Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீதித்துறை முஸ்லிம் மயப்படுத்தப்படவில்லை: ஹக்கீம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

image121.jpg

சட்டக்கல்லூரிக்கு கூடுதலான முஸ்லிம் மாணவர்கள் இம் முறை தெரிவு செய்யப்பட்டிருப்பதை காரணம் காட்டி நீதித்துறை முஸ்லிம் மயப்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதித்துறை அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மறுத்துள்ளதுடன் நீதித்துறை முஸ்லிம் மயப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நீதியமைச்சர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தேசிய புலமையாளர் கவுன்சிலின் தலைவர் எனக் கூறிக்கொள்ளும் பந்துல சந்திரசேகர என்பவர் ஊடகங்கள் ஊடாக தெரிவித்து வரும் குற்றச்சாட்டு தொடர்பில் அமைச்சர் ஹக்கீம் ஜாதிக ஹெல உருமய முக்கியஸ்தர் உதயகம்மன்பிலவிற்கு எடுத்துரைத்துள்ளார்.

சட்டக் கல்லூரி நீதியமைச்சுடன் சில விவகாரங்களில் தொடர்புபட்டிருந்தாலும் அது சட்டக் கல்வி மன்றத்தின் தனியான அமைப்பின் கீழேயே செயல்படுகின்றது. அத்துடன் இலங்கைப் பரீட்சைகள் திணைக்களமே அனுமதிக்கான பரீட்சையை நடாத்தி வருகின்றது. அதற்கும் நீதியமைச்சிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

கொழும்பில் மாத்திரமே நடைபெறும் சட்டக்கல்லூரி நுழைவுக்கான இந்த பலத்த போட்டிப் பரீட்சைக்கு நாடெங்கிலும் இருந்து பெருந்தொகையான விண்ணப்பதாரிகள் தோற்றுகின்றனர். முன்னர் நாட்டில் யுத்தம் நிலவிய சூழ்நிலையில் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் வடகிழக்கில் இருந்து பெரும் எண்ணிக்கையிலானோர் இப் பரீட்சைக்குத் தோற்றும் வாய்ப்பு இருக்கவில்லை.

சமாதானம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் தமிழ், முஸ்லிம் மாணவர்கள் சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வுக்கு பெருமளவில் தோற்றுகின்றனர். அவர்களில் மிகத் திறமை வாய்ந்தவர்கள் இப் பரீட்சையில் சிறப்பாக சித்தியடைந்துள்ளமை வரவேற்கத்தக்கது.

இந்தப் பரீட்சை மும்மொழிகளிலும் நடைபெறுவதனால் முஸ்லிம் மாணவர்கள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் தோற்றி சித்தியடைந்துள்ளமையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இது பற்றிய விளக்கம் தேவைப்பட்டோர் சட்டக் கல்லூரி அதிபரை அனுக முடியும்.

உண்மை இவ்வாறு இருக்க, பெரும்பான்மை சமூகத்தினர் மத்தியில் தேவையற்ற விதத்தில் பீதி மனப்பான்மையை ஏற்படுத்தும் நோக்கத்தில் தீய சக்திகள் இவ்வாறான விஷமக் கருத்துகளை பரப்பி வருவது கண்டிக்கத்தக்கதும், விசனத்துக்குரியதும் ஆகும்.

அத்துடன் நீதிபதிகளை நியமிக்கும் விஷயத்தில் நீதியமைச்சர் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டும் எந்தவிதமான அடிப்படையும் அற்றதாகும். அவர்களை நீதிச்சேவை ஆணைக்குழுவே நியமிக்கின்றது. அது சுயாதீனமாக செயல்படும் ஓர் அமைப்பாகும்.

வடகிழக்கில் யுத்தகாலத்தில் செயல்படாதிருந்த நீதிமன்றங்கள் பல மீண்டும் இயங்குவதோடு, புதிதாக நீதிமன்றங்கள் சில நிறுவப்பட்டிருப்பதாலும் அவற்றிற்கு நீதிச்சேவை ஆணைக்குழு எழுத்துப் பரீட்சை, நேர்முகப்பரீட்சை என்பவற்றின் ஊடாக நீதிபதிகளை தெரிவு செய்து நியமிக்கின்றது. அங்கு தமிழ் மொழி தெரிந்த நீதிபதிகள் நியமிக்கப்படுவதில் தவறில்லை.

உண்மைக்கு மாறாக புனைந்து கூறப்பட்டுள்ள இந்தப் பொய் பிரசாரத்தையும், போலிக் குற்றச்சாட்டுக்களையும் தான் கண்டிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://tamil24news.com/news/?p=35193

ஹக்கீம் என்னத்தை சொன்னாலும் சிங்கள பேரினவாதிகளின் கண்ணில் முஸ்லீம்கள் 'ஊடுருவதாகவே' தெரியும்

இதில் சட்டத்தை மறுத்து ஊடுருவாவிட்டாலும் வடக்கு கிழக்கில் பதியுதின், கக்கிம் தலைமையில் அது பலதுறைகளில் நடை பேறுகிறது. இந்தியா கட்டிக்கொடுக்கும் வீடுகளில் கூட...

வவுனியா சாளம்பைக்குளத்திலிருந்து தமிழர்களை வெளியேறுமாறு அச்சுறுத்தல்: முஸ்லிம்களின் காணியெனவும் தெரிவிப்பு

வவுனியா சாளம்பைக்குளம் பகுதியில் வாழும் தமிழர்களை வெளியேறும் படி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமையானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சாளம்பைக்குளத்தில் வாழும் தமிழர்களை வெளியேறும் படி அப்பகுதியில் ஒட்டப்பட்டுள்ள அறிவித்தலில் இஸ்லாமிய கலாசார தலைவர் ஹசன் என குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அப்பகுதி கிராம சேவகர் என தெரிவிக்கப்படும் வை.நாயர் என்பவரின் றப்பர் முத்திரையும் குத்தப்பட்டுள்ளது.
Salampaikkulam.jpg

அந்த அறிவித்தலில் கூறப்பட்டுள்ளதாவது.

சோபாய புளியங்குள தமிழ் மக்கள் அறிய வேண்டியது முஸ்லிம் மக்களின் (சாம்பைக் குளம்) காணிகளில் வசிக்கும் அனைத்து தமிழ் மக்களும் இம்மாதம் 16 ஆம் திகதிக்கு முன் வெளியேற வேண்டுமென கிராம சேவையாளர் ஊடாக கேட்டுக்கொள்ளப்படுகின்றது.வெளியேறாத பட்சத்தில் வன்முறையாக வெளியேற்றப்படுவீர்கள் என தெரிவிக்கின்றே. இப்படிக்கு இஸ்லாமிய கலாசார தலைவர் ஹசன்.

இவ்வாறு அந்த அறிவித்தலில் காணப்படுகின்றது.   இதேவேளை இவ்விடயம் குறித்து நாளை வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஆராயப்படுமென வன்னி மாவட்ட எம்.பி. அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

http://www.pathivu.com/news/22908/57//d,article_full.aspx

 

Home arrow.pngசெய்திகள் arrow.png மன்னாரில் அதிகளவு காணி முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு இன முரண்பாடைத் தோற்றுவிக்கும் - ஆனந்தன்!
மன்னாரில் அதிகளவு காணி முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு இன முரண்பாடைத் தோற்றுவிக்கும் - ஆனந்தன்!

 

மன்னார், முள்ளிக்குளம் பகுதியில் முஸ்லிம்களுக்குக் காணி ஒதுக்கீடா? முள்ளிக்குளம், முல்லைத்தீவு உட்பட பல்வேறு பகுதியில் போரால் பாதிக்கப்பட்டு ஒரு துண்டுக் காணிகூட இல்லாதவர்கள் இருக்கும்போது தமிழர் வாழும் பிரதேசத்தில் முஸ்லிம் மக்களுக்குக் காணி ஒதுக்கீடு செய்வது கவலை தருகிறது. இவ்வாறு தெரிவித்தார் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்.

வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட சிவசக்தி ஆனந்தன் வவுனியா மாவட்ட அரச அதிபர், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் முன்பாகவே இந்தக் கேள்வியை எழுப்பினார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் :
மன்னார் ஆயர் இல்லத்துக்கு முன்பாக 100 ஏக்கர் காணி, மன்னாரின் ஏனைய பகுதிகளில் 500 ஏக்கர் காணி, முசலிப் பகுதியில் 500 ஏக்கர், தலைமன்னாரில் 100 ஏக்கர் என்று முஸ்லிம்களுக்கு ஒதுக்குவதன் மூலம் முஸ்லிம்களுக்கும் தமிழருக்கும் இடையில் இனமுரண்பாடே ஏற்படும்.
முன்னர் திருமணம் ஆனவர்களுக்குக் காணி வழங்குவதாகவும், குறிப்பாகக் காணிகள் அற்றவர்களுக்கே இந்தக் காணிகள் வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டது.
ஆனால் இந்தக் கூட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட எல்லோருக்கும் குறிப்பாக 90 வீதம் முஸ்லிம்களுக்குக் காணிகள் வழங்குவது எனக்கூறப்படுகிறது.
இது அநீதியானது.  முன்னர் சிங்களக் குடியேற்றங்களை அரசு தமிழர் பகுதிகளில் செய்தது.
தற்போது தமிழர் பகுதிகளில் முஸ்லிம் மக்களைக் குடியேற்றித் தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்க முனைகிறது. விகிதாசார முறையில் முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெறும் நோக்கிலும் தமிழர் பகுதிகளை ஆக்கிரமிப்புச் செய்யும் திட்டத்திலும் இந்த நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன
.
போரின்போது ஆயிரக்கணக்கான தமிழ் குடும்பங்கள் இருப்பிட வசதியின்றி மழையிலும் வெயிலிலும் மரங்களுக்குக் கீழ் இருக்க, அவர்களுக்கு ஒருதுண்டு நிலத்தைக்கூட வழங்க அனுமதி மறுக்கும் அரசு ஏன் இவ்வாறு செய்கிறது என்றார் அவர்பதில் பேச்சு இன்றி இருந்தார் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்.
 
  • கருத்துக்கள உறவுகள்

மன்னார், முள்ளிக்குளம் பகுதியில் முஸ்லிம்களுக்குக் காணி ஒதுக்கீடா? முள்ளிக்குளம், முல்லைத்தீவு உட்பட பல்வேறு பகுதியில் போரால் பாதிக்கப்பட்டு ஒரு துண்டுக் காணிகூட இல்லாதவர்கள் இருக்கும்போது தமிழர் வாழும் பிரதேசத்தில் முஸ்லிம் மக்களுக்குக் காணி ஒதுக்கீடு செய்வது கவலை தருகிறது. இவ்வாறு தெரிவித்தார் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்.

 

உண்மையில் இதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.. அவர்களும் நம்மவர்களே ..! அதை ஏற்று கொள்ளும் மனபக்குவம் நமக்கு இல்லை.. அன்று புலிகள்  1894 ஆண்டு இந்த  வெளியேற்றும்  படலத்தை நிகழ்த்தி இருக்காவிட்டால்.. நாம் அனைவரும்   சகோதர்களே .. நமமை  காண் வேண்டி சகோதர்கள் இடம் பெயரும் இந்த தருணத்தில்
எதிர்மறையான கருத்துக்களை எழுதுவது மனதிற்கு கவலை அளிக்கிறது. முஸ்லீம்களையும் வாரி அணைத்து  அழைத்து செல்வதிலே தான் நம் அரசியல் ராஜ தந்திரம் தங்கியுள்ளது.. (அவுங்களுக்கு எல்லாம் அரேபியாவில் தங்கி இருக்கு..)செத்த வீட்டில் திருடற குருப்பா இருக்கு,...

(கோவணம் கையில் இருக்கா ஒருக்கா இடுப்புல இருக்க என செக் பண்ணிக்குங்க பிளீஸ்)

இப்படிக்கு மாற்று கருத்து மாணிக்கங்கள் சங்கம்

டிஸ்கி:

நீங்க எல்லாம் தமிழ்நாடு அரசியல்  கருநா. ஜே..... என டார் டார் என கிழிக்கும் போது நானும் இந்த களத்தில் எனக்கு தோன்றுவதை எழுதவன்...  :icon_idea: :icon_idea:


 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்
கப்பல் துறை இன்று முஸ்லிம் மயமாக இருப்பதற்கு காரணம் ஹக்கீம் முன்பு கப்பல் துறை அமைச்சராக இருந்த போது முஸ்லிம்களை இணைத்தது தான். இன்று நீதி அமைச்சிலும் இதனையே செய்கிறார்.
 
தமிழ் அமைச்சர்களும் கொஞ்சம் இருக்கிறார்கள்.எங்கே தமிழர்களை சுரண்டலாம் என்று இருக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.