுகள் துடிப்பதைப் பார்த்து உலகெங்கும் தமிழ் உள்ளங்கள் துடிக்கின்றன. உணர்வுள்ளவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் வேண்டும் போதெல்லாம் ஓங்கி எழுந்து உரத்துக் குரல் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள், இருக்கிறார்கள், இருப்பார்கள். அந்தவகையில் கொடுக்கப்பட்ட படத்திற்கு ஏற்ப எழுதிய கவிதைகள் அனைத்தும் அருமையானவையே. கருத்துச்செறிவு, கவிதை நயம், கையாண்ட முறைகள் அனைத்துமே சிறப்பாக அமைந்துள்ளன. அனைவருக்கும் எமது பாராட்டுக்கள்.

அனைவருடைய கவிதைகளும் நன்றாக இருந்தபோதிலும் நாம் ஒருவருடைய கவிதையையே முதலாவதாகத் தேர்ந்தெடுக்கும் கட்டாயத்தில் இருக்கின்றோம். அதன்படி நடுவர்களாகிய சகோதரி இரசிகையும், நானும் சேர்ந்து சுஜிந்தனுடைய கவிதைக்கு முதலிடம் கொடுத்துள்ளோம். பாராட்டுக்கள்!

ஒருங்கிணைப்பாளர் சாத்திரி அவர்களுக்கும் எமது நன்றியைக் கூறிக்கொள்ளும் அதேவேளையில் அவர்கள் வந்து மற்றைய விபரங்களையும் கூறுவார் என்பதனையும் அறியத்தருகின்றோம்.

நன்றி

வணக்கம்.

இரசிகை, செல்வமுத்து

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.