Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இசையில் இனிய பாடல்கள்

Featured Replies

பாடல்: நாளை நமதே
பாடியவர்கள்: S. P. பாலசுப்ரமணியம், T. M. சௌந்தர்ராஜன்
பாடல் வரிகள்: வாலி
படம்: நாளை நமதே

 

  • Replies 132
  • Views 54.6k
  • Created
  • Last Reply

'வைர நெஞ்சம்' படத்திலிருந்து 'நீராட நேரம் நல்ல நேரம்'

 

எம் எஸ் வி யின் அருமையான மெட்டுக்களில் வந்து அதிகம் ஒலிக்காத பாடல்களில் ஒன்று. பின்னணி இசையும் இப்பாடலுக்கு மெருகேற்றியுள்ளது.

 

கவியரசரின் அர்த்தம் புதைந்த வரிகளில்... வாணி ஜெயராமின் இனிமையான குரலில்...................

பாடலுக்கேற்ப காட்சிப் பதிவும்  நன்றாக உள்ளது. அதிலும் சிவாஜியின் ஸ்டைல் மற்றும்  சகுந்தலாவின் சரசமாடும் மினுக்கல் நடிப்பும்.

 

இருந்தாலும் பாடலை தனியே கேட்கும் பொழுது , இந்த துப்பறியும் காட்சிக்கு  இல்லாமல் வேறு நல்ல சந்தர்ப்பங்களுக்கு  இப்பாடலை  பயன்படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் எனும் உணர்வு .

 

 

http://www.youtube.com/watch?v=wVavt52a20A

Edited by தப்பிலி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: ஆடவரெல்லாம் ஆடவரலாம்
படம்: கறுப்பு பணம்
பாடியவர்: எல்.ஆர். ஈஸ்வரி
 

பாடல்: ஆடாமல் ஆடுகிறேன் பாடாமல் பாடுகிறேன் ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா
பாடியவர்: P. சுசீலா
பாடல் வரிகள்: வாலி
படம்: ஆயிரத்தில் ஒருவன்

 

http://www.youtube.com/watch?v=s0ez4xmXG8A&list=PLD4E88B49BD842BF9&index=38

வெள்ளம் செல்லும் வேகம் எந்தன் உள்ளம் சென்றது 
வேகம் வந்த நேரம் இன்ப இல்லம் கண்டது 
இனியொரு பிரிவேது அந்த நினைவுக்கு முடிவேது 
இரவும் பகலும் கலையே 
இருவர் நிலையும் சிலையே 

 

 

 

unnidaththil ennai koduththEn(avaLukkenRu oru manam)

பாடல்: உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்

திரைப்படம்: அவளுக்கென்று ஒரு மனம்

இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

பாடியவர்: எஸ்.ஜானகி


உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் 

உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன் 


உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் 

உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன் 

உறவினில் விளையாடி வரும் கனவுகள் பலகோடி 

உறவினில் விளையாடி வரும் கனவுகள் பலகோடி 

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் 

உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன் 


காற்றில் ஆடும் மாலை என்னை பெண்மை என்றது 

காற்றில் ஆடும் மாலை என்னை பெண்மை என்றது 

காதல் ஒன்று தானே வாழ்வில் உண்மை என்றது 

காதல் ஒன்று தானே வாழ்வில் உண்மை என்றது 

இதழுடன் இதழாட நீ இளமையில் நடமாடு 

நினைத்தால் போதும் வருவேன் 

ஆஆ ஆஆ தடுத்தால் கூட தருவேன் 

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் 

உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன் 


வெள்ளம் செல்லும் வேகம் எந்தன் உள்ளம் சென்றது 

வேகம் வந்த நேரம் இன்ப இல்லம் கண்டது 

இனியொரு பிரிவேது அந்த நினைவுக்கு முடிவேது 

இரவும் பகலும் கலையே 

ஆஆ ஆஆ இருவர் நிலையும் சிலையே 

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் 

உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன் 


ஊடல் கொண்ட பெண்மை அங்கே தனியே நின்றது 

ஊடல் கொண்ட பெண்மை அங்கே தனியே நின்றது 

கூடல் கொள்ள மன்னன் உள்ளம் அருகே வந்தது 

கூடல் கொள்ள மன்னன் உள்ளம் அருகே வந்தது 

என்னடி விளையாட்டு என்று சொன்னவன் மொழிகேட்டு 

ஆசையில் விழுந்தேன் அங்கே 

ஆஆ ஆஆ காலையில் கனவுகள் எங்கே 


உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் 

உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன் 

உறவினில் விளையாடி வரும் கனவுகள் பலகோடி 

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்

 

             நாளை வருவான் நாயகன் என்றே 

              நல்லோர்கள் சொன்னாரடி

               நாயகன் தானும் ஓலை வடிவில்

              என்னோடு வந்தானடி

               ஆடை திருத்தி மாலைகள் தொடுத்து 

              வாசலில் வருவேனடி

              மன்னவன் என்னை மார்பில் தழுவி

              வாழ்கெனச் சொன்னானடி

 

    பாடல் தலைப்பு செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு    திரைப்படம் சாந்தி  கதாநாயகன் சிவாஜி கணேசன்  கதாநாயகி தேவிகா  பாடகர்கள் P.B.ஸ்ரீநிவாஸ்  பாடகிகள் பி.சுசீலா  இசையமைப்பாளர் விஸ்வநாதன் - ராமமூர்த்தி   பாடலாசிரியர்கள் கண்ணதாசன்   இயக்குநர் பீம் சிங்   ராகம்   வெளியானஆண்டு 22.04.1965  தயாரிப்பு                 செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு 

              இசை                    பல்லவி

பெண்    செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு 

              சேதியை நான் கேட்டேன் கேட்டேன்

              சேவல் கூவும் காலை நேரம்

              பாடலை நான் கேட்டேன் 

              பாடலை நான் கேட்டேன் ( இசை )

              செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு 

              சேதியை நான் கேட்டேன் கேட்டேன்

              சேவல் கூவும் காலை நேரம்

              பாடலை நான் கேட்டேன் 

              பாடலை நான் கேட்டேன் 

              இசை                  சரணம் - 1

பெண்    கண்கள் இரண்டை வேலென எடுத்து

              கையோடு கொண்டானடி

              கண்கள் இரண்டை வேலென எடுத்து

              கையோடு கொண்டானடி

              கன்னியென் மனதில் காதல் கவிதை

              சொல்லாமல் சொன்னானடி

    

              செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு 

              சேதியை நான் கேட்டேன் கேட்டேன்

              சேவல் கூவும் காலை நேரம்

              பாடலை நான் கேட்டேன் 

              பாடலை நான் கேட்டேன் 

              இசை                     சரணம் - 2

பெண்    ஊர்வலம் போனவன் ஓரிரு மாதம்

              வாராமல் நின்றானடி

              ஊர்வலம் போனவன் ஓரிரு மாதம்

              வாராமல் நின்றானடி

              வாராமல் வந்தவன் பாவை உடலை

              சேராமல் சென்றானடி சேராமல் சென்றானடி

    

              செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு 

              சேதியை நான் கேட்டேன் கேட்டேன்

              சேவல் கூவும் காலை நேரம்

              பாடலை நான் கேட்டேன் 

              பாடலை நான் கேட்டேன் 

              இசை                      சரணம் - 3

ஆண்    நாளை வருவான் நாயகன் என்றே 

              நல்லோர்கள் சொன்னாரடி

              நாளை வருவான் நாயகன் என்றே 

              நல்லோர்கள் சொன்னாரடி

              நாயகன் தானும் ஓலை வடிவில்

              என்னோடு வந்தானடி

              ஆடை திருத்தி மாலைகள் தொடுத்து 

              வாசலில் வருவேனடி

              ஆடை திருத்தி மாலைகள் தொடுத்து 

              வாசலில் வருவேனடி

              மன்னவன் என்னை மார்பில் தழுவி

              வாழ்கெனச் சொன்னானடி

              வாழ்கெனச் சொன்னானடி

    

              செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு 

              சேதியை நான் கேட்டேன் கேட்டேன்

              சேவல் கூவும் காலை நேரம்

              பாடலை நான் கேட்டேன் 

              பாடலை நான் கேட்டேன் 

 

 

https://www.youtube.com/watch?v=zcHN11Hfaio

 


ஆண் : பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லை கொடி யாரோ.
பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லை கொடி யாரோ..
பாவை என்னும் பேரில் வரும் தேவன் மகள் நீயோ..
பெண்: பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ..
பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ..
மன்னன் என்னும் பேரில் வரும் தேவன் மகன் நீயோ...

ஆண்: தத்தை போல தாவும் பாவை பாதம் நோகும் என்று..
மெத்தை போல பூவை தூவும் வாடை காற்றும் உண்டு...
பெண்:வண்ணச்சோலை வாணம் பூமி யாவும் இன்பம் இங்கு..
இந்தக்கோலம் நாளும் காண நானும் நீயும் பங்கு...
ஆண்: கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமோ..
பெண்:நானே தரும் நாளும் வரும் ஏனிந்த அவசரமோ..

ஆண:பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லை கொடி யாரோ..
பாவை என்னும் பேரில் வரும் தேவன் மகள் நீயோ..

பெண்:மெல்லப்பேசும் கள்ளப்பார்வை ஜாதிப்பூவின் மென்மை..
சொல்லப்போகும் பாடல் நூறும் ஜாடை காட்டும் பெண்மை.. ஆண்:முள்ளில்லாத தாழை போல தோகை மேனி என்று..
அள்ளும் போது மேலும் கீழும் ஆடும் ஆசை உண்டு..
பெண்: அந்த நேரம் நேரிலே சொர்க்கம் தோன்றுமோ...
அந்த நேரம் நேரிலே சொர்க்கம் தோன்றுமோ.
ஆண்: காணாததும் கேளாததும் காதலில் விளங்கிடுமோ..
பெண்: பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ..
மன்னன் என்னும் பேரில் வரும் தேவன் மகன் நீயோ...

ஆண்:பொன்பட்டாடை மூடிச்செல்லும் தேன் சிட்டோடு மெல்ல...
நான் தொட்டாடும் வேளை தோறும் போதை என்ன சொல்ல....
பெண்: கைத்தொட்டாட காலம் நேரம் போக போக உண்டு...
கண்பட்டாலும் காதல் வேகம் பாதி பாதி இன்று...
ஆண்: பள்ளிக்கூடம் போகலாம் பக்கம் ஓடி வா...
பள்ளிக்கூடம் போகலாம் பக்கம் ஓடி வா...
பெண்:கூடம் தனில் பாடம் பெரும் காலங்கல் சுவையல்லவோ...
பெண்: பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ..
மன்னன் என்னும் பேரில் வரும் தேவன் மகன் நீயோ...


ஆண் : பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லை கொடி யாரோ.
பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லை கொடி யாரோ..
பாவை என்னும் பேரில் வரும் தேவன் மகள் நீயோ.

 

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

படம் - பொன்னூஞ்சல்
இசை - எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்கள் - டி.எம். சௌந்தரராஜன் - பி. சுசீலா

http://www.youtube.com/watch?v=JW0fWIFskG8

 

டி.எம்.எஸ்
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா

பி.எஸ்.
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா

ஓ ஓ....
பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி
மணச்செம்பு கையேந்தி
நாம் அங்கே போவோமா
பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி
மணச்செம்பு கையேந்தி
நாம் அங்கே போவோமா
மீனாவின் குங்குமத்தை
மீனாவின் குங்குமத்தை நானாள வேண்டுமம்மா
மானோடு நீராட மஞ்சள் கொண்டு செல்வோமா
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா

டி.எம்.எஸ்
பால்வண்ணம் பழத்தட்டு பூக்கிண்ணம்
மணப்பெண்ணின் தாய் தந்த சீராக காண்போமா
பால்வண்ணம் பழத்தட்டு பூக்கிண்ணம்
மணப்பெண்ணின் தாய் தந்த சீராக காண்போமா
ஊராரின் சன்னதியில் ஒன்றாக வேண்டுமம்மா
தாயென்றும் சேயென்றும் தந்தையென்றும் ஆவோமா
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா

பி.எஸ்
கண்ணென்றும் வளை கொண்ட கை என்றும்
இவள் கொண்ட அங்கங்கள் நீ காணும் சின்னங்கள்

டி.எம்.எஸ்
பொன்மாலை அந்தியிலே என் மானை தேடி வரும்
அம்மா உன் பெண்ணுள்ளம் நாணம் சொல்லி ஆடி வரும்

இருவரும்
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா
ஆ...ஆ
ஆ....ஆ

 


Read More: Aagaya Panthalile Lyrics - Ponnunjal Song Lyrics - Tamil Songs Lyrics - Magical Songs http://www.magicalsongs.net/2010/05/ponnunjal.html#ixzz2IwWmT4gz
Copied From "www.magicalsongs.net"

 

சோகப் பாடல்

http://www.youtube.com/watch?v=vGnz2VS6hpE

Edited by eelapirean

பாடல்: எங்க வீட்டு ராணிக்கிப்போ இளமை திரும்புது வயது
 
K.R. விஜயாவின் விடுகாலித்தனமும், சிவாஜியின் சுட்டித்தனமும் அபாரம். :D
 
 
எங்க வீட்டு ராணிக்கிப்போ
இளமை திரும்புது வயது
ஏற ஏற பருவம் ஏறி
காதல் அரும்புது
 
இந்த வயசில்தானே எனக்கு
விவரம் புரியுது நீங்க
ஏற இறங்கப் பார்க்கும்போது
விளக்கம் தெரியுது
 
எங்க வீட்டு ராஜாவுக்கு
இளமை திரும்புது வயது
ஏற ஏற பருவமேறி
காதல் அரும்புது
 
சேலை கட்டிய கருப்பு பல்லக்கு
சிரிக்கும் சிரிப்பு அழகு உன்
சிரிக்கும் வான முகத்தைப் பார்த்து
இருட்டில் மறையும் நிலவு
 
கோலம் போட்ட இதழின் மீது
கூடக் குறைய பழகு
கொஞ்சும் திலகம் நெஞ்சில் பதிய
குளிர வேண்டும் இரவு
குளிர வேண்டும் இரவு
 
எங்க வீட்டு ராணிக்கிப்போ
இளமை திரும்புது வயது
ஏற ஏற பருவம் ஏறி
காதல் அரும்புது
 
மாலை போட்ட நாளில் இருந்து
மனசு துடிக்கும் துடிப்பு
மதியமில்லை இரவுமில்லை
தினமும் உங்க நெனப்பு
 
காலம் தாண்டி கிடைக்கும்போது
காதல் இனிக்கும் இனிப்பு
கட்டி வெள்ளம் கசந்து போகும்
கட்டிப் பிடிக்கும் பிடிப்பு
கட்டிப் பிடிக்கும் பிடிப்பு
 
எங்க வீட்டு ராணிக்கிப்போ
இளமை திரும்புது வயது
ஏற ஏற பருவம் ஏறி
காதல் அரும்புது
 
பழுத்து வந்த பழத்தைப் போல
பருவம் இன்று விஜயம்
பார்த்து நீங்கள் பழக வேண்டும்
தெரியும் உங்கள் விஷயம்
 
துன்பம் போல தோன்றினாலும்
இன்பம் அங்கு அதிகம்
இன்பம் துன்பம் எதுவென்றாலும்
எனக்கு நீங்கள் உலகம்
எனக்கு நீங்கள் உலகம்
 
எங்க வீட்டு ராணிக்கிப்போ
இளமை திரும்புது வயது
ஏற ஏற பருவம் ஏறி
காதல் அரும்புது
 
 
 
Grahaprevesam - Enga Veettu Ranikkippo Ilamai Thirumbuthu Song, Lyrics and Video
 
D. Yoganand, K.R. Vijaya, M.R.R. Vasu, M.S.Viswanathan, Sivaji Ganesan, T.S.Muthusami, Vietnam Veedu Sundaram

Song: raaman eththanai raamanati - பாடல்: ராமன் எத்தனை ராமனடி
Movie: Lakshmi Kalyanam - திரைப்படம்: லட்சுமி கல்யாணம்
Singers: P Susheela - பாடியவர்: பி. சுசீலா
Lyrics: Kanadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: M.S. Viswanathan - இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

 

 

http://www.youtube.com/watch?v=DR2GFE0B5M0

 

Year: - ஆண்டு: 

 

ராமன் எத்தனை ராமனடி
ராமன் எத்தனை ராமனடி

ராமன் எத்தனை ராமனடி அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி தேவன்
ராமன் எத்தனை ராமனடி அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி தேவன்
ராமன் எத்தனை ராமனடி

கல்யாணக் கோலம் கொண்ட கல்யாண ராமன்
கல்யாணக் கோலம் கொண்ட கல்யாண ராமன்
காதலுக்கு தெய்வம் அந்த சீதாராமன்
அரசாள வந்த மன்னன் ராஜா ராமன் 
அரசாள வந்த மன்னன் ராஜா ராமன்
அலங்கார ரூபன் அந்த சுந்தர ராமன் ராமன்

ராமன் எத்தனை ராமனடி
ராமன் எத்தனை ராமனடி

தாயே என் தெய்வம் என்ற கோசல ராமன்
தாயே என் தெய்வம் என்ற கோசல ராமன்
தந்தை மீது பாசம் கொண்ட தசரத ராமன்
வீரமென்னும் வில்லை ஏந்தும் கோதண்ட ராமன்
வீரமென்னும் வில்லை ஏந்தும் கோதண்ட ராமன்
வெற்றி என்று போர் முடிக்கும் ஸ்ரீஜெய ராமன் ராமன்

ராமன் எத்தனை ராமனடி அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி தேவன்
ராமன் எத்தனை ராமனடி

வம்சத்திற்கொருவன் ரகுராமன்
மதங்களை இணைப்பவன் சிவராமன்
வம்சத்திற்கொருவன் ரகுராமன்
மதங்களை இணைப்பவன் சிவராமன்
மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீராமன்
முடிவில்லாதவன் அனந்த ராமன்
மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீராமன்
முடிவில்லாதவன் அனந்த ராமன்

ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
நம்பிய பேருக்கு ஏது பயம்
ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
நம்பிய பேருக்கு ஏது பயம்
ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
ராமனின் கைகளின் நானபயம்
ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
ராமனின் கைகளின் நானபயம்

ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்
ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்
ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்
ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்
ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்

ராமன் எத்தனை ராமனடி

 

To Print   பாடல் தலைப்பு மலருக்கு தென்றல் பகையானால்    திரைப்படம் எங்க வீட்டுப் பிள்ளை  கதாநாயகன் எம்.ஜி.ஆர்  கதாநாயகி சரோஜா தேவி  பாடகர்கள்   பாடகிகள் பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி  இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி   பாடலாசிரியர்கள் வாலி   இயக்குநர் சாணக்யா   ராகம்   வெளியானஆண்டு 14.01.1965  தயாரிப்பு விஜயா கம்பைன்ஸ் புரொடக்ஷ்ன்ஸ்                    மலருக்கு தென்றல்  பகையானால்

                  தொகையறா                          (இசை)    

பெண்-1 :    வானகமே வையகமே வளர்ந்து வரும் தாயினமே    
                  ஆணுலக மேடையிலே ஆசை நடை போடாதே    
                  ஆசை நடை போடாதே

                                        பல்லவி

பெண்-1 :    மலருக்குத் தென்றல் பகையானால்  அது 
                  மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு   (இசை)   
                  மலருக்குத் தென்றல் பகையானால்  அது 
                  மலர்ந்திடக்  கதிரவன் துணையுண்டு 
                  நிலவுக்கு வானம் பகையானால்
                  அது நடந்திட வேறே வழியேது 
                  மலருக்குத் தென்றல் பகையானால் 
                  அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு   (இசை) 

                  (இசை)                               சரணம் - 1

பெண்-2 :    பறவைக்குச் சிறகு பகையானால் 
                  அது பதுங்கி வாழ்ந்திடக் கால்களுண்டு 
                  பறவைக்குச் சிறகு பகையானால் அது 
                  பதுங்கி வாழ்ந்திடக் கால்களுண்டு
                  உறவுக்கு நெஞ்சே பகையானால்
                  மண்ணில் உயிரினம் பெருகிட வகையேது
                  நிலவுக்கு வானம் பகையானால் அது 
                  நடந்திடவேறே வழியேது

பெண்-2 :    மலருக்குத் தென்றல் பகையானால் 
                  அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
  
                  (இசை)                               சரணம் - 2 

பெண்-1 :    படகுக்குத் துடுப்பு பகையானால்  அங்கு
                  பாய்மரத்தாலே உதவியுண்டு
                  படகுக்குத் துடுப்பு பகையானால்  அங்கு
                  பாய்மரத்தாலே உதவியுண்டு
                  கடலுக்கு நீரே பகையானால் அங்கு
                  கதை சொல்லும் அலைகளுக்கிடமேது

பெண்-1 :    மலருக்குத் தென்றல் பகையானால்  அது 
                  மலர்ந்திடக்  கதிரவன் துணையுண்டு

                  (இசை)                              சரணம் - 3

பெண்-2 :    கண்ணுக்குப் பார்வை பகையானால் 
                  அதை கருத்தால் உணர்ந்திட வழியுண்டு

பெண்-1 :    பெண்ணுக்குத் துணைவன் பகையானால் 
                  அந்த பேதையின் வாழ்வில் ஒளியேது    (இசை)
    
இருவர்:     மலருக்குத் தென்றல் பகையானால்  அது 
                  மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு 
                  நிலவுக்கு வானம் பகையானால்     
                  அது நடந்திட வேறே வழியேது 
                  மலருக்குத் தென்றல் பகையானால் 
                  அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு  (இசை)  

-- By Lakshmansruthi.com --

 

 

பல்லவி
கம்பன் ஏமாந்தான்...
கம்பன் ஏமாந்தான்
இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான் (இசை)

கம்பன் ஏமாந்தான்
இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்

 (இசை)                         சரணம் - 1

அம்பு விழி என்று ஏன் சொன்னான்
அது பாய்வதினால் தானோ
அம்பு விழி என்று ஏன் சொன்னான்
அது பாய்வதினால் தானோ அவள்
அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான்
அது கொதிப்பதினால் தானோ

கம்பன் ஏமாந்தான்

 (இசை)                         சரணம் - 2

தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால்
தீபத்தின் பெருமையன்றோ
தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால்
தீபமும் பாவமன்றோ

கம்பன் ஏமாந்தான்
இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்

 (இசை)                         சரணம் - 3

வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு
வரிசையை நான் கண்டேன் அந்த
வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட
நானும் ஏமாந்தேன்

ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம்
அடுப்படி வரை தானே ஒரு
ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்
அடங்குதல் முறை தானே

கம்பன் ஏமாந்தான்
இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்
கம்பன் ஏமாந்தான்

 

பாடல்: விழியே கதை எழுது... கண்ணீரில் எழுதாதே.. மஞ்சள் வானம்... தென்றல் சாட்சி.... உனக்காகவே நான் வாழ்கிறேன்...
பாடியவர்கள்: K.J.ஜேசுதாஸ், P.சுசீலா
படம்: உரிமைக்குரல்
 

http://www.youtube.com/watch?v=Y3Zw5CRjYtk



 

பாடல்: ரோஜா மலரே ராஜகுமாரி
திரைப்படம்: வீரத் திருமகன்
பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
ஆண்டு: 1962

VTO814.jpg

ரோஜா மலரே ராஜகுமாரி
ஆசைக் கிளியே அழகிய ராணி
அருகில் வரலாமா? வருவதும் சரிதானா?
உறவும் முறை தானா? 
வாராய் அருகே மன்னவன் நீயே
காதல் சமமன்றோ வேதம் இலையன்றோ?
காதல் நிலையன்றோ?
ஏழையென்றாலும் ராஜகுமாரன்
ராஜா மகளின் காதல் தலைவன்
உண்மை இதுவன்றோ? உலகின் முறையன்றோ?
என்றும் நிலையன்றோ?

வானத்தின் மீதே பறந்தாலும்
காக்கை கிளியாய் மாறாது
கோட்டையின் மேலே நின்றாலும்
ஏழையின் பெருமை உயராது
ஓடியலைந்து காதலில் கலந்து
நாட்டை இழந்தவர் பலரன்றோ?

மன்னவர் நாடும் மணிமுடியும்
மாளிகை வாழ்வும் தோழியரும்
பஞ்சணை சுகமும் பால் பழமும்
படையும் குடையும் சேவகரும்
ஒன்றாய் இணையும் காதலர் முன்னே
கானல் நீர் போல் மறையாதோ?

பாடும் பறவைக் கூட்டங்களே
பச்சை ஆடைத் தோட்டங்களே
விண்ணில் தவழும் ராகங்களே
வேகம் போகும் மேகங்களே

ரோஜா மலரே ராஜகுமாரி
ஏழையென்றாலும் ராஜகுமாரன்
உண்மை இதுவன்றோ? உலகின் முறையன்றோ?
என்றும் நிலையன்றோ?

 

யாருக்காவது இதைவிட  நல்ல இணைப்பு கிடைத்தால் தனிமடல் போடுங்கள். நான் இந்த இடைவெளியில் வேறு பாட்டை போடுகிறேன்

TMS for NT with P Susheela
Movie : Ennaip pOl Oruvan
Music: MSV
Lyric : Vaali



வேலாலே விழிகள்
இன்று ஆலோலம் இசைக்கும்
சிறு நூலாலே இடையில்
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்

ஆஆஆ..ஓஓஓ...
நீரோடு தானாடும் தேரோடும் திருநாள் எங்கே
நீரோடு தானாடும் தேரோடும் திருநாள் எங்கே
மல்லிகை தாமரை துள்ளிடும் மெல்லிய
பூப்போன்ற மங்கை இங்கே
..ஆஆஆ...பூப்போன்ற மங்கை இங்கே
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
வேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும்

பட்டுச்சேலையில் மின்னும் பொன்னிழை
பாவை மேனியில் ஆடும்
தொட்டுத் தாவிட துள்ளும் என் மனம்
கட்டுக் காவலை மீறும்
ஆஆஆ..ஆ..
கட்டும் கைவளை தொட்டும் மெல்லிசை
மொட்டும் உன்னுடன் ஓடும்
சிட்டுக் கண்களில் வெட்டும் மின்னலும்
பட்டம் போல் விளையாடும்
பூவண்ணக் கூந்தல் என் மஞ்சமானால்
பூவண்ணக் கூந்தல் என் மஞ்சமானால்
நான் கொஞ்சம் பாட நீ கொஞ்சம் பாட
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
வேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும்

தங்கச் செங்கனி அங்கம் உன்னுடன்
சங்கமம் ஆவது என்று
திங்கள் மங்கையின் செவ்வாய் உன்னுடன்
பொங்கும் நாடகம் என்று ?
ஓஓஓ...ஓ...
தித்திக்கும் ஒரு முத்துப் பூச்சரம்
தத்தைக்கே தரவென்று
சித்தம் சொன்னது வேகம் வந்தது
நித்தம் ஆயிரம் உண்டு
பாடுங்கள் இன்னும் தாளங்கள் துள்ளும்
பாடுங்கள் இன்னும் தாளங்கள் துள்ளும்
கூடுங்கள் என்றோ பெண்ணுள்ளம் சொல்லும்
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்

வேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும்
சிறு நூலாலே இடையில்
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
 
 
 

 நீக்கப்பட்ட பாடல் youtube.com/watch?v=neToYc4Hiwk

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

மெல்லிசை மன்னரின் இசையமைப்பில்...  "பாடும் போது.. தென்னங்காற்று...."


  • கருத்துக்கள உறவுகள்

 

திரு மல்லையூரான்.. :D இது இளையராஜாவின் இசையில் வெளிவந்த பாடல்.. இதில் எங்களை வெருட்ட முடியாது..  :lol:

திரு மல்லையூரான்.. :D இது இளையராஜாவின் இசையில் வெளிவந்த பாடல்.. இதில் எங்களை வெருட்ட முடியாது..  :lol:

 

மனத்தில் இருந்த படி போட்டிருப்பேன். நேரம் கிடைத்த போது எடுத்துவிட்டு வேறு பாட்டு போட்டுவிடுகிறேன்.  விபரத்திற்கு நன்றி.

 

 

 

..............

 

எடுத்துவிட்டு வேலாலே விழிகள் போட்டிருக்கிறேன்.

 

Edited by மல்லையூரான்

உயர்ந்த மனிதன் இயக்குனர் எம். முருகன் தயாரிப்பாளர்

 நடிப்பு சிவாஜிவாணி ஸ்ரீசௌகார் ஜானகி  மனோரமா,  சிவக்குமார்அசோகன்

 

இசையமைப்பு எம். எஸ். விஸ்வநாதன்

 

வெளியீடு 1968

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.