Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'எங்கேயும் எப்போதும் ராஜா' மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி, - எதிர்வரும் மாசி மாதம் 16 ஆம் திகதி (2-16-2013) இல் Toronto Rogers Centre இல் நடைபெறவுள்ளது.

Featured Replies

உதாரணத்திற்கு நான் மேலே குறிப்பிட்டது போன்று உலகத்தமிழர் பேரவையுடன் சில எழுத்து வேலைகளை செய்ய இணைந்தேன். குறிப்பாக சொடுக்குவது மூலம் மின்நகல் அனுப்பும் வேலைகளை முள்ளிவாய்க்கால் நேரத்தில் ஆரம்பித்து செய்தோம். காரணம் எமது மக்களுக்கு அது இலகுவாக இருக்கும் என. பின்னர் மாதம் முன்னூறு டாலர்கள் வரை தேவையாக இருந்தது, விட்டுவிட்டார்கள்.

பின்னர் அவர்கள் பணம் கேட்டார்கள் பரப்புரை செய்ய. யாழிலும் நான் இணைத்திருந்தேன். எத்தனை பேர் உதவினார்கள் என தெரியவில்லை.  :
- ஐ.நா. மனித உரிமை தொடரில் மாற்றங்களை கொண்டு வர
- பல நாடுகளுக்கு பயணிக்க ( இலத்தீன் ஆபிரிக்க நாடுகள்)
- சனல் நாலு போன்ற செயல்பாடுகளுக்கு பணம்

எமக்காக ஐ.நா. வில் குரல் கொடுக்கும் இன்றர்சிட்டி பிரஸ் மத்தியூ லீ, ஒரு சுயாதீன பத்திரிகையாளர். அவருக்கு நாம் பணம் அனுப்ப கேட்டிருந்தேன். நான் ஒவ்வொரு வருடமும் அனுப்பிக்கொண்டு கேட்டேன்.

மொத்தத்தில்  எமது  தேவைகள் பல இலட்சங்கள் வருடத்திற்கு. ஆனால் அவர்களால் பணத்தை பெற முடியாத நிலை. மக்கள் ஆதரவு காணாமல் உள்ளது.

இவ்வாறு பல அமைப்புக்கள் பணம்  கடினம் காரணமாக மக்களுக்கு உதவ முடியாமல் அரசியல் வேலைகளை முன்னெடுக்க முடியாமல் உள்ளன. அவர்களால் இவ்வாறான பிரமாண்டமான நிகழ்வை அரங்கேற்றவும் முடியாமல் உள்ளது - காரணம் முதலீட்டு பணம் இல்லை.

பணம் இருந்தால் மக்களை காப்பாற்ற முடியும், உதவ முடியும். ஆனால் அவ்வாறான தேவைகளுக்கு நாம் பணம் செலுத்த மறுக்கின்றோம் இல்லை பணம் தருவது மிக குறைவு. அதேவேளை இவ்வாறான நிகழ்வுகள் மூலம் ஒரு சிலர் பல இலட்சங்களை உழைப்பது எனது ஆதங்கம் அல்ல.  அவர்களும் உழைத்து இவ்வாறான தேவைகளுக்கும் கொடுக்கவேண்டும் என்பதே எனது ஆதங்கம். அதை இவ்வாறான நிகழ்வுகளுக்கு போகும் தமிழர்கள் தான் கோர முடியும். அது அவர்களின் கடமையும் கூட.

தாயக விடயங்கள் சம்பந்தமாக உதவாவிட்டாலும் ஒரு கனேடிய சமூக திட்டத்திற்கு உதவலாம் உதாரணத்திற்கு ஒரு முதியோர் இல்லம், இல்லை வைத்தியசாலை இல்லை இளையோர் கலை கலாச்சார கட்டிடம்...

எந்த ஒரு சமூகமும் சமூக உணர்வு இல்லாமல் செயல்பட்டால் அது அழிந்தே போய்விடும். தனது அடையாளத்தை இழந்து விடும்.

  • Replies 90
  • Views 7.5k
  • Created
  • Last Reply

அந்த அமைப்பு மீது மக்களுக்கு நம்பிக்கை இருந்தால் நிச்சயம் கொடுத்திருப்பார்கள்.  ஒருசில அமைப்புகள் தாங்கள் மட்டுமே உழைக்க வேண்டும் என்று முன்னிற்கிறார்கள்.  ஆனால், இனிமேல் அது முடியாத காரியம்.  உங்களை நம்பி ஏமாறுவதற்கு உங்களைப் போல் மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல.  இந்த அமைப்புகள் எல்லாம் காணாமல் போகும் காலம் வெகு தொலைவில்லை.

சரி உங்களால் முடிந்தால் ஒரு  அமைப்பை கூறுங்கள், அதில் மக்கள் நம்பிக்கை வைத்து அதன் தேவைக்கு போதிய பணம் கொடுக்கும் அமைப்பை?

நான் பல அமைப்புக்குகளுக்கு கொடுப்பவன், அவர்களின் செயல்பாடுகளுக்கு ஊக்கம் தர வேண்டும் என்பதாலும், என்னால் செய்ய முடியாததை அவர்கள் வேலை , குடும்பம்  என பலத்தையும் தாண்டி உழைப்பதனாலும். அதேவேளை  அவர்கள் தவறுகள் செய்தால் அதற்குள் இருந்தே கல் வீசுவது உண்டு, வெளியால்  இருந்து வீசுவது ... எனது வீட்டிற்கு நானே கல் வீசுவது போன்றது.

  • கருத்துக்கள உறவுகள்

உதாரணத்திற்கு நான் மேலே குறிப்பிட்டது போன்று உலகத்தமிழர் பேரவையுடன் சில எழுத்து வேலைகளை செய்ய இணைந்தேன். குறிப்பாக சொடுக்குவது மூலம் மின்நகல் அனுப்பும் வேலைகளை முள்ளிவாய்க்கால் நேரத்தில் ஆரம்பித்து செய்தோம். காரணம் எமது மக்களுக்கு அது இலகுவாக இருக்கும் என. பின்னர் மாதம் முன்னூறு டாலர்கள் வரை தேவையாக இருந்தது, விட்டுவிட்டார்கள்.

பின்னர் அவர்கள் பணம் கேட்டார்கள் பரப்புரை செய்ய. யாழிலும் நான் இணைத்திருந்தேன். எத்தனை பேர் உதவினார்கள் என தெரியவில்லை.  :

- ஐ.நா. மனித உரிமை தொடரில் மாற்றங்களை கொண்டு வர

- பல நாடுகளுக்கு பயணிக்க ( இலத்தீன் ஆபிரிக்க நாடுகள்)

- சனல் நாலு போன்ற செயல்பாடுகளுக்கு பணம்

எமக்காக ஐ.நா. வில் குரல் கொடுக்கும் இன்றர்சிட்டி பிரஸ் மத்தியூ லீ, ஒரு சுயாதீன பத்திரிகையாளர். அவருக்கு நாம் பணம் அனுப்ப கேட்டிருந்தேன். நான் ஒவ்வொரு வருடமும் அனுப்பிக்கொண்டு கேட்டேன்.

மொத்தத்தில்  எமது  தேவைகள் பல இலட்சங்கள் வருடத்திற்கு. ஆனால் அவர்களால் பணத்தை பெற முடியாத நிலை. மக்கள் ஆதரவு காணாமல் உள்ளது.

இவ்வாறு பல அமைப்புக்கள் பணம்  கடினம் காரணமாக மக்களுக்கு உதவ முடியாமல் அரசியல் வேலைகளை முன்னெடுக்க முடியாமல் உள்ளன. அவர்களால் இவ்வாறான பிரமாண்டமான நிகழ்வை அரங்கேற்றவும் முடியாமல் உள்ளது - காரணம் முதலீட்டு பணம் இல்லை.

பணம் இருந்தால் மக்களை காப்பாற்ற முடியும், உதவ முடியும். ஆனால் அவ்வாறான தேவைகளுக்கு நாம் பணம் செலுத்த மறுக்கின்றோம் இல்லை பணம் தருவது மிக குறைவு. அதேவேளை இவ்வாறான நிகழ்வுகள் மூலம் ஒரு சிலர் பல இலட்சங்களை உழைப்பது எனது ஆதங்கம் அல்ல.  அவர்களும் உழைத்து இவ்வாறான தேவைகளுக்கும் கொடுக்கவேண்டும் என்பதே எனது ஆதங்கம். அதை இவ்வாறான நிகழ்வுகளுக்கு போகும் தமிழர்கள் தான் கோர முடியும். அது அவர்களின் கடமையும் கூட.

தாயக விடயங்கள் சம்பந்தமாக உதவாவிட்டாலும் ஒரு கனேடிய சமூக திட்டத்திற்கு உதவலாம் உதாரணத்திற்கு ஒரு முதியோர் இல்லம், இல்லை வைத்தியசாலை இல்லை இளையோர் கலை கலாச்சார கட்டிடம்...

எந்த ஒரு சமூகமும் சமூக உணர்வு இல்லாமல் செயல்பட்டால் அது அழிந்தே போய்விடும். தனது அடையாளத்தை இழந்து விடும்.

இதுக்கு நீங்க ரொம்ப சிரமப்படாம போராட்டத்த காட்டி அடிச்சவநிட்ட  கேட்டிருக்கலாம் 

மக்கள் வாழவேண்டும்.

சரி உங்களால் முடிந்தால் ஒரு  அமைப்பை கூறுங்கள், அதில் மக்கள் நம்பிக்கை வைத்து அதன் தேவைக்கு போதிய பணம் கொடுக்கும் அமைப்பை?

நான் பல அமைப்புக்குகளுக்கு கொடுப்பவன், அவர்களின் செயல்பாடுகளுக்கு ஊக்கம் தர வேண்டும் என்பதாலும், என்னால் செய்ய முடியாததை அவர்கள் வேலை , குடும்பம்  என பலத்தையும் தாண்டி உழைப்பதனாலும். அதேவேளை  அவர்கள் தவறுகள் செய்தால் அதற்குள் இருந்தே கல் வீசுவது உண்டு, வெளியால்  இருந்து வீசுவது ... எனது வீட்டிற்கு நானே கல் வீசுவது போன்றது.

கனடாவில் இப்போது அப்படி எந்தவொரு அமைப்பும் இல்லை.  அப்படியே புதிதாக உருவாகும் அமைப்புக்களையும் இவர்கள் தங்கள் ஆட்களை உள்ளே விட்டு சிதறடிக்கிறார்கள்.  தங்களை மீறியோ அல்லது தங்களுக்கு மேலாகவோ எந்தவொரு அமைப்பும் வருவதை இவர்கள் விரும்புவதில்லை.  அப்படி ஒரு அமைப்பு உருவாகிறது எனக் கண்டால் அந்த அமைப்பைச் சிதறடிக்க இவர்கள் எந்தவொரு எல்லைக்கும் போகத் தயங்க மாட்டார்கள்.  என்னைப் பொறுத்தவரை இப்போதைக்கு எல்லோரும் ஊர்ச்சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் தங்கள் சொந்த முயற்சியில் செய்வதே சிறந்தது.

நாங்கள் அமைப்புக்களை ஆதரிப்பது எமது மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வு கிடைக்க. இது காலத்தின் கட்டாயம்.

 இப்போதைக்கு எல்லோரும் ஊர்ச்சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் தங்கள் சொந்த முயற்சியில் செய்வதே சிறந்தது.
 
உண்மையில் எனக்கு இதற்கு பதில் சொல்வதா இல்லையா எனத்தெரியவில்லை.

நீங்கள் நாடு கடந்த அரசை ஆதரித்து எழுதியும் இருந்தவர்  :icon_idea: 

நாங்கள் அமைப்புக்களை ஆதரிப்பது எமது மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வு கிடைக்க. இது காலத்தின் கட்டாயம்.

அது உண்மைதான்.  ஆனால், அவ்வாறான ஒரு அமைப்பு உருவாவதை இப்போதிருக்கும் அமைப்புகள் விரும்பாது என்பதை நான் ஏற்கனவே கூறிவிட்டேன்.  இவ்வமைப்புகள் காணாமல் போகும்வரையோ அல்லது இவர்கள் ஊருவ முடியாதளவு ஒரு அமைப்பு உருவாகும்வரை நாம் பொறுத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.  நிச்சயம் உண்மையான உணர்வுள்ளவர்களால் நீண்ட நாட்கள் பொறுத்திருக்க முடியாது.  ஆகவே அப்படியானவர்களால் இவர்களை முடக்குமளவிற்கு நிச்சயம் ஒரு அமைப்பு உருவாக்கப்படும்.   

உண்மையில் எனக்கு இதற்கு பதில் சொல்வதா இல்லையா எனத்தெரியவில்லை.

நீங்கள் நாடு கடந்த அரசை ஆதரித்து எழுதியும் இருந்தவர்  :icon_idea: 

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தைச் சீர்குலைத்ததில் இந்த அமைப்புகள் அனைத்திற்கும் முக்கிய பங்குண்டு.  இப்போது அதுவும் இந்த அமைப்புகளில் ஒன்றாகவே ஆகிவிட்டது என்பது ஊரறிந்த விசயம்.

அது உண்மைதான்.  ஆனால், அவ்வாறான ஒரு அமைப்பு உருவாவதை இப்போதிருக்கும் அமைப்புகள் விரும்பாது என்பதை நான் ஏற்கனவே கூறிவிட்டேன்.  இவ்வமைப்புகள் காணாமல் போகும்வரையோ அல்லது இவர்கள் ஊருவ முடியாதளவு ஒரு அமைப்பு உருவாகும்வரை நாம் பொறுத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.  நிச்சயம் உண்மையான உணர்வுள்ளவர்களால் நீண்ட நாட்கள் பொறுத்திருக்க முடியாது.  ஆகவே அப்படியானவர்களால் இவர்களை முடக்குமளவிற்கு நிச்சயம் ஒரு அமைப்பு உருவாக்கப்படும்.   

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தைச் சீர்குலைத்ததில் இந்த அமைப்புகள் அனைத்திற்கும் முக்கிய பங்குண்டு.  இப்போது அதுவும் இந்த அமைப்புகளில் ஒன்றாகவே ஆகிவிட்டது என்பது ஊரறிந்த விசயம்.

அரிசி சரியில்லை என்பதற்காக சோறு சாப்பிடமலா இருக்க முடியும்?

அமைப்புக்கள் என்பனவும் அரசுகள் போன்றவை போலத்தான். அதில் குறைகள் உள்ளன என்றாலும் நாம் அரசுகளின் கீழ் தான் வாழ்கின்றோம்.

எனவே உண்மையான பற்றுள்ளவன் இந்த அமைப்புக்களுக்கு உள்ளே சென்று அடுத்த கட்டத்திற்கு நகர்த்தவே பார்ப்பான்.

ஒதுங்கி இருப்பது சுலபம். ஆனால் அடுத்த தலைமுறைக்கு ... அது இருக்காமல் போயும் விடலாம்.

1.2 மில்லியன் உழைக்கப் போகிறவர்கள் பேசாமல் கேட்ட கப்பத்தொகையான ஒரு இலட்சம் டாலர்களை கொடுத்திருக்கலாம். இத்தனை பிரச்சனை வந்திருக்காது. நாங்கள் என்ன எங்களுக்காகவா கேட்கிறோம்?

மூன்று வருசமாக, போராட்டத்திற்குச் சேர்த்த பணத்தைப் பற்றி கேள்வி கேட்காமல், மற்றவர் செய்யும் வியாபாரங்களில் நடக்கும் பணத்தைப் பற்றி கேள்வி கேட்பதே நியாயமானது.

  • கருத்துக்கள உறவுகள்

அதுவும் கணக்கு போட்டு 100 பேரில் ஒராளுக்கு 2000 காணுமாம் அது வார டிக்கெட் கே பத்தாது அவர்கள் வந்து தங்க சாப்பிட

மற்றது உதவி செய்றதும் செய்யாததும் அவர் அவரோட இஷ்டம் மற்றவர்கள் வற்ப்புறுத்த கூடா

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் கருப்பு பணத்தை வெள்ளை ஆக்கினால் என்ன வெள்ளைப்பணத்தை கறுப்பாக்கினால் என்ன உங்களுக்கு ஏன் இந்த அக்கறை?

நீங்கள் கூறிய அமைப்புகள் எல்லாம் தமிழ் மக்களுக்கு நிறைய பணிகளை செய்திருக்கிறார்கள். செய்கிறார்கள்.

அண்ணா, நீங்கள் இந்த அமைப்புகளுக்கு தொடர்ந்து உதவிவருவது மிகவும் நல்ல விடயம். நன்றி.

ஏன் இந்த அமைப்புகள் எல்லாம் சேர்ந்து ஒரு கேளிக்கை நிகழ்ச்சி நடத்தி காசு சேர்க்ககூடாது?

தனியார்கள் எல்லாம் பெரும் நிகழ்ச்சிகள் நடத்துகின்ற போது பெரும் அமைப்புகளுக்கு என்ன தடை?

ராஜா நிகழ்ச்சியின் பிளாடின விளம்பரமே $50,000!

முதலீடுகளை இலாபம் காட்டினால் இலகுவாக பெறலாம்!

பல அமைப்புக்கள் இவ்வாறான நிகழ்வுகளை செய்ய முடியாதபடி யாப்புக்கள் உள்ளன. இல்லை அவர்களுக்கு பெரிய புள்ளிகளை கூப்பிட கூடிய வலுவோ இல்லை முதலீடோ இல்லை. பலரும் வாடைகைக்கே கடினப்படுகின்றார்கள்.

கனேடிய தமிழர் அவை தாயகத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஒரு வீடு கட்டியது. அதற்காக உள்ளூர் நாட்டிய மற்றும் இசை நிழ்ச்சியை வைத்து அதில் வந்த பணத்தில் கட்டிய வீடு :

320591_4810815546269_1170175985_n.jpg

மலேசியாவில் யுவன் சங்கர்ராஜாவின் மாபெரும் சர்வதேச தமிழ் பெரும் இசை நிகழ்ச்சியில் டென்மார்க் கலைஞர்கள்..

டென்மார்க் இசைக்கலைஞர்கள் வஸந்த், அர்ச்சனா மலேசியாவில் நடக்கும் யுவனின் இசை நிகழ்ச்சியில் பாடுகிறார்கள்..

எதிர்வரும் 15.12.2012 அன்று மலேசியாவில் உலகத் தமிழ் கலைஞர்கள் ஒன்றிணையும் பொன்னான வரலாறு எழுதப்படுகிறது.. யுவன்சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியில் தமிழகப் பாடகர்கள் மட்டுமல்ல உலகம் முழுவதில் இருந்தும் தமிழ் கலைஞர்கள், திரைப்பட கலைஞர்கள் பங்கேற்று தமிழ் தாயை அலங்கரிக்கிறார்கள்.

malas.jpg

சிறீலங்கா, கனடா, இங்கிலாந்து, டென்மார்க் நாடுகளும் இந்த பேரெழுச்சியில் கரம் கோர்த்துள்ளன.

இந்த நிகழ்ச்சியில் டென்மார்க் இசையமைப்பாளர், திரைப்பட நடிகர் வஸந்த் நேரடியாக பங்கேற்கிறார், அவருடன் இணைந்து செல்வி அர்ச்சனாவும் பாடுகிறார்.
 
யுவன் சங்கர்ராஜா டென்மார்க் கலைஞர்களையும் புலம் பெயர் தமிழ் கலைஞர்களையும் இணைத்து எடுத்திருக்கும் இந்தப் பெரு முயற்சி புலம் பெயர் தமிழர் வரலாற்றில் ஒரு மகத்தான வரலாற்றுப் பதிவாகும்.
 
நடிகர்கள் சிம்பு, தனுஸ் போன்றவர்களுடன், திரைப்பட நடிகர்கள் காமடி நடிகர்கள் என்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரே விழாக்கோலம் பூணுகிறது..
 
பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கூடும் இந்த பிரமாண்டமான நிகழ்ச்சிபோல ஒரு பிரமாண்ட வேலைத்திட்டம் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
தமிழ்த்தாய் தொடர்ந்து முன்னேறுகிறாள்.. அவள் சிகரங்களைத் தொடுவாள் என்ற நம்பிக்கை பிறக்கிறது..
 
வாழ்க நிரந்தரம்.. வாழ்க தமிழ் மொழி வாழிய வாழியவே எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ் மொழி என்றென்றும் வாழியவே.. பாரதி

http://www.alaikal.com/news/?p=118787

மூன்று வருசமாக, போராட்டத்திற்குச் சேர்த்த பணத்தைப் பற்றி கேள்வி கேட்காமல், மற்றவர் செய்யும் வியாபாரங்களில் நடக்கும் பணத்தைப் பற்றி கேள்வி கேட்பதே நியாயமானது.

நீங்கள் காசு கொடுத்தவர்கள் அதை  முடக்கி வைத்திருக்கின்றார்கள் என நீங்கள் உறுதியாக நம்பினால் உங்கள் நாட்டின் காவல்துறையிடம் முறையிடுங்கள்.

கனடாவில் ஏற்கனவே நாலு இளையவர்கள் அமெரிக்க சிறைகளில் உள்ளனர். இவர்களுடன் மேலும் இரண்டு பேர் இணையும் சாத்தியங்கள் உள்ளன.

பல மில்லியன்களுடன் இவர்கள் தலைவிதி நிர்ணயிக்கப்பட்டது.

யார் இவர்களை பற்றி கவலைப்படுகின்றார்கள்?

இவர்களுக்காக பணமும் நேரமும் செலவழித்தவண்ணம் உள்ளார்கள் ஒரு சிலர். அவர்களும் பணம் கொடுத்தார்கள், முல்லிவாய்கால் வரையும் கொடுத்தார்கள். இன்றும் கொடுகின்றார்கள்.

நீங்கள் காசு கொடுத்தவர்கள் அதை  முடக்கி வைத்திருக்கின்றார்கள் என நீங்கள் உறுதியாக நம்பினால் உங்கள் நாட்டின் காவல்துறையிடம் முறையிடுங்கள்.

இனி அதிகம் இதுதான் நடக்கப் போகிறது.

இனி அதிகம் இதுதான் நடக்கப் போகிறது.

ஏன் தாமதம்?

ஏன் தாமதம்?

இவ்வளவு காலமும் நம்பியிருந்த சனங்களின் நம்பிக்கையை வைத்து, சொல்ல மாட்டார்கள் எனக் கணக்குப் போடலாம். அதற்குள் பணம் கை மாறியிருக்கும் என்பதும் உண்மை. போராட்டத்திற்குச் சேர்த்த பணம், போராளிகளுக்குப் போய்ச் சேரக் கூடாதென்பதில் இவ்வளவு காத்திரமான எதிர்ப்பு ஏன்?

Edited by தப்பிலி

 நான் எதிர்ப்பு என்பதை எதை வைத்து எழுதுகிறீர்கள்? அப்படி நீங்கள் எண்ணுவது தவறு.

தனிப்பட ரீதியில் பணம் சேர்த்தவர்கள் எல்லோரும் கள்வர்கள் என்றில்லை. பணம் சேர்த்தமைக்காக இன்றும் துன்பப்படுவார்கள் பலர் உண்டு. வாழ்க்கையை இழந்தவர்களும்  உண்டு. அவர்களை சமூகம் கவனிப்பதும் இல்லை, அவர்கள் எதிர்பார்ப்பதும் இல்லை.

தப்பிலி,

புலிகள் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட பின்னரே அதிகளவில் பணம் சேர்க்கப்பட்டது. உண்மையில் தமது வாழ்க்கையை நாட்டிற்காக ஒருவகையில் பணயம் வைத்தே இதை செய்தவர்கள் செய்தனர். இந்த சட்டபூரவமற்ற விவகாரத்தில் 'பணத்தை கொடுத்த்துவிட்டு' ஒதுங்க நினைத்தவர்களே அதிகம்.

ஆயுத  போராட்டம் வெற்றியில் முடிந்திருந்தால் பல கேள்விகள் இருந்திருக்காது.

இன்று "பணத்தை அவர் பதுக்கிவிட்டுவிட்டார்"  என்பது நியாயமான கேள்வி. ஆனால், அது சந்தர்ப்பாவாத கேள்வியும் கூட. சுயநலம் நிறைந்த கேள்வியும் கூட.

பணம் சேர்த்தவர்கள் தாம் எவ்வளவு சேர்த்தோம்? எது எங்கே? என்பதை விரும்பினாலும் நிரூபிக்க முடியாது. காரணம் - சட்டம். அதேநேரம் அவர்கள் மீது உண்மையாகவே குற்றம் இருந்தாலும் அதை நாமும் நிரூபிக்க முடியாது.

நன்றிகள்.

ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற விவாதங்களின்போது சில தகவல்களைத் தெரிவித்திருந்தார்கள். �முள்ளிவாய்க்கால் போர் இறுதிக் கட்டத்தில் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட 500 கிலோ தங்கம் எங்கே? மேலும் பிடிபட்டதாகக் கூறிய பணம் எங்கே? கே.பி.யிடமிருந்து கைப்பற்றப்பட்ட இருபதாயிரம் கோடி ரூபாய் பணம் எங்கே? என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விபரங்களை அறிவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களோ சம்பந்தனோ ஏன் ஆர்வம் காட்டவில்லை? அவ்வாறு ஐ.தே.க. கூறுவதில் உண்மை இருந்தால், அந்தப் பணம் புலம்பெயர் தமிழர்களுடையது என்பதை எவரும் மறுக்க முடியாது.

அவற்றை சொந்தமாக்கிக் கொள்ளும் உரிமை இலங்கை அரசின் சிலருக்குக் கிடையாது. அந்தப் பணம் முழுவதும் தாயகத் தமிழ் மக்களுக்கே சொந்தமானது என்பதை புலம்பெயர் தமிழர்கள் தெரிவித்துள்ளார்கள்.

எனவே, இது குறித்து ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமையாகும். அவற்றிலெல்லாம் கவனம் செலுத்தாத சம்பந்தன் தமிழரின் வாழ்வுரிமைப் பிரச்சினையைப் புரிந்துகொள்ளாமல் தவறான தகவல்களை வெளியிடுவதில் ஏன் குறியாக இருக்கின்றார்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=113149

இவ்வளவு காலமும் நம்பியிருந்த சனங்களின் நம்பிக்கையை வைத்து, சொல்ல மாட்டார்கள் எனக் கணக்குப் போடலாம். அதற்குள் பணம் கை மாறியிருக்கும் என்பதும் உண்மை. போராட்டத்திற்குச் சேர்த்த பணம், போராளிகளுக்குப் போய்ச் சேரக் கூடாதென்பதில் இவ்வளவு காத்திரமான எதிர்ப்பு ஏன்?

கனடாப் புலனாய்வுத்துறையினர் ஏற்கனவே இவர்களைக் கண்காணிப்பில்தான் வைத்திருந்தார்கள்.  அந்த வகையில் பார்க்கும்போது அவர்களிடம் இவை பற்றிய விபரங்கள் நிச்சயமாக இருக்கும்.  அவற்றுள் கைமாறிய விபரங்களும் இருக்கும்.  ஆனால் அவர்கள் காலம் எடுத்துத்தான் நடவடிக்கைகள் எடுப்பது வழமை.  ஆகவே, இவ்விபரங்கள் வெளிவருவதற்கும் நாம் இன்னும் கொஞ்சக் காலம் பொறுக்க வேண்டியிருக்கும்.  ஒருசில விடயங்கள் ஏற்கனவே வெளிவந்து விட்டன.  மற்றைய விபரங்களும் விரைவில் வெளிவரும் என நினைக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.