-
Tell a friend
-
Topics
-
3
ஏராளன் · தொடங்கப்பட்டது
-
Posts
-
By விளங்க நினைப்பவன் · Posted
என்ன சொன்னார்கள் என்பதை தமிழில் தந்ததிற்கு நன்றி அண்ணா. -
ஜனாதிபதியின் வடக்கு விஜயம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் 19 MAY, 2024 | 02:37 PM ஜனாதிபதியின் வடக்கு மாகாண விஜயம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (19) நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. பாதுகாப்பு பிரிவினர், பொலிஸார், மாவட்ட அரசாங்க அதிபர்கள் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் பலரும் இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டனர். ஜனாதிபதியால் வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள், திட்டங்களுக்கு பொறுப்பான துறைசார் அதிகாரிகளின் கடமைகள், பாதுகாப்பு நடைமுறைகள், நிகழ்ச்சி நிரல் திட்டமிடல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. https://www.virakesari.lk/article/183954
-
கனமழை காரணமாகச் சிவப்பு அறிவித்தல் விடுத்த வானிலை ஆய்வு மையம்! 19 MAY, 2024 | 01:58 PM கனமழை காரணமாகச் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . இந்த அறிவிப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை (19) காலை 8.30 மணி முதல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலின் படி, நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது . களனி ஆறு, மகாவலி ஆறு, நில்வலா ஆற்றின் கரையோரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், தண்டுரு ஓயா, மஹா ஓயா, அத்தனகலு ஓயா, பெந்தர கங்கை, கிராம ஓயா, உறு போகு ஓயா, கலா ஓயா மற்றும் மல்வத்து ஓயா ஆகிய குளங்களின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/183947
-
நெடுந்தீவின் பிரதான மின் கட்டமைப்புடன் புதிய மின்பிறப்பாக்கி இணைக்கப்பட்டது! 19 MAY, 2024 | 11:49 AM நெடுந்தீவு பிரதேசத்தில் தடையற்ற 24 மணிநேர மின்சார வழங்கலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று (18) முதல் சீரான மின்சாரம் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமக்கான அவசர தேவைகளை கருத்தில் கொண்டு அதிக அக்கறையுடன் செயற்பட்டு துரித கதியில் புதிய மின்பிறப்பாக்கி பெற்றுத்தந்து, தடையற்ற மின்சார சேவைக்கு வழிவகை செய்து கொடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நெடுந்தீவு மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். முன்பாக, மின்பிறப்பாக்கிகளில் அடிக்கடி ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக நெடுந்தீவு பகுதியில் மின்சாரம் தடைப்பட்டதால் அப்பகுதி மக்கள், தாம் பல்வேறு அசௌகரியங்களை சந்திக்க நேரிடுவதாக தெரிவித்தும், அதற்கான தீர்வினை வழங்குமாறு கோரியும், இந்த பிரச்சினையை யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கு கொண்டுசென்றனர். இதையடுத்து துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்ட அமைச்சர் நெடுந்தீவுக்கு புதிய மின்பிறப்பாக்கி ஒன்றை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தார். அமைச்சரது தொடர் முயற்சிகள் காரணமாக கடந்த வாரம் கடற்படையினரது உதவியுடன் பாரிய மின்பிறப்பாக்கியொன்று கொழும்பிலிருந்து சுன்னாகம் பிரதான மின்சார நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் அந்த மின் பிறப்பாக்கி கடற்படையினரது உதவியுடன் நெடுந்தீவுக்கு கொண்டுசெல்லப்பட்டது. தொடர்ந்து, நேற்று நெடுந்தீவு மின்சார நிலையத்தில் அது பொருத்தப்பட்டு நெடுந்தீவின் பிரதான மின்மார்க்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதையடுத்து நேற்று இந்த மின்பிறப்பாக்கி மூலமாக நெடுந்தீவுக்கான மின்சார சேவை சீரான முறையில் வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக துறைசார் அதிகாரிகள் தெரிவித்துள்னர். https://www.virakesari.lk/article/183937
-
-
Our picks
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.-
- 7 replies
Picked By
மோகன், -
-
கடவுள் இருக்கிறாரா.............?
வானவில் posted a topic in மெய்யெனப் படுவது,
களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்-
- 46 replies
Picked By
மோகன், -
-
சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?
narathar posted a topic in பேசாப் பொருள்,
சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?
பேராசிரியர் சோ. சந்திரசேகரன்
இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
-
- 5 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.