Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அஜீவன் அண்ணாவுடன் யாழ் கள உறவுகள் ஓர் இனிய சந்திப்பு

Featured Replies

தமிழோவியம் ஸ்ரீகாந்த் மீனாட்சியேதான்!

(பிஞ்சு மனம் பற்றி இங்கே அவர்..............)

http://kurangu.blogspot.com/2006/07/blog-post.html

ஆகா...........

குறும் பட விழா ....கனடாவில என்று...........

திருப்பி பழசை ஞாபகப் படுத்திறீங்களே எல்லாள மஹாராஜா? :P

நிச்சயம் தொடர்பு கொள்கிறேன்.

நன்றி அஜீவன் ....நான் அவரல்ல....அவர் நானல்ல..... :D:D

எதிர்பார்த்திருக்கிறேன்

-எல்லாள மஹாராஜா-

  • Replies 226
  • Views 34.9k
  • Created
  • Last Reply

எனது அமெரிக்க - கனடாவுக்கான முதல் பயணம் இது .4

washiton.jpg

கார் நகரும் போதே

சிறீகாந்

தான் தாமதமாக வந்த காரணத்தை சொல்லி

என் மனதை ஆசுவாசப்படுத்த முயன்றார்.

அதனாலலோ என்னவோ

"எதிர பாருங்க அஜீவன் ............."

என்று எதிர்திசை வாகன நெரிசலை வேறு காட்டினார்.

இதென்ன இவருக்கு மட்டுமல்ல.

யாருக்கும் நடக்கக் கூடிய ஒன்றுதான்.

தெரியாத ஒரு தேசத்தில்

நான் வந்து இறங்கிய போது

யாரையும் காணோமே என்ற ஒரு தவிப்பு

மனதுக்குள் ஏற்பட்டதே தவிர

அதைக் கோபம் என்ற சொல்ல முடியாது.

தொலைபேசியில் பேசியிருந்தாலும்

காரில் போகும் போதுதான் நாங்கள் கொஞ்சம்

மனம் விட்டு பேசினோம் என்று சொல்லாம்.

எதையும் நட்பாய் பேசிய தன்மை

நளினமான பேச்சு என்பன

அவரை அன்பானவர் என்பதை

எனக்கு உணர்த்தியது.

அதை அவரது வீட்டுக்குள் போனவுடன்

யதார்த்தமாகவே உணர்ந்தேன்.

நான் உள்ளே போனதும்

சிறீகாந்தின் மனைவி பிரியா

சிரித்த முகத்தோடு அன்பாய் வரவேற்றார்.

"வாங்க பயணமெல்லாம் நல்லாயிருந்திச்சா........... "

என்ற சிறீகாந்தின் மனைவி பிரியாவின் வார்த்தைகள்

என்னை ஊருக்கே அழைத்துச் சென்றது.

பலநாள் பழகியவர் போன்ற தன்மை

தொலைபேசியில் பேசியிருந்ததால் ஏற்பட்டிருக்கலாம்.

அவர்களின் மகள் ஓடி வந்து

சிறீகாந்திடம் செல்லமாக ஒட்டிக் கொண்டாள்.

அவர்களது வாழ்வு முழுவதும்

அவளுக்காகவே வாழ்வதான நிலையை

காண முடிந்தது.

என்னை மகளுக்கு அறிமுகம் செய்தார்கள்.

நான் குழந்தைகளுடன் உடனே பழகுவதில்லை.

காரணம் குழந்தைகள் எப்போதுமே

புதிய ஒருவரைக் கண்டவுடன் ஒட்டிக் கொள்ளாது.

அவர்களது மனதுக்கு நம்மை ஏற்றுக் கொள்ள

கொஞ்சம் அவகாசம் வேண்டும்.

இவர்கள் மட்டும்தான் அங்கே என்றாலும்

ஊரிலிருந்து பிரியா அம்மா வேறு வந்திருந்தார்கள்.

ஏற்கனவே

நான் சிறீகாந் அவர்களோடு தங்குவதாகத்தான்

ஏற்பாடுகள் இருந்தது.

பிரியா அம்மா வந்திருந்ததால்

என்னை சிவா வீட்டில் தங்க ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இதை காரில் வரும் போது சிறீகாந் என்னிடம்

சொன்னார்.

அங்கே கொஞ்ச நேரம் அவர்களோடு

பேசி ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின்

பிரியா எங்களுக்கான மாலை டிபனை

செய்து தந்தார்.

அதில் ஸ்பெசலாக ஊர் அயிட்டங்கள்

அம்மா தயவில் இணைந்து அதிசுவையாகின.

ஊர் மணம் கமழ அதுவும் காரணமாயின.

அமெரிக்கா என்ன

அந்த சந்திர மண்டலமே போனாலும்

ஊர் வாசனை மாறத கனிவான உபசரிப்போடு

உணவுகள் பரிமாறப்படும் போது

மனது களிப்புறுவதை சொல்ல வார்த்தைகளே இல்லைதான்.

சாப்பிடும் போதே

"நீங்க என்ன பண்றீங்க?"

என்ற என் கேள்விக்கு............

"குழந்தையை பார்த்துக் கொண்டு

வீட்டில் நடன வகுப்புகளை நடத்துகிறேன்" என்கிறார் பிரியா மெல்லிய புன்னகையோடு.

"ஓ........ கலைக் குடும்பம்தான்" என்று

நான் சொல்லவும்

" நீங்க நினைக்கிற அளவு பெரிய ஆளில்லலை " என்ற வார்த்தை

உடனே வந்து விழுகிறது.

உண்மைதான்

அவர் ஒல்லிதான்.

அதைவிட இன்னும் உடல் சீராக இருக்க

வீட்டுக்குள்ளேயே சைக்கிள் பயிற்சி வேற செய்கிறார்.

"நடன பயிற்சி நடத்திற அறையிலதான்

உங்க வேர்கசொப்பை நடத்தப் போறீங்க அஜீவன்.

ஒருமுறை பாருங்க......" என்கிறார் சிறீகாந்.

எனக்கு பிடித்திருந்தது.

ஓ சுப்பர் என்கிறேன்.

அவர்களோடு இருந்த கொஞ்ச நேரமும்

என் பயணக் களைப்பை இல்லாமல் பண்ணியதென்றே சொல்ல வேண்டும்.

"இன்னும் கொஞ்ச நேரத்தில சிவா வீட்டுக்கு போகணும்." என்கிறார் சிறீகாந்.

ஓ.........என்று ரெடியாகிறேன்.

அதிலிருந்தே தெரிகிறது அவரது பஞ்சுவாலிட்டி.

என் மனதுக்குள் சிரித்துக் கொள்கிறேன்.

வீட்டிலுள்ளவர்களிடம் விடைபெற்று சிவா வீட்டை

நோக்கி சிறீகாந்தோடு பயணமாகிறேன்.

20 -25 நிமிட டிரைவிங்.

வீடு வந்தாச்சு என்றார்.

அது எனக்கு முதலில் வீடு மாதிரியே தெரியவில்லை.

SivaHose%20Block.jpg

அது என்னவோ

அரசு அலுவலங்கள் போல் தெரிந்தது.

"இதுதான் அஜீவன்........... வாங்க" என்று சொல்லி

சிறீராம் முன்னால் போக நான் அவரைத் தொடர்ந்தேன்.

வீட்டு அழைப்பு மணியை அழுத்தி காத்திருந்தால்

வந்து கதவை திறந்த சிவாவைப் பார்க்க

எனக்கு வியப்பாக இருந்தது?

தொடரும்..................

அஜீவன்...!

நன்றாக இருக்கின்றது. கொஞ்சம் கொஞ்சமாக எழுதுகிறீர்கள் என்ற குறையைத் தவிர வேறு இல்லை.

மணியனின் பயணக் கட்டுரை வாசிப்பது போல இருக்கின்றது. உங்களுடைய சினிமா பற்றிய கட்டுரைகளும் சமீபத்திலேயே படிக்க முடிந்தது.

ஈழத்து கலைஞர்களின் பேச்சு வழக்கு பற்றி அதிகம் கவலைப்பட்டிருந்தீர்கள். அப்போ சினிமா என்பது உலக மீடியா என்பது மிகைப்படுத்தலோ...?

-எல்லாள மஹாராஜா-

அஜீவன்...!

நன்றாக இருக்கின்றது. கொஞ்சம் கொஞ்சமாக எழுதுகிறீர்கள் என்ற குறையைத் தவிர வேறு இல்லை.

மணியனின் பயணக் கட்டுரை வாசிப்பது போல இருக்கின்றது. உங்களுடைய சினிமா பற்றிய கட்டுரைகளும் சமீபத்திலேயே படிக்க முடிந்தது.

-எல்லாள மஹாராஜா-

கொஞ்சமாக எழுத பல காரணங்கள் உண்டு எல்லாளன்.

நீட்டி எழுத காலம் இடம் தருவதில்லை.

இது ஒன்று.

சுருக்கமாக எழுதும் போது அதிகம் சிந்திக்க வைக்கச் சொல்லலாம்.

இது ஒன்று.

பெரிய கட்டுரைகளைக் கண்டால் எனக்கே படிக்க மனம் வருவதில்லை.

அதுபோல மற்றவர்களும் இருக்கலாம் என்று

சுருக்கி எழுதுவதுண்டு..........

இதுவும் ஒன்று?!

எப்படியும் உங்கள் கருத்துகளை கிரகித்துக் கொள்கிறேன். :P

நன்றி!

அஜீவன்...!

ஈழத்து கலைஞர்களின் பேச்சு வழக்கு பற்றி அதிகம் கவலைப்பட்டிருந்தீர்கள்.

அப்போ சினிமா என்பது உலக மீடியா என்பது மிகைப்படுத்தலோ...?

-எல்லாள மஹாராஜா-

பிரச்சனைகளை நேரடியாக மனம் விட்டு பேசினால் தீர்க்கலாம்.

அது பேசும் தோரணை மற்றும் பேசும் தன்மை ஆகிவற்றை மட்டுமல்ல

சொல்லும் விதத்தையும் பொறுத்து இருக்கிறது.

சொல்பவரை கேட்போருக்கு பிடித்திருந்தாலும்

சொல்லும் கருத்தும் நிச்சயம் பிடிக்கும்.

சினிமா என்பது உண்மையிலேயே உலக மீடியாதான்

சினிமா தெரிந்தவர்களுக்கு.

அதில் சந்தேகமேயில்லை.

நாடக பாணியான ஒளிப்பதிவுகளைப் பார்த்து

பழகிவர்களுக்கு

உலக சினிமாவை புரிந்து கொள்ள முடியாது.

உலக சினிமாக்களை புரிந்தவர்களால்

நாடக பாணியான ஒளிப்பதிவுகளையும் புரிந்து கொள்ள முடியாது.

இவர்களுக்கு அந்த மொழி தெரியாவிட்டால்? :lol:

தனிமெயில் அனுப்பினேன் பதிலில்லையே?

அஜீவன்..!

உங்கள் சினிமா பற்றிய கட்டுரையில் உங்கள் ஒரு குறும்படம் வெளியிடப்பட்டபோது எம்மவர் 'பேச்சு வழக்கினை' அல்லது எம்மவர் 'பேச்சுத் தமிழை' புரிந்து கொள்ள முடியாது இந்திய நண்பர்கள் குறை பட்டதாக...குறிப்பிடப் பட்டிருக்கின்றது.

அதனால் தான் அப்படிக்கேட்டிருந்தேன். சினிமா என்பது பேசும் மொழி வழக்கினால் தான் கூற வந்த கருத்தை கூறமுடியாது போய்விடுமா? அப்படிக் கூற முடியாது போய்விடின் நிட்சயம் உலக மொழியாக இருக்க முடியாது.

என்னால் அதனை ஒத்துக் கொள்ள முடியவில்லை. மொழி தெரியாவிட்டாலும் அது தரும் மெஸேஜ் புரிந்து விடும்.

மற்றும் உங்கள் தனி மடலுக்கு - உங்கள் கேள்விகளுக்கான பதிலினை என்னிடமே கேட்டுக் கொள்கிறேன். கனடிய மண்ணிலும் ஒரு ஆரோக்கியமான சினிமா சூழலைக் கட்டியெழுப்புவதே எனது எண்ணமாக இருக்கிறது.

ஆரம்ப நிலையில் இருக்கும் என் போன்றவர்கள் உங்களைப் போன்றவர்களை எவ்விதத்தில் பயன் படுத்த அல்லது பங்கு கொள்ள வைக்க முடியும் என்பது தான் எனது தற்போதைய கேள்விகள்.

நான் அவராக முடியாது..... கசப்பான அனுபவங்களில் காலத்தை வீணாக்குவதை நானும் விரும்ப மாட்டேன்.

ஒரு புதிய தொடக்கம் எவ்வாறு இருக்க வேண்டுமென உங்கள் அனுபவங்கள் கூறுகிறது. பகிர்ந்து கொள்ளுங்கள் முடியுமானால்....

அன்புடன்

-எல்லாள மஹாராஜா-

இந்த விடயத்தை இப்போது தான் யான் கண்டு வாசித்தறிந்தேன்...........வரவேற்கப

அஜீவன்..!

உங்கள் சினிமா பற்றிய கட்டுரையில் உங்கள் ஒரு குறும்படம் வெளியிடப்பட்டபோது எம்மவர் 'பேச்சு வழக்கினை' அல்லது எம்மவர் 'பேச்சுத் தமிழை' புரிந்து கொள்ள முடியாது இந்திய நண்பர்கள் குறை பட்டதாக...குறிப்பிடப் பட்டிருக்கின்றது.

அதனால் தான் அப்படிக்கேட்டிருந்தேன். சினிமா என்பது பேசும் மொழி வழக்கினால் தான் கூற வந்த கருத்தை கூறமுடியாது போய்விடுமா? அப்படிக் கூற முடியாது போய்விடின் நிட்சயம் உலக மொழியாக இருக்க முடியாது.

என்னால் அதனை ஒத்துக் கொள்ள முடியவில்லை. மொழி தெரியாவிட்டாலும் அது தரும் மெஸேஜ் புரிந்து விடும்.

மற்றும் உங்கள் தனி மடலுக்கு - உங்கள் கேள்விகளுக்கான பதிலினை என்னிடமே கேட்டுக் கொள்கிறேன். கனடிய மண்ணிலும் ஒரு ஆரோக்கியமான சினிமா சூழலைக் கட்டியெழுப்புவதே எனது எண்ணமாக இருக்கிறது.

ஆரம்ப நிலையில் இருக்கும் என் போன்றவர்கள் உங்களைப் போன்றவர்களை எவ்விதத்தில் பயன் படுத்த அல்லது பங்கு கொள்ள வைக்க முடியும் என்பது தான் எனது தற்போதைய கேள்விகள்.

ஒரு புதிய தொடக்கம் எவ்வாறு இருக்க வேண்டுமென உங்கள் அனுபவங்கள் கூறுகிறது. பகிர்ந்து கொள்ளுங்கள் முடியுமானால்....

அன்புடன்

-எல்லாள மஹாராஜா-

இதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை எல்லாளன்.

நாம் ஒரு பொருளை விற்கும் போது

அது வாங்குவோருக்கு எவ்வளவு தூரம் பயன் படும் என்பதை சொல்லியே விற்கிறோம்.

அத்தோடு நமக்கு அந்த பொருள்

எந்த அளவு முன்னேற்றத்துக்கு உறுதுணை செய்தது

என்று வேறு விளம்பரப்படுத்துகிறோம்.

இப்படி பலவும் ஒருவகையில் விளம்பர உத்திதான்.

அது போல

இலங்கையருக்கும் இந்தியர்களுக்கும்

புரிந்துணர்வு விடயத்தில் சில வித்தியாசங்கள் இருக்கின்றன.

இலங்கையர் எதையும் உடனேயே கிரகித்துக் கொள்ளும் தன்மை கொண்டவர்கள்.

இந்தியர்கள் கல்வியூடாக பெற்ற தன்மைகளை வைத்தே

கிரகித்துக் கொள்கிறார்கள்.

இவர்களில் மலையாளிகள் வேறுபட்டவர்கள்.

ஆனாலும் கலைத்திறன் என்பது

இந்திய மண்ணின் மகிமை என்றே சொல்ல வேண்டும்.

இருப்பினும் தெரியாத ஒன்றை

உடனே புரிந்த கொள்ள இவர்களால் முடியாது.

நமது கலைப் படைப்புகளின் தன்மைகளை

விபரித்தால் அதை மனம் திறந்து ஏற்றுக் கொள்வதுடன்

அதை மெச்சவும் இந்தியர்கள் தயங்கமாட்டார்கள்.

இலங்கையர்

இதற்கு நேர் மாறாக இருப்பார்கள்.

எதை சொன்னாலும் அதில் ஏதாவது குறை காணவே முற்படுவார்கள்.

அது சரியாக இருந்தாலும் கூட............

அது கலைஞர்களிடமும் பார்க்கலாம்?!

இவர்களுக்கு

மற்றவர் விமர்சனங்களை ஏற்க மனசே வருவதில்லை.

தான் பிடித்த முயலுக்கு 3 கால்களில்லை

வாலோடு சேர்த்து 5 கால்கள் என்று வாதாடுவார்கள்.

இதுவே பெரும் பிரச்சனை.

பெரும்பாலான ஊடகங்கள் கூட

படைப்பை விமர்சிப்பதை விட்டு

படைப்பாளியை தொட்டே விமர்சிக்கிறார்கள்.

இது எந்த படைப்பாளியாக இருந்தாலும் அவர்களுக்கு நாம் செய்யும் கொடுமை.

உண்மையில்

நல்ல திறமையுள்ள கலைஞர்கள் யார் வாலையும்

பிடித்து முன்னேற வேண்டியதேயில்லை.

அவர்களது கலைத் திறனை வளர்த்துக் கொண்டு

நல்லதொரு படைப்பை வழங்கினாலும்

உலகம் அவர்களை நோக்கும்............

இல்லாமல்

எத்தனை கோடி படைப்புகளை கொட்டினாலும்

அது கடைசியில் குப்பைக்குள்தான் போய் சேரும்.

பெரும்பாலான ஊடகங்கள் கூட  

படைப்பை விமர்சிப்பதை விட்டு  

படைப்பாளியை தொட்டே விமர்சிக்கிறார்கள்.  

இது எந்த படைப்பாளியாக இருந்தாலும் அவர்களுக்கு நாம் செய்யும் கொடுமை.  

உண்மையில்  

நல்ல திறமையுள்ள கலைஞர்கள் யார் வாலையும்  

பிடித்து முன்னேற வேண்டியதேயில்லை.  

அவர்களது கலைத் திறனை வளர்த்துக் கொண்டு  

நல்லதொரு படைப்பை வழங்கினாலும்  

உலகம் அவர்களை நோக்கும்............  

:idea: உண்மையான விசயம். :P

நன்றி சோழியன்.

http://video.google.com/videoplay?docid=-1...866406854336108

மேலே உள்ள இணைப்பில்

சுவிஸ் ஜெர்மன் திரைப்படத்தின் ஒரு பகுதியை காணலாம்.

ஒளிப்பதிவு : அஜீவன்

ஒரு சிறிய வில்லன் பாத்திரமும் செய்திருக்கிறேன்.

http://video.google.com/videoplay?docid=-4...726927667963518

நன்றி!

அஜீவன் அண்ணா வில்லனா சூப்பறாத்தான் இருக்கிறார்....!

அஜீவன் அண்ணா வில்லனா சூப்பறாத்தான் இருக்கிறார்....!

:P :P :P

அஜீவன் அண்ணா கதவு திறந்த விதத்துல நான் பயந்து போனன். :oops:

நல்லாத்தான் இருக்கு ஆனால் ஒன்றும் புரியவில்லை :roll:

அஜீவன் அண்ணா வில்லனா சூப்பறாத்தான் இருக்கிறார்....!

:P :( :P நன்றி தலா

:P :P :P

அஜீவன் அண்ணா கதவு திறந்த விதத்துல நான் பயந்து போனன். :oops:

நல்லாத்தான் இருக்கு ஆனால் ஒன்றும் புரியவில்லை :roll:

நல்ல நேரம் கனடாவில சந்திச்ச பிறகு பார்க்கிறீங்க? :( :P

ஜெர்மன் மொழி புரிந்தவர்களுக்கு புரியும் ரசிகை. :roll:

"அரிய சாதனைகள் செய்யப்படுவது வலிமையினால் அல்ல; விடாமுயற்சியினால்தான்"

-ரசிகை :P

அஐிவன் அண்ணா எங்களை சந்திக்கும்போதும் இப்படி எதாவது பெட்டி கொண்டு வந்தினிங்களோ?

நல்லாயிருக்கு. கதைப்பது புரிந்தால் இன்னும் நல்லாயிருக்கும்.

அஐிவன் அண்ணா எங்களை சந்திக்கும்போதும் இப்படி எதாவது பெட்டி கொண்டு வந்தினிங்களோ?

நல்லாயிருக்கு. கதைப்பது புரிந்தால் இன்னும் நல்லாயிருக்கும்.

ரமா

பெட்டி கொண்டுதான் வந்தேன்.

ஆனால் அதில் உடுப்புகள்தான் இருந்தது. :lol:

நன்றி ரமா!

இது உண்மையிலே எதிர்பாராத ஒரு விபத்து.

நான் இந்த ஜெர்மன் படத்தை ஒளிப்பதிவு செய்தேன்.

இத் திரைப்படத்தின் இயக்குனர் (நண்பர்) கூட ஒரு ஒளிப்பதிவாளர்தான்.

அத்தோடு இவர் ஏகப்பட்ட கார்டூன் மற்றும் பின்குவின்

படங்களை இயக்கியவர்.

இத் திரைப்படத்தின் ஒளிப்பதிவை செய்து கொண்டிருக்கும்

போது வில்லனாக ஒருவர் நடிக்க வந்தார்.

அவர் முகபாவங்கள் இயக்குனருக்கு பிடிக்கவில்லை.

அதை நீ செய்யேன் அஜீவன் என்றார்.

நான் நடிக்கும் பகுதியை இயக்குனர் ஒளிப்பதிவு செய்தார்.

நான் வில்லன் ஆனேன்.

அந்த உரையாடலின் தமிழாக்கம் இதோ:-

தொமிங்கஸ் எங்கே?

அது நான்தான்.

தொமிங்கஸ்.

பாப்லோ தொமிங்ககஸ்.

மெக்ஸிகன்.

இந்தியன் அல்ல.

அது நான்தான்.

நீ வந்தது அந்த பெட்டிக்காகத்தானே?

ஆமாம்

அந்த பெட்டி இருக்கா

பணத்தோடு இருக்கா...........

அடுத்த திங்கட்கிழமை காலை வரை.......

திங்கட்கிழமை காலை வரை

வட்டியோடு.....அதிகமாய் 20 ஆயிரம்.

ஊகும்..........அதிகமாக 50 ஆயிரம்.

இல்லை 20 ஆயிரம்.

20 ஆயிரம் என்று நான் ஏற்கனவே போனில் பேசியிருக்கிறேன்.

எங்கே அந்த தொமிங்கஸ்.

மெக்ஸிகன்காரன்.

கொப்பத்தாமி சயிசே ( கெட்ட வார்த்தைகளோடு சிட் என்பது)

அமைதி அமைதி

கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்.

50 ஆயிரம். 50 ஆயிரம்தானே?

எல்லாம் சரி........

அமைதி அமைதி.........

எதற்காக இந்த பணம் உனக்கு?

வியாபாரத்துக்காக!

திங்கட்கிழமை காலை

வட்டியோடு.....அதிகமாய் 50 ஆயிரத்துடன்.........

டேய் உன்னை என்னால் கண்டு பிடிக்க முடியும்.

(ஓடினால்)

F U.

வில்லன் வேடம் நல்லா இருக்கே... வேறும் எதாவது படத்தில் நடித்திருக்கிறீர்களா?

நல்ல நேரம் கனடாவில சந்திச்ச பிறகு பார்க்கிறீங்க? :lol: :P

ஜெர்மன் மொழி புரிந்தவர்களுக்கு புரியும் ரசிகை. :roll:

"அரிய சாதனைகள் செய்யப்படுவது வலிமையினால் அல்ல; விடாமுயற்சியினால்தான்"

-ரசிகை :P

ஹீ ஹீ எனக்கு ஒன்றும் பயமில்லை.

விளக்கத்துக்கு நன்றீ அஜீவன் அண்ணா :P :P

Sbc_sg_logo.jpg

ஒரு மரம் நிழலை தேடுகிறது!

ஆக்கம் மற்றும் கதாபாத்திரத்தில்

அஜீவன்

(தொலைக்காட்சி நாடகம்)

(தவறுதலாக ஏற்பட்ட இடையூறால் ஆரம்பத்தில்

இருந்தவை அழிந்து விட்டது. மன்னிக்கவும்)

உங்களையெல்லாம் பார்த்து நான்தான்........... :D

உங்களையெல்லாம் பார்த்து நான்தான்........... :lol:

எங்களைப்பார்த்தா??? :shock: :shock:

ஒரு மரம் நிழலைத்தேடுகிறது அதில நீங்களா??

அடையாளமே தெரியலை வித்தியாசமாக

இருக்கிறீங்கள் :P ஆனால் வடிவா இருக்கிறீங்கள் :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஜீவன் நீங்கள் நன்றாகத்தான் வில்லத்தனம் செய்கின்றீர்கள். நேரில் மட்டும் சாதுவாக இருக்கின்றீர்கள் :lol::D:lol:

ஒரு மரம் நிழலைத்தேடுகிறது அதில நீங்களா??

அடையாளமே தெரியலை வித்தியாசமாக

இருக்கிறீங்கள் :P ஆனால் வடிவா இருக்கிறீங்கள் :wink:

நன்றி ரசிகை.

அது நானேதான்.

இப்போதைக்கும் அப்போதைக்கும் வித்தியாசம் இருக்கவே செய்யும்?

சிங்கப்பூரில் பிரச்சனைகள் என்றால் என்ன என்றே

தெரியாமல் மகிழ்வாக வாழ்ந்த காலத்தில்............ரசிகை அது.

http://www.ajeevan.com/singapore.html

ஒரு மரம் நிழலை தேடுகிறதும் ஒரே மாதிரி தெரியலாம்!

Sbc_sg_logo.jpg

http://www.youtube.com/watch?v=hHbovwC5waQ

(சிங்கை தொலைக்காட்சி நாடகம்)

அஜீவன் நீங்கள் நன்றாகத்தான் வில்லத்தனம் செய்கின்றீர்கள். நேரில் மட்டும் சாதுவாக இருக்கின்றீர்கள் :lol::D:lol:

வியாசன் சாதுமிரண்டால்?! :) :P :lol:

ஆரம்பகால கொச்சை தமிழ் அப்பாவியை பாருங்கள் :P

வித்தியாசமாக ஒரு ...............

http://www.youtube.com/watch?v=a8IDNRLY0pM

மதன மோக ரூப சுந்தரா!! எங்க சார் இதுகள இவளவு காலமும் வைச்சிருந்தீங்க.. சிங்கப்பூரில ஒரு கலக்கு கலக்கித்தான் இருக்கிறீங்க.. பாராட்டுக்கள். :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.