Jump to content

என்னைத் தேடுது சாவு


Recommended Posts

பதியப்பட்டது

என்னை உங்களுக்கு ஆரெண்டு தெரியாது. நான் ஒரு சின்னப்பிள்ளை. தமிழ்ச் சின்னப்பிள்ளை..

தமிழ்ச் சின்னப்பிள்ளையெண்டதை நான் அழுத்திச் சொல்ல வேண்டியிருக்கு.

ஏனெண்டால் தமிழ் எண்ட படியாலைதான் நான் சாகப் போறனாம். ஆனா எனக்கு அது ஏனெண்டு விளங்கேல்லை. பள்ளிக்குடத்தில எனக்கு கணக்குப் பாடத்தை விட, விஞ்ஞான பாடத்தை விட தமிழ்ப் பாடம் நிறைய விருப்பம். இதனாலை ஏன் சாகப்போறன் எண்டும் இதுக்காக என்னை எதுக்கு அவையள் சாக்கொல்ல வேணும் எண்டும் எனக்கு விளங்கேல்லை.

p21403664ir.jpg

எனக்கு சாகிறதெண்டால் சரியான பயம். செத்தால் பேயா வந்து அலைவனாம்.

எனக்கு பேயெண்டாலும் சரியான பயம். ஆனால் அம்மா சொல்லுறா பேய்கள் தானாம் உந்தப் படங்களில இருக்கிற மாதிரி மனிசரை கொல்லுமாம். அதோடை அம்மா இன்னொண்டையும் சொல்லுறா..

சாகிறதெண்டால் நான் இப்பவே செத்துப் போக வேணுமாம். ஏனெண்டால் பொம்பிளைப்பிள்ளையா பிறந்த நான் பெரியாளா வளந்த பிறகு பேய் பிசாசுகள் என்னை கதறக் கதறக் கொல்லுமாம். ஆனா என்ரை அம்மா நான் கவலைப் படக் கூடாது எண்ட படியாலை அம்மாவையும் அந்தப் பேய்கள் கொல்லும் எண்டதை சொல்லாமல் மறைச்சுப் போட்டா.

எனக்கு ஒரு தம்பி இருக்கிறான். இன்னும் பள்ளிக்குடம் போகேல்லை. கதைக்கவும் மாட்டான். எண்டாலும் அவனும் தமிழன் தானே. அவனை மாதிரித்தான் ஒரு தம்பியை அம்மாக்கும் அப்பாக்கும் இடையில படுத்துக் கொண்டிருந்தவனை நித்திரைப்பாயிலையே வைச்சு கொலை செய்து போட்டாங்கள்.

isletkolaiveri4bla8ac.jpg

எனக்கு பயமாக்கிடக்கு. நானும் என்ரை தம்பியும் அம்மாக்கும் அப்பாக்கும் இடையில தான் படுக்கிறனாங்கள். என்ர கனவிலையெல்லாம் என்ர தம்பி குடல் வெளியில தெரிய தூக்கில தொங்கிற மாதிரி வருகுது. அதை நான் அம்மாக்கு சொல்ல அம்மா என்னைக் கட்டிப்பிடிச்சு ஓவெண்டு கத்தி அழுகிறா. ஆனா தம்பி அதைப்பாத்துச் சிரிக்கிறான். அவனுக்கு ஒண்டும் விளங்கேல்லை.. இப்பிடித்தானே அம்மாக்கும் அப்பாக்கும் நடுவில செத்துக்கிடக்கிற அந்தத் தம்பியும் சிரிச்சு விளையாடியிருப்பான். ஒரு வேளை சாகிற நேரத்திலும் ஒண்டும் விளங்காமல் சிரிச்சுக் கொண்டிருந்திருப்பானோ?

எனக்கு சிலது விளங்கிற மாதிரியும் சிலது விளங்காத மாதிரியும் ஒரே குழப்பாமாக்கிடக்கு.

நான் பிறக்கேக்கை இங்கை சண்டை நடந்ததாம். ஆனால் தம்பி பிறக்கும் போது சண்டை இல்லை. அம்மா சொல்லுவா அவனைப் பாத்து நீ அதிஸ்டக்காரன் எண்டு. ஆனா செத்துப் போன இந்த தம்பி பிறக்கும் போதும் சண்டை இல்லாமல் தான் இருந்திருக்கும். அப்ப அவன் ஏன் அதிஸ்டக்காரனா இல்லை. ஒரு வேளை என்ர தம்பியும் அதிஸ்டக்காரனா இருந்து இப்படிச் செத்துப் போடுவானோ? எனக்கு கவலையாக் கிடக்கு.

எனக்கும் அவனுக்கும் சின்னச் சின்ன சண்டையள் வந்தாலும் அவனில நான் நல்ல பாசம். கடவுளே அவன் இந்த மாதிரி செத்துப் போன கோலத்தில இருக்கிறதை என்னாலை கண் கொண்டு பாக்கவே முடியாது.. எனக்கிப்ப அழுகையா வருது.. ஆனா.. தம்பி இப்பிடி செத்துப் போனால் கடைசியா நான் அவனைப் பாக்கத்தானே வேணும். என்ரை தம்பியெல்லோ அவன்?

எனக்கு சாகிறதுக்கு சரியான பயம்தான் எண்டாலும் தம்பி சாகிறதெண்டால் என்னையும் சாக்கொல்லட்டும். ஒரு வேளை என்னப்போலத்தான் தூக்கில தொங்கிற அக்காவும் கேட்டிருப்பாவோ? அவவைப் பாக்க எனக்கு அழுகையா வருது. அவக்கு என்ரை வயசுதானே இருக்கும்.

அவவுக்கும் தன்ரை தம்பியில நல்ல பாசம் வைச்சிருப்பா தானே என்னை மாதிரி!

mannablack4cz.jpg

எனக்கு வடிவாத் தெரியாது. ஆனா கேள்விப்பட்டனான். ஏதோ சில நாடுகளில மிருகங்களை கொன்றால் கூட பொலிஸ் பிடிக்குமாம். நீதி மன்றம் எல்லாம் கொண்டு போவினமாம். ஆனால் இங்கை நாங்கள் குடும்பம் குடும்பமாக் கொல்லுப்படுறம். ஒருத்தரையும் பிடிக்கிறதுமில்லை. ஏன் எண்டும் கேக்கிறதில்லை.

சரி அந்த மிருகங்களாவது சந்தோசமா உயிரோடை வாழட்டும்

நான் ஒரு படம் பாத்தனான். இதில அம்மாக்கும் அப்பாக்கும் நடுவில செத்துக்கிடக்கிற தம்பியின்ர படத்தைப் பிடிச்சுக்கொண்டு வெளிநாட்டில - அது நல்ல வடிவான நாடு - ஒரு தங்கச்சி - அவ நல்ல வடிவான தங்கச்சி - இருந்தவ. அவ குளிர்சட்டையெல்லாம் போட்டு காலுக்கு சொக்ஸ் சப்பாத்து எல்லாம் போட்டிருந்தவ. அவவக்கும் என்ர வயசுதான் இருக்கும். அவ சந்தோசமா இருக்கிறது எனக்கும் சந்தோசமாத்தான் கிடக்கு. ஆனா நாளைக்கு செத்துப் போன என்ரை படத்தையும் அவயள் தூக்கிப் பிடிப்பினமோ எண்டதை நினைக்க பயமாக்கிடக்கு.

அளவுக்கு மீறி ஆசைப்படக்கூடாது எண்டு அப்பா சொல்லுறவர். எண்டாலும் எனக்கு சொல்லாமல் இருக்க முடியேல்லை. அந்த வெளிநாட்டுத் தங்கச்சி மாதிரியே நானும் காலுக்கு சொக்ஸ் சப்பாத்து போட்டு நல்ல உடுப்புப் போட்டு பள்ளிக்குடம் போக வேணும் எண்டு ஆசையாக் கிடக்கு. என்ன செய்ய எல்லாத்தக்கும் முதலில உயிரோடை இருக்கத்தானே வேணும்..

எனக்கு இந்த இடத்தில என்ன சொல்லுறதெண்டே தெரியேல்லை.. நான் உயிரோடை இருப்பனா எண்டது எனக்கு தெரியேல்லை. உங்களில ஆருக்காவது தெரியுமா ? நானும் தம்பியும் அம்மாவும் அப்பாவும் இன்னும் என்னைப்போல இருக்கிற எல்லாரும் உயிரோடை இருப்பமா?

எனக்கு ஆரிட்டை கேட்கிறது எண்டு தெரியேல்லை . எண்டாலும் கெஞ்சிக் கேக்கிறன் ! எங்களுக்கு உயிர்ப்பிச்சை போடுறியளா?.. தம்பிக்கு கதைக்க தெரியாது. அவனுக்காக நான் கெஞ்சிக் கேட்கிறன்.. எங்களை உயிரோடை வாழ விடுவியளா..?

நன்றி

கொழுவி.

http://koluvithaluvi.blogspot.com/2006/06/...og-post_11.html

Posted

ஐய்யோ இப்படி எத்தனை குழந்தைகள் தினம் தினம் தாயகத்தில் ஏங்கி தவிக்கின்றார்கள். சாவு என்றா சொல்லுக்கு கூட அர்த்தம் தெரியதா பச்சிளம் பிள்ளைகளை கொன்றழிக்கின்ற கயவர் கூட்டத்திற்கு எப்போது அழிவு வரும்?

பலரையும் ஆழ அத்துடன் ஆழ்ந்து சிந்திக்கவும் வைக்கின்றது.

இணைப்பிற்கு நன்றி குளம் அண்ணா.

Posted

குழந்த்தையின் ஏக்கத்தை அழகாக கூறி இருக்கிறார் கதாசிரியர்.

இப்படி எத்தனை குழந்தைப் பிஞ்சுகளின் ஏக்கங்கள்.

இக்கொடிய செயலை செய்த பாதகர்களை உலகம் மன்னிக்கவே மன்னிக்காது.

இணைப்புக்கு நன்றி குளம்.

Posted

சிலதை சொல்ல வார்த்தைகளே இல்லை..நான் நேற்று ஒரு வலைப்பதிவில் இந்த கதையை வாசித்தேன்..ரொம்ப கவலையா இருந்திச்சு. யாழில் நாளைக்கு போடுவம் என்று வர..குளம் அண்ணா போட்டிருக்கார்..இப்பிடி குழந்தைகள் என்றும் பார்க்காமல்..கொடுமை செய்பவர்களை நினைக்க பாவமா இருக்கு..ஏன்னா அவர்களுக்கு கடவுள் என்னென்ன எல்லாம் குடுக்க போறாரோ.. :roll: :evil: :evil: :evil:

Posted

இணைப்புக்கு நன்றி குளம் அண்ணா

வாசிக்கும் போது அழுகைதான் வருகுது தமிழரா பிறந்தத தவிர வேற எந்த பாவமும் செய்யாத பிள்ளைகளை கொல்லுபவர்கள் மிருகங்களிலும் கீழானவர்கள்

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மரங்களைத் தறிக்காதீர்கள் என்று உலகம் சொல்கிறது.ஈழத்தில் பிள்ளைகளைக் கொல்கிறார்களே

இணைப்புக்கு நன்றி குளம்

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.