Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறந்துபோன உறவுகளை நினைவுகூருவது ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் உள்ள கடமை யாழ் மாநகர முதல்வர் அதிரடி:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
jmc03%20(1)_CI.JPG

 

இறந்துபோன உறவுகளை நினைவுகூருவது ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் உள்ள கடமை. அதனை யாரும் மறக்கவும், மறுக்கவும் முடியாது என யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா அதிரடியாக தெரிவித்துள்ளார்.

 

யாழ்ப்பாண மாநகர சபையின் ஒளி விழா நிகழ்வு மாநகர சபையில் இன்று மாநகர முதல்வர் தலைமையில் நடைபெற்ற போது தலைமை உரையாற்றுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்;. இந்நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த முப்பது வருடகாலமாக நாட்டில் இடம்பெற்று வந்த யுத்தம் ஐனாதிபதி மகிந்த ராஐபக்சவால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த ஐனாதிபதியின் துணிச்சலாலேயே இன்று வடக்கு கிழக்கில் ஐனநாயகம் நிலை நாட்டப்பட்டுள்ளது. அந்த ஐனநாயகத்தைக் குழப்புகின்ற வகையில் சில தீயசக்திகள் செயற்படுகின்றன.

 

இத்தகைய சக்திகளினால் மாணவ சமுதாயம் திசை திருப்பப்படுகின்றது. தமது சுயநல அரசியல்களுக்காகவே மாணவர்களை திசை திருப்பி வருகின்றனர். இவ்வாறானதொரு சம்பவமே பல்கலைக்கழகத்தினுள் இடம்பெற்றுள்ளது.ஆயினும் இறந்து போன உறவுகளை மறக்க முடியாத அதே நேரம் நினைவு கூருவதனை மறுக்கவும் முடியாது. இறந்து போன உறவுகளை வீடுகளில் விளக்கேற்றி நினைவு கூறுவது ஒவ்வொருவரதும் கடமையாகும்.

 

இந்நிலையில் இங்குள்ள அரசியல் வாதிகள் எமது இளைய சமுதாயத்தினரைப் பாதிக்கின்ற வகையில் செயற்படுகின்றனர். குறிப்பாக அவர்கள் தமது சுயநலத்திற்காகவே மாணவர்களை தவறான பாதையில் அழைத்துச் செல்ல முயல்கின்றனர். எனவே இத்தகைய சுயநல அரசியல் வாதிகளின் நடவடிக்கைள் காரணமாக இளைய சமுகம் பாதிக்கப்படக்கூடாது.இதற்கமைய மாணவர்களை இதிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்றார்.

 

எனினும் குறித்த சபையின் ஒளி விழா சுயநல அரசியல் கோலாகல கொண்டாட்டமென கண்டித்துள்ள எதிர்கட்சிகள் இன்றைய நிகழ்வினை முற்றாக பகிஸ்கரித்துள்ளன.முன்னதாக பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலையடுத்து அதற்கெதிராக எதிர்கட்சிகள் கொண்டுவர இருந்த கண்டன தீர்மானத்தை முதல்வர் தடுத்து நிறுத்தியிருந்தார். எனினும் மாணவர்களது தாக்குதல் ஏதும் தனது வாகனம் மீது நடந்துவிடலாமென்ற அச்சத்தில் முதல்வர் பெயர் பலகையை கழற்றி வைத்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/86778/language/ta-IN/article.aspx

வார்த்தையால் மட்டும் அல்ல செயலிலும் செய்து காட்ட வேண்டும் தாயே.
 
நீங்களே ஒரு முன்னுதாரணமாக இருங்கள். 
 
உங்கள் மாநகர ஒன்றுகூடலில் அகிம்சா வழியில் உயிர் துறந்த எங்கள் திலீபன் அண்ணாவுக்கு தீபம் ஏற்றி மரியாதை செய்யுங்கள் தாயே. 
 
தன் இனத்துக்காக எவ்வித எதிர்பார்ப்புமில்லாமல் உயிர் துறந்த அந்த மாவீரர்களுக்கு அங்சலி செலுத்தும் உரிமை தன்மானமுள்ள தமிழனுக்கு பிறந்த  ஒவொருவனுக்கும் உள்ள கடமை.
 
இந்த செய்தி சிங்கள இராணுவத்தினன் செவிகளில் இடியாய் முழங்க வேணும்.

கடந்த முப்பது வருடகாலமாக நாட்டில் இடம்பெற்று வந்த யுத்தம் ஐனாதிபதி மகிந்த ராஐபக்சவால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த ஐனாதிபதியின் துணிச்சலாலேயே இன்று வடக்கு கிழக்கில் ஐனநாயகம் நிலை நாட்டப்பட்டுள்ளது. அந்த ஐனநாயகத்தைக் குழப்புகின்ற வகையில் சில தீயசக்திகள் செயற்படுகின்றன.

இந்த ஜனநாயகத்தில் நினைவுகூரும் உரிமை கூட இல்லையே??

இந்த பதவியில் இருக்கவேண்டும் என்றால் மகிந்தாவை புகழாமல் இருக்க முடியாதா?

  • கருத்துக்கள உறவுகள்

சிமோல் பொயின்ற் நீங்கள் சின்னத்தனமாக, ஒருவரை தாயெ என விழிக்கிறீர்கள். இவரை எல்லாம் தாயே என விழிக்காமல் எழுத்தை மாத்திப்போட்டு விழிக்கவேண்டும். உனகளது பெயருக்கேற்றாற்போல் சின்னப் புள்ளியாகிவிட்டீர்கள். தூ.....

  • கருத்துக்கள உறவுகள்
சிமோல் பொயின்ற் நீங்கள் சின்னத்தனமாக, ஒருவரை தாயெ என விழிக்கிறீர்கள். இவரை எல்லாம் தாயே என விழிக்காமல் எழுத்தை மாத்திப்போட்டு விழிக்கவேண்டும். உனகளது பெயருக்கேற்றாற்போல் சின்னப் புள்ளியாகிவிட்டீர்கள். தூ.....

 

சினம் வேண்டாம் எழுஞாயிறு.. :D அவர் தலையங்கத்தை மட்டும் வாசித்துவிட்டு கருத்தெழுதிவிட்டார்போல.. :rolleyes::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தாவை தூக்கி பிடிச்சு பெருமையா கதைக்கும் இந்த கேவலம் கெட்ட ஈன பிறவியை நினைக்க அருவருப்பாக இருக்கு..இவாவை போய் தாயே கீயே என்று ஒருதர் வக்காலத்து வாங்குறார் அங்கால.........இந்த கயவர் கூட்டத்தை போய் தாய் என்ரா . தமிழினத்துக்கு ஆன்டி மடிந்து போன அன்னை பூவதி தாயை என்ன என்று சொல்வது?????????

பாலையும் நீரையும் ஒன்றாகக் கலந்து வைத்தால்,
அன்னப் பறவை பாலை மட்டும் உறிஞ்சிக் குடித்துவிட்டு நீரை மிச்சம் வைத்து விடும் என்று சொல்வார்கள்.
அதில் உண்மை இருக்கிறதோ இல்லையோ எனக்கு தெரியவில்லை.
ஆனால், யாராகிலும் சொல்லும் நல்ல விடயங்களை மட்டும் கருத்தில் எடுத்து
ஒவ்வாத கருத்துக்களை புறக்கணிப்பதன் மூலம்...
 
"எது சொன்னால் வரவேற்ப்பு"  இருக்கும் என்பதை அறிந்து கொள்வர்.
இது எனது தாழ்மையான கருத்து.
 
சிறு புள்ளி
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த ஜனநாயகத்தில் நினைவுகூரும் உரிமை கூட இல்லையே??

இந்த பதவியில் இருக்கவேண்டும் என்றால் மகிந்தாவை புகழாமல் இருக்க முடியாதா?

 

சொறிலங்கா ஜனனாயகத்தில் மக்களாதரவின் செல்வாக்கு செல்லாதது, இங்கே அதிகாரத்தின் அடிவருடித்தனம்தான் எல்லாம்!

இந்த நுட்பம் தெரிந்த்ததால்தானே டக்ளஸ், கருநாய், தொல்லையான் இவர்கள் எல்லாம் மக்கள் மத்தியில் சொறிநாய்போல் கல்லடி வாங்கத்தக்க கருத்துக்களை அதிகாரத்தின் பாதபூஜைக்காக மந்திரங்களாக உச்சரிக்கின்றனர்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.