Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசிய அதிபர் மாளிகையில் தமிழ்..! தமிழில் "கிரெம்ளின் மாளிகை"..!!

Featured Replies

 

553171_457239424336426_275947874_n.jpg
தமிழில் "கிரெம்ளின் மாளிகை" (ரசிய அதிபர் மாளிகை )

ரசிய அதிபர் மாளிகையில் தமிழ்!

தமிழில் பேசுவதற்கும் எழுதுவதற்கும் நாம் நிறைய சிந்தித்துக்கொண்டிருக்கிறோம். அந்த அளவுக்கு தமிழ் பேச்சும் எழுத்தும் நம்மை அவமானப்படுத்துவதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

... 

ஆனால் தமிழுக்குத் தொடர்பே இல்லாத ரசிய நாடு தமிழைக் கொண்டாடுகிறது. அங்கிருக்கும் அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகு தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய்மொழியான ரசியத்திலும், இரண்டாவதாக அண்டைநாட்டு மொழியான சீனத்திலும், உலகத் தொடர்புமொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும், நான்காவதாக தமிழிலும் எழுதியிருக்கிறார்கள்.

தமிழைவிட எத்தனையோ உலகமொழிகள் பெரும்பாலான மக்களால் பேசபடுகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தமிழ்மொழியில் அதிபர் மாளிகையின் பெயரை எழுதியதற்கு அவர்கள் கூறும் காரணம் , தமிழர்களாகிய நம்மைச் சிந்திக்க வைப்பதாக உள்ளது.

"உலகில் ஆறு மொழிகள்தான் மிகவும் தொன்மையானவை. அவை கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீனம், தமிழ்,சமற்கிருதம். இந்த ஆறு மொழிகளில் நான்குமொழிகள் இன்று வழக்கில் இல்லை.

இலக்கிய, வரலாற்று செழுமையான மொழி. எங்களுக்கு உலகில் உள்ள முக்கிய மொழிகளான 642 மொழிகளிலும் சரியான, தகுதியான மொழியாக "தமிழ் மொழி "தென்பட்டது. அந்த மொழியைச் சிறப்பிக்கவே "கிரெம்ளின் மாளிகை" என தமிழில் எழுதினோம்" என்று கூறுகிறார்கள்.

வெளிநாட்டினருக்குக் கூட தமிழின் அருமை பெருமை தெரிந்திருக்கிறது. நமக்குத்தான் தெரியவில்லை..

வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு கூட நம் தமிழின் பெருமை தெரிந்து உள்ளது. ஆனால் நாமோ'தமிழில் எழுதுங்கள் என்பதற்கு ஒரு கருத்தரங்கம் நடத்திக்கொண்டு இருக்கிறோம்'.

553171_457239424336426_275947874_n.jpg

நன்றி முக நூல்

பகிர்விற்கு நன்றிகள்.

 

தமிழ் ஒரு  வர்த்தக மொழியானால் அது மேலும் வளரும், சிறக்கும்.

தம் பிள்ளைகள் தம்மை மம்மி டாடி என்று அழைக்கும் போது அக மகிழும் ரமில்ஸ் இதனை ஒருக்கால் அறிய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றிகள்.

பகிர்வுக்கு நன்றி. :)

536137_387353478025072_1948675420_n.jpg
நல்ல தமிழ்ப் பெயர்களை பிள்ளைகளுக்கு சூட்டுவோம். தமிழர் என்று தரணியில் தலை நிமிர்ந்து வாழ்வோம்

"எகிப்தில் தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டு பிடிப்பு"
=====================
த‌மிழ் பிராமி லிபிக‌ள் பொறிக்க‌ப்ப‌ட்ட‌ ஓர் உடைந்த‌ சாடியொன்று எகிப்தில் க‌சீர் அல் க‌டீம் எனும் செங்க‌ட‌லின் க‌ரையோர‌ம் அமைந்துள்ள‌ ப‌ழ‌ங்கால‌ ரோமானிய‌ர்க‌ளின் வ‌சிப்பிட‌த்தில், அக‌ழ்வாராய்ச்சியின் மூல‌ம் க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு வ‌ழி இவ்வெழுத்துக‌ள் கி.மு முத‌லாம் நூற்றாண்டைச் சார்ந்த‌வையாக‌ இருக்கும் என‌வும் இது ஒரு ம‌கிழ்ச்சியூட்டும் க‌ண்டுபிடிப்பு என‌வும் வேதியிய‌லாள‌ர்க‌ள் கூறுகிறார்க‌ள்.

 

இத்த‌மிழ் பிராமி லிபிக‌ள் சாடியின் இருபுற‌த்தில் இருமுறை பொறிக்க‌ப்ப‌ட்டு காட்சிய‌ளிக்கின்ற‌ன‌. பொறிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ எழுத்துக‌ள் 'பானை ஒரி' (பானையை தொங்க‌விடுவ‌த‌ற்காக‌ க‌யிற்றால் நெய்ய‌ப்ப‌ட்ட‌ வ‌லை)எனும் அர்த்த‌ங்க‌ளைக் கொண்டிருக்கின்ற‌ன‌. பிரிட்ட‌னில் உள்ள‌ 'ச‌வுத்தாம்த‌ன் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தைச் சார்ந்த‌ தொல்பொருளாராய்ச்சிக் குழுவில் அட‌ங்கிய‌ பேராசிரிய‌ர் டீ.பீகோக்கு ம‌ற்றும் முனைவ‌ர் எல்.புளூ ஆகியோர், அண்மையில் எகிப்திலுள்ள‌ க‌சீர் அல் க‌டீம் எனும் ப‌ழமைவாய்ந்த‌ இட‌த்தில் அக‌ழ்வாராய்ச்சிப் ப‌ணிக‌ளில் ஈடுப‌ட்டிருக்கும்பொழுது, ப‌ழ‌ங்கால‌ எழுத்துக்க‌ள் பொறிக்க‌ப்ப‌ட்ட‌ உடைந்த‌ சாடியைக் க‌ண்டெடுத்துள்ள‌ன‌ர்.


இல‌ண்ட‌னில் அமைந்துள்ள‌ பிரிட்டிசு அருங்காட்சிய‌க‌த்தில் ப‌ழ‌ங்கால‌ பானை,க‌ல‌ன்க‌ள் குறித்த‌ ஆராய்ச்சியில் நிபுண‌த்துவ‌ம் வாய்ந்த‌ முனைவ‌ர் ரோபேர்த்தா தோம்பேரு, க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்ட‌ இவ்வுடைந்த‌ சாடி இந்தியாவில் த‌யாரிக்க‌ப்ப‌ட்ட‌தென்றும், இச்சாடி கொல்க‌ல‌ன் வ‌கையைச் சார்ந்த‌து என‌வும் அடையாள‌ம் க‌ண்டுபிடித்துள்ளார்.

 

தொல்லிய‌ல் நிபுண‌ரான‌ ஐராவ‌த‌ம் ம‌காதேவ‌ன், க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்ட‌ சாடியில் பொறிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ எழுத்துக‌ள் கி.மு ஒன்றாம் நூற்றாண்டின் த‌மிழ் பிராமி லிபி வ‌கையை சார்ந்த‌வை என‌ அறுதியிட்டுக் கூறுகிறார். இக்கூற்றிற்கான‌ ஆதார‌ங்க‌ளை திர‌ட்டுவ‌தில் அவ‌ர், பாண்டிச்சேரியில் அமைந்துள்ள‌ பிரென்சு க‌ல்வி க‌‌ழ‌க‌த்தில் ப‌ணியாற்றும் மொழியிய‌ல் நிபுண‌ரான‌ பேராசிரிய‌ர் சுப்ப‌ராயுலு, புதுச்சேரியில் அமைந்துள்ள‌ ம‌த்திய‌ ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தில் ப‌ணியாற்றும் பேராசிரிய‌ர் கே.இராச‌ன், ம‌ற்றும் த‌ஞ்சாவூர் த‌மிழ்ப் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தின் பேராசிரிய‌ர் வீ.செல்வ‌குமார் போன்றோரின் நிபுண‌த்துவ‌ங்க‌ளை உத‌வியாக‌ப் பெற்றுள்ளார்.


அக‌ழ்வாராய்ச்சியில் க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌ சாடியில் பொறிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ எழுத்துகள் 'பானை ஒரி' என‌ ஒலிப்ப‌தாக‌வும், 'ஒரி' எனும் சொல் த‌மிழில் 'உரி' (க‌யிற்றில் நெய்ய‌ப்ப‌ட்ட‌ வ‌லை) என அழைக்க‌ப்ப‌டுவ‌தாக‌வும், அது ம‌ருவி 'ஒரி' என‌ ப‌ர்சி எனும் ம‌த்திய‌ திராவிட‌ மொழியில் இன்று வ‌ழ‌க்கில் இருப்ப‌தாக‌வும் திரு.ம‌காதேவ‌ன் தெரிவித்தார். த‌ற்கால‌த்தில் க‌ன்ன‌ட‌ மொழியில் 'ஒட்டி' என‌ புழ‌ங்கிவ‌ரும் சொல் 'ஒர்ரி' எனும் சொல்லின் ம‌ருவ‌லாக‌ இருக்க‌க் கூடும் என‌ அவ‌ர் தெரிவித்தார்.

 

க‌சீர் அல் க‌டீமில் க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்ட‌ சாடியில் பொறிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ த‌மிழ் பிராமி எழுத்துக்க‌ளை 'ஒர்ரி' என‌வும் வாசிக்க‌லாம், ஆனால் பெரும்பாலும் த‌மிழ் பிராமி லிபியை பொறுத்த‌ம‌ட்டில் ஒரே வித‌மான‌ ஒலிக‌ளை இர‌ட்டிப்புப் செய்யாது என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.


இதேப் போன்ற அக‌ழ்வாராய்ச்சியொன்று க‌சீர் அல் க‌டீமில் 30 ஆண்டுக‌ளுக்கு முன்பு ந‌ட‌த்த‌ப்பெற்று, த‌மிழ் பிராமி லிபிக‌ள் பொறிக்க‌ப்ப‌ட்ட‌ கி.பி முத‌லாம் நூற்றாண்டைச் சார்ந்த‌ இர‌ண்டு சாடிக‌ள் க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌..

 

இதேப் போன்ற‌ த‌மிழ் பிராமி லிபிக‌ள் பொறிக்க‌ப்ப‌ட்ட‌ சாடிக‌ள் 1995ஆம் ஆண்டில் எகிப்தின் செங்க‌ட‌ல் க‌ரையோர‌ம் அமைந்துள்ள‌ பெரேனிக்கே எனும் ப‌ழ‌ங்கால‌ ரோமானிய‌ர்க‌ளின் குடியிருப்புப் ப‌குதியில் க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌ திரு.ம‌காதேவ‌ன் கூறினார்.

மேற்கத்திய‌ இல‌க்கிய‌ங்க‌ளிலும், த‌மிழ் ச‌ங்க‌ கால‌ இல‌க்கிய‌ங்க‌ளிலும் குறிப்பிட்டுள்ள‌துபோல‌ ரோமானிய‌ர்க‌ளுக்கும் த‌மிழ‌ர்க‌ளுக்கும் செங்க‌ட‌ல் வ‌ழி வ‌ணிக‌த் தொட‌ர்பான‌து நூற்றாண்டின் ஆர‌ம்ப‌க் கால‌க்க‌ட்ட‌த்திலேயே கொடிக்க‌ட்டி ப‌ற‌ந்த‌தை இத்த‌கு க‌ண்டுபிடிப்புக‌ள் ஆதார‌ப்பூர்வ‌மாக‌ நிரூபித்துள்ள‌ன‌.

 

'திரைக‌ட‌ல் ஓடியும் திர‌விய‌ம் தேடு' என்று சும்மாக‌வா கூறினார்க‌ள் ந‌ம் முன்னோர்க‌ள்.. வெறும் வெற்றிலையை வாயில் போட்டு மென்று, திண்ணையில் வேலை வெட்டி இல்லாம‌ல் அம‌ர்ந்துக் கொண்டு கூறிய‌ ப‌ழ‌மொழிய‌ல்ல‌ இது.

 

அனுப‌வ‌ப்பூர்வ‌மாக‌வே சாதித்துக் காட்டியிருக்கிறார்க‌ள் ந‌ம் முன்னோர்க‌ள்.


வாழ்க‌ த‌மிழ‌ர்.. வ‌ள‌ர்க‌ அவ‌ர்த‌ம் மாண்பு..!

 

541996_241058556026286_1777669671_n.jpg

59946_241055682693240_267350190_n.jpg

75354_241054706026671_1173700041_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

59946_241055682693240_267350190_n.jpg

 

பார்க்கச் சரியாக உள்ளது. இது, தற்செயலாக நடந்ததா? ஆராய்ச்சிகளின் முடிவா என்பது தெரியவில்லை.

இப்படியான விடயங்களை, தமிழாராய்ச்சி மாநாடுகளின் மூலமும், யாழ்ப்பாண, தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்கள் மூலமும் உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும்.

536137_387353478025072_1948675420_n.jpg
நல்ல தமிழ்ப் பெயர்களை பிள்ளைகளுக்கு சூட்டுவோம். தமிழர் என்று தரணியில் தலை நிமிர்ந்து வாழ்வோம்

 

 

நல்ல தமிழ் பெயர் இருந்தாலும் தம்மை பெயரை மாற்றுகின்றானர், வேலை எடுப்பதற்காக. என்ன செய்ய இவர்களை?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.