Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஹைக்கூ வில் ஒரு முயற்சி....

Featured Replies

கடதாசிப் பூ

296529752980300629703007298630.jpg

முத்தம்

29903009298030212980299030213s.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol::lol: வாழ்த்துக்கள். நன்றாக இருக்கிறது உங்கள் ஹைக்கூ கவிதை.

அடிக்கடி உங்கள் கன்னத்தில் கவிதை எழுதுப்படட்டும்.. :P

ஆனால் கைக்கூ கன்னத்தில் வேண்டாமே.

  • தொடங்கியவர்

ஹி..ஹி...அடிவாங்கிய விரலடையாளங்களை வெளியில் சொல்வதா..? :lol:

  • தொடங்கியவர்

ஜீவ காருண்யம்....?

297230082997296530062992300929.jpg

ம்ம்ம் நல்லாத்தான் இருக்கு உங்கள் கைக்கூ கவிதைகள். வாழ்த்துக்கள்..

முத்தம் ஹைக்கூ .... நல்லதொரு முத்தம் மட்டுமல்ல....

ஹை....கூ ...(உயர் சிலிர்ப்பு) வும் தான் ......

" நனைந்த இதயம்

தீமூட்டியது

காதல் " இது எப்படி... :?: :?:

தீப்பற்றியெரியும் இதயத்துடன் :!: :!:

-எல்லாள மஹாராஜா-

நனைந்த இதயம்

தீமூட்டியது

காதல் " இது எப்படி... :?: :?:

தீப்பற்றியெரியும் இதயத்துடன் :!: :!:

-எல்லாள மஹாராஜா-

ம்ம் நல்லாத்தான் இருக்கு. இருந்தாலும் கவனம் அப்படியே சாம்பலா போனாலும் போகலாம் :cry:

சாம்பலிலும் உயிர்க்கும் பீனிக்ஸ் நாங்கள்... :lol::lol: இரசிகை... :lol::lol:

நல்லாருக்கு என்று மட்டும் சொல்லாமல் என்ன இரசித்தீர்கள் என்று சொன்னால்....உற்சாகமாக இருக்கும்... :idea: :idea: :idea:

ரசிகை என்ற பெயர் ரசிக உள்ளத்துள் தானே ஒழித்திருக்கும்.....

சொல்வது சரியாயிருக்கும் என்ற நம்பிக்கையுடன்

:?: :!: :?: :!:

-எல்லாள மகாராஜா-

" இரசிகர்களில்லாத

நாட்டியம்

விழும் பல் "

விழும் பல்லுடன் :roll: :roll: :roll:

-எல்லாள மஹாராஜா-

ஹைக்கூ கவிதைகள் நல்லாயிருக்கு கெளரிபாலன்

சாம்பலிலும் உயிர்க்கும் பீனிக்ஸ் நாங்கள்... :lol::lol: இரசிகை... :lol::lol: நல்லாருக்கு என்று மட்டும் சொல்லாமல் என்ன இரசித்தீர்கள் என்று சொன்னால்....உற்சாகமாக இருக்கும்... :idea: :idea: :idea: ரசிகை என்ற பெயர் ரசிக உள்ளத்துள் தானே ஒழித்திருக்கும்.....சொல்வது சரியாயிருக்கும் என்ற நம்பிக்கையுடன்

:?: :!: :?: :!: -எல்லாள மகாராஜா-

ஆஹா பீனிக்ஸ் பறவைகளோ?? :shock: அப்ப நாட்டு மக்களின் மன்னர் இல்லையோ? :? நான் நினைத்தேன் நீங்கள் நாட்டு மன்னர் எண்டு ஐயோ இப்படி ஏமாத்தி போட்டியளே :cry:

ம்ம் அப்புறம் எனது பார்வையில் கவிதை நன்றாக இருந்தது பிடித்திருந்தது.அதன் அர்த்தம் வேறு குறை இல்லை என்பதுதானே.!!! ம்ம் மற்றவர்களின் பார்வையில் வித்தியாசம் இருந்தால் வந்து சொல்லுவார்கள் தானே. :roll:

  • கருத்துக்கள உறவுகள்

ஹைக்கூ கவிதை நல்லாயிருக்கு கெளரிபாலன் ........

பனையில் முட்டியிருந்தது

இறக்கி அடித்து பார்த்தேன்

ஆகா ஆகா கள்ளு ............

காதல்

கண்களால் கடத்தப்படும்

மின்சாரம் :P

காதல்

கண்களால் கடத்தப்படும்

மின்சாரம் :P

ஷாக் அடித்து விட்டது. :roll: :roll: இது ...இவையிரண்டுக்கும் பொதுவான இயல்பு.....

கண்களால் மட்டும் கடத்தப்படுவதில்லை என்பது என் அபிப்பிராயம்.... கண்களாலும்... :lol::lol:

நல்ல முயற்சி தொடருங்கள் ரசிகை

" சிதைந்த இதயம்

முள்முடி

கோபம் ... "

சிதைந்த இதயத்துடன் :?: :?: :?:

-எல்லாள மஹாராஜா-

  • கருத்துக்கள உறவுகள்

பித்தன்

யாழ் களத்தில் புலம்பும்

புத்தன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தன் கவிதை நல்லா இருக்கு எதற்கும் இந்த பக்கம் வராம வேற எங்கயாவது போய் புலம்பும்....

ஹைக்கூ கவிதை நல்லாயிருக்கு கெளரிபாலன் ........

பனையில் முட்டியிருந்தது

இறக்கி அடித்து பார்த்தேன்

ஆகா ஆகா கள்ளு ............

//முட்டியிருந்தது

பனையில் இப்போ

முட்டியிருக்கிறது வண்டி.//

புத்தனின் ஞானம் 1 :lol::lol::lol::lol:

-எல்லாள மஹாராஜா-

பித்தன்

யாழ் களத்தில் புலம்பும்

புத்தன்

புத்தனுடன் சேர்ந்த இன்னொரு ஹைக்கூ....

//சிரிக்கும் புத்தர் சிலை

உதட்டின் மேலே

புணரும் ஈக்கள்// -அமுத பாரதி

இது ஹைக்கூ .... மேலிருப்பது சை கூ..... :roll: :lol::lol::lol:

முயற்சி செய்யுங்கள் புத்தா.... :idea: :idea:

-எல்லாள மஹாராஜா-

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கௌரி பாலனின் கடதாசிப்புூவில் ஆரம்பித்த ஹைக்கூ கவிதைகள் முத்தம், கள், காதல், காமம் என்று ஹைக்கூ கவிதை மரபுகளை மீறி எங்கெங்கோ போகின்றன.

இரசிகை இன்னொரு தலைப்பில் இணைத்திருக்கும் "ஹைக்கூ" கவிதைகளின் இலக்கணத்தை படித்துவிட்டு எழுதுங்கள்.

------------

ஹைக்கூ கவிதையை பற்றி நான் வாசித்தது

ஆரம்பம்

பொருள் வியப்புடன்

திடீர் திருப்பம்!

என்று மூன்று வரிகள் தான் ஹைக்கூ வரும்!

முதல் வரி : செய்திவாக்கியம்

இரண்டாவது வரி : வியப்பு (அ)வினா வரி

முன்றாவது வரி : ஷாக் வரி/மின்தாக்கு வரி

ஹைக்கூ பற்றி தொடந்து வாசிக்க http://sammlung.blogspot.com/2003_09_28_sa...ng_archive.html

_________________

நம்பிக்கையே நல்லது... எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது!!

நட்புடன்

இரசிகை

________

  • தொடங்கியவர்

வாழ்த்துச் சொன்ன ரசிகை எல்லாளன் மதன், புத்தன் அனைவரிற்கும் மனமார்ந்த நன்றி

  • தொடங்கியவர்

எல்லாளன் எழுதியது:

முத்தம் ஹைக்கூ .... நல்லதொரு முத்தம் மட்டுமல்ல....

ஹை....கூ ...(உயர் சிலிர்ப்பு) வும் தான் ......

" நனைந்த இதயம்

தீமூட்டியது

காதல் " இது எப்படி...

தீப்பற்றியெரியும் இதயத்துடன்

-எல்லாள மஹாராஜா-

ஆஹா மகாராஜா காதல் அருமை...ஆனால் என்ன காதலும், முத்தமும் சிலரது கண்களில் காமமாய் தெரியுது... :cry: ம்... ஒவ்வொருவரின் பார்வையும் அவரவர் மனத்தைப் பொறுத்துத்தான் அமையுது....(அகக்கண் பார்வை) :( :x

கௌரி பாலனின் கடதாசிப்புூவில் ஆரம்பித்த ஹைக்கூ கவிதைகள் முத்தம், கள், காதல், காமம் என்று ஹைக்கூ கவிதை மரபுகளை மீறி எங்கெங்கோ போகின்றன.

முதல் வரி : செய்திவாக்கியம்

இரண்டாவது வரி : வியப்பு (அ)வினா வரி

முன்றாவது வரி : ஷாக் வரி/மின்தாக்கு வரி

// நீங்கள் காமக்கவிதை என்று குறிப்பிடும் கவிதையை இங்கு நான் தான் இட்டேன். அமுத பாரதியின் அழகான கவிதை.

உயிர்ப்பின் தத்துவத்தைப் பார்க்கும் இறைவனின் சிரிப்பு தான் அங்கு சொல்லப்பட்டிருக்கின்றது.

காமம் மட்டும் உங்கள் பார்வையில் பட்டிருக்கின்றது. நான் படித்த அல்லது அறிந்து கொண்ட ஹைக்கூக்கள்

உங்கள் வினாவரி, ஷாக் வரி என்ற வடிவங்களில் இருக்க வேண்டுமென்பதல்ல.

அப்படி இருப்பதாகவும் தெரியவில்லை முடிந்தால் உதாரணம் காட்டுங்கள்.

ஜப்பானிலிருந்து வந்த மூலக்கவிதைகள் சில தருகின்றேன். உங்கள் வரைவிலக்கணத்தில் எது வருகின்றது என்று சொல்லுங்கள் பார்ப்போம்.

// உதிரும் மலரொன்று

மீண்டும் கிளைக்குத் திரும்புகின்றதோ

ஓ.. வண்ணத்துப் பூச்சி.//

//இறந்த பூனை

திறந்த வாயுடன்

கொட்டும் மழையில்//

//பழைய குளம்

தவளை குதிக்க

நீரின் ஒலி//

//சம வெளியில்

பசுவின் உதடுகள்

புல்லின் ஈரத்தோடு//

ஹைக்கூ ஜென் தத்துவத்தின் விரிவாக்கமாகவே வந்தவை.

ஜென் தத்துவங்கள் சிருஷ்டியின் மகத்துவங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வந்தவை.

வெறும் வினாவும் ஆச்சரியமும் மட்டும் ஹைக்கூ அல்ல.இப்பொழுது வரும்..

//குளியலறை

ஆடை துறந்தது

புதிய சோப்//

என்பது போன்றன விடயத்தால் மலிந்து போய் விட்டன.

7-5-7 என்பது ஆரம்ப கால ஹைக்கூவின் வரைவிலக்கணமாக இருந்தாலும் பின்னர் அது கைவிடப் பட்டு விட்டது.

இது சொல்ல வரும் விடயங்கள் ஆயிரமாயிரம். என்னை மிகவும் கவர்ந்த ஹைக்கூ ஒன்று. ஜப்பானிய ஹைக்கூ.

// கருப்பையில்

குழந்தை போல

இறந்த தேணீ?/

இறந்த தேனீயின் தோற்றம் அவ்வாறு காணப்படுவதுமல்லாமல் அதற்கும் மேலால் இறப்பின் பின்னால் பிறப்பு இருப்பதும் உணர்த்தப் படுகின்றது.

ஹைக்கூ சிறப்புப் பெறுவது மூன்று வரிகளால் மட்டுமல்ல அந்த வரிகளின் பின்னால் நமக்குத் தரும் சிந்தனைப் பறப்புதான்.

அவ்வாறு சிந்திக்கத் தூண்டாதவை நல்ல கவிதைகளாக இருக்க முடியாது.

கவிதையில் எல்லாவற்றையும் சொல்லிவிட முடியாது .சொல்லவும் கூடாது. வாசகனின் சிந்தனைக்கு இடம் கொடுக்க வேண்டும். அவையே நல்ல கவிதைகள் என்று சுஜாதா ஒரு முறை சொல்லியிருக்கின்றார்.

சிந்திக்கத் தூண்டாத கவிதை விரைவிலே மறக்கடிக்கப்பட்டு விடும். கவிதை மட்டுமல்ல எதுவுமே.

கெளரி பாலன் சொல்வதைப் போல காமம் ஒன்றும் கெட்ட விடயமல்ல. காதல் இருந்தால் காமம் அங்கு இருக்கும்.

இயற்கையின் படைப்பும் அதன் உயிர்ப்பும் காதலும் காமமுமே.

இல்லையென்று சொல்லி வேடம் போட என்னால் முடியாது.

இந்துக் கோயில் கோபுரங்களிலேயே காமம் குறித்த சிற்பங்கள் இருக்க வேண்டியது ஆகம விதி.

யாழ்களம் சிந்தனைப் பறப்பிற்கான இடமேயன்றி. சிந்தனையைக் கடிவாளம் போடும் இடமன்று என்பது எனது நம்பிக்கை. சரி என்றோ சரியில்லை என்றோ கூறும் பொழுது இயன்றவரை காரணங்களையும் அல்லது ஆதாரங்களையும் சேர்த்துக் கொள்வது பலருக்கும் கற்றுக் கொள்ள உதவி செய்யும்.

ஆரோக்கியமான களமாக யாழ் இருப்பது எல்லோருக்கும் நல்லது. ஆரோக்கியமான விவாதத்தை வரவேற்கின்றேன்.

-எல்லாள மஹாராஜா-

காய்ந்த காலடி

துளிர்க்கும் புல்

தை மாதம் - எப்படி இருக்கின்றது. :?: :?: :!: :!:

-எல்லாள மஹாராஜா-

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகாராஜா விரிவான விளக்கத்திற்கு நன்றி.

நான் கூறவந்தது கருப்பொருட்களைப் பற்றி அல்ல. ஹைக்கூ கவிதை மரபுகளைப் பற்றித்தான்.

  • தொடங்கியவர்

காய்ந்த காலடி

துளிர்க்கும் புல்

தை மாதம் - எப்படி இருக்கின்றது. :?: :?: :!: :!:

அருமை

// உதிரும் மலரொன்று

மீண்டும் கிளைக்குத் திரும்புகின்றதோ

ஓ.. வண்ணத்துப் பூச்சி.//

//இறந்த பூனை

திறந்த வாயுடன்

கொட்டும் மழையில்//

//பழைய குளம்

தவளை குதிக்க

நீரின் ஒலி//

//சம வெளியில்

பசுவின் உதடுகள்

புல்லின் ஈரத்தோடு//

மன்னவா தங்களது விளக்கம் நன்றாகவுள்ளது... எனது சிறிய அறிவுக்கு மேற் சொல்லப்பட்ட மரபுகள் ஏதும் இந்த மூலக் கவிதையில் தெரியவில்லை....தவறுகள் சொல்பவர்கள் அதற்கு ஏற்ற மாதிரி திருத்தம் தந்தால் அல்லது அந்த மரபுகளிற்கமைய உதாரணம் தந்தால் பின்பற்ற வசதியாக இருக்கும் :idea:

கவிதையில் எல்லாவற்றையும் சொல்லிவிட முடியாது .சொல்லவும் கூடாது. வாசகனின் சிந்தனைக்கு இடம் கொடுக்க வேண்டும். அவையே நல்ல கவிதைகள் என்று சுஜாதா ஒரு முறை சொல்லியிருக்கின்றார்.

சிந்திக்கத் தூண்டாத கவிதை விரைவிலே மறக்கடிக்கப்பட்டு விடும். கவிதை மட்டுமல்ல எதுவுமே.

வாஸ்தவம் தான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.