Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன?

Featured Replies

  Dr.M.K.Muruganandan ஆல்

>unwantedpregnancy.jpg?w=225நான் இவ்வாறு எழுதுவது பலருக்கு கோபத்தை விளைவிக்கலாம். சமூக கலாசாரத்தை கேவலப் படுத்துவதாகப் படலாம். ஆனால் சமூக அக்கறை கொண்ட ஒருவன் என்ற முறையில் இதைச் சொல்லியே ஆக வேண்டும்.

சென்ற சிலகாலங்களில் மூன்று பெண்கள் வேண்டாத கர்ப்பத்தை சுமந்து கொண்டு வந்திருந்தார்கள்.

அவர்களுக்கு என்னால் உதவ முடியவில்லை என்பது உண்மைதான்.

ஆயினும் நபரைக் குறிப்பிடாது விடயத்தை பகிர்ந்து கொள்வது அவசியமாகிறது.

கணவன் நீண்டகாலம் வெளிநாட்டில் இருக்க இங்கு கர்ப்பமானாள் ஒருத்தி.

சென்ற ஆண்டு வன்செயலில் கணவனை இழந்தவள் வயிற்றில் மூன்று மாதக் கர்ப்பத்துடன் செய்வதறியாது திகைத்து நின்றாள்.

சிறு தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் கன்னிப் பெண்ணின் சிறுநீர்ப்பரிசோதனையில் அவளுக்கு கர்ப்பம் தங்கியிருப்பது நிச்சமாயிற்று.

கேட்கவே கோபம் வருகிறதா?

கேவலம்! ஆடாத ஆட்டம் போடும் சிறுக்கிகள் என்று ஏசத் தோன்றுகிறதா?

rape5b15d.jpg?w=225
இவை அவர்கள் தாமாக விரும்பிக் கொண்ட பாலுறுவின் விளைவா?

அல்லது வன்புணர்வின் பலனாக ஏற்பட்டதா என்பதைக் கூட கேட்கவில்லையே நீங்கள்.

காரணங்கள் எதுவாக இருந்தாலும் பாலுணர்வு என்பது எல்லோருக்கும் பொதுவானது. அது நிறைவு செய்யப்பட வேண்டியது என்பதில் மறு கருத்து இருக்க முடியாது.

ஆனால் இவர்களது பாலுறவுச் செயற்பாடானது சற்று மாறானது என்பது உண்மையே. அதாவது எமது சமூகத்தின் ஒழுக்க வரன்முறைகளை மீறியதாக இருக்கிறது.

சமூக, சட்ட ஒழுங்குகளைக் கடைப்பிடிப்பது அவசியம் என்ற போதும் அதனை மீறி ஏதாவது நடந்துவிட்டால் என்ன செய்வது?

அதனைத் தீர்ப்பதற்கான மாற்று வழி என்ன?

ஒருவனுக்கு ஒருத்தி என்பதே எமது பண்பியல் தடத்தின் மிகக் கௌரவமான அம்சமாகக் கொள்ளப்படுகிறது.

ஆனால் அதே தமிழினத்தின் இலக்கியங்கள்தாம் பரத்தைகள், விலைமாதர்கள் ஆகியோருடன் ஆடவர்கள் கொண்ட உறவு பற்றியும் சொல்லுகிறது.

குலமாதர்களை விலைமாதர்களிடமிருந்து வேறுபடுத்தி ஒழுக்கக் கோவைகளை முன்னோடியாக இயற்றியதும் எமது பண்டைய இலக்கியங்களே.

எனவே அத்தகைய வரன் மீறிய உறவுகள் பண்டைக் காலம் முதல் இருந்து வருவது உண்மையே.

சரியோ பிழையோ அவற்றிற்கு முகம் கொடுக்க வேண்டியது சமூக உணர்வுள்ள ஒவ்வொருவரதும் கடமையாகும்.

இதனை வேறு யாரோ ஒருவரது பிரச்சனையாக அன்றி, உங்களோடு சம்பந்தப்பட்ட ஒருவரது பிரச்சனையாக எண்ணிப் பாருங்கள். உங்கள் சினேகிதி, சகோதரி, அல்லது மனைவி அல்லது அம்மா என்று எண்ணிப் பாருங்கள்.

கேட்கவே மனசு கூசுகிறது, திகில் அடைகிறது அல்லவா?

யாருக்கும் எதுவும் நடக்கக் கூடிய காலம் அல்லவா இது?

எனவே இப்பிரச்சனையை திறந்த மனத்துடன் அணுகுவது அவசியம்.

illegalabortions1.gif?w=241வேண்டப்படாத கர்ப்பம் தங்கிவிட்டால் என்ன நடக்கிறது?

கருக்கலைப்புச் செய்கிறார்கள். கருக்கலைப்பு இங்கு சட்டபூர்வமானது அல்ல என்பதால் ஒளித்து மறைத்து செய்கிறார்கள். எந்தவிலை கொடுத்தேனும் செய்கிறார்கள்.

ஒளிவு மறைவாகச் செய்யப்படுவதால் மருத்துவர் அல்லாதவர்களால்தான் பெரும்பாலும் செய்யப்படுகிறது.

பயிற்சி அற்றவர்கள் செய்வதால் இசகுபிசகாகச் செய்யப்பட்டு பல உயிரிழப்புகள் நடக்கின்றன.

அத்தோடு இவற்றில் பல, சுகாதார முறைப்படி செய்யப்படாததால் கிருமித் தொற்றுகள் ஏற்பட்டு மேலும் இழப்புகள் தொடர்கின்றன.

தனது பிரசைகளின் நல்வாழ்க்கை, ஆரோக்கியம், உயிர் உத்திரவாதம் ஆகியவற்றை காக்கும் கடமை அரசுக்கு உண்டு.

சட்ட உருவாக்கத்தில் உள்ளவர்கள் பண்டைய வாழ்வின் பெருமைகளை மட்டும் எண்ணிக் கொண்டிருக்காது கண்ணைத் திறந்து இன்றைய நடப்பைக் கவனிக்க வேண்டும். அவர்கள் பிரச்சனையை மனிதாபிமான உணர்வுடன் அணுக வேண்டும்.

ch06_image08abortion.gif?w=225
கருக்கலைப்பை சட்டபூர்வமானதாக்க வேண்டும்.

ஆயினும் கருக்கலைப்பு என்பது கருத்தடை முறைகளுக்கான மாற்று முறை அல்ல என்பதையும் தெளிவாகப் புரிந்து கொள்வது அவசியம்.

எமது நாட்டைவிட நீண்ட காலாசார வரலாற்றைக் கொண்ட இந்திய அரசு கருக்கலைப்பை பல வருடங்களுக்கு முன்பே சட்ட பூர்வமாக்கிவிட்டது.

எனவே சமூக அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் இப் பிரச்சனை பற்றி வெளிப்படையாகப் பேசுவது அவசியம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

http://hainalama.wordpress.com/2009/09/13/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81/

ஆண்கள் பலர் கர்ப்பமடைந்ததுபோல் வேண்டாத வயித்தை வைத்திருக்கார்கள்.அதுகும் ஒருவித வேண்டாத கர்ப்பம்தான்.அதுக்கும் ஒரு வழி சொல்லுங்கபா குண்டன்.

கருக்கலைப்பை சட்டபூர்வமானதாக்க வேண்டும்.

 

ஆயினும் கருக்கலைப்பு என்பது கருத்தடை முறைகளுக்கான மாற்று முறை அல்ல என்பதையும் தெளிவாகப் புரிந்து கொள்வது அவசியம்.

 

எமது நாட்டைவிட நீண்ட காலாசார வரலாற்றைக் கொண்ட இந்திய அரசு கருக்கலைப்பை பல வருடங்களுக்கு முன்பே சட்ட பூர்வமாக்கிவிட்டது.

 

எனவே சமூக அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் இப் பிரச்சனை பற்றி வெளிப்படையாகப் பேசுவது அவசியம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

வைத்தியர் இலங்கையில் சட்டபூர்வமானதாக்க ஏன் முடியம் உள்ளது என்பதை விளக்கவில்லை. அதை அவர் வெளிப்படையாக கூறவில்லை.

 

அதேவேளை சட்டபூர்வமாக்கிய நாடுகளில் இந்தப்பிரச்சைனை கருத்தடை முறைகளுக்கு மாற்று முறையாகவும் உள்ளது.

 

மொத்தத்தில் இந்த சமூகப்பிரச்சனை ஒரு சிக்கலான விடயம்.

வைத்தியர் இலங்கையில் சட்டபூர்வமானதாக்க ஏன் முடியம் உள்ளது என்பதை விளக்கவில்லை. அதை அவர் வெளிப்படையாக கூறவில்லை.

 

 

 

இலங்கை ஒரு பெளத்த நாடு. பெளத்தம் உயிர் கொலைகளை அனுமதிப்பதில்லை. எனவே தான் இலங்கையில் கருக்கலைப்பினைச் சட்டபூர்வமானதாக்கவில்லை.

 

தமிழர்களின் உயிரின் மதிப்பு இந்த வகைக்குள் அடங்க மாட்டாது என்று சிங்கள பெளத்தம் சொல்கின்றது,

இலங்கை ஒரு பெளத்த நாடு. பெளத்தம் உயிர் கொலைகளை அனுமதிப்பதில்லை. எனவே தான் இலங்கையில் கருக்கலைப்பினைச் சட்டபூர்வமானதாக்கவில்லை.

 

தமிழர்களின் உயிரின் மதிப்பு இந்த வகைக்குள் அடங்க மாட்டாது என்று சிங்கள பெளத்தம் சொல்கின்றது,

 

ஆக இதுவும் சிங்களத்தில் தமிழர்களின் மீதான ஒரு மனித உரிமை மீறல்தான் !

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அயர்லாந்து அநியாயயத்தினையும் வாசியுங்கோ!!! 

 

சட்டங்களும், மதக்கோட்பாடுகளும்... சில சமயங்களில் மன்னிக்க முடியாத தவறிழைத்துவிடுகின்றன. அதற்கு சமீபத்திய உதாரணம்தான் இந்த துர்மரணம்!

 

கர்நாடகாவைச் சேர்ந்த சவீதா, பல் மருத்துவம் படித்தவர். அயர்லாந்து நாட்டின் கால்வே நகரில் பொறியாளராகப் பணியாற்றும் பிரவீன் என்பவரைக் கரம்பிடித்து, அங்கே குடியேறினார். சமீபத்தில் கருதரித்த சவீதா, 17 வாரங்கள் ஆன நிலையில், கடுமையான முதுகுவலியால் அவதிப்பட்டிருக்கிறார். பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட, 'கரு இயல்பான நிலையில் இல்லை' என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, 'கருவைக் கலைத்து விடுங்கள்' என்று டாக்டர்களிடம் பிரவீன் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

 

ஆனால், 'இது கத்தோலிக்க கிறிஸ்தவ நாடு. மதச்சட்டப்படி கருவைக் கலைக்கக் கூடாது’ என்று மறுத்துள்ளனர், மருத்துவர்கள். இந்நிலையில் கருவிலிருந்த குழந்தை இறந்துபோக, தொப்புள் கொடி வழியாக சவீதாவின் ரத்தத்தில் நச்சு கலந்து, அக்டோபர் 28 அன்று பரிதாபமாக இறந்துபோனார்.

 

இது, அயர்லாந்தை மட்டுமல்ல... உலகையே அதிர வைத்துள்ளது. அயர்லாந்து மக்கள், வீதியில் இறங்கி போராடத் துவங்கியுள்ளனர்!

 

இதைப் பற்றி சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் சாதனாவிடம் பேசியபோது, ''நம் நாட்டில், கருக்கலைப்பு விஷயத்தில் 'மெடிக்கல் டெர்மினேஷன் ஆஃப் பிரக்னன்ஸி' (medical termination of pregnancy) என்கிற விதிமுறை உண்டு. கருவைச் சுமக்கும் நிலையில் தாய் இல்லை... தாய் - சேய் உயிருக்கு கருவால் ஆபத்து... பாலியல் பலாத்காரம்... இப்படி தவிர்க்க முடியாத காரணங்களால், உயிருடன் இருக்கும் கருவை கலைப்பது இங்கே அனுமதிக்கப்பட்டுள்ளது. இதேபோலத்தான், உலகின் பல நாடுகளிலும் சட்டப்படியான கருக்கலைப்பு நடக்கிறது.

 

சவீதா விஷயத்தில், அவருடைய உயிரைக் காக்க அந்த மருத்துவர்கள் தொழில் தர்மத்தோடு முன்வந்திருக்க வேண்டும். ஆனால், சமய சட்டத்தைக் காரணம் காட்டி செய்ய மறுத்தது துரதிர்ஷ்டவசமானது. தற்போது, அந்நாட்டு பெண்களே போராடக் கிளம்பியிருப்பது... வரவேற்கத்தக்கதே. இனியாவது இப்படியான சம்பவங்கள் நிகழாமல் இருக்க... சவீதா விதைக்கப்பட்டிருக்கிறார் என்று ஆறுதல் அடைவதைத் தவிர, வேறென்ன சொல்ல!'' என்றார் சோகத்துடன் டாக்டர் சாதனா.

 

உயிரைப் பறிப்பதற்குப் பெயர்தான் சட்டமா..?

 

 

avl13.jpg

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

சவீதாவின் மரணம் சர்ச்சைக்குரியதாகி உள்ளதோடு.. சட்ட மாற்றங்களுக்கும் நீதிமன்றத்தால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

இதில் அவர்கள் ஒன்றைச் செய்திருக்கலாம்.. அந்தப் பெண்ணை இங்கிலாந்திற்கு கூட்டி வந்து விடயத்தைச் சொல்லி காப்பாற்றி இருக்கலாம்.

 

என்ன பிரச்சனையோ.. அவ்வாறு அவர்கள் செய்ய முனையவில்லை..??!



எதிர்பாராத கர்ப்பம் அல்லது வேண்டாத கர்ப்பம் இவ்வாறான விடயங்களில் பெண்கள் இரட்டைக் கவனத்தோடு செயற்பட்டால் இயன்றவரை இவற்றைத் தவிர்க்க முடியும். ஆனால்.. பெண்கள் இன்று.. சிந்தனையற்றவர்களாக ஆண்களின் இச்சைக்கு இசையும் சராசரி விலங்குகள் போல வாழத்தலைப்பட்டுள்ளனர். என்ன இவர் ஆண்களைக் கண்டிக்காமல் பெண்களைக் கண்டிக்கிறார் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால்.. ஆண்களுக்கு கர்ப்பப் பிரச்சனையே இல்லை. அநேகம் பாதிக்கப்படுவது பெண்கள் தானே. அந்த வகையில் பாதிப்புக்குள்ளாபவர்களே தம்மில் அதிக கவனம் செலுத்தனும்..!

 

இதனால் தான் மூதாதையர் பெண்களுக்கு சில கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்தனர். இன்று அது அவசியம் இல்லை என்று கருத்தக்க அளவிற்கு கல்வி அறிவு வளர்ந்துவிட்டாலும்.. பெண்களின் அறிவு இன்னும் அதனைப் பிரயோகிக்கும் அளவிற்கு பக்குவப்படவில்லை..! :)

  • கருத்துக்கள உறவுகள்

இதில் அவர்கள் ஒன்றைச் செய்திருக்கலாம்.. அந்தப் பெண்ணை இங்கிலாந்திற்கு கூட்டி வந்து விடயத்தைச் சொல்லி காப்பாற்றி இருக்கலாம்.

 

 

நெடுக்ஸ்,
 
நீங்கள் சொல்வது தவறானது. 
 
அவர்களது நோக்கம் கருக் கலைப்பு அல்ல, இங்கிலாந்து அல்லது இந்தியா போய் செய்வதற்க்கு.
 
இங்கே அந்த தீடீர் சுகவீனம் அடைந்த கர்ப்பவதிக்கு, உயிர் காக்க செய்ய வேண்டிய கருக் கலைப்பினை செய்யாமல் தவிர்த்ததே மரணத்துக்கு காரணம். 
 
மேலும் பெண்கள் தெளிவோடு தான் இருகின்றார்கள். நீங்கள் சொல்லும் இந்த கருத்தில் எனக்கு உடன் பாடு இல்லை: சிந்தனையற்றவர்களாக ஆண்களின் இச்சைக்கு இசையும் சராசரி விலங்குகள் போல வாழத்தலைப்பட்டுள்ளனர்.
 
ஒர்-இரு பெண்களின் சில சந்தர்பவாத தவறுக்காக எல்லோரையும் அவ்வாறு நீங்கள் எவ்வாறு கூற முடியும் என புரியவில்லை.
 
எனது வேலைதத்தளத்தில் ஒரு வெள்ளை இன பெண் வேலை போய் விடும் எனும் பயத்தில் தனது 'மேனேஜர்' உடன் நெருங்கினார்.  
 
சில வாரங்களில் அந்த 'மேனேஜர்' வேலை இழந்தவுடன், தனது முட்டாள்தனம்  குறித்து நொந்து போனார்.
 
இதனை என்னென்பது? 

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி.. அந்தப் பெண் குறித்த சிசுவின் வளர்ச்சி தொடர்பில் உள்ள ஆபத்தை அறிந்து தானே அதனைக் கலைக்க கேட்டிருக்கிறார். அந்த நிலையில்.. அதைச் செய்ய மறுக்கும் இடத்தில் இருந்து கொண்டு எதைச் செய்ய முடியும். அதனால் மறுப்புக்குரிய காரணங்களோடு வேறு இடத்தில் மருத்துவர்களின் உதவியை நாடி இருந்தால்.. அவர்கள் இவர்களுக்கு உதவி செய்திருக்கக் கூடும். அநாவசிய உயிரிழப்பு தவர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால்... இதனை ஒரு பருமட்டாகவே தான் சொல்ல முடியும். இந்தக் case study பற்றி முழுவதும் தெரியாமல் கருத்துச் சொல்ல முடியாது தான்.

 

மேலும்..

 

உங்கள் வெள்ளைக்காரப் பெண்மணியைப் பாருங்கள்.. வேலையில் ஏற்படும் சவால்களை உடலைக் காட்டி சமாளிக்க முற்பட்டதன் விளைவு... இதுதான் புத்திசாலித்தனமற்ற ஒரு அணுகுமுறை என்கிறோம். இதே இடத்தில் ஒரு ஆண் இருந்திருந்தால்.. அவனால்.. அந்தச் சவாலை எதிர்கொள்ள வேண்டி வந்திருக்கும்.. அதற்கேற்ப அவன் சூழ்நிலையைத் தெரிவு செய்து இப்போ வேறு வேலையிலும் இருப்பான். பெண்கள் எதனையும் இலகுவாக கடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கு உடற்கவர்ச்சியையும் பயன்படுத்த அவர்கள் ஒருபோதும் பின்நிற்கமாட்டார்கள். சபல ஆண்களின் சபலத்தை கூட்டுவதும் பெண்களின் நடவடிக்கைகளே என்றால்.. அது மிகையல்ல..! இந்த வகையான அணுகுமுறைகளே பெண்கள் தொடர்பில் ஆண்கள் தவறான பார்வை பார்க்க நேரிடுகிறது. அதுவே அவர்களுக்கு ஆபத்தாகவும் முடிகிறது.

 

எனக்கு பெண்கள் மீது வெறுப்பில் இதனை எழுதவில்லை. உலகில் அவர்களின் நடத்தைகளை வைத்து எழுதுகிறேன். அதற்காக எல்லாப் பெண்களும் எல்லா ஆண்களும் கெட்டவர்கள் என்பது அல்ல அர்த்தம். தவறான வழியில் போகும் இருபாலாராலும் நல்லவர்களும் ஆபத்தை எதிர்நோக்க வேண்டி இருப்பதை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டி உள்ளது. கல்வி கற்றும் அதனை சவால்களை சந்திக்க.. உருப்படியாக பாவிக்க முற்படாதவர்களாக இருக்கிறார்கள். அவ்வாறான கோழைகளே இவ்வாறு வழி தவறியும் போகின்றனர். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
நெடுக்ஸ்,
 
அந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்ட பின்னர் தான் அவர்களுக்கு உயிர் ஆபத்து நிலைமை புரிந்திருக்கின்றது. ஆகவே அவர்களுக்கு நேரம் இருக்கவில்லை. போதிய நேரம் இருந்திருந்தால் காப்பாத்தப்பட்டிருக்கலாம்.
 
அடுத்து, நான் சொல்லவந்த விடயம் முழு சுயநல சந்தர்பவாதம். அதனை இருவருமே பயன் படுத்தினார்கள்.
 
உங்கள் முதல் கருத்தில் இச்சை என்பது ஆணுக்கு மட்டுமே உரியது, பெண்கள் அதற்கு உபயோகப் படுத்தப்படுகின்றனர் என்பது போல் உள்ளது. அதனையே தவறு என்கிறேன்.
 
ஆணின் வசதி, வாய்ப்பு பார்த்து, வலையில் வீழ்த்தி மயக்கும் சுயநல பெண்களைப் பற்றி கேள்விபடுகிறோமே. திட்டம் இட்டு கர்ப்பம் தரித்து (கர்ப்ப தடை மாத்திரை எடுத்ததாக பொய் சொல்லி) ஆணை பின்னர்  blackmail பண்ணும் பெண்களும் இருக்கின்றனரே.
 
இது முன்னர் நான் இட்ட பதிவு: பாருங்கள்
 
 
அண்மையில் கூட பிரேசில் நாட்டின் கால் பந்தாட்ட வீரர் இப்படி ஒரு பெண்ணிடம் மாட்டி, கடைசியில் கொலை செய்யும் அளவுக்கு போனார்.
 
 
அகவே நான் சொல்வது என்னெவெனில் பாலியல் பலாத்காரம் தவிர்ந்த ஏனையவை குறித்து பொதுவான கருத்துகளை வைப்பது சரியானது அல்ல.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.