Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போயிங் 787 ட்றீம்லைனரின் மவுசு சரிகிறது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

_65350013_dreamliner.jpg

 

உலகில் காபன் இழைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட எடைகுறைந்த அதி நவீன போக்குவரத்து விமானம் என்று கருதப்படும்.. போயிங் இன்.. ட்றீம்லைனர் எனப்படும்.. போயிங் 787 விமானங்கள் அனைத்தும்.. ஐரோப்பிய - அமெரிக்க - ஜப்பானிய விமான சேவையினரால்.. தரைப்படுத்தப்பட்டுள்ளதுடன் சேவையில் இருந்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

 

Who owns Dreamliners?

  • Air India: 6
  • All Nippon Airways (Japan): 17
  • Ethiopian Airlines: 4
  • Japan Airlines: 7
  • LAN Airlines (Chile): 3
  • Lot Polish Airlines: 2
  • Qatar Airways: 5
  • United Airlines (US): 6
  • Total: 50

Source: Boeing

 

இவ்விமானங்களை இந்தியா ஜப்பான் அமெரிக்கா உட்பட பல நாடுகள் பாவித்து வரும் நிலையில்.. இந்த வகை விமானங்களில் 50 பாவனையில் உள்ள நிலையில்.. அண்மையில் அவற்றில் இனங்காணப்பட்ட பல்வேறு குறைபாடுகளின் நிமித்தம் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

இவ்விமானத்தின் உச்சி முதல் பாதம் வரை பிரச்சனைகள் இனங்காணப்பட்டுள்ளன. இவை மேலும் சரிவர இனங்காணப்பட்டு.. திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு.. பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே இவை மீண்டும் வானில் பறக்கும் ஏது நிலைகள் தோன்றி உள்ளன.

 

அந்த வகையில்.. இவ்வகையான விமானங்களில் பயணிப்பதை பயணிகள் தவிர்ப்பது இப்போதைக்கு நன்று ஆகும்.

 

graphic_1358339720.jpg

 

Fuel tanks

Electronics

Engines

Brakes

Cockpit

 

http://www.bbc.co.uk/news/business-21054089

 

http://en.wikipedia.org/wiki/Boeing_787_Dreamliner

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனியில் இன்று பல வானொலிகளில் இதுவும் முக்கிய செய்தியாக இருந்தது....ஐரோப்பிய தயாரிப்பான Airbus ரகங்கள் முன்னணியில் நிற்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

 

13010-Airbus-A380-Familientag.jpg

போயிங் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளை விரைவில் சரிசெய்து மீண்டும் நற்பெயரை பெறும். ஆனால், அதற்கு சில காலம் எடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

we will come back!

  • கருத்துக்கள உறவுகள்

Ethiopia ட்ட கூட dream liner இருக்கு ஆனா தெற்காசிய வல்லரசு இலங்கையிட்ட :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போயிங் நிறுவனம் எல்லா புதிய தயாரிப்பு..  787 விமான விநியோகங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது. குறிப்பாக பற்றரி பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணும் வரை..!

 

Dreamliner crisis: Boeing halts 787 jet deliveries.

 

_65336772_159184364.jpg
 
US safety officials earlier joined an investigation into the Dreamliner
 

Boeing has suspended deliveries of its new 787 Dreamliner aircraft until a battery problem is resolved.

 

http://www.bbc.co.uk/news/business-21095056

Edited by nedukkalapoovan

விமான போக்குவரத்துக்கு பாதுகாப்பானதாக அமைதல் வேண்டும்!

அமெரிக்காகாரன் ஜரோப்பியர் மீது பொறாமை கொண்டு, இல்லாத பொய்யை எல்லாம் சொல்லி அரசியல் மற்றும் பணபலத்தை பாவித்து (அதாவது தம்பி ராமையா ஒரு படத்தில் வடிவேலுக்கு மல்லிகை பூ வித்த மாதிரி) வித்த விமானம், அதானால் தான் ஆண்டவன் தக்க தக்க பாடம் படிப்பித்து உள்ளான்.

Edited by Dash

டிரீம்லைன் விமானங்களை விற்க ஏர்இந்தியா முடிவு

 

அமெரிக்காவிடம் வாங்கியுள்ள போயிங் டிரீம்லைனர் விமானங்கள குறைந்து விலைக்கு விற்பனை செய்‌யஏர்இந்தியா முடிவு செய்துள்ளது.

 

அமெரிக்க நிறுவனமான போயிங் 787 ரக டிரீம்லைனர் விமானங்களில் பல்வேறு தொழில்நுட்ப‌ ‌கோளாறுகள் இருந்ததாக எழுந்த புகாரின் பேரில் உலகம்முழுவதும் இந்த விமானங்களை வாங்கிய ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் 50 விமானங்கள் நிறுத்தி வைத்துள்ளன.கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 6விமானங்களை வாங்கிய ஏர் இந்தியா நிறுவனம் ,டிரீம்லைனர் விமானங்களை பிப்ரவரி 17-ம் தேதி வரை இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் தற்‌போது உள்ள 6 டிரீம்லைன் விமானங்களை பிப்ரவரி 5-ம் தேதிக்குள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யவும்,ஏற்கனவே ஆடர் கொடுத்திருந்த 27 விமானங்களை குத்‌தகைமுறையிலும், மாத வாடகைக்கு விடவும் ஏர்இந்தியா முடிவு செய்துள்ளது.

 

http://tamil.yahoo.com/%E0%AE%9F-%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5-%E0%AE%AE-%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B5-211200487.html

  • 2 weeks later...

"போயிங் - 787 ட்ரீம்லைனர்" - பரிசோதனை ஓட்டம் ஆரம்பம்

 

ஜப்பான் நாட்டின், ஆல் நிப்பான் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான, போயிங், 787 ட்ரீம்லைனர் விமானத்தில், பேட்டரி பழுது காரணமாக தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, உலகம் முழுவதும், 50க்கும் மேற்பட்ட, ட்ரீம்லைனர் விமானங்களின் சேவையை நிறுத்தி வைக்கும்படி, அமெரிக்காவின் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பான, பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் - என்.ஏ.ஏ., உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து தனது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் புதிய விமானம் தயாரித்து வழங்குவது தாமதாமாகும் என தெரிவித்த கையோடு , விமானத்தில் பழுது ஏற்பட்டது எப்படி என்பதை கண்டறியும் முயற்சியில் இறங்கியது போயிங்.

 

விமானத்தை சோதனை செய்ய அமெரிக்காவின் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பான, பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் அனுமதி அளித்ததை அடுத்து, இன்று ஒரு விமானத்தை சோதனைக்கு உட்படுத்தியது. இந்த விமானத்தில் சோதனை அதிகாரிகள் உள்ளிட்ட 13 பேர் சென்றனர். விமானம் சுமார் 2.30 மணிநேரம் தொடர்ந்து பறந்தது. தொடர்ந்து சோதனை செய்து பேட்டரி பழுது ஏற்பட என்ன காரணமாக என்பதை கண்டறியும் இந்த குழு. இந்த சோதனை ஓட்டம் தொடந்து ஒரு வாரமாவது நடக்கும் என தெரிகிறது.


- நமது செய்தியாளர் சுந்தர்

 

http://tamil.yahoo.com/%E0%AE%AA-%E0%AE%AF-%E0%AE%99%E0%AF%8D-787-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0-134100479.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.