Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைத் தேர்வாளராக சனத் ஜெயசூரிய?

Featured Replies

இலங்கைக் கிரிக்கெட் அணியின் தேர்வாளராக இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சனத் ஜெயசூரிய நியமிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இம்மாத இறுதியில் இலங்கைக் கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களின் எண்ணிக்கையில் ஒருவர் அதிகரிக்கப்படவுள்ளார். இதற்கான பரிந்துரைக்கான நபர்களின் விபரங்கள் இலங்கை விளையாட்டு அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதிலேயே சனத் ஜெயசூரியவின் பெயரும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதுவரை 11 பேரின் விபரங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், இந்தப் பட்டியலில் மேலும் சிலர் சேர்க்கப்படலாம் எனவும், இவர்களில் ஒருவர் இலங்கைக் கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களில் ஒருவராகத் தெரிவு செய்யப்படவுள்ளார்.

 

சனத் ஜெயசூரிய இலங்கையின் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அவரது கட்சியைச், விளையாட்டமைச்சரால் நியமிக்கப்படவுள்ள புதிய உறுப்பினராக சனத் ஜெயசூரிய நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

தற்போதைய தேர்வாளர்களின் பதவி இம்மாத இறுதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் புதிய தேர்வுக்குழுவும் இம்மாத இறுதியில் அறிவிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/57682-2013-01-24-16-27-30.html

  • தொடங்கியவர்

சனத் மகிந்தாவின் மகனின் நண்பன்.

 

ஆனால் விளையாட்டில் தான் அரசியல் இல்லையே :D

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் கட்சியில் இருந்து ஒருவர் அதுவும் ஒரு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவுக்குழுவில் இருப்பதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஆளும் கட்சியில் இல்லாத ஒருவரும் கிறிக்கட்டின் நீண்ட கால விளையாட்டு வீரர் சிறிலங்காவில் தெரிவாளராக தெரிவு செய்யப்பட்டால் தான் ஆச்சரியமானது.

  • கருத்துக்கள உறவுகள்

என்ட அபிமான வீரர் சனத்திற்கு மனம் கனிந்த பாராட்டுக்கள்...பின் தங்கிய,கஸ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்த சனத் தன்னைப் போன்ற பின் தங்கிய,கஸ்டப்பட்ட,திறமையாக விளையாடக் கூடிய வீரர்களுக்கு முன் உரிமை கொடுப்பார் என நம்புவோம்

  • தொடங்கியவர்

கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு அறிவிப்பு

 

இலங்கைக் கிரிக்கெட் அணியின் தேர்வாளர் குழுவின் தலைவராக முன்னாள் அணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சனத் ஜெயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இலங்கைக் கிரிக்கெட் அணியின் தேர்வாளர் குழுவின் பெயரை விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளார்.


நாடாளுமன்ற உறுப்பினர் சனத் ஜெயசூரியவை தலைவராக கொண்ட இந்த குழுவில் பி.விக்ரமசிங், எச்.விக்ரமசிங்க, சமிந்த மெண்டிஸ் மற்றும் எரிக் உபுசாந்த ஆகியோர் உறுப்பினராகவுள்ளனர்.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/57870-2013-01-28-12-22-39.html

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை துடுப்பாட்ட அணிக்கு இனிமேல் சங்கு தான்

  • தொடங்கியவர்

சில சிங்களவர்களின் கருத்துக்கள்:

 

  • ayyo.......................
  •  
  • ammata udu.. maara selection committee ekak ne..
  •  
  • God Bless SL Cricket!!
  •  
  • It would have ideal if Dr.Mervin Silva was included as well!
  •  
  • good luck to SLC
  •  
  • will wish them best of luck

http://www.dailymirror.lk/news/25325-new-selectors-appointed.html#comments

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயசூரியவை முந்தி அலைக்கழித்தார்கள்.. இப்ப அவரது முறை.. :D

  • தொடங்கியவர்

புத்தர் சிங்கள அணியை ஆசீர்வதிப்பாராக  :D



sanath_jayasuriya_namal_hambantota.jpg



140051.jpg

இலங்கையில் திறமைக்குத் தட்டுப்பாடு இல்லை: சனத் ஜெயசூரிய .

.

இலங்கைக் கிரிக்கெட் அணியில் திறமைகளுக்குத் தட்டுப்பாடு கிடையாது என இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நேற்றைய தினம் இலங்கையின் பிரதம தேர்வாளராக நியமிக்கப்பட்டவருமான சனத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார். திறமைகளை இனங்கண்டு சரியான முறையில் தயார்படுத்துவதே தற்போதைய தேவையாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை சார்பாக நீண்டகாலம் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றிய சனத் ஜெயசூரிய, இலங்கையின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார். இந்நிலையிலேய அவர் பிரதம தேர்வாளராகத் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

இளைய வீரர்கள் பலர் இலங்கையில் திறமையோடு காணப்படுகின்றமை குறித்து ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்வதாகத் தெரிவித்த சனத் ஜெயசூரிய, அவர்கள் தங்கள் திறமைகளையும் வெளிப்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

இளம் வீரர்கள் தங்கள் திறமைகளின் மூலம் தங்களுக்கு முன்னர் காணப்பட்ட சிரேஷ்ட வீரர்களின் இடங்களைத் தங்களால் நிரப்ப முடியும் என்பதையும் வெளிப்படுதியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இளம் வீரர்கள் தங்கள் திறமைகளின் மூலம் நாட்டினைப் பெருமைப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட சனத் ஜெயசூரிய, இலங்கையில் திறமைகளுக்குக் குறைவில்லை எனவும், அவற்றைச் சரியான முறையில் தயார்படுத்துவதே தேவையாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

சனத் ஜெயசூரிய இலங்கையின் ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகக் காணப்படுவதால் அவரது நியமனம் அரசியல் சம்பந்தப்பட்டது என்ற கருத்துக்களை நிராகரித்த சனத் ஜெயசூரிய, இரண்டு தசாப்தங்களுக்கு மேல் இலங்கைக்காகப் போட்டிகளில் பங்குபற்றியுள்ள நிலையில், தேர்வாளராகப் பதவி வகிக்கும் தகுதி தனக்குள்ளதாகத் தான் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/57912-2013-01-29-07-16-51.html

  • தொடங்கியவர்

தமிழர்களில் திறமையானாவர்கள் இருக்கமுடியாது  :(

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

வீரர்களைச் சந்திக்கிறார் பிரதம தேர்வாளர் சனத் ஜெயசூரிய

 

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களை இலங்கை அணியின் புதிய பிரதம தேர்வாளர் சனத் ஜெயசூரிய இன்று சந்திக்கவுள்ளார்.

 

வீரர்களின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காகவே அவர் இந்தச் சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார்.


புதிய தேர்வாளராக நியமிக்கப்பட்ட பின்னர் ஏனைய தேர்வாளர்களுடன் இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகள், இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர்கள், போட்டி மத்தியஸ்தர்கள் ஆகியோருடன் சந்திப்புக்களை மேற்கொண்டுவரும் சனத் ஜெயசூரிய, இந்தச் சந்திப்புக்களின் ஒரு கட்டமாகவே வீரர்களைச் சந்திக்கவுள்ளார்.

 

வீரர்களைச் சந்திப்பது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த சனத் ஜெயசூரிய, இலங்கை கிரிக்கெட் சபையால் ஒப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள 60 வீரர்களையும் சந்திக்கவுள்ளதாகவும் அவர்களோடு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்தார்.


இந்தச் சந்திப்பில் வீரர்களது ஒழுக்கம் தொடர்பாகக் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவித்த சனத் ஜெயசூரிய, வீரர்களைத் தங்களது பணியில் கவனம் செலுத்துமாறும் நிர்வாக விடயங்களில் தலையிடுவதைத் தவிர்க்குமாறும் கோரவுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

இந்தச் சந்திப்பில் எதிர்காலம் குறித்தும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் ஆரோக்கியமான கலந்துரையாடல்களில் பங்குபற்ற எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த சனத் ஜெயசூரிய, முக்கியமாக சிரேஷ்ட வீரர்களுடன் சிறந்த கலந்துரையாடலை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/58447-2013-02-07-09-01-22.html

  • தொடங்கியவர்

இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் பதவி நீக்கம்
 
இலங்கைக் கிரிக்கெட் அணியின் முகாமையாளர் சரித் சேனநாயக்க அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இலங்கைக் கிரிக்கெட் சபையின் நிர்வாகக் குழு இதற்கான முடிவை எடுத்துள்ளது. 
 
இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த இலங்கைக் கிரிக்கெட் சபையின் தலைவர் உபாலி தர்மதாச, இலங்கை அணியின் முகாமையாளர் சரித் சேனநாயக்க அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டமையை உறுதிசெய்தார். ஆனால் அவரது பதவி நீக்கம் குறித்த மேலதிக தகவல்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.

சரித் சேனநாயக்கவின் இடத்திற்கு இலங்கையின் மற்றொரு முன்னாள் வீரரான மைக்கல் டி சொய்ஸா நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த உபாலி தர்மதாச, எனினும் அந்தப் பதவியை ஏற்பது குறித்து அவர் இன்னமும் உறுதிப்படுத்தவில்லை எனவும் தெரிவித்தார்.
 
அண்மையில் இலங்கைக் கிரிக்கெட் சபைக்கெதிராக மஹேல ஜெயவர்தன ஊடகமொன்றிற்குப் பகிரங்கமாக எழுதிய கடிதத்தை வெளியிட மஹேலவிற்கு உதவிய காரணத்திற்காக மஹேலவோடு சேர்த்து விளக்கம் கோரப்பட்ட சரித் சேனநாயக்க, அந்தக் காரணத்திற்காகவும், சில தனிப்பட்ட காரணங்களுக்காகவும் தான் பதவியிலிருந்து நீக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும் கருத்துத் தெரிவித்துள்ள இலங்கைக் கிரிக்கெட் சபை அதிகாரியொருவர், சரித் சேனநாயக்க மீது குற்றச்சாட்டுக்கள் பலவும் காணப்படுவதாகவும், அவர் தனது பதவியை ஒழுங்காகச் செய்திருக்கவில்லை எனவும், வீரர்கள் அவர் குறித்து முறையிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 
http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/58680-2013-02-11-07-08-19.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.