Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இயல்பிலேயே மனிதன் சைவ உணவு உண்பவன் என்பது திட்டமிட்ட பொய்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இயல்பிலேயே மனிதன் சைவ உணவு உண்பவன் என்பது திட்டமிட்ட பொய்
எழுதியது இக்பால் செல்வன் *** Friday, November 23, 2012
 
non-veg-diet.jpg
 
மனிதர்கள் சைவ உணவை மட்டுமே உண்ணக் கூடியதாகவே படைக்கப்பட்டான் (!!?) என்றும், அவனால் சைவ உணவை மட்டுமே உண்டு வாழ முடியும் என்றும் ஒரு சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்தியாவில் இப்படியான பிரச்சாரங்களுக்கு பின் இன, மத, சாதிய வெறுப்புணர்வுகள் உள்ளன என்பது தனிக் கதை. 
 
ஆனால் அறிவியலி மனிதன் தாவர உணவாளன் தானா என்பதை நாம் சொல்ல வேண்டி இருக்கின்றது. ஏனெனில் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரர்களாகிய போலி அறிவியல் தகவல்களை இணைய வெளியில் பரப்பி வருகின்றனர். அவர்களது ஓரே நோக்கம் தமது வாதமே உண்மை என நம்ப வைக்க வேண்டும். அது உண்மையா, இல்லையா என்பதை எல்லாம் சிந்திக்கவோ, அலசி ஆராயவோ நேரமோ, தேவையோ இல்லை எனக் கருதுகின்றார்கள். 
 
மனிதன் என்பவன் மிகவும் நெகிழ்வான ஒரு உயிரினமாகும். தனது உணவுப் பழக்க வழக்கங்களை இடத்திற்கேற்ப மாற்றியமைக்கக் கூடியவன். 
 
ஒரு மனிதனால் வெறும் தாவர உணவுகளை உண்டு வாழ முடியும் என்பது உண்மை தான். அதே போல ஒரு மனிதனால் ஊன் உணவை மட்டுமே உண்டும் வாழ முடியும். ஆனால் இந்த இருவகையிலும் அவனுக்கு போதிய போசாக்கு பெற முடியுமா என்பதே கேள்வி. 
 
உலக உயிரினங்களை பார்த்தோமானால் இருவகைப் படும். ஒன்று தமது உணவை தாமே தயாரிப்பவை. மற்றவை தயாரான உணவைக் கொண்டிருக்கும் விலங்குகளை தின்று சக்தியை பெறுபவை. 
 
நாம் அவற்றில் விரிவாக போக வேண்டாம் என்பதால் மனிதன் ஏன் ஒரு தாவர உணவாளன் ( சைவ சாப்பாடு ) இல்லை என்பதை விளக்குகின்றேன். 
 
1. PH அளவு : 
 
PH எனப்படும் காரக்காடித் தன்மைச் சுட்டெண் ஒரு கரைசல் தன்மை அமிலமா, காரமா எனக் கூறும். மனிதனின் குடலில் காரம் ( Alkaline ), அமிலம் ( Acid ) இரண்டுமே இருக்கின்றது. மிக முக்கியமாக சுரப்பது HCl எனப்படும் Hydrochloric Acid ஆகும். மனிதன் வெறும் தாவர உணவாளனாக உருவாக்கப்பட்டு இருந்தால் ஏன் அவனது குடலில் ஆசிட் சுரக்க வேண்டும்.
 
ஆசிட் என்பது கடின புரதங்களை செரிக்க வைப்பதற்கே ஆகும். முக்கியமாக இறைச்சி வகைகள், மீன், முட்டை, கோழி, வெண்ணெய் போன்ற விலங்கு சார் உணாவுகள் யாவும் செரிமானம் அடைய ஆசிட் தேவையாக உள்ளது. 
 
ஆனால் தாவர உணவுகளான கோதுமை, அரிசி, பழங்கள், காய்கறிகள் யாவற்றையும் செரிக்க ஆல்கலின் எனப்படும் காரமே போதுமானது. அப்படி இருக்க இயற்கை அன்னை நமக்கு ஏன் ஆசிட்டை கொடுத்திருக்கிறாள். 
 
அதே போல இந்த HCl ஆசிட்டானது நாம் விழுங்கக் கூடிய பலவகை கிருமிகளைக் கொல்லவும் செய்கின்றது. மாமிச உணவு உண்ணும் விலங்குகள் சமைக்காமல் ஊன் உண்ணும் போது கிருமிகள் வயிற்றைத் தாக்காமல் இருக்கவே இந்த ஆசிட் என்பவை பரிணாமத்தில் கிடைக்கப்பட்டுள்ளது. மனிதனின் மூத்த உயிரினங்கள் பல காலம் விலங்கு உணவை சுவைத்தே வந்துள்ளன அதன் ஊடாகவே இந்த ஆசிட் சுரப்பிகள் நமக்கு வாய்க்கப்பட்டுள்ளது. 
 
2. செல்லுலாக் ( Cellulac )
 
ஒரு வேளை மனிதன் தாவர உணவாளனாய் இருந்திருந்தால், மனிதன் தானே செல்லுலாக என்ற ஹார்மோனை சுரந்திருக்க வேண்டும் அல்லவா. 
 
செல்லுலாக் என்பது தாவர உணவை நாம் சாப்பிடும் போதும், தாவர உணவில் இருக்கும் செல்லுலோஸ் ( Cellulose ) என்பதை உறிஞ்சக் கூடிய ஒரு நொதியம் ( Enzyme ) ஆகும். 
 
ஆடு, மாடு, முயல் போன்றவைகளுக்கு இந்த செல்லுலாக் நொதியம் உடலில் சுரக்கின்றது. அதனால் அவை உண்ணக் கூடிய தாவர உணவில் இருந்து செல்லுலோஸை உறிஞ்சி சக்தியை பெற்றுக் கொள்கின்றன. இந்த செல்லுலாக் நொதியம் மனிதர்களுக்கு கிடையாது. அவனால் சுரக்கவும் முடியாது.
 
மனிதன் காலம் காலமாக தாவர உணவாளனாக இருந்தால் இந்த நொதியம் நமது உடலில் சுரந்திருக்கும் அல்லவா. 
 
3. மனிதன் ஒரு பல்லுணவு உண்ணி ( Omnivore ) :
 
மனிதன் என்பவன் ஒரு பல்லுணவு உண்ணியே ஆவான். இயற்கையானது மனிதன் எந்தவொரு சூழலுக்கும் தக்கவாறு தன்னைக் காத்துக் கொள்ள உதவவே மனிதனை ஒரு ஆம்னோவோராக பரிணாமம் அடையச் செய்துள்ளது. சொல்லப் போனால் நாம் முற்றிலும் சைவமும் இல்லை, முற்றிலும் அசைவமும் இல்லை. இரண்டுங் கெட்டான் என்றே சொல்ல வேண்டும். 
 
முற்றிலுமாக நாம் தாவர ( சைவ ) உணவுக்கு மாறிவிட்டால் மனிதன் ஒன்றும் செத்து போய் விடமாட்டான். ஆனால் போதிய போசாக்கு இல்லாமல் போய்விடும். இதே நிலை தான் ஊன் ( அசைவ ) உணவுக்கும் பொருந்தும். 
 
மனிதன் வேட்டை சமூகத்தில் இருந்து விவசாய சமூகமாக மாறிய போது, தாவர உணவுகளை அதிகம் உட்கொள்ள ஆரம்பித்தான். அது அவனுக்கு எளிதாக இருந்தது, ஓடி ஆடி வேட்டையாட வேண்டியதில்லை. தனது உணவை தானே உற்பத்தி செய்துக் கொண்டா. அதனால் தானியங்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை உண்ணத் தொடங்கினான். அதே சமயம் தனது ஊன் உணவுப் பழக்கத்தை கைவிடவில்லை. கால்நடைகளை வளர்த்தும், சிறிய அளவில் வேட்டையாடியும் ஊன் உண்ணலானான். 
 
மனிதனின் பிரச்சனையே அவன் எவ்வகை உணவையும் உண்ணக் கூடியவன். அதனால் அவனின் உணவு உட்கொள்ளல் அதிகரித்துவிட்டது. முக்கியமாக இன்றையக் காலக் கட்டத்தில் தேவைக்கு அதிகமாகவே உண்ணத் தொடங்கினான். 
 
குறிப்பாக இறைச்சி உட்கொண்டால் இதய நோய் வரும் எனப் பயமுறுத்தவர்கள் பல சமயம் நெய், உருளைக் கிழங்கு போன்றவைகளை உண்டால் கூட இதய நோய் வரும் என்பதை மறந்துவிடுவர். 
 
கனடாவின் வடக்கில் ஆர்ட்டிக்கில் வாழக் கூடிய எஸ்கிமோக்கள் தினமும் இறைச்சி உணவையே உண்பவர்களாக உள்ளனர். அவர்களுக்கு போதியளவு காய்கள், கனிகள், தானியங்கள் கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் அவர்கள் மீன், கடற் சிங்கம், திமிங்கலம் என அங்கு உள்ளவற்றை எல்லாம் உண்கின்றார்கள். அவர்களுக்கு என்ன இதய நோய் வருகின்றதா, உடற்பருமன் வருகின்றதா இத்தனை ஆயிரம் ஆண்டுகள் வாழவில்லையா. ஆக காய் கறி உணவே சத்தானது, சிறந்தது என்ற வாதம் அடிப்பட்டு போகின்றது அல்லவா. 
 
4. பால் 
 
என்ன தான் நீங்கள் சுத்த தாவர உணவாளன் என்று பெருமிதம் கொண்டாலும். அனைவராலும் விட முடியாத ஒன்று பால், பால் சார்ந்த உணவுகள். ஜீவகாருண்யம் பேசுபவர்கள் மாட்டின் பாலைத் திருடுவதேனோ என்றக் கேள்விக்கு பதில்லை. சமணர்கள் என்பவர்கள் மிகவும் ஆச்சாரமான, கடுமையாக சைவ  ( ஆருகத ) உணவு பழக்கத்தை கடைப்பிடிப்பவர்கள் என்பதை நாம் அறிவோம். தண்ணீரைக் கூட வடிக்கட்டி குடிப்பவர்கள், தப்பி தவறியும் பூச்சிகளை விழுங்கிவிடக் கூடாது என்பதால். அவர்களிடம் இருந்து தான் பௌத்தம், இந்து மதம் தாவர உணவுப் பழக்கத்தைக் காப்பியடித்தன அது தனிக் கதை. ஆனால் சமணர்களால் கூட பால் உண்பதை விட முடியவில்லை. சமண துறவிகள் கூட பால், பால் சார்ந்த உணவை உண்கின்றார்கள். பால் என்பது விலங்கின் ரத்தம் என்பதை நாம் அறிவோம். அது குட்டிகளுக்கு கொடுக்கவே தயார் செய்கின்ற பாலை நாம் பறித்து பருகுகின்றோம் அல்லவா. 
 
மனிதனுக்கு புரதம் மிக மிக அவசியம். புரதம் என்பது விலங்குகள் ஊடாகவே நமக்கு அதிகம் கிடைக்கின்றது. மாமிசம் உண்ணா விட்டாலும், விலங்குகள் தரக்கூடிய பாலை பருகித் தான் ஆக வேண்டும் என்ற நிலை மனிதனுக்கு உள்ளது. 
 
அடுத்த முறை எவராவது தாம் சுத்த சைவம் என உதாறினால், நீங்கள் பால் குடிப்பீர்களா என வினவுங்கள். ஆம்  ! என்றால் அவர் சுத்த சைவம் இல்லை, சுத்த பேத்தல் என்று கூறி அனுப்பிவிடலாம். 
 
5. வைட்டமின் B12 
 
நமது உடல் இயங்க பல வகை வைட்டமின்கள் தேவைப்படுகின்றன. வைட்டமின் குறைவு ஏற்பட்டால் பல்வேறு நோய்கள் வரும் என்பதை நாம் கற்று இருக்கின்றோம் அல்லவா. இவற்றில் முக்கியமான வைட்டமின் B12 ஆகும். 
 
பயன்கள் : 
 
வைட்டமின் B12 என்பது தான் நமது செவ்வணுக்களை இரத்ததில் உற்பத்திய செய்ய உதவிகின்றது. 
 
வைட்டமின் B12 நமது DNA செயற்பாட்டுக்கும், நரம்பியல் செயற்பாட்டுக்கும் மிகவௌம் அவசியமானது. 
 
நோய்கள் :
 
வைட்டமின் B12 குறைந்தால் பல நோய்கள் ஏற்படக் காரணமாக இருக்கும். அவற்றில் முக்கியமானவை :
 
Hematologic : Megaloblastic anemia, Pancytopenia (leukopenia, thrombocytopenia)
 
Neurologic :  Paresthesias, Peripheral neuropathy
 
Psychiatric : Irritability, personality change, Mild memory impairment, dementia, Depression, Psychosis, Cardiovascular, Possible increased risk of myocardial infarction and stroke
 
இந்த வைட்டமின் B12 என்பது காய், கனிகள், மரம் செடி கொடி தானியங்கள் என எவற்றிலும் கிடைக்காது. இவை விலங்குகளிடம் இருந்து தான் பெற முடிகின்றது. B12 வைட்டமின்களை பாக்டேரியாக்கள் பெருமளவில் உற்பத்தி செய்கின்றன. விலங்குகள் பாக்டேரியா சார்ந்த உணவுகளை உண்டும், வயிற்றில் நொதித்தல் மூலமாக பல்கி பெருகும் பாக்டேரியாக்களாலும் B12 வைட்டமினை பெறுகின்றன. அவ்வாறான விலங்குகளை உண்பதால் நமக்கும் B12 வைட்டமின் கிடைக்கின்றன. 
 
முக்கியமாக இந்தியாவில் வாழும் சைவ உணவாளர்கள் தம்மை அறியாமல் காய்கறிகளில் உள்ள புழு, விலங்குகளின் எச்சம் போன்றவற்றை உண்பதால் B12 வைட்டமினை பெற்றார்கள் எனவும். தற்காலத்தில் காய்கறிகள் முற்றிலுமாக சுத்தப்படுத்தபடுவதால் போதியளவு B12 வைட்டமின்கள் கிடைக்கவில்லை என்றும் ஒரு தகவல் கூறுகின்றது. 
 
வைட்டமின் B12 மிக அதிகமாக விலங்குகளின் ஈரலிலேயே இருக்கின்றது. கர்ப்பிணி பெண்களுக்கு வைட்டமின் B12 மிக அதிகமாக தேவைப்படுகின்றது. 
 
எனது குடும்பம் : 
 
எமது குடும்பம் பல காலமாக சைவ ( சமண !?? ) உணவாளர்களாக இருந்தவர்கள்.  மிக அண்மையிலயே மாமிச உணவு சாப்பிடத் தொடங்கினோம். அதனால் என்னவோ எமது குடும்பத்தில் பலருக்கும் வைட்டமின் B12 குறைப்பாடு உள்ளது. மருத்துவர்கள் முதலில் எம் குடும்பத்தாரிடம் கேட்கும் கேள்வி நீங்கள் என்ன சைவ உணவாளர்களா என்பது தான். பல காலமாக போதியளவு வைட்டமின் எடுக்கபடாமையால் பரம்பரையாகவே வைட்டமின் குறைப்பாடு ஏற்பட்டுள்ளது. 
 
இப்போது சொல்லுங்கள் மனிதன் என்ன சைவ உணவாளனா, சைவ உணவு மிகச் சிறந்ததா. இல்லவே இல்லை, தாவர, ஊன் உணவு என்பது அவரவர் விருப்பத்திற்கேற்ப அமைத்துக் கொள்வது. ஆனால் ஊட்டச்சத்து குறைவு பெறும் போது ஊட்டமான உணவுகளை உண்பதே சாலச் சிறந்தது. இன்றும் மேற்கில் பல சமணர்கள், சைவ உணவுக் காரர்கள் மாத்திரை வடிவில் இந்த வைட்டமின்களை உட்கொண்டு வருகின்றார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. 
 
மனிதனின் மூதாதை இனங்களான Homoerectus, Homosapien, Neanderthal, and Cro-Magnon என்பவை எல்லாம் ஊன் உணவாளர்களாகவே இருந்துள்ளனர். ஆக நமது பரிணாமத்தில் நாம் பல்லுணவு உண்பவர்களாக பரிணாமம் பெற்றுள்ளதே மெய்யாகும். 
 
யாரோ ஒருவர் எமக்கு அறிவியல் தெரியாது என்று எல்லாம் உளறி வருகின்றார். அறிவியல் தெரியாமலேயே இருக்கட்டும், ஆனால் தெரிந்துக் கொண்டு உண்மையின் பால் நிற்பதையே யாம் விரும்புகின்றோம். 
 

http://www.kodangi.com/2012/11/Non-vegetarian-diet-more-nutritious-protein.html

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இனி கண்ணை மூடிக்கொன்டு வெட்டலாம் என்டுறியள்  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு அறிவியல் இணைப்பு,கிருபன்! நன்றிகள்!

 

தென்னிந்தியர்களின்,வீரப்பரம்பரையை,இல்லாமல் செய்வதற்காக, பிராமணர்களால்,இந்தச் 'தாவர உணவுப்பழக்கம் ' அறிமுகப் படுத்தப்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன்!

 

புரதம் சாப்பிடாதவன் பூசை மட்டும்தான் செய்யலாம்!

 

போர்க்கோலம் கொள்ள முடியாது!

 

காடு சென்று வேட்டையாடுதல், தென்னிந்திய மன்னரின் வழக்கம்!

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணப்ப நாயனாரே... சிவ‌ பூசைக்கு, பூக்கள் கிடைகாமல்... தான் வேட்டையாடிய மான் இறைச்சியை சிவனுக்குப் படைத்தவர். அத்துடன்... சிவபெருமானே... தாயை, இழந்த‌ பன்றிக்குட்டிகளுக்குத்... தாயாக இருந்து பாலூட்டியவர்.
மனிதனுக்கு, இறைச்சியை... நல்ல வடிவாய்ச் சப்பிப் தின்னத்தான்... 32 பல்லுடன், கடைவாயில் கொடுப்புப் பல்லு, நன்கு அரைத்து விழுங்கக் கூடியதாக பல்லு அமைப்பு உள்ளது.
அதுக்காக நாம்... நெடுக இறைச்சி சாப்பிட்டால்... ஹார்ட் அட்டாக் வரும்.
இடைக்கிடை... விரதமாவது இருக்க வேணும். :D  :lol:  :icon_idea:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
இயற்கையில் கிடைத்தவற்றை மனிதன் உண்டுள்ளான்.மனிதன் எச்சூழ்நிலையில் வாழ்ந்தானோ அங்கு கிடைப்பனவற்றை உண்டு வாழ்ந்துள்ளான்.
 
மனிதன் சமயங்களை உருவாக்கினான்.பின்னர் மாமிசம் சாப்ப்பிடக்கூடாது என்பதையும் உருவாக்கினான். தற்போது மாமிசம் உடல் நலக்கேட்டை (red meat)உருவாக்கும் என விஞ்ஞானம் சொல்கிறது.

மனிதனது பற்களின் அமைப்பு அசைவ பிராணிகளுக்குரிய அமைப்பில் தானே உள்ளன? ஆதி மனிதன் கண்டிப்பாக விவசாயம் செய்வதற்குரிய அறிவின்மையால் விவசாயம் செய்து இருக்க மாட்டான்/ள். தன் கண் முன்னே கிடந்திருக்கக் கூடிய இறந்த  மிருகம் அல்லது இலகுவாகக் கொல்லக்கூடிய மிருகங்களின் இறைச்சியைத் தான் உண்டு இருப்பான்/ள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.