Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர்ந்தோர் பணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • Replies 71
  • Views 9.7k
  • Created
  • Last Reply

ஹாய்..ஹாய்...ஹாய்...கந்தப்ஸ்...

மூன்று பொம்மைகள் தத்துவமா?....

ஆதிவாசியின் புதுத் தத்துவத்தை பார்க்கிறீர்களா?

இது எப்படி?????????

three_monkeys.jpg

அலட்டல் ஆதிவாசி

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கிறது

நாங்கள் இங்கே பேசுவது சாதாரண தமிழர்களும் அவர்களது அரசியல் விடுதலை பற்றிய விழிப்பான பார்வைகளும், போராட்டத்திற்கு பண உதவிக்கு மேலால் என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற கருத்துக்களும்.

உதாரணமாக ஒன்றை சொல்லலாம்.

இப்போ லண்டனில் பேசப்படும் ஈழபதிஸ்வரர் ஆலயம்.

அதன் உண்மையை எல்லாருக்கும் சொல்லி இருக்க வேண்டும். பொது மக்கள் சேர்ந்து செய்ய ஒழுங்கான தகவல்கள் கொடுக்கப்படவில்லை. இக்கோவில் போராட்டத்தோடு தொடர்புபட்டு ஒரு இழுக்கையே ஏற்படுத்தி தந்து விட்டது.

போராட்த்திற்கு சில உபத்திரபங்கள் வருதென்றால் ,மக்களாக சேர்ந்து அதை காப்பாற்றும் அளவுக்கு அரசியல் விளிப்பாக இருக்கவேண்டும்

பணம் கொடுத்தால் போது என்ற அளவில் இருந்தால் புலியால் மாத்திரம் ஒன்றும் செய்யமுடியாது.

எல்லாரும் கறுப்பு யுூலை நிகழ்வுக்காக பிஸியாக்கும்.....

நடக்கட்டும் நடக்கட்டும்......

ஆமா... நாம மட்டும் இங்க என்னத்தை......வெட்டுறம்.....பிடுங்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில் ஆதிவாசி யார் தெரியுமா? மந்தியல்ல! ஆதிபகவான் தான் ஆதிவாசி அவரைப் போய் மந்தி கிந்தியென்று கிண்டல் பண்றீங்க!

ஆகா.... அறிமுகத்தில் ஆதிவாசி பயங்கரப் பிளானோட பொறி வச்சுக் காத்திருந்ததை யாருப்பா சொன்னாங்க?

இடம் மாறித்தடம் போடுகிறீர்!

இதயத்தை :oops: இடுப்புத் துணியாக்கி :oops: மானத்தை வாங்கி :evil: மரவுரி

தரிக்கச் செய்து.....

ஆரம்பத்திலிருந்தே அடியேனுக்கு ஆப்படிக்கும் அல்லி

ஆதி ஒன்றும் :lol: அரிச்சுனன் :) அல்ல அல்லி காலடி பற்ற.....

வாயுபுத்திரன்.... அநுமன்தம்பி... கதை சுற்றுவதில் களங்கள் கண்டவன்....

அல்லிகாவின் ஆப்புக்கு ஆதிவாசி கதை சுழற்றவேண்டிவரும்.

:lol::lol::lol:

அல்லியோடு போராட கதை துடைக்கும் ஆதிவாசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனடாவிலும் 83 ஆம் ஆண்டு யுூலைமாதம்; தென்னிலங்கையில்

இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ்மக்களை நினைவு கூருமுகமாக 'சாவிலும் வாழ்வோம்" நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. 24-07-2006 திங்கள் மாலை

5மணியிலிருந்து 9 மணிவரை நிகழ இருக்கிறது.

ரொரன்ரோ பெரும்பாகத்தில் என்பது வரைக்கும் தெரியும்.

மிகுதி அறிவித்தல்கள் தொடரும்..........

வல்வை சகாறா

இதுவரைக்கும் இந்த விடயம் எனக்குத் தெரியாது. நன்றி வல்வைசகாரா. இதுபற்றி ஊடகங்களில் எந்தவித அறிவித்தலும் வந்ததாகத் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாரும் கறுப்பு யுூலை நிகழ்வுக்காக பிஸியாக்கும்.....

நடக்கட்டும் நடக்கட்டும்......

ஆமா... நாம மட்டும் இங்க என்னத்தை......வெட்டுறம்.....பிடுங்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவரைக்கும் இந்த விடயம் எனக்குத் தெரியாது. நன்றி வல்வைசகாரா. இதுபற்றி ஊடகங்களில் எந்தவித அறிவித்தலும் வந்ததாகத் தெரியவில்லை.

மிக மிக விரைவில் எங்கும் அறிவித்தல்கள் துண்டு பிரசுரங்கள் வெளிவரும் சுயிந்தன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போ லண்டனில் பேசப்படும் ஈழபதிஸ்வரர் ஆலயம்.

அதன் உண்மையை எல்லாருக்கும் சொல்லி இருக்க வேண்டும். பொது மக்கள் சேர்ந்து செய்ய ஒழுங்கான தகவல்கள் கொடுக்கப்படவில்லை. இக்கோவில் போராட்டத்தோடு தொடர்புபட்டு ஒரு இழுக்கையே ஏற்படுத்தி தந்து விட்டது.

போராட்த்திற்கு சில உபத்திரபங்கள் வருதென்றால் ,மக்களாக சேர்ந்து அதை காப்பாற்றும் அளவுக்கு அரசியல் விளிப்பாக இருக்கவேண்டும்

பணம் கொடுத்தால் போது என்ற அளவில் இருந்தால் புலியால் மாத்திரம் ஒன்றும் செய்யமுடியாது.

வணக்கம் நேசன் உங்கள் மற்றைய கருத்துக்கள் பற்றி நான் கருத்துக்கூற விரும்பவில்லை. ஆனால் ஈழபதீஸ்வரர் பிரச்சினையை பூதாகாரமாக மாற்றியது தேசியத்துக்காதரவான (சில) ஊடகங்கள். அவை முதலில் மாறட்டும். எதிரியோ துரோகியோ, செய்யாதவற்றை, செய்ய மறந்தவற்றை, எமது தமிழ் தேசியத்தின் பெயரைச் சொல்லி செயற்ப்படும் (சில) ஊடகங்கள் செய்து முடித்திருக்கின்றன. முன்னாள் "தினமுரசு" போல. இவர்களும் வெளிவருவார்கள்.

எல்லாரும் கறுப்பு யுூலை நிகழ்வுக்காக பிஸியாக்கும்.....

நடக்கட்டும் நடக்கட்டும்......

ஆமா... நாம மட்டும் இங்க என்னத்தை......வெட்டுறம்.....பிடுங்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் நடைபெறும் நிகழ்வுகளை மேலே தரப்பட்டுள்ள

இணையத்தளங்களில் காணலாம்.

நன்றி சங்கதி

வல்வை சகாறா

  • 3 weeks later...

புலம்பெயர்ந்தோரை உறங்க அனுமதிக்க இயலாது....

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

பதிவின் விழிக்கசிவில் தோய்ந்து விழி கசிய

எவரொருவர் போரின் கோரத்திற்கு முகம் கொடுத்து காயமுற்றோ, பேதலித்தோ, மானபங்கப்படுத்தப்பட்டோ, கண்முன்னே உறவுகள் இராணுவக்கரங்களில் அவதியுற்றோ, உறவுகள் செத்து வீட்டுக்குள் சிதைமூட்டி எரித்தோ, அல்லது புழுத்து நெளிய நெளிய அடக்கம் செய்ய இயலாமல் மனங்குமுறியோ, வாழ்ந்திருப்பார்களானால் அந்த அழுகையையும் அவமானத்தையும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது... ஆனால் புலம்பெயர் வாழ்நிலை அவ் அநுபவங்களை நீறு புூத்த நெருப்பாக்கி தணித்து நிற்கிறது. ஊதி தணல் மூட்ட வேண்டிய எழுதுகோல்கள் உறங்கிக் கிடக்கின்றன. என்ன செய்யலாம்? ஊடகங்கள் சினிமாவோடும், மெகாத் தொடர்களோடும், விழாக்களோடும், உலாக்களோடும் வீணான நோக்கில் விரைவாகத் தங்களை வளர்ச்சியடைய வைக்கின்றன. மக்களுக்குள் உணர்வுகள் இருக்கத்தான் செய்கிறது ஆனால் கூர்மை குன்றி தீட்டுவதற்கோ, புழுதி தட்டுவதற்கோ வீரியம் மிக்கவர்கள் வெளிப்படாதிருக்கிறார்கள் போலும் அப்படியே வெளிப்படும் சிலரும் ஒன்றிணைந்து செயலாற்ற முடியாமல் பொருளாதாரமும் வாழ்விடச்சூழலும் முடக்கிப் போடுவதை உணரமுடிகிறது.....

இன்றும் கூட யாழில் எம்மக்கள் மனிதக் கேடயங்களாக ஆக்கப்பட்டு 'உயிர் தரித்து இருக்கிறார்களா?" என்பதே பெருங்கேள்வியாக இருக்கிறது. விழாக்கள் செய்பவர்களைக் குற்றம் சொல்ல முடியாது. ஏனெனில் அவர்களைவிட அத்தகைய முயற்சிகளுக்கு ஆதரவு நல்கி வெற்றியடைய வைக்கும் மக்களைத்தான் குற்றம் சாட்ட முடியும். தாயக உணர்வு பாசம் என்பதெல்லாம் ஒவ்வொருவர் நெஞ்சிலும் பிறக்க வேண்டும். சொல்லிக் கொடுத்து வருவதல்ல உணர்வும், தாயகப் பற்றும் அது தன்னால் பிறக்க வேண்டும். தாயகத்திற்காகவே தற்கொடை செய்யும் தியாகம் நிறைந்த வீரமக்களைப் பெற்ற ஒரு சமுதாயம் புலம் பெயர் தேசங்களில் தம்முகம் தொலைக்கும் தம்போக்கை உணர்ந்தால் மாத்திரமே இவற்றிருந்து மீட்சி கிடைக்கும்.

http://www.eelampage.com/?cn=28182

விழாக்கள் செய்பவர்களைக் குற்றம் சொல்ல முடியாது. ஏனெனில் அவர்களைவிட அத்தகைய முயற்சிகளுக்கு ஆதரவு நல்கி வெற்றியடைய வைக்கும் மக்களைத்தான் குற்றம் சாட்ட முடியும். தாயக உணர்வு பாசம் என்பதெல்லாம் ஒவ்வொருவர் நெஞ்சிலும் பிறக்க வேண்டும். சொல்லிக் கொடுத்து வருவதல்ல உணர்வும், தாயகப் பற்றும் அது தன்னால் பிறக்க வேண்டும்.

உண்மைகளை அள்ளி வந்த வசனங்கள். ஆனால் மக்களையும் முழுக்க முழுக்க குற்றம் சொல்ல முடியாது. பொங்குதமிழ் உரிமைக்குரல் சாவிலும் வாழ்வோம் போன்று ஒவ்வொரு ஒன்றுகூடல்களிலும் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு தமது தாயக பாசத்தை வெளிப்படுத்தினார்கள். இதை நாம் மறக்க முடியாது. பிழை முன்னெடுப்பவர்கள் பின்செல்பவர்கள் என இரண்டு தரப்பிலும் உள்ளது. முன்னெடுப்பவர்கள் தமது செயற்பாடுகளை வெறும் உணர்ச்சியை மட்டும் மையப்படுத்தி எடுக்காமல் அது எந்தளவுக்கு எமது நிலைப்பாட்டைச் சர்வதேசத்திற்குச் சொல்லவல்லது என்பதையறிந்து எடுக்கவேண்டும். எடுத்துக்காட்டாக சாவிலும் வாழ்வோம் கூட்டத்தைப் பற்றிக் குறிப்பிடலாம். அடுத்து புலம்பெயர்ந்தோர் பணியென்று வரும்போது தனிப்பட்ட முரண்பாடுகளையும் பிரச்சனைகளையும் மறந்து ஒரே குடையின் கீழ் வரத் தயாராக இருக்கவேண்டும். நேற்று என் காதில் விழுந்த செய்தியின்படி இது ஒரு நிறைவேறாக் கனவாகவே இருக்கப்போதோ என்ற பயம் மனதில் தொற்றிக்கொண்டுவிட்டது. விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பத்தில் விட்ட தவறை முடிவிலும் விடப்போகின்றோமா? :cry: அடுத்தது பின்செல்பவர்கள் எந்த நேரமும் ஒத்துழைப்பை வழங்கத்தயாராக இருக்கவேண்டும். இதைவிட ஈழப்போராட்டத்தை வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகளை இனங்காணுவதுடன் அவர்களுக்கான ஆதரவை முற்றாக நிறுத்தவேண்டும். இதைவிட இன்னொருவரை நம்பியிருக்காமல் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நீங்களே முன்னின்று ஒரு பணியை முன்னெடுக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். இவற்றைவிட்டுவிட்டு வெள்ளி பார்த்துக்கொண்டிருந்தால் ஒன்றும் நடைபெறாது.

சுஜிந்தன்..... ஆதிவாசி கருத்தாடும் நிலைக்கு அப்பால் வார்த்தைகளில் எழுதமுடியாமலும்,

வாய்விட்டு அழமுடியாமலும் தாயகம் வாழ் உறவுகளை எண்ணி மனம் குமுறி கொண்டிருக்கும்

நிலையில் விடுதலை வியாபாரிகளையும், தாயகம் மறந்த உறவுகளையும்

பற்றி அலசி ஆராய என்ன இருக்கிறது?............

முடிந்தால் அவர்களும் நாளைய தினம் புலம்பெயர்ந்த தேசங்களில் நடைபெறும்

கவன ஈர்ப்புடன் கூடிய துக்கதினத்திற்கு தங்கள் பங்களிப்பை நல்குவார்கள் என்று எதிர்பார்ப்போம்.

துக்கம் பகிர்வதற்கும் அழைப்பை எதிர்பார்ப்பார்களா?

சாவீட்டிலும் முதல் மரியாதையையும், முடிசூட்டலையும்

எவரேனும் எதிர்பார்த்தால் அவர்களை மனிதர்களாக எண்ணமுடியுமா?

z4642886.jpgவிழி நீர் கசிய ஆதிவாசி

கடந்த சில தினங்கள் நடந்த நிகழ்வுகள் என்னை இவ்வாறு பேசத்தூண்டிவிட்டது. இந்த கொடுமையான நிகழ்வுகள் மத்தியிலும் தமது சுயநலத்திற்காகச் செயற்படும் மனிதர்களை ஒருபோதும் நாம் மன்னிக்கக்கூடாது.

இன்று கனடாவில் நான்கு இடங்களில் உண்ணாநிலை நிகழ்வுகளும் கவனயீர்ப்பு போராட்டங்களும் நடைபெறுகின்றன. எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலையில் இருந்து பிற்பகல் 3 மணிவரை உண்ணாவிரதமும் கவனஈர்ப்பு நிகழ்விலும் பங்குபற்றிவிட்டுத் திரும்பிய வரைக்கும் மக்கள் ஆரம்பத்தைவிட மாலையில் அதிகமாக இக்கவனஈர்ப்பில் பங்குபற்றுவார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. இன்னும் இந்நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சுஜிந்தன்..... ஆதிவாசி கருத்தாடும் நிலைக்கு அப்பால் வார்த்தைகளில் எழுதமுடியாமலும்,

வாய்விட்டு அழமுடியாமலும் தாயகம் வாழ் உறவுகளை எண்ணி மனம் குமுறி கொண்டிருக்கும்

நிலையில் விடுதலை வியாபாரிகளையும், தாயகம் மறந்த உறவுகளையும்

பற்றி அலசி ஆராய என்ன இருக்கிறது?............

ஒட்டாவா ஒன்றுகூடலில் புரிந்ததா நான் ஏன் இந்த நேரத்தில் இதைப் பற்றிக் கதைத்தேன் என்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.