Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அளவெட்டி செய்திகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அளவை கலை இலக்கிய வட்டம்-அகம் ஆரம்பம்

Published December 11th, 2012 | By அளவெட்டி

அளவை கலை இலக்கிய வட்டம் -அகம் எனும் அமைப்பு அளவெட்டியின் கலை இலக்கிய வளர்ச்சிக்கான அடுத்த கட்டத்தை நோக்கில் கொண்டு ஆரம்பிக்கப்படவுள்ளது. அது தொடர்பான விபரங்கள்…….

உவிநாயகர் துணை கலைமகள் பாதம் சரண்அளவை கலை இலக்கிய வட்டம் (அகம்)நோக்கம் : கலை மலிந்த ப10மி எனும் அளவெட்டியின் பெருமையை தொடர்ந்தும் தக்க வைத்தல்முக்கிய செயற்பாடுகள்• உலகம் முழுதும் பரந்துவாழும் அளவெட்டியை பிறப்பிடம் வாழ்விடம் மற்றும்  ப10ர்வீகமாகக் கொண்ட கலை இலக்கியவாதிகளை ஒரு அணியில் திரட்டல்• கலை இலக்கியத்துறையில் அளவெட்டி மண்ணிண் கனதி;யான பங்களிப்பை எதிர்காலச் சந்ததி அறியத்தக்கவிதத்தில் ஆவணப்படுத்தல்• அளவெட்டிக் கிராமத்தில் பேணப்பட்டு தற்போது பின்னடைவைச் சந்தித்துவரும் கலைத்துறைகளுக்கு புத்துயிர் அளித்தல்• அளவெட்டி சார்ந்த கலைஞர்களின் விபரத்திரட்டுக்களையும் அவர்கள் பற்றிய குறிப்புக்களையும் காலத்துக்கு காலம் வெளியிடலும் புதிய தகவல்களை சேர்த்துக்கொள்ளலும்• அளவெட்டியைச் சேர்ந்த இளம் சமூகத்தினரை கலை இலக்கிய செயற்பாடுகளில் ஈடுபட வைப்பதற்கான வாயப்புக்களை வழங்கல் இதற்காக1. கலை இலக்கியத் துறை சார்ந்த பயிற்சிகள் வகுப்புக்களை இலவசமாக நடாத்தல்2. போட்டிகள் மூலமாக மாணவர்களை ஊக்குவித்தல்3. மேடைநிகழ்வுகளுக்கான வாய்ப்புக்களை வழங்கி திறமைகளை அங்கீகரித்தல்4. இசைக்கருவிகளை கொள்வனவு செய்வதற்கு வட்டியற்ற இலகு தவணை அடிப்படையிலான கடன் வசதிகளை வழங்கல்5. தேசிய மட்ட சர்வதேச மட்ட போட்டிகளில் எமது இளைய சமூகம் கலந்து கொள்ளத்தக்க வாயப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல்• நலிவுற்ற கலைஞர்களுக்கு உதவிகளை வழங்கல்• வருடாந்தம் அளவைக் கலை இலக்கியப் பெருவிழா என ஒரு விழாவினை நடாத்தி முத்தமிழ் கலைகளை ஆற்றுகை செய்வதுடன் அளவெட்டியைச் சேர்ந்த திறன் மிகு கலைஞர்களுக்கு விருதுகள் மற்றும் பட்டங்களை வழங்கல்• அளவெட்டிக் கலைஞர்களின் ஆற்றுகைகள் அடங்கிய இறுவட்டுக்கள் புத்தகங்கள் என்பவற்றை வெளியிடல்.• அளவெட்டிக் கலைஞர்களின் நிகழ்வுகளை தயாரித்து தொலைக்காட்சி மற்றும் வானொலிகளுக்கு வழங்கல்.நிர்வாக கட்;டமைப்பு:அகம் அமைப்பு ஓரு சர்வதேச அமைப்பாகும். அதன் இணை அமைப்பாக அளவெட்டி மகாஜன சபைக் கலைஞர் வட்டம் செயற்படும். கலைஞர் வட்டம் அளவெட்டியை தளமாகக் கொண்டு அகம் ஒழுங்கமைக்கும் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் அமைப்பாக செயற்படும். சர்வதேச ரீதியாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை அகம் அமைப்பின்; கீழ் நாடுகள் தழுவிய ரீதியல் அமைக்கப்படும் உபகுழுக்கள்  குறித்த நாடுகளில் மேற்கொள்ளும்.நிர்வாகக் குழு இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கும்.1. கௌரவக் குழு2. செயற்குமுகௌரவக் குழு பின்வருமாறு அமையும்1. போசகர்கள்2. ஆலோசகர்கள்3. பெருந்தலைவர்4. பெரும் செயலர்5. பெரும் பொருளர் இவ் ஐந்து பதவிகளும் கௌரவப்பதவிகளாக மூத்த கலைஞர்களை உள்ளடக்கிய குழுவினராக இருப்பார்கள்.செயற்குழு பின்வருமாறு அமையும்1. தலைவர்2. செயலாளர்3. பொருளாளர்4. உபதலைவர்5. உப செயலாளர்6. இணைத் தலைவர் – அளவெட்டியை வாழ்விடமாகக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.7. இணைச் செயலாளர்- அளவெட்டியை வாழ்விடமாகக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.8. இணைப் பொருளாளர்- அளவெட்டியை வாழ்விடமாகக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.9. சர்வதேச இணைப்பாளர்10. நாடுகளுக்கான இணைப்பாளர்கள்• இங்கிலாந்து• சுவிற்சர்லாந்து• கனடா• அவுஸ்திரேலியா• பிரான்ஸ்• ஜேர்மனி• இந்தியா• நோர்வே• சந்தர்ப்பம் இருப்பின் அதிகரிக்க முடியும்.11. பத்திராதிபர்உவிநாயகர் துணை கலைமகள் பாதம் சரண்அளவை கலை இலக்கிய வட்டம் (அகம்)நோக்கம் : கலை மலிந்த ப10மி எனும் அளவெட்டியின் பெருமையை தொடர்ந்தும் தக்க வைத்தல்முக்கிய செயற்பாடுகள்• உலகம் முழுதும் பரந்துவாழும் அளவெட்டியை பிறப்பிடம் வாழ்விடம் மற்றும்  ப10ர்வீகமாகக் கொண்ட கலை இலக்கியவாதிகளை ஒரு அணியில் திரட்டல்• கலை இலக்கியத்துறையில் அளவெட்டி மண்ணிண் கனதி;யான பங்களிப்பை எதிர்காலச் சந்ததி அறியத்தக்கவிதத்தில் ஆவணப்படுத்தல்• அளவெட்டிக் கிராமத்தில் பேணப்பட்டு தற்போது பின்னடைவைச் சந்தித்துவரும் கலைத்துறைகளுக்கு புத்துயிர் அளித்தல்• அளவெட்டி சார்ந்த கலைஞர்களின் விபரத்திரட்டுக்களையும் அவர்கள் பற்றிய குறிப்புக்களையும் காலத்துக்கு காலம் வெளியிடலும் புதிய தகவல்களை சேர்த்துக்கொள்ளலும்• அளவெட்டியைச் சேர்ந்த இளம் சமூகத்தினரை கலை இலக்கிய செயற்பாடுகளில் ஈடுபட வைப்பதற்கான வாயப்புக்களை வழங்கல் இதற்காக1. கலை இலக்கியத் துறை சார்ந்த பயிற்சிகள் வகுப்புக்களை இலவசமாக நடாத்தல்2. போட்டிகள் மூலமாக மாணவர்களை ஊக்குவித்தல்3. மேடைநிகழ்வுகளுக்கான வாய்ப்புக்களை வழங்கி திறமைகளை அங்கீகரித்தல்4. இசைக்கருவிகளை கொள்வனவு செய்வதற்கு வட்டியற்ற இலகு தவணை அடிப்படையிலான கடன் வசதிகளை வழங்கல்5. தேசிய மட்ட சர்வதேச மட்ட போட்டிகளில் எமது இளைய சமூகம் கலந்து கொள்ளத்தக்க வாயப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல்• நலிவுற்ற கலைஞர்களுக்கு உதவிகளை வழங்கல்• வருடாந்தம் அளவைக் கலை இலக்கியப் பெருவிழா என ஒரு விழாவினை நடாத்தி முத்தமிழ் கலைகளை ஆற்றுகை செய்வதுடன் அளவெட்டியைச் சேர்ந்த திறன் மிகு கலைஞர்களுக்கு விருதுகள் மற்றும் பட்டங்களை வழங்கல்• அளவெட்டிக் கலைஞர்களின் ஆற்றுகைகள் அடங்கிய இறுவட்டுக்கள் புத்தகங்கள் என்பவற்றை வெளியிடல்.• அளவெட்டிக் கலைஞர்களின் நிகழ்வுகளை தயாரித்து தொலைக்காட்சி மற்றும் வானொலிகளுக்கு வழங்கல்.நிர்வாக கட்;டமைப்பு:அகம் அமைப்பு ஓரு சர்வதேச அமைப்பாகும். அதன் இணை அமைப்பாக அளவெட்டி மகாஜன சபைக் கலைஞர் வட்டம் செயற்படும். கலைஞர் வட்டம் அளவெட்டியை தளமாகக் கொண்டு அகம் ஒழுங்கமைக்கும் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் அமைப்பாக செயற்படும். சர்வதேச ரீதியாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை அகம் அமைப்பின்; கீழ் நாடுகள் தழுவிய ரீதியல் அமைக்கப்படும் உபகுழுக்கள்  குறித்த நாடுகளில் மேற்கொள்ளும்.நிர்வாகக் குழு இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கும்.1. கௌரவக் குழு2. செயற்குமுகௌரவக் குழு பின்வருமாறு அமையும்1. போசகர்கள்2. ஆலோசகர்கள்3. பெருந்தலைவர்4. பெரும் செயலர்5. பெரும் பொருளர் இவ் ஐந்து பதவிகளும் கௌரவப்பதவிகளாக மூத்த கலைஞர்களை உள்ளடக்கிய குழுவினராக இருப்பார்கள்.செயற்குழு பின்வருமாறு அமையும்1. தலைவர்2. செயலாளர்3. பொருளாளர்4. உபதலைவர்5. உப செயலாளர்6. இணைத் தலைவர் – அளவெட்டியை வாழ்விடமாகக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.7. இணைச் செயலாளர்- அளவெட்டியை வாழ்விடமாகக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.8. இணைப் பொருளாளர்- அளவெட்டியை வாழ்விடமாகக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.9. சர்வதேச இணைப்பாளர்10. நாடுகளுக்கான இணைப்பாளர்கள்• இங்கிலாந்து• சுவிற்சர்லாந்து• கனடா• அவுஸ்திரேலியா• பிரான்ஸ்• ஜேர்மனி• இந்தியா• நோர்வே• சந்தர்ப்பம் இருப்பின் அதிகரிக்க முடியும்.11. பத்திராதிபர்12. நிர்வாக உறுப்பினர் ஐவர்அங்கத்துவம்அளவெட்டியைப் பிறப்பிடமாகவோ வாழ்விடமாகவோ ப10ர்வீகமாகவோ கொண்ட எவரும் இணைத்துக்கொள்ளப்படுவர். அகம் அமைப்புடன் இணைந்து செயற்பட விரும்பும் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த கலை இலக்கியவாதிகள் நிர்வாகத்தின் அனுமதியுடன் அங்கத்துவம் பெறலாம். அங்கத்துவம் உள்ள அத்தனை பேரும் பாரபட்சமின்றி அகம் அமைப்பு சார் அத்தனை உரித்துக்களுக்கும் தகுதியுடையவர்.சந்தாஆயுள் சந்தா மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.இலங்கையில் 1000.00வெளிநாடுகளில் 10கூதற்போது இவ் நிபந்தனைகளின் அடிப்படையில் அகம் அமைப்பு உருவாக்கப்பட்டு முதலாவது பொதுக்கூட்டத்தில் யாப்பு உருவாக்கத்துக்கான குழு தெரிவு செய்யப்பட்டு யாப்பு உருவாக்கப்பட்டு அங்கத்தவர்கள் அத்தனை பேருக்கும் மின்னஞ்சல் செய்யப்பட்டு திருத்தங்கள் வரவேற்க்கப்பட்டு இறுதிசெய்யப்படும்.12. நிர்வாக உறுப்பினர் ஐவர்அங்கத்துவம்அளவெட்டியைப் பிறப்பிடமாகவோ வாழ்விடமாகவோ ப10ர்வீகமாகவோ கொண்ட எவரும் இணைத்துக்கொள்ளப்படுவர். அகம் அமைப்புடன் இணைந்து செயற்பட விரும்பும் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த கலை இலக்கியவாதிகள் நிர்வாகத்தின் அனுமதியுடன் அங்கத்துவம் பெறலாம். அங்கத்துவம் உள்ள அத்தனை பேரும் பாரபட்சமின்றி அகம் அமைப்பு சார் அத்தனை உரித்துக்களுக்கும் தகுதியுடையவர்.சந்தாஆயுள் சந்தா மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.இலங்கையில் 1000.00வெளிநாடுகளில் 10கூதற்போது இவ் நிபந்தனைகளின் அடிப்படையில் அகம் அமைப்பு உருவாக்கப்பட்டு முதலாவது பொதுக்கூட்டத்தில் யாப்பு உருவாக்கத்துக்கான குழு தெரிவு செய்யப்பட்டு யாப்பு உருவாக்கப்பட்டு அங்கத்தவர்கள் அத்தனை பேருக்கும் மின்னஞ்சல் செய்யப்பட்டு திருத்தங்கள் வரவேற்க்கப்பட்டு இறுதிசெய்யப்படும்.

விநாயகர் துணை கலைமகள் பாதம் சரண்

அளவை கலை இலக்கிய வட்டம் (அகம்)

நோக்கம் : கலை மலிந்த பூமி எனும் அளவெட்டியின் பெருமையை தொடர்ந்தும் தக்க வைத்தல்

முக்கிய செயற்பாடுகள்

• உலகம் முழுதும் பரந்துவாழும் அளவெட்டியை பிறப்பிடம் வாழ்விடம் மற்றும் பூர்வீகமாகக் கொண்ட கலை இலக்கியவாதிகளை ஒரு அணியில் திரட்டல்

• கலை இலக்கியத்துறையில் அளவெட்டி மண்ணிண் கனதி;யான பங்களிப்பை எதிர்காலச் சந்ததி அறியத்தக்கவிதத்தில் ஆவணப்படுத்தல்

• அளவெட்டிக் கிராமத்தில் பேணப்பட்டு தற்போது பின்னடைவைச் சந்தித்துவரும் கலைத்துறைகளுக்கு புத்துயிர் அளித்தல்

• அளவெட்டி சார்ந்த கலைஞர்களின் விபரத்திரட்டுக்களையும் அவர்கள் பற்றிய குறிப்புக்களையும் காலத்துக்கு காலம் வெளியிடலும் புதிய தகவல்களை சேர்த்துக்கொள்ளலும்

• அளவெட்டியைச் சேர்ந்த இளம் சமூகத்தினரை கலை இலக்கிய செயற்பாடுகளில் ஈடுபட வைப்பதற்கான வாயப்புக்களை வழங்கல் இதற்காக

1. கலை இலக்கியத் துறை சார்ந்த பயிற்சிகள் வகுப்புக்களை இலவசமாக நடாத்தல்

2. போட்டிகள் மூலமாக மாணவர்களை ஊக்குவித்தல்

3. மேடைநிகழ்வுகளுக்கான வாய்ப்புக்களை வழங்கி திறமைகளை அங்கீகரித்தல்

4. இசைக்கருவிகளை கொள்வனவு செய்வதற்கு வட்டியற்ற இலகு தவணை அடிப்படையிலான கடன் வசதிகளை வழங்கல்

5. தேசிய மட்ட சர்வதேச மட்ட போட்டிகளில் எமது இளைய சமூகம் கலந்து கொள்ளத்தக்க வாயப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல்

• நலிவுற்ற கலைஞர்களுக்கு உதவிகளை வழங்கல்

• வருடாந்தம் அளவைக் கலை இலக்கியப் பெருவிழா என ஒரு விழாவினை நடாத்தி முத்தமிழ் கலைகளை ஆற்றுகை செய்வதுடன் அளவெட்டியைச் சேர்ந்த திறன் மிகு கலைஞர்களுக்கு விருதுகள் மற்றும் பட்டங்களை வழங்கல்

• அளவெட்டிக் கலைஞர்களின் ஆற்றுகைகள் அடங்கிய இறுவட்டுக்கள் புத்தகங்கள் என்பவற்றை வெளியிடல்.

• அளவெட்டிக் கலைஞர்களின் நிகழ்வுகளை தயாரித்து தொலைக்காட்சி மற்றும் வானொலிகளுக்கு வழங்கல்.

நிர்வாக கட்டமைப்பு:

அகம் அமைப்பு ஓரு சர்வதேச அமைப்பாகும். அதன் இணை அமைப்பாக அளவெட்டி மகாஜன சபைக் கலைஞர் வட்டம் செயற்படும். கலைஞர் வட்டம் அளவெட்டியை தளமாகக் கொண்டு அகம் ஒழுங்கமைக்கும் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் அமைப்பாக செயற்படும். சர்வதேச ரீதியாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை அகம் அமைப்பின் கீழ் நாடுகள் தழுவிய ரீதியல் அமைக்கப்படும் உபகுழுக்கள்  குறித்த நாடுகளில் மேற்கொள்ளும்.

நிர்வாகக் குழு இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கும்.

1. கௌரவக் குழு

2. செயற்குமு

கௌரவக் குழு பின்வருமாறு அமையும்

1. போசகர்கள்

2. ஆலோசகர்கள்

3. பெருந்தலைவர்

4. பெரும் செயலர்

5. பெரும் பொருளர் இவ் ஐந்து பதவிகளும் கௌரவப்பதவிகளாக மூத்த கலைஞர்களை உள்ளடக்கிய குழுவினராக இருப்பார்கள்.

செயற்குழு பின்வருமாறு அமையும்

1. தலைவர்

2. செயலாளர்

3. பொருளாளர்

4. உபதலைவர்

5. உப செயலாளர்

6. இணைத் தலைவர் – அளவெட்டியை வாழ்விடமாகக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

7. இணைச் செயலாளர்- அளவெட்டியை வாழ்விடமாகக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

8. இணைப் பொருளாளர்- அளவெட்டியை வாழ்விடமாகக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

9. சர்வதேச இணைப்பாளர்

10. நாடுகளுக்கான இணைப்பாளர்கள்

• இங்கிலாந்து

• சுவிற்சர்லாந்து

• கனடா

• அவுஸ்திரேலியா

• பிரான்ஸ்

• ஜேர்மனி

• இந்தியா

• நோர்வே

• சந்தர்ப்பம் இருப்பின் அதிகரிக்க முடியும்.

11. பத்திராதிபர்

12. நிர்வாக உறுப்பினர் ஐவர்

அங்கத்துவம்

அளவெட்டியைப் பிறப்பிடமாகவோ வாழ்விடமாகவோ பூர்வீகமாகவோ கொண்ட எவரும் இணைத்துக்கொள்ளப்படுவர். அகம் அமைப்புடன் இணைந்து செயற்பட விரும்பும் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த கலை இலக்கியவாதிகள் நிர்வாகத்தின் அனுமதியுடன் அங்கத்துவம் பெறலாம். அங்கத்துவம் உள்ள அத்தனை பேரும் பாரபட்சமின்றி அகம் அமைப்பு சார் அத்தனை உரித்துக்களுக்கும் தகுதியுடையவர்.

சந்தா

ஆயுள் சந்தா மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

இலங்கையில் 1000.00

வெளிநாடுகளில் 10$

தற்போது இவ் நிபந்தனைகளின் அடிப்படையில் அகம் அமைப்பு உருவாக்கப்பட்டு முதலாவது பொதுக்கூட்டத்தில் யாப்பு உருவாக்கத்துக்கான குழு தெரிவு செய்யப்பட்டு யாப்பு உருவாக்கப்பட்டு அங்கத்தவர்கள் அத்தனை பேருக்கும் மின்னஞ்சல் செய்யப்பட்டு திருத்தங்கள் வரவேற்கப்பட்டு இறுதிசெய்யப்படும்.

தற்போதைய தொடர்புகளுக்கு r.sarveswara@gmail.com

தொலைபேசி 0094778449739

Posted in செய்தி | Leave a comment

Alaveddy.ch

புத்தக கண்காட்சி தைமாதம்

அளவெட்டி மகாஜன சபை மற்றும் அளவெட்டி அபிவிருத்தி மன்றம் ஆகியன இணைந்து நடாத்தவுள்ள புத்தக கண்காட்சி பின்வரும் காரணங்களுக்காக எதிர்வரும் தைமாதத்துக்கு பிற்போடப்பட்டுள்ளது.

1.திரு.பொன்னம்பலம் கணேஸ்வரன் இங்கிலாந்திலிருந்து மேலும் 700 நூல்களை கப்பல் மூலமாக அனுப்பியுள்ளார்.

2.காலஞ்சென்ற பொறியியலாளர் அமரர்.எஸ்.சந்திரபாலன் அவர்களின் குடும்பத்தினர் அவரது ஞாபகமாக ஒரு தொகுதி நூல்களையும் தளபாடங்களையும் அன்பளிப்புச் செய்துள்ளனர்.

3. தபாலதிபர் திரு.கே.கணபதிப்பிள்ளை தன்னிடமுள்ள பெறுமதியான நூல்களின் ஒரு தொகுதியினை அன்பளிப்புச் செய்வதாக உறுதிஅளித்துள்ளார்.

4. மேலும் பலர் நூல்களை அன்பளிப்புச் செய்வதாக உத்தரவாதம் அளித்துள்ளனர்.

எனவே இவ் நூல்கள் அனைத்தையும் பட்டியல்படுத்தி கண்காட்சியை தயார்ப்படுத்த சில நாள்கள் தேவைப்படுவதனால் பாடசாலை விடுமுறையை பயன்படுத்தி ஏற்பாடுகளை செய்ய முடிவதுடன் பாடசாலை நாள்களில் மாணவர்களை கண்காட்சிக்காக அழைப்பதும் இலகுவானது எனவும் அபிவிருத்திமன்ற செயலாளரும் கண்காட்சி ஏற்பாட்டாளர்களுள் ஒருவருமான ஆசிரியர் கை.சரவணன் தெரிவித்தார்.

Alaveddy.ch

கலாபூசணம் விருது பெற்ற அளவைக் கலைஞர்கள்

Published December 10th, 2012 | By அளவெட்டி

வருடாவருடம் இலங்கை கலாசார அமைச்சினால் மூத்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் இலங்கையின் கலைத்துறையின் உயர்விருதான கலாபூசணம் விருதினை இம் முறை அளவெட்டியைச் சேர்ந்த இரு கலைஞர்கள் பெற்றுக்கொண்டுள்ளனர். இசைத்துறைப் பங்களிப்புக்காக சங்கீதவித்துவான் சிற்றம்பலம் சிவானந்தராசாவும் ஊடகத்துறை பங்களிப்புக்காக மூத்த ஊடகவியலாளர் சங்கரம்பர் கதிரவேலுவும் இம் முறை கலாபூசண விருதுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். திரு.சிவானந்தராசா அவர்கள் இசைத்துறை ஆசிரியராக ஆசிரிய ஆலோசகராக பதவிகளை வகித்ததுடன் இசைத்துறை சம்பந்தமான நூல்களையும் எழுதியுள்ளார். இவர் மூதறிஞர் புலவர் வை.க.சிற்றம்பலத்தின் புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஊடகவியலாளர் கதிரவேலு அவர்கள் தனது எழுபத்தைந்து அகவை தாண்டிய நிலையிலும் இன்று வரை ஊடகப் பணியாற்றி வருகின்றார். குறிப்பாக ஊடகத்துறை சார்ந்த புகைப்படப்பிடிப்பாளராக தன்னை நிலைநிறுத்தியுள்ள கதிரவேலு அவர்கள் இலங்கையின் லேக்ஹவுஸ் நிறுவனத்திலும் நீண்டகாலமாக பணியாற்றியதுடன் தற்போது தினக்குரல் செய்தியாளராக கடமைபுரிகின்றார். மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் கோபுரம் யோகர் சுவாமிகளின் புகைப்படம் என்பன இவரால் அந்தக் காலங்களில் எடுக்கப்பட்டு பிரபலமான புகைப்படங்கள் ஆகும்.கலைமலிந்த பூமி அளவெட்டிக்கு தங்கள் கலாபூசண விருதினால் மேலும் பெருமை சேர்த்த இவ்விரு கலைஞர்களையும் அளவை மக்கள் சார்பில் அகமகிழ்ந்து வாழ்த்துகின்றோம்.

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்பான அவசர வேண்டுகோள்…..

Published December 2nd, 2012 | By அளவெட்டி

எண்ணற்ற இசைக்கலைஞர்களைத் தந்து உலகம் முழுவதும் பெயர் பதித்த இசையின் ஊற்று எம் அளவை மண் என நாம் பெருமை கொண்டு இருப்பதை மறுக்க முடியாது. பழைய பெருமைகளில் எமது தற்போதைய பாதையையும் நாம் நகர்த்திக் கொண்டு செல்வது எதிர்காலம் குறித்த சிந்தனைக்கு நலமாக அமையாது. இதனையுணர்ந்து அளவெட்டி மகாஜன சபை கலைஞர் வட்டம் எமது கிராமத்து இளம் குருத்துக்களுக்கு இசைப்பயிற்சி அளிக்கும் நோக்கில் குரல் இன்றேல் விரல் எனும் தொனிப்பொருளில் ஓகன் வயலின் மிருதங்கம் நடனம் ஆகிய துறைகளை பயிற்றுவிக்கும் நோக்கில் கடந்த விஜயதசமி தினத்தன்று வகுப்புக்களை ஆரம்பித்துள்ளது. தற்போது மிருதங்கம் மற்றும் ஓகன் வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றன. ஏராளமான பிள்ளைகள் ஆர்வத்தோடு கலந்து கொள்கின்றார்கள். ஆனால் இப் பிள்ளைகள் மாதாமாதம் கட்டணம் செலுத்தி வகுப்புக்களை தொடர்வது என்பது கடினமான விடயம். அதனைக் கருத்தில் கொண்டு இயன்றளவு இவ் வகுப்புக்களை இலவசமாக நடாத்த கலைஞர் வட்டம் விருப்புக் கொண்டுள்ளது. ஆசிரியர்களுக்கு கொடுப்பனவாக ஒரு நாள் வகுப்புக்கு ரூபா ஐநூறு 500.00 கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. வாராந்தம் இரண்டு வகுப்புக்கள் எனும் அடிப்படையில் மாதம் எட்டு வகுப்புக்களை ஒரு ஆசிரியர் நடாத்துவார். அதனடிப்படையில் ஒரு ஆசிரியருக்கான கொடுப்பனவாக ரூபா நான்காயிரம் 4000.00 தேவைப்படுகின்றது. எனவே மொத்தமாக கலைத்திறன் வகுப்புக்களை நடாத்த மாதம் நிர்வாகச் செலவுகள் உட்பட ஏறக்குறைய இருபதாயிரம் ரூபா தேவைப்படுகின்றது. இச் செலவை நிவர்த்தி செய்ய பின்வரும் வழிகளை கலைஞர் வட்டம் சிந்திக்கின்றது.

புலம்பெயர் வாழ் எமது உறவுகளின் அமைப்பொன்றின் முழுமையான அனுசரணையை பெற்றுக்கொள்வது அல்லது

புலம்பெயர் வாழ் உறவுகள் பன்னிருவரை அணுகி அவர்களுக்கு மாதங்களை ஒதுக்கி நிதியை பெறுவது அல்லது

யாராவது ஒரு அளவை உறவு காலமான தமது உறவுகள் (தாய் தந்தை…)ஞாபகார்த்தமாக இவ் வகுப்புக்களை முழுமையாக பொறுப்பேற்று அவர்கள் பெயரினால் நடாத்துவது

இவ் எண்ணங்களில் ஏதாவது ஒன்றை தங்களால் செயற்படுத்தி எமக்கும் எமது கிராமத்தின் எதிர்கால இசைஉலக வளர்ச்சிக்கும் உதவ முடியும் எனின் கலைஞர் வட்ட செயலாளர் திரு.இ.சர்வேஸ்வராவை தொலைபேசி இலக்கம் 0094778449739 இல் தொடர்பு கொள்ளவும்.

Alaveddy.ch

பாஸ்கரன் மாஸ்ரர் அதிபரானார் வாழ்த்துக்கள்….

அளவெட்டி மகாஜன சபை கலைஞர் வட்டச் செயலாளரும் முன்னாள் தலைவரும் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியருமான திரு.வைத்திலிங்கம் விஜயபாஸ்கரன் குட்டியப்புலம் அ.த.க பாடசாலையின் அதிபராக கடந்த 16.11.2012 வெள்ளிக்கிழமை முதல் பொறுப்பேற்றுக் கொண்டார்.அருணோதயக் கல்லூரி மற்றும் யூனியன் கல்லூரியின் பழைய மாணவரான இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிகத்துறை பட்டதாரியாவார். அத்துடன் கல்வியற்துறையில் முதுமாணிப்பட்டத்தைப் பெற்றுள்ளதுடன் தற்போது முதுதத்துவமாணிக் கற்கையை தொடர்ந்து வருகின்றார். யாழ்.பல்கலைக்கழகத்தின் கல்வியற்துறையின் வருகைதரு விரிவுரையாளராகவும் பணிபுரிந்து வருகின்றார்.சிறந்த ஆங்கில ஆசிரியரான இவர் நாடறிந்த கலைஞர். யாழ்ப்பாணம் நாட்டார் வழக்கியற் கழகம் பராம்பரிய கலைகள் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றினூடாக பல்வேறு இசைநாடகங்களில் முக்கிய பாத்திரமேற்று நடித்துவரும் இவர் சிறந்த பாடகரும் கூட. பாஸ்கரன் மாஸ்ரர் என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் விஜயபாஸ்கரன் ஆசிரியருக்கு எமது இணையத்தளம் சார்பான வாழ்த்துக்கள்…….வாழ்த்துக்களை குறுஞ்செய்தியாகவோ தொலைபேசி வாயிலாகவோ பரிமாற..0094779398861

Alaveddy.ch

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  இணைப்புக்கு  சுண்டல்

 

நல்லதொரு விடயம்

இனி

இது போன்ற ஒற்றுமைகளும் இணைப்புக்களும் சர்வதேசம் சார்ந்து மேற்கொள்ளப்படுவதன் ஊடாகவே  எமது மக்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்பது எனது நம்பிக்கை.

அவை தாயக அளவில் செய்வது தறபோதைய சூழலில்   முடியாது என்பதால் இப்படி ஊர் ஊராக ஆரம்பிப்பதே வழி.

தொடரட்டும் தங்கள் பணி.

 

  • கருத்துக்கள உறவுகள்

தொடரட்டும் தங்கள் பணி, நல்ல முயற்ச்சி சுண்டல் 

நல்லதொரு விடயம்.தொடரட்டும் தங்கள் பணி, நல்ல முயற்ச்சி சுண்டல் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிந்தனைச் செல்வர் பொ.கைலாசபதி அவர்கள்

அளவெட்டிக் கிரா மத்தில் தோன்றிய சிந்த னையாளர்களில் முதலிடம் வகிக்கும் ஒருவராகத் திரு. பொ. கைலாசபதி அவர்கள் கணிக்கப்படுகிறார். வயதில் தம்மிலும் இளைஞரான இவரைப் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் தமது குருநாதர் என்று போற்றிய திலிருந்தே இவரது அறிவாற்றலை நாம் ஊகித்துணரலாம். இவருடன் நெருங்கிப்பழகி இவரின் நல்வாக்குக் கேட்டு அவற்றைப் பயன்படுத்திய இருவரை இங்கு குறிப்பிடலாம். ஒருவர் அவருடன் திருநெல்வேலி சைவ ஆசிரிய பாடசாலையில் உடனாசிரியராக விருந்த பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள் மற்றையவர் அளவெட்டியைச் சேர்ந்த ஆசிரியர் பரநிருபசிங்கம் அவர்கள். இவ்விருவரும் சிந்தனை செல்வர் கைலாபதி அவர்களிடம் அவரது சிந்தனைகளில் தமது கொள்கலத்துக்கு ஏற்றவற்றை முகந்தவர்கள். பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் கைலாசபதி அவர்களிடம் கேட்டவற்றை முப்பத்திரண்டு கொப்பிகளில் நிரப்பினார் என்பர். பண்டிதமணியவர்கள் அவர் சொல்வன வெல்லாந் தமக்கு விளங்காத போதிலும் விளங்கியவற்றுடன் விளங்காதவற்றையும் சேர்த்து எழுதியதாகவும் குறிப்பிடுகிறார். பண்டிதமணி அவர்களே அவ்வாறு கூறும் போது சாதாரண கல்வியாளருக்கு இவருடைய சிந்தனைகள் விளங்குவதற்கு அரியவென்பது தானே போதரும். இப்படியான பேரறிஞர் கருத்துக்களில் பண்டிமணியின் எழுத்துருவி லிருந்தவற்றைப் பயன்படுத்தி இலக்கிய கலாநிதி. பண்டிதமணி கந்தையா அவர்கள் ‘கைலாசபதி ஸ்மிருதி’ என்ற நூலை எழுதியுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகம் அந் நூலை வெளியிட்டுள்ளது.

கைலாசபதியவர்கள் இளமையில் மல்லாகம் ஆங்கில வித்தியாசாலையிலும் பின்னர் சுழிபுரம் விக்ரோறியாக் கல் லூரியிலும் கற்றாரென்பர். இவர் ஒரு B.Sc பட்டதாரியாவார். பட்டப்படிப்பை பரமேஸ்வராக் கல்லூரியிற் கற்றவரெனவும் கூறுவர். இவர் தமிழ், ஆரியம் என்னும் இருமொழி களையும் பன்னாலையைச் சேர்ந்த சிவானந்தையரிடமே கற்றவர் என்று அறிய முடிகிறது. கைலாசபதி மல்லாகம் வித்தியாசாலையில் கற்றபோது தமது வகுப்பின் மற்றொரு பிரிவில் ஆசிரியர் இரத்தினசபாபதி கற்பித்தார் எனவும் அவருடைய கற்பித்தலால் கவரப்பட்ட இவர் அவரது வகுப்பிலேயே போய் இருந்து விட்டா ரெனவும் பாடசாலை நிர்வாகம் அதைத் தடுக்காமல் அவரது விருப்பத்துக்கேற்பக் கற்கும்படி விட்டுவிட்டதெனவுங் கேள்விப் படுகிறோம்.

இவர் இளமையிலேயே கவியியற்றும் வன்மை வாய்ந்தவராக இருந்தாரெனவும் ‘அணில் புலுணி புராணம்’ என்றொரு புரா ணத்தை விளையாட்டாகப் பாடினாரெனவும் முன்னோர் சொல்லக் கேட்டுள்ளோம். இப் புராணத்தைப் பாடும்படி கேட்டவர் காரைநகர்ச் சின்னத்தம்பி என்பவர். இவருக்கு இரண்டு பற்கள் இல்லாதிருந்தனவாம். இதற்கு யாரோ ஒருவர் சாற்றுக் கவி செய்தாரெனவும் கூறப்படுகிறது. அப்பாடலின் முதலிரண்டு வரியுஞ் சிதைந்த நிலையில் இறுதியிரண்டடிகளுங் கிடைத்துள்ளன. இவ்விரண்டடிகளையும் இங்கு தருவோம்.

“பல்லிரண்டுங் கழன்ற சின்னத்தம்பி பாவலன்றான் கேட்பப் பாடினான் புல்லி ரண்டோவென நடக்குங் கயிலாசபதிப் பாவ லன் றானே” இதுவே அந்த அணிப்பாடல். கைலாசபதி இளமை தொட்டே மெலிந்த உடலமைப்புள்ளவர். அதனாலேயே அவர் நடப்பதைப் புல்லிரண்டோவென நடக்கும் என்பது குறிக்கிறது. கைலாசபதி பாடிய பாடல்கள் அவரின் குறும்பு விளையாட்டுப் பாடலாக இருக்கலாமென எண்ணத்தோன்று கிறது. இளமையிலேயே பாடத் தொடங்கிய அவர் பின்னர் கவித்துறையிலேயோ அல்லது இலக்கியத்தின் வேறு துறைகளிலோ பெரும் ஈடுபாடு காட்டியதாகத் தெரியவில்லை. ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் நடத்திய ‘ஞாயிறு’ என்னும் பத்திரிகையில் இவர் சில கட்டுரைகளை எழுதியதாகத் தெரிய வருகிறது. நூல்கள் எழுதுவதில் இவருக்கு ஆர்வமில்லா மல் இருந்ததற்கு காரணம் நூல்களைப் பயன் படுத்துவோரின் ஆர்வமின்மையே எனலாம்.

இவர் சைவாசிரிய கலாசாலையில் உப அதிபராகப் பணிபுரிந்தபோது அதிபராக இருந்தவர் சுவாமி நாதன் டீ.யு. அவர்களாவர். பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள் தமிழ் கற்பிக்கும் ஆசிரியராகவிருந்தார். பண்டிதமணி இவரைத் தமது குருவாகக் கருதினாரென முன்னர் கண்டோம். சுவாமி நாதன் அவர்கள் மல்லாகம் வித்தியாசாலை யில் கைலாசபதியவர்களுக்கு ஆசிரியராய் இருந்தாலும் ஆசிரிய கலாசாலையில் இவருக்கு பெருமதிப்பளித்து வந்தாரென்பது ஆசிரிய கலாசாலைச் சமூகம் அறிந்து கொண்ட பேருண்மையாகும். அதிபரின் காரியாலத்திற்கு உப அதிபர் வந்தால் ஏதோதேடுபவர் போல எழுந்து விடுவாராம். அவர் அண்மையில் வந்தவுடன் அவரைப் பற்றிக் கூறியவற்றை ஆதாரமாக வைத்தே அதிபரின் மகன் சுசீந்திரராசா உப அதிபரின் பெருமதிப்புக் குரியவரானார். பின்னாளில் இவர் பல்கலைக் கழகப் பேராசிரியராக மிளிர்ந்தார். அவருடைய முயற்சியாலேயே ‘கைலாசபதி ஸ்மிருதி’ தோற்றம் பெற்றதென்பது உண்மையே.

ஆசிரிய கலாசாலை விடுமுறையின் போது பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்களும் உப அதிபரும் கீரிமலை மடத்தில் சேர்ந்து படிக்கத் தீர்மானித்தார்களாம். பண்டிதரிடம் உப அதிபர் தமிழ் படிப்பதாகவும் உப அதிபரிடம் பண்டிதமணி ஆங்கிலம் படிப்பதாகவும் ஒழுங்கு செய்யப்பட்டதாகவும், படிப்புத் தொடங்கியபோது நிலைமை மாறி விட்டதாம். பண்டிதமணிக்கு தமிழ் சொல்லிக் கொடுக்கும் நிலையில் உப அதிபர் இருந்தாராம். பண்டிதர் கற்ற தமிழ் வேறு. உப அதிபர் சொல்லிக் கொடுத்த தமிழ் வேறாக இருந்த தாம். உப அதிபர் தமிழை நோக்கிய நோக்கும் தமிழ்ப் பண்டிதர்கள் நோக்கிய நோக்கும் வேறுபட்டிருந்ததால் பண்டிதமணி உபஅதிபரி டந் தொடர்ந்துந் தமிழ் படித்தாரேயன்றி அவர் ஆங்கிலம் படிக்கவில்லையென அவரே உடன்பட்டுள்ளார்.

உப அதிபர் இல்லற வாழ்வை மேற்கொண் டவர். முதல் மனைவி இறந்த பின் வேரொரு பெண்ணை மணம் முடித்து இரு பெண் பிள்ளைகளுக்குத் தந்தையானார். இல்லறத்தில் இருந்தாலும் அவர் ஒரு துறவி போலவே வாழ்ந்தார். பற்றற்ற நிலையே அவருடைய வாழ்வு. சிந்தனையே அவரது தொழில். எந்த நேரமும் ஏதாவது ஒன்றைப் பற்றிச் சிந்திப்பதில் ஈடுபடுவது வழக்கம். எங்கள் நாட்டில் வாழ்ந்த ஞானிகள் பரம்பரையில் அவரும் ஒருவர்.

அளவெட்டியில் ஒரு சோதிட நிலையம் இருந்தது. அதை அமைத்தவர் நைட்டிக பிரமச்சாரி ஆகிய மு.சின்னப்பு ஆசிரியரா வார். இங்கு சித்தாந்த வகுப்புக்கள் நடைபெறும். சோதிடமும் ஆராயப்படும். இதிற் பங்கு பற்றி யவர்கள் ஆன்மவிசாரமுடையவர்களாகக் கருதப்பட்டனர். இவர்களுக்குத் தலைவராக அமைந்தவர் இரத்தினசபாபதி ஆசிரியரா வார். இவர் கைலாசபதி அவர்களின் குருவுமாவார். இங்கு கூடிப்பேசிச் சிந்திப்பவர்களில் ஆசிரியர் பொன்னம்பலம், ஆசிரியர் சின்னத் தம்பி என்னும் அதிபர் கணபதிப்பிள்ளை உபாத்தியார் என்போரும் அடங்குவர். முக்கிய மானவராகக் கருதப்படுவோரில் கைலாசபதி அவர்களும் ஒருவர். அக்காலத்தில் அளவெட்டி யில் இருந்த சின்னப்பு ஆசிரியரின் வீடு ஒரு மடம் போலவே கருதப்பட்டது.

சிந்தனைச் செல்வர் பொ.கைலாசபதி அவர்கள் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இரண்டாம் ஆண்டு தோன்றினார். இவர் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதா மாண்டு தேகவியோகமெய்தியிருக்கலாம். இவ்வாண்டைச் சரியாகக் குறிப்பிட முடிய வில்லை. இவர் தமது அறிவை மற்றையோ ருக்கு பயன்படச் செய்வதில் பின்நிற்பவர் அல்லர். அறியவேண்டியவற்றை அறியும் விருப்போடு அவரை அணுகுவோர்க்கு அவர் தமது அறிவைக்கரவாது பயன்படச் செய்யுஞ் சுபாவமுடையர். இவருடைய இவ்வியல்பை அறிந்து கொள்வதற்கு இவருடைய சீடராகப் பின்னாளில் விளங்கிய பரநிருபசிங்கம் ஆசிரியர் சொல்லியதை இங்குக் குறிப்பிடுவது பொருத்தமானது. அவர் கூறினார், ‘ஒரு நாள் இவரிடம் சமயம் கற்கும் நோக்குடன் அவரது வீட்டை அணுகினேன். அவர் அப்போது ஒரு கதிரையில் அமர்ந்திருந்தார். யான் அவரது அருகில் நின்று அவரது நிலையை அவதா னித்தேன். அவர் எனது வரவைக் கவனியாது சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். சிறிது நேரத்தின் பின் என்னைத் திரும்பிப் பார்த்து ‘ஏன் வந்தது’ என்று கேட்டார். நான் உங்களிடம் சமயம் படிக்க வந்தேன் என்று கூறினேன். அவர் உடனே சமயம் பற்றிப் பேசத் தொடங் கினார். நான் கீழே நிலத்தில் உட்கார்ந்து எழுதத் தொடங்கினேன். அவர் சொன்ன விஷயங்கள் சமயத்தில் நான் கண்டு கேட்டறியாதவையாக இருந்தன. அவர் கூறிய அனைத்தையும் பக்தி சிரத்தையோடு எழுதிக் கொண்டேன். பின்பு எனக்கு வசதியான நாள்களிலெல்லாம் அந்த மகானைச் சந்தித்து எனது அறிவுப்பசியைத் தீர்க்க முயன்றேன். இக்கூற்றிலிருந்து அவருடைய சுபாவம் ஒருவாறு புலனாகிறது.

Alaveddy.ch

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழகொல்லை விநாயகர் ஆலயம்

அளவெட்டி கவினுறு கிராமம். இங்கு பல புகழ்பெற்ற ஆலயங்கள் நிறைந்து விளங்குகின்றன. இவ்வளவெட்டி கிராமத்தின் வடக்கே அமர்ந்து அருள்பாலித்து வருகின்றார் அளவெட்டி அழகொல்லை விநாயகர்.

பூர்வீகம்

குதிரைமுகம் நீங்க நகுலேசுவரப்பெருமானை வணங்கி நீங்கப்பெற்ற மாருதப்புரவீகவல்லி மாவிட்டபுரம் கோவிலுக்கு தெற்காக கட்டுவித்த ஏழு விநாயகர் ஆலயங்களில் ஒன்று இந்த அழகொல்லை விநாயகர் ஆலயம் என்று கர்ணபரம்பரைக்கதைகள் கூறுகின்றன. கொல்லங்கலட்டி விநாயகர் ஆலயம், பன்னாலை வரத்தலம் விநாயகர் ஆலயம், கும்பிளாவளை விநாயகர் ஆலயம், பெருமாக்கடவை விநாயகர் ஆலயம், ஆலங்குளாய் விநாயகர் ஆலயம், கல்வளை விநாயகர் ஆலயம் என்பனவே மற்றைய ஆறுமாம்.

அழகொல்லை விநாயகர் ஆலயம் பற்றிய குறிப்புகள் யாழ்ப்பாணக் கச்சேரியில் உள்ள தோம்பில் குறிக்கப்பட்டுள்ளன. கோயிலின் பெயர் அளவோலைப்பிள்ளையார் ஆலயம். 1850இல் இக்கோயில் நல்லதம்பி, ஆறுமுகம், விநாயகர் வீரகத்தி, சபாபதி ஐயர், சீனிவாசக ஐயர் ஆகியோரின் முயற்சியால் கல்லால் கட்டப்பட்டு ஓலையால் வேயப்பட்டது. தீர்த்தக்கேணி 1852ம் ஆண்டு கட்டப்பட்டது. கட்டியவர் பெயரும் கட்டப்பட்ட காலமும் தீர்த்க்கேணிக்கு முன்னுள்ள நடுகல்லில் குறிக்கப்பட்டுள்ளன. பெயர் தெளிவாக தெரியவில்லையாயினும் கட்டப்பட்ட காலம் தெளிவாக தெரிகின்றது.

மூர்த்தி

பரிவார மூர்த்திகளான மகாலட்சுமி, விக்கினேஸ்வரர், முருகன், வைரவர், சிவன், நாகதம்பிரான், ஆகியோருக்கு உள்பிரகாரத்தில் தனித்தனி கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாலயம் அமைக்கப்பட்ட பின்னர் 1938, 1966, 1978 ஆகிய ஆண்டுகளில் மகாகும்பாபிடேகம் சிறப்பாக நடைபெற்றதாக அறிய முடிகின்றது. 1928 இல் ஒரு கும்பாபிடேகம் நடைபெற்றதாக கூறப்படுகின்றபோதும் அதனை உறுதிசெய்ய இயலவில்லை.

தலநூல்கள்

அளவெட்டி அருட்கவி சீ. விநாசித்தம்பிப்புலவர் அவர்கள் அளவையூர் அழகொல்லை விநாயகர் மீது திருப்பதிகம் பாடியுள்ளார். விநாயகர் ஆலயத்தின் பெருமை அற்புதங்கள் யாவும் இதில் விரிவாய் விளக்கப்பட்டுள்ளன. 1976 இல் இப்பதிகம் தொண்டர்சபையாரால் அச்சில் வெளியிடப்பட்டது. இயற்றியது யாரென்று அறிய முடியாத அழகொல்லை விநாயகர் பவனிப்பரவல் என்னும் செய்யுள்தொகுப்பும், சிவன் ஊஞ்சல் என்னும் ஊஞ்சல் பதிகமும் ஆலயத்தில் பேணிப்பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அழகொல்லை விநாயகர் ஊஞ்சல், அழகொல்லை விநாயகர் திருப்பள்ளி எழுச்சி என்பன அளவெட்டி வடக்கு பண்டிதர் மாணிக்கம் என்பவரால் செய்யப்பட்டு தொகுத்து நூல்வடிவில் 1985 இல் வெளியிடப்பட்டன.

அளவெட்டி அளகொல்லை விநாயகர் ஆலயம் அண்மையில் பெரும் திருப்பணி வேலைகள் செய்யப்பட்டு பெரும் இராஜ கோபுரத்துடனும் அழகிய விமானத்துடனும் வனப்பு மிகு நந்தவனத்துடனும் யாழ்நகரில் உள்ள ஆலயங்களில் அழகியதொரு ஆலயமாக திகழ்கின்றது. விநாயகப்பெருமானும் இங்கு வீற்றிருந்து அருள்பாலித்து வருகின்றார்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிவசிவா – உதவிப்பணிப்பாளராகின்றார்.

அளவெட்டியின் இசைப்பாரம்பரியத்தில் தனக்கென தனித்துவமான இடத்தினைக்கொண்ட ஆசிரியரும் மிருதங்க கலைஞருமான திரு.சிவசிவா அவர்கள் உதவிக்கல்விப்பணிப்பாளராக (கீழைத்தேச இசை) பதவி உயர்வு பெறுகின்றார். அளவெட்டி சீனன்கலட்டி ஞானோதய வித்தியாலயம், தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரி பழைய மாணவரான இவர் புகழ்பெற்ற மிருதங்க, கட வாத்தியக் கலைஞரும் இசையாசியரும் ஆவார்.

கடந்த வருடம் நடாத்தப் பட்ட இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் iii பதவிக்கு சேவை மூப்பு ,திறந்த போட்டிப் பரீட்சை தேர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நேர்முகப்பரீட்சைக்கு தெரிவு செய்யப்பட்ட 122 பேரில் 108 பேருக்கு நியமனங்கள் வழக்கப்படவுள்ளது.

இவர்களில் 43 சிங்கள சமூகத்தை சேர்ந்தவர்களும் 42 தமிழ் சமூகத்தை சேர்ந்தவர்களும் 23 முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்களும் தெரிவாகியுள்ளனர்

Alaveddy.ch

ஐனா வென்றார் விருது

தெல்லிப்பளை ஐனா கட்டட ஒப்பந்ததாரர் நிறுவன உரிமையாளர் திரு.ஆறுமுகநாதன் ஐனார்த்தனன் 2012ம் ஆண்டுக்கான சிறந்த நிர்மாணிப்புத்துறைக்கான விருதினைப் பெற்றுள்ளார். அளவெட்டி கிராமத்தின் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களிலும் ஒப்பந்தாரராகவும் அனுசரணையாளராகவும் இணைந்து செயற்படும் ஐனாவுக்கு அளவை மக்கள் சார்பில் எமது வாழ்த்துக்கள்.

Alaveddy.ch

வாணி முன்பள்ளி கட்டடத்திறப்புவிழா.

புலம்பெயர்ந்து வாழும் அளவெட்டியைச்சேர்ந்த திரு. முருகேசு சத்தியதாசன் அவர்களின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட அளவெட்டி தெற்கு வாணி முன்பள்ளிக்கட்டடத் திறப்புவிழா சமாதானநீதவானும் கலைவாணி சனசமூகநிலையத் தலைவருமான திரு.வை.சின்னப்பு அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக அளவெட்டி அபிவிருத்தி மன்றத்தலைவர் திரு.வே.சிவராஜா கலந்துகொண்டு கட்டடத்தினைத் திறந்து வைத்தார். மகாஜன சபைத்தலைவர் திரு.வை.சுப்பிரமணியம் கௌரவ விருந்தினராகக்கலந்து கொண்டு கட்டடத்தின் நினைவுக் கல்லினைத் திரைநீக்கம் செய்து வைத்தார். வாணி முன்பள்ளியின் ஆரம்பகால (முதலாவது) ஆசிரியை திருமதி சரஸ்வதி> அளவெட்டிப்பிரதேச பொதுச் சுகாதாரப்பரிசோதகர் திரு தயாபரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்தனர். அருகில் உள்ள ஸ்ரீசுப்பிரமணியசுவாமி கோயிலில் வழிபாடு ஆராதனைகளுடனும் சிவாச்சாரியார்களின் ஆசியுரையுடனும் ஆரம்பமான இந்நிகழ்வில் வலிகாமம் வடக்கு பிதேசசபை உறுப்பினர்களான திரு ப.உதயகுமார்> திரு க.மயூரதன் சமூக ஆர்வலர் திரு சிவநாயகம் மற்றும் ஆசிரியர்கள்>பெற்றோர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். மாணவர்கள்>பழையமாணவர்கள் எனப்பலரது கலை நிகழ்வுகளும்> சாதனையாளர் கௌரவிப்பும் நிகழ்விற்கு மெருகூட்டின.

Alaveddy.ch

சுண்டு தொடருங்கள் உங்கள் பணியை!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நலன்புரிச் சங்க நிர்வாகத் தெரிவு…

விழுதாகி விருட்சம் தாங்குவோம் வேரிழந்து அழிந்திடோம்.

அளவெட்டி நலன்புரிச்சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடலும் புதிய நிர்வாகசபைத் தெரிவும் எதிர்வரும் 19.01.2013 அன்று சனிக்கிழமை மாலை 16.00 மணிக்கு நடைபெறும் இவ்வொன்றுகூடலில் சுவிற்சர்லாந்து வாழ் அளவெட்டி உறவுகள் நலன்விரும்பிகள் அனைவரையும் கலந்துசிறப்பிக்கும்வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

இடம் :

Gemeinschaftszentrum Gäbelbach,

Weiermattstrasse 56,

3027 Bern.

Alaveddy.ch

Sri 031-9920026

Alaveddy Nalanpuri Sangam

Neuedorfstr 30

8135 Langnau a/A

079-259 99 44

****************************************************

அளவெட்டி அபிவிருத்திமன்றத்தின் முயற்சியினால் உருவாக்கப்பட்டுவரும் சிறுவர்களுக்கான நூலகத்திற்காக பலர் முன்வந்து நூல்களை அன்பளிப்புச்செய்து வருவதுடன் மேலும் பலர் நூல்களை அன்பளிப்புச்செய்ய முன்வந்திருப்பதாக மன்றத்தின் செயலாளர் திரு.கை.சரவணன் தெரிவித்தார். லண்டனில் வாழ்கின்ற திரு பொ.கணேஸ்வரன் அவர்கள் ஆரம்பித்துவைத்த இச்செயற்றிட்டத்திற்காக தற்போது ஓய்வுபெற்ற தபாலதிபர் திரு கணபதிப்பிள்ளை அவர்களும் ஒருதொகுதி நூல்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

Alaveddy.ch

  • 3 weeks later...

அளவெட்டி அருணோதயாக் கல்லூரியின் வீதியோட்டப் போட்டி

 

அளவெட்டி அருணோதயாக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டியை ஒட்டி நடைபெறும் வீதி ஒட்டப்போட்டி நாளை வெள்ளிக்கிழமை காலை 6.00 மணிக்கு பாடசாலை முன்றலில் ஆரம்பமாகவுள்ளது.

 

 

இந்த வீதி ஓட்டப் போட்டியானது சிரேஷ்ட பிரிவு மற்றும் கனிஷ்ட பிரிவு என இரு பகுதிகளாக நடைபெறுவதுடன் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த இரு போட்டிகளிலும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/57611-2013-01-24-04-32-41.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதயம் நனையும் அஞ்சலி

ஈழத்தின் பிரபல இசைக்கலைஞரும் முண்ணணி ஆர்மோனிய வித்துவானுமான திரு.ஜோன் கவாஸ் அவர்கள் காலமானார். பாரம்பரிய கலை வடிவமான இசைநாடக வடிவத்தில் தேர்ந்த கலைஞரான இவர் அந் நிகழ்வுகளுக்கு மிக முக்கியமான பங்களிப்பான ஆர்மோனிய இசையை வழங்கி பாரம்பரிய கலையை வளர்க்க வேண்டும் என்ற அர்ப்பணிப்புடன் கலைப்பணி ஆற்றியவர். எமது அளவெட்டிக் கிராமத்தின் கலை அமைப்பான மகாஜனசபை கலைஞர் வட்டத்தின் நிலாக்காலம் கலைநிகழ்வுகளில் மேடையேறிய இசை நாடகங்கள் பலவற்றுக்கும் ஆர்மோனிய இசை வழங்கி சிறப்பித்தவர். ஈழத்தின் கலை உலகில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்திய அமரர் ஜோன் கவாஸ் அவர்களின் ஆத்மா சாந்திக்கு பிரார்த்தி்த்து அளவை கலையுலகம் சார்பான அஞ்சலிகளை செலுத்துகின்றோம்.

Alaveddy.ch

அமிர்தலிங்கம் அதிபர் ஓய்வுபெற்றார்

சீனன்கலட்டி ஞானோதயா வித்தியாசாலையின் அதிபர் திரு.ந.அமிர்தலிங்கம் அண்மையில் ஓய்வுபெற்றார். கடந்த பல வருடங்களாக இப் பாடசாலையின் அதிபராக கடமையாற்றி பல வகைகளிலும் தன்னால் முடிந்த அளவுக்கு பாடசாலை வளர்ச்சிக்காக பாடுபட்டார். குறிப்பாக இவரது காலத்திலேயே பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்துக்கான இங்கிலாந்துக் கிளை தாபிக்கப்பட்டு பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து மூன்று மாடிக்கட்டடம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது குறிப்பிடத்தக்க பதிவாகும்.

Alaveddy.ch

  • 7 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அளவெட்டி அபிவிருத்தி மன்றத்தின் சிறப்பான சாதனைகளில் ஒன்றாகக் கருதத்தக்க நெனசல – அறிவகம் நிர்மாணப்பணிகள் ஏறத்தாள நிறைவுக்கட்டத்தை அடைந்துள்ளன. ஜனாதிபதி செயலக தகவல் தொழில்நுட்பப்பிரிவு மற்றும் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் என்பவற்றின் அனுசரணையின்கீழ் அபிவிருத்தி மன்றமானது மேற்படி அமைப்புக்களிடமிருந்து ஏறத்தாள ரூபா பன்னிரண்டு லட்சம் (1200 000.00) பெறுமதியான கணனி மற்றும் இலத்திரனியல் உபகரணங்களை பெற்றுக்கொண்டுள்ளது. எனினும் இதற்கான கட்டடம் மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைஅளவெட்டி அபிவிருத்தி மன்றத்தின் செலவிலேயே மேற்கொள்ள வேண்டியிருந்தது. இவ்வேலைகள் ஏறத்தாள ரூபா 300000.00 செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வேலைக்கான நிதியுதவி கோரி பகிரங்கமான வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதிலும் இன்றைய தினம் வரையில் நம்பிக்கை தரத்தக்க பதில்கள் கிடைக்கவில்லையென அபிவிருத்தி மன்றத்தலைவா் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார். எனினும் லண்டன் மக்கள் சங்கத்தின் நிதி அனுசரணையை நம்பி வேலைகள் கடனடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிரான்ஸிலிருந்து திரு.மனோகரன் அவா்களும், அளவெட்டி வடக்கு திருமதி பரமேஸ்வரி திருநாவுக்கரசு அவர்களும்நம்பிக்கை தரத்தக்க பதிலளித்துள்ளதாக மேலும் குறிப்பிட்டார்.

நெனசல – அறிவகத் திறப்புவிழா எதிர்வரும் 17.09.2013 பிற்பகல் 5.30 மணிக்கு நடைபெறும் இவ்விழாவில் பிரதம அதிதிகளாக தொலைத்தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் கௌரவ ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. ரெஷான் தேவப்புர ஆகியோர் கலந்து சிறப்பிக்கின்றனர்.

Alaveddy.ch

நனசல அறிவகம் – தகவல் தொழில் நுட்ப நிலையம் அமைத்தல் தொடா்பாக நிதி அனுசரணை கோரி அளவெட்டி அபிவிருத்தி மன்றத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் முழுமையான விபரம் கீழே தரப்பட்டுள்ளது.

நனசல அறிவகம் (தகவல் தொழில் நுட்ப நிலையம்) – 2013

அளவெட்டி அபிவிருத்திமன்றத்தின் சார்பாக வணக்கங்கள்.

இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்ப முகவர் நிலையத்தினால் (ICTA) வழங்கப்படுகின்ற நெனசல அறிவக நிலையத்தின் உரித்துடைமை ஒன்றினை மிகுந்த சிரமம் மற்றும் தொடர்ச்சியான முயற்சியின் காரணமாக பெற்றுள்ளோம் என்ற மகிழ்வான செய்தியினை தங்களுடன் பகிர்வதில் மகிழ்வடைகின்றோம்.

இத்திட்டத்தின் கீழ் இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்ப முகவர் நிலையத்தினால் ஒரே வேளையில் ஆறுபேர் பயன்படுத்தக்கூடிய கணனி உபகரணக்தொகுதி , வர்ண அச்சிடும் இயந்திரம், (Colour Printer) பொலித்தீன் உறையிடும் இயந்திரம் (Lamanating Mechine) என்பவற்றை உள்ளடக்கிய ரூபா 500 000.00 பெறுமதியான பொருட்கள் வழங்கப்படும். எனினும் அதற்கான தளபாடங்கள், மின் இணைப்பு, ஒளியூட்டல், (Lights) விசிறிகள் (Fans) கட்டட ஒழுங்கமைப்பு வர்ணம் தீட்டுதல் (painting) என்பவற்றினை அபிவிருத்தி மன்றம் தனது செலவில் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இத்திட்டத்தினால் ஏற்படத்தக்க பயன்கள் தொடர்பில் தங்களுக்கு தெளிவான புரிதல் ஏற்பட்டிருக்கும் என்பதால் அவற்றை இங்கு மீளவும் விபரிக்கவில்லை.

ஏற்கனவே லண்டன் மக்கள் சங்க நிதி அனுசரணையில் எமது அலுவலக அறை கூரை, கதவு, யன்னல்கள் என்பன திருத்தியமைக்கப்பட்டு அப்பகுதி வர்ணம் பூசப்பட்டுள்ளது. இவ் அலுவலக கட்டடத்தொகுதியில் கடந்தகாலத்தில் அனுசரணையாளர்களால் வழங்கப்பட்ட பெறுமதி மிக்க கணனி, இலத்திரனியல் உபகரணங்கள், ஒலியமைப்பு, ஒளியமைப்பு உபகரணங்கள், புத்தகங்கள் என்பவை தற்போது பாதுகாப்பாக பேணப்படுகின்றன.

தற்போது அதனை அடுத்துள்ள வாசிப்புப்பகுதியினை நெனசல அறிவக நிலையத்தினை அமைப்பதற்காக தெரிவு செய்துள்ளோம். இப்பகுதி கூரை சேதமடைந்த நிலையில் மழைகாலத்தில் பயன்படுத்த முடியாத வகையிலும் பாதுகாப்பற்றதாகவும் உள்ளது. பாதுகாப்பான கூரை சீலிங், கம்பிவலை மற்றும் பலகையினால் அமைக்கப்படும் பக்க அடைப்பு, வர்ணம் தீட்டுதல் (painting) என்பவற்றினை உள்ளடக்கியதாக இதனை திருத்தியமைக்க ரூபா 197000.00 செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர கணனி மேசைகள், கதிரைகள், தளபாடங்கள், மின் இணைப்பு, ஒளியூட்டல், (Lights) விசிறிகள் (Fans) இணையத்தள வசதி என்பவற்றிற்காக ரூபா 81000.00 செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து வேலைகளையும் நிறைவு செய்வதன் மூலமே நெனசல அறிவக நிலையத்தின் உரித்துடைமையினைப் பெற்றுக்கொள்ளமுடியும். எனினும் அதற்கான நிதிவளம் அபிவிருத்தி மன்றத்திடம் இல்லை. தற்போது வங்கியில் ரூபா 27000.00 மட்டுமே உள்ளது.

தயவு செய்து இச்செயற்றிட்டத்தை நிறைவேற்றுதல் தொடர்பில் தங்களால் வழங்கப்படத்தக்க விரைவான உயர்ந்த பட்ச ஒத்துழைப்பினை வழங்கியுதவுமாறு வினயமாக கேட்டு நிற்கின்றோம். மேலும் தங்கள் பொருத்தமான வழிகாட்டல் ஆலோசனைகளையும் எதிர்பார்த்து நிற்கின்றோம். அபிவிருத்தி மன்றத்தை வலுப்படுத்தக்க தங்களின் சாதகமான மிகவிரைவான பதிலுக்காக காத்திருக்கின்றோம்.

தலைவர்

திரு.வே. சிவராஜா

0094-778575041

செயலாளர்

திரு.கை..சரவணண்

0094-773461258

இணைச்செயலாளர்

திரு.இ. சர்வேஸ்வரா

0094-778449739

தொடருங்கள் உங்கள் பணியை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.