Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐ.நாவுக்கு இலங்கை கண்டனம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய நாடுகளின் செயற்பாடுகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை செயற்படுவதற்கான, பொது செயலாளர் பான் கீ மூன் விசேட குழு ஒன்றை நியமிக்கவுள்ளமை தொடர்பில், இலங்கை அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.வெளியுறவுகள் துறை அமைச்சர் செயலாளர் கருணாதிலக அமுனுகம ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

இலங்கையில் இறுதி யுத்தம் இடம்பெற்ற போது, ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்த சார்ள்ஸ் பெற்றி தலைமையிலான குழு, அண்மையில் தமது அறிக்கையை பான் கீ மூனிடம் கையளித்திருந்தது.

இதில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் பொது மக்களை பாதுகாக்க தவரிவிட்டதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்ததுடன், பல்வேறு பரிந்துரைகளையும் முன்வைத்திருந்தது.

 

இந்த நிலையில், இந்த பரிந்துரைகள் தொடர்பில் ஆராய்வதற்கும், அதனை செயற்படுத்துவதற்கு குழு ஒன்றை அமைக்கவுள்ளதாக ஐக்கிய நாடுகளின் பிரதி பொதுசெயலாளர் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.

 

இதற்கான உறுப்பினர்களை பரிந்துரைக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் கிளை நிறுவனங்களிடம் அவர் கோரி இருந்தார்.

 

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கருணாதிலக அமுனுகம, இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை இதுவரையில் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு பேசி இருக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

 

http://www.sarithamnews.com/?p=1246

  • கருத்துக்கள உறவுகள்

அவன் சிங்களன் ஏற்கனவே நல்லிணக்க குழு .. புரியாணிகுழு என்று திரியிறான் ,,, அவஙகளுக்கு போட்டியா இவரு வேற அடிக்கடி குழு குழு என்று கிளம்பிடுறாரு.. அதனால வந்த உள் குத்து வேலையே இது..

டிஸ்கி:

சிங்களனுக்கு போட்டியா எவனும் சரித்திரத்தில் குழு அமைத்ததா சரித்தரமும் இல்லை .. அதை வென்றதா இன்னோரு தரித்திரமும் இல்லை

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

ஐ.நா விடுகிற திருகுதாளத்தை சமன் செய்ய இலங்கைக்கு மட்டும்தான் தெரியும் போல் இருக்கு. அதனால்தான் இலங்கை ஐ.நாவை மீண்டும் ஒரு முறை மிரட்டுகிறது. போர்நேரம் மாதிரியே ஐ.நா தான் மிரளுவதாக நடிக்கப் போகிறதா அல்லது மேல் சென்று உள்ளக விசாரணையை தொடரப்போகிறதா என்ற கேள்வி இங்கே எழத்தான் செய்கிறது.

 

போர்நேரம் ஐ.நா தவறு விட்டது தமிழருக்கு. இந்த விசாரணையில் தமிழரின் பிரதிநிதிகளும், ஐ.நாவின் உள் பொறிமுறைகளில் குற்றம் கண்ட கோடன் வைஸ் போன்ற அதிகாரிகளும் பிரசன்னமாக இருந்திருக்க வேண்டும். அப்போது அங்கு இலங்கை கட்டாயம் தனது பிரசன்னத்தையும் கேட்டு வாங்கியிருக்கும். அதன்பின் இலங்கையின் இன்றைய பழிச்சொல்லுக்கு இடமிருந்திருக்காது.

 

விசாரணையின் போது ஐ.நா செய்த திருகுதாளத்தனம், அதில் பாதிக்கப்பட்ட தமிழருக்கு இடம் கொடுக்க கூடாது என்ற கபடமுடிவாகும். அப்படி பங்கு பற்ற இடம் கொடுத்தால் தமிழரின் சுயநிர்ணய இருப்பு ஏற்கப்பட்டதொன்றாகிவிடும்.  எனவே பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கவும், விசாரணையால் பாதிக்கப்படவர்கள் எந்த பலனும் அடைந்துவிடாமலிருக்கவும் ஐ.நா. விசாரணையை மூடிய அறைக்குள் நடத்தியது. இதுவரையில் எல்லா விசாரணைகளிலும் செய்தது போலவே இதன் அறிக்கையை இலங்கைக்கு மட்டும் இரகசியமாக காட்டியது.  இலங்கை பார்த்த அறிக்கையின் முடியில் எந்த இடத்திலும் இலங்கை தண்டிக்கப்படவேண்டும் என்று இருக்கவில்லை. இதனால் கடைசி வரையும்  இலங்கைஅறிக்கையைப் பெரிது படுத்தவில்லை.  

 

ஆனால் அறிகையை B.B.C. கள்ளத்தனமாக வாங்கியது. இது கரிசன் புத்தகம் அடித்த, பின்னர் தான் நியாயவாதியாக காட்ட முயலும் B.B.C.யின் கபட நாடகம்.  B.B.C தன் பங்குக்கு சமகாலத்தில்  பல திருகுதாள்ங்களில் அகப்பட்டு தள்ளாடிக் கொண்டிருந்தது. 146,000 மக்கள் இறந்த போது, எல்லாம் தெரிந்திருந்தும், ஒரு சொல்லு உண்மை எழுத  மறுத்துவிட்டது. அதேநேரம் இல்லாத பொய்களை, ஆராய்ந்து கண்டு பிடித்தாகக்காட்டி தனது வழமையான திருகுதாளத்தை வெளிக்காடியது. B.B.C.க்கு தனது இந்த திருதாளத்தை மூடி மறைக்க ஐ.நா வின் திருதாளத்தை அம்பலப்படுத்துவது நல்ல ஒரு தப்பித்து வெளியெறும் வழியாகப்பட்டது.

 

எனவே தனது ஆசையை நிறைவேற்றி வைக்க B.B.C தான் களவெடுத்த அறிக்கையை பெரிதுபடுத்தி, பாலிதாவை பேட்டி கண்டு அவரை உருட்டி எடுத்தது. அறிக்கையை அது உள்ளக விசாரணை மட்டும்தான் என்று தட்டிக்கழித்து விட்ட இலங்கையைப்பார்த்து , B.B.C. இலங்கை ஐ.நாவை மிரட்டியதா என்று கேட்டபோது அதனிடம் பதில் இல்லை.அடுத்த பேட்டி ஒன்று கிடைக்கும் வரை இலங்கையால் தான் எப்படி தன்னைவிட பெரிய ஐ.நா வை மிரட்டியிருக்க முடியும் என்ற மறுத்தானை கொடுக்க காலதாமதம் ஏற்பட்டது. மேலும் மறுத்தான் கொடுத்த பின்னரும் இலங்கையின் மீதான சந்தேகம் சர்வதேச மட்டத்தில் தீர்ந்த பாடில்லை. ஏனெனில் இலங்கை எப்போதும் கேள்விகளுக்கு மறுத்தான் தான் கொடுத்ததேயல்லாமல் பதில் கொடுப்பதில்லை. இது பெரிதாக இருந்திருக்காது போர்காலமாக இருந்திருந்தால். ஏனெனில் அந்த நேரம், நாடுகள் எல்லாம் இலங்கை பக்கம் என்பத்தால் அப்படியான மறுத்தான்கள், சுட்டிப்பயல் கொடுக்கும் கெட்டித்தனமான வெட்டிப்பதில்களாகவே பார்க்கப்படிருக்கும். ஆனால் இப்போது பல நாடுகள் இலங்கையுடன் இல்லை. இதனால் B.B.C.யின் கேள்விக்கு இலங்கை பதில் அளிக்க மறுத்து மறுத்தான் மட்டும்தான் கொடுத்திருக்கிறது என்பது இன்னமும் மூடப்படாத கேள்வி.

 

இந்த விடயம் இன்னமும் திறந்திருப்பதால், ஐ.நாவின் உள்ளக விசாரணை மேலே போவது இலங்கைக்கு சாதகமானது அல்ல.    அது இலங்கை பற்றிய விசாரணை இல்லாவிட்டாலும், மேலும் அதிலிருந்து வரும் பாடங்கள் இனிமேலைய போர் முன்னெடுபுகளாக இருக்கும் சிரியா, ஈரான் போன்ற நாடுகளுக்கே மட்டும் என்று வரையறுக்கப்பட்டிருந்தாலும், பின்னர் ஒருநாள், யாராவது B.B.C. மாதிரி அதிலும் இலங்கையை கேள்வி கேட்கலாம் என்பது இலங்கையின் கரிசனை.

 

இதனால் இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணையை பரிசீலித்த நிபுணர் குழுஅறிக்கையை பரிசீலித்த உள்ளக அறிக்கையை பரிசீலிக்க விசாரணைக் குழுவை ஐ.நா அமைக்க முதல் இலங்கை தனது மகத்துவத்தை, குற்றமின்மையை ஐ.நா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறது. இலங்கை எதிரிப்பார்ப்பது, ஐ.நா கள்ளமாக  தன்னிடம் அறிக்கையை காட்டி சென்ற தடவை  தன்னை முட்டாள் ஆக்கியது மாதிரி இல்லாமல், அறிக்கையை இலங்கைக்கு அதிகாரிகள் வெளிப்படையாக கொண்டுவந்தால், எப்படி பான்-கி-மூன் போரை தலதமாளிகையில் வைத்து ஆராய்ந்தாரோ அதே மாதிரியே  எடுத்துவரும் இந்த ஐ.நா அதிகாரிகளும் அறிக்கையை தலதா மாளிகையில் வைத்துஆராயலாம் என்பதாகும். 

 

ஐ.நா அறிக்கை உள்ளக அறிக்கை என்று கூறிவிட்டது. அதன் பின்னர்   அதை தலதாமாளிகை கொண்டு சென்று இலங்கையால் அது பிழை என்று ராபர் ஸ்டாம் போடுவதில் சில சிக்கல்கள் இருக்கிறது. ஐ.நா ஆரம்பம் தொடக்கம் போரில் இறந்தவர்களின் எண்ணிகையை சரியாக கணக்கிட்டுக்கொண்டுதான் வந்தது. இதை இலங்கை கொழும்பிலோ அல்லது தலதா மாளிகையிலோ வைத்து பிழையான கணக்கீடுகள் என்று கூறியபோது ஐ.நாவுக்கு தனது அந்த சரியான கணக்குகளை வீசி எறிந்துவிட்டு இலங்கையின் கணககை அதிகார பூர்வமாக வெளிவிடுவதில் போர் நேரம் ஒரு சங்கடமும் இருக்கவில்லை. ஏன் எனில் அந்த கணக்குகளை தயாரித்த ஐ.நாவின் இளநிலை அதிகாரிகளுக்கு கொழும்போ அல்லது தலதா மாளிகை சற்று தொலைவில்த்தான் இருந்த்து. எனவே அவர்களால் தமது சரியான கணக்குகளை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் இப்போது இந்த உள்ளக அறிக்கையையில் B.B.C. தானும் ஒரு பிரதியை வாங்கிவிட்டதால் அறிக்கையை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடவேண்டியதாயிற்று.  எல்லாம் பரகசியமாகிவிட்ட இந்த நிலையில் ஐ.நாவின் செல்லப்பிள்ளை குத்தியன் பாலுக்கழுதால் ஆதை மூடிக்கட்டிகொண்டு அந்தரப்பட வேண்டி இருக்கிறது.  இதனால்த்தான் ஐ.நா இலங்கையை பார்த்து " நீ சொல்வதை பற்றிக்கவலை இல்லை" என்றுவிட்டு உள்ளக விசாரணையை தொடருமா அல்லது இலங்கைக்கு அறிக்கையை எடுத்து சென்று அங்கே தலதா மாளிகையில் அதன் ஒப்புதல் வாங்க வேண்டிய இக்கட்டில்தான் இருக்கா என்பது அவ்வளவு வெளிச்சமான விடையமாகப்படவில்லை.

Edited by மல்லையூரான்

சிங்களவர்களின் பல நல்ல இராஜதந்திரிகள் மகிந்தா கூட்டத்தை விட்டு விலகியவண்ணம் உள்ளனர்...



‘I give low mark to Sri Lanka for democracy’ - – Rajiva Wijesinha

http://www.lakbimanews.lk/index.php?option=com_content&view=article&id=328:i-give-low-mark-to-sri-lanka-for-democracy&catid=35:top-story&Itemid=53

ஸ்ரீலங்காவிடம் ஒரு இராஜதந்திரமும் இல்லை, எல்லாம் இந்தியாகரனின் உதவி, அவ்வளவே,இல்லாவிடில் இன்னமும் மாவில் ஆற்றில் தான் நிப்பாங்கள்

 பிரான்சிக்கான தூதுவரும், தயான்  ஜெயதிலக்கா, சிங்கள அரசியலுக்கு, இராஜதந்திரத்திற்கு, முழுக்கு போட உள்ளார்  :)

ரஜிவ் வியசிங்கா முழுப் பூசனிக்கயை சோற்றுக்குள் மறைக்கிறார். ஒன்று இவரே தெரிவு செய்யப்பாடதவர்.  இலங்கையின் தற்போதைய  அரசியல் அமைப்புக்கும் பிருத்தானிய அரசியல் அமைப்புக்கும் ஒரு தொடர்பும் இல்லை. சும்மா முழந்தாளுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப் போடுகிறார். இலங்கையின் அரசியல் அமைப்பு இப்போது செனட்டை தவிர வெளிப்பார்வையில் அமெரிக்காவினது மாதிரியே. 18ம் திருத்தம் நீதிமன்றத்தை குழப்பி அடிக்கிறது; அவ்வளவுதான். அதை J.R செய்ய இல்லை. மூன்று முறை அதிபர் பதவியை J.R. கொடுக்கவில்லை. தனது குட்ம்பத்திற்கு என்று மட்டும் J.R. பதவிகளை ஒதுக்கவில்லை. மேலும் மகிந்தா செனட் கேட்பதின் காரணம் மேலதிக மந்திரிகளை நியமிக்க முடியாமையால்த்தான். இலங்கையின் பழைய செனட் அமெரிக்காவினது மாதிரி தெரிவு செய்யப்பட்டதல்ல. நியமிக்கப்பட்டது.

 

அமெரிக்க செனட் சுதந்திரத்தின் அதி உச்சம்(கடைசி நான் அறிந்தவற்றில்) அதாவது 1000 பக்க குற்றப்பத்திரிகையை படிக்க இலங்கை பாரளுமன்றத்தெரிவுக்குழு, இத்தகைய ஒரு மிக அவசியாமன இடத்தில்,  நேரம் கொடுக்க மறுத்துவிட்டது. அமெரிக்க செனட்டில் சட்டப்படி 51% வீதம் இருந்தால் சட்டமாக்கலாம். ஆனால் தனி ஒரு செனட்டர், எந்த விவாதத்திலும், தான் எதையும் பேசலாம் என்று இருப்பத்தால் தற்காலத்தில் 66% வீத செனட்ட்ர்கள் ஒத்துளைக்காவிட்டால் அவர்கள் எதையும் சட்டமாக முயல்வதில்லை. ஏன் எனில் ஒரு செனட்டர் நினைத்தாலே அந்த வருடம் முழுவது வேறு ஒரு சட்டம் செனட்டுக்குவரமுடியாமல் சபையில் இருக்கும் சட்டத்திற்காக(சட்டத்தை பற்றி பேசவேண்டும் என்பது நிபந்தனை அல்ல) தான் தொடர்ந்து பேச்சிக்கோண்டிருக்கலாம். 66% விதம் இருந்தால் அவசர சட்டங்களை விவாதம் இன்றி ஆக்கிகொள்ளலாம். இதனால் கிட்டத்தட்ட எல்ல சட்டங்களுமே இரண்டு கட்சிகளும் ஒத்துபோய் 66% மட்டும் வைத்துத்தான் சட்டமாக்குகின்றன.  இதை ரஜிவாவுக்கு நன்கு தெரியும். அதாவது சந்தர்ப்பம் கிடைத்தால் தனி ஒரு செனட்டர் அதிபருக்கு கிட்டத்தட்டவான பலத்துடன் மிளிரமுடியும். இதை அறிந்தே இரண்டு கட்சிகளும் சட்டம் வருமுன் பேச்சுவார்த்தைளில் இறங்குவது.( சட்டம் செண்டுக்கு சம்பிர்தாயுத்திற்காக ம்ட்டுமே இன் நாட்களில் வருகிறது. ஏன் எனில் இரு கட்சிகளின் மூடிய கதவு பேச்சுவார்த்தைகள் தான் சட்ட அலகுகளை தீர்மானிக்கின்றன. சில அழகுபடுத்தல்கள் மட்டும்தான் செனட்டின் விவாதத்தில் நடைபெறும்) 

 

இலங்கையின் எல்லா அரசியல் அமைப்புக்களை 1978 ல் போட்டுவிடுகிறார். சிறிமா செய்தவற்றை மறந்து போய்விட்டார். சிங்களத்தேவைகளை மட்டும் பேசுகிறார். அரசுகள் தமிழரின் வாகுரிமையை பறித்து தான் தோன்றித்தனமாக மொழிச்சட்டங்கள் கொண்டுவந்து இனக்கலவரங்கள் கூட இந்த அர்சியல் அமைப்புக்களால் வெடித்தன என்பதை இவர் சொல்லவில்லை. மொழி,மத உரிமையில் இந்த அரசியல் அமைபுக்களின் கேடுகெட்ட நடத்தைகளை மூடிவைத்துவிட்டர். சிறிமாவும் பதியுதீனும் நிறவெறி ஆபிரிக்காவில் இருகாத சட்டங்களை தமிழரின் கல்வி மீது கொண்டுவந்தார்கள் என்பதயும் ரஜீவாவுக்கு நினைவூட்ட வேண்டும்.

 

இவர் ஜனாதிபதியை காப்பாற்ற புது புரளிகள் கிளப்புகிறார். செனடை புதிதாக கொண்டுவந்து  அமரிக்காவை நிகர்த்துவிட்டத்தாக த்ம்பட்டம் அடிக்க முயல்கிறார்கள்.(இவ்வளவு நாளும் ஆசியாவின் ஆச்சரியம் மட்டும்தான். இனி அமெரிக்காவைவிட பெரிய  ஆச்சரியம் ஆக போகிறது)  சிங்களவர் இந்த அதிபர் முறையை கட்டி அழட்டும். நமக்கு அது பற்றி அக்கறை இல்லை. நமது தீர்வு குறைந்த பட்சம் சுயநிர்ணய உரிமையுடன் இருக்க வேண்டும். அப்போது அரசியல் அமைப்பில் கோமாளித்தனகளை புகுத்தினாலோ மோடையா கூத்துக்களை காட்டினாலோ நாம் தனி நாடாகப் பிரிந்து போய்விடுவோம்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.