Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாதிகள் பட்டியலில் மருத்துவர் சிவசங்கர்!?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பயங்கரவாதிகள் பட்டியலில் மருத்துவர் சிவசங்கர்!?
 
 
arrest_001.jpgமருத்துவர் சிவசங்கர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகளின் கொழும்புத் தாய்ச் சங்கம் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்கக் கோனிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
 
இந்தத் தகவலை அரச மருத்துவ அதிகாரிகள் சங்க யாழ். கிளைத் தலைவர் மருத்துவர் எஸ்.நிமலன் தெரிவித்தார்.
 
 
அநுராதபுரத்தில் சுகாதார வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றும் மருத்துவர் சிவசங்கர் கொக்காவில் இராணுவ முகாமுக்கு நேற்று முன்தினம் சென்றார். அங்கு அவர் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுப் பின்னர் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
 
 
மருத்துவர் சிவசங்கரை அவரது மனைவியும், சில மருத்துவர்களும் மாங்குளம் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று பார்வையிட்டனர். "எனது கணவரை பொலிஸார் விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர். இன்று (ஞாயிறு) முழுதும் அருகிலேயே நானிருந்தேன்.
 
 
குறுகிய நேரம் மட்டுமே அவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். தன்னை பொலிஸார் நல்லவிதமாக நடத்துவதாகவும், எந்தவித துன்புறுத்தலுக்கும் தான் ஆளாகவில்லையென்றும் எனது கணவர் கூறினார்.
 
 
பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதால் அவரை சட்டநடவடிக்கைகளின் பின்னரே விடுவிக்க முடியுமென்று பொலிஸார் என்னிடம் கூறினர்'' இவ்வாறு மருத்துவர் சிவசங்கரின் மனைவியும் மருத்துவருமான சி.திருமகள்  தெரிவித்தார்.
 

இதேவேளை மருத்துவர் சிவசங்கரின் தாயாரின் வீட்டுக்குச் சென்ற பொலிஸார் அங்கு மருத்துவர் சிவசங்கர் குறித்து விசாரணைகளை மேற்கொண்டனர் என்று தெரியவருகிறது.

 

http://www.tamilleader.com/prathanaalias/8381-2012-12-31-06-10-03.html

Doctor arrested by SL military

 

A Tamil doctor has been arrested by the Sri Lankan military and detained at the military base in Kokkaavil, reports Uthayan.

 

The doctor, Dr. E. Sivasankar, was detained after visiting the Kokkaavil military base to secure the release of a Tamil women who had been recently enlisted into the Sri Lankan military but wished to leave.

 

According to Uthayan, the woman, believed to be from Kilinochchi originally was on her way home to sit an exam, when she was instructed by the military to report to the Kokkaavil military base. On learning that the woman wanted to leave the army, her parents asked Dr Sivasankar to accompany them to the military base and help release their daughter.

 

Dr Sivasankar visited the Kokkaavil military base with the woman's parents on Saturday, where they were told that legally a one month notice period is needed before leaving the army.

 

Following heated discussions, the parents and the woman were allowed to go home, however according to the family, Dr Sivakankar was detained by the military.

 

Reports suggest he has been handed over to Mankulam police station.

 

Dr Sivasankar, originally from Jaffna, is currently working in Anuradhapura.

 

http://www.tamilguardian.com/article.asp?articleid=6703

  • கருத்துக்கள உறவுகள்
சுபத்திரனை புலிகள் சுட்டுக்கொன்றதனை கண்டித்த சிவசங்கர் இராணுவ அராஜகத்தையும் இப்போ கண்டிக்கிறார்
01 ஜனவரி 2013
 
 

இது பயங்கரவாதமா? நடராஜா குருபரன்

 

 

“கைது செய்யபட்டதாக கூறப்படும் டாக்டர் சிவசங்கர் அண்மையில் வடமாகாண ஆளுனர் சந்திரசிறியினால் அவர் எழுதிய கட்டுரை ஒன்றிற்காக விசாரணைக்கு உட்படுத்தபட்டிருந்தார். எச்சரிக்கை உடனான விசாரணையாக அது இருந்தது எனச் சிவசங்கர் கூறியிருந்தார். அந்த விசாரணையின் பின்பும் சங்கரின் அடுத்த கட்டுரை பிரசுரமாகி இருந்தது. கைது செய்யப்படுவேன் அல்லது விரும்பத்தகாத நிகழ்வு நிகழலாம் என்ற சங்கரின் வார்த்தை பயமுறுத்துகிறது.

 

 ‘டாக்டர் இ. சிவசங்கர். உனது வார்த்தைகள் அவர்களை பயமுறுத்துகிறது நண்பா, யாழ்ப்பாண மே தின ஊர்வலத்தில் புலிக் கொடியுடன் யாரோ ஒருவன் ஓடுவது அவர்களுக்குத் தேவையாய் இருக்கிறது , பிரிவினை கோரும் கோசங்கள் அவர்களுக்குத் தேவையாய் இருக்கிறது அப்போது தான் இனிவரும் காலங்களிலும் அத்தனை படையணிகளையும் அவர்களால் ஆக்கிரமித்து இருக்கும் தமிழர் நிலங்களில் நிரந்தரமாக நிலைநிறுத்த முடியும். அவ்வாறெனில் உனது எழுத்தும் அவர்களுக்கு சந்தோசமானதாக இருந்திருக்க வேண்டும். மாறாக அது அவர்களைப் பயமுறுத்துகிறது. உனது எழுத்து இன்றைய யதார்த்தத்தை பதிவு செய்வதை அவர்கள் ஒரு போதும் விரும்பப் போவதில்லை” .

 

இந்தக் குறிப்புகளை நந்தா கந்தசாமி தனது முகநூலில் பதிவு செய்திருந்தார். இந்தப் பதிவு என்னை மிகவும் பாதித்து இருந்தது. இலங்கைiயில் இருந்து நான் புலம்பெயர்க்கப்பட்டு வருடங்கள் 5 ஆகின்றன. ஆனால் என்னவோ தெரியவில்லை வாழ்வின் வசதிகளைத் தரும் ஐரோப்பிய மண்ணில் இருந்தும் நிம்மதியாய் தூங்க முடியவில்லை. 30 வருட மக்களுடனான வாழ்வில் 8 வருடங்கள் போராட்ட வாழ்வாகவும் 22 வருடங்கள் ஊடக வாழ்வாகவும் கழிந்தது. ஆக 5 வருட ஐரோப்பிய வாழ்வைக் கழித்து 25 வருட வாழ்வு எம்மக்களின் இன்பதுன்பங்களைச் சிறிய அளவிலேனும் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பிருந்தது. அந்த மன நிறைவும் இன்று அற்றுப்போய் நாளாந்தம் வரும் செய்திகள் பிரசுரிக்க முடியாத தகவல்களால் மன அழுத்தங்களுக்கு உள்ளாகி துயருறும் வாழ்வு தொடர்கிறது.

 

கடந்த ஒக்ரோபர் முதல் வாரத்திலிருந்து வடகிழக்கில் தொடரும் இன்றைய துயர் சூழ்நிலைகள் குறித்தும் தமிழ்த் தலைமைகளின் ஒற்றுமையீனங்கள் அரசியல் இருப்புக்கான சுயநலநடவடிக்கைகள்  உள்ளிட்ட நடப்பு விடயங்கள் பலவற்றை எனது நெருங்கிய சில அரசியல் முக்கியஸ்தர்களுடன் பேசி இனிமேல் யாருடனும் பேசமாட்டேன் எனத் தொலைபேசியை வைத்து ஒரு சில நாட்களில் அலுவலகக் கடமை நேரம் மயங்கி விழுந்து விட்டேன். 20 நிமிடங்கள் சுயநினைவற்று அம்புலன்சில் வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையின் பின் வீடு திரும்பினேன். ஆனால் சி. ரி. ஸ்கான் எடுப்பதற்கு நாள் குறித்தார்கள். ஒக்ரோபர் 22 சி.ரி. ஸ்கான் எடுக்கப்பட்டது. ஒக்ரோபர் 26இல் திடீரென தொலைபேசியில் பேசிய வைத்தியர் வார இறுதி நாளான 28 ஞாயிறு அன்று வைத்தியசாலையில் நீங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் எனக் கூறினார். அதிர்ந்து போனோம். ஒக்ரோபர் 28 ஞாயிறு தொலைபேசியில் சொன்னார்கள் இன்று பிற்பகல் 1 மணிக்கு அனுமதியாக வேண்டும் என்றார்கள். லண்டன் குயின்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன். தலையில் சிறிய ஒரு கட்டி இருப்பதாகச் சொல்லி அதுபற்றிய மேலதிக பரிசோதனைகளைச் செய்ய வேண்டும். அந்தக் கட்டி எதுவாகவும் இருக்கலாம். மனதைத் தைரியமாக வைத்திருங்கள் என்றார்கள்.

 

ஒருவாரமாக குயின்ஸ் வைத்தியசாலையில் உள்ள அனைத்து இயந்திரங்களிலும் போட்டு என்னைப் பரிசோதித்தும் என்ன கட்டி ஏன் வந்தது என்பதனை அறிய முடியவில்லை. ஓரளவுக்கு உயிர் மிஞ்சும் என்ற நம்பிக்கை வந்தது. பின்னர் நவம்பர் 7ல் திகதி குறிப்பிட்டு நவம்பர் 8ல் தலையில் இருந்த அந்தச் சிறிய கட்டியை சத்திர சிகிச்சை மூலம் அகற்றினார்கள். அதனைப் பரிசோதித்து அது தொற்றினால் ஏற்பட்டது அன்றிபயற்றிக் எடுத்தால் சரியாகி விடும் உயிருக்கு ஆபத்தில்லை  எனக் கூறி 4ஆவது நாள் வீட்டுக்கு செல்ல அனுமதித்தார்கள். இப்போ சிகிச்சை தொடர்கிறது. மீண்டும் ஒரு முறை மரணம் என்னை மன்னித்து விட்டதா இல்லை மரணத்தை வென்று விட்டேனா தெரியவில்லை. கடந்த 3 மாதங்கள் எம்மால் இயக்கப்படும் இணையங்கள் வானொலி என்பன தடையின்றி வழமைபோல் செயற்பட்டமையினால் என்னிலை பற்றி எவருக்கும் தெரியவில்லை தெரியப்படுத்தி அனுதாபம் தேட முற்படவும் இல்லை. என் வாழ்க்கைத் துணையின் தளராத உறுதியினால் அவை வழமைபோல் இயங்கின.

 

இப்போ காலம் கடந்து அதனை இங்கு கூறக் காரணம் முழுமையாக கணனியில் இருந்து தொடர்ச்சியாக முன்பு போல் கண்விழித்து வேலை செய்வது இன்னும்  கடினமாக உள்ளது. அதனால் பலவிடயங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாது இருக்கிறது. ஆனாலும் நமது தேசத்தில் நடக்கும் அநியாயங்களையும் அதற்கு துணை போகின்றவர்களையும் நினைக்க நெஞ்சு பொறுக்குதில்லை என்பதனால் இந்தக் குறிப்பை எழுதுகிறேன். சிலவேளை இலங்கையில் இருந்து இவற்றை எழுதியிருந்தால் தலையில் நடந்த சத்திரசிகிச்சையை காரணம் காட்டி இவருக்கு மண்டைப்பிழை என மனநல மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு ஒரு தமிழ் மனநல வைத்தியரை அணுகி சான்றிதழ் வாங்கி அனுமதித்திருப்பார்கள்.

 

காரணம் மனநல  வைத்தியர் சிவசங்கருக்கே மனநலம் பாதிக்கப்பட்டதாக வைத்தியர் ஒருவர் சான்றிதழ் வழக்கியிருக்கிறாராம். ஆனால் இந்தத் தகவல் கசிந்து வந்தவுடன் வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை அளிப்பதா? அல்லது வேறு பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவரை விசாரணை செய்வதற்காக தடுத்து வைப்பதா என்ற குழப்பத்தில் பாதுகாப்பு தரப்பும் தாளம் போடும் தமிழ்த் தரப்பும் குழம்பியிருக்கிறார்களாம். இப்போ மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் இவர் தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாகவும் வீட்டாருக்கு பார்வையிட அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

 

இந்தக் குறிப்பை எழுதி பிரசுரிக்க முற்பட்ட போது இந்தத் தகவல் வந்தடைந்தது. அதில் இலங்கைப் படையினர் புதிய கதை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

 

அநுராதபுர ரத்தவங்கியில் கடமையாற்றும் வைத்தியரும் உதயன் நாளிதழின் பத்தி எழுத்தாளருமான வைத்தியர் இரத்னசிங்கம் சிவசங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கிளிநொச்சியில் புதிதாக இராணுவத்தில் இணைக்கப்பட்டிருந்த பெண்களின் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தார் என்ற சந்தேகத்தின் பேரிலேயே பொலிஸார் இவரைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

 

புதிதாகப் படையணியில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமது உறவினரான யுவதி ஒருவர் தொடர்பிலேயே கிளிநொச்சி பாரதிபுரத்தில் உள்ள புதிதாகப் பெண்களை இராணுவத்திற்குச் சேர்த்த பகுதிக்குள் ஞாயிறன்று அத்துமீறி நுழைந்ததாக விசாரணைகளில் இருந்து அறிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

முகாமுள் நுழைந்த இவர் படையில் பெண்களை சேர்ப்பது குறித்து கேள்வியெழுப்பியதாகவும், இவரது அத்துமீறல் குறித்து சந்தேகம் கொண்ட படையினர் உயரதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தினர் என்றும் கூறப்படுகிறது. இதனப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்னர்.

 

ஆரம்ப கட்ட  விசாரணைகளில் முகாமுக்குள் அத்துமீறி நுழைந்த இவர் பொய்யான காரணங்களைக் காட்டிக்கொண்டு புதிதாகப் படையில் சேர்க்கப்பட்ட யுவதிகளின் பயிற்சிநெறியைக் குழப்புவதிலேயே குறியாக இருந்தார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இவர் முன்னதாக யாழ். வைத்தியசாலையிலும் கடமையாற்றி உள்ளார்.  

 

போலிக் காரணங்களைக் காட்டிக் கொண்டு முகாமுக்குள் அத்துமீறி நுழைந்ததாலேயே இவர் தடுத்து வைக்கபட்டு விசாரிக்கப்படுவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிககூ சூரிய தெரிவித்துள்ளார்.

 

தற்போது மாங்குள முகாமில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.  என்பது இராணுவம் எழுதிய புதிய கதை.

 

வைத்தியர் சிவசங்கரை எனக்கு நேரடியாகத் தெரியாது. முன்பும் நான் அறிந்திருக்கவும் இல்லை. ஆனால் அவரது கைதின் பின் அவர் பற்றிய தகவல்களை வேகமாகத் திரட்ட முற்பட்டேன்.  அவர் ஏறத்தாழ 30 வருடம் வைத்தியத் துறையில் கடமை புரிகிறார். அவர் மனநல வைத்தியத் துறையிலேயே புலமை பெற்றவர். மிகவும் நேர்மையானவர். அரசாங்க மருத்துவ சங்கத்தின் யாழ் கிளையின் முன்னாள் தலைவரும் கூட. அநியாயங்கள் நடந்தால் அதற்கு எதிராக குரல் கொடுக்கத் தயங்காதவர். தவறாக இருந்தால் யாராக இருந்தாலும் தனது கண்டனத்தை எதிர்ப்பை வெளியிட அவர் பின்னிற்பதில்லை. அதனால் கோபம் வரும் போது அதனை கட்டுப்படுத்த முடியாமல் சம்பந்தப்பட்டவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபடுவார் என்றெல்லாம் அவரது நண்பர்கள் சொல்கிறார்கள். அண்மைய காலங்களில் அவர் ஆன்மீகத் துறையில் கூடிய ஈடுபாடு கொண்டவராக இருந்திருக்கிறார்.

 

இவரது நேர்மையைப் பற்றி குறிப்பாக மகிந்த ராஜபக்ஸவின் நல்லிணக்கத்தில் மயங்கி சாமரம் வீசுபவர்களுக்கு சொல்வதானால் விடுதலைப் புலிகள் பலம் பெற்று விளங்கிய காலத்தில் ஈபீ ஆர் எல் எவ் இன் மத்திய குழு உறுப்பினராகவும் அவ்வியக்கத்தின் மிக முக்கியமானவராகவும் நான் உட்பட பலராலும் மதிக்கப்பட்டவருமான சுபத்திரன் விடுதலைப் புலிகளால் யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட போது அதனை வன்மையாகக் கண்டித்தவர் வைத்தியர் சிவசங்கர் என்பது பலருக்கு தெரியாத விடயம். அதற்கு எதிராக இவர் எழுதிய குறிப்பை அன்று யாழ் பத்திரிகைகள் வெளியிட மறுத்த போது தனது பணத்தைச் செலுத்தி விளம்பரமாக தனது குறிப்பை பிரசுரித்தவர் வைத்தியர் சிவசங்கர் என்பதனை இன்று அறிந்தேன்.

 

நண்பர் சுகு சிறீதரனுக்கு தெரியும் சுபத்திரனின் கொலை தொடர்பாக நான் கடமையாற்றிய வானொலியிலும் அவர்களது கட்சியினதும் ஏனையவர்களதும் கண்டன அறிக்கை உட்பட செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தலைப்புச் செய்திகளாக அவற்றை ஒலிபரப்பியது. ( இந்த வரலாறுகள் எவையும் கால் நுற்றாண்டுக்கு முன் புலம் பெயர்ந்து முள்ளிவாய்க்காலுக்குப் பின் ஜனநாயகத்தின் புதிய காவலர்களாக முளைத்தவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை)

 

புலிகள் பலமாக இருந்த போது நியாயத்திற்காக எப்படி வைத்தியர் சிவசங்கர் போராடினாரோ அதே மனநிலையில் தான் உண்மைக்காகவும் நியாயத்திற்காகவும் இப்போதும்  குரல் கொடுத்து வருகிறார்.

அதற்காக மனநல வைத்தியத் துறையில் இருந்தவரை இரத்தவங்கித் துறைக்கு மாற்றி அநுராதபுரத்திற்கு இடமாற்றம் செய்ய முடியுமா?

 

அண்மையில் அவர் எழுதிய கட்டுரைகளுக்காக ஆளுநர் சந்திரசிறியினால் எச்சரிக்கப்பட்டார். அதன் பின்னரும் அவர் அரசாங்கத்தை விமர்சித்து கட்டுரைகள் எழுதினார். ஒரு வைத்தியர் தனது கருத்தை ஜனநாயக பூர்வமாக தெரிவிப்பது பயங்கரவாதமா?

 

அண்மையில் இராணுவத்தில் இணைக்கப்பட்ட யுவதி ஒருவர் பரீட்சை எழுதுவதற்காக வீடு வந்திருந்தார். அவர் பரீட்சை முடிந்த பின்னர் மீண்டும் இராணுவத்திற்குச் செல்ல விரும்பவில்லை. அதனை அவர் இராணுவத்தினருக்குத் தெரிவித்த போது அவர்கள்  அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. உடனடியாக மீளவும் இணைந்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தினர். யுவதியின் நியாயத்தை படையினருக்கு எடுத்து விளக்க யுவதியின் பெற்றோர் வைத்தியர் சிவசங்கரை அணுகினர். அந்த யுவதிக்காகவும் அவரது பெற்றோர்களுக்காகவும் சிவசங்கர் இராணுவ முகாமுக்குச் சென்று பேசி இருக்கிறார். இராணுவத்தினரின் பொறுப்பற்ற பதில்கள் சிவசங்கரை எரிச்சலடையச் செய்ய அவர் அவர்களுடன் கடுமையாக வாக்குவாதப்பட்டார். சில மணி நேரங்களின் பின்னர் பெற்றோரையும் யுவதியையும் வீடு செல்ல அனுமதித்த படையினர் வைத்தியர் சிவசங்கரை தடுத்து வைத்து  தங்களுடன் கடுமையாக தர்க்கப்பட்டதைச் சாட்டாக வைத்து அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி பொலிஸாரிடம் கையளித்தார்கள். சிவசங்கர் மனநலம் பாதிக்கப்பட்டதற்கான அத்தாட்சிக் கடிதத்தை வடக்கில மனநலத்துறையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவரிடம் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

 

ஆக, இராணுவத்தனருடன் தர்க்கம் செய்தவர் மனநலம் பாதிக்கப்ட்டவராக ஆக்கப்பட்டிருக்கிறார்.

 

இவற்றையெல்லாம் மூடி மறைக்கும் அரச ஆதரவாளர்கள் இலங்கையில் நல்லிணக்கமும் சமாதானமும் மலர்கிறது தமிழ்த் தேசியவாதிகளும் புலி ஆதரவாளர்களும், புலம்பெயர்ந்தவர்களும், புலம்பெயர் இணையங்களும்தான் இலங்கையின் வடகிழக்கில் ஓடும் தேனைம் பாலையும் விசமாகக் காட்டுகிறார்கள் எனச் சொல்ல மனச்சாட்சி எப்படி இடம் கொடுக்கிறதுஎப்படி என்று தான் புரியவில்லை.

 

மறுபுறம் இலங்கையின் யதார்த்தத்தை புரிந்து கொள்ளாத தமிழ்த் தேசியப் பித்துப் பிடித்தவர்கள் சிலரும், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் எனத் தம்மை சொல்லிக் கொள்பவர்களும் தமிழ் மக்களின் விடுதலையை வியாபாரமாக்கியவர்களும் பரப்பும் பரபரப்புகளும் கிசுகிசுப்புகளும் இலங்கை அரசாங்கத்தின் அக்கிரமங்களுக்கு வாய்ப்பையும் வசதியையும் கொடுக்கும் என்பதனை ஏன் புரிந்து கொள்கிறார்கள் இல்லை?

 

புலி வருகிறது என்கிறார்கள். 5ஆம் கட்டப் போர் என்கிறார்கள். தனிநாடு என்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் புலிக்கொடி ஏற்றியது என்கிறார்கள். முல்லைத் தீவில் புலிக்கொடி பறக்குது என்கிறார்கள். நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டு படையினர் அதிர்ச்சி என்கிறார்கள். இந்த வீறாப்புகளை பற்றிப் பிடிக்கும் பாதுகாப்பு தரப்பு இவற்றிற்கு கை கால் மூக்கு வாய் வைத்து முழுப் புலியாக உருவாக்கி இப்போ இந்தியாவில் புலிகள் பயிற்சி கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். அதனால் வடகிழக்கில் இருந்து முகாம்களை அகற்ற முடியாது. இலங்கையின் பாதுகாப்புக்கு புலம்பெயர் புலிகள் தொடர்ந்து அச்சமூட்டுகிறார்கள் என்றெல்லாம் கூறி அடுத்த ஜனீவாவில் தப்புவதற்கான வியூகத்தை வகுக்கிறார்கள் என்பதனை ஏன் விளங்கிக் கொள்கிறார்கள் இல்லை?

 

20 வருடகால அகிம்சைப் போராட்ட வரலாறு 30 வருடகால ஆயுதப் போராட்ட வரலாற்றின் பின்பும் அரசியல் சாணக்கியம் அரசியல் ராஜதந்திரம் என்னவென்பதனை கற்றுக் கொள்ளா விட்டால் தயவு செய்து மகிந்தவிடம் சென்று கற்றுக் கொள்ளுங்கள். எதிரும் புதிருமான எத்தனை விதமான கட்சிகளையும் நபர்களையும் ஒரு அரசாங்கத்தில் வைத்துக் கொண்டு எதிர்க் கட்சிகளை சுக்குநூறாக்கி ஆட்சியைத் தொடர்கிறார் என்பதனையாவது பார்த்து திருந்துங்கள்.

 

உண்மையில் ஒட்டுமொத்த இலங்கையில் குறிப்பாக வடகிழக்கில் இப்போ சாப்பிடுவதற்கு வாய்திறப்பதாய் இருந்தாலும் அக்கம் பக்கம் பார்த்து வாய் திறக்கும் நிலைதான் இருக்கிறது. வன்னியில் வீட்டில் மகளின் பூப்புனித நீராட்டுவிழா நடத்துவதென்றால் படையினரிடம் அனுமதி கோர வேண்டிய நிலைதான் காணப்படுகிறது. சாந்தி முகூர்த்தத்திற்கும் அனுமதி கோர வேண்டும் என வன்னியில் இன்னும் படையினர் கோரவில்லை  என்பது மட்டும்  தான் இப்போதைக்கு உள்ள வெளி.

 

கடந்த சில நாட்களாக வடக்கில் பல்வேறு துறை சார்ந்தவர்களுடன் தொலைபேசியில் உரையாடினேன். அவர்கள் எல்லோரும் மன அழுத்தங்களால் துவண்டு போயிருக்கிறார்கள். பலருக்கு புலனாய்வுப் பிரிவினர் தொலைபேசியில் மறைமுகமாக அச்சுறுத்தி இருக்கிறார்கள். யார் யார் கதைக்கக் கூடியவர்களோ அவர்களின் வாய்களை பாதுகாப்பு தரப்பினர் அடைத்து வருகிறார்கள். பலர் மிக நெருக்கமாக முன்பு பேசுபவர்கள் தயவு செய்து இப்போ நாங்கள் பேச விரும்பவில்லை. தொலைபேசி எடுக்காதீர்கள் என்கிறார்கள். புலிகளின் காலத்தில் அவர்களின் ஜனநாயக மறுப்பு பற்றி பேசி இப்போதும் அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைக்கும் ஜனநாயக ஜாம்பவான்கள் வடகிழக்கில் நிலவும் இராணுவ அடக்குமுறை குறித்து மௌனித்திருப்பது ஏனோ?

 

இப்படி இருக்கையில் ஒரு சாரார் நல்லிணக்கம் சமாதானம் அபிவிருத்தி மீள் கட்டுமானம் என்கிறார்கள். இன்னொருசாரார் தலைவர் வருவார் 5ஆம் கட்டப் போர் வெடிக்கப் போகுது எல்லோரும் தயாராகுங்கள் என்கிறார்கள்.

 

அப்பாடா இந்த இரண்டு சாராரிடம் இருந்தும் நொந்து நூலாகிப் போயிருக்கும் இந்த மக்களை யார்தான் காப்பாற்றப் போகிறாரார்களோ?

 

முதலில் அனைவரும் இலங்கையின் குறிப்பாக வடக்கு கிழக்கின் உண்மை நிலைமைகளைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் வீரசாகஸங்களை கைவிடுங்கள். அங்கு முதலில் இழந்து போன ஜனநாயகத்தை மீட்பதற்காக குழுவாதங்களை விட்டு ஒன்று பட்டு; குரல் கொடுங்கள். வைத்தியர் சிவசங்கர் போன்ற நேர்மையானவர்களின் குரல்வளைகள் நசுக்கப்படுவதற்கு எதிராகப் போராடுங்கள். எழுதுங்கள். சர்வதேச மட்டங்களுக்கு இலங்கையின் ஜனநாயக மறுப்பை ஆதாரங்களுடன் எடுத்துக் கூறுங்கள். இதைப் புரிந்து கொள்ளாவிட்டால் எங்கள் கழுத்துக்கு நாங்களே தூக்குக் கயிற்றை மாட்டிய கதையாகி விடும். அப்போது எங்களுக்கு செய்வதற்கு எதுவுமில்லாது போய்விடும்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/87131/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

காட்டிக்கொடுக்கப்பட்ட மருத்துவர் சிவசங்கர் : பணநோய் மருத்துவர் சிவதாசனின் வாக்குமூலம்

 
 
 

அனுராதபுரத்தில் சுகாதார வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மருத்துவர் இ.சிவசங்கர் கைது செய்யப்பட்டு கொக்காவில் இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டதாக கிளிநொச்சியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இராணுவத்தில் பலவந்தமாக இணைத்துக் கொள்ளப்பட்ட கிளிநொச்சி உருத்திரபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சாதாரணதரப் பரீட்சை எழுதுவதற்காக வீடு சென்றுள்ளார். பரீட்சை முடிந்ததும் அவரை முகாமில் ஒப்படைக்குமாறு இராணுவத்தினர் வலியுறுத்தினர்.

 

எனினும் குறித்த பெண் தான் இராணுவத்தில் இருந்து விலகப் போவதாகப் பெற்றோருக்கு தெரிவித்ததை அடுத்து மருத்துவர் சிவசங்கரின் உதவியுடன் அவர்கள் கொக்காவில் இராணுவ முகாமுக்குச் சென்றுள்ளனர்.


எனினும் சட்டரீதியாக இராணுவத்தில் இருந்து விலக வேண்டும் எனில் ஒரு மாதகால அவகாசம் தேவை என இராணுவத்தினர் தெரிவித்ததால் பெண்ணின் விருப்பத்திற்கு இணங்க அவரை விடுதலை செய்யுமாறு சிவசங்கர் விவாதித்துள்ளார்.

 

இந்த இடத்தில் வைத்தியர்; சிவசங்கர் படையினருடன் கடுமையான தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அதனால் கோபம் அடைந்த படையினர் அவரைத் தடுத்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.

 

இதனைத் தொடர்ந்து குறித்த பெண்ணையும் பெற்றோரையும் வீடு செல்ல அனுமதித்த இராணுவத்தினர் மருத்துவர் சிவசங்கரைத் தடுத்து வைத்துள்ளனர். இந்த சம்பவத்தை குறித்த குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

 

இதேவேளை வைத்தியர் சிவசங்கர் படையினரை கடுமையாகத் திட்டினார் அவர்களை கட்டிப்பிடித்து முரண்டு பிடித்து வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார் எனக் கூறி பொலிஸாரிடம் கையளித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

இந்த நிலையில் சிவசங்கருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக மனநோய் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சிவசங்கரை அறிந்தவர்களுடன் தொடர்புகொண்டபோது அவருக்கு இதுவரை அப்படி எந்த நோய்களும் இருந்ததில்லை எனவும், இவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது என சான்றிதழ் வழங்கியவர் வைத்தியர் சிவதாசனே எனவும் குறிப்பிட்டனர்.

 

இதனைத் தொடர்ந்து சிவதாசனையே நேரில் தொடர்புகொண்டு கேட்டோம். அவரின் வாக்குமூலம் வருமாறு,
‘ஒரு வருடத்தின் முன்னர் டாக்டர் சிவசங்கரின் மனைவி தன்னைத் தொடர்புகொண்டு கணவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதாக முறையிட்டதாகவும், அதன் பின்னர் சிவசங்கரை தான் பார்வையிட்டு மருத்துவம் செய்ததாகவும் சிவதாசன் குறிப்பிட்டார். இராணுவம் கூறியது போன்று காண்பவர்களைக் கட்டியணைக்கும் ஒருவகையிலான மன நோயினால் அவர் பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். இந்த நிலையில் கடந்தவாரம் மருத்துவர் சிவசங்கர் குறித்துக் கேட்ட போது அவரை அறிந்திருந்த காரணத்தால் சிவசங்கர் மனநோயினால் பாதிக்கப்பட்டவர் என்று இராணுவத்தினருக்குச் சான்றிதழ் வழங்கினேன் என்றார்’

முன்னதாக கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இராணுவத்தில் பலவந்தமாக இணைத்துக்கொள்ளப்பட்ட பெண்கள் மன நோயினால் பாதிக்கபட்டிருந்தனர் என்று சான்றிதழ் வழ்கியவரும் சிவதாசனே.


அரச சார்பு ஊடகங்கள் சிவதாசனின் வாக்குமூலத்தை முன்வைத்து இராணுவத்தில் பெண்கள் பலவந்தமாக இணைத்துக்கொள்ளப்படவில்லை எனவும், இராணுவம் கூறுவது போல குறித்த மனநோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்றும் பிரச்சாரங்களை முடுக்கிவிட்டிருந்தன. வழமைபோல இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட பெண்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டது (பாலியல் வன்முறை கூட அல்ல) என்பதைக் கூட சிவதாசனதும் இராணுவத்தினரதும் தகவல்களை முன்வைத்து நிராகரித்த அரச ஆதரவுக் கும்பல்கள், பெண்கள் மீதான அரச பயங்கரவாதம் குறித்துப் பேசுவது கூடத் தவறானது என கூக்குரலிட்டன.

 

இலங்கை அரசுக்கு எதிராகக் குரலெழுப்புகின்ற அனைவரையும் புலிகள் என்றும், சுயநிர்ணய உரிமை குறித்துப் பேசுவது இனவாதம் என்றும், இராணுவம் நம்பத்தகுந்த வகையில் நடந்துகொள்கிறது என்றும், வட-கிழக்கிலிருந்து இராணுவம் வெளியேறத் தேவையில்லை என்றும் தொடர்ச்சியாகச் சூறையாடப்படும் தேசிய இனம் ஒன்றின் மீது தமது நலனுக்காக உளவியல் யுத்தம் நடத்தும் சமூகவிரோதிகள் எதிர்கொள்ளப்படவேண்டும்.

 

டாக்டர் சிவசங்கர் அண்மையில் வடமாகாண ஆளுனர் சந்திரசிறியினால் அவர் எழுதிய கட்டுரை ஒன்றிற்காக விசாரணைக்கு உட்படுத்தபட்டிருந்தார். எச்சரிக்கை உடனான விசாரணையாக அது இருந்தது எனச் சிவசங்கர் கூறியிருந்தார். அந்த விசாரணையின் பின்பும் சங்கரின் அடுத்த கட்டுரை பிரசுரமாகி இருந்தது.

 

மிக நேர்மையான துணிச்சல் மிக்க மருத்துவ அதிகாரியான சிவசங்கரின் கருத்துக்களே இராணுவத்தினரைப் பயமுறுத்துகிறது. புரட்சிக்காரனாக அரச ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்த சிவதாசன் மக்களைப் பயமுறுத்துகிறார்.


மக்களின் வரிப்பணத்தில் இலவசக் கல்விகற்ற சிவதாசன் போன்றவர்கள் எந்தக் குற்ற உணர்வுமற்ற அப்பட்டமான வியாபாரிகள். மருத்துவர்கள் அல்ல.

 

http://inioru.com/?p=32502

Edited by கிருபன்

இதனைத் தொடர்ந்து சிவதாசனையே நேரில் தொடர்புகொண்டு கேட்டோம். அவரின் வாக்குமூலம் வருமாறு,

‘ஒரு வருடத்தின் முன்னர் டாக்டர் சிவசங்கரின் மனைவி தன்னைத் தொடர்புகொண்டு கணவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதாக முறையிட்டதாகவும், அதன் பின்னர் சிவசங்கரை தான் பார்வையிட்டு மருத்துவம் செய்ததாகவும் சிவதாசன் குறிப்பிட்டார்.

 

இராணுவம் கூறியது போன்று காண்பவர்களைக் கட்டியணைக்கும் ஒருவகையிலான மன நோயினால் அவர் பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். இந்த நிலையில் கடந்தவாரம் மருத்துவர் சிவசங்கர் குறித்துக் கேட்ட போது அவரை அறிந்திருந்த காரணத்தால் சிவசங்கர் மனநோயினால் பாதிக்கப்பட்டவர் என்று இராணுவத்தினருக்குச் சான்றிதழ் வழங்கினேன் என்றார்’

 

முன்னதாக கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இராணுவத்தில் பலவந்தமாக இணைத்துக்கொள்ளப்பட்ட பெண்கள் மன நோயினால் பாதிக்கபட்டிருந்தனர் என்று சான்றிதழ் வழ்கியவரும் சிவதாசனே.

 

 

ஒட்டுக்குழுக்களில் வைத்தியர்கள் கூட உள்ளார்கள் என்பது எமதினத்தின் துர்ப்பாக்கியமே !

  • கருத்துக்கள உறவுகள்

சுபத்திரனை புலிகள் சுட்டுக்கொன்றதனை கண்டித்த சிவசங்கர் இராணுவ அராஜகத்தையும் இப்போ கண்டிக்கிறார்

 

இவர் தியாகியா துரோகியா??

Edited by sathiri

சுபத்திரனை புலிகள் சுட்டுக்கொன்றதனை கண்டித்த சிவசங்கர் இராணுவ அராஜகத்தையும் இப்போ கண்டிக்கிறார்

 

இவர் தியாகியா துரோகியா??

 

 நீங்கதான் புலானய்வு செய்து சொல்லனும்

  • கருத்துக்கள உறவுகள்
 நீங்கதான் புலானய்வு செய்து சொல்லனும்

 

 தியாகி துரோகி   தகுதி  வழங்கும்  வைபவங்கள்  அதுக்கென்று  பலர் இருக்கினம்  பட்டம் வழங்கும் வைபவங்களில்  நான் தலையிடுவது கிடையாது  அது புரியமல் தான்  கேக்கிறம்  :lol:

Edited by sathiri

சுபத்திரனை புலிகள் சுட்டுக்கொன்றதனை கண்டித்த சிவசங்கர் இராணுவ அராஜகத்தையும் இப்போ கண்டிக்கிறார்

 

இவர் தியாகியா துரோகியா??

 

என்ன விஷர் கதை கதை கதை கதைக்கிறீங்கள்?

 

சுபந்திரனை புலிகள் சுட்ட போது  மருத்துவர் மருந்து எடுத்தவர் ஆனால் இப்ப அவர்  தெளிவாகிவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

சுபத்திரன் ஒன்றும் மனிதவுரிமை வாதியோ அல்லது மக்களுக்காக உழைத்த பெருமானோ கிடையாது. இந்திய சிங்கள அரசுகளின் கைப்பாவையான வரதர் அணிக் கொலைக்கும்பலின் முக்கியஸ்த்தனே இந்த சுபத்திரன். அவனை புலிகள் போட்டார்கள். அரச அடக்குமுறையில் இருந்துவரும் யாழ்ப்பாணத்து வைத்தியரான சிவசங்கருக்கு அப்போதிருந்த அழுத்தங்கள் காரணமாக சுபத்திரன் எனும் கொலையாளிக்கு சிவசங்கரால் அனுதாப அஞ்சலி எழுத முனையப்பட்டதும், ஆனால் யாழ் பத்திரிக்கைகள் அதைப் பிரசுரிக்க மறுத்ததும்தான் உண்மை. அதே சிவசங்கர்தான் இன்று சிங்கள இராணுவ அடக்குமுறைக்கெதிராகவும் குரல் கொடுக்கிறார். ஆனால் இது அழுத்தத்தினால் இல்லாமல் உண்மையான உணர்வினால் என்றுதான் நான் நினைக்கிறேன். அவரைத் தியாகியாக்குவதும், துரோகியாக்குவதும் அவரவர் தேவையைப் பொறுத்தது.

சுபத்திரன் ஒன்றும் மனிதவுரிமை வாதியோ அல்லது மக்களுக்காக உழைத்த பெருமானோ கிடையாது. இந்திய சிங்கள அரசுகளின் கைப்பாவையான வரதர் அணிக் கொலைக்கும்பலின் முக்கியஸ்த்தனே இந்த சுபத்திரன். அவனை புலிகள் போட்டார்கள். அரச அடக்குமுறையில் இருந்துவரும் யாழ்ப்பாணத்து வைத்தியரான சிவசங்கருக்கு அப்போதிருந்த அழுத்தங்கள் காரணமாக சுபத்திரன் எனும் கொலையாளிக்கு சிவசங்கரால் அனுதாப அஞ்சலி எழுத முனையப்பட்டதும், ஆனால் யாழ் பத்திரிக்கைகள் அதைப் பிரசுரிக்க மறுத்ததும்தான் உண்மை. அதே சிவசங்கர்தான் இன்று சிங்கள இராணுவ அடக்குமுறைக்கெதிராகவும் குரல் கொடுக்கிறார். ஆனால் இது அழுத்தத்தினால் இல்லாமல் உண்மையான உணர்வினால் என்றுதான் நான் நினைக்கிறேன். அவரைத் தியாகியாக்குவதும், துரோகியாக்குவதும் அவரவர் தேவையைப் பொறுத்தது.

 

 ந்ல்ல ஒரு விளக்கம் ஆனால் ஒன்று மட்டும் புரியவில்லை

அது எப்படி சிவசங்கரனுக்கு அழுத்தம் கொடுத்து  எழுதப்பட்ட   அனுதாப அஞ்சலியை  பத்திரிக்கைகளுக்கு அழுத்தம் கொடுத்து வெளியிடப்படமுடியவில்லை? இராணுவ கட்டுப்பாட்டில்  பத்திரிக்கைக்கு முழுச் சுதந்திரம் இருந்ததா?

 

சரி சிவசங்கரனால் காசுகொடுத்து விளம்பரமாக  வெளிவரும் போது மட்டும் பத்திரிக்கைகள் காசுக்காக விபச்சரமோ செய்தவை? 

சுபத்திரன் ஒன்றும் மனிதவுரிமை வாதியோ அல்லது மக்களுக்காக உழைத்த பெருமானோ கிடையாது. இந்திய சிங்கள அரசுகளின் கைப்பாவையான வரதர் அணிக் கொலைக்கும்பலின் முக்கியஸ்த்தனே இந்த சுபத்திரன். அவனை புலிகள் போட்டார்கள். அரச அடக்குமுறையில் இருந்துவரும் யாழ்ப்பாணத்து வைத்தியரான சிவசங்கருக்கு அப்போதிருந்த அழுத்தங்கள் காரணமாக சுபத்திரன் எனும் கொலையாளிக்கு சிவசங்கரால் அனுதாப அஞ்சலி எழுத முனையப்பட்டதும், ஆனால் யாழ் பத்திரிக்கைகள் அதைப் பிரசுரிக்க மறுத்ததும்தான் உண்மை. அதே சிவசங்கர்தான் இன்று சிங்கள இராணுவ அடக்குமுறைக்கெதிராகவும் குரல் கொடுக்கிறார். ஆனால் இது அழுத்தத்தினால் இல்லாமல் உண்மையான உணர்வினால் என்றுதான் நான் நினைக்கிறேன்.

 

அவரைத் தியாகியாக்குவதும், துரோகியாக்குவதும் அவரவர் தேவையைப் பொறுத்தது.

 

  பலவந்தமாக இராணுவத்தில் இணைக்கப்பட்ட பெண்ணை காப்பாற்ற முனைந்து இன்று சித்திரவதைகளை அனுபவிக்கும் ஒரு வைத்தியர். சுகமாக வெளிநாடு போய் வாழும் என்னுடன் ஒப்பிடும்பொழுது - இவர் எனது பார்வையில் ஒரு தியாகியே.

  பலவந்தமாக இராணுவத்தில் இணைக்கப்பட்ட பெண்ணை காப்பாற்ற முனைந்து இன்று சித்திரவதைகளை அனுபவிக்கும் ஒரு வைத்தியர். சுகமாக வெளிநாடு போய் வாழும் என்னுடன் ஒப்பிடும்பொழுது - இவர் எனது பார்வையில் ஒரு தியாகியே.

 

என்னுடன்  இன்று ஓப்பிடும் பொழுது தியாகி ஆனால்  அன்று அவர்  என்னுடன் ஒப்பிடும் பொழுது துரோகி.

இந்த வைத்தியரை போன்று டக்லசும், கருணாவும், பிள்ளையானும் ... மாற மாட்டார்கள்.

இந்த வைத்தியரை போன்று டக்லசும், கருணாவும், பிள்ளையானும் ... மாற மாட்டார்கள்.

 

மாறமாட்டார்கள் என்று தான் நினைக்கிறேன்.

கருணா மறுவதுக்கான சந்தர்பம் இல்லை என  உறுதியாக சொல்லாம்  என் எனில் கருணாவை வளர்த்து இந்த நிலைக்கு கொண்டு வந்த புண்ணியம் புலிகளையே சாரும்.

 

டக்கிளஸ்  திருந்துவதுக்கான சந்தர்ப்பம் இருக்கு( உ+ம்) சுரேஸ் பிரேமச்சந்திரன் , செல்வம் அடைக்கலநாதன்)

மாறமாட்டார்கள் என்று தான் நினைக்கிறேன்.

கருணா மறுவதுக்கான சந்தர்பம் இல்லை என  உறுதியாக சொல்லாம்  என் எனில் கருணாவை வளர்த்து இந்த நிலைக்கு கொண்டு வந்த புண்ணியம் புலிகளையே சாரும்.

 

டக்கிளஸ்  திருந்துவதுக்கான சந்தர்ப்பம் இருக்கு( உ+ம்) சுரேஸ் பிரேமச்சந்திரன் , செல்வம் அடைக்கலநாதன்)

 

traitors-kp-dauglas-karuna-pillaiyaan-ma

புலிகளின் தலைவர்கள் படம் போட்டு இருக்கிறீயல் :lol:biggrin.png:D

மகிந்த அரசு மார்ச் மாதத்துக்கு முன்பாக டக்ளஸ் அல்லது கருணாவை அல்லது இருவரையுமே மறைந்திருந்து கொலைசெய்து விட்டு அதனை புலிகள் மீது சுமத்த தயாராகி வருவதாக இணையத்தள செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. அதைத் தவிர வேறு வழியேதும் அரசுக்குத் தெரியவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

கருணா பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவைக் கொலை செய்ததின் பின்பே பிரதி அமைச்சராகும் தகுதியைப் பெற்றார். ஆனால், இப்போது மாத்திரமல்ல இனிமேலும் தமக்குப் பயன்பட மாட்டார் என மகிந்த முடிவெடுத்து விட்டாராம். அப்படியானால் கருணா விரைவில் கொல்லப்பட்டு விடுவாரா?

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=114049

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது என்னதான் சொல்ல வருகிறீர்கள்? சிவசங்கர் உண்மையாகவே மன்நோயினால் பதிக்கப்பட்டிருக்கிறார், அதனால்த்தான் அவர் இராணுவத்தின் மேல் அபாண்டமாகக் குற்றம் சுமத்துகிறார் என்றா?? உங்கள் புலியெதிர்ப்பு என்பது எது எதுக்கெல்லாம் பாவிக்கப்பட வேணும் என்கிற விவஸ்த்தை இல்லையா?? அவர் கைதுசெய்யப்பட்டது பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால்த்தான் என்று சிங்கள இராணுவப் பேச்சாளர் பத்திரிகையாளர் மாநாட்டில் கூறியபின்னரும் கூட அவரை மனநோயாளி என்று நீங்கள் சாதிக்க விரும்புவதன் நோக்கமென்ன? அன்று சுபத்திரன் கொல்லப்பட்டதற்கும் கண்டனம் தெரிவிக்கிறார், இன்று பெண்களை இராணுவத்தில் சேர்த்ததற்கும் கண்டனம் தெரிவிக்கிறார், ஆகவே இவர் தியாகியா துரோகியா என்று நீங்கள் ஆராய்ச்சி செய்வதன் நோக்கமென்ன? புலிகள் சுபத்திரனைப் போட்டபோது அவர் செய்தது சரி, ஆனால் இராணுவத்தில் தமிழ்ப்பெண்களைச் சேர்த்தபோது இவர் செய்ற்பட்ட விதம் தவறு என்று நிறுவுவதுதானே உங்கள் நோக்கம்? உங்களின் கருத்துக்களைத் தொடர்ந்து வாசித்தே வருகிறேன். எதற்கெடுத்தாலும் குதர்க்கமாகவும் விதண்டாவாதமாகவும் எழுதுகிறீர்கள். இதனால் எதை அடைய விரும்புகிறீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் உங்கள் கருத்துகளூடே நான் புரிந்துகொள்ள முடிந்ததெல்லாம், புலிகள் கெட்டவர்கள், அவர்கள் செய்ததெல்லாம் தவறு, அதேபோல் அவர்களின் அழிவிற்குப் பின்னரும் கூட, அவர்களின் பின்னாலிருப்பவர்கள் செய்துவருபவையும் தவறு......... சரி, உங்களின் பார்வையில் இன்று சரியானவர்கள் யார்? சிங்கள அரசும் அதன் இராணுவமுமா?? அல்லது மாற்றுக்குழுக்களா?? அல்லது எவருமில்லையா?? பெரும்பான்மையினரோடு முரண்படுவதுதான் உங்களின் நோக்கமென்றால், உங்கள்போல இன்னும் சிலர் இங்கே இருக்கிறார்கள். எது நடந்தாலும் புலிகளையோ அல்லது இன்றியங்கும் தமிழ்த்தேசிய அமைப்புக்களையோ குறை கூறுவது. எவரையுமே சந்தேகக் கண்கொண்டு பார்ப்பது.எது நடந்தாலும் குறை பிடிப்பது. ஆனால் உங்களின் இந்த மாற்றம் அண்மையில்த்தான் ஏற்பட்டதென்பதும் எனக்குத் தெரியும். 2009 இற்கும்முன்னரான உங்கள் கருத்துக்களை வாசித்தவன் என்கிற முறையில் இவற்றை எழுதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கருணா, பிள்ளையான், கே.பீ போன்றவர்கள் புலிகளின் தலைவர்களாக ஒரு காலத்தில் இருந்தவர்கள்தான், ஆனால் தொடர்ந்தும் புலிகளின் தலைவர்கள் எனும் தகுதியைத் தக்கவைத்துக்கொள்ள அருகதையிழந்தவர்கள். ஒருகாலத்தில் புலிகளியக்கத்தில் இருந்தார்கள் என்பதற்காக அவர்கள் என்ன செய்தாலும் புலிகளின் பெயரைப் பாவிப்பதில் (அவர்களுக்கு அந்த விருப்பமிருந்தாலும் கூட)அவர்களுக்குத் தகுதியில்லை. முகம்மத் அலி ஜின்னா கூட ஒருகாலத்தில் இந்திய சுதந்திரத்திற்காக மகாத்மா காந்தியுடன் பாடுபட்டவர், ஆனால் அவரேதான் சுதந்திரப் பாக்கிஸ்த்தான் வேண்டுமென்று இந்தியாவைத் துண்டாடவும் போரிட்டவர். ஒருகாலத்தில் அவர் இந்தியச் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டார் என்பதற்காக யாரும் அவரை இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர் என்றோ, இந்தியத் தலைவர் என்றோ அழைப்பதில்லை. அதுபோலவே இன்னால் முஸ்லிம் காங்கிரஸ் கூட முன்னர் தமிழர் ஐக்கிய விடுதலை முண்ணனியோடு சேர்ந்து தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைக்காகப் பாடுபட்டவர்கள். ஆனால் நாளடைவில் முஸ்லீம்களுக்கான தனியலகு கோரியதுடன் தமிழர் போராட்டம் நலிந்துபோகச் சிங்களத்துடன் கூட்டும் சேர்ந்தார்கள். ஒருகாலத்தில் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்தார்கள் என்பதற்காக அவர்களை தமிழர்கள் தங்கள் தலைவர்கள் என்று கூறுவதில்லை. காரணம் அவர்கள் தற்போது நடந்துகொள்ளும் முறையிலிருந்தே அவர்களுக்கான தகமை கணிக்கப்படுகிறது. அதுபோலவே கருணா, பிள்ளையான், கே.பீ போன்றவர்களும். அவர்கள் ஒருகாலத்தில் புலிகள் இயக்கத்தில் இருந்தார்கள் என்பதற்காக அவர்கள் இன்று செய்துவருபவற்றை மறந்து அவர்களை இன்னும் புலிகள் என்று ஏற்றுக்கொள்ள தமிழர்கள் தயாரில்லை. குறிப்பாக ஒருவர் சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவர் எனும் பெயரையும், இன்னொருவர் கிழக்கு மாகாண அமைப்பாளர் எனும் பெயரையும், மூன்றாமவர், நேர்டோ எனும் சிங்கள ஆக்கிரமிப்பு அரசின் அமைப்பை நடத்துவபவர் எனும் பெயரையும் அலங்கரித்த பின்னரும் கூட அவர்களப் புலிகளின் தலைவர்கள் என்று நீங்கள் விழித்தது வெறும் விதண்டாவாதமேயன்றி வேறில்லை. மீண்டும் உங்களின் அதே...பெரும்பான்மையினரோடு முரண்படு....பாணி தெரிகிறது.

Edited by ragunathan

தூபமிட்டு வேடிக்கை பார்க்கும் கூட்டங்கள் அதிகரித்துவிட்டது.

 

நக்கல் நையாண்டி இதுதான் இவர்களின் வேலைகள்.

 

அதற்கு புலி இவர்களுக்குத் தேவை.

எல்லாரும் ஒன்றை நினைக்கணும்
"கருணா, பிள்ளையான், கே.பீ" போனதோட எங்கட போராட்டமும் போயிட்டுது (அல்லது மௌனித்து விட்டது)...
என்றபடியால் நான் நினைக்கிறேன் அவர்களில் தான் எல்லாமே தங்கி இருந்து இருக்கின்றது...
கருணாவும், KP யும் எப்படி இவ்வளவு முக்கிய்மானார்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.