Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர்ந்தோர் பணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்தோர் பணி

புலம் பெயர்ந்து உலகத்திசையெங்கும் பரவி வாழும் எம்மக்கள்

கைகளில் தமிழீழத்தின் வரலாறை நகர்த்த வேண்டிய பணி

ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இது காலம் எழுதிக்கொண்டிருக்கும்

ஈழத்தின் கதை இனிமேல் தொடரப்போகும் பல விடயங்களுக்கு

புலம்பெயர் தமிழினத்தின் உறுதியான தாயகம் மீட்கும் செயற்பாடே எமது வெற்றியை நிர்ணயிக்கும் விளங்குபொருளாக

அமையப்போகிறது என்பதை நன்கு உணர்ந்து எம்மக்கள் செயற்படவேண்டும் ஒருநாள் எழுச்சியிலேயே உலகம் திகைத்திருப்பது உண்மை. தொடரும் எங்கள் அகிம்சை வழிச் செயற்பாடுகள் உலகின் கண்களைத்திறக்க வைக்கும்.

முடியுமா? என்று சந்தேகத்தோடு நிற்காமல் புலம்பெயர் தமிழினமே!

முயற்சி செய்!

தொடர்ந்து செய்!

எறும்புூரக் கற்குழியும்.

இது பழமொழி

  • Replies 71
  • Views 9.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மை! நாடற்றிருந்த மக்களுக்கு சொந்தமாக ஒரு நாட்டைப் பெற்றுக்கொடுக்க உதவியவர்கள் அந்நாட்டின் புலம்பெயர்ந்த மக்கள்தான் என்பதை சரித்திரத்தில் காணலாம்.

தமிழ் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டிய காலம் இது.

பெரும்பான்மையினர் பல இடங்களில் ஊடுருவி இருக்கின்றார்கள். இங்குள்ள குடிவரவு திணைக்களத்தில் ஓர் சிங்களவர் தமிழ் மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரிகிறார். இது எப்படிச் சாத்தியமானது? "அமாவாசை இருட்டு" என்றால் என்ன? என்று வழியில் ஒரு தமிழ்மகனைக் கேட்டாராம். இது தெரியாமல் எப்படி இவர் ஒரு தமிழ் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிகிறார்?

அண்மையில் இருக்கும் ஒரு தமிழ்க்கடையில் சில நாட்களுக்கு முன்னர் ஒரு சிங்கள மகன் Till இல் பணிபுரிய ஆரம்பித்துள்ளார்.

யாருக்கும் எங்கும் வேலை செய்ய உரிமையுண்டு. ஆனால் தகுதியானவர்கள் பொருத்தமான இடங்களில் வேலை செய்யாது இருக்கும்போதுதான் சந்தேகம் எழுகின்றது.

எம்மவர்கள் இன்னமும் து}க்கத்திலேயே இருக்கிறார்களா? அல்லது சுயநலவாதிகளாக மாறிவிட்டார்களா? தாமும் தன் குடும்பமும் வாழ்ந்தால் போதுமென்று இருக்கின்றார்களா?

  • 3 weeks later...

சொன்னதோட சரிபோல.......

நீங்கள் கனடாவிலத்தானே இருக்கிறீங்கள்.......

உரிமைக்குரலிற்குப் பின்னர் ஈழத்தமிழினத்திற்காக

எத்தகைய நடவடிக்கைகள் எடுத்திருக்கிறீர்கள்?

எறும்புூரக் கற்குழியும் என்பதை நன்கறிந்தும் நகராமல்

நிற்பது ஏன்?......

உலகத்திசையெல்லாம் கவிதை முழங்கினாப் போதாது...

காரியத்தில் இறங்கவேண்டும்....

இது உங்களுக்கு மட்டுமில்லை உங்களைப்போல

வடஅமெரிக்காவில பரவி வாழ்கிற அனைத்துத் தமிழருக்குந்தான்..

கனடாவில் கவிஞர்கள் மலிவாமே...

அதில் எத்தனைபேர் உணர்ச்சிக்கவிஞர்கள்?..

எத்தனைபேர் புரட்சிக்கவிஞர்கள்?

எத்தனை பேர் எழுச்சித்தீ மூட்டும் கவிஞர்கள்?

அல்லது எல்லோருமே துருப்பிடித்த கவிஞர்களா?

அறியும் ஆவலோடு ஆதிவாசி

அறியும் ஆவலோடு இருக்கும் ஆதிவாசியே...

எமது உரிமையை பெற்றுக்கொள்வது கனடா நாட்டு கவிஞர்களின் கைகளில் தான் இருக்கோ?

கவிதை எழுதுவது என்பது ஒவ்வொருவரது விருப்பத்தை பொறுத்தது. எழுதுவது அனைத்தும் உணர்ச்சிக்கவிகளாவும் புரட்சிக்கவிகளாகவும் எழுச்சித்தீ மூட்டும் கவிதைகளாகவும் அமையவேண்டும் என்பது அவசியமில்லை. கவி என்பது தனது கருத்தினை மற்றவர்களிற்கு சொல்லும் ஓர் வழிமுறையே தவிர அதற்காக ஒருவர் அப்படித்தான் இருக்கவேண்டும் என்றில்லை. ஆதிவாசி நீங்கள் எழுதும் எத்தனை கவிதைகள் நீங்கள் வேண்டிய இவற்றை தருகின்றன. அல்லது அவையும் துருப்பிடித்த கவிதைகள் தானே :roll:

அறியும் ஆவலோடு இருக்கும் ஆதிவாசியே...

எமது உரிமையை பெற்றுக்கொள்வது கனடா நாட்டு கவிஞர்களின் கைகளில் தான் இருக்கோ?

தன்னம்பிக்கைப் பார்ட்டிக்கு எப்படி அவநம்பிக்கை பிறந்தது?

எமது தாயகத்திற்கான நியாயமான உரிமைகளைப் பெறுவது

ஒவ்வொரு ஈழத்தமிழரின் செயற்பாட்டிலும் உள்ளது....

குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் தமிழ்மக்களின் விழிப்புணர்வுக்கு

கலைஞர்களின், எழுத்தாளர்களின் பங்கு முதன்மையானது என்பதை யாரும் மறுக்கமுடியாது...

அதிலும் குறிப்பாக கவிஞர்கள் இலகுவாக மக்களிடம் சென்றடையும் வல்லமை படைத்தவர்கள். சரியான திக்கையும்

தெளிவான கொள்கையையும் கவிஞர்கள் தம்வசம் வைத்திருத்தலே அtர்களை அடையாளப்படுத்தும்.....

உங்களைக்கூட அவதானித்திருக்கிறேன்.

உங்களிடமும் எழுச்சி இருக்கிறது.

அது உங்களுக்குப் புரியவில்லையா?

அல்லது மற்றவர்கள் உரைக்கவில்லையா?

புரிய வைக்கும் முயற்சியில்

ஆதிவாசி

கவிதை எழுதுவது என்பது ஒவ்வொருவரது விருப்பத்தை பொறுத்தது. எழுதுவது அனைத்தும் உணர்ச்சிக்கவிகளாவும் புரட்சிக்கவிகளாகவும் எழுச்சித்தீ மூட்டும் கவிதைகளாகவும் அமையவேண்டும் என்பது அவசியமில்லை. கவி என்பது தனது கருத்தினை மற்றவர்களிற்கு சொல்லும் ஓர் வழிமுறையே தவிர அதற்காக ஒருவர் அப்படித்தான் இருக்கவேண்டும் என்றில்லை. ஆதிவாசி நீங்கள் எழுதும் எத்தனை கவிதைகள் நீங்கள் வேண்டிய இவற்றை தருகின்றன. அல்லது அவையும் துருப்பிடித்த கவிதைகள் தானே :roll:

வந்து விட்டார் குட்டிக்குழவி....

எங்கு..? எந்தத் தலைப்பின்கீழ்..? எந்த நோக்கிற்காக?

உணர்ச்சியையும், புரட்சியையும், எழுச்சியையும்

அறிய ஆவலுற்றேன்....................................!

ஆதிவாசியையே கூண்டில் ஏற்றிக் கேள்வி தொடுத்தால்

கனடாத் தமிழரை நோக்கும் கேள்வி சாகாது...

நான் வாழும் இடத்தில் என் பணி நன்றே நிகழ்கிறது.

சந்தேகம் தொடர்ந்தால் கேளுங்கள்.

என்பணி பதில் சொல்வதே.....

கேள்விக்காக ஆதிவாசி

ஆதிவாசியே எங்கே காட்டிலா உங்கள் பணி நிகழ்கிறது.(எழுத்துக்களிற்கு வர்ணம் அடித்து பெரிய எழுத்துக்களாக எழுதுவதைவிட சாதாரணமாக எழுதினாலே எமக்கு வாசிக்க முடியும். எமக்கு கண்ணில் எக்குறையுமில்லை) ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி என்னும் பாணியில் மற்றவர்களை நக்கலடிக்கும் உங்கள் விளையாட்டைத் தொடர்வதை விட்டு விட்டு நீங்கள் ஏதாவது உருப்படியாகச் செய்யப்பாருங்கள். கனடாத் தமிழர் எது செய்தாலும் அவர்களில் குறைமட்டுமே பிடிப்பதற்குத் திரிகிறீர்களே :roll:

இங்கு கவிதைகளால் தான் ஈழம்பிறக்கிறது என்னும் பொருள்பட நீங்கள் எழுதியிருப்பதிலிருந்து என்ன கூற முயல்கிறீர்கள் என அறியவிரும்புகின்றோம். :roll:

அருவி

காட்டில் பணியாற்றவேண்டிய அவசியம் ஆதிவாசிக்கு

இல்லை. கவிதையால் நாட்டைப் பெற்றுவிடமுடியும் என்றும் ஆதிவாசி கூறவில்லை.......

ஆனால் கலைஞர்களால், எழுத்தாளர்களால் இதிலும்

குறிப்பாக கவிஞர்களால் புலம்பெயர்ந்த மக்களிடையே தாயகம் பற்றிய விழிப்புணர்ச்சியைத்

தூண்டலாம் என்பது என் கருத்து.... தெளிவாகப் புரிந்து பதில் எழுதுங்கள்......

பாரதியின் கவிதைகள் பாரததேசத்தின் விடுதலைக்கு வலிமைசேர்க்கவில்லையா?

உணர்ச்சிக்கவிஞர் காசிஆனந்தனும், உலைக்களக் கவிஞர் புதுவை இரத்தினதுரையும்

இன்று தாயகத்திலும் சரி புலம்பெயர் தேசங்களிலும்சரி

தத்தம் கவிதைகளால் தாயக ஈர்ப்பில் மக்களை வைத்திருக்கவில்லையா?

கவிதையால் ஈழம் பிறக்கிறது என்று பொருளல்ல......

கவிதைகளால் மக்களுக்கு எழுச்சியுூட்டலாம் அல்லவா.....

என்ன சொல்ல வருகிறேன் என்பதைவிட ஏன் சொல்கிறேன்

என்பதைக் கவனிக்கும்படி கேட்கும் ஆதிவாசி

தர்மம் ஏந்தி வெல்வோம்.

இடுக்கன் களைந்து ஈழமண்ணில்

தமிழர் வாழ்வு சிறக்க

முடங்கி ஒடுங்கும் எழுதுகோல்கள்

முன்றல் ஏறி நிற்க!

அடக்கி, அடக்கி அடித்து நொறுக்கி

அவலம் சூழ்ந்த வாழ்வை

எடுத்து உரைக்க இந்த மண்ணில்

தமிழர் எழுச்சி கொள்க!

தடுக்கும் சட்டம் தன்னை உயர்த்தி

தமிழ் நாவை ஒடுக்கவில்லை

வடுக்கள் காட்டி வாதை கூறும்

வழிகள் மறுக்கவில்லை.

துடிக்கும் வலியில் துவளும் கலியில்

தமிழர் கிடக்கை சொல்க! - உயிர்

வடிக்கும் உணர்வை எடுத்துக் கோர்த்து

வையம் எங்கும் பகர்க!

முடக்கும் திசைகள் முழக்கம் கேட்டு

விழிப்புக் கொள்ளும் வரைக்கும்

உயிர்ப்புச் செய்து உலகத்திசையில்

உண்மை எடுத்து உரைக்க!

அடுத்த கலியால் தமிழர் வாழ்வு

அங்கலாயும் முன்னர்

தடுப்புச் சுவர்கள் போட்டுக்காத்து

தர்மம் ஏந்தி வெல்க!

முடக்க முடக்க எழுதுகோல்கள்

எழுந்து நடக்கும் சொல்க!- இன

இடுக்கன் மறைந்தால் மாத்திரமே

இவை இளைப்பாறும் என்க!

அருவி

காட்டில் பணியாற்றவேண்டிய அவசியம் ஆதிவாசிக்கு

இல்லை. கவிதையால் நாட்டைப் பெற்றுவிடமுடியும் என்றும் ஆதிவாசி கூறவில்லை.......

ஆனால் கலைஞர்களால், எழுத்தாளர்களால் இதிலும்

குறிப்பாக கவிஞர்களால் புலம்பெயர்ந்த மக்களிடையே தாயகம் பற்றிய விழிப்புணர்ச்சியைத்

தூண்டலாம் என்பது என் கருத்து.... தெளிவாகப் புரிந்து பதில் எழுதுங்கள்......

பாரதியின் கவிதைகள் பாரததேசத்தின் விடுதலைக்கு வலிமைசேர்க்கவில்லையா?

உணர்ச்சிக்கவிஞர் காசிஆனந்தனும், உலைக்களக் கவிஞர் புதுவை இரத்தினதுரையும்

இன்று தாயகத்திலும் சரி புலம்பெயர் தேசங்களிலும்சரி

தத்தம் கவிதைகளால் தாயக ஈர்ப்பில் மக்களை வைத்திருக்கவில்லையா?

கவிதையால் ஈழம் பிறக்கிறது என்று பொருளல்ல......

கவிதைகளால் மக்களுக்கு எழுச்சியுூட்டலாம் அல்லவா.....

என்ன சொல்ல வருகிறேன் என்பதைவிட ஏன் சொல்கிறேன்

என்பதைக் கவனிக்கும்படி கேட்கும் ஆதிவாசி

ஆதிவாசி மக்களின் எழுச்சியை பற்றி அதாவது கனடா வாழ் மக்களின் எழுச்சியைப்பற்றி நீங்கள் கண்டதில்லை... மக்களின் எழுச்சியை பொங்கு தமிழிலும் உரிமைக்குரலிலும் பார்த்து விட்டோம். இப்போது உணர்ச்சி ஊட்டப்படவேண்டியவர்கள் எம் மக்கள் இல்லை. பிற இனத்து மக்களுக்கு தான் எமது உணர்ச்சிகளை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். அதற்கு கவிஞர்களின் உதவி எந்த வகையில் உதவி செய்யும் என்பது எனக்கு புரியவில்லை. உரிமைக்குரலில் இவ்வளவு மக்கள் எழுச்சி பொங்க நின்றபோதும் மற்ற இனத்தவர்களிடம் அது பெரிதாக எடுபடவில்லை என்பது வருத்தற்குரிய உண்மை.

ரமா எழுதியது....

கனடாவில் ஒற்றுமை வாரத்தில் மக்கள் பங்கு?......

உரிமைக்குரலில் நிரவப்பட்டிருந்தாலும்......

அது கனடாவில் வாழும் தமிழ்மக்களில் எத்தனை வீதம்?

ஏதோ இடக்கிறது...

முக்கியவிடயம் பரப்புரையின் அத்திவாரத்தில் தெளிவான கருத்துக்களை மாற்று இனத்திடம் கொண்டு செல்லமுடியாதபடி

ஏதோ இடறி இருக்கிறது...

சிந்தியுங்கள்!

கண்டுபிடியுங்கள்!

தொடரும் நிகழ்வுகளில் நிரவுங்கள்!

ஆதிவாசி

காட்டில் பணியாற்றவேண்டிய அவசியம் ஆதிவாசிக்கு

இல்லை. கவிதையால் நாட்டைப் பெற்றுவிடமுடியும் என்றும் ஆதிவாசி கூறவில்லை.......

ஆனால் கலைஞர்களால், எழுத்தாளர்களால் இதிலும்

குறிப்பாக கவிஞர்களால் புலம்பெயர்ந்த மக்களிடையே தாயகம் பற்றிய விழிப்புணர்ச்சியைத்

தூண்டலாம் என்பது என் கருத்து.... தெளிவாகப் புரிந்து பதில் எழுதுங்கள்......

பாரதியின் கவிதைகள் பாரததேசத்தின் விடுதலைக்கு வலிமைசேர்க்கவில்லையா?

உணர்ச்சிக்கவிஞர் காசிஆனந்தனும், உலைக்களக் கவிஞர் புதுவை இரத்தினதுரையும்

இன்று தாயகத்திலும் சரி புலம்பெயர் தேசங்களிலும்சரி

தத்தம் கவிதைகளால் தாயக ஈர்ப்பில் மக்களை வைத்திருக்கவில்லையா?

கவிதையால் ஈழம் பிறக்கிறது என்று பொருளல்ல......

கவிதைகளால் மக்களுக்கு எழுச்சியுூட்டலாம் அல்லவா.....

என்ன சொல்ல வருகிறேன் என்பதைவிட ஏன் சொல்கிறேன்

என்பதைக் கவனிக்கும்படி கேட்கும் ஆதிவாசி

கனடாவில் தமிழரின் பங்களிப்பு நீங்கள் அறியவில்லை என்பது உங்களின் பதில்களில் இருந்து அறியக்கூடியவாறு உள்ளது. இங்கு கனடாவில் வெளிவரும் பத்திரிகைகளில் அதிகமானவை தமது ஒவ்வொரு வெளியீடுகளிலும் மக்களின் எழுச்சியை வேண்டி அதனை அதிகரிக்கக் கூடியவாறான தமது பணியினைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்காக எழுதும் அனைத்தும் எழுச்சிக் கவிகளாகவோ புரட்சிக் கவிகாளாகவோ மாறவேண்டிய அவசியம் இல்லை.மற்றும் இங்கு பாரதிபற்றி எழதியிருக்கிறீர்கள். வேறுபாடான களச்சூழல் வேறுபாடான பின்னணி அவைபற்றி கூறுவதானால் வேறு ஒரு நேரத்தில் பேசிக்கொள்ளலாம். மற்றும் இன்றைய மாற்றமடைந்த சூழலில் இன்றும் கவிதைகள் எழுதுவதன் மூலம் அனைத்து மக்களையும் எழுச்சியாகவர்களாக வைத்திருக்க முடியாது என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

கனடாவில் ஒற்றுமை வாரத்தில் மக்கள் பங்கு?......

உரிமைக்குரலில் நிரவப்பட்டிருந்தாலும்......

அது கனடாவில் வாழும் தமிழ்மக்களில் எத்தனை வீதம்?

ஏதோ இடக்கிறது...

முக்கியவிடயம் பரப்புரையின் அத்திவாரத்தில் தெளிவான கருத்துக்களை மாற்று இனத்திடம் கொண்டு செல்லமுடியாதபடி

ஏதோ இடறி இருக்கிறது...

சிந்தியுங்கள்!

கண்டுபிடியுங்கள்!

தொடரும் நிகழ்வுகளில் நிரவுங்கள்!

ஆதிவாசி

நன்றாக மூளைய கசக்கி சிந்தித்த ஆதிவாசி பல உண்மைகளை உணர வேண்டுமென்றே தவறியுள்ளார். எந்தவொரு நிகழ்வும் 100% மக்கள் சமூகத்தின் ஆதரவுடன் நடைபெறவதில்லை. உலக நாடுகள் பலவற்றில் நடத்தப்பட்ட உரிமைக்குரல் நிகழ்விலே கனடிய மண்ணில் மட்டுமே அதிகளவிலான மக்கள் திரண்டிருந்தனர். இது எவ்வாறு சாத்தியமானது. இதற்கு ஒற்றுமை வாரம் எவ்வகையில் உதவியது என்பது கனடாபற்றி அறியாத உங்களிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஓர் முழுநேர வேலை நாளான வாரத்தின் ஆரம்ப தினமான திங்கட் கிழமை ரொறன்ரோ பொதுச் சேவை தனது சேவையை இடைநிறுத்திய ஓர் பொழுது தன்னில் மெல்லாஸ்மன் சதுக்கம் இதுவரை காணத அளவு மக்கள் நிறைந்திருந்தது எவ்வாறு? கனடாவில் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கான தடை எவ்வாறு இறுக்கமானது என்பதனை ஐரோப்பிய ஒன்றிய நாட்டைச்சேர்ந்த நெதர்லாந்து நாட்டு அமைச்சரின் கூற்றே தெளிவாக விளக்கியுள்ளது. இது கூட விளங்காது வேண்டுமென்றே இது கனடாவில் வாழும் தமிழர்கள் மேல் கொண்டுள்ள உங்கள் வெறுப்பி்ன் வெளிப்பாடாகவே தோன்றுகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எவனிவன் காட்டுக்க கிடந்தவனை கட்டில் படு என்றா படுப்பான இல்ல தானே! அண்ணா அதீவாசி என்ன ஏதோ முடிவோட தான் வந்திருக்கிறீங்க போல. என்ன கனடாவில யாராச்சும் சுத்தி போட்டாங்களோ இப்பிடி எழுதி தள்ளுறீர். சரி அதை விடுவம் இந்த பறவைகள் இப்பிடி தான்.

உங்கள் வீட்டு குப்பைகளை கூட்டிக்கொள்ளுங்கள். அதன் பின் மற்ற வீட்டு குப்பைகளை பற்றி பேசலாமே!. நீங்கள் ஒரு புலம் பெயர்ந்த நாட்டுக்காரன், எனவே உங்கள் நாட்டில் நீங்கள் உங்கள் கடமையை சரிவரச் செய்யுங்கள். நாங்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுங்க, ஆனால் அதே எம்மீது உள்ள கசப்புணர்வுகளை கருத்து என்ற பெயரில் எழுதாதீர்கள்.

உங்கள் நோக்கம் எங்கள் கவிஞர்களை, கலைஞர்களை மட்டம் தட்டுவதா? இதே ஒரு வைரமுத்து, அல்லது ஒரு வாலி அல்லது ஒரு சினேகன் போல இவர்களும் சினிமாவுக்கு பாடல் எழுதியிருந்தால் நீங்கள் ஆடிப்பாடி ரசித்திருப்பீங்கள். ஆனால் இவர்கள் மக்கள் எழுச்சியை தூண்டுவதை பார்க்க உங்களுக்கு பொறுக்க வில்லையா?

உலகெங்கும் மக்களை உணர்ச்சி வசப்படுத்துவது கவிதைகள்தான், தமிழீழ விடுதலைப்போரில் பலரை இணைத்து வைத்ததும் இந்த எழுச்சி கவிதைகள் தான். நீங்கள் இலவசமாய் இணைமும். இலவச இணைய இணைப்பை நூலகத்தில் பெற்று கருத்து எழுதாலம் . ஆனால் நீங்கள் எழுதும் கருத்து நல்ல கருத்தாய் இருக்க வேண்டும்.

கனடாவில் தமிழீழத்திற்கான பரப்புரையானது, நீங்கள் நினைப்பதை விட நிறைவாகவே நடைபெறுகின்றது. எங்கள் கடமையை நாம் சரிவர செய்வதாய் உணர்கின்றோம். அது உங்களுக்கு நிறைவில்லாது விட்டால் அதைப்பற்றி எந்த கனடியத்தமிழனும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. கருத்தை கூற ஒரு இடிருக்கிறது. விமர்சனம் செய்ய ஒரு முறை இருக்கிறது. அந்த முறமை இங்கிருக்கும் பல தமிழ் செய்தி ஊடகங்களுக்கும் இல்லை. அவற்றின் வழி வந்த உங்களுக்கும் விமர்சனத்தின் பொருள் தெரியவில்லை. அப்படியிருக்கையில், வர்ணநிறங்களில் கருத்தெழுதி கவர்ச்சி காட்டுவது இந்திய சினிமாவை விற்பனை செய்ய கவர்ச்சி உடை அறிமுகப்படுத்தப்பட்டது போல.

நாங்கள் இங்கு எடுத்து கொண்டிருக்கும், அல்லது எடுக்கும் எந்த நடடிக்கை பற்றியும் உங்களுக்கு சொல்ல வேண்டிய தேவையோ அவசியமோ இருப்பதாய் யாரும் கருதவில்லை.

திரு.ஆதிவாசி ரொம்ப குழம்பி போயிருக்கார்!

ஒரு இடத்தில் இருப்பவனோடு - எந்த வழியில் நீங்கள் - தொடர்பு கொண்டாலோ- கருத்து எழுதினாலோ- நீங்க எங்க இருக்கிங்க எண்ணு சொல்லணும் இல்லையா?

சரி இப்போ- சொல்லுங்க - கனடா ல இருக்கிறவங்க - நிறைய உணர்ச்சி படுறாங்க - ஓகே- நீங்க எங்க இருந்து இதை - உணர்ச்சிவச படாம இருந்து -எடுத்து விடுறீங்க?

சும்மா- கேள்விதான் அது - பதில் கட்டாயம் இல்ல- ஆனா - இவ்ளோ உணர்ச்சிவசம் - தேவையா?

பை-த வே - ஆதிவாசி - ஒண்ணு கேக்கலாமா?

அது- எல்லாளன் - எங்க? 8)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆதிவாசியையே கூண்டில் ஏற்றிக் கேள்வி தொடுத்தால்

கனடாத் தமிழரை நோக்கும் கேள்வி சாகாது...

நான் வாழும் இடத்தில் என் பணி நன்றே நிகழ்கிறது.

எந்த நாடு என்று சொல்லுங்கள் அங்கும் பலல குறைகள் இருக்கும் அவற்றை. உங்களுக்கு தருகின்றோம் . எந்த நாடு என்று சொல்லவே, தயங்கி நிற்க்கும் உங்கள் கருத்துக்கள் உங்கள் கருத்து தானே!?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவில் ஒற்றுமை வாரத்தில் மக்கள் பங்கு?......

உரிமைக்குரலில் நிரவப்பட்டிருந்தாலும்......

அது கனடாவில் வாழும் தமிழ்மக்களில் எத்தனை வீதம்?

ஏதோ இடக்கிறது...

முக்கியவிடயம் பரப்புரையின் அத்திவாரத்தில் தெளிவான கருத்துக்களை மாற்று இனத்திடம் கொண்டு செல்லமுடியாதபடி

ஏதோ இடறி இருக்கிறது...

சிந்தியுங்கள்!

கண்டுபிடியுங்கள்!

தொடரும் நிகழ்வுகளில் நிரவுங்கள்!

எதுகும் இடறிநிக்கவில்லை. பலர் எகிறி நிக்கின்றனர். ஆமாம் உங்களை போன்றவர்கள். எமது எழுச்சி பற்றி தெரியாமல், அலம்பிக்கொண்டிருக்கிறீர்க

பரப்புரைக் கருத்துக்களை இவ்விடத்தில் பகிர்ந்து கொள்வோமே...

திரு.ஆதிவாசி ரொம்ப குழம்பி போயிருக்கார்!

ஒரு இடத்தில் இருப்பவனோடு - எந்த வழியில் நீங்கள் - தொடர்பு கொண்டாலோ- கருத்து எழுதினாலோ- நீங்க எங்க இருக்கிங்க எண்ணு சொல்லணும் இல்லையா?

சரி இப்போ- சொல்லுங்க - கனடா ல இருக்கிறவங்க - நிறைய உணர்ச்சி படுறாங்க - ஓகே- நீங்க எங்க இருந்து இதை - உணர்ச்சிவச படாம இருந்து -எடுத்து விடுறீங்க?

சும்மா- கேள்விதான் அது - பதில் கட்டாயம் இல்ல- ஆனா - இவ்ளோ உணர்ச்சிவசம் - தேவையா?

பை-த வே - ஆதிவாசி - ஒண்ணு கேக்கலாமா?

அது- எல்லாளன் - எங்க? 8)

வர்ணன் அது எப்படியப்பா ஆதிவாசி குழம்பியதாய் கற்பனை பண்ணி இரசிக்கிறீர்..?

மூன்று இலட்சம் பேர் உள்ள கனடாவில் மூன்று பேர் கருத்தில்

ஆதிவாசி குழம்புவதா?.......

என்ன சொல்கிறோம் என்பதையே புரியாமல் சோளனாக

பொங்குகிறார்கள்.......

இவர்கள் ஆரம்பத்திலிருந்து அதாவது 'புலம் பெயர்ந்தோர் பணி"யை

ஆறுதலாக இன்னொரு முறை வாசித்துப்பார்க்கும்படி ஆதிவாசியாகிய

அடியேன் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

வாசிப்புக்குச் சிபார்சு செய்யும் ஆதிவாசி

முடிந்தால் அதில் இருக்கும் கேள்விக்கு விடை பகிரலாமே :roll:

தன்ர வீட்டுக்க இருக்கிற குப்பைதெரியல அதுக்குள்ள அடுத்தவன் வீட்டுக்க குறைபிடிக்க வந்திட்டார்.

அருவி நீர் இவ்வளவு பச்சைக் குழந்தையா?....

வேகம் இருக்கிற அளவுக்கு விவேகமும் இருக்கவேணும்.

சாதாரணமா ஆதிவாசி கருத்திற்கே இப்படிக் குய்யோ...

முறையோ.... என்று குதிச்சா......

நீங்கள் எப்படிப் பரப்புரைப் போரில் வெற்றிவெற முடியும்?

ஒரு பெரும் வல்லரசின் கீழ் அமுக்கப்பட்டிருக்கும் மாற்று இனங்களுக்கிடையில்

இப்படித்தான் உணர்ச்சிவசப்பட்டு படபடக்கப்போகிறீர்களோ?

இங்கு ஆதிவாசி எழுதிய விடயங்களையே.......

தெளிவாக நோக்குந்திறன் அற்ற நிலையில் இருக்கும் உங்களிடம்

எதைப் புரியவைக்க முடியும்?

ஆதிவாசியின் பணி என்ன?

அதன் கனதி என்ன?

காலம் பதில் சொல்லும்.

உங்களுக்கே உங்களை உணர்த்தும் ஆதிவாசி

இது ஆதிவாசி என்பவருடைய தற்பெருமையா? அல்லது சுயபுராணம் பாடுகின்றாரா? காலம் உம்மை யார் என்று சொல்ல நீர், காந்தியுமல்ல, தலைவரும் அல்ல, முதலில் உங்கள் சுய புராணத்தை நிறுத்தி, உம்மை நீரே அறிவாளியாக காட்டுவதையும் நிறுத்தி, கொஞ்சம் அறிவு பூர்வமாக சிந்தித்து காட்டு வாசிகள் குணத்திலிருந்து நாட்டுக்கு வந்து சேருமையா அதற்க்கு பிறகு மற்றவங்களுக்கு அறிவுரை சொல்லலாம் மூஞ்சூறு தான் போக காணல்ல அதுக்க விளக்கு மாத்த வேற காவிறதுக்கு நிக்குது. :evil:

ஐயா ஆதிவாசியே இங்கே யாரும் குய்யோ முறையோ என்று குதிக்கவில்லை. எங்களிற்கு விவேகம் இருக்க வேண்டும் உங்களிற்கு அது இருக்கிறதா என்று ஒரு தடவை சரி பார்த்துக்கொள்ளுங்கள். வர்ணங்களால் வித்தை காட்டுவதில் இருந்து புரியவில்லையா யார் குதிக்கிறார்கள் என்று. ஏற்கனவே கனடிய தமிழ் மக்களை எதிர்க்கவேண்டும் என்று நீங்கள் யாழ்களம் புகுந்துள்ளீர்கள் என்று நீங்களே வேறு ஓர் இடத்தில் கூறி இருக்கிறீர்கள். அவ்வாறான ஓர் எண்ணத்துடன் இங்கு வந்திருக்கும் உங்களிற்கு அனைத்தும் தப்பாகவே தெரியும் என்பது யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. கனடிய தமிழ் மக்கள் தாம் செய்ய வேண்டியவற்றை செய்து கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை காலம் உணர்த்தும். அப்போது அது பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

இது ஆதிவாசி என்பவருடைய தற்பெருமையா? அல்லது சுயபுராணம் பாடுகின்றாரா? காலம் உம்மை யார் என்று சொல்ல நீர், காந்தியுமல்ல, தலைவரும் அல்ல, முதலில் உங்கள் சுய புராணத்தை நிறுத்தி, உம்மை நீரே அறிவாளியாக காட்டுவதையும் நிறுத்தி, கொஞ்சம் அறிவு பூர்வமாக சிந்தித்து காட்டு வாசிகள் குணத்திலிருந்து நாட்டுக்கு வந்து சேருமையா அதற்க்கு பிறகு மற்றவங்களுக்கு அறிவுரை சொல்லலாம் மூஞ்சூறு தான் போக காணல்ல அதுக்க விளக்கு மாத்த வேற காவிறதுக்கு நிக்குது. :evil:

வணக்கம் பறவைகளே!

தற்பெருமை, சுயபுராணம்...??????

ஆதிவாசிக்குப் பெருமையையும்...புகழையும் நீங்களாகவே

தங்கத்தாம்பாளத்தில் வழங்கும்போது.......????????

மூஞ்சூறு போகக் காணேல்லை விளக்குமாற்றைக் காவுதாம்...

கவனியுங்க தான் போக இயலாத பாதையில் தன்னைவிடப் பெரும்

பொருளை நகர்த்த நினைக்கிறதே....

அதுதான் முயற்சி!

வெற்றியா? தோல்வியா? என்பது மூஞ்சூறுக்குத் தெரியாது.....

இருப்பினும் வெற்றியடைவேன் என்ற நம்பிக்கையே அதன் முயற்சியின்

மூலாதாரம்.....

மூஞ்சூறின் புதிய சிந்தனையோடு

ஆதிவாசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.