Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் உற்பத்திசெய்து கனடாவில் விற்பனை செய்யும் பொருட்களுக்கு எதிரான கனடியத் தமிழர்களின் புறக்கணிப்புப் போராட்டம்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனது பரம எதிரி எனக்கு ஒரு கண்தான்  போகட்டும் என்று விரும்பினான். நான் எனது இரண்டுகண்களையும் தெறிக்க தெறிக்க குத்தாமல் ஒயமாட்டேன் என்று அழுங்கு பிடியாகத்தான் வாதாடுகிறீர்கள். 

முளைவிடத் தொட்ங்கியிருக்கும் இந்த புலம் பெயர் பொருளாதாரத்தை புது புது வழி கண்டு அழித்தாத்தான் ஆகிறது என்று நிற்கிறிகள்.

1956 வரை சிங்களதேச மெல்லாம் இருந்த தமிழ்க்கடைகளை தீக்கிரையாகினார்கள். அதன் பின் உள்ளே வந்து வடக்கு, கிழக்கை நிர்மூலமாக்கினார்கள். இன்று உங்களை மாதிரிகள், மூளைக்கு மேலை மூளை செலவளித்து, எப்படி இவர்கள் தப்பி ஓடி  புலம் பெயர் நாடுகளில் ஒரு பொருளாதாரத்தை கட்டி எழுப்ப முடியும் என்று இரவு பகல்  கலங்குகிறீர்கள்.  

வெள்ளையனை விக்டோரியா சீகிரடை பாவிக்காதே என்று தமிழன் கூறலாமா? அது சிங்களவன்  சிங்கவனின் பொருளாதாரத்தை தாக்காத என்று துடிக்கிறீர்கள். 

அட போகுது தங்கள் கள்ளமனதை ஒழிக்க ஒரு சந்தர்ப்பம். "வெள்ளையனை நீங்கள் நிறுத்துங்கள். ஆனால் நான் வெளிக்கிட்டு தமிழ்ர் பாவிக்கும் பொருள்களை நிறுத்துவிக்க போகிறேன் என்று எழுத்தியிருக்காலம்". அது தான் வருகிதே இல்லையே.  மகிந்த ஒப்பந்த செய்வது போல நீ முதல் தமிழ் கடைகளை அழித்து ஒழி அதன் பின் நான் மகிந்த பாணி ஒப்பந்தப்படி உனக்கு தண்ணி காட்டுகிறேன் என்கிறார்கள். எதற்கா நீங்கள்  தமிழ் கடைகளை ஒழித்தால் மட்டும்தான் உங்கள் ஆடை ஏற்றுமதிகளை தடுக்காமல் முன் செல்லவிடுவோம் என்று தடை போடுகிற்றகள்?

நீங்கள் தமிழ் கடைகள் சென்று சிங்கள பொருள்களை பாவிக்க வேண்டாம் என்றி பிரச்சாரம் செய்ய வெளிகிட்ட போது இந்த "புறக்கணி சிறீலங்கா" பிரச்சாரம் செய்யும் ஒருவர் அதை எதிர்த்து இது வரையில் யாழில் எழுத்தியிருக்கிறார்களா? பின்னர் எதற்காக தமிழர்களை காப்பது போல நடித்து போராட்டங்களுக்கு தொடந்து முட்டுக்கட்டை போட்டு உங்கள் எஜமானர்களின் கட்டளைகளை நிறைவேற்ற கதைகளைத் திரித்து பொய்கள் எழுதுகிறீர்கள்.

துணிச்சல் இருந்தால் இன்று முதல் நீங்கள் முன்னோடியாக நின்று சிங்கள உணவுகளைளை தமிழ்ர் புறக்கணியுங்கள் என்று பிரச்சாரத்தை ஆரம்பிக்க முடியுமா? அதற்கு உங்கள் சிங்கள எஜமானர்கள் சம்மதம் தருவார்களா? அதன் பின்னர் யாழில் வந்து பார்கிறீர்களா உங்கள் போராட்டத்திற்கு எத்தனை பேர் ஆதரவு, எந்தனி பேர் யாழில் எதிர்ப்பென்று.

ஆடை எற்று மதிக்கும் தமிழ்கடை உணவுக்கும் இடையில் என்ன வித்தியாசம் என்பதை பொருளாதாரத்தை விளங்கியவர் ஒருவர் இந்த திரியில் பல உதாரணங்களை போட்டு விளங்கப்படுத்தியிருக்கிறார். அதை விளங்கிக்கொள்ள முடியாமல் தவிக்கும் இந்த **********, கள்ளை போகவிட்டு கஞ்சலை பற்றிக்கொள்பவர்கள், இதுவரையில், தங்கள் பக்க விவாதத்திற்கு  ஒரு பொருளாதார விளக்கம் கொடுக்க வேண்டும் என்று விரும்பினால், சிங்கள உணவுப்பொருள்கள் தமிழ் கடைகளில் விலைப்படும் கணக்கு என்ன என்பதை ஒரு வெளிவந்த புள்ளிவிபரத்தை வைத்து விளங்கப்படுத்தியிருக்கலாம். தொடந்து கற்பனை இலக்கங்களை போடுகிறார்கள்.

எதோ பெரிய பொருளாதர விவாதம் மாதிரி "என்னிடம் இருந்து  போகும் 99 ரூபாவை நிறுத்துவோம் அதன் பின்  எங்கள் நன்பர்களிடம் இருந்து  எதிரிக்கு போகும் 100 ரூபாவை நிறுத்துவோம்"

இதிலே என்னென்னத்தை 99ம் 100 என்றாகள் என்பதை ஏற்கனே வெளியாகிருக்கும் புள்ளி விபரம் ஒன்றை வைத்து விளங்கப்படுத்த முடியுமா? மேலும் இதில் யாரை உங்கள் நண்பர்கள் என்று சுட்டிநீர்கள் என்பதை விளங்க்கப்படுத்த முடியுமா.

ஆனைக்கு பானை சரி என்ற விதண்டவாதத்தை முன்னெடுக்க வைக்கும் பின்னுந்துகள் இவர்களின் கண்களை மறைப்பத்தால் உலக்கை போன இடத்தை தவறவிட்டுவிட்டு ஊசி போன இடத்தை தாங்கள் கண்டு பிடித்து காட்ட முடியும் என்று பீத்துகிறாகள். 

*****

மல்லையூரான் நீங்கள் என்ன சொல்ல வாறீங்கள் என்று புரியவில்லை பொருளாதாரத்தைப் புரிந்து கொண்டவர்  விளாவாரியாக எழுதியிருக்கிறார் என்று சொல்கிறீர்கள். எதிர்ப்பைக் காட்டவேண்டும் என்றால் அடிப்படையில் இருந்து தொடங்கவேண்டும். எம்மில் பலர் இலங்கை உற்பத்திகளை உபயோகிப்போம் ஆனால் வேற்று இனத்தவர்கள் அதனை உபயோகிக்கவேண்டாம் என்று புறக்கணிக்கும்படி சொல்லுவோம். ஒரு உதாரணத்திற்கு உங்கள் வேண்டுகோளுக்கு செவி மடுக்கும்  வெள்ளை இனத்தவர் தற்செயலாக நம்மவர் கடையில் பொருட்கள் கொள்வனவு செய்ய வந்தால் அங்கு முழித்துக் கொண்டிருக்கும் இலங்கையில் இருந்து ஏற்றுமதியாகும் சிங்கள லேபிள் இட்ட பொருட்களைப்பார்த்து "எங்களைப்புறக்கணிக்கச் சொல்லிவிட்டு நீங்கள் இலங்கை அரசுக்கு வருமானத்தை ஈட்டிக் கொடுக்கும் பொருட்களை உபயோகிக்கிறீர்களே" என்று கேட்டால் நாம் என்ன பதில் சொல்வது?

ஏன் கனடாவில் தமிழ்தேசியத்தின் அத்திவாரங்களாக இருக்கும் தமிழ்வர்த்தக நிலையங்களில் சிங்கள லேபிள்களுடன் பொருட்கள் விற்பனையாகின்றன. அவர்களிடம் கேட்டால் மக்கள் வாங்குகிறார்கள் அதனால் நாங்கள் விற்கிறோம் என்கிறார்கள் உபயோகிக்கும் மக்களைக் கேட்டால் தமிழ்தேசியத்தின் மிகப் பெரும் பலமாக இருக்கும் தமிழ் வர்த்தக நிறுவனங்களே அதனை தமது கடைகளில் வைத்து விற்கும்போது நாங்கள் ஏன் புறக்கணிக்கவேண்டும் என்கிறார்கள்.... ஆக பூனைக்கு யார் மணிகட்டுவது என்று இன்னும் முடிவாகவில்லை....... எங்களிடம் இருக்கும் பூனைகளுக்கு மணிகட்ட ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள் மல்லை.

எப்போது அடிப்படையில் அவற்றை ஒதுக்க ஆரம்பிக்கிறோமோ அப்போதுதான் அதன் வீச்சு அதிகரிக்கும். ஒவ்வொரு வீட்டிலும் இலங்கைப் பொருட்களை எவ்வளவு தூரம் ஒதுக்குகிறோமோ அவ்வளவுக்கு வீட்டில் உள்ள அனைவரிடமும் அது கட்டி யெழுப்பப்படும். நாங்கள் எங்கள் வர்த்தக நிலையங்களிலும், வீடுகளிலும் இலங்கைப் பொருட்களை உபயோகிப்பதை நிறுத்தாமல் மற்றவர்களை நிறுத்தச் சொல்லி கேட்பது என்பது நாம் இன்னும் எதிர்காலத்திலும் தன்னிறைவு அடையாமல் இலங்கைப் பொருட்களில் தங்கி இருப்போம். ஆனால் மற்றவர்கள் இலங்கைப் பொருட்களை உபயோகிப்பதை நிறுத்தும்படி கேட்போம். எமக்கு நாடு வேண்டும் ஆனால் தன்னிறைவு அடையாமல் அயல் நாட்டவனின் பொருட்களில் தங்கி இருப்போம்...... லொயிக்கே இடிக்குதே....

எதற்காக நாம் இப்போராட்டத்தை முன்னெடுக்கிறோம்?

இலங்கை பொருளாதார ரீதியாக பின்னடைவைச்சந்திக்கவேண்டும்.......

எதற்காக நாம் இலங்கை மீது பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தவேண்டும்? 

எம்முடைய தாயகத்தை அவர்கள் அழித்தபடி இருப்பதால்....

அவர்களை பின்னடைய வைத்து நாம் பெற எண்ணும் இலக்கு ஏது?

எமது தாயகம்

அப்படியானால் எமது தாயகத்தை நிமிர்வாக வைத்திருக்க நம்மிடம் எல்லா விடயங்களிலும் தன்னிறைவு உள்ளதா?

அதனை எத்தனை தூரம் அழிக்கப்பட்டபின் கட்டி எழுப்பியிருக்கிறோம்?

ஒரு கற்பனைக்காகிலும் உலக வல்லரசுகள் எனப்படும் நாடுகள் இணைந்து இந்தாருங்கள் உங்களுடைய தாயகபூமி இதனை நீங்கள் வைத்திருங்கள் என்று தந்து அதை நீங்கள் எப்படி உடனடியாக சகயநிலைக்கு இயல்பாக இயங்குதளத்தில் வைத்திருப்பீர்கள் என்று கேட்டால் உங்களுடைய பதில் என்னவாக இருக்கும்.எம்முடைய வளங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு விட்டது நாங்கள் மீண்டும் அப்படியான சகய நிலைக்கு வர குறைந்தது ஒரு வருடமாவது வேண்டும் அதுவரைக்கும் அயல் நாட்டின் பொருளாதார உதவியைப் பெற்றுக் கொள்வோம் என்று சொல்வீர்களா?.... சீரியசாக சொல்லவில்லை ஒரு விளையாட்டாகத்தான் இந்தக்கேள்வி.... ஏனென்றால் நாம் புலம் பெயர்ந்து இருந்தாலும் அடிப்படையான தன்னிறைவை பெற்ற இனமாக மாறவேண்டும். அதற்கு இந்தப் புறக்கணிப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கும் அதே சமயத்தில் மாற்றீடுகளையும் திட்டமிட்டுச் செயல்படுத்தவேண்டும் இல்லாவிட்டால் இன்னும் சில ஆண்டுகள் போக இத்தகைய ஏழ்மைப்போராட்டங்கள்  வல்லமைகளின் முன்னால் நீர்த்துப் போய்விடும்.

Edited by nunavilan

  • Replies 181
  • Views 10.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க்கடைக்குள் வெள்ளைகள் வருவார்களா? :D அப்படி வாறவை கேள்வி கேட்கும் அளவுக்கு இருக்கமாட்டினம்.. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ்க்கடைக்குள் வெள்ளைகள் வருவார்களா? :D அப்படி வாறவை கேள்வி கேட்கும் அளவுக்கு இருக்கமாட்டினம்.. :icon_mrgreen:
நீங்கள் எங்கட சிற்ரியில இல்லை :lol:

Edited by வல்வை சகாறா

மல்லையூரான் நீங்கள் என்ன சொல்ல வாறீங்கள் என்று புரியவில்லை பொருளாதாரத்தைப் புரிந்து கொண்டவர்  விளாவாரியாக எழுதியிருக்கிறார் என்று சொல்கிறீர்கள்

அட போகுது தங்கள் கள்ளமனதை ஒழிக்க ஒரு சந்தர்ப்பம். "வெள்ளையனை நீங்கள் நிறுத்துங்கள். ஆனால் நான் வெளிக்கிட்டு தமிழ்ர் பாவிக்கும் பொருள்களை நிறுத்துவிக்க போகிறேன் என்று எழுத்தியிருக்காலம்". அது தான் வருகிதே இல்லையே.  மகிந்த ஒப்பந்தம் செய்வது போல நீ முதல் தமிழ் கடைகளை அழித்து ஒழி அதன் பின் நான் மகிந்த பாணி ஒப்பந்தப்படி உனக்கு தண்ணி காட்டுகிறேன் என்கிறார்கள். எதற்காக நீங்கள்  தமிழ் கடைகளை ஒழித்தால் மட்டும்தான் உங்கள் ஆடை ஏற்றுமதிகளை தடுக்காமல் முன் செல்லவிடுவோம் என்று தடை போடுகிற்றார்கள்?

நீங்கள் தமிழ் கடைகள் சென்று சிங்கள பொருள்களை பாவிக்க வேண்டாம் என்றி பிரச்சாரம் செய்ய வெளிக்கிட்ட போது இந்த "புறக்கணி சிறீலங்கா" பிரச்சாரம் செய்யும் ஒருவர் அதை எதிர்த்து இது வரையில் யாழில் எழுத்தியிருக்கிறார்களா? பின்னர் எதற்காக தமிழர்களை காப்பது போல நடித்து போராட்டங்களுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு உங்கள் எஜமானர்களின் கட்டளைகளை நிறைவேற்ற கதைகளைத் திரித்து பொய்கள் எழுதுகிறீர்கள்.

துணிச்சல் இருந்தால் இன்று முதல் நீங்கள் முன்னோடியாக நின்று சிங்கள உணவுகளைளை தமிழர் புறக்கணியுங்கள் என்று பிரச்சாரத்தை ஆரம்பிக்க முடியுமா? அதற்கு உங்கள் சிங்கள எஜமானர்கள் சம்மதம் தருவார்களா? அதன் பின்னர் யாழில் வந்து பார்க்கிறீர்களா உங்கள் போராட்டத்திற்கு எத்தனை பேர் ஆதரவு, எத்தனை பேர் யாழில் எதிர்ப்பென்று.

நான் எழுதாதவற்றுக்கு பதில் எழுவது உங்கள் இயல்பு. நான் எழுதியவறை படியுங்கள். அகுதா எழுதியவற்றை படியுங்கள். சசி எழுதியவற்றை படியுங்கள். எல்லாவற்றையும்  இணைத்து 99-100 விளக்கம் தாருங்கள். 

மூளையை செல்வளித்து வெள்ளையன் கடைக்கு போனால் என்று கற்பனை செய்யும் இதே மாற்றுக்கருத்துக்கள்தான் வெள்ளையன் பகிஸ்கரிக்கும் கிறிகட் மச்சுக்கு போக வேண்டும் என்றும் அடம் பிடிப்பவர்கள். எதனை தடவை விடோரியா சீகிரட்டை பகிஸ்கரித்துவிட்டு வந்த வெள்ளைகள் உங்களை தமிழ் கடைகளில் சிங்கள லேபல்களை கண்டு விளக்கம் தர சொல்லி தெண்டாகினை தந்தார்கள்? கற்பனையை பாவித்து ஏன் பூறக்கணி சிறி லங்காவை தடுக்கிறீர்கள்? 

தேவானந்தாவும் பலரும் இலங்கை செல்லும் வெள்ளையரை சந்திப்பது பற்றி நாம் ஆராய்ந்து நமது புறக்கணி இலங்கை போராட்டதை ஆரம்பித்தோமா?

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

அட போகுது தங்கள் கள்ளமனதை ஒழிக்க ஒரு சந்தர்ப்பம். "வெள்ளையனை நீங்கள் நிறுத்துங்கள். ஆனால் நான் வெளிக்கிட்டு தமிழ்ர் பாவிக்கும் பொருள்களை நிறுத்துவிக்க போகிறேன் என்று எழுத்தியிருக்காலம்". அது தான் வருகிதே இல்லையே.  மகிந்த ஒப்பந்த செய்வது போல நீ முதல் தமிழ் கடைகளை அழித்து ஒழி அதன் பின் நான் மகிந்த பாணி ஒப்பந்தப்படி உனக்கு தண்ணி காட்டுகிறேன் என்கிறார்கள். எதற்கா நீங்கள்  தமிழ் கடைகளை ஒழித்தால் மட்டும்தான் உங்கள் ஆடை ஏற்றுமதிகளை தடுக்காமல் முன் செல்லவிடுவோம் என்று தடை போடுகிற்றகள்?

நீங்கள் தமிழ் கடைகள் சென்று சிங்கள பொருள்களை பாவிக்க வேண்டாம் என்றி பிரச்சாரம் செய்ய வெளிகிட்ட போது இந்த "புறக்கணி சிறீலங்கா" பிரச்சாரம் செய்யும் ஒருவர் அதை எதிர்த்து இது வரையில் யாழில் எழுத்தியிருக்கிறார்களா? பின்னர் எதற்காக தமிழர்களை காப்பது போல நடித்து போராட்டங்களுக்கு தொடந்து முட்டுக்கட்டை போட்டு உங்கள் எஜமானர்களின் கட்டளைகளை நிறைவேற்ற கதைகளைத் திரித்து பொய்கள் எழுதுகிறீர்கள்.

துணிச்சல் இருந்தால் இன்று முதல் நீங்கள் முன்னோடியாக நின்று சிங்கள உணவுகளைளை தமிழ்ர் புறக்கணியுங்கள் என்று பிரச்சாரத்தை ஆரம்பிக்க முடியுமா? அதற்கு உங்கள் சிங்கள எஜமானர்கள் சம்மதம் தருவார்களா? அதன் பின்னர் யாழில் வந்து பார்கிறீர்களா உங்கள் போராட்டத்திற்கு எத்தனை பேர் ஆதரவு, எந்தனி பேர் யாழில் எதிர்ப்பென்று.

எதிர்கருத்தை ஒருவர் எதற்காக முன்னெடுக்கிறார் என்பதை சிறிதளவாவது தெரியவேண்டும் என்னும் அக்கறையைக்காட்டிலும் அக்கருத்தைச் சொல்பவர் சிங்கள அரசின் அல்லது ஒட்டுக்குழுக்களின் பிரதிநிதி என்று உடனடியாக ஒருவர் மீது அவதூறுகளை அள்ளித் தெளிப்பதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. அநேகமாக நீங்கள் ஒரு முதியவராக இருக்கலாம் என்று எண்ணுகிறேன். நிறைய எழுதுகிறீர்கள். பல சமயங்களில் திரிக்குத் தொடர்பில்லாமல் எங்கேயோ போய்விடுகிறீர்கள். இந்தக்கருத்துக்களத்திற்கு திரிக்குத் தொடர்பில்லாமல் எழுதுவது புதிய விடயம் அல்ல அதனால் அவற்றை பேசுவதை விடுவோம் . அநேகமாக இங்கு இளைய மற்றும் நடுத்தரவயதினரே அதிகம் எழுதுகிறார்கள் அவர்களுக்கு அவர்களுடைய வேகம் வெளிப்படும் வார்த்தைகள் சில சமயங்களில் புரிதல் அற்ற வெளிகளை பெரிதாக தோற்றுவித்திருக்கிறது. அவர்களுக்கு பொறுமையாக பதில் அளிப்பதற்குப் பதில்...., கேள்வி கேட்டதால் எதிரியின் எசமான விசுவாசத்தால் பேசுகிறார். தடங்கலாக நிற்கிறாய் என்பது தவறானது. மற்றவர்களை அதிலும் நேர்மையாக இயங்கும் பண்பாளர்களையும் சாக்கடைத்தனமாக எழுதத்தூண்டும் தூண்டுகோல். இப்போதெல்லாம் மற்றவர்கள் மீது இலகுவாக பழிகளை போட்டு உதாசீனம் பண்ணிக் கொண்டு போராட்டம் நடாத்துவதுதான் எங்கும் நடக்கிறது உண்மையில் அவற்றை ஆழ்ந்து பார்க்கப்போனால் அதிகாரப்போட்டிகளிலும் எனக்குப்பணிவாக இயங்கு இல்லையென்றால் நீ எதிரிக்குரியவன் என்றும் நமக்குள் நாமே அனைவரையும் புறந்தள்ளித்தள்ளி பலவீனமாகிக் கொண்டிருக்கிறோம். ஒருவன் கேள்வி கேட்கிறான் என்றால் அவனிடம் ஒன்றை அறிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கிறது. அதிலேயே தொடர்ந்தும் கோபப்படுகிறான் என்றால் அவனுக்கு அதில் அதிருப்தி ஏற்படுகிறது எள்று அர்த்தம்... திருப்தி அடையும்படியாக அவனுடைய கருத்தைக் கேட்பதாலோ அல்லது அவற்றுக்குபதில் அளிப்பதாலே நாம் ஒன்றும் குறைந்துவிடமாட்டோம்.

நான் எழுதாதவற்றுக்கு பதில் எழுவது உங்கள் இயல்பு. நான் எழுதியவறை படியுங்கள். அகுதா எழுதியவற்றை படியுங்கள். சசி எழுதியவற்றை படியுங்கள். எல்லாவற்றையும்  இணைத்து 99-100 விளக்கம் தாருங்கள். 

மூளையை செல்வளித்து வெள்ளையன் கடைக்கு போனால் என்று கற்பனை செய்யும் இதே மாற்றுக்கருத்துக்கள்தான் வெள்ளையன் பகிஸ்கரிக்கும் கிறிகட் மச்சுக்கு போக வேண்டும் என்றும் அடம் பிடிப்பவர்கள். எதனை தடவை விடோரியா சீகிரட்டை பகிஸ்கரித்துவிட்டு வந்த வெள்ளைகள் உங்களை தமிழ் கடைகளில் சிங்கள லேபல்களை கண்டு விளக்கம் தர சொல்லி தெண்டாகினை தந்தார்கள்? கற்பனையை பாவித்து ஏன் பூறக்கணி சிறி லங்காவை தடுக்கிறீர்கள்? 

தேவானந்தாவும் பலரும் இலங்கை செல்லும் வெள்ளையரை சந்திப்பது பற்றி நாம் ஆராய்ந்து நமது புறக்கணி இலங்கை போராட்டதை ஆரம்பித்தோமா?

மல்லையூரான் தெளிவாக வாசித்துவிட்டு எழுதுங்கள் இங்கு யாரும் புறக்கணி சிறீலங்காவை எதிர்க்கவில்லை எழுந்தமானத்தில் எழுதி வாசிப்பவர்களைக்குழப்பவேண்டாம்.

தமிழ் கடைகளுக்கு வெள்ளையர் எவரும் வருவதில்லை என்று வீட்டுக்குள் கணனிப் பெட்டிக்கு முன்னால் சதா குந்தி இருப்பவர்களுக்கும் வேலைத்தலத்தில் அடைபட்டுக்கிடப்பவர்களுக்கும் தெரியாது என்பதை மறந்து விட்டேன் இசை கொஞ்சம் வெளியே வந்து உலாவுங்கள்

நாங்கள் எங்கள் வர்த்தக நிலையங்களிலும், வீடுகளிலும் இலங்கைப் பொருட்களை உபயோகிப்பதை நிறுத்தாமல் மற்றவர்களை நிறுத்தச் சொல்லி கேட்பது என்பது நாம் இன்னும் எதிர்காலத்திலும் தன்னிறைவு அடையாமல் இலங்கைப் பொருட்களில் தங்கி இருப்போம். ஆனால் மற்றவர்கள் இலங்கைப் பொருட்களை உபயோகிப்பதை நிறுத்தும்படி கேட்போம். எமக்கு நாடு வேண்டும் ஆனால் தன்னிறைவு அடையாமல் அயல் நாட்டவனின் பொருட்களில் தங்கி இருப்போம்...... லொயிக்கே இடிக்குதே..

தன்னிறைவு? எங்கே? எதிலை? யாருக்கு? எதற்காக? லொயிக்கே இடுக்குதே? எவ்விடத்திலை இடிக்குது? எதில் எல்லாம் இப்போ தன்னிறைவு இனி கண்டு MD உணவுகளுக்கு தன்னிறவு தேடுகிறீர்கள்?  உங்களுக்கு ஒரு வேலை இருக்கு போல் இருக்கு. அல்லது அசையாத கனடா வெல்பெயர் இருக்குப் போலை இருக்கு. அதுவா தன்னிறைவு? கற்பனை அதீதம்.

அகுத எழுதும் பொருளாதரம் விளங்காவிட்டால் அந்த அந்த இடங்களை சுட்டிக்காட்டி அவரிடம் விளக்கம் கேளுங்கள். எழுதுபவர் விளங்கவைக்க வேண்டியது அவரின் கடமை என்று நாங்ககள் யாழில் வைத்துக்கொள்ள முடியும்.

.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கடைகளுக்கு வெள்ளையர் எவரும் வருவதில்லை என்று வீட்டுக்குள் கணனிப் பெட்டிக்கு முன்னால் சதா குந்தி இருப்பவர்களுக்கும் வேலைத்தலத்தில் அடைபட்டுக்கிடப்பவர்களுக்கும் தெரியாது என்பதை மறந்து விட்டேன் இசை கொஞ்சம் வெளியே வந்து உலாவுங்கள்

ஹலோ.. நான் என்ன சொல்லியிருக்கிறன்?  :blink:  அப்பிடியே வாற வெள்ளைகள் கேள்வி கேட்கிற அளவுக்கு இருக்கமாட்டினம் எண்டு.. உண்மைதானே..  :huh: 

No Frills க்கே போகாதவைதான் பல வெள்ளைகள். Metro, Longos, Highland Farms எண்டு போகினம். உடுப்பில் மணம் பிடிக்கிறது அவைக்கு சரிவராது. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
தன்னிறைவு? எங்கே? எதிலை? யாருக்கு? எதற்காக? லொயிக்கே இடுக்குதே? எவ்விடத்திலை இடிக்குது? எதில் எல்லாம் இப்போ தன்னிறைவு இனி கண்டு MD உணவுகளுக்கு தன்னிறவு தேடுகிறீர்கள்?  உங்களுக்கு ஒரு வேலை இருக்கு போல் இருக்கு. அல்லது அசையாத கனடா வெல்பெயர் இருக்குப் போலை இருக்கு. அதுவா தன்னிறைவு? கற்பனை அதீதம்.

அகுத எழுதும் பொருளாதரம் விளங்காவிட்டால் அந்த அந்த இடங்களை சுட்டிக்காட்டி அவரிடம் விளக்கம் கேளுங்கள். எழுதுபவர் விளங்கவைக்க வேண்டியது அவரின் கடமை என்று நாங்ககள் யாழில் வைத்துக்கொள்ள முடியும்.

.

தன்னிறைவு அடையாமல் எல்லாத்தையும் புறக்கணிக்கமுடியாது மல்லை.

அடிப்படையான தன்னிறைவை...... புறக்கணிப்பு செய்யும் சமதளத்திலேயே மேற்கொள்ளுங்கள் என்று சொல்வதற்கு அதியுச்ச படிப்புத் தேவையில்லை பொது அறிவு இருந்தால் காணும். :rolleyes:

எதிர்கருத்தை ஒருவர் எதற்காக முன்னெடுக்கிறார் என்பதை சிறிதளவாவது தெரியவேண்டும் என்னும் அக்கறையைக்காட்டிலும் அக்கருத்தைச் சொல்பவர் சிங்கள அரசின் அல்லது ஒட்டுக்குழுக்களின் பிரதிநிதி என்று உடனடியாக ஒருவர் மீது அவதூறுகளை அள்ளித் தெளிப்பதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. அநேகமாக நீங்கள் ஒரு முதியவராக இருக்கலாம் என்று எண்ணுகிறேன். நிறைய எழுதுகிறீர்கள். பல சமயங்களில் திரிக்குத் தொடர்பில்லாமல் எங்கேயோ போய்விடுகிறீர்கள். இந்தக்கருத்துக்களத்திற்கு திரிக்குத் தொடர்பில்லாமல் எழுதுவது புதிய விடயம் அல்ல அதனால் அவற்றை பேசுவதை விடுவோம் . அநேகமாக இங்கு இளைய மற்றும் நடுத்தரவயதினரே அதிகம் எழுதுகிறார்கள் அவர்களுக்கு அவர்களுடைய வேகம் வெளிப்படும் வார்த்தைகள் சில சமயங்களில் புரிதல் அற்ற வெளிகளை பெரிதாக தோற்றுவித்திருக்கிறது. அவர்களுக்கு பொறுமையாக பதில் அளிப்பதற்குப் பதில்...., கேள்வி கேட்டதால் எதிரியின் எசமான விசுவாசத்தால் பேசுகிறார். தடங்கலாக நிற்கிறாய் என்பது தவறானது. மற்றவர்களை அதிலும் நேர்மையாக இயங்கும் பண்பாளர்களையும் சாக்கடைத்தனமாக எழுதத்தூண்டும் தூண்டுகோல். இப்போதெல்லாம் மற்றவர்கள் மீது இலகுவாக பழிகளை போட்டு உதாசீனம் பண்ணிக் கொண்டு போராட்டம் நடாத்துவதுதான் எங்கும் நடக்கிறது உண்மையில் அவற்றை ஆழ்ந்து பார்க்கப்போனால் அதிகாரப்போட்டிகளிலும் எனக்குப்பணிவாக இயங்கு இல்லையென்றால் நீ எதிரிக்குரியவன் என்றும் நமக்குள் நாமே அனைவரையும் புறந்தள்ளித்தள்ளி பலவீனமாகிக் கொண்டிருக்கிறோம். ஒருவன் கேள்வி கேட்கிறான் என்றால் அவனிடம் ஒன்றை அறிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கிறது. அதிலேயே தொடர்ந்தும் கோபப்படுகிறான் என்றால் அவனுக்கு அதில் அதிருப்தி ஏற்படுகிறது எள்று அர்த்தம்... திருப்தி அடையும்படியாக அவனுடைய கருத்தைக் கேட்பதாலோ அல்லது அவற்றுக்குபதில் அளிப்பதாலே நாம் ஒன்றும் குறைந்துவிடமாட்டோம்.

மல்லையூரான் தெளிவாக வாசித்துவிட்டு எழுதுங்கள் இங்கு யாரும் புறக்கணி சிறீலங்காவை எதிர்க்கவில்லை எழுந்தமானத்தில் எழுதி வாசிப்பவர்களைக்குழப்பவேண்டாம்.

தமிழ் கடைகளுக்கு வெள்ளையர் எவரும் வருவதில்லை என்று வீட்டுக்குள் கணனிப் பெட்டிக்கு முன்னால் சதா குந்தி இருப்பவர்களுக்கும் வேலைத்தலத்தில் அடைபட்டுக்கிடப்பவர்களுக்கும் தெரியாது என்பதை மறந்து விட்டேன் இசை கொஞ்சம் வெளியே வந்து உலாவுங்கள்

நீங்கள் தொடந்து நான் எழுதாதவற்றுக்கு பதில் எழுத்துகிறீர்கள். சசி கேட்டிருந்த கேள்வி ஒன்றுக்கும் நான் பதில் அளிக்க போகவில்லை என்பதை தயவு செய்து நான் எழுதியவற்றை வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.  சசி விளங்கப்படுத்த வெளிக்கிட்ட பொய்த்தனமா 99-100 கதையை பற்றித்தான் கேள்வி கேட்கிறேன். அது சசியால் இங்கே கோண்டுவரப்பட்ட, சசி எங்குமே காணாதபொய் புள்ளி விபரம். அதை அவர் எங்கே கண்டார் என்பது நான் உங்களிடம் கேட்ட கேள்வி. அது ஒரு மனத்துடன் அக்குதா காட்டிய புள்ளிவிபரங்களை பொய்யாக்க எழுதப்பட்டது. போராடத்தை கொச்சைப்படுத்த எங்கும் இல்லாத ஆதரம் ஒன்று கபட நோக்கத்துடன்  முன் வைக்கப்பட்டது. அவர் எங்கே அதை கண்டு பிடித்தார் என்பது தெரிந்தால் மட்டும் எனக்கு பதில் அளியுங்கள்.

தன்னிறைவு அடையாமல் எல்லாத்தையும் புறக்கணிக்கமுடியாது மல்லை.

அடிப்படையான தன்னிறைவை...... புறக்கணிப்பு செய்யும் சமதளத்திலேயே மேற்கொள்ளுங்கள் என்று சொல்வதற்கு அதியுச்ச படிப்புத் தேவையில்லை பொது அறிவு இருந்தால் காணும். :rolleyes:

முதலில் எது தன்னிறைவு, அது எங்கே அடைய முயற்சிக்கிறீர்கள் என்பதை எழுதுங்கள்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதாரம் படித்துத்தான் போராட்டம் நடாத்தவேண்டும் போல இருக்கு :(

மல்லை நீங்கள் சசிக்கு எழுதிய 99 100  கருத்திற்காக கருத்தெழுதவில்லை பொதுவாக சசி பொருளாதாரம் பற்றிய டிகிரி முடித்தவராக இருக்கவாய்ப்பில்லை அதை அவருடைய எழுத்தே வெளிப்படுத்துகிறது ஒரு சாதாரண மக்களின் பேச்சு வழக்காகத்தான் சசியினுடைய கருத்தை என்னால் காணமுடிகிறது. விகிதாசாரத்தில் அதிகமானவர் இப்படித்தான் இருப்பார்கள் புலம் பெயர்ந்த தேசங்களுக்கு கற்ற கல்வியில் மூலம் தொழில் வாய்ப்புப் பெற்று வந்தவர்களல்ல பலர் ஒரு சிலரே அப்படி வந்தவர்கள். மற்றையோர் அடிப்படைக்கல்வியோடே இன்னும் சொன்னால் அதற்கும் குறைவான தகுதியோடே நான் உட்பட நம்மில் பலர்.

கற்றவர்கள் புரிந்து கொண்டுள்ள பொருளாதாரம் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்ற நினைவில் இருக்கும் உங்கள் போன்றவர்களுக்கு உடனடியாக உணர்வு ரீதியாக வெளிப்படும் மக்கள் கேள்வி கசக்கத்தான் செய்யும்.  அதிலும் பேச்சுவழக்கில் சாதாரணமான ஒருவர் பேசும் விடயம் திட்டமிட்ட இந்தப் போராட்டத்தை கொச்சைப்படுத்த எழுதிய விடயமாக உங்களுக்குத் தெரிந்திருக்கிறது... உடனடியாக சசியைநோக்கி எசமான விசுவாசத்தால் பேசுகிறாய் என்று எவ்வளவு அவசரமாக உங்கள் கருத்தைப்பதிவிட்டுள்ளீர்கள். நீங்கள் என்னதான் சசிக்கு அதனை எழுதியிருந்தாலும் அதில் விளக்கங்கள் குறைவு அதே நேரம் எதிராளியாக சசியின் மீது அப்பட்டமான தனிமனிதத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறீர்கள்.

முதலில் எது தன்னிறைவு, அது எங்கே அடைய முயற்சிக்கிறீர்கள் என்பதை எழுதுங்கள்.

பொருளாதாரம் தெரிந்தவர்களுக்கே தன்னிறைவு பற்றித் தெரியவில்லை... :o  என்ன கொடுமையடா :(

மல்லை நீங்கள் சசிக்கு எழுதிய 99 100  கருத்திற்காக கருத்தெழுதவில்லை . நான் தெளிவாக சசியின் வரிகளை குறிப்பிட்டுவிட்டு வரி வரியா விவாதத்தை வழி நடத்தி சென்று இறுதில் என் கேள்வியை வைத்திருந்தேன். நீங்கள் நான் எழுதியை போட்டு அதன் கீழ் எழுதியிருப்பதை நான் இன்னோருகரையில் விளங்காமுயவில்லை. எனது கேள்விக்கு எழுதிய பதிலாகவே பார்த்தேன்

பொதுவாக சசி பொருளாதாரம் பற்றிய டிகிரி முடித்தவராக இருக்கவாய்ப்பில்லை அதை அவருடைய எழுத்தே வெளிப்படுத்துகிறது ஒரு சாதாரண மக்களின் பேச்சு வழக்காகத்தான் சசியினுடைய கருத்தை என்னால் காணமுடிகிறது. விகிதாசாரத்தில் அதிகமானவர் இப்படித்தான் இருப்பார்கள் புலம் பெயர்ந்த தேசங்களுக்கு கற்ற கல்வியில் மூலம் தொழில் வாய்ப்புப் பெற்று வந்தவர்களல்ல பலர் ஒரு சிலரே அப்படி வந்தவர்கள். மற்றையோர் அடிப்படைக்கல்வியோடே இன்னும் சொன்னால் அதற்கும் குறைவான தகுதியோடே நான் உட்பட நம்மில் பலர்.

இங்கே கல்வித்தகமை விவாதப் பொருளாக இல்லை. சசி, அகுதா சொல்லபவற்றை விளங்காமல் கஸ்டப்பட்டு அவரிடம் எந்த இடத்திலும் விளக்கம் கேட்டு இல்லை. சசி அந்த திரியில் அகுதாவின் பல கருத்துக்களுக்கு சவால் விட்டு எழுதிருந்தார்.  அகுதா பல உண்மையான உதரணங்களையும் நடைமுறையில்போராட்ட ஆதரங்களையும் போடுக்கொண்டு வந்தார். அகுதாவின் விவாதம் ஆடை துறையில் பல வெள்ளையரகள் ஏற்கனவே பங்குகொண்டு தலைமைஏற்று நடத்துவதாலும், அதில் கிடைக்கத்தக்க சிறிய வெற்றி, சிங்கள உணவு பொருள்கள் விடையத்தில் கிடைக்கத்தக்க பெரிய வெற்றியிலும் பல மடங்கு சிறீலங்காவை பாதிக்க கூடிய என்பது போல விளக்கங்கள் அளித்திருந்தார்.  இதை சசி தெட்ட தெளிவாக விளங்கினார் என்பதனால் தான் அவர் 100-99 கருத்தை வைத்தார் என்பதை சசி மறுக்க முடியாது. சசி இப்போது தன்னும் தான் வைத்தது உண்மை இல்லை என்று எழுதினார் ஆயின் நான் நிர்வாகத்தை நா எழுதியவற்றை நீக்கும் படி கேடக முடியும். 

கற்றவர்கள் புரிந்து கொண்டுள்ள பொருளாதாரம் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்ற நினைவில் இருக்கும் உங்கள் போன்றவர்களுக்கு உடனடியாக உணர்வு ரீதியாக வெளிப்படும் மக்கள் கேள்வி கசக்கத்தான் செய்யும்.  அதிலும் பேச்சுவழக்கில் சாதாரணமான ஒருவர் பேசும் விடயம் திட்டமிட்ட இந்தப் போராட்டத்தை கொச்சைப்படுத்த எழுதிய விடயமாக உங்களுக்குத் தெரிந்திருக்கிறது... உடனடியாக சசியைநோக்கி எசமான விசுவாசத்தால் பேசுகிறாய் என்று எவ்வளவு அவசரமாக உங்கள் கருத்தைப்பதிவிட்டுள்ளீர்கள். நீங்கள் என்னதான் சசிக்கு அதனை எழுதியிருந்தாலும் அதில் விளக்கங்கள் குறைவு அதே நேரம் எதிராளியாக சசியின் மீது அப்பட்டமான தனிமனிதத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறீர்கள். நீங்கள் தான் என்மீது தனிமனித தாகுதல் நிகழ்த்துகிறீர்கள்.சசி போலவே இதற்கு நீங்கள் துணைக்கு எடுத்து வந்த கருத்துத்தான் தன்னிறைவு என்ற பொய்க்கதை. சசி சொல்வதை மூடி மறைக்க அவருக்காக வக்கீலாக தொழில் படுகிறீர்களானால் நீங்களே சசி சொல்வது உண்மையாக இருக்க முடியாது என்று கூறிவிட்டும் அவருக்காக வாதாடும் போது அவர் விட்ட பிழைக்கு மன்னிப்பு கேடகத்தாயரில்லாமல் என்மீது பிழைய திருப்ப முயல்கிறீர்கள்.  அது மட்டமல்ல நீங்கள் எழுதிய தன்னிறை கதை பிழை என்று விளங்கிய பின்னர் அதற்கு தன்னும் நாகரீகமாக  ஒரு தடவை மன்னிப்பு கேட தயாரில்லாமல் எனக்கு தன்னிறைவு பற்றி விளக்கம் இல்லை என்பது போல நக்கல் அடித்து குறைவான பாணியில் முடித்திருக்கிறீர்கள். அநாவசியமாக நான் சசியிடம் கேட்ட கேள்வியை வைத்து தொடர்பில்லாதபலவற்றை எழுதி, எனக்கு தன்னிறைவு பற்றி தெரியாது என்று நக்கல் பார்வையில் முடிப்பது, தெட்ட தெளிவான தனிமனித தாக்குதல். நான் சசியை ஏன் கடபத்தனமாக எழுதியிருக்கிறார் என்பதை வரிக்கு வரி தெளிவாக காட்டிய பின்னர் அதை வாசிக்க மறுத்து என்மீது தனி மனித குற்றம் சட்ட முயல்வது நிச்சயமாக உள் நோக்கம் கொண்டது.

போராடத்தை சரியாக திட்டமிடமில்லை என்பவர் விவாத்தில் போக இடமில்லாமல் போனவுடன் பொருளாதரம் தெரிந்த  

  • கருத்துக்கள உறவுகள்

Quote

 நான் தெளிவாக சசியின் வரிகளை குறிப்பிட்டுவிட்டு வரி வரியா விவாதத்தை வழி நடத்தி சென்று இறுதில் என் கேள்வியை வைத்திருந்தேன். நீங்கள் நான் எழுதியை போட்டு அதன் கீழ் எழுதியிருப்பதை நான் இன்னோருகரையில் விளங்காமுயவில்லை. எனது கேள்விக்கு எழுதிய பதிலாகவே பார்த்தேன். 

இங்கே கல்வித்தகமை விவாதப் பொருளாக இல்லை. சசி, அகுதா சொல்லபவற்றை விளங்காமல் கஸ்டப்பட்டு அவரிடம் எந்த இடத்திலும் விளக்கம் கேட்டு இல்லை. சசி அந்த திரியில் அகுதாவின் பல கருத்துக்களுக்கு சவால் விட்டு எழுதிருந்தார்.  அகுதா பல உண்மையான உதரணங்களையும் நடைமுறையில்போராட்ட ஆதரங்களையும் போடுக்கொண்டு வந்தார். அகுதாவின் விவாதம் ஆடை துறையில் பல வெள்ளையரகள் ஏற்கனவே பங்குகொண்டு தலைமைஏற்று நடத்துவதாலும், அதில் கிடைக்கத்தக்க சிறிய வெற்றி, சிங்கள உணவு பொருள்கள் விடையத்தில் கிடைக்கத்தக்க பெரிய வெற்றியிலும் பல மடங்கு சிறீலங்காவை பாதிக்க கூடிய என்பது போல விளக்கங்கள் அளித்திருந்தார்.  இதை சசி தெட்ட தெளிவாக விளங்கினார் என்பதனால் தான் அவர் 100-99 கருத்தை வைத்தார் என்பதை சசி மறுக்க முடியாது. சசி இப்போது தன்னும் தான் வைத்தது உண்மை இல்லை என்று எழுதினார் ஆயின் நான் நிர்வாகத்தை நா எழுதியவற்றை நீக்கும் படி கேடக முடியும். 

 நீங்கள் தான் என்மீது தனிமனித தாகுதல் நிகழ்த்துகிறீர்கள்.சசி போலவே இதற்கு நீங்கள் துணைக்கு எடுத்து வந்த கருத்துத்தான் தன்னிறைவு என்ற பொய்க்கதை. சசி சொல்வதை மூடி மறைக்க அவருக்காக வக்கீலாக தொழில் படுகிறீர்களானால் நீங்களே சசி சொல்வது உண்மையாக இருக்க முடியாது என்று கூறிவிட்டும் அவருக்காக வாதாடும் போது அவர் விட்ட பிழைக்கு மன்னிப்பு கேடகத்தாயரில்லாமல் என்மீது பிழைய திருப்ப முயல்கிறீர்கள்.  அது மட்டமல்ல நீங்கள் எழுதிய தன்னிறை கதை பிழை என்று விளங்கிய பின்னர் அதற்கு தன்னும் நாகரீகமாக  ஒரு தடவை மன்னிப்பு கேட தயாரில்லாமல் எனக்கு தன்னிறைவு பற்றி விளக்கம் இல்லை என்பது போல நக்கல் அடித்து குறைவான பாணியில் முடித்திருக்கிறீர்கள். அநாவசியமாக நான் சசியிடம் கேட்ட கேள்வியை வைத்து தொடர்பில்லாதபலவற்றை எழுதி, எனக்கு தன்னிறைவு பற்றி தெரியாது என்று நக்கல் பார்வையில் முடிப்பது, தெட்ட தெளிவான தனிமனித தாக்குதல். நான் சசியை ஏன் கடபத்தனமாக எழுதியிருக்கிறார் என்பதை வரிக்கு வரி தெளிவாக காட்டிய பின்னர் அதை வாசிக்க மறுத்து என்மீது தனி மனித குற்றம் சட்ட முயல்வது நிச்சயமாக உள் நோக்கம் கொண்டது.

போராடத்தை சரியாக திட்டமிடமில்லை என்பவர் விவாத்தில் போக இடமில்லாமல் போனவுடன் பொருளாதரம் தெரிந்த 

மல்லை,

நீங்கள்தான் திசை திருப்புகிறீர்கள். தன்னிறைவு என்ற என்னுடைய வாதம் தவறானது அல்ல

இத்தகைய ஒரு வாதம் 2009 இல் இதே யாழ்க்கருத்துக்களத்தில் இடம்பெற்ற ஒரு சில கருத்துக்களின் ஏற்புநிலையே.........

நீங்கள் பெரிய  இலக்கை குறிவைத்ததைத் தவறென்று யாரும் சொல்லவில்லை வேண்டுமென்றால் மீளப்பாருங்கள்.

அடிப்டையான விடயங்களில் உங்களால் நம்மவர்களுக்குள் இந்தப் புறக்கணிப்பை மேற்கொள்ளச் சொல்லமுடியவில்லை. அல்லது அதற்கான மாற்றீட்டை உருவாக்க முடியவில்லை என்பதைத்தான் இந்தப்பதிவில் கருத்திட்டவர்களின் கருத்தாக  காணமுடிகிறது அதனை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

பொருளாதாரம் பற்றி வகுப்பெடுத்துக் கொண்டு தன்னிறைவு என்றால் என்ன என்று நீங்கள் என்னிடம் விளக்கம்கேட்டதற்குத்தான் அப்படிப்பதில் அளிக்கவேண்டிய நிலை வந்தது.

எப்போதுமே ஒரு பக்கமாகவே சிந்திக்கும் தன்மைதான் உங்களிடம் அதிகமாக வெளிப்படுகிறது.

புறக்கணி சிறிலங்கா நிகழ்வை முன்னெடுப்பதை மிகவும் வரவேற்கிறேன் அதே நேரம் அடிப்படையிலிருந்து அதனை வளர்த்தெடுக்கவேண்டும் என்பதையும் உறுதியாக சொல்ல விளைகின்றேன். அடிப்படை என்பது மரத்தைத் தறிக்கவேண்டும் என்பதுதான் நீங்கள் பக்கத்து வளவுக்குள் செல்லும் கிளையை வெட்டினால் பெரு வெற்றி என்று நினைக்கிறீர்கள். இந்த இடத்தில்தான் நாங்கள் முரண்படுகிறோம்.

இன்னொரு மரத்தை நாட்டிக்கொண்டு இருக்கின்ற மரத்தை வேரோடு தறிக்கவேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் வெட்ட வெட்ட கிளைகள் இன்னும் செழிப்பாக வளரத்தான் செய்யும்.

மல்லை

உங்களுக்கு மாற்றீடு என்ற பதத்திற்குள் அடங்கும் தன்னிறைவு பிழையாகத் தெரிந்தால் நீங்கள் இந்தப் போராட்டம் தொடர்பாக அதற்கு ஆதரவாக வெளிப்படுத்தும் அத்தனை கருத்துக்களும் பிழையானவைதான். அடிப்படைத் தெளிவற்ற கருத்துக்களைத்தான் உங்கள் ஆதரவுக்கருத்து வழங்கிக் கொண்டு இருக்கிறது. உங்களோடு நான் இக்கருத்தை வெளிப்படையாகப் பேசும்போதே உள்நோக்கம் கொண்டது என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறீர்கள். வெளிப்படையான தனிமனிதத்தாக்குதலை மேற்கொண்டுள்ள உங்கள் கருத்தை வாசிக்கும் அனைவரும் அறியும் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டியதை... உங்கள் மீது உள்நோக்கம் கொண்டு எழுதப்படுவதாக நீங்கள் திரிவு படுத்துவது தவறு.

வக்கீலாக யாருக்காகவும் வாதாடவேண்டிய தேவை எனக்கு இல்லை.

சமதளத்தில் பயணிக்கவேண்டிய இருவிடயங்களை தெளிவாக பதிவிடவே இதில் எனது கருத்தைப்பதிந்தேன்

சந்தர்ப்பவசத்தால் அதனைத் தொடர்ந்து வந்த கருத்தை வாசித்ததும் பதிலிடத்தோன்றியது.

அத்தோடு எதிராக கருத்தை ஒருவர் முன்வைக்கிறார் என்றால் உடனடியாக அவரை எசமான விசுவாசத்தால் பேசுகிறாய் என்பதெல்லாம் நல்ல கருத்தாளனுக்கு அழகல்ல.

போராட்டத்தை சரியாகத் திட்டமிடவில்லை என்று நான் எங்காவது எழுதி இருக்கிறேனா.. விட்டால் இந்தப் போராட்டத்தையே பிழை என்று சொல்கிறேன் என்று அடுத்த பதிவில் இடவும் தயங்க மாட்டீர்கள்.

சரி மல்லையான் நீங்கள் உங்களுக்குத் தெரிந்த போராட்டத்தை நடாத்துங்கள் நான் இந்தப்பக்கமே வரவில்லை. அதனால் உங்கள் வெற்றிகளில் பங்கு கேட்கவும் என்போன்றவர்கள் வரமாட்டோம். அங்கால போனபின் சீண்டும் பழக்கம் இல்லைத்தானே... :rolleyes:

விவாதத்திற்குள் நீங்கள் எதுவரைக்கும் நீற்க வேண்டும் என்பது எனது தீர்மானமல்ல. விவாதிக்க விரும்பாவிடால் நீங்கள் விரும்பிய இடத்தில் நிறுத்தி விட்டு விலகுவது கருத்துக்களத்தில் உங்கள் உரிமை. நீங்கள் உங்கள் திசையிலும், சசி தனது திசையிலும் போராட்டத்தை பார்பதை திரியை தொடர்ந்து வாசிப்பவர்கள் விளங்கிக்கொள்வார்கள். நான் மட்டுமல்ல, சசியின் கேள்விகளுக்கு பலர ஏற்கன்வே பதில் கொடுத்திருக்கிறார்கள்.

கேள்விகளும் பதில்களும்

#1: இலங்கை பொருளாதாரம் பற்றி என்ன கூறலாம்?

இலங்கை கிட்டத்தட்ட 40 பில்லியன்கள் அமெரிக்க டாலர்களை தேசிய உற்பத்தியாக கொண்ட பொருளாதாரம். இன்றும் ஒரு விவசாயம் உட்பட்ட அடிப்படை பொருளாதரத்தை கொண்ட நாடாக இளநகை உள்ளது.

#2: இலங்கை பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பவை எவை?

- புலம்பெயர் தொழிலாளர்கள், உறவுகளின் பணம்

- மேற்குலக நாடுகளுக்கான ஆடை ஏற்றுமதி 

- உல்லாசத்துறை

- தேயிலை

- இறப்பர்

- விலையுயர் கற்கள்

#3 : ஏன் ஆடை ஏற்றுமதி இலக்கு வைக்கப்படுகின்றது ?

சில தரவுகளின் படி மேற்குலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகள் அண்ணளவாக 38% வருமானத்தை தருகின்றது. அதுவும் பிரபல மேற்குலக, குறிப்பாக அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இவை இருமதி செய்யப்படுகின்றன.

#4 : ஏன் இலங்கையில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களை தடை செய்ய ஆர்ப்பாட்டங்கள் செய்யப்படுவதில்லை?

தனது இனத்தை அழிப்பவனின் பொருட்களை வாங்குவது மூலம் தனது தனது இனத்தை அழிக்க பணம் கொடுப்பது சரியா இல்லையா என்பதை யாரும் தமிழருக்கு சொல்லும் நிலை இல்லை.

இருந்தாலும்...

- இலங்கை பொருட்களை, உதாரணத்திற்கு மலிபான் இல்லை நெக்டோ பொருட்களை வாங்க வேண்டாம் என பல வேறு விழிப்புணர்வு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன, எடுக்கவும் படுகின்றன.

- தாமாக பலரும் உணர்ந்து  பலவேறு சிங்கள பொருட்களை வேண்டுவதில்லை, சிங்கள விமான சேவையை பாவிப்பதில்லை, சிங்கள நாட்டில் செய்யப்பட்ட ஆடைகளை உடுத்துவதில்லை.

- இதில் எமது சமூக நிகழ்வுகள் பலவற்றிற்கு உதவும் வியாபாரிகளும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் பெரியளவில் முன்னெடுக்கப்படுவதில்லை.

- சிங்கள பொருட்களுக்கான மாற்று பொருட்கள் இருந்தாலும் எம்மவர்கள் பழைய சுவைகளை எளிதாக கைவிட மறுக்கின்றனர்.

10382_403730673036968_1551342025_n.jpg

Edited by மல்லிகை வாசம்

இந்தத் திரியை இன்று தான் முழுமையாக வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அகூதாவோ மல்லையனோ அல்லது சகாரா அக்காவோ ஒரு விடயத்தில் மிகத்தெளிவாக இருக்கிறார்கள் என்பது புரிகிறது. அதாவது, இலங்கை உற்பத்திகளைப் புறக்கணிப்பது என்பது அவர்களது உறுதியான கருத்து. 

ஆனாலும், சில தவறான புரிந்துணர்வுகளால் இந்தத்திரி இரண்டு வேறு பட்ட கருத்துகளால் பிரிந்து நிற்கின்றது என எனக்குத் தோன்றுகின்றது. :)
 
அகூதாவின் கருத்துப்படி 
#3 : ஏன் ஆடை ஏற்றுமதி இலக்கு வைக்கப்படுகின்றது ?
சில தரவுகளின் படி மேற்குலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகள் அண்ணளவாக 38% வருமானத்தை தருகின்றது. அதுவும் பிரபல மேற்குலக, குறிப்பாக அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இவை இருமதி செய்யப்படுகின்றன.

Edited by மல்லிகை வாசம்

#5 : மேற்குலக மக்களை இலக்கு வைத்து வெற்றி காண முடியுமா?

ஒரு குறிப்பிட்ட வீத மக்கள் தமது பணம் படுகொலைகளுக்கு சர்வாதிகாரிகளுக்கு செல்வதை விரும்புவதில்லை. பலவேறு முதலீட்டு நிறுவனங்களே சுரண்டல் இல்லாத முதலீடுகளை கொண்டவை.

பலவேறு நாடுகளுக்கு எதிராக அவர்களே ஆர்ப்பாட்டம் செய்வதுண்டு. கீழே போட்ஸ்வானா என்ற ஆப்ரிக்கா நாட்டின் இரத்தின கற்களை புறக்கணிக்க கேட்டு அமெரிக்க ஆர்ப்பாட்டம். :

560584_290724654363245_566375003_n.jpg

நாங்கள் பெரும் வர்த்தக நிலையங்களுக்கு எதிர்ப்பைக் காட்டுவதற்கு முன்னர் எங்களை இந்தப் போராட்டத்திற்கு இசைவாக மாற்றவேண்டும். அதற்கு கட்டாயம் பாவனையில் இருக்கும் சிங்கள முகவரியிட்ட பாவனைப் பொருட்களுக்கு மாற்றீடு உருவாக்கவேண்டும். அப்படி உருவாக்கப்படும் பட்சத்தில் இலங்கை பொருளாதார ரீதியில் பின்னடைவைச்சந்திக்க வாய்ப்பிருக்கிறது.
  • கருத்துக்கள உறவுகள்
பொருள்களின் பகிஸ்கரிப்பில் ஒரு பொருள் இன்னொரு பொருளோடு சாடிக்கு மூடியாக போக வேண்டியது. போரட்டமாக ஆரம்பிக்கும் போது இந்த பொருளை பகிஸ்கரியுங்கள்; இதை பகிஸ்கரிக்காதீர்கள் என்பது ஏற்கமுடியாது. ஆனால் காந்தி இங்கிலாந்தில் இருந்து சகலத்தையும் இறக்குமதி செய்துகொண்டிருந்த இந்தியாவை, உடுப்பு போராட்டத்தில் தான் இறக்கினார். கிட்டத்தட்ட மற்ற எந்த பொருளும் போராட்டத்தில் ஈடுபடுத்தப்படவில்லை. ஆடையை அவர் தெரிந்தது சில போராட்ட காரணங்களுக்காக. அவரின் போராட்டத்தை யாரும் அவர் தொழில் துறை பொருள்களை தடுக்ககாமல் ஆடைகளை மட்டும்தான் தடுக்கிறார் என்று கூறி குழப்பியிருந்தால் பல பின்னடைவுகள் வந்திருந்திருக்கும்.

மேலும் சசி வாதாட முயன்றது போல தமிழ் கடைகளை பகிஸ்கரிக்காமல் அல்லது அந்த பகிஸ்கரிப்பில் ஏற்கனவே ஈடுபட்டு தோல்வி கண்டிருந்தால் ஆடை பகிஸ்கரிப்பில் ஈடுபடக்கூடாது என்ற வாதத்தை ஏற்கமுடியாது. பிரதான பகிஸ்கரிப்பு இயக்கம் தான் தமிழ் கடை பகிஸ்கரிப்பில் எவ்வளவு ஈடுபாட்டை காட்டியது அல்லது காட்டுகிறது என்பது பற்றிய விளக்கம், தனி ஒருவருக்கு போதாதது போலிருந்தால், அவர் தான் திருப்தி அடையும் வரைக்கும் பிரதான இயக்கத்தை எதிர்ப்பேன் என்று சவால் விடுவது வேடிக்கையானது. மாவீரர் தினத்தை பல நாடுகளில் பல தலைமைகள் வேறு வேறாக கொண்டாடும் போது, பகிஸ்கரி  இலங்கை இயக்கம், ஆடைகள் ஒருபகுதி, சிங்கள உணவு ஒரு பகுதியாக ஏன் இரண்டு தலைமைகளில் செயல்ப்பட கூடாது என்று யாரும் இது வரையில் வாதிட்டு இல்லை.

எதை காரணம் காட்டியும் , அந்த காரணம் நிறைவேறும் வரை ஆடை பகிஸ் கரிப்பை ஆரம்பிக்க கூடாது என்று யாரும் கூற முடியாது. இந்த ஆடை பகிஸ்கரிப்பில் பிரதான பங்காளிகள் வெள்ளையர்கள். அநாவசியமாக அவர்களின் முயற்சிகளுக்கு நாம் தடை போடக்கூடாது. மேலும் தன்னிறவு என்பது  பல வெளிக் கரணிகளை வரையறுத்து வைக்கப்படும் பதம். மேலும் பொருளாதார சந்தையில் அடிப்படை தேவைகளான உணவு, எண்ணை போன்றவற்றுக்குத்தான் இந்த பதம் பிரயோகத்தில் இருக்கிறது. உதாரணத்திற்கு ஒரு நாடு 100 பில்லியனுக்கு உணவு அருந்துவத்தாக இருந்தால் அந்த நாடு தான் அருந்தும் 100 பில்லியனையும் தானே செய்கிறதென்பது பொருள் அல்ல.  தட்டுப்பாடு வரதா முறையில் அதில் தேவையானவற்றை செய்துகொள்கிறது என்பதுதான் பொருள். இதில் ஆசை பண்டங்களை இறக்குமதி செய்வது அடங்காது. 

மேற்கு நாடுகளில் தமிழரின் தொகை மிக மிக சிறியது.(8 மில்லியன் நியூயோர் நகரில் 3000 தமிழர் இருக்கிறார்களாம், நகருக்கு வெளியே மிக்ககுறவு; மாநிலம் 25 மில்லியன், ஐம்பது மாநிலத்திலும், நியூயோர்க், நியேர்சி, கலிபோர்னியா மூன்றிலும்தான் இருக்கிறார்களாம்) இதில் சிறுவர்கள் இலங்கை பொருள்களை தேடுவதில்லை. சோடா வெண்டுமாயின் கோக்தான் குடிப்பர்கள். இதில் ஆசை பண்டங்களாக வாங்கப்படும் சம்பா அரிசி, நெக்டோ, MD ஜாம் மிக மிக் சிறிய அளவு.

மலிபன், நெட்டொ பொருள்கள் தமிழரின் உணவு தேவைகளில் தன்னிறவை உண்டு பண்ணத்தக்கவை அல்ல. உதாரணத்திற்கு நாம் குடிக்கும் மென் பானங்களில் நெக்டோ மிக மிக சிறிய அளவு. இலங்கை கம்பனி கூட, ஆடை கம்பனிகள் போல, இதில் தங்கி இல்லை. இவற்றில் பல இலங்கையின் பேடன்டும் இல்லை. இவை வெளி நாட்டு பேட்டண்டுகள். இவற்றுக்கு  போட்டியாக ஒரு கம்பனி ஆரம்பித்து வெளிநாடுகளில் தயார் செய்து விற்பது பல பொருளாதார, வியாபார சவால்களை சமாளித்த பின்னர்தான் சரிவரக்கூடியது.(அந்த பொருளாதார சவல்களை ஒப்பிடும் போது மேர்குநாடுகளில் வைத்து நாம் இலங்கை ஏற்றுமதி செய்யும் விடோரியா சீக்கிரட்டை உற்பத்தி செய்து வெள்ளையர்களுக்கு வெற்றிகரமாக விற்றுவிடலாம்) தாயகத்தில் செய்து அவர்களும் பாவித்து, ஏற்றுமதியும் செய்ய நிலைமை இப்போ தோதில்லை.  உதாரணத்திற்கு, கணிசமான போத்தல்களை செய்து நீங்கள் விற்கத்தயாராகும் வரை இங்கிலாந்து கோர்லிக்ஸ் கமபனி, கோர்லிக்ஸ் அடைக்க, உங்களுக்கு உரிமை தராது.

அதற்காக போராட்டத்தில் ஆடைகளை கைவிட முடியாது.

எனது ஒரு அனுபவம்."இலங்கையில் தொடங்கி நான் லெமன் பபும், நெல்லிக் கிரசும், கோர்லிக்சும் பிரியன். நெல்லிக் கிரஸ் இல்லாமல் போனபின் லெமன் பபையும் கோர்லிக்சையும் தொடர்ந்து வந்தேன். ஆனால் கரிபியன் தீவுகளிலிருந்து வந்த நல்ல ஒரு பிரதியீடு கிடைத்தபோது(அதுவும் இப்போ கிடக்காத்தால் லெமன் பிஸ்கட் விட்டாயிற்று), மூன்று நான்கு வருடங்களுக்கு முன்னர் லெமன் பப்பை நிறுத்திவிட்டு கோர்லிக்சை தொடர்ந்தேன். ஏன் எனில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கோர்லிக்கசை மட்டும் நான் தமிழ் கடைகளில் வாங்குவது கிடையாது. அதை இந்தியன் கடைகளில் வாங்குவது மலிவு. ஒரு வருடத்திற்கு முன்னர் பட்டேல் பிரதசில் வாங்கி வந்து பாவித்துக்கொண்டிருந்ததை போத்தலின் லேபலை தற்சமயமாக பார்த்த போது அதில் இலங்கை என்றிருந்தது. அடுத்த முறை சீனக்கடையில் வாங்கலாம் என்று நான் வழமையில் பொருள்கள் வாங்கும் சீனக்கடையில் லேபலை பார்த்த போது இலங்கை என்றிருந்தது.

இந்த போட்டி சந்தைக்கு நாம் கோர்லிக்ஸ் லேபலை பேட்டன் எடுத்து தயாரித்து சந்தையை கைப்பற்றும் வரை பொருளாதார விசைகள் எப்படி வேலை செய்கின்றன என்பதை விளங்காமல் தமிழரின் ஆசை பண்டங்களுக்கு தன்னிறவு காணணும் வரை ஆடை ஏற்றுமதியை தடுக்க முயலக்கூடாது என்பது விவாதம் அல்ல. 

இலங்கையில் ஆடைஏற்றுமதியை நாம் குறைக்க முடியாவிட்டாலும் அந்த பிரச்சார  போராட்டம் வெள்ளைகளிடம் நமக்கு நீதி கேட்டு செல்ல ஒரு கதவு. நமக்கு நடக்கும் அநீதியை நாம் வேறு நாடுகளுக்கு சொல்ல ஒரு சந்தர்ப்பம். இதற்கும் நமக்குள் நாம் கைவிட செய்யும் ஆசை பண்ட புற்கணிப்புக்கும் தொடர்பு இல்லை. இரண்டு போராட்டங்களும் நோக்கில் சற்று வித்தியாசமானவை.

ம்.... அப்ப அடிப்படையே இலங்கைக்கு எதிரான பொருளாதாரத்தடை என்பதில் கேள்விக்குறி தொக்கி நிற்கிறது.  உங்கள் கருத்துப்படி இதனைப்பார்த்தால் இதைப்புறக்கணிப்புப் போராட்டம் என்ற தலைப்பிற்குள் இடாமல் இலங்கை அரசுக்கு எதிரான பிரச்சாரம் என்ற தலைப்பிற்குள் இட்டிருக்கவேண்டும்.

மேலும் இந்தத்திரியின் தலைப்பு

இலங்கையில் உற்பத்திசெய்து கனடாவில் விற்பனை செய்யும் பொருட்களுக்கு எதிரான கனடியத் தமிழர்களின் புறக்கணிப்புப் போராட்டம்:

என்றுதான் இருக்கிறது என்பதை மல்லையூரான் கவனத்தில் கொள்ளவேண்டும் :rolleyes:

# 4: புறக்கணி போராட்டம் எதற்காக?

சிங்கள ஆட்சியாளர்களிடம் இருந்து எமது தாயக மக்களுக்கு தேவையானது அரசியல் தீர்வு.

  • எந்த ஒரு நாட்டினதும் அரசியல் என்பது அதன் இராணுவ, பொருளாதார பலத்தில் தங்கியுள்ளது.
  • எந்த ஒரு நாட்டினதும் இராணுவ பலம் என்பது அதன் அரசியல், பொருளாதார பலத்தில் தங்கியுள்ளது.
  • எந்த ஒரு நாட்டினதும் பொருளாதார பலம் என்பது அதன் அரசியல், இராணுவ பலத்தில் தங்கியுள்ளது.

சிங்கள ஆட்சியாளர்கள் எந்த ஒரு நியாயமான தமிழர் அரசியல் தீர்வையும் தமது இராணுவ, பொருளாதார பலத்தை கொண்டு மறுக்கின்றனர். எனவே 'புறக்கணி சிறிலங்கா' ஊடாக பொருளாதார அழுத்தத்தை உருவாக்குவதே நோக்கம்.

"அமெரிக்காவை கவர்ந்துள்ள ஈழத் தமிழர்களின் தொடர்போராட்டம்"
=======================================================================

அமெரிக்காவில், இலங்கை ஆடைகளை தடைசெய்யக் கோரி ஈழத்தமிழர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்திவருகின்றனர்.

தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் இப் போராட்டங்கள் அமெரிக்க மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஆடைகளை விற்பனைசெய்துவரும் நிலையங்களைக் குறிவைத்தே இப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இப் போராட்டம் குறித்த செய்திகளை, அமெரிக்காவில் உள்ள தொலைக்காட்சி ஒன்று நேற்றைய தினம் ஒளிபரப்பியுள்ளது என்பதும், குறிப்பிடத்தக்க விடையமாகும்.

நன்றி - முகநூல்

sri_lanka_2.jpg

6850273651_709303e82d_z.jpg

tamils-call-boycott-sri-lankan-cricket-t

6850272021_4a792f6ed3_z.jpg

Diplomats paint one-sided picture of Sri Lanka

Writing in the Weekend Australian on December 15-16, the Sri Lankan consul-general in Sydney, Bandula Jayasekara, gives a very one-sided defence of the Sri Lankan persecution of dissenters, including Tamils. It is interesting that Jayasekara is being put forward as the Sri Lankan representative in Australia to defend the indefensible, an acknowledgement that the Sri Lankan high commissioner, Thisara Samarasinghe, has singularly failed to get his message across.

Jayasekara seeks to deceive because, with hubris and ignorance, he thinks we know little beyond what he writes. He should take pause and think again.

>> Bruce Haigh is a political commentator and retired diplomat who served in Sri Lanka and on the Refugee Review Tribunal.

Read more: http://www.canberratimes.com.au/opinion/diplomats-paint-onesided-picture-of-sri-lanka-20121227-2bxo3.html#ixzz2GFudW41b

Boycott Sri Lanka Cricket rally in UK (dated)

Photo courtesy: www.tamilnet.com

533697_292012780901099_1702350913_n.jpg

16711_292182170884160_933275710_n.jpg

ATC SUPPORTS THE CALLS FOR CRICKET BOYCOTT     

The end of military conflict in Sri Lanka in 2009 gave immense hope for its citizens and the international community that this country will finally enter a peaceful and democratic era and will join the respected nations of the world. Against all hope, Sri Lanka is rapidly descending towards a lawless state with atrocious human rights record and consistent rule of law violations.

The Government of Sri Lanka has so far totally failed to reconcile different communities, provide accountability for the deaths of tens of thousands of Tamil civilians and build a sustainable peace. Continuing disappearances of political activists, consistent threats to journalists, recent arrests and arbitrary detention of Jaffna University students and the current ongoing attempts to impeach the Chief Justice are clear indications of the emergence of a dictatorial regime and a country prone to further instability in our region.

http://www.tamilsydney.com/content/view/2841/37/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.